மாயம் 62

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தவித்துவிட்டேன்
தன்னலமற்ற
உன் அன்பு
என்னை
திக்குமுக்காடவைத்த
வேளையில்..

மதியம் தன் வேலையை முடித்துவிட்டு அறைக்கு வந்த ரிஷி படுத்தபடி குழந்தைக்கு பசியாற்றிக்கொண்டிருந்த ஶ்ரீயை பார்த்தவன் அவர்களருகே செல்ல குழந்தையோ பால் குடிக்கத்தடுமாறிக்கொண்டிருந்தது...
இத்தனை நாட்கள் அன்னை மடியிலேயே படுத்து பால்குடித்து பழகிய குழந்தைக்கு கட்டிலில் படுத்தபடி பால்குடிக்க வசதிப்படவில்லை... ஶ்ரீயிற்கும் கையில் கட்டிருந்ததால் குழந்தையை தூக்கி மடியில் வைக்கமுடியாமல் படுத்தபடி பசியாற்ற முயல குழந்தையோ முரண்டு பண்ணியது...
இதை கண்டவன்
“ஏன் அம்லு ஏஞ்சல் பால்குடிக்க மாட்டேங்கிறாங்க??? ஏன் இப்படி அடம்பண்ணுறாங்க???”
“பேபிக்கு இதுவரை மடியில வச்சு தான் பீட் பண்ணியிருக்கேன்... இப்போ கட்டிலில் படுக்க வைத்து பீட் பண்ணதால குடிக்க அடம் பண்ணுறாங்க..”
“ என்னை கூப்பிட்ருக்கலாம்ல??? நீ எழுந்து உட்காரு... நான் ஏஞ்சலை தூக்கி உன்னோட மடியில வைக்கிறேன்... நீ பீட் பண்ணு...” என்று கூறியவன் கட்டிலிலிருந்து குழந்தையை தூக்கினான்...
ஶ்ரீ எழுந்து வாகாக அமர்ந்துகொண்டதும் அவள் மடியை குழந்தையை கிடத்தியவன் அவளுக்கு வேண்டிய இதர உதவிகளையும் செய்தான்...
குழந்தை பசியாறியதும் ஆழ்ந்த சயனத்திற்கு சென்றுவிட ரிஷி குழந்தையை தொட்டிலில் இட்டவன் அதற்கு அரணாய் நான்கு புறமும் தலையணை வைத்துவிட்டு நிமிர்ந்தவன் தன்னையே பார்த்திருந்த ஶ்ரீயிடம்
“என்ன அம்லு..?? எதுக்கு அப்படி பார்க்குற???”
“என்னை மன்னிக்கவே மாட்டியா அத்தான்???”
“அதுதான்.. கொஞ்ச...”
“அத்தான் என்னை வெறுத்துட்டியா????”
“ஹேய் என்ன பேசுற நீ...?? உன்னை எப்படி நான் வெறுப்பேன்..” என்றவனை ஓடிவந்து கட்டியணைத்தவள்
“ப்ளீஸ் அத்தான்... எனக்கு என்னோட பழைய அத்தான் வேணும்... காதலை மட்டுமே அள்ளிக்கொடுக்கிற என்னோட பழைய அத்தான் வேணும்... என்னோட அத்தான் எனக்கு வேணும்.... கோபம்னா நல்லா திட்டு... அடி... ஆனா அதை பக்கத்துல வச்சிக்கிட்டு செய்... இப்படி விலக்கி வச்சிட்டு செய்யாத.... என்னால தாங்கமுடியலை... நான் செய்தது தப்பு தான்..அதுக்கான தண்டனையை இத்தனை நாள் அனுபவிச்சிட்டேன்... இதுக்கு மேல என்னால முடியல அத்தான்... இந்த உயிர் எப்பவுமே உன்னை மட்டும் தான் தேடுது... உன்னோட காதல் தான் எமன்கிட்ட போராடி என்னை மீட்டு வந்துச்சு... ஆப்பரேஷன் தியேட்டரில் உன்னை நான் பார்த்து பேசியிருக்காட்டி நான் நிச்சயம் உயிரோட திரும்பி வந்திருக்கமாட்டேன்... நீ வந்து என் கையை பிடிச்சதும் என் மனசுக்குள்ள எப்படியாவது திரும்பி வரணும்ங்குற வைராக்கியம் வந்திடுச்சு.... ஏன்னா நான் உன்ன அந்த அளவுக்கு நேசிச்சேன்.. அந்த அளவுக்கதிகமான காதல் தான் என்னை இப்படி முட்டாள்தனமாக யோசிக்க வைத்தது...ப்ளீஸ் அத்தான்... ஒரு பொண்ணா என்னோட நிலையிலிருந்து யோசிச்சு பாரு... அப்போ என்னோட உணர்வுகள் புரியும்...” என்றவளது பேச்சில் வாயடைத்து நின்றான் ரிஷி....
இத்தனை நாட்கள் தன் வலியை மட்டும் எண்ணி வருத்தம் கொண்டவனுக்கு அவளுள் இத்தகையதொரு எண்ணவோட்டம் இருக்குமென்று நினைக்கவில்லை... அந்த மரணதருவாயிலும் தனக்காக தன்னுடைய காதலுக்காக மீண்டுவரவேண்டுமென எண்ணியவளின் காதலை எண்ணி வாயடைத்து நின்றான் ரிஷி... அந்த நொடியில் அவனது காதல் இன்னும் இரட்டிப்படைய அதனை தன்னுடைய இறுகிய அணைப்பில் வெளிக்காட்டினான் ரிஷி...
“சாரி அம்லு... உன்னை பத்தி யோசிக்காமல் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்... சாரி மா...ஐயம் எக்ஸ்ரீம்லி சாரி...” என்றவன் மீண்டும் அவளை இறுக அணைத்தான்....
சற்று நேரத்துக்கு அந்த அணைப்பு இருவருக்கும் தேவையாக இருக்க இருவரும் தத்தமது இத்தனை நாள் வேதனையை அணைப்பினூடு தீர்த்துக்கொண்டனர்...
சற்று நேரத்தில் தன்னிடமிருந்து ஶ்ரீயை விலக்கி ரிஷி
“அம்லு... அத்தான் கோபம் எல்லாம் போச்சு... இப்போ உனக்கு சந்தோஷமா???” என்று ரிஷி கேட்க ஶ்ரீயோ
“இல்லை...”
“ஏன் அம்லு....??”
“கோபம் போனா என்ன பண்ணுவாங்க???” என்று ஶ்ரீ கேட்க
“என்ன பண்ணுவாங்க??” என்று அதே கேள்வியை ரிஷி ஶ்ரீயிடம் கேட்க அவளோ
“அத்தான் கொஞ்சம் கீழ குனியேன்...”என்று கூற ரிஷியே சற்று குனிய அவன் கன்னத்தில் முத்தமிடுவது போல் வந்தவள் அவள் கன்னத்தை கடித்துவிட ரிஷியோ வலியில் அலறினான்..
“ஏன்டி இப்படி கடிச்ச?? ஐயோ அம்மா இப்படி கடிச்சிவச்சிட்டாளே ...”
“கடியோட விட்டேன்னு சந்தோஷப்பட்டுக்கோ....”
“இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை???”
“வெளியில போயிட்டு ஒரு பிள்ளைக்கு அப்பானு சொல்லிராத... அசிங்கமாக போயிடும்....”
“இதுல என்னடி அசிங்கம்??”
“ஒழுங்கா ஒரு ரொமன்ஸ் பண்ணத்தெரியிதா??? சரி அதான் தெரியலை... ஒரு சிட்டுவேஷனை கிரியேட் பண்ணிக்கொடுத்தா அதையாவது சரியாக யூஸ் பண்ணத்தெரியிதா???? அதுவும் இல்லை... நமக்கு கல்யாணமாக ஒரு வருஷமாகப்போகுது...இதெல்லாம் எப்போ கத்துக்க போற??”
“இதுக்கெல்லாம டியூசன் கிளாஸ் கொடுக்கிறாங்க??” என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தை ரிஷி கேட்க ஶ்ரீயோ உச்சகட்ட கடுப்பில்
“அப்படியே வச்சாலும் நீயெல்லாம் தேற மாட்ட...”
“அப்படியா சொல்லுற??? இப்போ இந்த ஸ்டுடண்ட் என்ன செய்றான்னு பாரு” என்றவன் அருகிலிருந்த கபோர்ட்டின் மீது அவளை சாய்த்து இரு கைகளால் அவள் இடுப்பை வளைத்து தன்னோடு இறுக்கியவன் அவள் இதழோடு தன் அதரங்களை பொறுத்தி தான் சகலகலா வித்தகன் என்று நிரூபிக்கத்தொடங்கினான்...
மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த ரித்வி தன் மனையாளைத்தேடி தங்களறைக்கு சென்றான்.... அங்கு தன் ஒன்றரை வயது குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்த சுபாவை கண்டவன்
“என்னமா அச்சுகுட்டி என்ன சொல்லுறாங்க???”
“என்ன சொல்லப்போறா?? நானும் எங்க அப்பா மாதிரி ரொம்ப சேட்டை பண்ணுவேன்னு சொல்லுறா...”
“என்னோட பொண்ணாச்சே.... அப்படி தான் சொல்லுவா...” என்றவன் கைகால் அலம்பிவிட்டு வந்து குழந்தையை தூக்க அச்சு என்று அழைக்கப்படும் அஸ்விகா தன் தாவித் சென்றது..
தன் தந்தையின் இரு கன்னத்திலும் தன் பிஞ்சு இதழ்களால் முத்தமிடுவதாய் எச்சில் படுத்திய குழந்தை
“அப்பா..... அப்பா...” என்று அவனை அழைக்க ரித்வியோ குழந்தையின் அழைப்பில் மயங்கியவன்
“என்னமா... அச்சு பேபிக்கு என்ன வேணும்...??”
“சாக்கி...அப்பா.. சாக்கி...”
“சாக்கி வேணுமா... பாட்டிக்கிட்ட வாங்கிக்கோங்க..”
“அம்மா.. நோ...”
“அம்மா சாக்கிக்கு நோ சொன்னாங்களா??” என்று கேட்க குழந்தை தன் தலையை ஆட்ட அதன் செயலில் சிரித்தவன்
“அப்போ சாக்கி வேணாம்..”என்று ரித்வி கூற குழந்தையோ தன் உதடுகளை பிதுக்கி அழுவதற்கு தயாரானது...
அதன் செயலை கண்ட சுபா
“பார்டா அவளை... அவங்க அம்மா வேணாம்னு சொன்னாங்கனு உன்கிட்ட கேட்டா.. இப்போ நீயும் வேணாம்னு சொன்னதும் அழ ரெடியாகிட்டா.. கேடி... இப்படி அழுதா உனக்கு சாக்கி கிடைச்சுடுமா?? இரு உங்க அம்மாகிட்ட சொல்லி கொடுக்கிறேன்...” என்று சுபா செல்லமாய் மிரட்ட குழந்தையோ
“அப்பா... பாத்தி.. சாக்கி... நோ..அம்மா.. சாக்கி... நோ...” என்று கூறு கண்களை தேய்த்தபடி கூற ரித்வியோ அதன் செயலில் மதி மயங்கியவன் அதன் கன்னமிரண்டிலும் முத்தம் வைத்துவிட்டு
“ நீங்க பாட்டிகிட்ட போயிட்டு ப்ளீஸ் பண்ணி கேளுங்க... பாட்டி சாக்கி தருவாங்க..” என்ற கூற குழந்தையும் அவன் கூற்றுப்படி தன் பாட்டியிடம் சென்று
“பாட்டி... பேபி... ப்ளீஸ்.... சாக்கி...” என்று கூற குழந்தையை தூக்கிக்கொண்ட சுபா அதன் கன்னமிரண்டிலும் முத்தமிட்டுவிட்டு
“வாடி தங்கம் எடுத்து தரேன்...ஆனா அம்மாகிட்ட சொல்லக்கூடாது... ஓகேவா??” என்று கேட்க குழந்தையும் தன் தலையை ஆட்டி உடன்படிக்கைக்கு சம்மதித்தது...
குழந்தையை அழைத்துக்கொண்டு சுபா வெளியேறி சற்று நேரத்தில் கைகளில் உலர்த்தி எடுக்கப்பட்ட துணிகளுடன் உள்ளே வந்த ஹேமா ரித்வி அங்கிருப்பதை கண்டவள்
“நீங்க எப்போ வந்தீங்க ராஜ்??”
“இப்போ தான் வந்தேன்... நீ எங்க போன??”
“மாடியில ட்ரெஸ் எல்லாம் காயப்போட்டிருந்தேன்.. அதை எடுக்க போனேன் .. நீங்க சாப்பிட்டீங்களா???”
“இல்லை... ரொம்ப பசிக்கிது மிக்கி...”
“வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்...”
“நீ சாப்பிட்டியா மிக்கி??”
“இன்னும் இல்லபா..”
“அப்போ இரண்டு பேருக்கும் சேர்த்து ரூமிற்குஸசாப்பாடு எடுத்துட்டு வா... இன்னைக்கு நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்...” என்று கூற ஹேமாவும் சரியென்று இருவருக்கும் உணவு எடுத்து வந்தாள்...
ரித்வியின் தட்டை அவன் கையில் கொடுத்தவள் அவள் தட்டோடு பால்கனியில் ரித்வியோட அமர்ந்தாள்...
தன்னருகே அமர்ந்தவளை உண்ணவிடாது தடுத்தவன் அவள் தட்டை வாங்கி ஹேமாவை தன் மடியில் அமரவைத்தபடி அவனே அவளுக்கு ஊட்டிவிட்டான்.. ஹேமாவும் சிரித்தபடி அவன் கொடுத்ததை வாங்கியவள் அவனது தட்டை எடுத்து அவனுக்கு ஊட்டத்தொடங்கினாள்...
“உன் கையால இப்படி சாப்பிட்டு எத்தனை நாளாச்சு மிக்கி....அச்சுமா வந்ததிலிருந்து நீ என்னை கவனிக்கிறதே இல்லை..”
“ஓ.. சார் மட்டும் என்னை கவனிக்கிறீங்களா?? அச்சுமா அச்சுமானு உங்க செல்லபொண்ணை கொஞ்சிட்டு தானே திரியிறீங்க...”
“பார்டா என்பொண்டாட்டிக்கு பொறாமையெல்லாம் வருது.... அவ எனக்கு மட்டுமா பொண்ணு உனக்கும் பொண்ணு தானே...அதான் அவ அம்மா மாதிரியே என்னை உன்கிட்ட விட்டுக்குடுக்காம அவ பின்னாடியே என்னை சுத்த வைக்கிறா..”
“வரவர அப்பாவும் பொண்ணும் ரொம்ப தான் பண்ணுறீங்க..”
“ஹாஹா.. நீயும் வந்து ஜாயின் பண்ணிக்கோ...” என்றவன் ஹேமாவை பார்த்து சரிக்க அவளோ செல்லமாய் முறைக்க ரித்வியோ அதை கண்டு சிரித்து அவளை மீண்டும் கடுப்பேற்றினான்...
இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி முடித்ததும் ஹேமா உணவுத்தட்டினை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு செல்ல ரித்வியும் கைகழுவி வந்து அறையில் காத்திருந்தான்...
அறைக்கு வந்த ஹேமா
“ராஜ் ஶ்ரீ வந்துட்டா....”
“எப்போ வந்தா??”
“மாமா தான் கூட்டிட்டு வந்தாங்க...”
“அண்ணா எப்போ வந்தாங்க...”
“இன்னைக்கு மார்னிங் வந்தாங்க.. ஶ்ரீயையும் கூட்டிட்டு வந்துட்டாங்க...”
“அப்போ அவங்களுக்கு இடையில ஓடிட்டு இருந்த பிரச்சனை சரியாகிடுச்சா??”
“சரியாகிடும்னு நம்புவோம்...”
“சரியாகிடும் ஹேமா.. அண்ணாவும் ஶ்ரீயை புரிஞ்சிப்பாங்க...”
“சரி நீங்க கிளம்புங்க... உங்களுக்கு லேட்டாச்சு...”
“ஆமா... கிளம்பனும்... ஆனா அதுக்கு முதல்ல காலையில கொடுக்காமல் விட்டதை இப்போ கொடு...”
“என்ன கொடுக்கலை??”
“காலையில குழந்தை இருக்குனு சாக்கு சொல்லி ஆசை காட்டி மோசம் பண்ணியே அதை தான்...”
“அதான் எது??”
“நீ இப்படி சொன்னா சரிப்பட மாட்ட...” என்றவன் தன் காலர் பட்டினை திறந்துவிட்டவன் தன் சட்டையின் ஸ்லீவ்வை மடித்துவிட்டபடி ஹேமாவை நெருங்க அவளோ அவன் நெருங்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னால் நகர்ந்தாள்..
ஒரு கட்டத்தில் சுவரோடு ஒட்டியவளிடம் தான் பெறு நினைத்ததை மென்மையாய் அவள் விருப்பத்தோடு பெற்றுவிட்டு அவள் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்ட அலுவலகத்திற்கு கிளம்பினான் ரித்வி..
எப்போதும் போல் அவன் குறும்பையும் அடாவடித்தனத்தையும் எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தவள் தன் வேலையை கவனிக்கச்சென்றுவிட்டாள்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN