யாசிக்கிறேன் உன் காதலை - 13
"என்ன அண்ணா? அண்ணி இப்படி சொல்லிட்டுப் போறாங்க", என்றாள் மித்ரா வருத்தமாக.
"அவ யோசிக்கட்டும் டா", என்றான் துரு.
"
அபி " என்று ஆதி மற்றும் தியா ரூமிற்குள் உள்ளே நுழைந்தனர்.
"எனக்கு யோசிக்க டைம் வேணும் ப்ளீஸ் லீவ் மீ அலோன், பேபி கிட்ட இங்கு நடந்தது எதுவும் சொல்ல வேணா" என்றாள் அபி அழுத்தமாக.
"சரி " என்று இருவரும் வெளியே சென்றனர்.
'நா இப்ப என்ன முடிவு எடுக்குறது ஒரே குழப்பமா இருக்கு என்னால இவங்க எண்ணத்தை நிறைவேற்ற முடியாது?? மனசுல ஒருத்தன வச்சுக்கிட்டு எப்படி துருவ கல்யாணம் பண்ணுறது' என்று யோசனையுடன் தூங்கிப் போனாள். கண்விழித்து பார்க்கும்போது அகிலா அபியின் தலையை வருடியபடி பக்கத்தில் உக்கார்ந்திருந்தார். குணா அவளுக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
"டாட்... மீ..." என்று எழுந்து உட்கார்ந்தாள்.
"தூக்கம் வந்தா தூங்கு டா" என்றார் குணா.
"இல்ல டாடி ரெண்டு பேரும் ஏதோ பேச வந்து இருக்கீங்கன்னு எனக்கு புரிது சொல்லுங்க" என்றாள் பொறுமையாக.
"குட்டிமா நாங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ்தான் பண்ணிக்கிட்டோம் நீ யாரையும் லவ் பண்ணலன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும், அப்படி இருந்தா கூட நீயாவே எங்க கிட்ட சொல்லிருப்ப" என்றார் குணா உறுதியாக. அபி தலைக்குனிந்தாள்.
"நாங்க மேரேஜ் பண்ணி தனியா தான் இத்தன வருஷமா இருந்தோம் இப்பதான் ஒன்னாகிருக்கோம் நீ நல்ல முடிவ எடுப்பேன்னு எனக்கு நம்பிக்க இருக்கு டா" என்றார் அகிலா
"அகிலா அவள குழப்பாத. துரு மாதிரியை ஒருத்தன பார்க்க முடியாது, அவன் கிட்ட பிடிக்காதததுன்னு ஒன்னு கூட இல்ல, இருக்கவும் இருக்காது, அப்பா அம்மா பேசறதுலா நினைக்காத உனக்கு என்ன தோணுதோ! சொல்லுடா, அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பேபி டால். ரவீன் வீட்டுக்கு போயிட்டா இன்னைக்கு நைட் மேடம் அங்க என்ஜாய் பண்ண போறேன்னு சொல்றா" என்றார் சிரிப்புடன்.
"உன்னையும் அனுப்பலாம் டா ஆனா இப்ப அனுப்ப முடியாது எல்லாரும் உன் முடிவுக்காக வெயிட் பண்றாங்க, நீ இன்னொரு நாள் வேணா போயிட்டு வா" என்றார் அகிலா தலைமுடியை கோதி.
"சரி மீ" என்றாள். இரவு அபி சாப்பிட வரும் போது அனைவரும் அவளை ஆவலாக பார்த்தனர். சங்கடமாக சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றாள். மறுநாள் காலையில் அபி கீழே வந்தாள்.
"அபிமா" என்றார் தாத்தா பாசமாக.
"எனக்கு சம்மதம் தாத்தா " என்றாள் மெதுவாக.
"ஏ! ஏய்!" என்று சிறியவர்கள் கத்தியபடி அபியை சுற்றிவிட்டு அணைத்துக் கொண்டனர். துரு சிரிப்புடன் இதனை ரசித்துக் கொண்டு நின்றான்.
"என் மருமக சம்மதம் சொல்லுவானு சொன்னேன்ல பாத்திங்களா சொல்லிட்டா" என்றார் பார்வதி பெருமையாக.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு அபிமா, நா கல்யாணத்துக்கு தேதி கூட பார்த்துட்டேன் அடுத்த மாசம் கடைசில நல்ல மூகூர்த்தம் இருக்கு, அப்பவே வச்சுக்கலாம்" என்றார் தாத்தா சந்தோஷமாக.
"அப்பா எப்படிப்பா ஒன்ற மாசம் தான் இருக்கு அதுக்குள்ள எப்படி??" என்றார் குணா தயக்கமாக.
"நமக்கு என்ன ஆளுக்கா பஞ்சம் பார்த்துக்கலாம் குணா".
"சரிப்பா. மாமா உங்களுக்கு?" என்றார் குணா நாதனை பார்த்து.
"அட என்ன மச்சான் அதெல்லாம் பார்த்துக்கலாம் விடுங்க" என்றார் சிரிப்புடன்.
வீடே கல்யாண கலை வந்தது போல் மாறியது. அபிக்கு அழுகை வருவது போல் இருந்தது." தலை வலிக்குது. நா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டா?" என்றாள் பாவமாக.
"அட என்னமா போடா இதெல்லாம் கேட்கணுமா?" என்றார் மல்லிகா.
"டீ குடிச்சா கொஞ்சம் பிரஷா இருக்கும் இரு போட்டு தர்றேன்" என்று வனிதா உள்ளே போனார்.
"மீ நா ரூமுக்கு போறேன் எனக்கு டீ வேணா".
"அண்ணி நீங்க போங்க நா கொண்டு வரேன்" என்றாள் மித்ரா.
அபிக்கு மித்ராவின் அண்ணி என்ற அழைப்பின் காரணம் இப்போது தான் புரிந்தது."நீ என்னைய எப்போதும் போலவே கூப்பிடு மித்ரா அண்ணில வேணா" என்று பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக மேலே சென்றாள்.
"இவளுக்கு என்னாச்சு??" என்றான் சந்தோஷ் யோசனையுடன்.
"மேரேஜ் டென்ஷன் போல துரு மாமா போயி அபி கிட்ட பேசுங்க" என்றாள் சந்தியா கிண்டலாக.
"அவ ரெஸ்ட் எடுக்கட்டும், அத்த டாலு எங்க எப்ப வருவா??" என்றான் துரு.
"ரவீன் வீட்ல இருக்கா இன்னைக்கு நைட்டு வந்துருவான்னு நினைக்கிறேன்" என்று உள்ளே சென்றார்.
துரு, விரு, ரிஷி, சந்தோஷ் நால்வரும் நந்துவிற்கு மற்றும் சந்தியாவிற்கு ஆபீஸ் வேலையை சொல்லிக் கொடுத்தனர். மித்ரா இதனைக் கேட்டப்படி சோபாவில் படுத்து தூங்கினாள்.
'நா ஏன் இப்படி இருக்கேன் நா காதலிக்கிறேன்னு கூட என் மாம் டாட் கிட்ட சொல்ல முடியாத கோழையா இருக்கேன். ச்ச.. பேபி சொன்னது கரெக்ட் தான் யூஎஸ்ல இருந்து கிளம்பி வர்றதுக்கு முன்னாடி, டாட் மாம் கிட்ட சொல்லிருக்கனும். எல்லாம் போச்சு' என்று பேட்டில் படுத்து அழுதபடி நிஜ உலகத்தில் இருந்து நிழல் உலகத்திற்கு சென்றாள்.
(ஃபிளாஷ் பேக் ஸ்டார்ட்)
"இந்த பேபி லூசு எப்ப வருமோ! தெரியல " என்று புலம்பியபடி போனை எடுத்தாள். கதவு தட்டும் சத்தம் கேட்டது."ஆ.. வந்துட்டா போலயே! கமிங் பேபி டால்" என்றபடி கதவை திறந்தாள் அபி.
வெளியே ஓர் அழகான இளைஞன் சிரிப்புடன் நின்றான்."ஹூ ஆர் யூ??" என்றாள்.
"நா யாரா? ஏன் கேக்க மாட்ட.. அத்த உன் கிட்ட சொல்லலையா?? நீ அபிவேதரசி தானே!!" என்றான் சிரிப்புடன்.
"ஆர் யூ மேட்?? யார் நீங்க?? என் நேம் எப்படி தெரியும்??" என்றாள் சந்தேகமாக.
"தமிழ் நல்லா பேசுற குட்.. ஒரு கொஸ்டின் கேளு இத்தன கேட்டா நா எப்படி சொல்ல??" என்றான் கிண்டலாக.
"ஹாலோ! யாருன்னு கேட்டா பேசிட்டே போறீங்க" என்றாள் கோவமாக.
"நீ முதல்ல நகரு அத்த உள்ளே இருந்துக்கிட்டு என்ன பண்ணுறாங்க என்னைய வரவேற்காமா" என்று அபியை தள்ளிவிட்டு உள்ளே சென்றான்.
"ஹேய்!! மேன் யார் நீ ?? இப்படிலா பண்ணுன நா போலீஸுக்கு கால் பண்ணிடுவேன்" என்றாள் கோவமாக அவன் பின்னால் வந்து.
"வாவ்! வீடு சூப்பரா இருக்கு. டென்ஷன் ஆகாத ஹனி" என்றான் கன்னத்தை தட்டி.
"நீ இப்படி சொன்னாலா கேக்க மாட்ட. போலீஸ் வந்து கேட்டா தான் பதில் சொல்லுவ. தனிய இருக்க பொண்ணு கிட்ட வம்பு பண்ணுறீயா??" என்று ஆத்திரமாக போனை எடுத்தாள்.
"அட என் அத்த பொண்ணே தனியா இருக்கீயா?? சூப்பரு போலீஸிக்கு கால் பண்ணுறதுக்கு பதுல உன் அம்மாக்கு கால் பண்ணி அவங்க அண்ணன் பையன் ரவீந்தர் வந்துருக்கேன்னு சொல்லு" என்றான் சிரிப்புடன்.
அபியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது."நீங்க நாளைக்கு தானே வரீங்கன்னு மீ சொன்னாங்க" என்றாள் அதிர்ச்சியும் ஆனந்தமுமாக.
"என்னால வெய்ட் பண்ண முடியல அதான் முன்னாடி நாளே வந்துட்டேன், இப்ப நா இருக்கலாமா??" என்றான் கிண்டலாக.
"சாரி சாரி ரவீந்தர். உங்கள நாங்க பார்த்தது இல்ல அதான் தெரியல ஆமா என்னைய எப்படி தெரியும்??" என்றாள் ஆச்சரியமாக.
"உங்க எல்லாரோட ஃபோட்டோவும் நா பார்த்துட்டேன் அத வச்சு தான் உன்ன கரெக்ட்டா சொன்னேன், எங்க? அத்த மாமா அப்பறம் உன் தங்கச்சி??" என்றான் சிரிப்புடன் சோபாவில் உக்கார்ந்து.
"நாளைக்கு நீங்க வரீங்களா அதான் மீயும் டாடியும் திங்க்ஸ் வாங்க போயிருக்காங்க பேபி டால் ஆன் தி வே. இருங்க காஃபி போடுறேன் காஃபி குடிப்பீங்களா??" என்று கேட்டபடி கிச்சனுக்கு சென்றாள்.
"என்ன ரவீன்னே குப்பிடு ஹனி, காஃபி ஓகே! ஆமா யாரு பேபி டால்??" என்று பின்னாலே சென்றான்.
"என் சிஸ்டர் தான் ரவீன் , அவள அப்படி தான் கூப்பிடுவோம் " என்று காஃபி போட்டாள்.
"ஓ... குட் நானும் அப்படியே கூப்பிடுறேன்" என்றான் சிரிப்புடன்.
"ம்ம்... இந்தியால எல்லாரும் நல்லா இருக்காங்களா??" என்றாள் காஃபியை தந்தபடி.
"ஃபைன் ஹனி உன்ன ஃபோட்டோல பாக்குறத விட நேர்ல ரொம்ப அழகா இருக்க" என்றான் காஃபியை குடித்தபடி.
"தேங்க்ஸ் ரவீன். வாங்க உக்கார்ந்து பேசலாம்" என்று ஹாலுக்கு அழைத்து சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
"மேரே ஜானு " என்று அழைத்தபடி நேகா உள்ளே வந்தவள் புதியவனை யார் என்பது போல கேள்விக்குறியாக அபியை பார்த்தாள்.
"பேபி டால் இவரு ரவீந்தர். நம்ம மாமா பையன். மீ சொன்னாங்கள?" என்றாள் இங்கிலீஷில்.
"எஸ்.. வாவ் வெல்கம் மேன் ஐ யம் அபிநேகவதி" என்றாள் சிரிப்புடன்.
"ஹாய் டா நா ரவீன். தமிழ் தெரியும்ல?" என்றான் சிரிப்புடன்.
"யா.. லிட்டில் பிட். வீட்ல தமிழ் தான் பேசனும். மீயோட ஆடர்" என்று புகார் செய்தாள்.
ரவீன் சிரிப்புடன்,"தமிழ் பேசலனா உன் மதர் டாங் தெரியாமலே போயிடும். அதனால தான் அத்த அப்படி சொல்லிருக்காங்க".
"ஏய்! ரவீன் வந்துட்டியா டா" என்று அகிலா உள்ளே வந்து பாசமாக அணைத்துவிட்டார்.
"அத்த... மாமா.." என்றான் சந்தோஷமாக. குணாவும் அகிலாவும் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி விசாரித்தனர்.
"உன்ன எப்படி விட்டாங்க டா நீ இங்க வரனு தெரியுமா??" என்றார் குணா.
"தெரியும் மாமா நேசமணி தாத்தாக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாரு அப்படி இப்படின்னுடே இருந்தாங்க, நா புராஜக்ட் பண்ணி முடிக்கிற வரைக்கும் கண்டிப்பா இங்க தான் இருப்பேன்னு சொல்லிட்டேன், பாட்டி அம்மாலா அத்தைக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ்லா குடுத்து அனுப்புனாங்க" என்று பெட்டியை திறந்து அனைத்தையும் எடுத்துக் கொடுத்தான்.
"எத்தன வருசமாச்சு என் அம்மா அண்ணி கையால சாப்பிட்டு" என்று கண்கலங்கினார்.
"அத்த இனிமே அடிக்கடி சாப்பிடலாம் சீக்கிரமாவே எல்லாரும் உங்கள எத்துப்பாங்க" என்று அணைத்து சமாதானம் செய்தான்.
"நா போய் உனக்கு சமையல் பண்ணுறேன் டா" என்று சந்தோஷமாக உள்ளே சென்றார்.
"பார்த்தீங்களா குட்டிஸ்? உங்க மீக்கு இப்ப தான் சமைக்கிறதுல ஆர்வம் பொங்கி வலிது அண்ணேன் மகன பார்த்ததும்" என்றார் கிண்டலாக.
"எஸ் டாட்" என்று சிரித்தனர்.
"ரவீன் ரொம்ப தேங்க்ஸ் டா. உன்னால தான் அகி முகத்துல இவ்ளோ சந்தோஷம்" என்றார் அணைத்துவிட்டு.
"இது என் கடம மாமா" என்றான் சிரிப்புடன்.
"வேது... பேபி டால்.." என்று ஆதி மற்றும் தியா வந்தனர்.
"டாட் இங்க தான் இருக்கீங்களா?" என்று இருவரும் அவர் தோளில் இருபக்கமும் சாய்ந்து விலகினர்.
ஆதிக்கும் தியாவுக்கும் ரவீனை அறிமுகம் செய்தனர். சிறிது நேரத்தில் ஐந்து பேரும் ஒரு நல்ல நட்பு உருவாகியது.
"ரவீன் ஆஃபீஸ் எங்க இருக்கு?" என்றார் குணா. அவன் சொன்னதும்.
"எங்க ஆபீஸ் போற வழியில்ல தான் உன்னோடதும் இருக்கு" என்றாள் அபி சந்தோஷமாக.
"அப்ப இனிமே நாம சேர்ந்தே போலாம்" என்றாள் தியா சிரிப்புடன் இங்கிலீஷில்.
"சோர்" என்றான் ரவீன் சிரிப்புடன்.
அகிலா சாப்பிட அழைத்ததும் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டனர். அந்த நாள் இனிமையாகவே சென்றது. ரவீன், அபி, தியா, ஆதி நான்கு பேரும் ஒன்றாகவே ஆபீஸ் சென்றனர்.
நேகா வழக்கம்போல் அவள் ஹாஸ்பிடலுக்கு சென்றாள்.
ஒர் மாதம் இவர்கள் ஐந்து பேரும் நெருக்கிய நண்பர்களாக மாறி போனார்கள். ஆதி மற்றும் தியாவுக்கு ஆபீஸ் ஷிப்ட் மாறியது.
அபியும் ரவீனும் பதினைந்து நாட்கள் ஒன்றாக சேர்ந்து செல்ல ஆரம்பித்தனர்.
குணாவும் அகிலாவும் குணாவின் ஆபீஸ் நண்பரின் மகள் கல்யாணத்திற்கு சென்றனர். அபி ஆபீஸிலிருந்து வரும்போது சோர்வுடன் வந்தாள்.
ரவீன் அவளை ரூமில் படுக்க வைத்தான்.நேகா வந்ததும்.
"பேபி டால் பேபிமாக்கு உடம்பு சரியில்ல நீ வந்து
பாரு" என்றான் பதறியபடி இங்கிலீஷில். (இனி வரும் அனைத்தும் ஆங்கிலத்தில் வரும் அதனை தமிழில் பாக்கலாம்)
"என்னாச்சு ரவீன்??" என்று பதறியபடி அபி அறைக்கு சென்று பரிசோதித்தாள்."ரவீன் அபிக்கு ஃபீவரா இருக்கு, டாடியும் மீயும் இன்னைக்கு வர மாட்டாங்க நாளைக்கு மேரேஜ் முடிச்சுட்டு தான் வருவாங்க" என்று இஞ்செக்சன் போட்டாள்.
"எனக்கு வாமிட் வர மாதிரி இருக்கு" என்றாள் அபி எழுந்து.
ரவீன் தன் கைகளை நீட்டி,"வந்தா எடு டா" என்றான் பதறியபடி. அபி கண்கள் விரிய பார்த்தாள்.
நேகா பாத்ரூமில் இருந்த டப்பாவை எடுத்து வந்து அவளிடம் நீட்டி,"இதுல எடு ஜானு, ரவீன் என்ன பண்ற மேன்??" என்றாள் கிண்டலாக அவனைப் பார்த்தபடி.
"ஒன்னும் இல்ல சும்மாதான், நீ இங்கேயே இரு நா போய் ரசம் வச்சி சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என்று பதிலை எதிர்பார்க்காமல் ரவீன் கீழே சென்றான்.
நேகா அபியை பார்த்து சிரித்தபடி," உனக்கு உடம்பு சரியில்லைன்னு பதருரத பார்த்தியா??" என்றாள் கிண்டலாக.
"ஆமா ஆமா" என்றாள் லேசான வெட்கத்துடன்.
"மேரே ஜான் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ சரியாகிடும் வாமிட் வராது" என்று அவளை படுக்க வைத்து தலை கோதினாள்.
ரவீன் சாப்பாடு எடுத்து வந்து அபியை உட்கார வைத்து ஊட்டினான். நேகா சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அபியை சாப்பிட வைத்து மாத்திரை போட்டு படுக்க வைத்தனர். ஊசி போட்டதால் உடனே உறங்கி போனாள்."நீ போய் ரெஸ்ட் எடு. நா பாத்துக்குறேன் ரவீன்".
"பேபி டால் நானே ஹனிய பார்த்துக்குறேன்" என்றான் கெஞ்சலாக.
"வா நாம வெளிய போய் பேசலாம்" என்று அழைத்து வந்து,"ரவீன் எதுக்காக என்னை மேரே ஜானு அபிய கூப்பிட வேணாம்னு சொன்ன??" என்றாள் கூர்மையான பார்வையுடன்.
"அது வந்து அவள நா அப்படித்தான் நினைக்கிறேன் நா தான் அப்படி கூப்பிடனும் அதனால தான் அப்படி சொன்னேன், சரி நீ போய் ரெஸ்ட் எடு நா ஹனிய பார்த்துக்குறேன் ப்ளீஸ்டா" என்றான் கெஞ்சலாக.
"இப்ப மட்டுமில்ல லைஃப் லாங் நீ என் அபி செல்லத்த நல்லா பார்த்துக்கோ" என்றாள் சிரிப்புடன்.
ரவீன் பாசத்துடன் நேகாவை அணைத்து," எனக்கு ஹனிய ரொம்ப பிடிச்சிருக்கு பேபி டால், அது எப்படி சொல்றது அத்த பொண்ணுங்குற விட அதுக்கு மேல எனக்கு தோணுது, நா அபிய ரொம்ப சந்தோஷமா பாத்துப்பேன், என்னைய நம்பி அபிய எனக்கு கொடு" என்றான் காதலும் சிரிப்புமாக விலகி அவள் முகத்தை பார்த்து.
"நீ இப்படி தான் வந்து நிப்பேன்னு முன்னாடியே நினைச்சேன், நீயே வச்சுக்கோ! உன் ஜானுவ மேரே ஜானு கூப்பிடல" என்றாள் சிரிப்புடன் விலகி.
"சரி நீ போய் தூங்கு நா போய் அவள பார்க்கிறேன்" என்று உள்ளே சென்றான். இரவு முழுவதும் விழித்திருந்து அபியை பார்த்துக்கொண்டான். அபி அடிக்கடி முழித்து இவனை பார்த்தபடி தூங்கினாள்.
மறுநாள் காலையில் ரவீனின் போன் அடித்துக்கொண்டே இருந்தது. "ஹலோ! சொல்லு டா துரு" என்றான் போனை எடுத்ததும்.
"ரவீன் நா முன்னாடியே உன்கிட்ட சொல்லிட்டேன் எப்ப பார்ட்னர்ஷிப் போட வர, உன்கிட்ட எத்தன தடவ சொல்றது" என்றான் துரு சலிப்புடன்.
"துரு யூஎஸ் புராஜக்ட் முடிச்சுட்டு வந்து ஜாயின் பண்ணுறேன் சொன்னல இன்னும் இங்க தான் இருக்கேன், ஒன்ற மாசத்துல ப்ராஜெக்ட் முடிஞ்சிடும் நா அப்புறமா வந்துறேன் டா" என்றான் சிரிப்புடன்.
"சரிடா பார்த்து இரு நா அப்புறம் கால் பண்றேன் வேற ஒரு கால் வருது" என்று வைத்து விட்டான்.
அபி எழுந்து உட்கார்ந்து ரவீனை கேள்வியாக பார்த்தாள்." துரு கால் பண்ணுனான் அவன் உன் அத்த பையன், நானும் அவனும் பார்ட்னர்ஷிப்ல கம்பெனி வைக்கணும்னு ரொம்ப நாளா பேசிட்டு இருந்தோம், அத பத்தி தான் கேட்டான், ஆல்ரெடி அவன் கம்பெனிய ஸ்டார்ட் பண்ணிட்டான் ரொம்ப நாள கேட்டான் நா தான் வரலன்னு சொல்லிட்டே இருந்தேன் இங்க வரத்துக்கு முன்னாடி தான் ஜாயின் பண்ணிக்கிறேன்னு சொன்னேன், இந்த ட்ரிப் முடிஞ்சதும் கம்பெனில எல்லாத்தையும் குடுத்துட்டு ரிசைன் பண்ணனும், நானும் அவனும் சேர்ந்து கம்பெனியின் அடுத்த ஸ்டெப் கொண்டுப்போக பிளான் போட்டுருக்கோம்" என்றான் சிரிப்புடன் விளக்கமாக.
"சூப்பர் ரவி டாடி அண்ட் மீ எங்க கிட்ட ரிலேஷன்ஸ் பத்தி தெளிவா எதையும் சொல்லல, நாங்களும் அத பத்தி கேக்கல, சரி நீ போய் ரெஸ்ட் எடு நைட் ஃபுல்லா தூங்கம வேற பார்த்துகிட்ட, இதுக்காக தேங்க்ஸ் எல்லாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்காத நா ரெஸ்ட் ரூம் போறேன்" என்று கிண்டலாக சொல்லியபடி எழுந்தாள்.
எழுந்தவளின் கையை பிடித்து இழுத்து," உன்க்கிட்ட யாரு தேங்க்ஸ் கேட்டா வேற ஏதாச்சும் கூட கொடுக்கலாம்" என்றான் குறும்புடன் அவள் இதழை பார்த்து.
"நா எதுவும் கொடுக்க போறது இல்ல, எதா இருந்தாலும் நீயே எடுத்துக்கோ!" என்று வெக்கத்துடன் சொல்லிவிட்டு அவன் கையை விடுவித்து பாத்ரூமுக்குள் ஓடினாள்.
ரவீன் சிரிப்புடன் அவன் அறைக்கு சென்றான். அகிலாவும் குணாவும் வந்ததும். நேகா அபிக்கு உடல் நிலை சரியில்லாததை சொன்னாள். அபியை ஆபீசுக்கு செல்ல விடாமல் ஒரு வாரம் லீவு போட வைத்து பார்த்துக்கொண்டனர்.
"அபி உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்" என்றாள் நேகா அவள் அறைக்கு வந்ததும்.அவள் பின்னாடி ஆதி மற்றும் தியா வந்தனர்.
"என்ன பேபி டால் உன்கூட ஆதியும் தியாவும் வந்திருக்காங்க என்ன விஷயம்??" என்றாள் மூவரையும் பார்த்து.
"நீ தான் சொல்லணும் எங்ககிட்ட சில விஷயங்கள் மறைக்கிற மாதிரி இருக்கு என்ன நடக்குது இங்க??" என்றாள் தியா கிண்டலாக.
"அது வந்து" என்றாள் அபி தயங்கியபடி.
"அபி நீ சொல்லாமலே எனக்கு புரிஞ்சு போச்சு, எனக்கு புரிஞ்சத இவங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லி இழுத்துட்டு வந்தேன், நீ ரவீன லைக் மட்டும் பண்ணல அதுக்கு மேல அடுத்த ஸ்டெப் நீ ரவீன.." என்றாள் பாதியில் நிறுத்தி புருவம் உயர்த்தி.
"ஆமா எனக்கு ரவிய ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா இது லவ் தான்னு என்னால கன்ஃபார்மா சொல்ல தெரியல, ரவி இல்லாம நா இல்ல அப்படின்னு மட்டும் சொல்லுவேன், ரவி வந்து என் கிட்ட சொன்னதும் உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றாள் லேசான வெட்கத்துடன்.
மூவரும் சேர்ந்து அவளை அணைத்து கிண்டல் செய்தனர். இருவருக்கும் தன் காதலை சொல்லிக் கொள்ளாமல் நாட்கள் பறந்தது.நேசமணி இடமிருந்து பாட்டிக்கு உடல்நிலை சரியில்லைன்னு தகவல் வந்தது இந்தியா செல்ல ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர்.
"ரவீன் நீ நாளைகே ஊருக்கு போய் தான் ஆகனுமா?? எனக்கு ஆபிஸ்ல ரொம்ப வேல இருக்கு நீ என்கூட வரக்கூடாதா?? டாடி, மீ, பேபி டால் மூணு பேரும் போகட்டும் நீயும் நானும் சேர்ந்து போலாமே!!" என்றாள் அபி சோகமாக ரவீன் அறையில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து.
"எனக்கும் உன் கூட இருக்கணும்னு ஆசை தான் ஹனி ஆனா என்ன பண்றது இங்க நா ஒர்க் முடிச்சுட்டேன் அங்க நா சப்மிட் பண்ற வேல இருக்கு டா ஹனி, வேற வழி இல்ல" என்றான் அவளை தன் தோளில் சாய்த்து.
"உன்ன நா ரொம்ப மிஸ் பண்ணுவேன்" என்றாள் அவனை இறுக்கமாக அணைத்தபடி.
"நானும் உன்ன ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன் ஹனி" என்றான் அவள் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்து.
அபி சிறிது நேரம் கண்களை மூடியபடி இருந்தவள் கண்களை திறந்து," இது மட்டும் தான் சொல்ல தோணுச்சா வேற ஏதும் சொல்ல தோணலையா??" என்றாள் அவன் கண்களை பார்த்து.
"சொல்லணும் ஆனா இங்க சொல்ல மாட்டேன் நீ இந்தியா வரணும், இந்தியா வந்ததுக்கு அப்புறம் நம்ம மொத்த குடும்பமும் ஒன்னா கூடி இருப்போம்ல, அந்த நேரத்துல உன்கிட்ட கத்தி சொல்லுவேன்" என்றான் காதலுடன்.
"அப்ப நானு உன்கிட்ட சொல்லுவேன்" என்றாள் அவன் மார்பில் முகம் புதைத்தபடி.
"என்ன சொல்லுவீங்க மேடம் சொல்லுங்க" என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.
"நீ என்ன சொல்றியோ அதையேதான் நானும் சொல்லுவேன்" என்றாள் சிரிப்புடன்.
"நீ சொல்றது கேக்க நா காத்திருப்பேன், சீக்கிரமா இந்தியாவுக்கு வா நானும் இருக்க வேல எல்லாத்தையும் முடிச்சிட்டு ஊருக்கு வந்ததும் பார்க்க வரேன்".
"ரவி ஒரு ஐடியா. நீ டெல்லில இரு. நா கிளம்பி வரப்ப டெல்லி வந்துறேன், அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து திருச்சி போயிடலாம், என்ன சொல்ற??" என்றாள் எதிர்பார்ப்புடன் அவன் முகத்தை பார்த்து.
"சரிடா நீ வந்துரு ரெண்டு பேரும் சேர்ந்து ஊருக்கு போகலாம், இப்ப எனக்கு பேக் பண்ண ஹெல்ப் பண்ணுவல".
"ஷோர்" என்று எடுத்து வைக்க உதவினாள்.
நேகா கதவை தட்டியபடி உள்ளே வந்து,"இந்தா. இதுல நானும் அபியும் சேர்ந்து வாங்குன டிரஸ் இருக்கு. எல்லாத்துக்கும் கொடுத்துடு" என்று கவரை கொடுத்தாள்.
"நல்ல வேல பேபி டால். நா இத கொடுக்கவே மறந்துட்டேன், இத நாங்கள் கொடுத்தோம்னு சொல்லிக் கொடு ரவி" என்றாள் அபி சிரிப்புடன்.
"ஒகே பேபி டால் நீ நிறைய தமிழ் மூவி பாரு அங்க இருக்குறவங்களுக்கு தமிழ் தான் தெரியும்" என்றான் சிரிப்புடன்.
"ஓகே மேன்" என்றாள் சிரிப்புடன்.
ரவீன் கிளம்பி சென்றான். அடுத்த சில நாட்களிலே குணா, நேகா, அகிலா மூவரும் அபியை ஆதி மற்றும் தியா வீட்டில் பார்த்துக்க சொல்லிவிட்டு கிளம்பினர். அடுத்த இரண்டு நாட்களில் அபியும் கிளம்பி டெல்லி சென்று ரவீனுடன் சேர்ந்து திருச்சி வந்தாள்.
(பிளாஷ்பேக் ஓவர்)
'எல்லாம் என் தப்பு தான் ரவி. உன் காதல கூட சொல்லவிடாம பண்ணிட்டேன்.' என்று அழுதபடி நிழல் உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு வந்தாள்.
மாலை நான்கு மணி போல் ஹாலில் தாத்தாக்கள், குணா, ராஜா கல்யாண சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தனர்.அகிலாவின் அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி வந்தனர்.
"வாங்க வாங்க" என்று வரவேற்று தாழ்வாரத்திற்கு அழைத்து சென்றனர். குடும்பத்தினர் அனைவரும் வந்து வரவேற்று டீ ஸ்நாக்ஸ் கொடுத்தனர். சிறியவர்களும் இவர்கள் வந்ததை பார்த்ததும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்தனர் தியா, ஆதி ,அபியை தவிர. சிறிது நேரத்தில் ரவீன் வந்தான். அவனை வரவேற்று உபசரித்தனர்.
"நேகி எங்க மாமா??" என்றான் நந்து.
"அவ ஸ்கைப் கால்ல இருக்காடா அவ பேசன்ட் ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருக்கா அதான் அவள வீட்லயே விட்டுட்டு வந்துட்டேன்".
"அப்புறம் சம்பந்தி. ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தோம்" என்றார் அகிலாவின் அப்பா தயங்கியபடி.
"சொல்லுங்க சம்பந்தி" என்றார் நேசமணி சிரிப்புடன்.
"அது ஒன்னுமில்லைங்க அண்ணா. நம்ம ரவீனுக்கு அபிய பொண்ணு கேட்டு வந்திருக்கோம்" என்றார் அகிலாவின் அம்மா. அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
"அது சம்பந்தி நேத்துதான் துருவிக்கும் அபிக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணுனோம், காலைதான் தேதி குறிச்சோம், இத பத்தி நாங்களே திருவிழா முடிஞ்சு சொல்லலாம் இருந்தோம், நீங்களே வந்துட்டீங்க" என்றார் நேசமணி பொறுமையாக.
ரவீன் குடும்பத்தினர் அதிர்ச்சியுடன் ரவீனை பார்த்தனர். அவன் அதிர்ச்சியுடன் உட்கார்ந்திருந்தான்.
"அட பரவால்ல சம்பந்தி துருவும் நம்ம வீட்டு பையன் தானே!" என்றார் அகிலாவின் அப்பா சிரிப்புடன்.
"ஆமா துருவும் எங்க பேரன் தானே" என்றார் அகிலாவின் அம்மா சமாதானமாக.
"உங்களுக்கு வருத்தமா இருக்கும், சொல்லாமல் இருந்ததுக்கு மன்னிச்சுடுங்க" என்றார் குணா வருத்தமாக.
"ஐயோ! மாப்பிள இதுல என்ன இருக்கு? விடுங்க" என்றார் அகிலாவின் அண்ணா. மற்றவர்கள் ஆமாம் என்பது போல் தலை ஆட்டினர்.
"ரவீனுக்கு நம்ம நேகவதிய கல்யாணம் பண்ணலாமே! அவளுக்கு ரவீன விட நல்ல பையன் கிடைக்க மாட்டான்" என்றார் நேசமணி தாத்தா.
"என்னது??"என்றான் ரிஷி வேகமாக.
"என்னடா??" என்றார் முறைப்புடன்.
"நல்ல ஐடியான்னு சொல்ல வந்தேன் தாத்தா" என்றான் இழிப்புடன். சிறியவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர். துரு யோசனையுடன் ரவீனை பார்த்து,"ரவீன்" என்று தோளை தொட்டான்.
"ஆ... சொல்லுடா" என்றான் பொய்யான சிரிப்புடன்.
"ஒன்னும் இல்ல" என்றான் துரு மெதுவாக.
"நல்ல யோசனை அண்ணா. என் பேத்தி என் வீட்ல கட்டுறதே போதும்" என்றார் அகிலாவின் அம்மா சந்தோஷமாக.
"ஆமா சம்பந்தி. நேகாவ ரவீனுக்கு கல்யாணம் பண்ணுறதுல முழு சம்மதம், என்னடா??" என்றார் அகிலாவின் அப்பா அவர் மகனை பார்த்து.
"ஆமாப்பா. ரவீன் உனக்கு ஓகே தானே!" என்றார் சிரிப்புடன். அனைவரும் எதிர்பார்ப்புடன் அவனை பார்த்தனர்.
"அவனுக்கு எப்பவோ ஓகே! தான் எப்ப பாரு பேபி டால் பேபி டால்னு போன்ல பேசிட்டே இருப்பான், வேணாம்னா சொல்ல போறான்" என்றார் ரவீனின் அம்மா சிரிப்புடன்.
"அப்ப ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே வச்சுக்கலாம் எல்லாமே ஒன்ன நடந்த ரெட்ட சந்தோஷம் தானே!" என்றார் தாத்தா. அனைவரும் சரி என்பது போல் தலையை ஆட்டினர்.
"அப்பா நேகா கிட்ட இன்னும் கேட்கல" என்றார் குணா அவசரமாக.
"அவகிட்ட என்ன கேட்குறது அவ சின்ன பொண்ணு நாம பேசி முடிவு பண்ணலாம், கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நிச்சயம் வச்சுக்கலாம்" என்றார் முடிவாக.
"அப்பா நேகா கிட்ட பேசாம நாம பாட்டுக்கு முடிவு எடுக்க முடியாது" என்றார் குணா அவசரமாக.
"நீ கம்முனு இரு. அவ கிட்ட நாம பேசிக்கலாம், ஒத்துப்பா, கல்யாணம் வேலைய பாக்கலாம்".
"அப்ப நாங்க கோவிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போறோம் சம்பந்தி" என்று எழுந்தார் அகிலாவின் அப்பா. மற்றவர்களும் எழுந்தனர்.
"சரிங்க சம்மந்தி" என்றார். கிளம்பி சென்றனர்.
ஆறு மணி போல் ரவீன் நேகாவை வாசலிலே விட்டுவிட்டு," வேல இருக்கு பேபி டால்" என்று கிளம்பினான்.
"னா... ன...ன..." என்று முணுமுணுத்தபடி உள்ளே வந்தாள்.
"வா மா கல்யாண பொண்ணு" என்றனர் மித்ரா மற்றும் சந்தியா கிண்டலாக.
"கல்யாண பொண்ணா? என்ன உலருறீங்க?" என்றாள் குழப்பமாக.
"அடுத்த மாசம் கல்யாணத்த வச்சுக்கிட்டு எங்களை உலருறன்னு சொல்லுற" என்றாள் மித்ரா கிண்டலாக.
"எக்ஸ்கியூஸ் மீ. புரியல தெளிவா சொல்லு" என்றாள் குழப்பமாக.
"உனக்கும் ரவீன் மாமாவுக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்காங்க" என்றாள் சந்தியா.
"பேடன்" என்றாள் குழப்பமாக.
"நீ கரெக்டா தான் கேட்டுருக்க" என்று நந்து பக்கத்தில் வந்தான்.
"எனக்கு முன்னாடி அபி இருக்கா மேன். அப்பறம் சந்தியா இருக்கா" என்றாள் கிண்டலாக. நந்து நடந்த அனைத்து விஷயத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான்.
"டாடி... மாம்.." என்று கத்தினாள்.
அவள் போட்ட சத்தத்தில் மொத்த குடும்பமும் தாழ்வாரத்திற்கு ஓடிவந்தனர். "என்ன இதெல்லாம் எனக்கும் ரவீனுக்கும் கல்யாணமா??" என்றாள் ஆத்திரமாக.
"சொல்றேன் பேபி டால் ரிலாக்ஸ்.. பொறுமையா கேளு" என்றார் குணா கெஞ்சலாக.
"என்ன கேக்கணும் நா கேட்டதுக்கு எஸ் ஆர் நோ" என்றாள் கூர்மையான பார்வையுடன்.
"எஸ்" என்றார் தயங்கியபடி.
"யாரக் கேட்டு முடிவு பண்ணுனீங்க??" என்றாள் கோபமாக.
"யார கேட்கனும்??" என்றார் தாத்தா கோபமாக அவள் முன்னால் வந்து.
"என்னைய கேட்கணும் வாழ போறது நா, என்னைய கேக்காம முடிவு பண்ண யாருக்கும் ரைட்ஸ் இல்ல, அதாவது உரிமை இல்ல அந்த உரிமைய நா யாருக்கும் தரல" என்றாள் கோபமாக.
"நீ சின்ன பொண்ணு உன் வாழ்க்க நல்லா இருக்கணும்னு தான் அபி துருக் கல்யாணத்தோட உன் கல்யாணத்தையும் முடிவு பண்ணியிருக்கோம், ரவீனுக்கு என்ன குறை அவன மாதிரி ஒருத்தன் பார்க்கவே முடியாது, என்ன பொறுமை, என்ன அழகு, துருவா கூட சேர்ந்து சொந்தமா கம்பெனி, நீ கூட அவன் கிட்ட நல்லா பழகுற உனக்கு பிடிச்சனால தானே பழகுற" என்றார் கேள்வியாக.
"எனக்கு பீச்னா அவ்ளோ பிடிக்கும் அதுக்காக அதுக்குள்ளவே நா இருக்க முடியுமா?? கொட்டுற பனில நடக்க ரொம்ப பிடிக்கும் அதுக்காக நடந்துகிட்டே இருக்க முடியுமா?? ஐ லவ் தாஜ்மஹால் அதுக்காக நா தாஜ்மஹால கட்டி கூடவே எடுத்துட்டு வரமுடியுமா?? ஐ லவ் ஸ்வீட். ஸ்வீட்ட மட்டுமே சாப்பிட்டு இருந்தா சுகர் வந்து செத்துருவேன், ரவீன எனக்கு இப்பவும் ரொம்ப பிடிக்கும் ஐ லவ் ரவீன் ஆனா நா சொல்ற லவ், காதல் இல்ல அன்பு, பாசம் மட்டும் தான், என் லைஃப்கு எது நல்லதுனனு உங்க எல்லாத்தையும் விட எனக்குத் தான் என் மனச பத்தி நல்லா தெரியும், நா ரவீன ஒருநாளும் அப்படி ஒரு எண்ணத்துல பார்த்ததில்ல, என் மேரேஜ் முடிவு பண்ண என் டாட்.. மாம்கு இந்த பையன் ஓகேவான்னு பாக்கலாம் ஆனா அவன் எனக்கு ஓகேவான்னு சொல்றதுக்கு என் ஒருத்திக்கு மட்டும் தான் உரிமை இருக்கு அந்த உரிமையை நீங்க எடுத்துக்காதீங்க தாத்தா" என்றாள் கோபமாக.
"இப்ப முடிவா என்ன சொல்ற??" என்றார் உச்சக்கட்ட கோபத்தில்.
"எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்றேன் அப்புறம் இன்னொரு விஷயம் என் கிட்ட கேட்டுட்டு ரவீன் வீட்ல ஓகே சொல்லனும்னு உங்க யாருக்கும் தோணலல, இவ கிட்ட என்ன கேட்கறது தானே எல்லாரும் நினைக்கிறீங்க டாடி ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ" என்றாள் கோபமாக.
"பேபி டால். டாடி உன்கிட்ட கேக்காம முடிவு எடுப்பனா? இல்லடா இங்க வா" என்று கையை விரித்தார்.
"இல்ல எடுத்துட்டீங்க சந்தியா, மித்ரா, நந்து எல்லாத்தையும் சொல்லிட்டாங்க, உங்க அப்பா பண்ணுனத எனக்கு பண்ண பாக்குறீங்களா?? அப்ப யூவர் பாதர் அண்ட் யூ சேம்மா?" என்றாள் உடைந்த குரலில்.
குணா அவளை அணைத்து," உனக்கு இஷ்டம் இல்லனா டாடி பண்ண மாட்டேன் டா. இப்பவே உன் தாத்தா பாட்டி கிட்ட பேசுறேன்" என்றார் தலை முடியை கோதி.
"குணா அவசரப்படாத பொறுமையா இரு" என்றார் தாத்தா.
"இல்லப்பா" என்று நேகாவை விலக்கிவிட்டு," உங்ககிட்ட அப்பவே சொன்னேன் இவ கிட்ட கேட்டுட்டு சொல்லலாம்னு கேட்டீங்களா, நாம கேட்டு இருந்தா கூட அத பத்தி யோசிச்சு இருப்பா, கேட்காம முடிவு பண்ணுனனால அத பத்தி யோசிக்க கூட மாட்டா" என்றார் வேகமாக.
"டேய்! குணா இவள கல்யாணம் பண்ணி தரேன்னு சொன்னதும் சம்மந்தி வீட்டுல எவ்ளோ! சந்தோஷப் பட்டாங்க அதக் கெடுக்க போறியா??" என்றார் முறைப்புடன்.
"என் பொண்ண பத்தி என்னைய விட அதிகமா யாருக்கும் தெரியாது பா, மத்தவங்க சந்தோஷத்துக்காக என் பொண்ணு மெழுகுவர்த்திய எரியனும்னு எந்த அவசியமும் இல்ல" என்றார் அழுத்தமாக.
"ஏங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. ரவீன் இவள நல்லா பாத்துப்பான், நேகா கொஞ்சம் யோசிச்சு முடிவு சொல்லு திருவிழா முடியும் வரைக்கும் டைம் எடுத்துக்கோ எனக்காக டா" என்றார் அகிலா கெஞ்சலாக. நேகா யோசனையுடன் நின்றாள்.
"என்ன எதுவும் சொல்லாம இருக்க யோசிக்கிறேன்னு வாய திறந்து சொன்னா என்ன?? உன் வாழ்க்க நல்லா இருக்கணும்னு தானே இப்படி முடிவு எடுத்தோம்" என்று பேசிக்கிட்டே போனவரின் இடையே தடுத்து,
"முடிவு எடுத்தோம் இல்ல எடுத்தேன்னு சொல்லுங்க நீங்க சொன்னதும் அக்செப்ட் பண்ண நா ஒண்ணும் உங்க சன் அதாவது உங்க மகனோ! மகளோ! இல்ல உங்க பேத்தி, நீங்க எட்டடி பாஞ்சா நா முப்பத்தி ரெண்டு இல்ல இல்ல அறுபத்தி நான்கு அடி பாய்வேன், என் முடிவ நா தான் எடுப்பேன், அதுல யாரும் தலையிடாதிங்க காட் இட்?" என்றாள் கோபமும் அழுத்தமுமாக.
"டாலு டோண்ட் ப்ஹவ் சில்லி, நீ வா நாம ரூமுக்கு போலாம்" என்று துரு அவள் கையை பிடித்து இழுத்தான்.
"என்னைய விடு தேவ். மத்த விஷயம் மாதிரி இதுலயும் என்னைய சமாதானம் பண்ணலாம்னு நினைக்காத, இப்ப நடந்த விஷயத்துல நீ என்னைய விட்டு தள்ளியே இரு என்னைய நெருங்காத" என்று கையை உதறிவிட்டு போனை எடுத்து கால் செய்து,"டேய்! ரவீன் நாயே இங்க வீட்டுக்கு வந்தா என்னனமோ! சொல்லுறாங்க உன் கூட தானே வந்தேன் என் கிட்ட ஒரு வார்த்த சொன்னியா? ஏன் இப்படி இருக்கன்னு பைக்ல வரப்ப கேட்டனா?? இல்லையா?? அப்பாவச்சும் சொல்லி தொலைக்க வேண்டியதுதானே!!" என்று திட்டிக்கொண்டே மாடிக்கு ஏறினாள்.
மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது. அபி,ஆதி, தியா மூவரும் மாடிக்கு சென்றனர். நேகா மொட்டை மாடியில் போனில் பேசிக்கொண்டு இருந்தாள். இவர்களைப் பார்த்ததும்," நா அப்புறம் பேசுறேன்" என்று வைத்தாள்.
"பேபி ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற பொறுமையா சொல்ல வேண்டியதுதானே" என்றாள் அபி கோவமாக.
நேகா அபியின் கன்னத்தில் அறைந்து," நா ஒன்னும் வாயில்லா பூச்சி அபி இல்ல. இங்க என்ன நடக்குது எதுக்கு தேவ்வ கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்ட" என்றாள் கோபமாக.
"எனக்கு வேற வழி தெரியல இப்பதான் ஒன்னாயிருக்கோம். அத நானே போய் எப்படி கெடுக்குறது?" என்றாள் அழுகையுடன்.
"அப்ப ரவீன் நிலைம அவன நீ லவ் பண்றதுலா சும்மாவா??" என்றாள் முறைப்புடன்.
"ஆமா ரவிய எனக்கு ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததும் ரொம்ப பிடிச்சிருந்தது, அதுவும் நம்ம ரிலேஷன வீட்டுக்கு வந்த ஃபர்ஸ்ட் பேர்சன் அவன்தான், எல்லாரையும் எதுட்டு வந்து ஸ்டே பண்ணுனான், ஒன்னு ஒன்னும் ரொம்ப கேர் பண்ணுனான், டாடி சொன்ன மாதிரி இவன் தான் என் எதிர்காலம் என் உள் மனசு சொன்னது ஆனா என்ன பண்ண? அவனே என்கிட்ட லவ்வ சொல்லல, நா எப்படி சொல்றது? என் லவ் சொல்லாமலயே செத்துப்போச்சு" என்றாள் கீழே உட்கார்ந்து கதறியபடி.
மூன்று பேரும் அவளை அணைத்தனர்." லூசு வேது உன் மனசுல ரவீன் இருந்தனால தான் மேரேஜ் பத்தி பேசினதும் ரூமுக்கு வந்தோம்" என்றாள் ஆதி.
"ஆனா நீ எங்கள துரத்திட்ட, இதுல நேகி கிட்ட வேற சொல்லாதன்னு சொல்லிட்டா" என்றாள் தியா.
நேகா விலகி முறைப்புடன், "ஓ... இதுவேற நடந்து இருக்கா?? மேரே ஜான் லவ்வ நீ சொன்னா தான் என்ன, ரவீன் உன்ன எவ்ளோ லவ் பண்ணுறான்னு தெரியும் தானே!!" என்றாள் அவள் முகத்தை நிமிர்த்தி.
"தெரியும் அவன் என்கிட்ட ஏன் சொல்லல??" என்றாள் கரகரத்த குரலில்.
மூவரும் முறைத்தனர்."தெரிஞ்சும் கேக்குறீயே! லவ்வுல சண்ட கூட இருக்கலாம் இப்படி லவ்வ சொல்ல போட்டி இருக்கலாமா?? நேத்து நானும் ரவீனும் எங்க போனோம் தெரியுமா?? நீ கல்யாணம் பண்ணி வந்ததும் உங்க ரூம் உனக்கு ஏத்த மாதிரி மாத்தானும்னு உனக்கு பிடிச்ச திங்க்ஸ் எல்லாம் வாங்கி, உனக்கு ஏத்த மாதிரி ரூம்ம இப்பவே செட் பண்ணுனோம், இன்னைக்கு பொண்ணு கேட்டு வீட்டுக்கு வர சொன்னதே நானும் ரவீனும் தான், நீ அவசர குடுக்கை மாதிரி மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டா, ரவீன் மனசு எவ்ளோ! கஷ்டப்பட்டு இருக்கும். நீ எவ்ளோ கஷ்டப்பட்டடுருப்ப, அவன் கிட்ட யாருமே சம்மதமான்னு கேட்கவே இல்ல அபி, எல்லாத்தையும் அவங்களே பேசி முடிவு பண்ணிட்டாங்க, இத எப்படி சொல்றதுன்னு தெரியாம என்னைய விட்டுட்டு உடனே கிளம்பிட்டான்" என்றாள் வருத்தமாக.
"நா என்ன பண்றது துரு சம்மதம் சொல்லிட்டாரு, நா எப்ப சொல்லுவேன்னு எல்லாரும் எதிர்பார்ப்போடு பார்த்தாங்க" என்றாள் அழுகையுடன்.
துரு சம்மதம் சொன்னதை கேட்டதும் நேகாவின் இதயம் வலித்தது,' ஏன் இப்படி கஷ்டமா இருக்கு சரி அத அப்புறம் பார்த்துக்கலாம் இப்ப அபி தான் முக்கியம் அவள பார்க்கலாம்' என்று நினைத்தபடி," சரி விடு துரு கிட்டயும் இப்படித்தான் சம்மதம் கேட்டுருப்பாங்க" என்றாள் சமாதானமாக.
"இல்ல நேகா மித்ரா வந்த புதுசுல அண்ணின்னு சொல்லிக் கூப்பிட்டால உனக்கு ஞாபகம் இருக்கா?? அவ இதனால தான் என்னைய அண்ணின்னு கூப்பிட்டுருக்கா" என்றாள் யோசனையுடன்.
"அவ ஏன் அப்படி கூப்பிடானும்??" என்றாள் ஆதி யோசனையுடன்.
"பின்னால ஏதோ ரீசன் இருக்கும் போலயே!!" என்றாள் தியா யோசனையுடன்.
"உன் லவ் விஷயத்த சொல்லி இந்த மேரேஜ் ஸ்டாப் பண்ணிக்கலாம் நீ கவலைப்படாத தேவ் எவ்ளோ! குட் பெர்சன்னு உனக்கே நல்லா தெரியும் கண்டிப்பா அவன் ஹெல்ப் பண்ணுவான், கவலைப்படாத இரு ஜானு நா நடக்க விட மாட்டேன்" என்றாள் நேகா அவளை அணைத்து.
"எந்த பிரச்சினையும் இல்லாம சரியான போதும் ரவி என் மேல கோவமா இருக்கானா??" என்றாள் விலகி பயத்துடன்.
"அபி உனக்கு ஆல்ரெடி எல்லா விஷயமும் தெரியும், இங்க வந்தா ரவீன் உன் கூடவே இருந்தா எல்லாருக்கும் சந்தேகம் வரும் அதனால தான் என் கூட க்ளோசா இருக்க மாதிரி நடந்துகிட்டான், இத வச்சு உன்ன வெறுப்பேத்தனும்னு தான் எல்லாமே பண்ணுனான், அது உனக்கு புரிஞ்சிருக்கும்,அவன் ஃபீலிங்ல தான் இருக்கான், நாளைக்கு அவன் கூட பூக்ஸ் வாங்க போறேன் நீங்க மூணு பேரும் வாங்க".
"இல்ல இப்ப நா எப்படி வரது? எனக்கு எல்லாமே புரியுது. அவன் என்னைய வெறுப்பேத்த தான் பண்ணுனானு நல்லாவே தெரியும். ஆனா இப்ப அவன பார்க்க என் மனசு ஒத்துக்க மாட்டேங்குது நா வரல" என்றாள் அபி சோகமாக.
"நானும் தியாவும் வீட்டுக்கு போகனும் பாட்டி வர சொன்னாங்க" என்றாள் ஆதி.
"சரி ஓகே! அப்ப நா போய்ட்டு வரேன்".
"பாப்பா சாப்பிட வர சொன்னாங்க" என்றார் வேலையாள் வந்து.
"நீங்க போங்க நாங்க வரோம்" என்றாள் தியா.
"சரிமா" என்று கீழே சென்றார்.
"வாங்க ரீஃபிரஷ் பண்ணிட்டு போய் சாப்பிடலாம்" என்றாள் ஆதி. நான்கு பேரும் ரூமுக்கு சென்றனர்.
நேகா துருவின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை ஜெயிக்குமா?? அவன் உதவுவானா?? கீழே வந்தால் மீண்டும் பிரச்சனை வருமா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....
யாசிப்பு தொடரும் ..........
Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.