❤️உயிர் 20🌹முற்றும் ❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மெத்தென்று அஞ்சலி அவன் மீது மோதினாள்.
"மவனே,விடுங்க என்னை, இப்படியா முரட்டுதனம் காட்டுவது "அவன் கேட்டால் தானே.காலை விச்ராந்தியாய் சோபாவில் நீட்டியவன், அஞ்சலியை அழகாய் மடிமேல் இருத்திக் கொண்டான்.
"இப்போ கேளு செல்லம்.என் கண்ணம்மாவிற்கு என்ன தெரியணும்" அவன் கைகள் அவள் கூந்தலை மெல்ல வருடின.

உரிமையாய் அவன் நெஞ்சில் சாய்ந்தவள்,
"ரீட்டா என்னமோ சொன்னாளே,நீங்க வேற மாதிரி இல்ல நடந்துகிறீங்க,எதும் புரியலை எனக்கு" சிறுப்பிள்ளைப் போல் கேட்டாள்.

"அடிப்பாவி அந்த மழைக் கால அணைப்பு உனக்கு புரிஞ்சியிருந்திருந்தா இன்னிக்கு இவ்வளவு நடந்திருக்காதே. எல்லாம் என் நேரம்" எனக் கூறி தன் அணைப்பை இறுக்கியவன்,
நடந்ததை நினைவு கூர்ந்தான்.

விழாவில்,கண்ணனை தாய்ப் போல் ஏந்திக்கொண்டு வலைய வந்த அஞ்சலியை அணு அணுவாய் இரசித்து இரசித்து தன் செல்லில் சிறை செய்தவன்,இடையில் அவளைக் காணாது திகைத்தான்.

அப்பொழுது அங்கு வந்த பூவிழி அஞ்சலி ரீட்டாவுடன் பேசியதையும்,அஞ்சலி முகம் வாடியதையும்,ரீட்டா எதையோ தன் ஐப்பேட்டில் காட்டி காட்டிப் பேசியதையும் கூறினாள்.
ரீட்டா எதோ சதி செய்வதை உணர்ந்தவன்,அவளை தேடிச்சென்றான்.குணாவும் அப்பொழுது அங்கு வந்து விட்டான்.

இருவரும் மிரட்டியதில் முதலில் மசியாத ரீட்டா,யுகேன் போலிசுக்கு செல்வேன் என்றதும் பயந்து அடங்கினாள்.நடந்ததை சொல்லி அதன் ஆதாரத்தையும் காட்டினாள்.
அதைப்பார்த்த யுகேனுக்கு கோவம் தலைக்கேறியது.அவளை அறைய கை ஓங்கியவனை குணாதான் தடுத்து நிறுத்தினான்.

"அஞ்சலியை போய் பாரு யுகேன்,இவள அப்புறம் பார்த்துக்கலாம்" என குணா கூறவும்தான் ,
யுகேந்திரன் அஞ்சலியை தேடி சென்றது. அங்கு அறையில் அஞ்சலி தாலிச்சரடை பற்றி அழுதுக் கொண்டிருந்ததில் அவனுக்கு சகலமும் விளங்கிற்று.

மனம் உல்லாசமாய் விசிலடிக்க , அப்பொழுதே அவளை வாரி அணைக்க தாவிய கைகளை கஷ்டப்பட்டு அடக்கினான். கொஞ்சம் விளையாடி பார்க்கலாம் என்றுதான் எதுவும் நடவாதது போல அஞ்சலி அருகே சென்றது எல்லாம். பின் நடந்ததுதான் அஞ்சலிக்கும் தெரியுமே.

தலைத்திருப்பி தன் கணவனைப் பார்த்தாள் அஞ்சலி.அந்த பெரிய கண்களில் கரை கடந்த காதல் அவளுக்காக மட்டும் தெரிந்தது.மெல்ல அவன் முகத்தை காதலோடு வருடினாள்.
"உங்கள் காதல் எப்பவோ எனக்கு தெரியும் யுகேன்,உங்கள் ரூம்ல இருந்த சில விசயங்கள் காட்டிக் கொடுத்தது.அந்த ஓவியம், நான் பொறுக்கிக் கொடுத்த கிளிஞ்சல்கள், எல்லாமே உங்கள் லவ் சொல்லுச்சு "

"என்ன இருந்தாலும் மனதில் ஒரு நெருடல்.நட்புக்காய் நாம நடத்திக்கிட்ட பொம்மைக்
கல்யாணம்தானே இதுனு நினைச்சிக்கிட்டேன்."

"தவிர உங்களுக்கும் கல்யாண பந்தத்தில் நம்பிக்கை இல்லையே.நமக்கு வாழ்க்கை தந்த பாடம் அப்படி."
"இது நட்பா ,காதலா ,இல்ல மஞ்சள் கயிறு மேசிக்கானு தெரியல யுகேன்.
ஆயுசுக்கும் உங்க உயிராய்இருக்கணும்னு மனசார ஆசைப்பட்டேன். சமயத்தில் ஒன்று சேரும் நம் ரசனைகள். பாதி விஷயங்கள் நான் சொல்லாமலே உங்களுக்கு புரிஞ்சி அத எனக்காக செய்வீங்க "

"தடுமாறி போயிருக்கேன் யுகேன், இந்த ரீட்டா இன்னிக்கு இப்படி பேசவும் தான், உங்க மேல எனக்கு லவ் வந்திருக்குனு புரிஞ்சது "அஞ்சலி நெகிழ,

"இந்த ரீட்டா இப்படி குழப்புவானு நான் நெனைக்கலமா.உங்க போட்டோ பார்த்ததும் இடிஞ்சு போயிட்டேன்.விட்டுட்டு போயிடலாம்னு கூட யோசிச்சேன்.'' கண்களில் இரு கோடுகளாய் இறங்கியது நீர்த்துளிகள்.அவளை அப்படியே நெஞ்சோடு இறுக்கி அணைத்தவன்,

"மச்சி நீ இல்லாம நான் இருப்பேனா?அப்படியா அந்த ரீட்டாகிட்ட ஓடிப் போயிர்வேனாம்மா?.புது வாழ்வு தந்தவள் நீதானே செல்லம்''அதற்கும் மேல் தாபம் தாங்காமல் அவளை முரட்டுத்தனமாய்முத்தமிட்டான்.

அவள் திமிறிக் கொண்டு, "இன்னும் ஒரு கேள்வி மச்சி? "
என்ன என்பது போல அவன் புருவம் உயர,

"ஏன்டா உனக்கு இப்படி ஒரு டேஸ்ட்? அவள் மூஞ்சிக்கு மேக்கப் வாங்கி குடுத்தே உன் சொத்து அழிஞ்சிடுமே, யோசிச்சு லவ் பண்ண மாட்டியா,? மக்கு சாம்பிராணி !"

"சோரி மச்சி, மைண்ட் வாய்ஸ் எல்லை மீறி கேட்ருச்சு " அஞ்சலி கூற ,
"அதான் தப்பிச்சு என் ராணி கிட்ட ஓடி வந்திடேன் இல்ல, உன்ன முதல் முதலில் பார்த்த அப்பவவே மனசுக்குள் ஒரு உணர்வு, அது என்ணான்னு காமிக்கிறேன் பாரு " அவளை மையலுடன் அணைத்தவன்,

இத்தனை நாள் உயிருக்குள் ஒளித்து வைத்த காதலை மொத்தமாய் கொட்டித்தீர்த்தான். அஞ்சலியும் அவனுக்கு வாகாய் இசைந்தாள்.மழையோடு அவர்கள் இல்லறமும் நல்லறமாய் தொடங்கியது.திகட்ட திகட்ட அவன் காதலையும் அன்பையும் அஞ்சலிக்கு அனுதினமும் அளித்தான்.

அவனே அவளுக்கு உயிர்த்தோழன்,காதலன்,கணவன்,முரட்டுக்குழந்தையும் ஆகி நின்றான்.தினமும் அஞ்சலி மடியில் உறங்காமல் விடியாது அவன் இரவுகள்.
அவள் தாய்மை அடைந்த பொழுதும்,தாய்ப் போல் தாங்கினான்.பிரசவத்திற்கு கூட பீடிக்கு அனுப்ப மறுத்து விட்டான்.அஞ்சலியும் அவனை விட்டு விட்டு வருவாளா என்ன?
தூய்மையான காதலுக்கு பரிசாய் மாயா குட்டியை பெற்றதே பெருமை என அஞ்சலி உணர்ந்தாள்.

திசை மாறிய தன் வாழ்க்கையை நினைக்கயில் மெய் சிலிர்த்தது அஞ்சலிக்கு.தன் சாயலை கொண்டு பிறந்த பேத்தியை கண்டத்தில் கமலம் சகலத்தையும் மறந்து , அவர்களிடம் மன்னிப்பு கோரினார். அஞ்சலி யுகேந்திரன் வாழ்க்கை மாயா வருகையினால் சொந்தங்களோடு இணைந்தது.

அப்பொழுது பின்னாலிருந்து யாரோ அணைப்பது உணர்ந்து நிகழ் காலத்திற்கு வந்தாள்.
"டேய் மச்சான்,நீதானா அது" குறும்பாய் கண்களை உருட்டினாள்.
"புருசன்னு மரியாதை வருதா பாரு,டே போடுது பன்னிக் குட்டி"யுகேன் சீண்ட ஆரம்பித்தான்.போலியாய் முறைத்த அஞ்சலி ,

"மொத எனக்கு மச்சி ,அப்புறம்தான் அன்புள்ள கணவன்''விளையாட்டாய் அவன் தலைக் கலைத்தாள்.

"வேண்டாம் மச்சி ,மூடு ஏத்தாதே,அப்புறம் சிங்கக்குட்டியை சுமக்க வெச்சிருவேன்"அவன் முன்னேற, உவ்வே காண்பித்தாள் அஞ்சலி.'மவளே செத்தடி இன்னிக்கு'' கழுத்து டையை தளர்த்தியவாறு அஞ்சலி மேல் பாய்ந்தான்.அவளா இவனுக்கு சிக்குவாள்?அவனுக்கு போக்கு காண்பித்து விட்டு ஓடினாள். மீண்டும் ஆரம்பமானது அவளது சீண்டலும் அவனது தேடலும்..

..முற்றும்..

உயிரானவர்களை அவர்கள் உலகில் விட்டு விட்டு நான் விடை பெறுகிறேன். நன்றி நண்பர்களே *கணி*
 

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அருமையான காதல் கதை.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN