பேதையின் மனம்-1

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தீக்கனலாய் தகிக்கும் சூரியன் மெல்ல தனது முதல் கதிர்களை தனது காதலி பூமியினுள்ளே செலுத்த, அத்தனை உயிர்களை புத்துணர்ச்சி பெற்றது..

அதனூடே தனது செவ்விதழ்களை சுருக்கி மான்விழிகளை பொன்விரல்களை தேய்த்துக்கொண்டே எழுந்தாள் அவள். சூரியனின் மிதமான கதிர்களை பார்த்து மிதமாக ரசித்தவள், கால்முட்டிகளை கட்டி அதில் தலையை சாய்த்து ஒரு மயக்கமுறும் குரலாலே "குட் மார்னிங் குட்டிமா..." என்றாள்.


அது தான் அவளது சூரிய வணக்கம். பின் குளித்துவிட்டு வந்தவள் பல்லை துலக்கினாள். அவளது அரைகுறை பழக்கம் தனி அறை வந்தும் தொடர்கிறது. தலையை நன்கு துவட்டியவள், ஹேர்டிரையர் இருந்தும் சிணுக்கோல் உதவியுடன் முடிகற்றைகளை ஒவ்வொன்றாய் பிரித்தெடுத்தாள். பின் மெலிதாய் பின்னலிட்டு முன்னால் இட்டுக் கொண்டாள். கண்களின் இமைகளில் கீற்றாய் மையினை வரைந்தவள், அதே மையினை கொண்டு பரந்த நெற்றியில் கொடுக்கு போன்ற உருவத்தினை வரைந்தாள். பின் தனது துப்பட்டாவினை எடுத்து ஒரே மடிப்பாய் ஒரு தோளில் போட்டவள், கடகடவென கீழிறங்கினாள்.


அங்கே அவளுக்கான உணவு தயாராய் இருக்க, "உப்புமா இருக்குதா?? பேச்சிம்மா.."என கேட்டாள். (உப்புமா நமக்கெல்லாம் வெறுத்து போக, மேடம் பாழாப்போன உப்புமாவை கேட்டு வாங்கி சாப்புடுறாங்க.. என்ன டேஸ்டோ??)
"ம்ம்.. இருக்குத்தா... இதோ எடுத்துட்டு வர்றேன்.."என ஒரு தட்டில் போட்டு வந்தவர், ஓரமாய் சீனியை அள்ளி ஒரு கரண்டியை வைத்தார்.


"போதும்.. போதும்..."என்றவள், அந்த மணத்தை மூக்கினால் நுகர்ந்தாள்.
பின் ஆர்வமாக அள்ளி சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்தவள், புத்தப்பையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டாள். அவள் கிளம்ப போவதை அறிந்து பேச்சி, கையில் ஒரு முழம் பிச்சிப்பூவை எடுத்து வந்து அவளது பின்னலோடு தைத்து வைத்தார்.

கிளம்பி வாசலுக்கு வந்தவளின் போன் அலறியது. எடுத்து காதில் வைத்தவர்,
"ஹலோ ம்மா..."
"நான் கங்கா இல்லம்மா காவேரி.."
"சொல்லுங்க காவேரிம்மா..."
"கிளம்பிட்டியாடா.. தங்கம்.."
"ம்ம்.. அப்பவே கிளம்பிட்டேன்.. காலேஜ் பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. 9:30க்கு பஸ் 9:28 ஆகுது.. இன்னமும் வரலை.. அந்த ட்ரைவருக்கு அக்கறையே இல்ல..." என்றாள்.

"ஹஹஹ.."என சிறிதாய் சிரிப்பை வெளிப்படுத்தியவர் "காலேஜ் போய்ட்டு வா தங்கம்.. வந்து பேசிக்கலாம்.." என கூறிவிட்டு போனை வைத்தார்.


அடுத்த இரண்டு நிமிடங்களில் பேரூந்து வர, அதில் ஏறிக் கொண்டாள்.

அவள் இஷிதா.. இயற்கையன்னை பெற்றிருப்பாளோ என்னவோ?? கருணையின் மறுஉருவம்.. ஆனால் கடுப்பாகி விட்டால் எமனே எட்ட நின்று வேடிக்கை பார்ப்பார். அந்த அளவிற்கு அவளது தாண்டவம் இருக்கும்.. வட்டமான முகம் அதில் சற்று பெரிதாக தீர்க்கமான பார்வை கொண்ட இருவிழிகள்.. அந்த கருவிழியை பார்த்தால் கடவுள் கூட காணிக்கை செலுத்துவார்.. அளவான மூக்கு.. கோபத்தில் மட்டும் சிவந்து போகும் அந்த மூக்கில் சினத்தை சீர்திருத்த சிறிய வைரக்கல் மூக்குத்தி .. எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் அவளது சுறுசுறுப்பான உதடுகள்.. அதிகம் பேசுவதாலோ என்னவோ சற்று சிவந்து போய் இருக்கும்..


அவள் கூறிய இரண்டு நிமிடங்களில் பேருந்து வந்து நிற்க, அதில் ஏறிக் கொண்டாள். கல்லூரி பேருந்து அந்த அகன்ற பெரிய விஸ்தாரமான கல்லூரிக்குள் நுழைந்தது. பல கட்டிடங்களை தாண்டி, அட்மினிஸ்ட்ரேட்டிவ் பிளாக் இருந்தது. அதில் இறங்கியவர்கள் ஒவ்வொருவரும் தம்தம் துறையை நோக்கி பயணமானார்கள்.


இஷிதாவும் அவளது துறையை நோக்கி நடந்தாள். எல்லா காலேஜ்லயும் பாழடைந்த பங்களா மாதிரி இருக்கிற வேதியல் துறையில் தான் அவள் சேர்ந்திருந்தாள். உள்ளே சென்று வகுப்பறையில் அமர்ந்து பேக்கினை டெஸ்கில் வைத்துவிட்டு நிமிர, ஒரு பெண் அவளது அருகே வந்து அமர்ந்தாள்.
"ஹலோ நான் தாரா.. நீங்க??" என கேட்டாள்.
"இஷிதா.. இஷின்னே கூப்பிடலாம்.."என்றாள்.
"என்ன பேரு குசுகுசுன்னு.."எனக்கூற, "நம்ம பேருக்கூட தரதர கரகரன்னு தான் இருக்கு.." என இஷிதா கூறிவிட இருவரும் சத்தமாய் சிரித்து விட்டனர்..

அனைவரும் இவர்கள் இருவரையும் பைத்தியமா?? என்ற பார்வையில் பார்த்தனர். இருவரும் முதல் சந்திப்பிலேயே மனதிளவில் ஒத்தவர்களாய் மாறிப் போய் தோழிகளாயினர்.

சற்றே ஒல்லியான தேகம் மற்றும் இவளை போன்றே வாயாடி பெண். இதை தாண்டி இஷிதாவிற்கு தாராவை பிடித்துப் போக காரணம் என்று தனியே வேண்டியதில்லை.
" சரி நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்.." என கையை குலுக்கி கொண்டவள் "சரி உன்ன பத்தி சொல்லு.. " எனக்கேட்டாள் தாரா.
" ப்ளஸ் டூ மார்க்.." என தொடங்க,
"அந்த கருமத்தை எதுக்கு சொல்லிக்கிட்டு.. உன்னை பத்தி சொல்லு.." என இடைமறிந்தாள் தாரா.

"ப்ளஸ் டூல ஏதோ ஆயிரத்துக்கு ரெண்டு மார்க் கம்மியா வாங்கிட்டேன்.. அதுக்கு போய் கோபப்பட்டு எங்கப்பா மீசைக்காரரு இங்கதான் படிக்கணும்னு இங்க கொண்டாந்து தள்ளிட்டாரு.. அப்பாவோட ப்ரெண்ட் வீட்ல தங்கியிருக்கேன்.. அப்பா அம்மா கிராமத்தில் இருக்காங்க.. வீட்டுக்கு ஒரே பொண்ணு செல்ல பொண்ணு அப்படின்னு அடிக்காம வளர்த்துட்டாங்க.. அதனால வாய் கொஞ்சம் கூடிப்போச்சு.." என்றாள் இஷிதா.
" வாய் மட்டுமா கூடிப்போச்சு..."என தாரா தலையை இடது பக்கமாக சாய்த்து கூற, "ஏய்..." என செல்ல கண்டிப்பதோடு காதை திருகினாள் இஷிதா.
" அழகும் கூடி போச்சுன்னு சொல்ல வந்தேன்..." என்றவள், தனது காதினை விடுவித்துக் கொண்டாள்.


" சரி உன்ன பத்தி சொல்லு.." என கேட்டாள் இஷிதா.
" என்ன பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு?? எப்படியும் நாளைக்கு சரித்திரத்தில் என் பெயர் இடம்பெறும்.. அத வச்சி தெரிஞ்சுக்கோ.." என தாராக்கூற, இஷிதா வாய்விட்டு சிரித்தாள்.
"இஷி.. உனக்கு டிம்பிள் அழகா இருக்கு.."என அதிசயித்தாள்.
"அப்படியா??" என கன்னத்தை தொட்டு பார்த்துக்கொண்டாள்.


"என் குழியழகி.." என கன்னம் கிள்ளினாள் தாரா.
"கொஞ்சல்ஸ் போதும்.. நான் உன்ன பத்தி கேட்டேன்.."என இஷிதா கேட்டாள்.
"விடமாட்டியே...அம்மா இல்ல.. அப்பா மட்டும் தான்.. அவரு என் ப்ரெண்ட் மாதிரி.. ப்ளஸ் டூல ஜெயில்ல புடிச்சு போட்டு.. புக்கை அரைச்சு குடிச்சு எக்ஸாம் பேப்பர்ல வாமிட் பண்ணி எப்படியோ 1100 வாங்கிட்டேன்.. சரி எதாவது இஞ்சினியரிங் படிக்க வைப்பாங்க.. கொஞ்சம் மூச்சு விடலாம்னு பார்த்தா இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க.. ." என்றாள் தாரா.
"அப்போ இந்த காலேஜ்க்கு நம்ம பனீஷ்மெண்ட் கொடுத்தே ஆகணும்.."என இஷிதா கூற, "ஹான்..." என சூரி ஸ்டைலில் கூறினாள் தாரா.


இருவரும் தங்களுக்கு தெரிந்ததை வைத்து வகுப்பறைக்குள் அளவளாவிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பேராசிரியர் வந்துவிட, சுய அறிமுகம் கொடுத்துவிட்டு, முதல்நாளிலேயே பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி மாணவர்களை கழுத்தறுத்துகொண்டிருக்க, இஷிதாவோ அருகிலிருந்த தாராவிடம் புத்தகத்தில் கிறுக்கியவாறே பேசிக்கொண்டிருந்தாள்.


அதே நேரம், இங்கே
அதே சூரியன் தன் கதிர்களை பூமிக்குள் பரப்பிக் கொண்டிருக்க, அதனை ஒருவன் தடைக்கல்லாய் நின்று தடுத்துக் கொண்டிருந்தான். தனது வலது காலை இடது காலின் முட்டியில் வைத்தவாறு மலையின் மேலே நின்று, மேல் நோக்கி கை கூப்பியவாறு நின்று இருந்தான். சூரியனுக்கு சூரியநமஸ்காரம் செய்யும் குணம் கொண்டவன் அவன். தனது கட்டுமஸ்தான உடலை வளைத்து நெளித்து உடற்பயிற்சிகளை செய்து முடித்தான். அந்த திருப்தியில் தண்ணீர் பாட்டிலினை தன் முகத்தில் தெளித்தவன் யோகா மேட் உடன் வீட்டிற்கு திரும்பினான்.


சூரியனின் தயவினால் வியர்வைத் துளியால் குளித்திருந்த அவன் வீட்டில் வந்து சுடுநீரில் குளித்தான். வெளியே வந்தவன் கண்ணாடியைப் பார்த்தான். அந்த கண்ணாடியோ அவனின் பிம்பத்தை பிரதிபலித்தது. மனதில் நினைப்பதை பேசும் கண்களும்.. இறுக்கமான உதடுகளும்.. நினைத்ததை முடித்துக்காட்டும் அவனது கோபமான முகமும் தெரிந்தது. அதற்குமேல் கண்ணாடியில் பார்க்க விருப்பம் இல்லாமல் தள்ளி வந்தவன், எங்கோ பார்த்தபடி தலைவாரினான்.



தனக்கான உடையைப் போட்டுக் கொண்டு கீழே வந்தவன், அங்கே நின்ற இரண்டு வேலைக்காரர்களை பார்த்து, "இன்னைக்கு எனக்கு பிரேக்பாஸ்ட் வேணாம்.." என திமிராய் கூறி விட்டு போர்டிகோவில் நின்ற அந்த வசதியான காரில் ஏறி சென்றான்.


மாலை சோர்வாக வந்து அங்கிருந்த சோபாவில் பொத்தென்று விழுந்தாள் இஷிதா. பாடம் கவனித்தோ அல்லது மூளையை உபயோகித்தோ அவள் சோர்வடைய வில்லை. வகுப்பிலிருந்த ஒரு மணித்துளியை கூட வீணாக்காமல் தாராவோடு கதை அளந்ததே அவளது சோர்விற்கு காரணம். ஒரு ஆர்வகோளாறில் உடல் நிலையை கவனிக்காமல் பேசியிருந்தாள்.


" ஒரு கப் காபி கிடைக்குமா பேச்சிமா??" எனக்கேட்டாள். அவரும் அவளது கையில் காபியை கொடுத்து விட்டு காலை அமுக்கி விட கீழே அமர,
"பேச்சிமா.. காலெல்லாம் வலிக்கல.. நீங்களும் காபி எங்கூட சேர்ந்து குடிக்கலாமே.." என அழைத்தாள்.
ஒரு கப்பில் காப்பியை எடுத்து வந்தவர், அவளோடு இணைந்து கொண்டார். காபி கப்பை கொடுத்து விட்டு அவளது அறையை சென்ற போனில் மூழ்கினாள். அதன் பின் அவள் அறையை விட்டு வெளியே வருவதில்லை.


மறுநாள்,
கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கியவளை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் தாரா.
"சீக்கிரமே வந்துடுவேன்னு சொன்ன??" எனக்கேட்டாள் தாரா.
" இந்த பஸ் டிரைவர் லேட் ஆக்கிட்டாரே.." என அப்போதுதான் இறங்கிவந்த டிரைவரை வம்பு இழுக்க, அவரோ "ஏதோ சின்ன பிள்ளை தெரியாம பேசுதுபோல.."என நினைத்து விட்டு அவரது வேலையை பார்க்க சென்று விட்டார்.


" என்ன பேப்ஸ்.. டிரைவர பார்த்தா உனக்கு ரூட்டு விட்டு கரெக்ட் பண்ணி இருப்பாரு போல.."
" ஆமா பேப்ஸ்.. நேற்று தான் ப்ரொபோஸ் பண்ணினாரு இன்னைக்கு நான் ஓகே சொல்லிட்டேன்.. நாளைக்கு ஓடி போய்ருவோம்.."
"இது அவரு வொய்ப்க்கும் குழந்தைக்கும் தெரியுமா??"
"இதெல்லாம் ஒரு விஷயமா பேப்ஸ்?? எத்தனை குழந்தையா இருந்தா எனக்கு என்ன.." என கூறியவள், தாராவின் காதருகே சென்று, "இந்த விஷயத்தை அவரு வொய்ப் கிட்ட சொல்லிடாதே.."என கிசுகிசுத்து விட்டு சிரித்துக்கொண்டே நடந்தாள்.



அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்க, கிரவுண்டில் அவர்களது வகுப்பில் உள்ள மாணவர்கள் வரிசையாக நின்றிருந்தனர். "அங்க என்ன நடக்குது??" என அறியும் ஆர்வத்தில் அவர்களையும் அறியாமல் கால்கள் நடை போட்டது. கூட்டத்தை விலக்கிக்கொண்டு தாராவும் இஷிதாவும் முன்னேறி சென்றனர்.


சற்று நேரத்திற்கு முன்பு வரை,
அங்கு ஒருவன் ஒய்யாரமாய் நடுவே அமர்ந்திருக்க, அவனது அருகே ஒரு பெண்ணும் ஆணும் என இருவர் நின்றிருந்தனர். அதில் ஒருவன், "நாங்கல்லாம் உங்களுக்கு சீனியராம்.. இப்போ உங்கள ராக் பண்ணுவோமாம்.. யார் முதல்ல வரபோறது.. சொல்லுங்க.. சொல்லுங்க.." என கீரைக்காரன் போல கூவிக்கொண்டிருந்தான். அனைத்து மாணவர்களும் அமைதியாய் நின்றிருந்தனர். அப்பொழுது நடுவில் இருந்தவன் அந்தக் கட்டை சுவற்றை விட்டு கீழே இறங்கி, "யாராவது ஒரு ஆள் முன்னாடி வரப் போறீங்களா.. இல்லையா??" என கர்ஜித்தான். அவனது அதட்டலில் நடுங்கிப் போன மாணவர்கள் அப்படியே தலைகுனிந்து வண்ணம் நின்றிருந்தனர்.


அந்த நேரத்தில்தான் இந்த இரண்டு அப்பாவி ஜீவன்களும் கூட்டத்தை விலக்கிக்கொண்டு நடப்பது என்ன என அறிந்து கொள்ளும் முனைப்பில் முன்னே நடந்து வந்துள்ளனர்.
ஆடு ஆப்புக்கு ரெடியாகி வரும்போது வேண்டாம்ன்னா சொல்லுவாங்க.. அப்பொழுது வம்படியாய் தாரா முன்னால் நிற்க, அவளுக்குப் பின்னே தான் இஷிதா நின்றிருந்தாள்.
"ஏய் முட்டைகோஸ் மண்டை.. முன்னாடி வா.." என இஷிதாவை பார்த்து அழைத்தான்.
" அவ பேரு இஷிதா.. முட்டைகோஸ் மண்டை இல்லை.." என இடைமறித்தாள் தாரா.

" ஏ குண்டு தக்காளி உன்கிட்ட நான் இப்ப வரை பேசவே இல்லை.. நான் உன்கிட்ட கொஸ்டின் கேட்டா மட்டும் ஆன்சர் பண்ணு.." என விரல் நீட்டி எச்சரித்தான். இஷிதா அவனிடமிருந்த சற்று குள்ளமாக இருக்க, அவளது தலையை எட்டி பிடித்தவன் முன்னே இழுத்தான்.
" எந்த டிபார்ட்மென்ட்??" என கேட்டான்.


அதற்கு தாராவோ "நீங்க எந்த டிபார்ட்மென்ட்??" என கேட்டாள் தாரா. "என்ன ஸ்மார்ட்டா பேசுவதா நினைப்பா??" என வினித் அவளது கையில் இருந்த ஐடி கார்டை பிடுங்கினான்.
" கெமிஸ்ட்ரியா?? அதுக்கு தான் இந்த வெத்து பில்டப்பா" என்றாள் அருகில் நின்றவள்.
" உங்க பேர் என்ன?? அக்கா.." என அருகில் இருந்தவளிடம் தாரா விசாரிக்க, "உன்ன வாயை திறக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன்..." என மீண்டும் எச்சரித்தான்.

" விடு திலீப்.. இவளை நான் பார்த்துக்கிறேன்.." என கூறிவிட்டு, "சவிதா.." என கூறினாள்.
" நீங்க எந்த டிபார்ட்மென்ட்க்கா??" என அடுத்த கேள்வி கேட்டாள் தாரா.
" ஒரு கேள்வியே கேட்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன்.. நீ என்ன அடுத்த கேள்விய கேட்டுகிட்டு இருக்கிற??" என அவன் அடுத்த மிரட்டல் விடுக்க, அவளோ "உனக்கெல்லாம் அடங்குவேனா??" என்பது போல பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.


" எம்பிஏ டிபார்ட்மென்ட்.." என்றான் வினித்.
" அண்ணா அப்படியே உங்க பேரு சொல்லுங்க.." எனக் கேட்க, அவனும் "வினித்.." என்றான்.
அப்பொழுது "எம்பிஏ டிபார்ட்மெண்ட்.. சவிதா அக்கா.. வினித் அண்ணா.. திலீப் அண்ணா.. ஓகே எனக்கு டீடைல்ஸ் கிடைச்சு போச்சு.. தேங்க்யூ பார் யூர் கைன்ட் இன்பர்மேஷன்.." என அவள் பாட்டிற்கு உலறி கொண்டு இருந்தாள். அப்பொழுது "இவள் என்ன பைத்தியமா??" என மூவரும் மண்டையை ஆட்டி விட்டு இஷிதாவின் மேல் கவனத்தை செலுத்தி சுற்றி நின்று சிறைபிடித்தனர்.
" ரெமோ படத்தில வர்ற கீர்த்தி சுரேஷ்னு நெனைப்போ??" என வினித் கேட்க, அவளோ எதுவும் கூறாமல் அனைவரையும் திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவளது கரத்தை தாரா பிடித்துக்கொண்டாள். அதைப்பார்த்த வினித்தோ "முட்டைகோஸ் மண்டைக்கு தக்காளிக்கு பாதுகாப்போ??" என நக்கல் அடித்தான்.


அதில் அனைவரும் சிரிக்க, தாராவ கோபம் வந்தவளாய் மூச்சு மேலும் கீழும் இழுத்து விட்டவள், "டேய் தடியங்காய்.." என்றாள்.
" என்னது டேய்யா.." என அவன் வாயை பிளந்தான்.
" ஆமாண்டா.. இதுக்கு மேல என் ப்ரெண்ட்டை ஏதாவது சொன்ன.. எங்க வீட்டுக்கு திஷ்டி பொம்மையா புடிச்சு வச்சிடுவேன்.. பாத்துக்கோ.." என மிரட்டினாள். வினித்தோ பொங்க, அருகில் இருந்த திலீப் வினிதா தோளில் தட்டி அமைதிப்படுத்தினான்.

" சரி இப்போ முட்டைகோஸ் மண்ட.. கீர்த்தி சுரேஷ் மாதிரி காலேஜ்க்கு வந்துருக்காங்க.. அதனால செல்பி புள்ள பாட்டுக்கு டான்ஸ் ஆட போறாங்க.." என கைதட்டியவாறே கூற, அவளோ, "டான்ஸா??" என வாயை பிளந்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள்.


" ஏன் சீனியர் சொன்னா டான்ஸ் பண்ண மாட்டியா??" என வினித் கூற, "இல்ல என்னால டான்ஸ் எல்லாம் ஆட முடியாது.. அதுவும் இத்தனை பேர் முன்னாடி.. சத்தியமா முடியாது.." என தலையை ஆட்டியபடி பேசிக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது கூட்டத்தை கலைத்துக் கொண்டு உள்ளே வந்தான். அவனது தோற்றமே கேங்ஸ்டராய் இருக்க வேண்டியவன் என்று யாராய் இருந்தாலும் கூறுவார்கள். வந்தவன் தொண்டையை செருமிக்கொண்டே, "என்ன இதெல்லாம்??" என கேட்டான்.
"இதுல எல்லாம் நீ தலையிடாதே.. கிளாசுக்கு போனமா.. நியாயம் சொன்னோமான்னு கிளம்பிட்டே இரு.. இது எங்க கேங் மேட்டர்.." என கூறினாள் சபிதா.


" நான் உன்கிட்ட பேசலை.. திலீப் இதெல்லாம் சரியே இல்லை.." என அவன் கூறிக்கொண்டிருக்க, இஷிதாவும் அவன் பக்கமாய் சென்று நின்று கொண்டு, "பாருங்க சீனியர் எல்லாருமே உங்கள மாதிரி நல்லவங்களாக இருக்க மாட்றாங்க.. என்னை இவங்க டான்ஸ் ஆட சொல்லி கிண்டல் பண்றாங்க.." என வினித்தை சுட்டிக்காட்டி நீள குற்றப்பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தாள்.


"மச்சான்.
முட்டைக்கோசு ஆள் கிடைச்சதும் ரொம்ப பண்ணுது.." என கூற தாராவும் இஷிதாவும் பார்த்து முறைத்தனர்.
"உங்க பேரு என்ன சீனியர்??" என பவ்வியமாக கேட்டாள் இஷிதா
" கிஷோர் டா கண்ணா.." என்றான். "தேங்க்யூ சீனியர்.." என கண்ணை சிமிட்டினாள். உடனே இஷிதா கண்ணை காட்ட, தாரா போனை எடுத்து
" நான் வர்ற வழியில தான் போஸ்டர் பாத்துட்டு வந்தேன்.. இங்க ராகிங் இல்ல.. ராகிங் பண்ணா கால் பண்ண சொல்லி காண்டாக்ட் நம்பர் கொடுத்திருக்காங்க.. நான் இப்ப கம்ப்ளைன்ட் பண்ண போறேன்.. உங்க மூணு பேரையும்.." என அவளது போனை எடுத்து தெரியாத ஒரு எண்ணை படபடவென அடித்துவிட்டு கால் செய்தாள்.
"ஹலோ சார்.. நீங்க யார் பேசுறது?? இன்ஸ்பெக்டர் ரா?? ஏசியா??" என கேட்டாள் தாரா.
அந்த முனையில் இருந்து "கோன் ஹே.." என பதில் வர, அந்த சத்தம் இஷிதாவை தாண்டி யார் காதிலும் விழவில்லை. தாராவின் திருவிளையாடலைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்தாள் இஷிதா. இன்ஸ்பெக்டர் என்றதும் வினித் பயத்துடன் திலீப்பை பார்க்க அவனோ, "நான் இருக்கிறேன்.." என கண்ணசைத்தான்.


" கரஸ்பாண்டன்ட் சாரா.. சார் உங்க காலேஜ்ல ராகிங் கிடையாதுன்னு சொல்லியிருந்தீங்க.. இங்க ஒரு மூணு பேர் திலீப் அண்ணா.. வினித் அண்ணா.. சபிதா அக்கா எங்களை ராகிங் பண்றாங்க சார்.." என சிறு பிள்ளையை போல கண்ணை சிமிட்டி பேசிக்கொண்டிருந்தாள். வந்த சிரிப்பை அடக்க இயலாமல் வாயில் விரல் வைத்து ஓரமாக நின்று கொண்டிருந்தாள் இஷிதா.
"ஓகே சார் எம்பிஏ டிபார்ட்மென்ட்.." என தாரா கூற, அந்தப் பக்கமாய் ஹிந்தியில் பினாத்தி கொண்டிருந்தவனிடம் இவள் தமிழிலேயே காய்ச்சி எடுத்துக்கொண்டிருந்தாள்.


இவளோ தமிழில் பேச, அவனது காதில் இருந்து ரத்தம் வராத குறையாய் போக காலை கட் செய்து இருந்தான். அது தெரிந்தும் "திலீப் அண்ணா தான் ரொம்ப பண்றாரு.. காலேஜ்க்கு வர்ற எல்லா சீனியரும் ஜூனியரும் அவருடைய ரூல்ஸ்க்கு கீழ வரணுமாம்.. அப்படி உங்க காலேஜ்ல ரூல்ஸ் ஏதாவது இருக்கிறதா??" என தாரா மும்முரமாய் வளவளத்து கொண்டிருந்தாள்.


திலீப்போ கோபத்தில் தாராவின் போனை அவள் அனுமதி இல்லாமல் அவளிடமிருந்து பிடுங்கி அருகில் இருந்த சுவரில் ஒரு தட்டு தட்டி, அதை கையோடு கொண்டு சென்றுவிட்டான்.
போன் பறி போனதை நம்ப முடியாமல் ஒரு நிமிடம் கண்ணை மெதுவாக மூடி திறந்தாள். அப்பொழுது சிரித்துக்கொண்டே அவளை தோளில் தட்டிய் இஷிதாவோ,
"பலே கில்லாடி பேப்ஸ் நீ.. சீனியர் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டிட்ட.." என பெருமையாய் கூறினாள்.

கிஷோரோ, "அவன் கொஞ்சம் ரூட் டைப்.. பார்த்து பேசுறது ரொம்ப நல்லது.." கூறிவிட்டு சென்றான். தாராவோ அந்த நிகழ்வில் இருந்து மந்திரித்து விட்ட கோழி போல வகுப்பில் அமர்ந்திருந்தாள். சீரியஸாய் ஆசிரியர் முன்னால் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க, இஷிதா தாராவிடம் "என்ன??" என சைகை செய்தாள். "போன் இல்லை.." என கையை காட்டினாள். வகுப்பு நேரத்தில் தாரா போனில் மூழ்கி விடுவது வழக்கம். அதன்பின் அவள் சாப்பிடும் சமயத்தில் வகுப்பில் நடந்தவற்றை முதல் வரிசை மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வாள். பின் இஷிதாவிற்கு சொல்லிக்கொடுப்பது வழக்கம். இஷிதா மொபைல் பைத்தியம்.. எளிதில் போனை தொடமாட்டாள்.. எடுத்தால் முழுவதுமாய் முழுவதுமாய் விடுவாள்.. இப்படி இருக்க தாராவோ ஃபோன் இல்லாமல் தவியாய் தவித்தாள். "இப்ப என்ன பண்ணனும்??" என தாராவின் புத்தகத்தில் எழுதிக் காட்ட,
"எனக்கு என் போன் வேணும்.." என சத்தமாக சிணுங்கி விட்டாள்.

அப்பொழுதுதான் சத்தம் கேட்டு திரும்பிய ஆசிரியர் இருவரையும் திட்டி தீர்த்து வகுப்பறையை விட்டு வெளியேற்றி விட்டார். வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்திருந்தனர். முகத்தை தொடங்கிவிட்டபடி அமர்ந்திருந்தான் தாரா," அது என் போன்.. அது தான் எல்லாமே அது என் உயிர்.. அது என் லவ்.. என் வாழ்க்கை.. எனக்கு எல்லாமே என் போன் தான்.. அதை போய் அந்த காட்டுப்பய ஓடைச்சு எடுத்துட்டு போய்ட்டான்.." என புலம்பிக் கொண்டிருக்க, இஷிதா அவளை திசை திருப்ப முயன்றாள்.
"பேப்ஸ்.. கேண்டீன்ல சூடா பஜ்ஜி போடுவாங்களாம் இந்த டைம்க்கு.. நாம ஏன் அதை ட்ரை பண்ணக்கூடாது??"என இஷி கேட்கவும், "உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கா?? கேன்டீன் லைப்ரரி பக்கம் இருக்குது.. லைப்ரரி எங்க இருக்குது?? இங்க இருந்து ஒரு கிலோ மீட்டராவது நடக்கணும்?? அவ்வளவு தூரம் ஒரு பஜ்ஜிக்காக நடக்கணுமா??" எனக் கூற, (ஹப்பாடா மைண்ட் சேன்ஞ் ஆய்ட்டு..) என நிம்மதி கொண்ட இஷிதாவோ "பஜ்ஜிக்காக எவ்வளவு தூரம் வேணாலும் நடக்கலாம்.. செல்லகுட்டி.." என அவளது கழுத்தில் கை போட்டு அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.

பேதையை அறிவானா??
 

Sundarji

Member
சூப்பர் நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள் 🌷🌺💐.

விஷயத்துக்கு வருவோம்... பஜ்ஜிக்காக ஒரு கிபி என்ன....
உலகையே சுற்றலாம்....
..
 
OP
Min mini

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சூப்பர் நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள் 🌷🌺💐.

விஷயத்துக்கு வருவோம்... பஜ்ஜிக்காக ஒரு கிபி என்ன....
உலகையே சுற்றலாம்....
..
hahahhaha.... athan sari.... thank uuuuu ji
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN