பட்டர் எக் முகலாய் | Butter egg mughlai

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேவையான பொருட்கள்

ஆம்லெட் செய்ய

முட்டை - 1
உப்பு
மிளகாய் தூள்
மிளகு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வேகவைத்த முட்டை


கிரேவி செய்ய
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு ஒட்டு - 1/2 தேக்கரண்டி
தக்காளி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
ஆம்சுர் பவுடர் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர்


வறுத்த முட்டை செய்ய
வெண்ணெய் - 1 தண்ணீர்
முட்டை
பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை



செய்முறை
1. முதலில் முட்டைகளை வேகவைத்துக்கொள்ளவும்
2. வெந்த முட்டைகளை ஒன்று மெலிதாகவும், மற்றொன்று சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்
3. அடுத்து ஒரு ஆம்லெட் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி தேவையானஅளவு உப்பு, தேவையான அளவு மிளகாய் தூள், தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
4. ஒரு தோசை சட்டியில் எண்ணையை ஊற்றி சூடேற்றிய பின்பு இந்த முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் மெல்லிதாக நறுக்கிய முட்டை துண்டுகளை சேர்த்து ஆம்லெட் செய்யவும்
5. அடுத்து இதற்க்கு ஒரு கிரேவி செய்யவேண்டும் அதற்க்கு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து கரைத்த பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் & இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
6. வெங்காயம் பொன்னிறமானவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், ஆம்சூர் பவுடர், சீரகத்தூள்& மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
7. அடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்த முட்டையை வறுக்க வேண்டும் அதற்கு ஒரு தோசை சட்டியில் வெண்ணெய் சேர்த்து கரைத்த பின்பு வெட்டிவைத்த வைத்த முட்டை துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
8. இந்த பட்டர் எக் முகலாயை பரிமாற்ற ஆம்லெட் , செய்து வைத்த கிரேவி, வறுத்த முட்டை முட்டை துண்டுகள் சேர்த்து பரிமாறவும்
9. சூடான மற்றும் சுவையான பட்டர் எக் முகலாய் தயார்

 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Naaku uuruthey🤤🤤🤤
நான் இன்னும் சமைத்து ருசி பார்க்கள டா...:cry::cry: சீக்கிரம் ருசிக்கணும்....:love::love::love:
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN