மண்ணில் தோன்றிய வைரம் 7

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த அஸ்வினின் கவனத்தை கலைத்தது அவனது அலைப்பேசி ஒலி.

அதனை எடுத்த அஸ்வின்
“சொல்லுங்க சஞ்சய்” என்று கூறியபடி தன்னிடம் விட்டு எழும்பி செல்ல அந்தப்புறம் சஞ்சய்

“அஸ்வின் சாரு பக்கத்திலயா இருக்கா??”

“இல்லையே சஞ்சய். அவங்க மண்டபத்திற்குள்ளே தான் இருக்காங்க. ஏன் சஞ்சய் ஏதும் பிராப்ளமா??”

“அதெல்லாம் இல்லை. பேசிக்கிட்டு இருக்கும் போது திடீர்னு லைன் கட்டாகிருச்சி. திரும்ப ட்ரை பண்ணப்போ ரிங் போய்ட்டு கட்டாகிருச்சி... அதான் உங்களுக்கு கால் பண்ணேன். அவளை பார்த்தா என்னோட நம்பருக்கு கூப்பிட சொல்லுறீங்களா?” என்று சஞ்சய் கேட்க

“சத்தத்தில் போன் ரிங் ஆகுனது கேட்காம இருந்திருக்கும். இங்க சிக்னலும் வீக். நான் அவங்களை உங்களுக்கு கால் பண்ண சொல்றேன்” என்றுவிட்டு போனை அணைத்த அஸ்வின் சாருவை தேடத் தொடங்கினான். ஆனால் அங்கு சாருவின் நிலை......????

சாருவை தேட மண்பத்தினுள் சென்ற அஸ்வின் அவளை அங்கு காணாது ராக்கேஷிடம் விசாரிக்க அவனோ தெரியவில்லை என்று கூறிவிட்டு அவளது மற்ற தோழிகளிடம் விசாரிக்க அவர்கள் அவள் போன் பேசுவதற்காக வெளியே சென்றதாக கூறினர். அதன்படி சாருவை மண்டபத்திற்கு வெளியே தேடத்தொடங்கினான் அஸ்வின். அவளது அழைபேசிக்கு முயன்றவாறு அங்கிருந்த ஆற்றுங்கரையோரம் வந்த அஸ்வின் அங்கு ஏதோ சத்தம் கேட்க அது என்வென்று பார்க்கும் பொருட்டு சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான். அங்கிருந்த புற்களுக்கிடையே இருந்து ஏதோ சத்தம் கேட்க அதை நோக்கி குனிந்தவன் அங்கு ஐ 8 போன் ஒலித்துக்கொண்டிருப்பதை பார்த்தான்.

அதை பார்த்ததும் அது சாருவினுடைய போன் என்று புரிய அதனை கையில் எடுத்து அணைத்துவிட்டு அதனை தனது பார்க்கெட்டில் வைத்துவிட்டு சாருவை நாலாபுறமும் தேடத்தொடங்கினான். “சாரு சாரு” என்ற அவனது குரலுக்கு பதில் கிடைக்காமல் போக அவனுள் ஒரு நடுக்கம் பரவத்தொடங்கியது. எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் நிதானமாக யோசித்து செயல்படுபவனுக்கு இப்பொழுது மூளை செயற்பட மறுத்தது. மூளை மறுத்த மறு கணம் மனம் தாறுமாறாக தன் கற்பனையை படரவிட்டு அவனுள் இனம்புரியாத ஒரு பயத்தினை உண்டுபண்ணி அவனை பலவீனமாக்கியது.
ஆனாலும் அவனது கண்கள் சாருவை தேடுவதை நிறுத்தவில்லை.. அவனது முயற்சிக்கு பலனாக ஆற்றிற்கு இறங்கும் படிக்கட்டின் மீது ரத்தம் சொட்ட மயங்கிக்கிடந்தாள் சாரு.

அவளை கண்ட மறுநொடி மகிழ்ந்த மனம் அவள் ரத்தம் சொட்ட மயங்கிக் கிடந்த கோலம் அவனது மகிழ்ந்த மனதை கலங்கடித்தது. நீ இவ்வாறு கலங்குவதில் அர்த்தமில்லை என்று மூளை அவனுக்கு பணிக்க அவளது நிலை அறியும் பொருட்டு அவ்விடம் நோக்கி விரைந்தான் அஸ்வின்.
படிக்கட்டின் மேல் கிடந்தவளின் தலையில் அடிப்பட்டிருக்க அதனால் உருவான ஆழமான காயத்தினால் ரத்தம் பெருக்கெடுத்து அவளது அழகிய வதனத்தை முற்றுகையிட்டிருந்தது.

அவளை நெருங்கிய அஸ்வின் அவளது உதிரத்தை பார்த்து தன் பாக்கெட்டில் இருந்த அவனது வெண்ணிற கைகுட்டையினை எடுத்து அவளது தலையில் கட்டிவிட்டு அவளது கன்னத்தை தட்டி அவளை எழுப்ப முயல அவளிடம் எந்தவொரு அசைவும் இல்லை. தாமதிக்காது உடனடியாக அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு கார் நின்றுக்கொண்டிருந்த இடத்திற்கு நோக்கி சென்றான். காரினருகே நின்றுக்கொண்டிருந்த டிரைவரிடம் காரை எடுக்குமாறு சாருவை பின் சீட்டில் வாகாக படுக்கவைத்துவிட்டு அவனனும் காரினுள் ஏறிக்கொண்டான்.

அவன் காரினுள் ஏறிய அடுத்த நொடி கார் மின்னல் வேகத்தில் பறக்க சாருவை தன் மடியில் கிடத்திக்கொண்டு அங்கிருந்த டிசுவினால் அவளது இரத்தக்கறைகளை துடைத்துக்கொண்டே டிரைவரிடம்
“அண்ணா ஆஸ்பிடல் எங்க இருக்குனு தெரியுமா?” என்று வினவ

“ஆமா தம்பி வரும் வழியில் பார்த்தேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் போயிரலாம்” என்று கூற அவனது கைகள் அவளது முகத்தில் இருந்த இரத்தத்தை துடைத்த வண்ணம் இருந்தது. மூன்று நிமிடத்தில் ஆஸ்பிடலை கார் அடைய அதிலிருந்து விரைந்து இறங்கிய டிரைவர் உள் சென்று உரியவர்களை ஸ்டெச்சருடன் அழைத்து வர அவர்கள் அஸ்வின் காலின் மீது தலை வைத்து படுத்திருந்த சாருவை மெதுவாக தூக்கி ஸ்டெச்சரில் படுக்கவைத்து ஸ்ரெச்சரை எமர்ஜென்சி வாடினை நோக்கி தள்ளிச்சென்றனர். அவளை தூக்கி சென்றதும் காரிலிருந்து இறங்கி அஸ்வின் டிரைவரிடம் காரை ஓரமாய் நிறுத்துமாறு கூறிவிட்டு ஆஸ்பிடலினுள் விரைந்தான். அங்கு எமர்ஜன்சி வாடில் அனுமதிக்கப்பட்ட சாருவை பற்றிய விபரங்களை கேட்ட தாதியிடம் விபரங்களை வழங்கிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் அஸ்வின்.

அமர்ந்தவனுக்கு இவ்வளவு நேரம் இழுத்து பிடித்திருந்த தைரியம் காற்றாய் மறைய கண்கள் கலங்கத்தொடங்கியது.எவ்வளவு அழகாக தொடங்கிய நாள். காலையில் அவன் தேவதையாய் வலம் வந்த சாருவும் இப்போது அடிப்பட்டு ரத்தம் சொட்ட மயங்கிக்கிடந்த சாருவும் கண் முன்னால் வந்து அவனது துக்கத்திற்கு வலு சேர்த்தனர். எப்போதும் நானும் புன்னகையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்ற ரீதியில் புன்னகையை தவழவிட்டவாறு மலந்திருக்கும் அவள் முகம் இன்று புயலில் சிக்கிச் சிதைந்த கொடியாய் வாடி இருந்தது அவனது உயிரினை ஊடுருவிச்சென்று வலித்தது. அந்த சந்தர்ப்பத்தில் கூட தான் ஏன் அவளுக்கொன்று என்றால் இப்படி வருந்துகின்றோம் என்று அறியமுயலாமல் இருக்க கடுப்பான அவனது மனசாட்சி

“டேய் நீ ஏன்டா சும்மா சீனப்போடுற? அவ யாரு உனக்கு சொந்தமா பந்தமா??” என்று கேட்க அதற்கு பதிலளிக்க தெரியாமல் அவன் அமைதியாக மீண்டும் அவனை கேள்விகளால் துளைத்தது அவனது மனசாட்சி.

“ டேய் இப்படி அமைதியா இருந்து தப்பிச்சிரலாம்னு நினைக்காத... இன்னைக்கு நீ இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்” என்று மறுபடியும் மனசாட்சி வற்புறுத்த அப்பொழுதும் அவனது மனதினை உணராது அவன் மௌனம் காக்க

“டேய் நீ எல்லாம் என்ன ஜென்மம் டா.. ஒரு பொண்ணை பயங்கரமா சைட் அடிப்பியாம். கனவிலேயே அவளை கல்யாணம் பண்ணிப்பியாம். ஆனா நிஜத்தில அவ யாருனு கேட்டா சைலண்ட் ஆகிருவியாம்.. டேய் இன்னுமாடா உனக்கு புரியலை??” என்று அவனது மனசாட்சி அவனை கேள்வி எனும் சாட்டையால் தாறுமாறாய் விளாச ஆப் ஆகியிருந்த பல்ப் அப்போது எறிய ஆரம்பித்தது.

“அப்போ அதுவா??” என்று அவன் மனசாட்சியிடமே வினவ காண்டான மனசாட்சியோ

“ஆமாண்டா விளக்கெண்ணே...” என்றுவிட்டு சைலண்டாகிவிட அஸ்வினோ உள்ளுக்குள் ஏகத்துக்கு துள்ளினான். அவனது துள்ளல் முகத்தில் ஒரு புன்னகையை தோன்றுவித்த வேளையில் சாருவை அனுமதித்திருந்த அறையில் இருந்து டாக்டர் வெளியே வந்தார். அவரை நோக்கி விரைந்த அஸ்வின்

“டாக்டர் சாரு எப்படி இருக்கா?” என்று கேட்க

“சின்ன அடிதான். கைதான் பிராக்சர் ஆகிருக்கு. பாண்டேஜ் போட்டுருக்கேன். அடிப்பட்டது காலையில இருந்து சாப்பிடாம இருந்தது எல்லாம் சேர்ந்து தான் அவங்க மயங்கிட்டாங்க.. மத்தபடி ஏதும் இல்லை. இப்போ குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில கண்ணு முழிச்சிருவாங்க.. கையில பாண்டேஜ் டூ வீக்ஸ் இருக்கட்டும். டூ டேசுக்கு ஒருவாட்டி டிரசிங்கிற்கு கூட்டிட்டு வாங்க.. மற்றபடி ஏந்த பிராப்ளமும் இல்லை. ஷூஸ் ஆல் ரைட்” என்று அஸ்வினின் தோளை தட்டிவிட்டு டாக்டர் செல்ல அவருக்கு நன்றியை தெரிவித்து சாருவை பார்க்க அறையினுள் சென்றான்.

அங்கு அறையினுள் தலையில் கட்டுடன் வலக்கையில் பாண்டேஜுடனும் உறக்கிக்கொண்டிருந்தாள் சாரு. அவளது கையை தாங்கும் விதமாக பாண்டேஜ் அவளது கழுத்துடன் பொருத்தப்பட்டிருக்க அக்கையை தன் மார்பை அணைத்தவாறு வைத்திருக்க மறுகையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. அந்த நிலையில் தன்னவளை கண்டதும் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வலி அவனுள் எழுந்தது. அவன் வருந்துவதை விரும்பாத சாருவின் அலைபேசியோ ஒலி எழுப்பி அவன் கவனத்தை தன் புறம் திருப்பியது. அழைப்பினை ஏற்ற அஸ்வினுக்கு சஞ்சயின் குரல் வந்தனம் கூறியது.

"ஹலோ சாரு… எவ்வளவு நேரம் ட்ரை பண்ணுறது.. போன் கட்டாகுனா திரும்ப கால் பண்ண மாட்டியா?” என்று தன்பாட்டில் பேசிச்சென்ற சஞ்சயை..

“ஹலோ சஞ்சய் நான் அஸ்வின் பேசுறேன்” என்று கூற

“அஸ்வின் நீங்க எப்படி சாரு போன்ல?”

“சாருவிற்கு ஒரு சின்ன ஆக்சிடன்ட்” என்று அஸ்வின் கூறிய அடுத்த நொடி

“ஆக்சிடன்டா? எப்போ? எப்படி?? இப்போ எங்க இருக்கீங்க??அவ எப்படி இருக்கா??”என்ற அடுக்கடுக்கான கேள்விகளிலே அவனது அக்கறையை வெளிப்படுத்த

“கூல் சஞ்சய்... இப்போ சாரு நல்லா இருக்காங்க.. அங்க என்ன நடந்திச்சினு தெரியலை அவங்க கண்முழிச்சா தான் நடந்தது என்னானு தெரியும்.. நீங்க கால் பண்ணதால நான் அவங்களை தேடி போனேன். அப்போ அங்கிருந்த ஆற்றங்கரை படிகட்டுல மயங்கி கிடந்தாங்க. அங்க இருந்து அப்படியே அவங்களை ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்துட்டேன். கையில பிராக்சராகிருக்குனு சொல்லி கட்டுபோட்டுருக்காங்க ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு...”

“ஓ.... இப்போ சாரு கூட பேசமுடியுமா?”

“இல்லை சஞ்சய். அவங்க தூங்குறாங்க. அவங்க கண் முழிச்சோன நான் உங்களை கூப்பிடுறேன்.”

“ ஓகே அஸ்வின். வேறு ஏதும் தேவைனா சொல்லுங்க. டிஸ்சார்ஜ் பண்ண பிறகு காரில் இங்க வந்துருவீங்களா இல்லைனா நான் அங்க வரவா??”

“இல்ல சஞ்சய். நான் சாருவை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். சாருவுக்கு இந்த நேரத்தில் பெண் துணை வேண்டும். அங்க கவி,சித்தி, பாட்டினு எல்லாரும் இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க. நீங்க சாருவை பற்றி கவலைப்படாதிங்க. அவங்க என் பொறுப்பு” என்று சஞ்சயை சமாதானப்படுத்த அவனோ மனதில்

“அப்படியே இனிமேனு ஒரு வார்த்தையையும் சேர்த்து சொல்லியிருந்தனா இன்னும் சந்தோஷப்பட்டுருப்பேன்”என்று நினைத்ததை வெளியே சொல்லாமல்

“ஓகே அஸ்வின். சாரு கண்முழித்தவுடன் எனக்கு கால் பண்ணுங்க.. வேறு ஏதும் தேவைனாலும் சொல்லுங்க”

“ஓகே சஞ்சய். நீங்க கவலை படாதிங்க. ஐல் டேக் கேர் ஒப் ஹேர்” என்றுவிட்டு போனை அணைத்தான் அஸ்வின்.

பின் நியாபகம் வந்தவனாக அந்த அலைபேசியில் ஏதோ செய்தவன் பின் அதனை அணைத்துவிட்டு தன் பாக்கெட்டினுள் வைத்துவிட்டான். பின் தன் அலைபேசியில் ராக்கேஷிற்க்கு அழைத்து உண்மையை சொல்லி அங்குள்ளவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாது ஒரு அவசர வேலையாக தானும் சாருவும் சொல்லாமல் கிளம்ப வேண்டியதாகிவிட்டது என்று பொய் உரைத்துவிட்டு அதற்கு மன்னிப்பும் வேண்டிவிட்டு போனை அணைத்தான்.
பின் தன் சித்தியை அழைத்து விவரம் கூறியவன் சாருவை அங்கு அழைத்து வரப்போவதையும் கூற அவரும் அதையே ஆமோதித்தார். அவன் பேசி முடித்துவிட்டு வைக்கும் வேளையில் கண்முழித்தாள் சாரு. கண்முழித்ததும் அவள் எழும்ப முயல அவளது அசைவில் அவள் எழுந்ததை உணர்ந்த அஸ்வின்

“ஹே... சாரு எழும்ப முயற்சித்து ஸ்ரெய்ன் பண்ணிக்காதிங்க.. உங்களுக்கு சேலைன் ஏறிட்டு இருக்கு.” என்று அஸ்வின் கூற அப்போது தான் தன் இடக்கையில் உணர்ந்த வலிக்கான காரணத்தை அறிந்தாள். பின்

“நான் எப்படி இங்க??”என்று கேட்க நடந்த தனக்கு தெரிந்த அனைத்து விபரங்களையும் கூறினான். பின் அவளிடம் விபரம் கேட்க அவள் தான் விழுந்த கதையை கூறத்தொடங்கினாள்.

“நான் சஞ்சுவோட பேசிட்டே ஆற்றங்கரை படிக்கட்டுகிட்ட வந்து அங்கு தூணா இருந்த அந்த கல்லு மேல இருந்த அந்த இலைய பிடுங்கிட்டே பேசிட்டு இருந்தேன். திடீர்னு அந்த கல்லில் இருந்த துளையில் இருந்து ஏதோ கருப்பா ஒரு பூச்சி வந்துச்சு. எனக்கு சின்ன வயசுல இருந்தே பூச்சினா பயம். அந்த பூச்சினை பார்த்து பயத்திலே பின்னாடி போக முயற்சி பண்ணேன்.காலை தூக்கி மேலிருந்த படிக்கட்டுல வைக்காம பின்னாடி போக அங்க பாசி படிந்து இருக்க அது வழுக்கி கீழ விழுந்துட்டேன். அதுக்கு பிறகு எனக்கு கான்சியஸ் போயிருச்சி” என்று தன் கதையை சாரு கூற அவள் கூறிய தோரணையில் சிரிப்பு வந்தாலும் அவனது மிக முக்கிய சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டி “ அது சரி ஆனா உங்க மொபைலை மட்டும் எப்படி எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றுனீங்க?” என்று கேட்க அப்போது தான் நியாபகம் வந்தவளாக “என்னோட மொபலை எடுத்துகிட்டீங்களா? இல்லாட்டி மிஸ் ஆகிருச்சா?”என்று கேட்க

“இந்தாங்க உங்க மொபைல்” என்று அஸ்வின் அவளிடம் மொபைலை வழங்க அதை வாங்கிய சாரு அதனை செக் செய்ய

“சஞ்சய் கால் பண்ணி இருந்தாரு. நீங்க கண் முழிச்சோன உங்களை பேசச் சொன்னாரு” என்று கூற அவனது கேள்விக்கு பதில் கூற தொடங்கினாள் சாரு.

“அந்த போன் எனக்கு ரொம்ப முக்கியம். ரொம்ப முக்கியமான சில போல்டர்ஸ் அதுல இருக்கு.சோ கீழ விழப்போறேனு தெரிந்தவுடனே அதை தூர தூக்கி போட்டுட்டேன். எப்படியும் ரிப்பெயார் வராதுனு தெரியும். அந்த நம்பிக்கையில் தூர தூக்கி போட்டுட்டேன்.”என்று சாரு கூற இவ்வளவு நேரம் அஸ்வின் கட்டுப்படுத்தியிருந்த சிரிப்பு உடைப்பெடுத்த வெள்ளமாய் வெளிவரத்தொடங்கியது.

அவன் சிரிப்பதை பார்த்த சாரு அவனை முறைக்க அவனோ சிரிப்பை கட்டுப்படுத்தும் வகையறியாது தொடர்ந்து சிரித்த வண்ணம் இருந்தான்.

அவனின் சிரிப்பில் காண்டான சாரு
“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?? நான் விழுந்தது உங்களுக்கு சிரிப்பா இருக்கா??” என்று சிறு கோபத்துடன் வினவ

“ஐயோ இல்லைங்க.. நீங்க சொன்ன ரீசனை கேட்டோன என்னால வந்த சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலை அதான் சிரிச்சிட்டேன். சாரி” என்று மன்னிப்பு கேட்க

“ட்ஸ் ஓகே..”

“சாரு ஈவினிங் டிஸ்சார்ஜ் ஆகுனோன நம்ம வீட்டுக்கு போகலாம். உன்னோட டிரஸ் எல்லாம் எடுத்து அனுப்ப சொல்லிட்டேன். உங்க கை குணமாகிற வரைக்கும் நம்ம வீட்டுலயே தங்கிக்கோங்க. உங்களால தனியா மானேஜ் பண்ண முடியாது.. அதான் இந்த ஐடியா.. சித்திகிட்டயும் சொல்லிட்டேன். அவங்க பார்த்துக்கிறேனு சொல்லிட்டாங்க” என்று கூறிய அஸ்வின் அறையினுள் டாக்டர் நுழைவதை பார்த்து தன் உரையை நிறுத்தினான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN