ஆதித்யா சக்கரவர்த்தி-8

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

அத்தியாயம் 8

நந்தனும் மலர்விழியும் நிறைய பேசினார்கள். அவர்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது... எதற்காகவெல்லாம் கோபம் வரும்? கோபத்தை எப்படி வெளிப்படுத்துவார்கள்? அவர்களுக்கு எதெல்லாம் ரொம்ப முக்கியம்? எந்தெந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகம்? எதையெல்லாம் பார்க்க பிடிக்கும்? எதிர்காலத் திட்டம் என்ன? என்று ஒருவர் பற்றி ஒருவர் அறிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது.

"எனக்கு அவ்வளவு சீக்கிரம் கோபமே வராது நந்தன்...
அப்படியே எனக்கு கோபம் வந்தாலும் என்னால யாரையும் கஷ்டப்படுத்த முடியாது" என்று மலர் சொல்ல...

"நான் அவ்வளவு நல்லவன்லாம் இல்ல மலர்... நானும் சராசரி மனுஷன் தான் ...எனக்கு பயங்கரமா கோபம் வரும்... முக்கியமா எனக்கு சொந்தமானது எனக்கே எனக்குன்னு இருக்கணும்... அதை யாராவது உரிமை கொண்டாடினா?! எனக்கு பயங்கரமா பொசசிவ்னஸ் வரும்... கோபம் வரும்... அந்த டைம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்று ஒரு மாதிரி குரலில் கூறிய நந்தன்,

மலர்முகம் சுருங்கி குழப்பமாக பார்க்கவும்,
"இப்போ உதாரணமா உன்ன எடுத்துக்கோ...எனக்கு சொந்தமானவ நீதான் மலர்... உன்னை யாராவது உரிமை கொண்டாடினா?! எனக்கு கோபம் வரும்... ரொம்ப... ரொம்ப வரும்..." என்று சிரித்துக்கொண்டே சொன்னான் நந்தன்.

மலரும் லேசாக சிரித்துவிட்டு,
"என்ன உரிமை கொண்டாடுற அளவுக்கு இப்போ யாரு எனக்கு இருக்கா...? எனக்கு இருக்கிறது ஒரே ஒரு அண்ணன்... அந்த அண்ணனுக்கும் தனியா ஃபேமிலி இருக்கு... ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இருக்கு... இதுல யார் எங்கிருந்து என்கிட்ட உரிமை கொண்டாட முடியும்?"
என்று சாதாரணமாக சொன்னாலும் அதனுள் வலி மிகுந்து இருந்தது.

"சாரி மலர்... ஏதோ எதார்த்தமா தான் சொன்னேன். அது உன்ன ஹர்ட் பண்ணிட்டு... ஐ அம் ரியலி சாரி மலர்" என்று நந்தன் உண்மையான கவலையுடன் சொல்ல ...

"நான்தான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேன்... விடுங்க உங்க மேல தப்பு இல்ல"
என்று மலரும் சொல்ல,
இருவரும் புன்னகைத்தனர்.

"மலர் உன் கிட்ட மொபைல் இல்லல்ல...சோ உனக்கு நான் ஒரு நியூ மொபைல் வாங்கி தரேன்... எனக்கு சௌமியாவுக்கு அடிக்கடி கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ண பிடிக்கல" என்று நந்தன் சொல்லவும்,

"மேரேஜ்க்கு அப்புறம் வாங்கித் தாங்களேன்... இப்போ வேண்டாமே" என்று இழுத்தாள் மலர்.

"ப்ச்ச்... மலர் இப்பவே உன்ன நான் என்னோட சொந்தமா தான் நினைக்கிறேன்...ப்ளீஸ் வேண்டாம்னு சொல்லாத.. அது என்னவே வேண்டாம்னு சொல்ற மாதிரி இருக்கு... நான் இன்னைக்கு மொபைல் வாங்கி தரேன்... அதுல நீ என்கிட்ட இனி டெய்லி பேசுற... அவ்வளவுதான்" என்று நந்தன் மீண்டும் அழுத்தமாக சொல்லவும்,
சரி என்று மறுக்கமுடியாமல் தலையாட்டினாள் மலர்.

அவனது உரிமை கலந்த பாசம் மனதை நெகிழ தான் வைத்தது.
ஆனால் அவளுக்கு மொபைல் மட்டுமில்லாமல்... மலர் மறுக்க மறுக்க மற்றொரு பரிசாக ஒரு பிரேஸ்லெட் ஒன்றும் வாங்கி கொடுத்தான் நந்தன்.
அதில் MN என்ற இன்சியல் அழுத்தமாக பதிக்கப்பட்டிருந்தது.
அதை நந்தனே மலரின் கைகளில் மாட்டி விட்டான்.

அந்த நகை கடை ஊழியர்கள் எல்லாம் அவர்களை சுவாரஷ்யமாக பார்க்க...மலருக்கு தான் வெட்கம் பிடுங்கி தின்றது. சிவந்த முகத்தை மறைக்க தலை குனிந்து கொண்டாள்.

அவளை மாலை வீட்டில் இறக்கி விடும் போது,
"நாளைக்கும் மீட் பண்ணலாமா?" என்று கேட்ட நந்தனை சிரிப்புடன் பார்த்தவள், "அடிக்கடி மீட் பண்ண முடியாது" என்று சொல்லி சிரித்துக்கொண்டே திரும்பிய மலரிடம்,
"அப்ப நைட் கால் பண்றேன் பேசு" என்று நந்தன் கண் சிமிட்டி சொல்ல, அதற்கு வெட்கப்பட்டுக்கொண்டே சரி என்பதுபோல் தலையாட்டிவிட்டு உள்ளே வந்தாள் மலர்.

கீழே நடந்த எல்லாவற்றையும் மாடியில் நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா சக்கரவர்த்தி.
அவனது கழுகு போன்ற கூர்மையான கண்களிலிருந்து எதுவும் தப்ப வில்லை.

சந்தோஷமாக உள்ளே வந்த மலர், அவளது அறை வாயிலில் ஆதித்யா நிற்கவும் தயங்கி நின்றாள்.

"எங்க போயிட்டு வர்ற???"என்று ஆதித்யா சாதாரணமாக கேட்டாலும் அதில் அழுத்தம் அதிகமாகவே இருந்தது

"நந்தன் கூட வெளிய போயிட்டு வரேன் சௌமி அண்ணா" என்றாள் மலர் பயத்துடன்...

அவளை உற்றுப் பார்த்தவன்,
"யார கேட்டு நீ இந்த வீட்டை விட்டு வெளிய போன... உனக்கு யாரு அந்த பெர்மிஷன் தந்தா???"என்று ஆதித்யா அடக்கப்பட்ட சினத்துடன் கேட்கவும்,
மலருக்கும் கோபம் வந்தது. யாரை கேட்கணுமாம்?? இவனுக்கு என்று நினைத்தவள்.
"எனக்கு புரியல சௌமி அண்ணா... நான் எதுக்கு பெர்மிஷன் கேட்கணும்?... யார் கிட்ட பெர்மிஷன் கேட்கணும்?" என்று கேட்டாள் மலர்.

"இப்போ நீ யாரோட பாதுகாப்புல இந்த வீட்ல இருக்கியோ ...யாரை நம்பி உன்னை இந்த வீட்டில உன்னோட அண்ணனும் அண்ணியும் விட்டுட்டு போனாங்களோ... அவன்கிட்ட நீ பெர்மிஷன் வாங்கி ஆகணும்.. அதாவது என் கிட்ட பர்மிஷன் வாங்கி ஆகணும்..." என்றான் ஆதித்யா அதிகாரத்துடன்.

"ஆனா..."என்று மலர் ஏதோ மறுத்து சொல்ல வர, "அத்தை" என்று ஓடிவந்த வானதியை பார்த்ததும் அதை எல்லாம் மறந்துவிட்டு அவளை
பாசமாக தூக்கி கொண்டாள் மலர்.

"உன்ன அப்பவே வச்சி வானதி தேடுனா?நீ இல்லாம குழந்தை வாடி போய்ட்டா பாரு... உன்னை நம்பித்தானே உன்னோட அண்ணா அண்ணி ரெண்டு பேரும் இவள விட்டுட்டுப் போயிருக்காங்க" என்று ஆதித்யா அதட்ட,

"அதான் சௌமியா இருக்காளே?" என்று மலர் ஏதோ சொல்ல வர...

"நான் பேசும்போது குறுக்க பேசினா எனக்கு பிடிக்காது" என்றான் ஆதித்யா கடுமையான குரலில்.

மலர் மௌனமாக இருக்கவும்,
"சௌமியாவுக்கு தலைவலி... அவ டேப்லெட் போட்டுட்டு தூங்கிட்டா... உன்னோட இஷ்டத்துக்கு வெளியே போயிட்டு வர இது ஒன்னும் மடம் இல்ல... இனிமே வெளியே எங்க போறதா இருந்தாலும் என் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் போகணும்.. காட்ட் இட்"என்றவன்,
"இன்னைக்கு வானதி என்கூடவே தூங்கட்டும்" என்றான்.

ஏன் என்பது போல் பார்த்தாள் மலர்.
"நீ உன்னோட உலகத்துல இருக்கும்போது உனக்கு குழந்தை எல்லாம் கண்ணுக்கு தெரியாதுல்ல... அதனால அவள நான்தான் பாத்துக்கணும்" என்றான் ஆதித்யா ஏளனமாக...

மலரின் முகம் சுருங்கி ஒரு மாதிரி ஆகவும், "குழந்தை என்கிட்ட இருக்குறதுல உனக்கு எதுவும் பிரச்சினை இல்லதான?" என்று ஆதித்யா கேட்கவும், வேகமாக இல்லை என்பது போல் தலையாட்டினாள்.

"பிரச்சனை இல்லைனா... வானதிக்கு நைட் சாப்பாடு ஊட்டி டிரஸ் மாத்தி மட்டும் விடு போதும்" என்று ஆதித்யா சாதரணமாக கூறவும்,
சரி என்று அப்பாவியாக தலையசைத்தாள் மலர்.
அதன் சாதக பாதகங்களை அலசி ஆராயாமல் மலரின் சரி என்ற சொல்லுக்கு நிறையவே பாதிப்புகள் காத்திருந்தது.

அன்றிரவு உணவினை சௌமியா அவளது அறையிலேயே கொண்டுவர சொல்லி விட்டாள்.
உணவினை வேலைக்காரர்களுக்கு பதிலாக மலர் கொண்டு வரவும், அவளின் முகத்தை தயங்கி தயங்கித்தான் பார்த்தாள் சௌமியா.
என்ன இருந்தாலும் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க தானே செய்யும்!!!

"இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு" என்று மலர் கேட்கவும், "பரவால்ல" என்று முணுமுணுத்தாள்.

"சரி சாப்பிடு" என்றவள் கூடவே இருந்து பரிமாறினாள். "நானே பாத்துக்கிறேன்" என்று அவள் சொன்னாலும் மலர் விடவில்லை.
அவள் சாப்பிட்டு முடித்தவுடன் அனைத்தையும் சமையலறையை கொண்டு வைத்த மலர் மீண்டும் சௌமியாவின் அறைக்கு வந்தாள்.
சௌமியா கண்களை மூடி தலையணையில் சாய்ந்து அமர்ந்து இருக்கவும், "நான் உனக்கு ஹெட் மசாஜ் பண்ணி விடுறேன்...சௌமி நாளைக்கு காலைல நீ ஃப்ரெஷா எந்திரிப்ப" என்ற மலர் அவளுக்கு மெதுவாக தலையை பிடித்து விட ஆரம்பித்தாள்.

சௌமியாவுக்கு குற்ற உணர்வு கொல்லாமல் கொல்வது போல் இருக்க,
"ப்ச்ச் வேண்டாம் மலர்... எனக்கு ஒன்னும் இல்ல... நீ போய் சாப்பிடு" என்றாள்.

"இன்னும் அஞ்சே அஞ்சு நிமிஷம் தான்..." என்று விடாமல் அவளின் தலையை பிடித்துவிட்டாள் மலர்.

மலரின் கைகள் செய்த மேஜிக் கால் தலை பாரம் குறைந்து சௌமியா கண்ணயர்ந்தாள்.அதன் பிறகுதான் வெளியே வந்தாள் மலர்.

என்ன இருந்தாலும் இந்த வீட்டிற்கு வந்த பிறகு அவளுக்கு பக்கபலமாக இருப்பது சௌமியா தானே!!!
சௌமியாவின் அன்பிற்கு ஏதோ அவளால் முடிந்த சின்ன உதவி என்று நினைத்துக்கொண்டாள் மலர்.

உண்மை தெரியும் அன்று உடைந்து போவது அவளது இதயம் தானே!!!

குழந்தைக்கு இன்னும் சாப்பிட கொடுக்கவில்லை என்று நினைத்துக்கொண்டே மலர் டைனிங் ஹாலுக்கு வர, அங்கிருந்த பணியாளர் ஆதித்யா அவனது அறைக்கே உணவினை கொண்டுவரச் சொல்லி விட்டதாகவும், அவளையும் அங்கே வர சொன்னான் என்றும் சொல்லவும், குழப்பமாக அவனது அறைக்கு சென்றாள் மலர்.

அங்கு உணவு தயாராக இருக்க வானதியோ,
"வா அத்தை எனக்கு ரொம்ப பசிக்குது" என்றாள்.
மலர் குழப்பமாக ஆதித்யாவை பார்க்க, அவன் சோபாவில் அமர்ந்து, தனது மடிக்கணினியில் ஏதோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான். அவள் வந்ததை கண்டுகொள்ளவே இல்லை.

வானதிக்கு உணவினை ஊட்டிக் கொண்டே, தன் சிந்தனையில் மூழ்கி இருந்தாள் மலர்.
நந்தன் அவளுக்கு இரவு கால் செய்வதாக சொல்லி இருந்தானே!!!
எப்போது அழைப்பான்? இப்போது கூப்பிட்டால் பேச முடியாதே... என்று ஏதேதோ சிந்தனையில் இருந்தாள் மலர்.

ஆதித்யா சிறிது நேரத்திலேயே வேலைகளை முடித்து, லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, சோபாவில் அமர்ந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்று காலையில் நடந்தது அவன் கண் முன் விரிந்தது.
தோட்டக்காரனிடம் புதிய செடியை எந்த இடத்தில் நடவேண்டும் என்று சொல்லிவிட்டு மர குடிலுக்கு சென்று பிளாக்கியை( நாயை) அவிழ்த்துவிட்டான்.
வேலைக்காரனிடம் காஃபியும், நியூஸ் பேப்பரும் இங்கே கொண்டு வர சொல்ல வேண்டும்...என்று நினைத்துக்கொண்டே திரும்பியவனின் கண்களில் மலர் விழுந்தாள்.

மலர் இங்கு வந்ததிலிருந்து காலை தோட்டத்திற்கு வரும்போதெல்லாம் அவளை அடிக்கடி அங்கே பார்த்திருக்கிறான் தான். ஆனால் இன்று ஏதோ புதிராக புதுமையாக அவன் கண்களுக்கு தெரிந்தாள் அவள்.
எப்பொழுதும் இருக்கும் சோகம் படிந்த முகம் மறைந்து, புத்துணர்ச்சியுடன் முகம் ஜொலி ஜொலித்தது.
கண்களில் ஒளியும் ...இதழ்களில் புன்னகையுமாக இருந்த மலரின் முகத்தை விட்டு அவனால் இம்மியளவும் பார்வையை விலக்க முடியவில்லை.

'தான் செய்வது முட்டாள்தனம்' என்று தெரிந்தும் முதல்முறையாக அவனது புலன்கள் அவனது கட்டுப்பாட்டில் இல்லை.

ஆதித்யா கண்ணிமைக்காமல் அவளை பார்த்துக் கொண்டே இருக்க, திடீரென மலரின் முகம் மாறி தோட்டத்தை சுற்றி பார்வையை சுழற்றினாள். அவன் நின்ற இடத்தை ஒரு மரத்தின் கிளை மறைத்திருந்ததால் அவளால் அவனை பார்க்க முடியவில்லை.
அவளது புதிரான நடவடிக்கைகளுக்கு அர்த்தம் புரியாமல் அவளையே பார்த்தவனுக்கு புரிந்துவிட்டது. தான் பார்ப்பதை அவள் உணர்ந்து விட்டாள் என்று... சுற்றி சுற்றி பார்த்தவளுக்கு எதுவும் தவறாக தெரியாததால், தனது பிரம்மை என்று நினைத்து தலையில் தட்டி கொண்டதைக் கூட ஆதித்யா ரசிக்கத்தான் செய்தான்.
அந்த இளங்காலை வெயிலில் வெண்ணிலாவாக நின்ற மலர் ஆதித்யாவின் இதயத்தில் ஆழமாக பதிந்தாள்.

ஆதித்யா ரசித்துக் கொண்டு இருக்கும்போதே திடீரென்று உள்ளே சென்று மறைந்தாள் மலர்.
"யாரைக் கேட்டு இவ... இப்ப உள்ள போனா???" என்று ஆதித்யா ஆத்திரப்பட, அவனது மூளையோ,
"நீ பார்ப்பது அவளுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்க...
அடங்கினான் ஆதித்யா.

ஆனால் அவனுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சியாக மலர் கீழே இறங்கி வந்தாள். அவளது நீண்ட கருங்கூந்தல் அசைந்தாட ,
அவள் நடந்து வருவதை பார்த்தவன்... அவளின் வதனத்தில் மயங்கி மீண்டும் ரசிக்க ஆரம்பித்தான்.
அவளைப் பார்க்கப் பார்க்க...
அவளிடம் பேச ஆசைப்பட்ட மனதை அடக்க முடியாமல், அவள் முன் சென்று நின்றான். அந்த முத்து என்ற வேலைக்காரன் நேற்று இவனிடம் விடுப்பு கேட்டுவிட்டு தான் சென்றிருந்தான்.அது தெரிந்தே அவளை அனுப்பி, உரையாடலை வளர்த்து...
அவளுடன் சிறிது நேரம் கழிப்பதற்காக உரிமையுடன் காபி போட்டு கொண்டு வர சொன்னான்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் நமக்கு தெரியுமே!!!
ஆனால் ஆதித்யா எதிர்பார்க்காத ஒன்று...

மலரின் மீது ஒரு பிடித்தம் வந்த நாள் அன்றே, அவளை மணக்க இருப்பவன் வந்து விட்டான் என்ற செய்தியை தங்கையின் மூலம் அறிந்தது தான்.
அதற்காக அவன் கவலைப்படவில்லை. நினைத்ததை சாதிப்பவன் ஆதித்யா. அதனால் மலரை அடைவது ஒன்றும் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் தங்கையின் கலக்கம் கலந்த வேதனை தான் அவனுக்கு ஆத்திரத்தை கொடுத்தது.
எப்பொழுதும் தங்கை விரும்பியதை அவள் முன் வைப்பதுதான் அவனுக்கு பிடிக்கும். ஆனால் இந்த ஒரு தடவை மட்டும், அவன் விரும்பியது அவனுக்கு கிடைக்கும் ...தங்கை விரும்பியது தங்கைக்கு கிடைக்கும்.
அதில் யாருக்கும் எந்த நட்டமும் வரப்போவதில்லையே!! என்ற எண்ணம் அவனுக்கு. அதனாலேயே தான் பார்த்துக் கொள்வதாக தைரியமாக தங்கையிடம் சொல்லி விட்டான்.

ஆனால் இது ஒன்னும் சாதாரண பொருள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையே!!!
இது இரு நபர்களின் உணர்வுகள் மற்றும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா? இதெல்லாம் ஆதித்யாவிற்கு புரியவில்லை.
புரியும் நேரத்தில் காலம் கடந்திருக்கும்...!!! ஆனாலும் ஆதித்யா தன்னிலை மாறுவான் என்று சொல்வதற்கில்லை?!
ஏதேதோ யோசனையில் மூழ்கியவாறே மலரையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யா.

குழந்தைக்கு உணவு ஊட்டி முடித்தவள்... அவளுக்கு வாய் கழுவிவிட்டு உடை மாற்றுவதற்காக, அவளை தூக்கிக்கொண்டு தனது அறைக்கு செல்ல திரும்பினாள் மலர்.

"வானதி இங்க தான தூங்க போறா.. அவளுக்கு இங்கேயே டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டுடு" என்றான் ஆதித்யா சாதாரணமாக...

மலரின் விழிகள் கடிகாரத்தைப் ஒருமுறை பார்த்துவிட்டு அவனைப் பார்த்தது.
"சௌமி அண்ணா... அவளோட டிரஸ் எல்லாம் என்னோட ரூம்ல தான் இருக்கு அதான்..."
என்று இழுத்தாள் மலர்.

"ஒரு பிரச்சனையும் இல்ல... நீ போய் டிரஸ் எடுத்துட்டு வந்து என்னோட டிரெஸ்ஸிங் ரூம்லயே மாட்டிவிடு..." என்றான் ஆதித்யா.
மலர் அதிர்ந்தாள்.

ஏதோ நெஞ்சுக்குள் சுரண்டியது போல் இருந்தது.
ஆனால் அவனது பேச்சினை மறுக்கமுடியாமல் தனது அறையிலிருந்து வானதியின் உடையை எடுத்து வந்தாள்.
ஆதித்யாவின் உடைமாற்றும் அறையில் இரவு உடையை வானதிக்கு மாற்றி விட்டாள்.

உடையை மாற்றும் பொழுது... மலரின் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் வந்து சென்றது. இன்னைக்கு ஏதோ தப்பா நடக்கிற மாதிரி தோணுது!!! என்று நினைத்தவளை வானதி அழைத்தாள்.
"அத்த, எனக்கு இன்னைக்கு கதை சொல்றேன்னு சொன்னல ...என்ன கதை சொல்ல போற??" என்று கேட்டாள் வானதி.

வானதி அப்படி கேட்டதும்,
"குழந்தை தூங்குற முடியும் இங்கயே இருக்க முடியாதே''
என்று நினைத்த மலர்...
வானதியிடம்,
"அத்தை இன்னைக்கு கதை சொல்ல முடியாது குட்டிமா... "
என்று மெதுவாக புரியவைக்க பார்த்தாள் மலர்.

"ஏன் அத்த...? எனக்கு நீ கதை சொன்னா தான் இப்ப எல்லாம் தூக்கம் வருது" என்று அப்பாவியாக சொன்ன வானதியை பார்க்க மலருக்கு கஷ்டமாக இருந்தது.

"ப்ச்ச்... எல்லாம் உன்னோட காட்டுமிராண்டி மாமா பண்ற வேலைதான் குட்டி..."என்று மலர் சோகமாக சொல்ல,

"மாமா ஒன்னும் காட்டுமிராண்டி இல்ல" என்று பரிந்து கொண்டு வந்தாள் வானதி.

'இதுல மட்டும் நல்லா தெளிவா இரு'என்று நினைத்த மலர்,
"உனக்கு கதை கண்டிப்பா கேட்கணும்னா...
இப்பவே உன்னோட மாமா கிட்ட போய் நான் அத்தை கூட தான் தூங்குவேன் மாமா ...அத்த கதை சொன்னாதான் நான் தூங்குவேன் ....உங்களுக்கு கதை சொல்லவே தெரியாது... நல்லா காட்டுமிராண்டி மாதிரி கத்த மட்டும்தான் தெரியும் எக்ஸட்ரா எக்ஸட்ரா னு... எதையாவது சொல்லிப்பாரு அப்பவாவது உன்னை என்கூட விடுவாரா னு பாப்போம் உன்னோட மாமா" என்று மலர் விளையாட்டாக சொல்லிவிட்டு வானதியை தூக்கிக்கொண்டு ஆதித்யாவின் அறைக்குள் சென்றாள்.

மலர் நினைத்தது என்னவென்றால் வானதி அப்படி ஒன்றும் ஆதித்யாவிடம் சொல்ல மாட்டாள் என்றுதான்....
ஆனால் படுக்கையை விரித்து கொண்டிருந்த ஆதித்யாவிடம் முன் சென்று நின்ற வானதி, மலர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஒப்பித்தாள்.

"நான் அத்தை கூட தான் தூங்குவேன்... மாமா... அத்த கதை சொன்னாதான் நான் தூங்குவேன்... உங்களுக்கு கதை சொல்லவே தெரியாது நல்லா காட்டுமிராண்டி மாதிரி கத்த மட்டும்தான் தெரியும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா..." என்றது குழந்தை அச்சு பிசகாமல்,
சொல்லிவிட்டு சரியாக சொல்லி விட்டேனா? என்பதுபோல் மலரை வேற பார்த்து வைக்க ...
மலர் திருதிருவென முழித்தாள் ...

ஆதித்யா மலரை ஒரு பார்வை பார்த்துவிட்டு குழந்தையிடம் திரும்பி, "உனக்கு ஸ்டோரி தானே வேணும் அத்தை சொல்வாங்க... சரியா கவலைப்படாதே... போ போய் பெட்ல படுத்துக்கோ ...அத்தை கதை சொல்லுவாங்க" என்றான்.

மலர் தயங்கிக்கொண்டே அவனிடம்,
"சௌமி அண்ணா ரொம்ப லேட் ஆக போகுது... மணி ஒன்பது தாண்டிட்டே" என்றாள்.
மலரை பேசவிடாமல்....
"ஆமா நேரம் ஆகிட்டு சீக்கிரம் வானதியை தூங்க வை" என்றான் ஆதித்யா.
மலருக்கு என்ன சொல்லி வெளியே போவது என்று தெரியவில்லை. தான் ஏதாவது சொல்லி அது தவறான கருத்தாக மாறிவிடக் கூடாதே என்று பொறுமை காத்தாள்.

மெத்தையில் அமர்ந்திருந்த மலரின் மடியில் வானதி படுத்துக்கொள்ள, அவளின் தலையை வருடியவாறு கதை சொல்ல ஆரம்பித்தாள் மலர்.
அதை ஆதித்யாவும் கேட்டுக்கொண்டே படுக்கையின் மறுபுறம் தலையணையை முதுகிற்கு கொடுத்தவாறு சாய்ந்து அமர்ந்திருந்தான்.

கைகளை அசைத்தும், கண்களை உருட்டிக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற பாவனைகளை முகத்தில் காட்டி மலர் கதை சொல்ல சொல்ல ஆதித்யாவும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே கதைக்குள் மூழ்கினான்.

"அந்த இளவரசன் ஓட கண்ணுல ராபுஞ்ஜெல் கண்ணீர் விழுந்ததும், அவனுக்கு கண்ணு தெரிய ஆரம்பிச்சுடும்" என்று சொல்லிக்கொண்டே வானதியை பார்க்க அவள் நன்றாக தூங்கியிருந்தாள்.
அவளது தலையை தன் மடியிலிருந்து எடுத்து தலையணையில் வைத்தவளிடம்,

"அந்த இளவரசனுக்கும் ராபுஞ்ஜெல்க்கும் கல்யாணம் ஆயிடுச்சா? இல்லையா?" என்று ஆதித்யா கேட்கவும் திடுக்கிட்டு திரும்பி அவனை பார்த்தாள்.

அவனும் இவ்வளவு நேரம் கதையை கேட்டுக் கொண்டிருந்தான் போலும்...
"ம்ம்ம்... கல்யாணம் ஆகிடும்... அவளோட உண்மையான பேரன்ட்ஸ கூட மீட் பண்ணிடுவா" என்றாள் மலர் லேசான சிரிப்புடன்...

சிறு குழந்தையின் கதையை போய் இவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டிருக்கிறானே!!! என்றுதான்...

'அப்பாடி இனி எந்த பிரச்சனையும் இல்லை' என்று நினைத்து மலர் அறையைவிட்டு வெளியே செல்ல திரும்பும்பொழுது,
"மலர் நீ என்ன உண்மையாகவே வெறுக்கிறியா?"என்ற ஆதித்யாவின் கேள்வியில் ஷாக் அடித்தது போல் நின்றாள் மலர்.

பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து திரும்பிய மலர்,
"அப்படி எல்லாம் இல்ல சௌமி அண்ணா. உங்களை பாத்தா எனக்கு பயமா தான் இருக்கும்... வேற ஒன்னும் இல்ல"என்றாள்.

"அப்ப எதுக்கு என்ன காட்டுமிராண்டினு சின்ன குழந்தை கிட்ட சொல்லி கொடுத்திருக்க...ஹான்ன்???" என்று ஆதித்யா கேட்கவும் லேசாக திணறிய மலர்...

"அது உங்க மேல உள்ள பயத்தினால் சொன்னது ...நான் மனசார உங்கள வெறுக்கவே இல்ல... சௌமி அண்ணா" என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டதும் ஆதித்யா எழுந்து மலரின் அருகே வந்தான்.

மலர் லேசாக பயந்து நகர பார்க்க, எட்டி அவளது கைகளை பிடித்தவன்...
" நீ மனசார என்ன வெறுக்கலனா சரி... ஆனா என்ன மனசார விரும்ப பாரு..." என்றான் ஆழ்ந்த குரலில்.....

மலர் இது கனவா? நினைவா? என்று புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

தொடரும்....

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN