ueutn-1

அருண் தே கோ

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
இடியின் மின்னல் இமைத்து இமைத்து துடிக்க... மழைத்துளியின் சாரல் முகத்தில் மோதி சில்லென தென்றல் தீண்ட தன் கவலையின் தூறல் மறந்து மனதோடு புதிதாய் பிறந்த உணர்வில் புகைவண்டியில் இருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்க்கிறாள் பாவையிவள் கவலை மறந்தவளின் சோகம் மீண்டும் தொற்றி கொண்டது நடுநிசியில் எங்கே செல்வது முகவரி இருந்தாலும் இந்த நேரத்தில் பயமின்றி போக தயிரியம் இல்லையே என்ன செய்வது என சிந்தித்தவள்...


துன்பங்களும்
தூர போகிறதே
இயற்கை
அன்னை
தாலாட்டு
பாடி தண்ணீர்
தெளிக்கையில்..



இங்க இவளோ பெரிய நடைமேடை எதுக்கு கட்டி போட்டு இருகாங்க மது எல்லாம் நமக்காக தான்... தெரிஞ்சவனுக்கு ஒரு இடம் மட்டும் தான் தெரியாதவனுக்கு பாக்குற இடமெல்லாம் நம் இடம் தான் என ஏதோ பெரிசாய் சாதித்தது போல் தனக்கு தானே பெருமை பாடிக்கொண்டிருந்தால் மது என்ற மதுஷானா...


சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் அவள் படித்து முடித்ததெல்லாம் திருச்சி பெண்கள் பள்ளி பெண்கள் கல்லூரி என ஆண் பற்றி சிந்தனை அதிகம் இல்லாமல் தன் குடும்பம் மட்டுமே எல்லாம் என்று வாழ்ந்தவள்.. தாய் தந்தை ஒரு தம்பி தங்கை அழகான குடும்பம்.. அப்பா விவசாயம் பார்த்து பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்தார்.. அம்மா அப்பாவின் வருமானத்தில் அழகாய் அந்த கூட்டை கட்டி கொண்டிருந்தார்... தம்பி கல்லூரி முதல் வருடம் தங்கை பத்தாம் வகுப்பு படிப்பில் பேர்சொல்லும் அளவில் வரவில்லை என்றாலும் பேர் போகும் அளவில் இல்லாதவர்கள்...


அன்பும்
அடியும்
ஒருசேர
கிடைக்குமிடம்
தாயன்பு
பேரன்பு..
தந்தையின்
கண்டிப்பு..
தங்கையின்
தாய்மை..
தம்பியின்
சண்டை..
போலியில்லா
அகிலம்
என் குடும்பம்...



நற்பண்புகள் மட்டுமே முழு சொத்தாய் நிறைந்த வீடு அழகான கூடு... இவள் இந்த வருடம் தான் B. Sc டெக்ஸ்டெய்ல் டிசைனிங் முடித்திருந்தாள்... இந்த அழகான கூட்டு கிளி இன்று ஒரு அனாதையாய் யார் உதவியும் இன்றி இந்த மதுரைக்கு வந்து சேர்ந்தால் சில நேரம் தன் குடும்பம் இந்த இரண்டு மாதத்தில் தலைகீழாய் மாறியதை நினைத்து மனம் வருந்தியவள் பின்பு எல்லாம் தான் மட்டுமே மாற்றி அமைக்க வேண்டுமென மனதை திடமோடு வைத்து கொண்டு... அருகில் அமைக்க பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்...


அந்த அதிகம் ஆள் அரவமற்ற அமைதியான சூழல் அவளை கலவர படுத்தினாலும் வெகு இயல்பாய் இருப்பது போல் அமர்ந்து பின்னால் சாய்ந்து வெளிச்சம் கண் கூசுவதனால் கண்ணை கைகளால் மறைத்து கொண்டு அமர்ந்திருக்கிறாள் என மற்றவர்கள் நினைக்கும் படி இருந்தாலும் தன் கண்களின் பயம் யாருக்கும் தெரிய கூடாதென தான் அவ்வாறு அமர்ந்திருந்தாள் என்பது மட்டுமே உண்மை.. கண்களை இறுக முடிருக்க சட்டென துப்பாக்கி சுடும் சத்தம் முதலில் இடியென நினைத்து அமைதி காத்தலும் சத்தம் தனக்கு மிக அருகில் கேட்க மனதில் அவள் இஷ்ட தெய்வங்களை வேண்டி கொண்டே லேசா இமையை திறந்தால்..


பெண்களின்
கவலையும்
கண்ணீரும்
அதிகம்
மறைப்பதற்கு
காரணம்
அவர்கள்
கோழையானாதால்
அல்ல
அவர்களை
திட படுத்திக்கொள்ள
தன்னை
தானே
வலிமைப்படுத்திக்கொள்ள
மட்டுமே....



திறந்து பார்த்தவள் அவ்ளோதான் தனக்கு மிக அருகில் ஒருவன் ரெத்த வெள்ளத்தில் மிதக்கவும் அலறி அடித்து சத்தம் போட்டு எழுந்து நின்றாள்.. இவள் சத்தத்தை கேட்டு அப்போது தான் அந்த பக்கத்தில் இருந்த நபர்கள் இவளை கவனித்தார்கள் அதில் அனைவரும் முகத்துக்கு முகத்திரை போட்டு மறைத்திருக்க ஒருவர் முகமும் அவளுக்கு தெரியவில்லை... அவள் போட்ட சத்தத்தில் அவளை நெருங்கி ஒருவன் வர அவனையே பார்த்தவள் அவளையும் அறியாமல் கால்கள் பின்னோக்கி ஓடின..


அவள் ஓடும் அழகாய் ரசித்து கொண்டு பொறுமையாய் நடந்து வந்தவன் சில எட்டுகளில் அவளை வந்தடைந்தான்.. இதற்கு மேல் இவனிடம் இருந்து தப்பிக்க முடியாதென அவள் கால்கள் சட்டென நின்றுவிட்டது.. ஒருசில நிமிடம் அவளை உறுத்து பார்த்தவன் யாரு நீ எங்கிருந்த வந்துருக்க இந்த நேரத்துல இங்க என்ன பண்ற என அடுக்காய் கேள்வி அடுக்க இவளுக்கோ உடம்பு வேர்த்து வெலவெலத்து போனது இவள் அவன் கண்களையே வெறித்து பார்க்க மீண்டும் உன் பெயர் என்ன என கேட்க அவன் வார்த்தையின் மாயாஜாலத்திற்கு கட்டு பட்டவள் போல் மெதுவாய் இதயம் படபடப்பு அதிகரித்த இமைகள் துடி துடிக்க வார்த்தை வம்பு செய்ய.. ம.. ம.. ம.. மது என்று கூற...


இவன் எதுவும் கூறாமல் தன்னோடு வந்த மற்ற நபர்களை கவனித்தான் அவர்களோ இங்கு இவன் பேசிக்கொண்டிருப்பதை கண்டு கொண்டார்கள் போல தெரியவில்லை தரையில் ஜீவன் அற்று கிடந்தவனை அப்புற படுத்தி கொண்டிருந்தனர்.. ஒருவன் மட்டும் இவனை பார்த்து சைகையால் என்ன ஆயிற்று என கேட்க இவனும் பதிலுக்கு கையசைத்து நீங்கள் முன்னே செல்லுங்கள் நானே வீடு போய் கொள்கிறேன் என கூறினான்.. அவர்களும் அந்த இடம் காலி செய்துவிட்டு அவர்கள் வீடு நோக்கி பயணமாயினர்..


இவன் மீண்டும் அவளை நோக்கி என்ன சொன்ன என மிரட்டும் தோணியில் கேட்க அவன் முகம் காட்டாது முகமூடி மட்டும் அணிந்திருப்பதை பார்த்து சற்று பயந்தவள் பின்பு தைரியம் வரவழைத்து கொண்டு அதான் ஏ.. ஏன் நீ கேட்குற அதான் ஒருதடவை சொன்னேன்ல திரும்பலாம் சொல்ல முடியாது என கூற அந்த இமைகளின் படபடப்பில் இவன் தன்னை தொலைத்து கொண்டிருந்தான். தான் யாரென்று தெரியாமல் அவள் தன்னையே மிரட்டவும் சற்று வித்தியாசமாக இருக்க மீண்டும் அவளிடம் நான் உன் பேர் என்னனு கேட்டேன் என கூறி கொண்டே தன் அலைபேசியில் இருந்து யாருக்கோ அழைப்பு விடுத்து காத்திருந்து பின் அவர்கள் எடுக்கவும் இடம் சொல்லி சுருக்கமாய் நடந்ததை கூறி இங்கே வா என்று கூறிவிட்டு அணைத்தான்..


உன்
இமைகளுக்கு
மத்தியில்
கூடு
கட்டி
அதில்
குடியேறவா
பெண்ணே
அதற்குள்
எனை
தொலைத்துவிட்டேன்
உனக்குள்
தேடி
கொள்கிறேன்
அனுமதி
வழங்கடி....



இவன் தன்னிடம் பெயர் இரண்டு முறை கேட்டு தன்னை கவனிக்காமலேயே இருக்க கோபமானவள் அவனை வெறித்து கொண்டு நின்றிந்தால்.. அவனோ ஏன் உன் பேர் சொல்ல கூட உனக்கு பயமா என கூறி கண்சிமிட்ட அவன் கிண்டல் பேச்சில் கடுப்பானவள் தெரியாத யார்கிட்டயும் பேர் சொல்ல கூடாதுனு எங்க அம்மா சொல்லிருக்காங்க என கூறிவிட்டு முறைக்க... அப்போ எதுக்கு முதல கேட்டதும் ம... ம . மது சொன்ன என அவள் கூறியது போலவே பழித்து காட்ட என் பேர் ஒன்னும் அது இல்லை என் பேர் மதுஷனா என கூற... ஷனா அழகான பெயர் தான் என இவன் கூற ..


யாரோ ஒருவன் தன் பெயரை சுருக்கி கூப்பிடுவது பிடிக்காமல் அதுவும் தன் தந்தை மட்டுமே அழைக்கும் விதத்தில் இவன் அழைக்கவும் கோபம் கொண்டு நீங்க என்னை மதுஷனானு கூப்பிட்டால் போதும் இப்படி யாருனு தெரியாத பொண்ணு கிட்ட உரிமை எடுத்துக்காதீங்க அப்பறம் இனி யாரும் தெரியாத பொண்ணு கிட்ட இப்படி நடந்துகாதிங்க என கூறிவிட்டு நகர்ந்து போக அவள் கையை பிடித்து இழுத்தவன் சட்டென தன் முகத்திரை நிக்கி அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான்..


இப்படி
அசைந்து
இசைத்து
கொண்டே
பேசாதடி
மொத்தமாய்
என்வசம்
இழந்து
முத்தமாய்
செலுத்தவேண்டி
வரும்.....



அவன் திடீர் தாக்குதலில் நிலை குலைந்தவள் நிற்க முடியாமல் விழ போக இவன் கைகளில் சாய்வாக தாங்கி கொண்டே மீண்டும் இதழ் ஒற்றி நீ யாரோ ஒரு பொண்ணு இல்லை இன்னைல இருந்து நீ என் காதலி புரியாத டார்லிங் என கண்சிமிட்ட... தன் நிலை அறிந்து தெளிந்தவள் அவன் கன்னத்தில் பளாரென்று அறைய அந்த கும்மிருட்டில் மொத்த இடமும் அதிர்ந்தது.... தன் செய்தது தவறு என அவனுக்கு உரைக்க தலை குனிந்து சாரி என்று மட்டும் கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்...


சொக்கி
போகும்
அளவு
மாயவிழி
கொண்டிருப்பது
உன்
தவறு
இல்லையா
பெண்ணே !!!
அதில்
தயக்கமின்றி
எனை
மறந்து
போனது
மட்டும்
என்
குற்றமா???
என்ன
நியாயமடி...



அவன் மறையும் வரை அவனையே பார்த்தவள் அதன் பின் அருகில் இருந்த கல்பென்ச்சில் அமர்ந்தாள்... இவள் போனதும் ஒரு பெண் உள்ளே வந்து தான் இந்த ஏரியா SI ராகவி என்று தன்னை அறிமுகம் செய்து தன் அடையாளம் அட்டை காமித்து இந்த நேரத்தில் இங்க இருக்க கூடாது எங்க போகணும்னு சொல்லு நான் கொண்ட விடுறேன் என கூற தன் பையில் வைத்திருந்த தொலைபேசி எடுத்து தன் தோழி தங்கியிருக்கும் விடுதி முகவரி கொடுத்து நான் கொஞ்சம் விடுஞ்சதும் போயிடுறேன் மேம் இப்போ என்னால போக முடியாது என கூற...


உன்ன நான் தனியா போக சொல்லலாமா அந்த வழில தான் என் வீடு இருக்கு நீ அப்படியே அங்க இறங்கிகோ என கூறி அவளை அந்த விடுதிக்கு அழைத்து சென்றால் சேரும் இடம் வந்ததும் தேங்க்ஸ் மேடம் நீங்க போங்க மேம் நான் கால் பண்ணினால் அவள் வருவாள் என கூற . பரவாயில்லமா நீ போன் பண்ணு நான் காத்திருக்கிறேன் என கூற இவள் அழைப்புவிடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் வந்து நின்றாள்.. தோழி போலீஸ் உடன் வந்திருக்கவும் சற்று இவள் பயம் கொள்ள மதுவோ நடந்ததை பிறகு கூறுகிறேன் இவங்க SI ராகவி மேடம் என அறிமுகம் செய்து வைத்தால்... உன் பேரு என்னமா என கேட்க சரண்யா மேடம் என கூறினாள் சரிம்மா வார்டன் கிட்ட எல்லாம் பேசியாச்சா என கேட்க ஆமாம் மேடம் நேத்தே பேசிட்டேன் இவள் காலைல வருவான்னு நெனச்சேன் என இன்னும் சில வார்த்தை பேசி அறிவுரை கூறிவிட்டு அவள் சென்றால்..


இங்கு தோழிகள் மாதங்கள் கடந்து பார்ப்பதால் சற்று ஆற தழுவி கொண்டு நலம் விசாரித்து விட்டு உள்ளே சென்றனர்... அந்த விடுதி ஒரு அறைக்கு மூன்று பேர் தங்குமறை இப்போது இதற்கு முன்பு சரண்யா தோழி ஒருவளும் இருக்க இப்போது மதுவையும் சேர்ந்து மூன்று பேர் ஆனார்கள்... அந்த அரை மூன்று பேருக்கும் தாராளமாய் இருக்கும் கொஞ்சம் பெரிய அரை தான்.. இவள் மிகவும் மன கவலையில் வந்து இங்கும் சற்று எதிர்பார்க்காத கசப்பான சம்பவங்கள் நடந்ததில் மீண்டும் கவலை கொண்டால்...


விடிந்து விட்டது இனி தூங்கினாலும் ஒரு மணிநேரத்தில் எழனும் என நினைத்துவிட்டு குளிக்க சென்றால்.. ஏனோ அங்கு பார்த்தவனின் முகம் அடிக்கடி வந்து கொண்டு இம்சித்து
ஆறடி உயரம் அழகாக சிறிதாய் கற்றையாய் முறுக்கு மீசை உடலின் வலிமை கண்களின் வீச்சு மிருதுவான தீண்டல் இதழின் ஒத்தடம் என அவள் நினைவின் மொத்தமும் அவனே வந்தான்... ச்சா... என்ன இது என் மனது யாரோ ஒருவனை இப்படி வர்ணித்து நினைக்கிறதே என தன்னையே நொந்து கொண்டு குளித்து முடித்து அவளது வேலைகளை கவனித்தால்.. அவன் நினைவுகள் மறந்து தான் எங்கு வேளைக்கு செல்ல போகிறோம் எந்த இடமென தன் கூகிள் மாமாவிடம் போட்டு பார்த்து தெரிந்து கொண்டால்..


கசப்பென
நினைத்தது
இம்சிக்கிறதே
சுகமாய்
அந்த
இம்சையின்
அர்த்தம்

புரியாமல்
....

இதயத்தில் விழுந்த காதல் விதை விருட்சமாய் வளர என்னவளே உன் நினைவோடு துடிக்கிறதடி 💕💕💕💕
 

Attachments

  • IMG-20201101-WA0036.jpg
    IMG-20201101-WA0036.jpg
    114.5 KB · Views: 0
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN