உன் கண்கள்
சொட்டும்
கண்ணீர் துளிகள்
என் நெஞ்சை
கணலாய்
சுட்டெரிக்குதடி .....
ப்ரீதாவின் திருமணம் முடிந்து ஊரிற்கு வந்த ஶ்ரீயின் குடும்பத்தினர் தத்தமது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்..
ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் ஈடுபட்டிருந்த படியால் ஶ்ரீ தினமும் வீடு வந்து சேர இரவு ஒன்பது மணி ஆகிவிடும்.... பாதுகாப்பு கருதி ஶ்ரீயை அவளது ஆபிசிலிருந்து அழைத்து வருவார் ராஜேஷ்குமார்....
அன்று ஒரு ரிசப்ஷன் இருந்தபடியால் ராஜேஷ்குமாரால் ஶ்ரீயை அழைத்துச்செல்ல வரமுடியாத சூழ்நிலை... ஆனால் அவளை தனியே வரச்சொல்ல விரும்பாதவர் மாற்றுவழி யோசிக்க ஶ்ரீயோ
“அப்பா ரிசப்ஷன் நடக்கின்ற ஹாலிற்கு பக்கத்தில் தான் என்னோட ஆபிசும் இருக்கு... நான் வர்க் முடிந்து என்னோட ஸ்கூட்டியில அங்க வந்துர்றேன்... நான் அங்கிருந்து கிளம்பும் போது உங்களுக்கு கால் பண்றேன்..”
“அதெல்லாம் சரிதான் ஶ்ரீமா... ஆனா நைட் டைம் அதான் பயமா இருக்கு...”
“அப்பா பயப்படாதீங்க நான் சேப்பா வந்து சேர்ந்திர்றேன்...”என்று சமாதானம் கூறியவள் அவர் இன்னும் பயப்படுவது உணர்ந்து
“அப்பா நான் ரவி இல்லாட்டி சுந்தரை ட்ராப் பண்ண சொல்லுறேன் போதுமா..???”
“சரிமா.. பத்திரமா வந்திரு.....”
“அப்பா கவலைப்படாதீங்க... நான் கவனமாக வந்து சேர்ந்திடுவேன்... சரியா??” என்று சொன்னவள் அன்று தனக்கு நடக்க இருக்கும் விபரீதத்தை அறிந்திருந்தால் மாற்றுவழி யோசித்திருப்பாளோ....??
ஶ்ரீ ஆபிஸ் முடிந்து கிளம்ப மணி ஒன்பதரை ஆகிவிட்டது... ரவியும் சுந்தருக்கும் ஹெட் ஆபிசிற்கு வரச்சொல்லி அழைப்பு வந்திருந்ததால் இருவரும் அங்கு செல்ல வேண்டிய நிலை..... அவர்களின் நிலை அறிந்த ஶ்ரீ அவர்களிடம் இன்று தந்தை வந்து அழைத்து செல்ல முடியாத விடயத்தை கூறவில்லை... ஆகவே அன்று அவள் தனியே செல்ல வேண்டிய நிலை... ஹேமா மற்றும் சஞ்சு வேறு ப்ராஜக்ட் க்ரூப் என்பதால் அவர்கள் வழமையான நேரத்திற்கே கிளம்பிவிட்டனர்...
வேலை முடிந்து ரிசப்ஷனுக்கு ஏற்ற மாதிரி உடை மாற்றி வந்தவள் டாக்சி புக் செய்துவிட்டு அதற்காக காத்திருக்க அது வந்த பாடில்லை... அந்த டாக்சி டிரைவரை அழைக்க அவரோ வேறு ஏதோவொரு தெரு பெயரினை கூற ஶ்ரீயோ தன் ஆபிஸ் அருகில் இருந்த பஸ் ஸ்டாண்டினை அடையாளமாக கூறியவள் அங்கு வருமாறு டிரைவரிடம் கூறினாள்...
ஆபிசிலிருந்து கிளம்பி பேருந்து தரிப்பிடத்திற்கு சென்றவள் அங்கு டாக்சிக்காக காத்திருக்க அங்கு நின்ற இருவர் அவளிடம் தவறான முறையில் நெருங்க முயல அவளோ அங்கு யாரேனும் அவளுக்கு துணை வரமாட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்க சற்றுத்தள்ளி மூன்று பெண்கள் நின்றிருந்தனர்... டாக்சி வரும்வரை இங்கு நிற்பதை விட அவர்களோடு நிற்பது தான் பாதுகாப்பு என்று எண்ணியவள் அவர்களோடு சென்று நின்றுகொண்டாள்... ஶ்ரீ வந்து நின்றதும் அவளை ஒரு மாதிரி பார்த்த அப்பெண்கள் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டனர்..
இரண்டு நிமிடங்கள் கடந்திருக்க அங்கு ஒரு பொலிஸ் ஜூப் வந்து நின்றது... அதை பார்த்ததும் அந்த பெண்கள் கூட்டம் கலைய முற்பட ஶ்ரீயிற்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை...ஜூப்பில் இருந்து இறங்கிய இரு பெண் அதிகாரிகள் தங்கள் லத்திகளை எடுத்து அப்பெண்களை விரட்ட அவர்கள் ஜூப்பில் ஏறி அமர்ந்து கொண்டனர்... இதனை பார்த்தவாறு இருந்த ஶ்ரீயிற்கு அப்போது தான் தன் தவறு புரிந்தது...அங்கிருந்து நகர முயன்றவளை அப்பெண் அதிகாரி ஒருவர் நிற்கச் சொல்லிவிட்டு அவளிடம் வந்தவர்
“எங்கமா ஓடுற?? போய் ஜூப்பில ஏறு..”
“மேடம் நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல மேடம்...”
“இந்த தொழில் செய்யிற எல்லாரும் இதைத்தான் சொல்லுறாங்க... அதுக்காக நீ சொல்லுறது உண்மையாகிருமா??”
“மேடம் நான் உண்மையை தான் சொல்லுறேன்... என்னை நம்புங்க..”
“ஏய் என்ன எங்களை பார்த்தா உனக்கு பைத்தியக்காரி மாதிரி தெரியிதா??? உன் உடையை பார்த்தாலே நீ யாருனு என்ன செய்யிறனு தெரிஞ்சிக்கலாம்..” என்று கூறியதும் அப்போது தான் தன் உடையலங்காரம் அவளுக்கு நியாபகம் வந்தது... ரிசப்ஷனுக்கு செல்ல வேண்டுமென்பதால் அவள் சற்று அலங்காரமான சேலையொன்றினை உடுத்தி அதற்கேற்றாற் போல் சற்று ஒப்பனையும் செய்திருந்தாள்... அவளது வழமையான அலங்காரம் அன்று அவளை மாட்டிவிட்டு சதி செய்தது... இருந்தும் தன்னிலை விளக்கும் பொருட்டு
“இல்லை மேடம் பக்கத்துல ரிசப்ஷன் வீடு அதை அட்டன்ட் பண்ண போறேன் மேடம்... டாக்சிக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் மேடம்... டாக்சி வந்துட்டு இருக்கு...”
“சரி நீ சொல்லுறது உண்மையினே வச்சிக்கிட்டாலும் நீ ஏன் இந்த இடத்துல நிக்கிற?? அதோ அங்க தான் பஸ் ஸ்டாண்டு இருக்கே...அங்கே வெயிட் பண்ணலாமே..??”
“அங்க தான் மேடம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... அங்க நின்ற ரெண்டு பேர் மிஸ் பிஹேவ் பண்ண ட்ரை பண்ணாங்க அதான் சேப்டிக்காக இவங்களோட வந்து நின்னுக்கிட்டேன்... “
“யாரு மா...நீ சொல்ற மாதிரி அந்த பஸ் ஸ்டாண்டில் யாரும் இல்லையே...”என்று பெண் அதிகாரி கூறியதும் ஶ்ரீ அங்கு பார்க்க அங்கு அவர்கள் இல்லை... போலிஸ் வண்டியை கண்டதுமே அவர்கள் இருவருமே தலை தெறிக்க ஓடிவிட்டனர்..
ஶ்ரீயிற்கு எப்படி தன்னிலையினை விளக்குவது என்று புரியவில்லை... அவள் என்ன செய்வது என்று புரியாமல் இருக்க அந்த பெண் அதிகாரியோ அவளை ஜூப்பில் ஏறச்சொன்னார்.... ஶ்ரீயோ அதை மறுத்தவாறு இருக்க அந்த பெண் அதிகாரி ஶ்ரீயை ஓங்கி அறைந்து விட்டார்...
“பண்ணுறது கேவலமான ஒரு தொழில்... அதை நாங்க கண்டுபிடிச்சி கைது பண்ணா பொய் சொல்லுறியா?? ஏறி ஜூப்பில..... பொய்யா சொல்லுற..?? இரு ஸ்டேஷன்ல வச்சி உனக்கு லாடம் கட்டுறேன்...” என்று உறுமியவர் ஶ்ரீயை இழுத்து சென்று ஜூப்பில் தள்ளினார்...
அவரது வார்த்தைகளில் ஸ்தம்பித்த ஶ்ரீயிற்கு அதுவரையில் அவளை ஆக்கிரமிக்காத கண்ணீர் எனும் ஆயுதம் அவளை பலவீனப்படுத்தியது... இந்த திடீர் அதிர்ச்சி அவளது மூளையை இயங்க விடாமல் தடுக்க எவ்வாறு இந்த சூழலில் இருந்து வெளிவருவது என்று தெரியாமல் தவித்தாள்... அவளது தவிப்பை கலைக்கும் வகையில் அவளது மொபைல் ஒலிக்க அதை அட்டன்ட் செய்ய முனைந்தவளை தடுத்த அந்த பெண் அதிகாரி அவளது கையில் இருந்து அலைபேசியை கைபற்றிவர்
“என்ன கஷ்டமர் கூப்பிடுறானா??? உன்னை அங்க தேடிட்டு இருப்பான் போல... உன்னை நாங்க அள்ளிட்டு வந்த விஷயம் அவனுக்கு தெரியாதில்ல??” என்றவர் அவளது போனை செயலிழக்கச்செய்து விட்டு அதனை தன் வசம் வைத்துக்கொண்டார்..
ஶ்ரீயிற்கோ அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஈயத்தை காய்த்து ஊற்றியது போல் இருந்தது... அந்த நொடி எதற்காக வந்தது என்று நொந்து போனாள்...அவளது மனதைரியம் அந்த நொடியில் ஆட்டம் கண்டது...யாராய் இருந்தாலும் தன் பேச்சாலேயே அவர்களை தனக்கு அடிப்பணியச் செய்பவளுக்கு இன்று வார்த்தைகள் வர மறுத்துவிட்டது... இந்த பொய் குற்றச்சாட்டு தன் நடத்தையை கேள்விக்குறியாக்கியதாக உணர்ந்தாள் ஶ்ரீ.. மூளையோ பேசச்சொல்லி அவளை ஊக்குவிக்க மனமோ அந்த பெண் அதிகாரியின் வார்த்தைகளை எண்ணி கசந்து நின்றது...
ஜூப் ஸ்டேஷனை அடைந்ததும் அந்த பெண்கள் கூட்டத்துடன் ஶ்ரீயும் சிறையில் அடைக்கப்பட்டாள்... அந்த பெண்கள் கூட்டம் இது வழமையே என்ற ரீதியில் சிறையினுள் சென்று அமர்ந்து கதையடிக்கத்தொடங்க ஶ்ரீயோ அந்த பெண் அதிகாரியிடம் கெஞ்சி தன்னிலையை விளக்க முயன்றுக்கொண்டிருந்தாள்... ஆனால் அந்த பெண் அதிகாரியோ அவளை கண்டு கொள்ளாது தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்...கெஞ்சிக் கதறி ஓய்ந்தவள் கீழே அமர்ந்து தன் கால்களை கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள்...
அவளது அழுகையை தேற்ற அப்பெண்கள் முற்பட அவளோ அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை...சில நிமிடங்கள் கடந்திருக்கையில் சிறைக்கதவு திறக்கப்பட அதில் தன் தலையை உயர்த்தியவள் அவள் எதிரே அந்த பெண் அதிகாரி நின்பதை கண்டாள்.. அவர் ஶ்ரீயை எழுந்து வரச்சொல்ல ஒரு வித பயத்துடன் வெளியே வர அங்கு இன்ஸ்பெக்டருடன் பேசிக்கொண்டிருந்தவனை கண்டதும் அவ்வளவு நேரம் அவளை ஆட்டிப்படைத்த பயம் விலகி ஒருவித பாதுகாப்புணர்வு அவளை சூழ்ந்து கொண்டது....
“சார்...” என்றவாறு இன்ஸ்பெக்டருடன் பேசிக்கொண்டிருந்த ரிஷியிடம் சென்றாள் ஶ்ரீ...
அவளைக் கண்டதும் தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்
“ஶ்ரீ ஆர் யூ ஓகே???” என்ற அவனது கேள்வியில் அவளுக்கு கண்ணீர் ஊற்றெடுத்தது.... அவளது கண்ணீரை காணப்பொறுக்காதவன் அவளருகில் செல்ல அவனை அணைத்துக்கொண்டு அழத்தொடங்கினாள் ஶ்ரீ....
அவளது தலையை வருடிக்கொடுத்தவாறு
“ஶ்ரீ... இங்க பாரு... முதல்ல உன்னோட அழுகையை நிறுத்து... அதான் நான் வந்துட்டேனே...சோ நோ வாரிஸ்... சில் ஶ்ரீ....” என்றுவிட்டு அந்த இன்ஸ்பெக்டரிடம் திரும்பியவன்
“தாங்ஸ் அங்கிள்...”
“நான் தான் ரிஷி உனக்கு தாங்ஸ் சொல்லனும்... சரியான நேரத்துக்கு நீ வந்தாய்.... இல்லைனா அதுங்களோட சேர்த்து இந்த பொண்ணு மேலேயும் கேஸ் போட்டுருப்போம்... அப்புறம் இந்த பொண்ணோட வாழ்க்கையே கேள்விக்குறியாகிருக்கும்... இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கோ...லேட் ஆகிருச்சினா ஆபிசிலே போய் பிக்கப் பண்ணு.... இப்படி ரோட்டுல வந்து நிற்கச்சொல்லாத.... நாடு ரொம்ப கெட்டுக்கிடக்கு.... இது மட்டும் இல்ல இன்னும் வேற மாதிரியான ஆபத்துக்களும் ஏற்படலாம்... அதுனால பார்த்து நடந்துக்கோங்க...அந்த பொண்ணை கூட்டுட்டு போ.. ரொம்ப பயந்திருக்கா....”
“ஓகே.. அங்கிள்... நான் கிளம்புறேன்... கிஷோரை கேட்டதா சொல்லுங்க...” என்றுவிட்டு பொலிஸ் நிலையத்திலிருந்து ஶ்ரீயுடன் வெளியே வந்தான் ரிஷி....
அவளை தன்னுடைய காரில் அமரச் செய்தவன் மறுபுறம் சென்று அமர்ந்து கொண்டான்...
காரினுள் அமர்ந்தவன் பின்புறம் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து ஶ்ரீயிடம் நீட்ட அவளது பார்வையோ எதிரே இருந்த கண்ணாடியை வெறித்தவாறு இருந்தது... அவளை அழைத்தவன் அவளிடம் பிரதிபலிப்பு ஏதும் இல்லாததை உணர்ந்து அவளை உலுக்கினான்... ரிஷியின் உலுக்கலில் நினைவுலகுக்கு வந்தவள் ரிஷியை பார்த்தவாறு இருக்க
“ஶ்ரீ இந்தா தண்ணி குடி.. நீ ரொம்ப டிஸ்டப்டா இருக்க.... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு..” என்று தண்ணீர் போத்தலை அவளது கையில் திணிக்க ஶ்ரீயும் மறுக்காது வாங்கி பருகத்தொடங்கினாள்.....ஒரு போத்தல் நீரையும் மடமடவென்று குடித்து முடித்தவளது அதிர்ச்சி சற்று மட்டுப் பட்டிருக்க அதன் விளைவாக கண்ணீர் பெருக்கெடுத்தது...
அவளது கண்ணீரில் பதறிய ரிஷி
“ஶ்ரீமா ஏன் அழுகிறாய்??? அதான் ஏதும் பிராப்ளம் ஆகாமா விஷயத்தை சுமூகமாக ஹான்டல் பண்ணிட்டோமே...அப்புறம் எதுக்கு அழுகை....”
“இல்லை சார் நீங்க மட்டும் வரலைனா என்னோட நிலைமை என்ன?? இன்னேரம் என்மேல பிராஸ்டிடூசன் கேஸ்ல ஜெயில்ல இருந்திருப்பேன்...” என்றுவிட்டு அழ ரிஷிக்கு ஶ்ரீயின் நிலைமை புரிந்தது... ஆயினும் அவளை இந்த அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுக்க வேண்டி
“உன்னை எல்லாரும் லூசுனு சொல்லுறதுல தப்பே இல்லைனு இப்போ புரியிது...” என்று ரிஷி கூற அவனது முயற்சி சரியாக வேலை செய்தது...
“யாரைப் பார்த்து லூசுனு சொல்லுறீங்க... என்னை பார்த்தா லூசு மாதிரியா இருக்கு...??? இது மட்டும் என் டீம் லீடருக்கு தெரியனும் அப்போ இருக்கு உங்களுக்கு...”
“எதுக்கு இவ்வளவு கோபப்படுற??? நான் சொன்னதுல என்ன தப்பு??? கொஞ்சமாவது யோசிச்சு பேசுறியா??? உன்னை அரஸ்ட் பண்ணா உன்னை அப்படியே தூக்கி ஜெயிலில் போட்டுருவாங்களா??? எவிடன்ஸ் இல்லாம அப்படி உன்னை அப்படி அர்ஸ்ட் பண்ண முடியுமா?? உன்னோட ஆபிஸ் ஐ.டி காடே நீ தப்பான பொண்ணில்லைனு காட்டு கொடுத்திடும்... அந்த காலம் மாதிரி இல்லை ஶ்ரீ இப்போல்லாம்... எதுக்கும் வெலிட் ரீசன் இல்லாத பட்சத்தில் யாரையும் அரஸ்ட் பண்ண முடியாது... நீ அந்த இடத்துல நின்றாய் என்கிற காரணத்துக்காக உன்னை அழைச்சிட்டு வந்திருக்காலாம்.... ஆனா விசாரிக்காம கேஸ் எதுவும் போட முடியாது... இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்.... நீ இப்போ என்கூட வாதாடுன மாதிரி போலிஷ் ஸ்டேஷனிலும் உன்னோட ஐடென்டிடியை ப்ரூவ் பண்ணி இருந்தனா அவங்க உன்னோட பேரண்ட்சை வரவைத்து உன்னை வீட்டுக்கு அனுப்பியிருப்பாங்க.... நீ என்னடானா அழுது ஆர்பாட்டம் பண்ணிட்டு இருக்க.... நான் உன்னை ஜான்சி ராணி ரேஞ்சுக்கு நினைச்சிட்டு இருந்தா நீ என்னமோ அழுகுனு பாப்பாவா இருக்க... சோ பேட்..” என்று அவளை உசிப்பிவிட்டான் ரிஷி... அவனது பேச்சில் தைரியம் வர பெற்றவள் வடிந்திருந்த கண்ணீரை துடைத்துவிட்டு
“ நான் எப்பவும் ஜான்சி ராணி தான்... இன்னைக்கு ஏதோ பதட்டத்துல அப்படி நடந்துக்கிட்டேன்... இனிமே இப்படி தடுமாற மாட்டேன்.... அந்த லேடி போலிஸ் எனக்கு லாடம் கட்டுறேனு சொன்னா... ஆனா அவங்களுக்கு தெரியாது இந்த ஶ்ரீ அவ வாயால வாய்க்காலே கட்டுவானு... என்னைக்காவது கையில் சிக்கும் போது இருக்கு அந்த லேடிக்கு... அது சரி நீங்க எப்படி சார் ஸ்டேஷனுக்கு வந்தீங்க....?? உங்களுக்கு எப்படி நான் இங்க இருக்கது தெரியும்??”
“ நீ வெயிட் பண்ணிட்டு இருந்த வழியா தான் வந்தேன்... பொலிஸ் ஜூப்பில் யாரையோ ஏத்திகிட்டு இருந்தாங்க... அப்போ தான் சடனா உன்னை அவங்க இழுத்துட்டு வந்து ஏற்றுவதை பார்த்தேன்... ஆனா நான் இறங்கி வர்றதுக்குள்ள ஜீப் கிளம்பிவிட்டது.... நானும் நேரடியாக ஸ்டேஷனுக்கே வந்துட்டேன்... அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் என்னோட நண்பன் கிஷோராட அப்பா... அவரிடம் இப்படி நீ எனக்காக வெயிட் பண்ணியதாகவும் நான் வருவதற்குள் உன்னை தவறுதலாக அழைத்துவந்துட்டாங்கனும் சொன்னேன்...அவருக்கு என்னை பற்றி நல்லா தெரியும் அப்படீங்கிறதால எந்த எவிடன்சும் கேட்காம உன்னை ரிலீவ் பண்ணிட்டாரு... அது சரி.. நீ ஏன் அங்க நின்னுட்டு இருந்த??? அதுவும் லேட் நைட்டுல??? தைரியம் இருக்கனும் தான் ஆனா அதுக்காத சேப்டியை பார்த்துக்கிறதில்லையா??” என்று ரிஷி கடிந்து கொள்ள ஶ்ரீ நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்...
“சரி விடு ஶ்ரீ... நடந்தது நடந்துவிட்டது... இனி அதை பற்றி ஏதும் யோசிக்காத... இனிமேல் இந்த மாதிரி டைமில் ரொம்ப கவனமாக இருந்துக்கோ... இன்னைக்கு என்னமோ
நான் அந்த வழியில உன்னை பார்த்ததால எந்த ப்ராப்ளமும் வராம பார்த்துக்கிட்டேன்... ஆனால் நீ தான் கவனமாக இருக்கனும்... சரி உன் வீட்டு அட்ரெஸ் சொல்லு நான் உன்னை ட்ராப் பண்ணுறேன்...”
“இருங்க சார் அப்பாவுக்கு கால் பண்ணி பார்க்கிறேன்... ஐயோ சார் போனை அந்த லேடி பொலிஸ் பிடிங்கிட்டாங்க... இப்போ என்ன செய்றது...?” என்று அவள் புலம்ப ரிஷி பின்னாலிருந்து அவளது கைப்பையை எடுத்து கொடுத்தான்.... அதை வாங்கி திறந்து பார்த்தவள் அதில் அவளது மொபைல் இருக்க அதில் தன் தந்தைக்கு அழைத்து தான் வீட்டிற்கு செல்வதாகவும் ரிசப்ஷனுக்கு வரவில்லை என்றும் கூறி அழைப்பை துண்டித்தாள்...அவளுக்கு அப்போது ஓய்வே அவளது அதிர்ச்சிக்கு தேவையான சிறந்த மருந்தாக தோன்றியது...
ரிஷியிடம் வீட்டு விலாசத்தை கூறியவள் தன்னையும் அறியாமல் துயில் கொள்ளத் தொடங்கிவிட்டாள்...
அவள் உறங்கியது பின் சீட்டிலிருந்த தலையணையை எடுத்து அவளது தலைக்கு கொடுத்தவன் ஏசியை சரி செய்தான்.... அவளது சுகமான நித்திரை அவனுள் ஒரு இதத்தை பரப்ப அதனை ரசித்தவாறே காரை ஓட்டிச்சென்றான்...
அவளது வீடு வந்தும் அவளை எழுப்ப மனமில்லாத அவளை பார்த்தவாறு இருக்க இது சில பல நிமிடங்கள் தொடர அவளை எழுப்பும் வழி தெரியாது மெதுவாக ரேடியோவை ஆன் செய்தான்... அது அப்போது
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
காதல் என்றால் கவலையா
மண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீ யானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி
நீயே வாடினாயோ.....
என்று பாட அதில் துயில் கலைந்தவள் வீடு வந்ததை உணர்ந்து ரிஷியிற்கு நன்றியுரைத்துவிட்டு காரில் இருந்து இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள்...
அவள் சென்றது காரை எடுத்தவனை மீண்டும் தாலாட்டியது அந்த பாடல்...
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்