உன்னாலே உனதானேன் 10

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறு நாள் காலை முதலில் துயில் கலைந்த ரேஷ்மி மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்க எதிரே ஏதோ இருப்பது போல் தெரிய அதை கை வைத்து பார்த்தவளுக்கு அப்போது தான் இரவு நடந்த சம்பவம் நினைவில் வந்தது.. அவள் வினயின் மார்பில் தலை வைத்து படுத்திருக்க வினயின் ஒரு கை அவளை அணைத்திருந்தது... மெதுவாக அவனது தூக்கம் கலையாதவாறு கையை விலக்க அவனிடம் அசைவு தெரிந்தது...
எங்கே அவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மீண்டும் அவன் மார்பிலேயே படுத்துக்கொண்டாள்...

அவன் மூச்சு மீண்டும் சீராவதை உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் மெதுவாக எழும்பி அவன் காதருகே சென்றவள்

"டேய் திருடா..... நீ தூங்கலைனு தெரியும்.... கையை எடு... இல்லைனா கடிச்சி வச்சிருவேன்...” என்று அவள் கூறிய அடுத்த நொடி அவனது கை அவளை விடுவித்திருந்தது...
அவனது செயலில் சிரித்தவள் இரவு கொடுக்காத முத்தத்தை அவனது நெற்றியில் வைத்துவிட்டு எழுந்து குளியலறைக்குள் சென்றாள்....

அவள் சென்றதும் கண்விழித்தவன் இதழ்களில் புன்னகை ஒட்டிக்கொண்டது...
மனமோ

“ஷிமி இன்னும் கொஞ்ச நாள் தான்... அதுக்குள்ள உன் கூட்டில் இருந்து உன்னை முழுவதுமாக வெளிவர வைக்கின்றேன்... என்ன தான் நீ உன் காதலை என்கிட்ட சொன்னாலும் உன் கண்கள் அதை முழுதாக பிரதிபலிக்கவில்லை... ஏதோ ஒரு தயக்கம், ஒரு போராட்டம் உனக்குள் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.. அதை உன் வாயாலேயே வரவைத்து அந்த தயக்கத்தை உடைத்து எறிந்து என்னுடைய சரிபாதியாக உன்னை மாற்றிய பின் உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு...... ஆனா அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.... சீக்கிரம் உன்னை வழிக்கு கொண்டுவருகின்றேன் என் ஸ்வீட் பொண்டாட்டி....” என்று பேசிக்கொண்டவன் எழுந்து கட்டிலில் படுத்துக்கொண்டான்....

குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் வினயிற்கு காபி எடுத்துவருவதற்காக அறையில் இருந்து வெளியேறினாள்...
வெளியே வந்தவள் அங்கு சோபாவில் அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டிருந்த வீரலட்சுமி அருகில் சென்று அவரிடம் இன்று தன் பிறந்த நாள் என்று கூறியவள் அவர் காலில் விழுந்து வணங்கினாள்...
ரேஷ்மியை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தவர் தன் சேலையில் முடிந்திருந்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டை அவளுக்கு பரிசாக கொடுத்தார்....

பின் அனைவருக்கும் காபி கலக்க சமையலறை சென்றாள் ரேஷ்மி... ரேஷ்மி அனைவருக்கும் சேர்த்து காபி கலந்து விட்டு தன் காபியை அருந்தியவள் ரியாவிற்கும் அபியிற்கும் ப்ளாஸ்கில் காபியினை எடுத்துவைத்துவிட்டு வினயிற்கு எடுத்துக்கொண்டவள் வீரலட்சுமிக்கும் கொடுக்க தவறவில்லை..

வினயிற்கு காபியை எடுத்து சென்றவள் அவனை எழுப்ப முயல அவனோ எழும்ப மறுக்க கப்பில் இருந்து காபியில் ஒரு மிடறு குடித்தவள்

“ வினய் நீங்க ரொம்ப பாவம்...” என்று கூற அதில் கண்முழித்தவன்

“ஆமா ரேஷ்மி நான் ரொம்ப பாவம்... அது உனக்கு இப்போ தான் தெரிஞ்சதா???” என்று ஒப்புகொண்டான் வினய்..

“வேற எப்போ தெரியனும்...??”

“அதை பிறகு சொல்றேன்.... இப்போ நீ எதுக்கு என்னை பாவம்னு சொல்லுற??”

“நீங்க தான் காபி குடிக்கலையே... அதான் பாவம்னு சொன்னேன்...”

“எப்பவும் குடிக்கிறது தானே....”

“ஆமா... ஆனா இன்னைக்கு ஸ்பெஷலா உங்களுக்குனே ஒரு காபி... வினய்...”

“ஏன் ஷிமி காபியில் உப்பு ஏதும் கலந்துட்டியா???” என்று சிரித்தவனை முறைத்த ரேஷ்மி

“இல்லை... ஒரு போத்தல் பினாயில் கலந்துருக்கேன்..”

“ஏன் ஷிமி உனக்கு இந்த கொலைவெறி... இப்படி என் உயிரோட விளையாடுறியேமா.... உன் ஆத்துக்காரர் பாவமில்லையா??” என்று பாவமாக வினவியவனை ரேஷ்மி முறைக்க வினயோ

“ஹலோ மேடம் இது நான் கொடுக்க வேண்டிய ரியாக்ஷன்... இதெல்லாம் அக்கிரமம்...” என்றவன் தொடர்ந்து புலம்ப கையில் இருந்த காபி கப்போடு அங்கிருந்து விலகிச்சென்றாள் ரேஷ்மி....

ஆனால் வினயோ அவளை கைபிடித்து தடுத்தவன் வசதியாக படுக்கையில் அமர்ந்து கொண்டு

“ஓய் பொண்டாட்டி... என்ன ஒன்னுமே சொல்லாம போற??? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த காபில??? சொல்லிட்டு போ செல்லம்....”

“நான் எதுக்கு சொல்லனும்..?? நான் சொல்ல மாட்டேன்....”

“ஐயோ ஷிமி மா..... எனக்கு சஸ்பன்ஸ் தாங்கலை மா... சொல்லிட்டு போ...”

“முடியாது..... நான் சொல்லமாட்டேன்.... நான் ஸ்பெஷல்னு சொன்னதும் நீங்க என்ன சொன்னீங்க??? உப்பு காபியானு கேட்டீங்க.... உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா அப்படி கேட்பீங்க.... உங்களுக்கு காரப்பொடி போட்டு காபி கொண்டுவந்திருக்கனும்... அப்போ தான் நீங்க சரிப்படுவீங்க...” அவளது பதிலில் பதறியவன்

“ஐய்யய்யோ...... அப்படி ஏதும் பண்ணிறாத மா.... உன் புருஷன் பொழப்பு உன் காபியை நம்பி தான் மா இருக்கு...... அதில் உன் வில்லத்தனத்தை காட்டிராத மா... உனக்கு கோடி புண்ணியமா போயிரும்...”

“இது எப்போ இருந்து??? அப்போ இவ்வளவு நாளா ஏதோ கடமைக்கு குடிக்கிற மாதிரி கெத்து காட்டுனது எல்லாம் சும்மாவா????” என்றவளது கேள்வியில் தன் சிகையை லேசாக கலைத்தவன் அசடு வழிந்தான்....

“அடப்பாவி..... அப்போ என்னமோ எங்கம்மா காபி அப்படி... எங்கம்மா காபி இப்படினு சொன்னதெல்லாம் உல்டாவா???”

“ஈஈஈஈஈஈஈஈ......”

“ஏன் இப்படி....???”

“அதெல்லாம் குடும்பஸ்தன் ரகசியம்.... யாருக்கும் சொல்லக்கூடாது....”

“பார்டா.... அப்போ நான் அத்தை கிட்ட போய் நீங்க சொன்னதை சொல்றேன்...” என்று செல்லத்திரும்பியவளை மறுபடியும் தடுத்தான் வினய்...

“ஏன் ஷிமி இப்படி எல்லாத்துக்கும் அவசரப்படுற???? இப்போ என்ன உனக்கு அந்த ரகசியம் தெரியனும் அதானே... சொல்லுறேன்...” என்று வினய் கூறத்தொடங்கிய அடுத்த நொடி அவனை உரசிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள் ரேஷ்மி...

“ஏன் ஷிமி உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா????”

“இப்போ நான் என்ன செஞ்சிட்டேனு இப்படி கேட்குறீங்க....???” என்று ஷிமி கேட்க வினயோ மனதினுள்

“ஆமா இவளுக்கு ஒன்னும் தெரியாது பாரு..... எப்பபாரு இப்படி ஏதாவது எசகுபிசகாக செய்து மனிஷனை காயவிடுறதே இவளுக்கு வேலையா போச்சு.. இவ தெரிஞ்சு தான் இப்படி நடந்துக்கிறாளா இல்லை புரியாம இப்படி பண்ணுறாளா???? இல்லை இல்லை.... இவ தெரிஞ்சி தான் இப்படி நம்மை வகையா வச்சி செய்றா... கட்டின பொண்டாட்டியை பக்கத்தில் வைச்சிக்கிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கிற மாதிரி ஒரு கொடுமை வேறு எங்கயுமே இல்லை....”

“ என்ன பண்ணுறது வினய் எல்லாம் உங்க தலை விதி...” என்றவளின் பதில் அதிர்ந்தான் வினய்..

“ஹேய்... என்ன சொல்லுற...???”

“அதான் நீங்க புலம்பிட்டு இருந்தீங்களே..அதுக்கு பதில் சொன்னேன்...”

“ஐயோ மைண்ட் வாய்சுனு நினைத்து வெளியில பேசிட்டேனோ...” என்று மறுபடியும் மனதில் நினைக்க

“இல்லை வினய் நீங்க சரியா தான் நினைச்சீங்க...” என்று ரேஷ்மி வினயின் மைண்ட் வாயிசிற்கு பதிலளிக்க அதிர்ச்சியில் கட்டிலில் இருந்து எழுந்தவன் ரேஷ்மியை மேலும் கீழும் பார்த்துவிட்டு தன் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.. அவனது செயலில் சிரித்தவள் அவன் கையை பிடித்து அமரச்செய்தவள் எக்கி அவனது முன்னுச்சியில் தன் முத்திரையை பதித்து விட்டு

“இப்போவாவது நம்புறீங்களா வினய்???” என்றவளது கேள்விக்கு வினயிடம் பதிலில்லை...
அசைவில்லாது அமர்ந்திருந்தவனை உலுக்கி நிதானமடையச்செய்தாள் ரேஷ்மி......

அப்போதும் அவளை பார்த்து பேந்த பேந்த முழித்தவனிடம்

“என்ன வினய் ஒன்றுமே பேச மாட்டேன்கிறீங்க....???”

“நான் நிஜமாவே தூங்கலையே ஷிமி..??? எனக்கு என்னவோ டவுட்டாவே இருக்கு....”

“ஹாஹா... நீங்க முழித்து தான் இருக்கீங்க....சோ பயப்படாதீங்க...”

“அப்போ எப்படி நான் மைண்ட் வாயிசில் பேசுனது உனக்கு கேட்டுச்சு??”

“அது சீக்ரட்.... அதெல்லாம் வெளியே சொல்லப்படாது...”

“ஐயோ சஸ்பன்ஸ்ஸா வைத்து ஆளை கொல்லுறாளே..... அம்மாடி ஷிமி.... ப்ளீஸ்.... இதுக்கு மேலே என்னால சஸ்பன்ஸ் தாங்க முடியாது....சோ ப்ளீஸ் சொல்லிருமா.... உன் வீட்டுக்காரர் பாவம்...” என்று கிட்டத்தட்ட அழாத குறையாக கெஞ்சிய வினயிடம்

“ சொல்ல மாட்டேனே..... என்ன பண்ணுவீங்க????” என்று வினவியளிடம்

“வேற என்ன பண்ணுறது காலில் விழுந்திட வேண்டியது தான்...”

“ஹாஹா... இதை நாங்க நம்பனும்....???? எல்லா கணவன்மாரும் சொல்லுற டயலொக்கை எடுத்துவிட்டா நீங்க செய்யப்போறதா அர்த்தமா???”

“அப்போ நான் செய்யமாட்டேன்னு சொல்லுறியா??”

“இல்லை.... உங்களால் செய்ய முடியாதுனு அர்த்தம்....” என்று அவள் கூறிய அடுத்த நொடி வினய் கட்டிலில் இருந்த நிலையில் கீழே குனிந்தான்...

அதை பார்த்து பதறிய ரேஷ்மி கால்களை மேலே தூக்கிக்கொண்டு

“டேய் என்னடா செய்ற???? ஒரு பேச்சுக்கு சொன்னா அதை அப்படியே செய்வியா????” என்றவளின் பேச்சில் நிமிர்ந்தவன்

“என்னது டேய் யா???? என்ன ஷிமி வரவர மரியாதை குறைந்திட்டே வருது....”

“நீங்க பண்ணுற காரியத்துக்கு உங்களுக்கு இது ரொம்ப கம்மி தான்...”

“அப்படி என்னமா பண்ணிட்டேன்...???” என்று தெரியாதது போல் வினவியவனை முறைத்தாள் ரேஷ்மி.....

“இப்போ எதுக்கு முறைக்கிறனு சொன்னா தானே புரியும் ஷிமி????”

“இப்போ எதுக்கு என் காலில் விழப்போனீங்க???”

“நா எப்போ விழப்போனேன்???”

“வினய்ய்ய்ய்ய்.....”

“ஆமா ஷிமி என் பெயர் வினய் தான் இப்போ அதுக்கு என்ன???” என்றவன் ரேஷ்மியை வெறுப்பேற்ற அதில் வெகுண்டவள்

“டேய் பொறுக்கி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை கடுப்பேற்றுவ???? எல்லாத்தை செய்துட்டு தெரியாத மாதிரியா நடிக்கிற???” என்று அவன் பிடித்து ஆட்டினாள் ரேஷ்மி...

“ஐயோ ஷிமி விடுமா.... வலிக்குது... தெரியா சொல்லிட்டேன் என்னை விட்டுரு...இனிமே இப்படி பண்ண மாட்டேன்....”என்று அவன் வாக்குறுதி கொடுத்த பிறகு அவனை விட்டாள் ரேஷ்மி....

“அந்த பயம் இருக்கட்டும்... இப்போ செல்லுங்க.... எதுக்கு அப்படி செய்தீங்க??”

“சும்மா உன்னை பயமுறுத்தி பார்க்க தான்...”

“வினய்ய்ய்ய்.....”

“சரி கோபப்படாத..... உனக்கு இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் புடிக்காதுனு எனக்கு தெரியும்... எல்லோரும் சமமானவர்கள் என்ற கருத்து உன்னிடம் இருக்குனு எனக்கு தெரியும்...”

“அப்போ எதுக்கு அப்படி பண்ணீங்க...??” என்று கோபமாக வினவிவளிடம் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் வினய்....

“அது வந்து ஒரு வாட்டி நான் செய்றேனு சொல்லிட்டேனா.... என் பேச்சை நானே கேட்கமாட்டேன்....”

“என்ன நேத்து ரஜினி படம் பார்த்தீங்களா....??”

“இல்லை ஷிமி.... ஏன் கேட்குற?? என் டயலொக்கை அவர் படத்துலயும் போட்டுட்டாங்களா???”

“ஓ... உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பும் இருக்கா??? சரி இப்போ எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்க....??”

“ஓ... உனக்கு இப்படி சொன்னா புரியாதில்ல....??? சரி உனக்கு புரிகின்ற மாதிரி சொல்லுறேன்....
ஸ்வீட் ஸ்ராபரியை ருசிக்க போறேன்னு முடிவெடுத்துட்டேனா யாருக்காகவும் அதை கிவ்வப் பண்ணமாட்டேன்” என்று அந்த ஸ்ராபரியை அழுத்தி கூறியவன்

“என்ன ஷிமி இப்போ புரிஞ்சிதா??” என்று கேட்டு கண்ணடிக்க அதில் கன்னம் சிவக்க வெட்கிக்குனிந்தாள் ரேஷ்மி... அதில் கிளர்ந்தெழுந்த அவனது உணர்ச்சிகள் அவளை முத்தமிட தூண்ட அவளது முகத்தை தன் இரு கரத்தால் ஏந்தி அந்த ஸ்வீட் ஸ்ராபரியை ருசிபார்க்க முயன்றான்... அவனது அந்த முற்சியை தடுக்கும் விதமாக பூஜை வேளை கரடியாய் அனு கதவைத்தட்ட கடுப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டான் வினய்.... வினயை தன்னிடம் இருந்து விலக்கிய ரேஷ்மி எழுந்து சென்று கதவை திறக்க அவளை கட்டிக்கொண்ட அனு

“ஹேபி பர்த்டே சித்தி.....” என்று வாழ்த்த அவளை தூக்கிய ரேஷ்மி அவளுக்கு நன்றியுரைத்து விட்டு அவளது இரு கன்னங்களிலும் முத்தமிட அதை பார்த்துக்கொண்டிருந்த வினயிற்கு குபுகுபுவென எரிந்தது.....
அதை கவனித்த ரேஷ்மி குழந்தை தூக்கியவாறு வந்து வினய் அருகில் அமர்ந்தவள்

“வினய் எனக்கு ஏதோ கருகும் வாடை வருது..... உங்களுக்கு அப்படி ஏதும் வருதா???” என்று சிரித்தவாறு கேட்க அவளை முறைத்தான் வினய்...
அவனது கோபம் அவளிடம் சிரிப்பை உண்டு பண்ண சிரித்துவிட்டாள் ரேஷ்மி... இந்த ஊடல் புரியாத குழந்தையோ என்னவென்று வினவ ஏதோ கூறி சமாளித்தாள் ரேஷ்மி...

பின் குழந்தை கையோடு ரேஷ்மியை அழைத்து செல்ல விழைய குழந்தையிடம் கெஞ்சி கொஞ்சி ரேஷ்மியை இருத்திக்கொண்டவன் குழந்தை அங்கிருந்து சென்றதும்

“ஓய் பொண்டாட்டி எங்கே போற??? உன் காபியோட ஸ்பேஷாலிட்டியை சொல்லிட்டு போ...”

“அப்போ நீங்க உங்க குடும்பஸ்தனா சீக்ரட்டை சொல்லுங்க...”

“அது கொஞ்சம் பெரிய கதை ஷிமி.... இப்போ அதை சொல்ல டைம் இல்லையே ஷிமி....”

“அப்போ என்னாலயும் சொல்ல முடியாது....”

“ஐயோ ஷிமி ப்ளீஸ் சொல்லிட்டு போ...” என்று ரேஷ்மியிடம் கெஞ்சிக்கொண்டிருக்க மீண்டும் வந்தாள் அனு...
ரேஷ்மியை ரியா அழைப்பதாக கூறியவள் அவளை மீண்டும் கையோடு கூட்டிச்செல்ல முயல அவளுடன் செல்ல முயன்ற ரேஷ்மி ஒரு நிமிடம் என்றுவிட்டு வினய் அருகே வந்தாள்... அங்கே கட்டிலின் அருகே இருந்த காபி கப்பை எடுத்து வினயிடம் நீட்டியவள் அதை அவன் வாங்க முயலும் போது கப்பை தன்புறம் இழுத்து அதில் ஒரு மிடறு குடித்துவிட்டு மீண்டும் அவன் கையில் திணித்துவிட்டு அனுவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் ரேஷ்மி..

முதலில் அவளது செயலின் அர்த்தம் புரியாதவன் பின் அன்றொரு நாள் நடந்த காபி சம்பவம் நினைவில் வர அதை அனுபவித்தவாறு அந்த காபியை ரசித்து குடித்தவன் ஒரு துண்டில் ஏதோ எழுதி மேசையின் மீது அந்த காபி கப்பின் கீழ் வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தான் ...
அறையிலிருந்து வெளியே வந்த ரேஷ்மியை ஆரத்தழுவி கொண்டாள் ரியா.....

ரேஷ்மிக்கு வாழ்த்து கூறியவள் தன் கையில் வைத்திருந்த சிறு பரிசுப்பொட்டலத்தை ரேஷ்மியின் கையில் திணித்தவள் மெல்லிய குரலில்

“என்ன ரேஷ்மி நைட்டு நல்லா செலிபிரேட் பண்ணீங்களா???? இல்லை என் கொழுந்தனாரு சொதப்பிட்டாரா???” என்று கிசுகிசுத்தாள் ரியா...

“அக்கா உங்களுக்கு எப்படி???”

“இது கூடவா தெரியாமல் இருக்கும்???? நாங்களும் இதெல்லாம் தாண்டி வந்தவங்க தான் மா.... ஆனா என்ன அனு அப்பா ஒரு நாள் முன்னாடியே சப்ரைஸ்னு சொல்லி காமடி பண்ணிட்டாரு...” என்று அன்றைய நாள் நியாபகத்தில் சிரித்தான் ரியா...

“என்னக்கா சொல்லுறீங்க?? நீங்க சொல்லுறது எனக்கு புரியவில்லை...??”

“அது என்னோட பர்த்டே 25த் மே.... அவரு 24த் மே னு நினைச்சிக்கிட்டு 23ட் மிட் நைட் எழுப்பி விஸ் பண்ணி சப்ரைஸ் பண்ணாரு..... எனக்கு ஒரு புறம் சிரிப்பா இருந்தாலும் மறுபுறம் பாவமாகவும் இருந்தது. அதனால அப்போ ஒன்னும் சொல்லலை..... ஆனா மனிஷன் சும்மா இருக்காம எங்க வீட்டு ஆட்களுக்கு போன் பண்ணி ஏதோ கேட்க அவங்க என்னோட பர்த்டே நாளைக்குனு சொல்லிருக்காங்க.... ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வரும் போது முகம் தொங்கிபோய் வந்தாரு.... என்னன்னு விசாரிச்சப்போ தான் தெரிஞ்சது இப்படி என் பிறந்தவீட்டுல யாரோ உண்மையை சொல்லிட்டாங்கனு.... அப்புறம் ஏன் உண்மையை சொல்லனனு என்கூட சண்டை..... நீயே சொல்லு..... புருஷன் ஆசையாசையாக எல்லாம் செய்து சப்ரைஸ் பண்ணணும்னு நினைக்கும் போது உண்மையை சொல்லி அவங்க சந்தோஷத்தை கெடுக்க நமக்கு தோன்றுமா??? அதான் நானும் சொல்லலை.... அதுக்கு என்கூட மூன்று நாள் பேசவே இல்லை...திரும்ப நான் முறுக்கிக்கிட்ட பிறகு தான் அனு அப்பா வழிக்கு வந்தாரு...” என்று ரியா கதை கூறி முடிக்கும் வேளையில் அங்கு ஆஜரானான் அபி..

“என்ன ரியா என்னோட பெயர் அடிபடுற மாதிரி இருக்கு??? என்ன சமாச்சாரம்???”

“அதுவாங்க அதான் நீங்க என்னோட பர்த்டேக்கு சப்ரைசுனு ஒரு சம்பவம் செய்தீங்களே.... அதை தான் ரேஷ்மி கிட்ட சொல்லிட்டு இருந்தேன்... அதில் தாங்கள் ஆற்றிய வீரதீர சாகசங்களை வர்ணித்துக்கொண்டிருந்தேன் ஸ்வாமி....” என்று ரியா கூறி சிரிக்க ரேஷ்மியும் அதில் இணைந்து கொண்டாள்..

அபியோ மனதினுள் “இப்படி மானத்தை வாங்குறாளே....” என்று மனதினுள் புலம்ப

“ஆனா ஒன்னுங்க... நான் நடந்ததை மட்டும் தான் ரேஷ்மிகிட்ட ஸெயார் பண்ணேன்.... எக்ஸ்ரா பிட்டிங்ஸ் எல்லாம் எதுவும் இல்லைங்க...” என்று அபியை கலாட்ட பண்ண அபியோ சளைக்காமல்

“அதில் ஆல்ரெடி நெறைய எக்ஸ்ரா பிட்டிங்ஸ் இருக்கு ரியா.... இதில் நீ தனியா போடவே தேவையில்லை.... ஏன்னா ஐயாவோட டாலன்ட் அப்படி...” என்றவனை கண்களால் ரேஷ்மியிடம் காட்டி சிரித்தாள் ரியா...

“ஆனா மாமா... நீங்களும் வினயும் மற்ற விஷயத்தில் எப்படியோ தெரியவில்லை... இப்படி பல்பு வாங்குகின்ற விஷயத்தில் உங்க இரண்டுபேரையும் யாராலும் பீட் பண்ண முடியாது...” என்று ரேஷ்மியும் அந்த கலாட்டாவில் இணைந்து கொண்டாள்...

“என்னம்மா பண்ணுறது??? கல்யாணத்துக்கு முதல்ல தனி காட்டு ராஜாவா கெத்தா தான் சுத்திட்டு இருந்தேன்.... ஆனா கல்யாணத்துக்கு பிறகு தான் இப்படி ஆகிட்டேன்.....” என்று விவேக் பாணியில் சொன்ன அபினயனை பார்த்து ரேஷ்மி சிரிக்க ரியா முறைத்தாள்... அவளது முறைப்பிலேயே அவளது மைண்ட் வாயிசினை புரிந்துகொண்ட அபி

“பார்த்தியா ரேஷ்மி..... உங்க அக்கா நீ இருக்கும் போதே இந்த முறை முறைக்கிறா... அப்போ நானா தனியா மாட்டுனா என்ன நடக்கும்னு நீயே யூகிச்சிக்கோ.... பார்த்தியா வந்த விஷயத்தை மறந்துட்டேன்..... ஹாப்பி பர்த்டே மா.... ஹேவ் எ பிளாஸ்ட் செலிபிரேஷன்....” என்று டாபிக்கை மாற்றிவிட்டு அங்கிருந்த நழுவ முயன்ற அபியை பிடித்துக்கொண்டாள் ரியா...

“எங்க போறீங்க..... எனக்கு இதுக்கு பதிலை சொல்லிட்டு போங்க...” என்று அபியை நிறுத்தினாள் ரியா....

அபியோ மைண்ட் வாயிசில்
“செத்தடா சேகரு.... சும்மா இருந்தவளை நல்லா உசுப்பிவிட்டுட்ட..... சும்மாவே ஆடுவா.... நீ சலங்கையை வேற கட்டுவிட்டு உனக்கு நீயே சதி செய்திட்ட .... இப்போ அனுபவி....” என்று மனதினுள் பேசியவன் இளித்தவாறு ரியாவை பார்க்க அவனது
பாவனையில் சிரித்துவிட்டாள் ரேஷ்மி...

ரியாவோ அவனை தொடர்ந்து முறைத்தவாறு

“ ஏதோ சொன்னீங்களே.... அதுக்கு என்ன அர்த்தம்??? உங்க கெத்து என்னை கல்யாணம் பண்ண பிறகு இல்லாம போயிருச்சா??? அப்போ நான் வந்து உங்களை டாமேஜ் பண்ணிட்டேன்... அப்படி தானே??”

“ஐயோ அப்படி இல்லை ரியா.... நான் சொல்லவந்ததை தப்பா புரிஞ்சிக்கிட்ட மா... நான் என்ன சொல்ல வந்தேன்னா...” என்று

அபி ரியாவை சமாளிக்க ஆரம்பிக்க

“அப்போ நீங்க சரியா தான் சொன்னீங்க... நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் அப்படி தானே...??” என்று வேண்டுமென்றே பஞ்சாயத்தை கூட்ட அபியோ திணறினான்...

அவர்களது ஊடலை ரசித்து நின்ற ரேஷ்மி இதற்கு மேல் அங்கிருப்பது சரியல்ல என்றுணர்ந்து அவ்விடத்தை விட்டு அகன்று சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்..

வினயிற்கு உணவு தயாரித்து அதை லன்ச்பாக்சில் அடைத்தவள் அதனை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு தங்கள் அறைக்கு செல்லும் வழியில் அனு அவளை தூக்கச்சொல்ல குழந்தையை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள் ரேஷ்மி...

அங்கு வினய் ஆபிசிற்கு தயாராகிக்கொண்டிருந்தான்... ட்ரெஸ்சிங் டேபிளின் முன் நின்று தலைவாரிக்கொண்டிருந்தவன் அனுவை தூக்கிக்கொண்டு உள்ளே வந்த ரேஷ்மியை கண்ணாடியினூடு பார்த்தான்...
அனுவோடு ஏதோ பேசிக்கொண்டு வந்தவள் அனுவை கட்டிலில் அமரவைத்துவிட்டு வாட்ரோப்பினை திறந்து ஏதையோ தேடிக்கொண்டிருந்தாள்...

அவள் தேடுவதை பார்த்த வினய்

“என்ன ஷிமி தேடுற??”

“என்னோட பென்ட்ரைவை ட்ராயரில் வைத்திருந்தேன். அதை தான் தேடுறேன்... நீங்க அதை பார்த்தீங்களா வினய்???” என்று ரேஷ்மி கேட்டதும் தான் அவனுக்கு பென்ட்ரைவ் விடயமே நியாபகம் வந்தது...

“அதை எதுக்கு ஷிமி இப்போ தேடுற??”

“அனுவிற்கு போட்டோஸ் காட்டுவதற்கு....”

“ஷிமி பென்ரைவ் இங்கு இல்லை... அது என்னோட ஆபிஸில் இருக்கு... அன்று கம்ப்ளீட் பண்ண பிராஜக்டை சேவ் பண்ண என்னோட ஹாட் டிஸ்கில் ஸ்பேஸ் இருக்கலை... அதனால உன்னோடதை எடுத்துக்கிட்டேன்... சாரி மா... அதை உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்...”

“இப்போ பென் உங்ககிட்ட தானே இருக்கு??”

“ஆமா ஷிமி ஆபிஸில் இருக்கு... ஈவினிங் வரும் போது எடுத்துட்டு வர்றேன்...”

“இருந்தா சரி வினய்... அதுல ரொம்ப முக்கியமான போட்டோஸ் எல்லாம் இருக்கு.. ஈவினிங் எடுத்துட்டு வர மறந்துடாதீங்க....”

“சரி ஷிமி மறக்காமல் எடுத்துட்டு வந்துர்றேன்... நீ ஈவினிங் ரெடியா இரு... நான் ஆபிஸ் முடிந்து வந்ததும் நாம வெளியில போகலாம்...”

“சரிங்க... நீங்க அபி அத்தான்கிட்டயும் சொல்லிருங்க..”

“ஹேய் அவங்க எதுக்கு??? நாம மட்டும் போகலாம்... இன்னைக்கு உன்னோடு மட்டும் தான் டைம் ஸ்பென்ட் பண்ணபோறேன்... சோ நோ அதஸ்...”

“இல்லை வினய்... அவங்க வெக்கேஷனுக்கு நம்மோடு டைம் ஸ்பென்ட் பண்ண வந்துருக்காங்க... நாம மட்டும் தனியா போறது சரிவராது வினய்... அனுவும் பாவம்...” என்று ரேஷ்மி அபி குடும்பத்தையும் தங்களுடன் வெளியே அழைத்து செல்வதில் பிடிவாதமாக இருந்தாள்...

வினயோ மனதினுள் “ஐயோ இவ டோட்டல் பிளானையும் கெடுத்துடுவா போல இருக்கே... நான் என்னென்னவோ பிளான் பண்ண இவ அதை கொலப்ஸ் பண்ணுற மாதிரி பிடிவாதம் பிடிக்கிறாளே... இப்போ என்ன பண்ணுறது??” என்று வினயோ யோசனையில் இறங்க ரேஷ்மி அவனை அழைத்தாள்...

“வினய் அவங்க வரலைனா நானும் வரலை...” என்று ரேஷ்மி பிடிவாதம் பிடிக்க வினய் அதற்கு மாற்றுவழி கண்டுபிடித்தான்...

“சரி... ஆனா அவங்களுக்கு ஓகேவானு கேட்கனுமே...?”

“அவங்க ஓகேனு தான் சொல்லுவாங்க... ரியா அக்காகூட நான் பேசிக்கிறேன்... நீங்க ஆபிஸிற்கு கிளம்புகின்ற வழியை பாருங்க...” என்று வினயை கிளப்பினாள் ரேஷ்மி....

அவனுக்கான உணவுப்பையை எடுத்துகொடுத்தவள் அவனை வழியனுப்பிவிட்டு தன்வேலைகளை கவனிக்கத்தொடங்கினாள்...

ஆபிஸிற்கு சென்ற வினய் தன் அண்ணனை அழைத்தான்...

அழைப்பை ஏற்ற அபி

“என்னடா இப்போ தானே ஆபிஸிற்கு கிளம்புன..?? அதுக்குள்ள என்னடா?? எனி ப்ராப்ளம்...??”

“அதெல்லாம் இல்லை... நீ எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணனுமே...??”

“அது என்னடா அந்த பெரிய உதவி??”

“ரேஷ்மி உன்னையும் அண்ணியையும் ஈவினிங் வெளியபோகனும்னு கூப்பிடுவா... அதுக்கு நீ என்ன பண்ணனும்னா...”

“நாங்க வரலைனு சொல்லனும்... அதானே??”

“அதுதான் இல்லை.. நீங்களும் எங்ககூட வரணும்...”

“ஏன்டா இதை சொல்லவா போன் பண்ண??”

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்லவருவதை கேளு..”

“சரி சொல்லு...”

“நாம எல்லோரும் டின்னருக்கு ஒன்னா போறோம்.. அங்கிருந்து நீ ஏதாவது சொல்லி அண்ணியையும் பாப்பாவையும்
வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு போகனும்... நான் ப்ரெண்ட் ஒருத்தனிடம் பைக்கிற்கு சொல்லியிருக்கேன்... நீங்க காரில் வீட்டுக்கு போயிருங்க..நான் பைக்கை வரவைத்து ஷிமியோட ஒரு இடத்திற்கு போயிட்டு பைக்கிலேயே வீட்டுக்கு வந்திடுறேன்...”

“சரி கவின்... எதுக்கு இப்படி ஒரு கேவலாமான ப்ளான்..? இதுக்கு நாங்க வரலைனு சொன்னலே விஷயம் முடிந்ததே... அதைவிட்டுட்டு எதுக்கு இந்த ப்ளான்???” என்று அபி கேட்க வினயோ

“என்னடா பண்ண... என் பொண்டாட்டி நான் தான் உன்கிட்ட அப்படி சொல்லச்சொன்னேன்னு கண்டுபிடிச்சிருவாளே.... காலையிலேயே என்வீட்டுக்காரம்மா ரொம்ப ஸ்டிக்டா சொல்லிட்டாங்க... அப்புறம் நான் இப்படி தகிடுதத்தம் பண்ணது தெரிந்தால் என்கதை ரொம்ப மோசமாக போயிரும்...”

“சரி சரி... நான் உன் வீட்டுக்காரம்மாவுக்கு தெரியாமல் உன் பிளானை எக்சிகியூட் பண்ண ஹெல்ப் பண்ணுறேன்.... ஆனா உன் அண்ணி சொதப்பாமல் இருந்தா சரி தான்...”

“டேய் அண்ணா... என் அண்ணி ரொம்ப ஸார்ப்... உன்னை மாதிரி தத்தி இல்லை... உன் நடவடிக்கையிலேயே அவங்க எப்படி நடந்துக்கனும்னு தெரிந்து நடந்துப்பாங்க.... நீ ஏதும் சொதப்பிரிவியோனு தான் பயம்...”

“அடப்பாவி... பாவம் நம்ம தம்பியாச்சே....ஹெல்ப் பண்ணலாம்னு நான் நினைத்தால் நீ என்னை தத்தினா சொல்லுற?? இரு உன்னோட பிளானின் ஒரு கூடை மண்ணை அள்ளிப்போடுறேன்...”

“நீ போடு... நான் அண்ணிக்கு கூப்பிட்டு இப்படி அண்ணாகிட்ட ஹெல்ப் கேட்டேன்... செய்யமுடியாதுனு சொல்லிட்டாருனு சொல்லுறேன்.... இது எப்படி???”

“டேய் ஏன் இப்படி??? ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி என் வாழ்க்கையோட விளையாட பார்க்குறியேடா... தயவு செய்து ஏதாவது சொல்லி ரியாகிட்ட மாட்டிவிட்டுராத.... அப்புறம் இங்கிருந்து போகும்வரை அதை சொல்லி சொல்லியே என்னை வச்சி செய்வா...”

“ஆங்.... அந்த பயம் இருக்கட்டும்.. நான் சொன்னதை நியாபகம் வைத்துக்கொள்.. இப்போ நான் போனை வைக்கிறேன்....” என்று அழைப்பை துண்டித்தான் வினய்...

அந்தப்புறம் அபி ஸ்பீக்கரை ஆப் செய்ய அருகில் இருந்த ரியா

“அபி உங்க தம்பி வேற லெவல்... பயபுள்ள என்னமா பிளான் பண்ணுது....” என்ற ரியாவிடம்

“என் தம்பியாச்சே மா... அப்படி தான் இருப்பான்...”

“ஐயே... என் கொழுந்தனாரு சப்ரைஸ் கொடுக்கனும்னு எவ்வளவு அழகா ப்ளான் பண்ணுறாரு... ஆனா நீங்க எத்தனை தரம் சொதப்பிருக்கீங்கனு உங்களுக்கு நியாபகம் இருக்க??”

“நான் என்னமா பண்ணட்டும்... நானும் இப்படி தான் சூப்பரா பிளான் பண்ணுவேன்... ஆனா கடைசி நிமிஷத்தில் நீ அதை கரெக்டா கண்டுபிடித்து எனக்கு பல்ப் கொடுத்திடுவ... அதனால எல்லாம் புஸ்சுனு போயிரும்.... இருந்தாலும் நீ இப்படி ப்ரில்லியண்டா இருக்ககூடாது மா... பாரு உன் ஆத்துக்காரர் எவ்வளவு கஷ்டப்படுறேனு...”

“மொக்கையா பிளான் பண்ணா சின்ன குழந்தை கூட கண்டுபிடிச்சிரும்... அப்படி இருக்கும்போது நான் கண்டுபிடிப்பது பெரிய விஷயமா??”

“அப்போ நான் எப்பவும் மொக்கையா தான் பிளான் பண்ணுவேன்னு சொல்லுறியா??”
“நான் அப்படி சொல்லலை அபி.. இதுவரைக்கும் அப்படி தான் பண்ணியிருக்கீங்கனு சொல்லுறேன்...”

“ஆனா என்னோட பிளானிங்கிலேயே ஒரு பிளானை மட்டும் நீ சரியாக கண்டுபிடிக்கலை... அந்த பிளான் உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா...???”

“அப்படி ஒரு பிளானை நீங்கள் எக்சிகியூட் பண்ணதாக எனக்கு நியாபகம் இல்லையே....???” என்று ரியா யோசிக்கத்தொடங்க

அபியோ
“எங்க என் கண்ணைபார்த்து சொல்லு உனக்கு அந்த பிளான் நியாபகம் இல்லைனு???” என்றவனை தலைநிமிர்ந்து நோக்கிய ரியா அவனது கண்களில் தேங்கியிருந்த காதலில் கட்டுண்டாள்.. அது அவளது வார்த்தையாடலை தடை செய்திருந்தது...

“என்ன ரியா இப்போவாவது அந்த பிளான் என்னதுனு புரிந்ததா??? இல்லை ட்ரையல் காட்டவா???” என்றவனது கேள்விக்கு உரியவளிடம் இருந்து வாய் வார்த்தைகளால் பதில் வரவில்லை.... ஆனால் கண்களோ அதற்கு எதிராக பதிலளித்துக்கொண்டிருந்தது...

“ரியா அனுபாப்பாவை ரெடி பண்ண பிளான் உனக்கு நியாபகம் இருக்கா இல்லை அனுபாப்பாக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ ரெடிபண்ணி உனக்கு நியாபகப்படுத்தவா??” என்றவனது கேள்வியில் வெட்கம் சூழ அவளது கன்னங்கள் இரண்டும் செம்மை பூசிக்கொண்டது...

அவளை மேலும் சீண்ட எண்ணிய அபி

“ ரியா அந்த பிளானுக்கு ஒரு ட்ரெயிலர் மட்டுமாவது இப்போ காட்டவா??? இல்லை நேரடியாகவே மெயின்பிக்சருக்கு போயிரலாமா???” என்று வம்பிழுத்தவன் அவனுக்கு வேண்டியதை பெற்றபின்பே அவளை விடுவித்தாள்..... அரங்கேறத்தொடங்கிய அந்த நாடகத்தை தன் வரவால் தடுத்து நிறுத்தியது குழந்தை...

அறைக்கதவை குழந்தை தட்டியதும் அபியிடம் இருந்து விலகிய ரியா கதவை திறந்து குழந்தைக்கு வேண்டியதை கவனிக்க வேண்டி அறையிலிருந்து சென்றாள்...
ஆனால் அபியோ வழமைபோல் தனக்குள் கடுகடுத்துக்கொண்டு தன் லாப்டாப்பினை ஆன் செய்து மெயில் செக் பண்ணத்தொடங்கி அவனது அலுவலக வேலையில் மூழ்கிப்போனான்..
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 10
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN