என்று வரும்
நீ என்னை
அணுகும்
அந்நாள்
என்று
தினம்
தினம் காத்திருக்கிறேன்
கண்களில் காதலோடு..
தன் பின்னால் இருந்து அணைத்தவளின் அணைப்பு அவன் எதிர்பாராதது என்றபோதிலும் பல நாட்கள் கழித்து அவனை ஆக்கிரமித்த அந்த அணைப்பில் மதிமயங்கி நிற்க அதை கலைத்தது ஶ்ரீயின் கேவல்.... முதலில் யாருடைய சத்தமென்று புரியாது ஆழ்ந்து கவனித்தவன் அது ஶ்ரீயுடையது என்று அறிந்ததும் அவளை கரம்பிடித்து தன் முன்னால் நிறுத்த முயல அவளோ ரிஷியை இன்னும் இறுக்கி அணைத்தபடி அவனது சட்டையை தன் கண்ணீரால் நனைத்தாள்...
ரிஷியிற்கோ அவளது இந்த அழுகை இது வரை அவனறியாதது... பிரசவ நேரத்தில் கூட பயத்தில் அவளதூ கண்கள் நீர் சொறிந்ததே ஒழிய இப்படி அழவில்லை....
அவளை வலுக்கட்டாயமாய் பிரித்து எடுத்தவன் தன் முன் நிறுத்த அவளோ அடுத்தநொடி அவன் சர்ட்டை பிடித்தபடி அவன் மார்பில் சாய்ந்து தன் அழுகையை தொடர்ந்தாள்...
அழுகையை நிறுத்தச்சொல்லி பல முறை கெஞ்சியவனுக்கு பலன் கிடைக்காமல் போக அதில் கடுப்பானவன்
“இப்போ அழுகையை நிப்பாட்ட போறியா??? இல்லை நான் அடுத்த ப்ளைட்டுக்கு மறுபடியும் ரஷ்யா கிளம்பவா???” என்று ரிஷி கேட்க ஶ்ரீயோ அவன் சட்டை காலரை பிடித்து தன்புறம் இழுத்தவள்
“போயிடுவியா நீ??? என்னை இங்க தனியா விட்டுட்டு போவியா நீ??? போபோ... மறுபடியும் நீ இங்க வரும் போது நான் உயிரோட இருக்கமாட்டேன்...” என்று ஶ்ரீ கூற அவள் கன்னத்தில் இடியென வந்து விழுந்தது அடி..
சென்று தூர விழுந்தவளுக்கு நடப்பது புரிய சில கணங்கள் எடுத்தது ... கன்னத்தில் எரிச்சலை உணர்ந்தவள் கன்னத்தில் கையை வைத்தபடி ரிஷியை பார்க்க அவனோ கோபத்தை கட்டுப்படுத்தமுடியாது சுவற்றில் ஓங்கி ஒரு குத்துவிட அதிலிருந்த ஆணி அவன் கையை கிழித்துவிட்டது...
இரத்தம் சொட்டுவது கூட உணராது கோபத்தில் உச்சியில் இருந்தவனை கண்ட ஶ்ரீ எழுந்து அவனருகே ஓடி வந்து அவன் கையை பற்ற முயல அவளின் கைகைளை உதறவியவன்
“கிட்ட வராத... மறுபடியும் கோபத்தில் ஏதாவது பண்ணிடுவேன்...” என்று அவளை விட்டு விலகி செல்ல முயல அவளோ மீண்டும் அவன் கையை பிடித்து
“என்கிட்ட கோபம்னா அதை என்கிட்ட காட்டு.. எதுக்கு இப்படி சுவத்துகிட்ட காட்டி கையை கிழிச்சிக்கிட்ட... வா அத்தான்... பஸ்ட் எய்ட் பண்ணிட்டு ஊசி போட்டு வரலாம்..”
“உன்னை கிட்ட வராதனு சொன்னேன்..” என்று கையை உதறினான்... அவளோ
“இப்போ நீ வரப்போறியா இல்லையா??”
“முடியாதுனு சொல்லிட்டேன்...”
“சரி..” என்றவள் அங்கிருந்த பல தட்டிலிருந்த கத்தியை எடுத்து தனது வலது உள்ளங்கையில் கீறிக்கொண்டாள்..
கையை கிழித்துக்கொண்டதும்
“அத்தான்...” என்ற அவளது சத்தத்தில் திரும்பியவன் அவள் ஒரு கையில் கத்தியும் மறுகையில் இரத்தம் சொட்டுவதையும் கண்டவன் பதறி அவளருகே சென்று பாக்கெட்டிலிருந்த தனீ கர்ச்சீப்பை எடுத்து இரத்தத்தை துடைக்க முயல அவளோ
“நீ முதல்ல பஸ்ட் எய்ட் பண்ணிக்கோ...”
“ஏய் லூசு மாதிரி பேசாத... என்னோடது சின்ன காயம் தான்... பெரிசா எதுவும் இல்லை... உனக்கு எப்படி இரத்தம் போகுதுனு பாரு..இந்த கர்ச்சீப்பை கையில கட்டவிடு...”
“இல்லை நீ பஸ்ட் எயிட் பண்ணிக்காட்டி நான் கர்ச்சீப்பை கட்ட விட மாட்டேன்..”
“இப்ப என்ன உனக்கு நான் பெஸ்ட் எயிட் பண்ணிக்கனும்.. அதானே இரு..” என்றவன் ட்ரெசிங் டேபிளின் அடித்தட்டில் இருந்த பஸ்ட் எய்ட் கிட்டை எடுத்து வந்தவன் அதை திறந்து தன் காயத்திற்கு விரைந்து மருந்திட்டவன்
“இப்போ சரியா... கையை தா... இரத்தம் இன்னும் போய்கிட்டு இருக்கு....” என்றவன் அவளுக்கும் முதலுதவி செய்தான்...
ஆனால் காயம் சற்று ஆழமாக பட்டதால் இரத்தம் செல்வது நிறுத்தாமல் இருக்க ரிஷியோ
“வெட்டு ரொம்ப ஆழமாக விழுந்திடுச்சு போல.. வா ஆஸ்பிடல் போகலாம்...” என்றவன் அவளை தன் காரில் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த க்ளினிக்கிற்கு பறந்தான்..
அங்கு இருவர் காயத்திற்கும் மருந்திடப்பட்டதும் ரிஷிக்கு டிடி ஊசி குத்தப்பட மருந்துகளை வாங்கிக்கொண்டு இருவரும் கிளம்பினர்...
இருவரும் காரை அடைந்ததும் ஶ்ரீ
“அத்தான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்....”
“வீட்டுக்கு போயிட்டு பேசலாம்...” என்று அவன் மறுக்க ஶ்ரீயோ
“அத்தான் ப்ளீஸ்.... இப்படி என்னை அவாய்ட் பண்ணாத... எனக்கு கஷ்டமாக இருக்கு....”
“ம்ம்.... கஷ்டம்... எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் இல்லையா???”
“அத்தான்.... நான்..”
“வேணா ஶ்ரீ... நான் பேசாமல் அவாய்ட் பண்றேன்னா என்னோட கோபத்தை நீ பார்க்கக்கூடாது அப்படீங்கிறதுக்காக தான்....”
“அத்தான் உனக்கு என்மேல கோபம்னா என்னை திட்டு... அடி... ஆனா இப்படி பேசாமல் இருந்து கஷ்டப்படுத்தாத...”
“ஹாஹா... குட் ஜோக்... உன்னை திட்டி அடிக்க நான் யாருமா?? எனக்கு என்ன உரிமை இருக்கு??”
“ஏன் அத்தான் இப்படி கேட்குற.....அத்தான் நீ என்னோட ஹஸ்பண்ட்.. எனக்கான முழு உரிமையும் உனக்கு...”
“அதெல்லாம் ஒன்னும் இல்லைனு நீ தூக்கிபோட்டுட்டு தானே மூனு மாசத்துக்கு முன்னாடி வீட்டை விட்டு போன???”
“அத்தான்...”
“சொல்லு ஶ்ரீ... நீ நிஜமாகவே என்னை உன்னோட ஹஸ்பண்டாக ஏற்றிருந்தால் எனக்கான ப்ரையோரிட்டை நீ கொடுத்திருந்தால் என்ன பிரச்சனைனாலும் சேர்ந்து பேஸ் பண்ணுவோம்னு என்கூடவே இருந்திருப்பியே தவிர இப்படி என்னை பிரிஞ்சி இருந்து கஷ்டப்படுத்தியிருக்கமாட்ட....”
“அத்தான் நான்...”
“இதனால தான் இந்த விஷயம் உனக்கு தெரியக்கூடாதுனு ரொம்ப கவனமாக இருந்தேன் ... ஆனா நீ தெரிஞ்சிக்கிட்டு வீட்டைவிட்டு போயிட்ட... ஒரு நிமிஷம் நான் எதுக்காக இப்படி பண்ணேன்னு யோசிச்சிருந்தனா என்கிட்ட நீ நேரடியாக வந்து கேட்டிருப்ப.. இல்லை இந்த விஷயம் உனக்கு தெரியும்கிறதை எனக்கு தெரியாமல் பார்த்துகிட்டு என்கூடவே இருந்திருப்ப... ஆனா நீ யோசிச்சது என்னை பிரியனும்னு... அப்போ உனக்கொரு பிரச்சனைனா அதை நீ மட்டும் தான் பேஸ் பண்ணனும்... நான் அதை பகிர்ந்துக்க கூடாது அப்படி தானே??? உன்னை நேசிச்ச எனக்கு அந்த உரிமை இல்லை அப்படி தானே???”
“ஐயோ அத்தான் அப்படி எல்லாம் இல்லை... அந்த நேரம் நீ சொன்ன அந்த வார்த்தையும் நீயும் மட்டும் தான் என்னோட மனசுல இருந்த இரண்டு விஷயம்...... எனக்கு என்னை பத்தி கவலையும் இருக்கலை....... சொல்லப்போனா பாப்பாவுக்கு எதுவும் ஆகிடுமோனு கூட நான் கவலை படலை. எனக்கு எதுவும் நடந்துட்டா நீ தப்பா எதுவும் செய்துப்பியோனு தான் ரொம்ப பயந்தேன்... அதனால தான் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்புனேன்... இந்த பிரிவு உன்னை தயார்படுத்தும்னு நினைச்சு தான் நான் அப்படி பண்ணேன்....”
“ஓ.. எந்த நம்பிக்கையில அப்படி நினைச்ச???”
“நான் இல்லைனா பாப்பாவை காரணம் காட்டி வீட்டுல உங்களை இன்னொரு வாழ்க்கைக்கு தயாராக்குவாங்க அப்படினு நினைச்சு தான் அப்படி பண்ணேன்...”
“ஓ... அப்போ உனக்கு ஏதாவது நடந்திருந்தா பாப்பாவுக்காத நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேனு நீங்க எதிர்பார்த்தீங்க... அப்படி தானே??? ம்ஹூ.... அப்போ பொண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை அப்படி தானே...”
“ஒரு வாழ்வு அமையாத பட்சத்துல இன்னொரு வாழ்வுல நுழையிறதுல எந்த தப்பும் இல்லையே...”
“ஓ... அப்போ எனக்கு ஏதாவது நடந்தாலும் நீ இப்படி தான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா???”
“என்ன பேசறீங்க அத்தான் நீங்க??? எனக்கு எப்பவும் நீங்க மட்டும் தான்.... அப்படியொரு நிலைமை வந்தா செத்திருவேனே தவிர கனவுல கூட இன்னொரு வாழ்க்கை அப்படீங்கிறதை பத்தி நினைக்கமாட்டேன் ..”
“ஓ... அப்போ நான் மட்டும் அப்படி செய்வேன்னு எப்படி எதிர்பார்த்த?? அப்போ நீ என்னோட காதலை புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா??? நான் வாழ்க்கையை நேசிச்ச முதல்ல பொண்ணும் நீ தான்... கடைசி பொண்ணும் நீயாதான் இருக்கனும்...... உனக்கு ஏதும் ஆகியிருந்தா உன்னோட நான் வாழ்ந்த அந்த நாட்களை எண்ணியே மீதி காலத்தை வாழ்ந்திருப்பேனே தவிர தப்பா ஏதும் முடிவெடுத்திருக்க மாட்டேன்... என்னோட காதல் உண்மைனு வாழ்ந்து ப்ரூவ் பண்ணியிருப்பேனே ஒழிய நிச்சயம் ஏதும் தப்பா முடிவெடுத்துருக்க மாட்டேன்... அன்னைக்கு உணர்ச்சி வேகத்துல அப்படி சொல்லிட்டேன்... அதை நீ சீரியஸாக எடுத்துக்கிட்டு உன்னையும் கஷ்டப்படுத்தி இப்படி பண்ணிட்ட.... உயிரை மாய்ச்சிக்கிட்டு சாகிற அளவுக்கு நான் கோழையும் இல்லை... உடல் தேவைக்காக இன்னொரு வாழ்க்கையை தேடுற அளவுக்கு நான் கேவலமானவனும் இல்லை....” என்று ரிஷி தன் மனதிலிருந்த காதலை கோபமாய் வெளியேற்ற அவனை பார்த்திருந்த ஶ்ரீயிற்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை... இப்படியொருவருடைய காதல் எத்தனை பேருக்கு கைகூடும்... அன்பான தந்தையாய், கண்டிக்கும் அன்னையாய், ஆறுதல் தேடும்போது அரவணைக்கும் ஒரு நட்பாய், திகட்ட திகட்ட காதலிக்கும் காதலனாய், எல்லாமுனான கணவனாய் என்று அனைத்து பரிமாணமும் கொண்ட ஒருவனின் காதல் தனக்கு மட்டுமே கிடைப்பது என்பது வரம் மட்டுமன்றி கர்வமும் கூட...ஆனால்..தான் செய்த காரியத்தால் அதை மீண்டும் கிடைக்குமா?? ரிஷியின் கோபம் தணியுமா??? என்று எண்ணியவளுக்கு பதில் தெரியவில்லை ..
“என்னை மன்னிச்சிடு அத்தான்....நான் உனக்கு நல்லதுனு செய்த எல்லா விஷயமும் உன்னை ஹர்ட் பண்ணிருச்சு.. என்னை மன்னிச்சிரு... எனக்கு வேற என்ன சொல்லுறதுனு தெரியலை....”என்றவள் திடீரென நெஞ்சில் கணம் உணர அது வாய் வழியாக ஒலி எழும்ப அவளையே பார்த்திருந்த ரிஷி
“என்னச்சா அம்லு...”
“பாப்பாவுக்கு பசி வந்திடுச்சு போல பால் நிறை கட்டுது... நீங்க சீக்கிரம் அம்மா வீட்டுக்கு போங்க...” என்று ஶ்ரீ கூற தாமதிக்காது காரை ஶ்ரீயின் வீட்டிற்கு செலுத்தினான்...
கார் வீட்டை அடைந்ததும் விரைந்து வீட்டினுள் சென்ற ஶ்ரீயின் காதை நிறைத்தது குழந்தையின் அழுகை...
விரைந்து தன் அன்னையின் துணையோடு கைகால் கழுவிவிட்டு வந்தவள் அன்னையின் உதவியோடு குழந்தையை தூக்கி குழந்தையை பசியாற்றினாள்....
அத்தனை நேரம் பசியால் அழுதுக்கொண்டிருந்த குழந்தை தாய்ப்பால் அருந்தியதும் தன் பொக்கை வாயால் தன் அன்னையை பார்த்து சிரிக்க அதில் இத்தனை நேரம் இருந்த மனநிலை மறந்தவள் குழந்தையை கட்டிலில் கிடத்திவிட்டு அதோடு செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தாள்...
வீட்டிற்கு வந்த ரிஷியை வரவேற்ற ராஜேஷ்குமார் அவனிடம் நலம் விசாரிக்க அவனுக்கு காபி எடுத்து வந்தாள் அனு...
அனுவிடம் நலம் விசாரித்த ரிஷியிடம்
“என்ன மாமா கையில கட்டு??” என்று விசாரிக்க கையை ஆணி கிழித்துவிட்டதாக கூற அப்போது வெளியே வந்த ராதா
“என்ன மாப்பிள்ளை அவளும் கையை கத்தி கிழிச்சிடுச்சுனு சொன்னா...”
“ஆமா அத்தை பழம் வெட்டிட்டு இருந்தா... கத்தி கிழிச்சிடுச்சு.. அவளுக்கு ஆஸ்பிடல் கூட்டிட்டு போக கார் சாவி எடுக்கும் போது சுவத்துல இருந்த ஆணி கிழிச்சிடுச்சு...”
“கவனமாக இருக்ககூடாதா மாப்பிள்ளை... ஆஸ்பிடல் போனீங்களா???”
“ஆமா அத்தை... அங்க போயிட்டு நேரா இங்க தான் வர்றோம்....”
“சரி மாப்பிள்ளை... நீங்க போயிட்டு பாப்பாவை பாருங்க...” என்ற ராதா அனுவை அழைத்துக்கொண்டு கிச்சனுள் புகுந்து கொண்டார்...
ஶ்ரீயின் அறைக்கு வந்த ரிஷி எட்ட கையில் நீர் படாதவாறு கைகால் முகம் கழுவி வந்தவன் குழந்தையை கொஞ்ச குழந்தையோ அவனை கண்டதும் அவனை அடையாளம் கண்டுகொண்டதை வெளிக்காட்டும் முகமாக தன் கைகளை மேலும் கீழும் ஆட்ட அதன் செயலில் உள்ளம் குளிர்ந்தான் ரிஷி...
சற்று நேரம் குழந்தையோடு விளையாடியவன் வீட்டிற்கு கிளம்ப ஶ்ரீயும் அவனோடு வருவதாக கூறினாள்..
“கையில அடிபட்டிருக்கு... எப்படி மேனெஜ் பண்ணுவ??”
“அதெல்லாம் நான் மேனேஜ் பண்ணிப்பேன்.. முடியலைனா நீங்க ஹெல்ப் பண்ணமாட்டீங்களா??” என்று ஶ்ரீ கேட்க மறுக்கத்தோன்றாது அவளை தன்னோடு அழைத்து செல்ல சம்மதித்தான் ரிஷி...
இருவரும் கிளம்பி ரிஷியின் வீட்டிற்கு வந்தனர்...குழந்தையை ரிஷி தூக்கி வர அவன் கையிலிருந்து குழந்தையை வாங்கிய சுபா குழந்தையை கொஞ்ச ஆரம்பிக்க ரிஷியோ ஶ்ரீயோடு தங்கள் அறைக்கு நுழைந்தவன் மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.. உடை மாற்றி வந்தவன் அங்கு அமர்ந்திருந்த ஶ்ரீயை கண்டுகொள்ளாது வெளியே வந்தவன் கார் டிக்கியிலிருந்த ஶ்ரீ மற்றும் குழந்தையின் பொருட்களை அறைக்கு எடுத்து வந்தவன் அதை உரிய இடத்தில் வைத்துவிட்டு கபோர்டிற்கு மேலே மடித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிலினை எடுத்தவன் அதை பொருத்தி தங்கள் கட்டிலினருகே வைத்தான்.. அத்தோடு குழந்தைக்கென அவன் வாங்கி வைத்திருந்த துணியாலான தூலில் தொட்டிலை சீலிங்கிலிருந்த கொக்கியின் உதவியுடன் கட்டியவன்
“அம்லு ஏஞ்சலுக்கு இரண்டு தொட்டிலும் ரெடி பண்ணிட்டேன்... ஏஞ்சல் எதுல விரும்புறாங்களோ அதுல தூங்க வை......” என்றவன் பின் நியாபகம் வந்தவனாக
“ஏஞ்சல் உங்க வீட்டுல எதுல தூங்குவா??? நான் ஏஞ்சலை படுக்க வச்சிட்டு போறேன்... உனக்கு தான் அடிப்பட்டிருக்குல்ல..”
“இல்லை அத்தான்... கொஞ்ச நேரம் பாப்பா கட்டிலிலேயே இருக்கட்டும்... இவ இப்போதைக்கு தூங்கமாட்டா...”
“சரி அம்லு.. நீ ஏஞ்சலை பார்த்துக்கோ... கொஞ்சம் ஆபிஸ் வர்க் பார்க்க இருக்கு... நான் பக்கத்து ரூம்ல இருக்கேன்.. ஏதும் வேணும்னா கூப்பிடு..” என்றவன் பக்கத்து அறைக்கு செல்லமுயல அவனை அழைத்த ஶ்ரீ
“அத்தான்...”
“சொல்லு அம்லு...”
“என்னை மன்னிச்சிட்டியா??”
“என்னோட மனசு என்ன நினைக்குதுனு எனக்கு புரியலை... ஆனா சீக்கிரம் எல்லாம் சரியாகும்னு நம்புறேன்..” என்றவன் பக்கத்து அறைக்கு செல்ல ஶ்ரீயோ தன் விதியை நொந்தபடி குழந்தை பக்கத்திலேயே படுத்துக்கொண்டாள்....