தனக்காக வானத்தையே வில்லாய் வளைக்க பாட்டி இருக்க... சந்திர மண்டலத்தையே விலை பேச தந்தை இருக்க... பாசத்தைப் பொழிய தாய் இருக்க... செல்லம் கொஞ்சி சலுகையுடன் சின்னச் சண்டைகள் போட தம்பி தங்கை இருக்க... தோள் கொடுப்பான் தோழன் என்ற வழியில் தோள் கொடுக்கத் தோழன் இருக்க... இதையெல்லாம் அறிய முடியாத நிலையில் அறிந்தும் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் படுக்கையில் இருந்தான் ருத்ரதீரன்.
மறுமுறை அவன் கண் விழிக்கும் போது பெரிய டாக்டரே அவன் பக்கத்தில் இருந்தார். “தீரன், Are you ok now?” என்று கேட்டவர், “என்னைத் தெரியுதா? I am டாக்டர் வில்சன்” என்று அடுத்த கேள்வியுடன் அவர் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள
எதையும் புரிந்து கொள்ள முடியால் யாரையும் அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாமல்... ஒரு வித வெறுமையில் சலிப்புடன் மறுப்பாகத் தலை அசைத்தவன், “நீங்க டாக்டர் என்றதே நீங்க சொல்லி தான் எனக்குத் தெரியுது. எனக்கு என்னையே யாருன்னு தெரியலை. என் பெயர்… நான் எப்படி இருப்பேன்... இப்படி எதுவுமே தெரியலை. சோ இனி திரும்பத் திரும்ப இதே கேள்வியை என்கிட்ட கேட்காதீங்க டாக்டர்” ஒரு வித அயர்ச்சியுடன் என்றாலும் அழுத்தத்துடனே ஒலித்தது ருத்ரதீரனின் குரல்.
“ஓகே... ஓகே மை பாய்... உனக்கு ஒன்றும் இல்ல. just relax… feel free” என்று தட்டிக் கொடுத்தவர் தானே அவனுக்கு இன்ஜெக்ஷனை போட்டு விட, மறுபடியும் துயிலில் ஆழ்ந்தான் அவன்.
அவன் பாட்டி, அப்பா, அம்மாவைத் தனியே அழைத்தவர், “அவருக்கு நினைவலைகள் அறுந்திருக்கு. இது மருத்துவத் துறையில் நடப்பது தான். என்ன… ஒரு சில பகுதிகள் மட்டும் நோயாளிகளுக்கு மறக்கும். இவருக்கு அனைத்தும் மறந்து போய் இருக்கு. ஸ்கேனிலிருந்து எக்ஸ்ரே வரை எல்லாம் உங்க பேரனுக்கு நார்மலா இருக்கு. சோ, சீக்கிரம் ரிகவராக சான்சஸ் இருக்கு. அதுவரைக்கும் பொறுமையா அதே சமயத்தில் கொஞ்சம் கவனமா பார்த்துக்கங்க. அவரா ஏதாவது கேட்கும் வரை நீங்களா அவருக்கு நினைவுபடுத்த வேண்டாம்” ஒரு டாக்டர் என்ற முறையில் அவர் ருத்ரதீரனின் நிலை அனைத்தையும் சொல்லி முடிக்க... கேட்டதில் தாய் துக்கத்திலும், தந்தை யோசனையிலும், பாட்டி ஏமாற்றத்திலும் அங்கிருந்து வெளியேறினார்கள்.
மருத்துவத்தையும் மீறி பேரனிடம் தானாக மாற்றம் வர வேண்டும் என்று ஆன பிறகு தேவியம்மை அங்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி உருட்டினால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது? அதை புரிந்து தான் இருந்தார் அவர் அதன் பிறகு எப்போதும் ருத்ரதீரன் மயக்கத்தில் தான் இருந்தான்.
ஒரு முறை அவன் விழித்திருக்கும் போது அவனை பரிசோதிக்க வந்திருந்த டாக்டர், “how do you feel now தீரன்?” என்று கேட்க
கண்களைச் சுருக்கியவனோ, “என் முழு பெயரும் தீரன் தானா?” என்று அவரிடம் எதிர் கேள்வி கேட்க,
அதில் டாக்டர் மெலிதாய் புன்னகைத்தவர், “உங்க முழு பெயர் ருத்ரதீரன்” என்று இயல்பாய் சொல்ல... அதை ஏற்றுக் கொண்டவனோ கண்கள் மூடி தன் பெயரை ஒரு முறை மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான் அவன்.
அவன் கேள்வியில் தாய் அழ… பாட்டியும் அவன் தந்தையும் அவனைப் பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கூடவே, “உங்களுக்கு ஏதாவது தெரியணும்னா உங்க பேரன்ட்ஸ் கிட்ட கேளுங்க சொல்லுவாங்க” என்றார் டாக்டர்.
கேட்ட அவனுக்கு தான் மனதிற்குள் சோர்வு எழுந்தது. ‘நான் கண் விழித்தாலே அழுகிற அம்மா... எதையும் காட்டிக் கொள்ளாமல் தூர இருந்தே நலம் விசாரிக்கும் தந்தை... எந்த நேரமும் ஒரு வித எதிர்பார்ப்போடும் ஆராய்ச்சியோடும் பார்க்கும் பாட்டி... இப்படி எப்போதும் என்னைச் சுற்றி இருந்தால், நான் யாரை என்ன கேட்க?’ மனதிற்குள் சொல்லிக் கொண்டவனோ அயர்ச்சியுடன் கண்களை மூடி படுக்கையில் சாய்ந்து கொண்டான் அவன்.
இப்போதெல்லாம் அவன் விழித்திருக்கும் நேரம் எல்லாம் ஒரு வித தேடல்… ஒரு வித பரிதவிப்புடனே இருந்தான். அதெல்லாம் அவனைப் பற்றிய ஆராய்ச்சியில் விளைந்தவைகள். டாக்டர் சொன்ன அவன் பெயர் கூட உண்மையா என்ற ஆராய்ச்சியில் இறங்கியவனுக்கு, கழிவிரக்கத்தில் அழுகைக்குப் பதில் அவன் மீதே கோபமும் வெறுப்பும் வளர்ந்தது.
இது தெரியாமல் பேரனை இப்படியே விட்டால் சரி வராது என்று தப்புக் கணக்கு போட்ட தேவியம்மை, அவனுடைய நினைவை மீட்டு எடுப்பதாக நினைத்து அவர் ஒன்றை செய்யப் போக... அதுவே அவனை வேறு ஒரு திசைக்கு அழைத்துச் சென்றது.
ஒரு நாள் துயிலில் இருக்கும் பேரன் எப்போது கண் விழிப்பான் என்ற எதிர்பார்ப்பில், ஒரு வித பதட்டத்துடன் அவனைப் பார்ப்பதும் அவன் அறை வாசலைப் பார்ப்பதுமாக அன்று முழுக்க பேரனின் அறையிலேயே இருந்தார் அவர். தேவியமைக்கு பதட்டமா? அப்படித் தானே கேட்குறீங்க? உண்மையிலேயே பதட்டம் தான்... அரசியலில் இப்போது முக்கிய பதவியில் இருக்கும் ஒரு பிரமுகர் இன்று ருத்ரதீரனைப் பார்த்து நலம் விசாரிக்க வருகிறார். ‘அவரிடம் பேரன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமே!’ என்ற பயம் தான் தேவியம்மைக்கு.
ஏனென்றால் பேரனுக்கு இப்போது வந்திருக்கும் அம்னீஷியா நோயை குடும்பத்தார் தவிர வெளியே யாரிடமும் மூச்சு விடவில்லை இவர்கள். இப்போது வருபவரை முன்பே ருத்ரதீரன் சந்தித்துப் பேசி இருக்கிறான். அதன் வழமைப்படி வருபவர் பேச, பேரன் ஏதாவது மாற்றி சொல்லி விட்டால்... ஜென்மத்துக்கும் அரசியல் வாழ்வுக்கு முழுக்குப் போட வேண்டி இருக்குமே... அதனால் பேரனைத் தயார் படுத்த காத்துக கொண்டிருந்தார் தேவியம்மை.
அவர் எதிர்ப்பார்த்த படி சிறிது நேரத்திற்கு எல்லாம் ருத்ரதீரன் கண் விழிக்க... அவன் கட்டில் அருகே ஓடியவர்.. அவன் உடல்நலனை விசாரிக்காமல்… எந்த முகாந்திரமும் இல்லாமல், “நைனா... இப்போ ஒருத்தர் உன்னை பார்க்க வருவார். அவரை உனக்கு முன்பே தெரியும். அதனால் அவரை தெரிந்த மாதிரி காட்டிக்கோ. சும்மா தஸ்சு.. புஸ்னு.. இங்கிலீஷ் பேசு... உங்க அப்பா பேரு கோட்டை ராஜன்... உன் அம்மா பேரு கயல்விழி... உன் பேரு ருத்ரதீரன்... எங்க ஒரு முறை சொல்லு பார்ப்போம்” பேரனின் மனநிலை தெரியாமல் இவர் அவனுக்கு வகுப்பு எடுக்க
ஏற்கனவே குழப்பத்திலும் தவிப்பிலும் இருந்தவனுக்கு... பாட்டியின் இப்படிப் பட்ட வார்த்தைகள் இன்னும் அவனுக்கு எரியும் நெருப்பில் நெய் விட்டதாய் மாற, “ஓ... நோ...” என்று அந்த கட்டிடமே அதிரும்படி கூச்சலிட்டவன், அவனுக்கு டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க.... அதையெல்லாம் பிய்த்து எறிந்து அந்த இடத்தையே ரணகளம் ஆக்க…
அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த கயல்விழியும், கோட்டை ராஜனும் மகனைப் பார்த்து பதறி, “என்ன ஆச்சு... என்ன நடந்தது” என்று தன் மாமியாரிடம் அவர் விசாரிக்க
“இவர் தான் என்னைப் பார்க்க வந்தவரா? இவர் கிட்ட தான் நீங்க சொன்ன மாதிரி பேசி நடிக்கணுமா?” ருத்ரதீரன் உச்சஸ்தாயில் கேட்க
இன்னும் அதிர்ந்தே போனார் தேவியம்மை. “நைனா, இவன் உன் அப்பன் டா” அவர் எடுத்துச் சொல்ல...
“யாரு அப்பா... யாரு அம்மா... அப்படி ஒரு உறவு எல்லாம் எனக்கு இல்லவே இல்ல. நான் ஒரு அநாதை. என்னையே யாருன்னு தெரியாம இருக்க... என்னுடைய நிலையைப் பயன்படுத்தி ஏமாற்ற பார்க்கறீங்களா?” உண்மையிலேயே இது தான் அவனின் தற்போதைய நிலை. அவனுடைய நீண்ட நாள் சந்தேகம், இதோ இப்படியான கேள்வியை எல்லாம் தன் மனதில் இருந்ததை இன்று பாட்டியின் கைங்கர்யத்தால் போட்டுடைத்தான் அவன்.
அவன் இவர்கள் தான் தாய் தந்தையர் என்பதை… முன்பே அவர்கள் சொல்லிய போதே ஏற்று கொண்டான்… ஆனால் இன்று அவன் பாட்டி அவனுக்கு பாடம் எடுக்கவும்… அதில் தன்னிலை மறந்து… இப்படி எல்லாம் வேண்டும் என்றே தெரியாத மாதிரி கேள்விகள் கேட்டான் அவன்..
அவனால் எழுந்து நட மாட முடியாது. அப்படி மட்டும் எழுந்து நடமாட முடிந்தால்... எப்போதோ இந்த மருத்துவமனையை விட்டு ஓடியிருப்பான் இவர்கள் யார் கண்ணிலும் படாமல். பின் அவனை அடக்கி ஊசி போட்ட பிறகு தான் அமைதியானான் ருத்ரதீரன்.
ருத்ரதீரன் கொட்டிய வார்த்தையில் பாட்டியும் அப்பாவும் அதிர்ந்து போக... தாய் உள்ளம் தாங்குமா? அவன் பக்கத்திலே அமர்ந்து அவன் கன்னம் தடவி... தலை கோதி... என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் கயல்விழி.
தன் தாய் செய்த தவறையே இவர் வேறு மாதிரி செய்ய, மறுபடியும் ருத்ரனாக மாறினான் நம் நாயகன்.
மகன் கண்விழிக்கக் காத்திருந்தவராக, “தீரா, என்ன வார்த்தை டா சொல்லிட்ட... உன் அம்மா நான் உயிரோட இருக்கும் போது நீ எப்படி டா அநாதை ஆவ?” வழக்கம் போல் கண்ணீர் விட்ட படி அவர் மகனுக்கு உணவை ஊட்ட கை நீட்ட,
அவர் அழாமல் அந்த உணவைக் கொடுத்திருந்தால் கூட ருத்ரதீரன் உணவை வாங்கி இருப்பானோ என்னமோ? பாட்டி தன்னை அதிகாரத்தில் அடக்க, இவர் தன்னை அவர் பாசத்தால் அடக்குவதாக அவனுக்குப் பட... அடுத்த நொடி எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு கூச்சலுடன் அவர் கையைத் தட்டி விட்டிருந்தான் ருத்ரதீரன்.
இப்படி மகன் செய்தது இல்லை என்பதால் மிகவும் அதிர்ந்து துடிதுடித்துப் போனார் கயல்விழி. ஆனால் இது எதுவுமே ருத்ரதீரனை பாதிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவனுடைய தேடலும், தவிப்பும், கூச்சலும் தான் நாளுக்கு நாள் அதிகமானது.
அதனால் அவனுக்கு மனவலியும் உடல் வலியும் அதிகமாக... அதைப் போக்க தினமும் ஊசி போடுமாறு அவன் டாக்டரிடம் கேட்கும் படி ஆனது.