மண்ணில் தோன்றிய வைரம் 5

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரண்டு நாட்கள் கழித்து அலுவலகம் வந்த அஸ்வின் சாருவை பார்ப்பதற்காக அவளது அறை நோக்கி சென்றான். கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற அஸ்வினிற்கு சிறு அதிர்ச்சி. அவனது அதிர்ச்சிக்கு காரணம் அங்கு அமர்ந்திருந்தது அவனது கல்லூரி தோழன் ராக்கேஷ் மற்றும் அவனது தங்கை நிஷா. அஸ்வினை கண்டதும் ராக்கேஷ்

"டேய் அஸ்வின்...எப்படிடா இருக்க?? உன்ன பார்த்து எத்தனை காலமாச்சு?? ஆமா நீ எப்போ அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த??"என்று நலம் விசாரிக்க..

"நான் நல்லா இருக்கேன்டா. நான் வந்து ஆறுமாசமாகி விட்டது.. நீ எப்படி இங்க..??"

"நம்ம நிஷாவுக்கு வெடிங் பிக்ஸ் ஆகி இருக்கு.. அதான் சாருவை இன்வைட் பண்ணலாம்னு நானும் நிஷாவும் வந்தோம். அது சரி நீ எப்படி இங்க?"

"கன்கிராட்ஸ் மா.நான் இங்க தான்டா வர்க் பண்ணுறேன்"

" இங்கேயா அண்ணா?? பாருங்க இந்த சாரு சொல்லவே இல்லை..." என்று கூற

"சாரு மேடமை உனக்கு எப்படி.. உன்னோட ரிலேடிவ்வா அவங்க??"

"இல்லை அண்ணா. அவ என்னோட பெஸ்ட் ப்ரண்ட் அண்ணா. நம்ம காலேஜில் தான் படிச்சா.." என்று நிஷா கூற பல நாட்களாய் விடை தெரியாமல் இருந்த ஒரு கேள்விக்கு விடை கிட்டியது. இன்டர்வியூ அன்று சாருவை பார்த்தப்போ பரிச்சயமான முகமாக இருக்கே என்ற எண்ணம் அஸ்வினுக்கு தோன்றியது. ஆனால் யாரென்று கண்டறிய முடியவில்லை. கண்டறிய முயன்ற மூளையை ஏதேனும் சோஷியல் மீடியா அல்லது பத்திரிகையில் பார்த்த முகமாய் இருக்கும் என்று மனம் அடக்கியது. ஆனால் சாருவை பார்க்கும் போதெல்லாம் இதே கேள்வி மண்டையை குடையத்தான் செய்தது. பதில் தெரியாமல் திண்டாடியவனுக்கு நிஷா மூலமாக இன்று பதில் கிட்டியது.

"ஓ.... மேடம் எங்கம்மா??"

"ஏதோ கால் ஒன்று வந்தது. அதான் அதை அட்டன்ட் பண்ண கன்பரன்ஸ் ரூமிற்கு போய்ருக்கா. கிளம்புறோம்னு சொன்ன எங்களை கிளம்ப விடாம ஜூசை வரவைத்து இதை குடிங்க இதோ ஒரு ஐந்து நிமிடத்தில் வரேன்னு போனா..".என்ற சாரு தன் அண்ணணிடம் கண் ஜாடையில் ஏதோ சொல்ல அதை புரிந்தவனாக ராக்கேஷ் தன் கையில் இருந்த பையில் இருந்து ஒரு இன்விடேஷனை எடுத்தான்.

அதனை அஸ்வினிடம் நீட்டியவாறு
"அஸ்வின் நிஷாவுக்கு வெடிங் பிக்ஸ் பண்ணி இருக்கோம். வெடிங் எங்க ஊரிலும் ரிசப்ஷன் இங்க வைப்பதா வீட்டிலே முடிவு பண்ணி இருக்காங்க. நீ கட்டாயம் இரண்டிலும் வந்து கலந்துக்கனும். வேலை நாள் என்று காரணம் சொல்ல முடியாத படி வீக் எண்டில் தான் டேட் வைத்திருக்கோம். சோ காரணம் ஏதும் சொல்லாம வந்துட்டு போகணும். உன்னோட அட்ரஸை தா. நான் வீட்டுக்கு வந்து அங்கிள்,ஆண்டியையும் இன்வைட் பண்றேன்."என்ற ராக்கேஷை மறுக்கும் விதம் அறியாமல் தன் வருவதாக வாக்களித்ததோடு தன் வீட்டு விலாசத்தையும் வழங்கினான். பின் அவர்களிடம் விடைப்பெற்று அவ்வறை விட்டு வெளியேறி தன் கேபின் நோக்கி நகர்ந்தான்.

அவன் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு அவள் அறையினுள் நுழைந்த சாரு
"நிஷா ரௌடி பேபி வருவதற்கு ஒத்துக்கொண்டானா??" என்று கேட்க அதற்கு நிஷா

"இல்லை சாரு. அண்ணா வர முடியாதுனு சொல்லிட்டாங்க. அவங்க எம்.டி ஓவர்டைம் வேலை செய்ய சொல்லி டார்ச்சர் பண்ணுறாங்களாம். சோ லீவ் தர மாட்டாங்களாம். அதனால அண்ணாவால் கல்யாணத்திற்கு வரமுடியாதாம்" என்று அவளை ஓட்ட அதை அறிந்த சாரு

"ஓ அப்படியா?? யாருடி அந்த லாடு லபக்குதாஸ்?? என் ரௌடி பேபியையே டார்ச்சர் பண்ணுறது??"

"அதை நீயே அவரிடம் கேட்டுக்கோ... "என்று முற்றுப்புள்ளி வைக்க, இவர்களின் செல்ல சண்டையை பார்த்துக்கொண்டிருந்த ராக்கேஷ்

"சரி சாரு உங்க பஞ்சாயத்தை பிறகு வச்சிக்கோங்க.. இப்போ நாங்க கிளம்பனும் மா.. நிஷா வாம்மா நம்ம கிளம்பலாம். பாய் சாரு." என்று கிளம்ப அவனுடன் நிஷாவும் சேர்ந்து

"ஓகே சாரு நானும் கிளம்புறேன். நீ அஸ்வின் அண்ணா கூட கல்யாணத்திற்கு வந்து சேரு" என்று விட்டு விடை பெற்றாள் நிஷா. அவர்களை வழியனுப்பி விட்டு முதல் நாள் நிஷாவுடன் நடந்த உரையாடலை நினைவு கூர்ந்தாள் சாரு.

"ஏய் சாரு இன்விடேஷன் வைக்கனும் எப்ப உன்னை மீட் பண்ணலாம்னு சொல்லு??" என்ற நிஷாவின் கேள்வியில் தன் பிளானிற்கான முதல் படியை தொடங்க தகுந்த சந்தர்ப்பம் இது என்று உணர்ந்து

"நாளைக்கு ஆபிசிற்கு வா. அங்க மீட் பண்ணலாம். அப்புறம் ரௌடி பேபிக்கு இன்விடேஷன் குடுத்தியா??"

"இல்ல சாரு. அண்ணாவோட கண்டாக்ட் மிஸ் ஆகிவிட்டது. அண்ணாவும் விசாரிச்சிட்டு இருக்காங்க. அது சரி நீ எதற்கு அண்ணாவ பற்றி விசாரிக்கிற?"

"சும்மா தான்.. "

"ஏய் பொய் சொல்லாத..."என்ற நிஷாவிடம் மறைக்க தோன்றாது நடந்த அனைத்தையும் கூறினாள்.

"அடிப்பாவி.. இவ்வளவு நடந்திருக்கு ஒன்றை கூட என்கிட்ட சேர் பண்ணனும்னு ஏன்டி தோணலை உனக்கு??"

"சாரிமா சொல்லக்கூடாதுனு இல்லை.. ஏதும் ஒழுங்கா இல்லாம உன்கிட்ட அதை சேர் பண்ணனும்னு தோணலை. அதான்.."

"சரி சொல்லு அஸ்வின் அண்ணா இப்போ எங்க இருக்காரு??"

"என்னோட கம்பனில தான் வர்க் பண்றாரு. நீ ராக்கேஷ் அண்ணாவோட வந்து அவருக்கும் இன்வைட் பண்ணு.. அந்த ஹெல்ப்பை மட்டும் பண்ணு மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்."

"ஓகேடி நான் நாளைக்கு அண்ணாவோட வருகிறேன்."

"தாங்ஸ் நிஷா "

"ஹேய் இதுக்கு எல்லாமா தாங்ஸ் சொல்லுவாங்க." என்று அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

அன்று ஆபிஸ் முடிந்து அஸ்வினின் சித்தப்பாவினை நலம் விசாரிக்க அஸ்வினின் வீட்டிற்கு சென்றிருந்தாள் சாரு. அங்கு அவள் சென்ற போது அஸ்வினின் மொத்த குடும்பமும் அவளை அன்புடன் வரவேற்றது. கிருஷ்ணனும் அவளுடன் உரையாடும் பொருட்டு ஹாலிற்கு வந்தார்.

அவரை கண்டு சாரு
“ அங்கிள் நீங்க ஏன் ஸ்ரெயின் பண்ணிக்கிறீங்க... நானே வந்து உங்களை ரூமில் பார்த்திருப்பேனே...” என்று அக்கறையுடன் கூற அவளது அக்கறையில் நெகிழ்ந்த கிருஷ்ணன்

“பரவாயில்லை மா. இப்போ நான் நல்லா தான் இருக்கேன். டாக்டரும் ரூமுக்குள்ளேயே இருக்காம வெளிய நடமாட சொல்லி இருக்காரு” என்று ஆறுதல் படுத்தினார். சிறிது நேரம் அவரது உடல் நிலை குறித்து விசாரித்து விட்டு சித்ரா,கவி,பாட்டி,தாத்தா மற்றும் மாதவ் என்று அனைவருடனும் எந்த பந்தாவும் இல்லாமல் சகஜமாக உரையாடிய சாருவை அனைவருக்கும் பிடித்து போனதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. அவள் தன் குடும்பத்தாருடன் நயமாக பொருந்திக்கொண்டது அஸ்வினிற்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. ஆனால் அதற்கான காரணத்தை கண்டறிய தவறியது அவனது விதி செய்த சதி. அரைமணி நேர விசாரிப்புகளுக்கு பின் கிளம்ப தயாரான சாருவை சித்ரா

“சாருமா டின்னர் சாப்பிட்டு போகலாமே... முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்க.. நீ ஏதும் சாப்பிடாம போனா இந்த ஆண்டிக்கு கஷ்டமா இருக்கும்.. ஒரு பத்து நிமிடத்தில் டின்னர் ரெடியாகிரும். அதை சாப்பிட்டு கிளம்பலாமே...” என்று கூற

“சாரி ஆண்டி வீட்டுல எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நான் ஆறுதலா இன்னொரு நாள் வருகிறேன் . அன்று உங்கள் நளபாக தர்பாரில் பங்கெடுக்கின்றேன்” என்று நாடக பாணியில் சித்ராவின் அழைப்பினை மறுத்துவிட்டு அனைவரிடமும் விடை பெற்ற சாருவிற்கு வெளியில் கொட்டோ கொட்டென்று சிதறி விழுந்த மழையுடன் கூடிய காற்றும் இடைவெளியோடு மின்னிய மின்னலுடன் கூடிய இடியும் அவளுக்கு அனுமதி தர மறுத்தது. இந்த அடை மழையில் சாருவினால் பயணிக்க முடியாது என்றுணர்ந்த ஆரவல்லி பாட்டி

“அம்மாடி சாரு இந்த மழை இப்போதைக்கு நிற்பது போல் இல்லை. நீ இன்னைக்கு எங்கூட தங்கிக்கோ.. உங்க வீட்டுக்கு போன் போட்டு சொல்லிரு. சித்ரா நீ பசங்களுக்கு சாப்படு எடுத்து வை. கவிமா நீங்க சாருவை உங்க ரூமிற்கு கூட்டிட்டு போங்க” என்று ஆளுக்கொரு வேலையை பணித்தார்.

சாருவியை கவி அழைத்து சென்ற பின் அஸ்வின் பாட்டியிடம்
“ஏன் பாட்டி நீங்க பாட்டுக்கு அவங்களோட சம்மதம் கேட்காம சொல்லிட்டீங்க.. அவங்க வீட்டுல என்ன சொல்லுவாங்கனு தெரியலையே.. “ .

“கண்ணா நீயே சொல்லு இந்த மழையில ஒரு வயசுப்பொண்ணை தனியா அனுப்ப முடியுமா?? அதான் நான் அந்த பொண்ண இங்க தங்க சொன்னேன். அந்த பொண்ணு வரட்டும். நானே அவங்க வீட்டு போன் பணாணி அவங்க வீட்டு ஆட்களிடம் நிலமையை எடுத்து சொல்றேன்.”என்று விட்டு சித்ராவிற்கு உதவும் முகமாக சமயலறை நோக்கி சென்றார் ஆரவல்லி.

சாருவை தன் அறைக்கு அழைத்து சென்ற கவி அவளிற்கு மாற்றுடை எடுத்து கொடுத்துவிட்டு
“உள்ளே பாத்ரூமில் ஷாம்பூ, சோப் எல்லாம் இருக்கு மேடம். வேறு ஏதும் தேவைனா கூப்பிடுங்க மேடம்” என்ற கவி கூறிய அடுத்த நொடி

“ஏன்மா கவி என்னை பார்த்தால் உனக்கு ஆண்டி பீல் ஏதும் வருதா??” என்று வினவிய சாருவின் கேள்வியில் குழப்பமடைந்த கவியோ

“ஐயோ அப்படி எல்லாம் இல்லை. இவ்வளவு அழகா இளமையா இருக்க உங்களை பார்த்து ஆண்டினு சொன்னா அவங்களுக்கு கண்ணுல இல்லாவிடின் மூளையில ஏதாவது கோளாறா தான் இருக்கும். உங்களை யாரு அப்படி சொன்னாங்க?”என்று வினவிய கவியிடம்

“இதுவரைக்கும் யாரும் சொல்லவில்லை. ஆனால் இனிமேல் சொல்லிருவாங்களோனு பயமா இருக்கு என்ற சாரு கூற

“அது யாருங்க அது?”

“வேற யாரு நீ தான் மா” என்ற சாருவின் பதிலில் பதறிய கவி

“ஐயோ நான் எப்போ அப்படி சொன்னேன்??”

“ஆண்டினு சொல்லவில்லை. ஆனா அதுக்கு ஈக்குவலா அந்த வார்த்தையை சொல்லி சொல்லி இப்படி என் பர்சனாலிட்டியை டாமேஜ் பண்ணுறியே மா” சாரு கூறிய போதுதான் கவி தான் அவளை மேடம் என்று கூப்பிட்டதை குறிப்பிடுகின்றாள் என்று புரிந்து கொண்டாள்.

“சாரி அது அண்ணா உங்களை அப்படி கூப்பிட்டதால நானும் அப்படியே கூப்பிட்டேன்."

“ ஓ.அப்போ உங்க அண்ணன் அவரோட வைப்பை பேபி, ஸ்வீட்டினு கூப்பிட்டால் நீயும் அப்படி தான் என்... அவங்களையும் கூப்பிடுவியா?? என்ற தன் வாயில் தவறான சமயத்தில் உதித்த சரியான கேள்வியை அழகாக சமாளித்தாள்.

“ஐயோ இப்படி ஏதும் பண்ண எங்க அம்மா என்னை கட்டி வைத்து வேப்பிலை அடித்து சாமி ஆடிருவாங்க..”

“அப்போ எதுக்கு மா என்னை மட்டும் ஏன் வார்த்தைக்கு வார்த்தை மேடம்னு கூப்பிட்டு பஞ்சர் ஆக்குற?? இனிமேல் என்னை சாருனு தான் கூப்பிடப்போற... மேடம்னு உன்னோட வாயில் வந்த அடுத்த செக்கன்ட் நான் அழ ஆரம்பித்து விடுவேன் “ என்று சிறுபிள்ளைபோல் மிரட்டிய சாருவை பார்த்து சிரிக்கத்தொடங்கினாள் கவி.

“ஓகே .. கூல் இனிமே சாருனே கூப்பிடுறேன். ஓகேவா சாரு? “

“இது நல்ல பிள்ளைக்கு அழகு “என்று அவர்களது உரையாடல் சித்ரா வந்து அழைக்கும் வரை தொடர்ந்தது.

சித்ராவின் குரலுக்கிணங்க சுவாரசியமாய் உரையாடிக் கொண்டிருந்த சாரு மற்றும் கவி தங்களது வெட்டிகதையிற்கு இன்டவல் பிரேக் வழங்கிவிட்டு டைனிங் மேஜையிற்கு சென்றனர். அங்கு அவர்களிற்காக குடும்பத்தார் அனைவரும் காத்திருப்பதை பார்த்ததும் தன் கூட்டினை இழந்து அலைந்து திரிந்த பறவைக்கு வசிப்பிடமாய் மரப்பொந்து கிடைக்கும் போது அதனுள் எழும் மகிழ்ச்சி கலந்த பாதுகாப்புணர்வை அச்சந்தர்ப்பத்தில் உணர்ந்தாள் சாரு. அவ்வுணர்வு கண்ணீராய் வெளிப்பட முயல அதை மறைக்கும் பொருட்டு கை கழுவவுவதை சாக்காய் கொண்டு வாஸ் பேசின் அருகில் சென்று தன்னை சமப்படுத்திக் கொண்டாள். பின் கைகளைக் கழுவிக்கொண்டு கவியின் அருகில் காலியாய் இருந்த இருக்கையில் (அதாவது அஸ்வினிற்கு நேரெதிராக) அமர சித்ரா அனைவருக்கும் பரிமாறத்தொடங்கினார். அப்போது தான் மாதவ் அங்கு இல்லாததை அறிந்த சாரு

“ஆன்டி மாதவ் எங்க??” என்று வினவிய அடுத்த நொடி

“இதோ வந்துட்டேன்” என்று பின்னாலிருந்து குரல் கேட்டது. அங்கிருந்த காலியான இருக்கையில் அமர்ந்த மாதவ்....

“ நான் இல்லாமல் பந்தியை ஆரம்பிச்சிட்டீங்களா?? இது சரியில்லை. ஏன்மா என்னை ஒரு வார்த்தை கூப்பிட்டு இருந்தால் எல்லாருக்கும் முன்னமே வந்து ஆஜர் ஆகி இருப்பேனே... உங்களுக்கு என்மேல பாசமே இல்லை” என்று போலியாய் வருத்தப்பட கவியோ

“அவங்களுக்கு எங்க எல்லோர் மீதும் பாசம் இருக்கு. அதான் உன்னை கூப்பிடவில்லை” என்று கூற அவளது கேலியின் அர்த்தம் அறிந்த சாரு தவிர்ந்த அனைவரும் சிரிக்க சாரு விஷயம் புரியாமல் கவியை பார்த்தாள். அதற்கு கவி

“அது ஒன்றும் இல்லை சாரு உங்களுக்கு எலியை பற்றி தெரியுமா??”

“ஆமா.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??”

“அந்த எலி என்ன செய்யும்னா எங்கெல்லாம் சாப்பாடு இருக்கோ அங்கெல்லாம் ஆஜராகி சாப்பாட்டை அபேஸ் பண்ணிருமாம்...”

“அப்படி ஒரு எலியா?”

“அதுவும் வாசனையை வைத்தே அந்த இடத்தை கண்டுபிடிக்கும் அளவுக்கு அது ப்ரில்லியண்டானா பார்த்துக்கோங்களே??”

“அப்படி ஒரு எலியா???”

“ஆமா அதனால தான் அந்த எலியை அம்மா சாப்பிட கூப்பிடலை.. ஆனாலும் பார்த்தீங்களா டைமிற்கு வந்திருச்சி சாப்பாட்டை முழுங்க....” என்று கவி கூறியதும் மாதவ்

“ப்ரவுட் ஜோக்” என்றுவிட சாருவோ

“இப்போ புரியிது அந்த எலி யாருனு... அந்த எலியை பிடித்து கூட்டில் அடைங்க பா... இல்லாவிடின் நம்ம சாப்பிட்டற்கெல்லாம் உத்தரவாதம் இல்லை..”என்று மாதவ்வை
மேலும் வார கடுப்பான மாதவ்

“ஏன் சாரு அக்கா நீங்க அப்பவே இப்படி தானா இல்லாட்டி இந்த கவியோட சேர்க்கை உங்களை இப்படி பண்ணிவிட்டதா??”

“டேய் மாதவ் எல்லாரும் உன்னை மாதிரி மொக்கை வாங்குவாங்கனு நீ எப்படி நினைக்கலாம்.... இப்படி வாயை குடுத்து பல்பு வாங்குவதற்கு அவங்க உன்னை மாதிரி தத்தி இல்லை.... “ என்று மேலும் கலாட்டா பண்ண

“ அம்மா நாளைக்கு கொசு மருந்து அடிங்க... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை..” என்று மாதவ் கூற சாருவோ

“ஆன்டி வீட்டுல எலி மருந்து இருக்கா.??....” என்று கேட்க அவளது கேள்வியின் அர்த்தம் புரிந்த மாதவ்

“அம்மா பரதேவதைகளா உங்க கிட்ட வாய் குடுத்தது தப்பு தான். ஆளை விடுங்க தெய்வங்களா..” என்று ஜகா வாங்க சாருவும் கவியும் ஹைபை அடித்துக்கொண்டனர். இவர்களது கலாட்டாக்களை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அஸ்வின் பாட்டியின் காதை கடிக்க அவரோ

“அம்மாடி சாரு வீட்டுக்கு தகவல் சொல்லிட்டியாமா?? எனக்கு போன் போட்டு குடும்மா நானும் ஒரு வார்த்தை உன் வீட்டாளுங்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன். இல்லாவிடின் நீ காலையில் வீடு போய் சேரும் வரை பயத்தோடு இருப்பாங்க “என்று கூற சாரு ஒரு அசட்டு சிரிப்புடன்

“அப்படி என்னை நினைக்கவோ வருத்தப்படவோ அந்த வீட்டில் யாரும் இல்லை. ஏதோ கொடுக்கின்ற சம்பளத்திற்காக என் வயிறு காயாமல் பார்த்துக்கொள்ள வீட்டு வேலைக்காரர்கள் இருக்காங்க. அவ்வளவு தான்.”என்று தனக்கு உறவுகள் என்று யாருமில்லாததை சாரு மறைமுகமாக எடுத்துரைத்தது எல்லோரையும் விட அஸ்வினை பாதித்தது. தனக்கென்று அன்பை வாரி இறைக்க ஒரு குடும்பம் இருந்தும் தன் அன்னையின் அன்பு இல்லையே என்று இன்றுவரை ஏங்கும் அஸ்வினிற்கு உறவென்று யாருமே இல்லை என்று கூறும் சாருவின் வலியின் கொடுமையை அவனால் உணரமுடிந்தது. ஏனோ தானும் அந்த வலியை பகிர்ந்து கொண்டு அவளிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உணர்ச்சிகளின் பிடியில் சிக்கயிருந்த அஸ்வினிற்கு தான் அவ்வாறு ஏன் நினைத்தோம் என்று உணர சந்தர்ப்பம் அமையவில்லை.

அந்த அமைதியை விரும்பாத சாரு
“அதனால இன்னைக்கு நீங்க என்னுடைய கொடுமைகளை சகித்து தான் ஆகனும். வேறு ஆப்ஷன்கள் கைவசம் இல்லை.” என்று நிலமையை சகஜமாக்க முயல அது சரியாக வேலை செய்தது.

”நீயும் எனக்கு பேத்தி தான். நீ என்ன பண்ணாலும் இந்த பாட்டி உனக்கு சப்போட்டா இருப்பேன். நீ என்ன சேட்டை வேணாலும் பண்ணிக்கோ. ஆனா இந்த தாத்தா கூட மட்டும் சேராத..” என்று தன் பாட்டில் உணவருந்திக்கொண்டிருந்த சொக்கநாதனை வம்பிளுத்தார் ஆரவள்ளி. “ ஏன்மா வள்ளி நீ என்ன என் பேத்தியை என்கூட சேர வேணாம்னு சொல்லுறது... இன்னைக்கு சாரு கூட தான் நான் கேரம் ஆட போறேன். அம்மாடி உனக்கு கேரம் ஆட தெரியும்மில்ல??” என்று கேட்டுவிட்டு கண்களால் சாருவிடம் தெரியும் என்று சொல்லு மா என்ற ரீதியில் கெஞ்ச அதை கண்ட கவி

“என்ன தாத்தா என்னமோ கெத்தா வாயால கேட்டுட்டு கண்ணால இப்படி கெஞ்சுறீங்க” என்ற தாத்தாவினை ஓட்ட அங்கு அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர் அஸ்வின் ஒருவனைத்தவிர. அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் சாப்பிட அமர்ந்த சித்ராவிற்கு உணவு பரிமாறினாள் சாரு. அவர் தடுக்க தடுக்க உணவு பரிமாறியவள்

“ இன்னைக்கு தான் ரொம்ப வருடம் கழித்து எங்க அம்மாவோட கைப்பக்குவத்தை உடைய ஒரு சமையலை சாப்பிட்டேன். அம்மா இருந்தப்போ எப்பவும் அம்மா தான் எனக்கு ஊட்டி விடுவாங்க.. அந்த சாப்பாட்டிற்கு உள்ள சுவையே தனி.”என்று தன் ஏக்கத்தை கூறத்தொடங்கிய சாருவின் வாயருகே தான் கையில் உண்பதற்காக எடுத்த உணவை கொண்டு சென்றார்.அதனை எதிர்பாராத சாருவின் கண்களில் இருந்து நீர் கொட்டத்தொடங்கியது. மறு கையால் அவளது கண்ணீரை துடைத்த சித்ரா

“சாருமா நீயும் எனக்கு பொண்ணுதான்..உனக்கு எப்போவெல்லாம் அம்மா கையால சாப்பிடனும்னு தோனுதோ அப்போ இங்க வா.. நான் உனக்கு வகையா சமைத்து என் கையால ஊட்டிவிடுறேன் .சரியா?? இனிமே எனக்கு யாருமே இல்லைனு நீ வருந்த கூடாது. உனக்குனு இந்த குடும்பம் மொத்தமும் இருக்கு புரிதா?? இப்போ கண்ணை துடைத்துக்கோ. இந்தா இந்த அம்மா கையால சாப்பிடு” என்று சாருவிற்கு ஊட்டத்தொடங்கினார் சித்ரா. இதனை சோபாவில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அஸ்வினிற்கு ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவனை வாட்டி எடுத்தது. அந்த உணர்வினை பிரித்தறிய முடியாத அஸ்வினின் மனம் அலைப்புற அதனை அமைதிப்படுத்த தனிமையே வழி என்று உணர்ந்து தன்னறை நோக்கி நகர்ந்தவனை சாருவின் குரல் தடுத்தது.

“அஸ்வின் நீங்க நிஷாவோட மேரேஜிற்கு போறீங்க தானே?” என்று கேட்க “இல்லை நான் போகவில்லை. சித்தப்பாவிற்கு இப்படி இருக்கும்போது அங்க போய் தங்க வசதிப்படாது” என்று கூற
“நானும் தங்குற மாதிரி போகவில்லை. மானிங் போய் வெட்டிங்கை அட்டன் பண்ணிட்டு ஈவினிங் வந்திருவேன். அப்படி போகிறதால எப்படியும் டிரைவரோட காரில் தான் போவேன். உங்களுக்கு ஓகேனா நீங்களும் ஜேர்னியில் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க”என்று கூற அவளது கூற்றை ஆதரிப்பதாக சித்ராவும்

” ஆமா கண்ணா அந்த பையன் வீடு வரைக்கும் வந்து சொல்லிட்டு போயிருக்கு. நீ போகலைனா நல்லா இருக்காது.நீ சாருவோட காரிலே போய்ட்டு வந்துரு. ஏதும் அவசரம்னா நான் வருணை கூப்பிட்டுக்கிறேன்” என்று அவன் மறுப்பு கூறா வண்ணம் அனைத்து காரணங்களுக்கும் பதில் தந்துவிட அவனது பயணம் உறுதியானது. இவ்வாறு அன்றைய இரவு சாருவிற்கு அஸ்வினின் குடும்பத்தாருடன் மகிழ்வுடன் கழிய அஸ்வினிற்கோ பல குழப்பங்களுடனும் மனச்சஞ்சலங்களுடனும் கழிந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN