மண்ணில் தோன்றிய வைரம் 9

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலை ஆறரை மணியளவில் அஸ்வினுடன் வந்த சாரு ஹோட்டலினுள் செல்ல அவளுடன் வந்த அஸ்வினை அழைபேசி அழைக்க அவளை முன் செல்லுமாறு கூறிவிட்டு தன் அழைப்பினை அவன் தொடர சாரு ஹோட்டலினுள் சென்றாள்.... உள்ளே சென்று அமர்ந்திருந்தவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி....... அது அதிர்ச்சியா இல்லை...?????

ஹோட்டலினுள் சென்ற சாரு ரிசப்ஷனில் விசாரித்துவிட்டு தனக்காக ரிசவ் செய்யப்பட்டிருந்த அந்த மேஜையில் அமர்ந்து காத்திருந்தாள். அவள் காத்திருக்க திடீரென விளக்குகள் அனைத்தும் அணைந்தது. திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வினால் பயந்த சாரு தன் வாலட்டில் இருந்த மொபைலை தட்டுத்தடுமாறி எடுக்க முயல அந்நேரத்தில் அவளது கண்கள் கட்டப்பட்டு அவளை யாரோ தள்ளிச்செல்வது போல் உணர்ந்தாள். கத்த முயன்ற அவளது வாயினையும் கைகளையும் யாரோ சிறை செய்ய அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது. இரு நிமிட நடை பயணத்தின் பின் அவளது கைகள் விடுவிக்கப்பட விரைந்து தன் வாய்கட்டை அவிழ்த்தவள் தன் கண்கட்டை அவிழ்க்கும் போது மெல்லிய வயலின் இசையுடன் கூடிய பியானோ இசை கேட்டது. தன் கண்கட்டை அவிழ்த்து பார்த்தவள் பிரமித்தாள். அவளது பிரம்மிப்பிற்கு காரணம் அவள் முன்னிருந்த இசைக்குழுவினரும்,நடனக்குழுவினரும் மற்றும் அழகாய் காதலினை பிரதிபலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த கார்டன் வியூவும். அந்த இருளில் அந்த வடிவமைப்பு அவளது மனதை கொள்ளை கொண்டது. சிவப்பு நிற பலூன்களால் உருக்கப்பட்ட அந்த ஆர்ச் சிறு மேடை போன்ற அமைப்பின் மேல் இருக்க மேடைக்கு முன் இசைக்கருவிகளை ஏந்திய வண்ணம் சிலரும் இதய வடிவ பலூன்களை ஏந்திய வண்ணம் சிலரும் இருந்தனர். அவர்கள் கையில் ஏதோ பலகை போன்ற ஒரு பொருளும் இருந்தது.. அந்த மேடை அமைப்பிற்கு நேர் எதிரே சற்று தொலைவில் ஒரு இருக்கையுடன் கூடிய மேசை போடப்பட்டருந்தது. அது சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது. அந்த மேசையின் மீது ஒரு பூச்சாடியில் பல சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு இதயவடிவால் ஆன பிரத்யேகமாக இது காதலர்களுக்கானது என்று பிரதிபலிக்கும் வகையில் காண்டில் ஸ்டான்டுடன் கூடிய சிவப்பு நிற காண்டில் ஏற்றப்பட்டிருந்தது.அந்த மேசையில் இருந்து மேடைக்கான பாதையில் சிவப்பு நிற கார்ப்பட் விரிக்கப்பட்டு அதன் மேல் ரோஜா இதழ்கள் தூவப்பட்டு இருந்தது. அந்த நடைப்பாதையின் இருப்பகுதியிலும் கம்பங்கள் நடப்பட்டு இரண்டும் அழகிய ரோஜாப்பூ மாலையினாலும் பலூன்களாலும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக அவ்விடத்திற்கு அரணாய் இருந்த வேலியின் மேல் சிவப்பு மற்றும் வெள்ளை நிற மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு இருள் சூழ்ந்த அந்த இடத்திற்கு வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக முழு நிலா இரவு நேர வானில் காய்ந்துக்கொண்டிருந்தது. அந்த நிலவிற்கு துணையாய் கடலலைகள் அலைப்பாய்ந்த வண்ணம் இருந்தது. இவ்வாறு முழுக்க முழுக்க காதலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தும் அமைக்கப்பட்டும் இருந்த அவ்வழகிய இடத்திற்கு தன்னை கடத்தி வந்தது யார் என்ற ஆவல் சாருவிடம் பெருக ஆரம்பித்தது..

அவளது ஆவலை மேலும் அதிகரிக்கும் வண்ணம் இசைக்கருவிகள் “த டவ்ன் இஸ் பிரேகிங்.... எ லைட் இஸ் சைனிங் த்ரூ...” என்ற ஆங்கில பாடல் இசைக்கப்பட அதற்கு ஏற்றாற் போல் அங்கிருந்த குழுவினர் ஆடத்தொடங்கினர்.
ஆடலின் இடையில் ஒவ்வொருவரும் ஒரு சிவப்பு ரோஜாவுடன் வந்து ரோஜாவினை சாருவிடம் கொடுத்துவிட்டு கையில் வைத்திருந்த அந்த பலகையை திருப்பி பிடித்தபடி முழங்காலில் அமர்ந்தனர். அவர்கள் திருப்பி பிடித்த ஒவ்வொரு பலகையிலும் ஒரு ஆங்கில எழுத்து இருந்தது. அனைவரும் ரோஜாவினை கொடுத்து விட்டு அமர்ந்த பின் அப்பலகையில் உள்ளதை வாசித்தாள் சாரு...

“வில் யூ மேரி ஹிம்??” என்ற கேள்வியை தொடர்ந்து பின்புறம் பார்க்குமாறு ஒரு சைகைக்குறி இருக்க சாரு அந்த குறி சுட்டிக்காட்டிய திசையை பார்க்க முயல அமர்ந்திருந்த குழுவினர் எழும்பி அவளுக்கு வழி விட்டனர். அங்கு ஒரு இளைஞன் அங்கிருந்த டிரம் செட்டின் முன் அமர்ந்திருந்தான். அவன் அணிந்திருந்த தொப்பி அவனது முகத்தை மறைத்திருக்க அவன் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினான். அவனது டிரம்ஸ் வாசிப்பு சிறிது நேரத்தில் முடிவடைய அவனது கைக்கு மைக் ஒன்று வந்திருந்தது.. மைக் வந்த அடுத்த நொடி பாடத்தொடங்கினான்....

அதே நிலா ...
அதே நிலா...
அதே அதே அதே அதே நிலா.....
அதே நிலா...
அதே நிலா...
அதே அதே அதே அதே நிலா...
காதல் சொன்னதும் அதே நிலா...
மோகம் தந்ததும் அதே நிலா..
வெட்கம் கொண்டதும் அதே நிலா..
ஓஹோ..முத்தம் சிந்துது சிந்துது அதே நிலா..

என்று பாடியபடி அந்த இளைஞன் ரோஜா பூச்செண்டுடன் சாருவின் அருகில் வர அவன் யாரென்று இது வரை நேரம் தெரியாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்த சாரு அவன் அருகில் வர வர யாரென்று அறிந்தவள் உச்ச கட்ட அதிர்ச்சியடைந்தாள்...
அவள் அருகில் வந்த இளைஞன் மண்டியிட்டு பூச்செண்டினை அவளிடம் நீட்ட அவனை நெருங்கிய சாரு அவனது தொப்பியை நீக்கியவாறே அவனை அஸ்வின் என்று அழைக்க......

ஆம் இவ்வளவு நேரம் அந்த இளைஞன் என்று அழைக்கப்பட்டவன் நம் அஸ்வினே....

அஸ்வின் வழங்கிய பூச்செண்டினை சாரு வாங்கும் போது சாருவின் மகிழ்ச்சியின் உச்சம் கண்ணீராய் வெளிப்பட தொடங்கியது. அவளது வலக்கையை ஏந்தி முத்தமிட்டவன் அவளது கண்களை நோக்க அவனது பார்வையின் வேண்டுகோலுக்கிணங்கி அவளது கண்கள் கண்ணீருக்கு விடை கொடுத்து இதழ்கள் சிரிப்பை கொள்வனவு செய்து கொண்டது. பின் எழும்பியவன் அவளது முன்னுச்சியில் முத்தமிட அதில் மகிழ்ந்தவள் அவன் மார்பில் சாய்ந்தாள். பின் அவளை தன்னிடம் இருந்து விளக்கியவன் அவளிடம் தன் கையை நீட்ட அவள் தன் இடக்கையில் இருந்த அனைத்து ரோஜாப்பூக்களையும் வலக்கைக்கு மாற்றிவிட்டு அவனிடம் இடக்கையை நீட்ட அவன் அவளது புறக்கையில் ஒரு முத்தத்தினை வைத்து விட்டு அவளை மேடை நோக்கி அழைத்து சென்றான். அவன் பாடிய பாடல் இப்போது ஸ்பீக்கரில் ஒலிக்க அவளுடன் சேர்ந்து கப்பில் டான்ஸ் ஆடத்தொடங்கினான்.

காதல் சொன்னதும் அதே நிலா....
காக்க சொன்னதும் அதே நிலா..
கூச்சம் கொண்டதும் அதே நிலா...
கூட சொன்னதும் அதே நிலா...
ஹோ.கூட சொல்லுது சொல்லுது அதே நிலா...

கோடி கவிதைகள் பார்க்கும் நிலா..
ஜோடி விழிகளை ஏற்கும் நிலா..
என்னை கவிஞன் ஆக்கும் நிலா..
எந்தன் அருகில் பூக்கும் நிலா...
ஹோ எந்தன் அருகில் பூக்கும் இந்த நிலா...
வானை அழகினில் காட்டும் நிலா..
என்னுள் மிருகத்தை மூட்டும் நிலா....
ரெண்டு இதயம் கூட்டும் நிலா...
காதல் ஓவியம் தீட்டும் நிலா..
ஹோ காதல் ஓவியம் தீட்டும் இந்த நிலா...
அதே நிலா அதே நிலா
அதே அதே அதே அதே நிலா.....

என்றவாறு பாடல் முடிய சாரு தன் கையில் இருந்த அந்த பூச்செண்டினை அவனைப்போலே மண்டியிட்டு அவள் அவனிடம் காதல் யாசகம் செய்தாள்......
அதற்கு அஸ்வினின் பதில் எவ்வாறு இருக்கும்??????
சாரு காதல் யாசகம் பெறுவதற்காக அவன் முன் மண்டியிட்டிருக்க அவனோ அவளை எழுப்பி தன் பதிலால் அவளை கதிகலங்க வைத்தான்.

“நான் ஓல்ரெடி ஒரு பெண்ணை விரும்புறேன். அந்த பொண்ணும் என்னை உருகி உருகி காதலிக்கிறாளாம். தினமும் போன் பண்ணி ஐ டெரிப்லி மிஸ்ஸிங் யூ னு சொல்லி புலம்புறா.... நானும் இவ்வளவு நாளா ஒன்றும் சொல்லலை. ஆனா இப்போ அவ தான் வேணும்னு என் மனசு சொல்லுது... உங்களுக்கு ஓகே சொன்னா அவளுக்கு நான் துரோகம் பண்ண மாதிரி போய்விடும். என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டே கொன்னுரும்... அதுனால...” என்று அஸ்வின் முடிப்பதற்குள் காளி அவதாரம் எடுத்தாள் சாரு.... அவனது சட்டையை கொத்தா பிடித்து

“ஏண்டா டேய்... என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியிது??? செவனேனு இருந்தவள இழுத்துட்டு வந்து பிரபோஸ் பண்ணிட்டு இப்போ இன்னொருத்தி கூட கமிட் ஆகிட்டேனு சொல்லுவியா??? சொன்ன வாயை கடிச்சி துப்பிருவேன் பார்த்துக்கோ.... இவரை நாங்க பல வருஷமா சைட் அடித்து லவ் பண்ணுவோமாம். இவரு வேறு பெண்ணுடன் கமிட் ஆகிருவாறாம். அது எப்படி அவ உன்னை மிஸ் யூனு சொல்லி புலம்புறதால நீ அவளை ஓகே பண்ணுவியா.... டேய் எத்தனை நாள் உனக்கு பேக் அக்கவுண்டில் இருந்து மிஸ் யூ மெசேஜ் அனுப்பியிருப்பேன்... என்றாவது அதுக்கு ரிப்ளை பண்ணியிருப்பியா??? எவ்வளவு நாட்கள் என்னோட லவ்வை புரிந்துகொள் என்று கெஞ்சியிருப்பேன். இதெல்லாம் துரைக்கு பாவமா தெரியலையோ???. இப்படி ஒரு மனசாட்சியே இல்லாத ஒருத்தனை நான் காலேஜ் டைமில் இருந்து லவ் பண்ணேன் பாரு.. என் புத்தியை செருப்பால அடிக்கணும். ஆனா ஒன்று மட்டும் மனதில் வச்சிகோ. அந்த சண்டாளிக்கு ஓகே சொல்லலாம்னு நினைத்த மகனே உன்னை மட்டும் இல்லை அவளையும் சேர்த்து கட்டிவச்சி சவுக்காளயே அடிப்பேன் பார்த்துக்கோ.... நீ எப்பவும் எனக்கு மட்டும் தான் சொந்தம்... வேற எவளயாவது நடுவில் நுழைக்கலாம்னு நினைச்ச உன்னை குருமா செய்து சாப்பிட்டிருவேன். பார்த்துக்கோ” என்று அஸ்வினை வார்த்தைகளாலே துவைத்து எடுத்த சாருவின் பேச்சு அஸ்வினுக்கு சிரிப்பை உண்டாக்கியது. அவனது சிரிப்பை கண்டு மீண்டும் சாரு கொதித்தெழு

“யம்மா தாயே.... என் வாய்டா இது.... இந்த புள்ளையும் பால் குடிக்குமாங்குற ரேஞ்சில் இருந்துக்கிட்டு என்னமா பேசுற.... விட்டா கெட்ட வார்த்தையிலெல்லாம் திட்டுவ போல இருக்கு.. உனக்கு அந்த அராத்து ஆனந்திங்கிற பேரு சரியாத தான் இருக்கு. சண்டைக்கோழி மாதிரி இப்படி சிலிர்த்துக்கிட்டு வார... கொஞ்சம் விட்டிருந்தா வாயாலையே என்னை பொரித்து எடுத்து சாப்பிட்டிருப்ப போல.....”என்று அஸ்வின் அராத்து ஆனந்தி என்ற பெயரை சொன்னவுடன் அவனது சட்டையை விட்ட சாரு.... அஸ்வின் தன்னை கண்டு கொண்டான் என்று உணர்ந்து வெட்கம் வந்து சூழ்ந்து கொள்ள மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்.

அவளது வெட்கம் அஸ்வினுக்கு அவளை இன்னும் சீண்டும் ஆர்வத்தை உண்டு பண்ண
“ இங்க இவ்வளவு நேரம் யாரோ பட்டாசு மாதிரி வெடிச்சாங்களே....... அவங்களை யாராவது பார்த்தீங்களா.....அவங்க பேரு கூட சாருணியாம். யாராவது அவங்களை பார்த்தீங்களா பா....” என்று அவளை சீண்ட மறுபுறம் திரும்பி நின்றவள் அவன்புறம் திரும்பி அவனது மார்பில் செல்லமாய் அடித்துவிட்டு அடித்த மார்பிற்கு மருந்தாக மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்... அவ்வாறு அவள் சாய்ந்து கொள்ள அங்கிருந்த கூட்டம் கூச்சலிட்டு கை தட்டியது.......
பின் அவளை அணைத்தவாறே அனைவருக்கும் நன்றி கூற அவர்கள் தங்கள் சார்பாக ஒரு பரிசுப்பொதியையும் ஒரு கூடை சாக்லேட்டையும் வழங்கிவிட்டு அவ்விடத்திலிருந்து கலைந்தனர். அவர்கள் வழங்கியதை பெற்றுக்கொண்ட அஸ்வின் அதனை சாருவிடம் கொடுக்க அதை வாங்கியவள் ஒரு சிறு சிரிப்பை உதிர்க்க அதில் மயங்கியவன் அவள் முகம் நோக்கி குனிய அவன் எண்ணம் அறிந்த சாரு வெட்கத்தால் அவனை விட்டு ஓட முயல அஸ்வின் அவளது கையை பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் மேல் பூங்கொத்தாய் வந்து அவள் விழ அவளை தாங்கி பிடித்து நிறுத்தியவன் அவளை கைகளில் ஏந்தினான். அவளை ஏந்தியதும் வெட்கம் அவளை பிடிங்கித்திங்க அவனை இறக்கி விடுமாறு கேட்டாள்... அவள் கேட்டது அவளது காதுகளுக்கே எட்டாத போது அஸ்வினின் காதிற்கு எவ்வாறு எட்டும்????

அவளை கையில் ஏந்தியவன்
கனவா..... இல்லை காற்றா...
கனவா.... இல்லை காற்றா.....
கையில் மிதக்கும் கனவா நீ....
கைகால் முழைத்த காற்றா நீ...
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே....
நுரையால்... செய்த சிலையா...நீ..
இப்படி உன்னை... ஏந்திக்கொண்டு ....
இந்திரலோகம் போய்விடவா.....
இடையில் கொஞ்சம்.. வழியெடுத்தாலும்....
சந்திர...தரையில்...பாயிடவா....

நிலவில் பொருள்கள் எடையிழக்கும்...
நீரிலும் பொருள் எடையிழக்கும்...
காதலில் கூட எடையிழக்கும்..
என்று கண்டேனடி... இன்று கண்டு கொண்டேனடி...
காதல் தாய்மை இரண்டு மட்டும்...பாரம் என்பதை அறியாது....
உன் பளிங்கு பார்த்து கொண்டால் பசியோ வழியோ தெரியாது....
உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது...
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால் என்னால் தாங்க.. முடியாது...

என்று பாடியவாறு அவர்களுக்கென்று போடப்பட்டிருந்த மேசையினருகே சாருவை தூக்கி சென்றவன் அவளை கதிரையில் அமரவைத்துவிட்டு அவளருகில் இருந்த கதிரையை இழுத்து போட்டு அவனும் அமர்ந்து கொண்டான்.

அவனை கண்களாலே பருகிக்கொண்டிருந்தவள் அவனது ஒவ்வொரு செயலையும் ரசித்த வண்ணம் இருக்க
“ ஓய் ஜிலேபி என்ன கண்ணை திறத்துட்டே தூங்குறியா?” என்று கேட்க அவனை முறைத்தாள் சாரு...

“டேய் ரௌடி உனக்கு ரொமான்சிற்கும் தூங்குவதிற்கும் கூடவா வித்தியாசம் தெரியல?? உன்னை இங்க ஒருத்தி காதல் கொட்ட கொட்ட பார்த்திட்டு இருக்கேன்.. நீ என்னடானா தூங்குறியானா கேட்குற…”

“ஜிலேபி நான் போய் பவுல் ஏதும் எடுத்துட்டு வரவா??

“எதுக்கு?”

“இல்லை எதோ கொட்டுதுனியே அதான் அது கொட்டாமல் பிடித்துக்கொள்ள….”

“டேய்…” என்று அவனை சாரு அடிக்க

“ இனிமே இப்படி மொக்க ஜோக் சொன்ன மொத டெட் பாடி நீ தான் பார்த்துக்கோ….”

“அடிப்பாவி ஓகே சொன்னவுடனே இப்படி சங்கு ஊத பிளான் பண்ணிட்டியே…”

“நீ தானே ஆசை பட்டு கேட்ட அதான்..” அவளது பதிலில் சிரித்த அஸ்வின்…

“சரி இப்போ சொல்லு ஜிலேபி நீ என்னை எப்போ இருந்து லவ் பண்ண ஸ்டார்ட் பண்ண??”

“ அதுக்கு முதல்ல என் ரௌடி பேபிக்கு எப்போ என் மேல லவ் வந்துச்சுனு சொல்லு??”

“ஆஹா… அதெல்லாம் சீக்ரெட்…வெளியில சொல்லப்படாது”

“ஓ அப்படிங்களா சார். அப்போ நாங்களும் எங்க லவ்சை பற்றி மூச்சு கூட விடமாட்டோம்.”

“ஐயோ சாரு சொல்லாமல் இரு பரவாயில்லை. இப்படி மூச்சு விடாம இருக்காத…அப்புறம் மூச்சு திணறல் வந்துரும்” என்று சாருவை வெறுப்பேற்றும் நோக்குடன் காமடி என்ற பெயரில் மொக்கை போட சாரு அவனை இன்னும் மொத்தினாள்…

“ஹேய்…. விடு ஜிலேபி. உன்னோட ரௌடி பேபிக்கு வலிக்கும்.. பேபி பாவம்ல??”

“அப்படி விடனும்னா உனக்கு லவ் ஸ்டார்ட்டான ஸ்டோரியை சொல்லனும்…”

“சரி சொல்லுறேன்… லவ் அட் பெஸ்ட் சைட்னு சொல்லுவாங்களே…. கேள்வி பட்டு இருக்கியா??”

“ஆமா…”

“ஆனால் நம்ம ஸ்டோரியில லவ் இன்டர்வியூவில் தான் ஸ்டார்ட் ஆகிச்சி….”

“என்னாது..??? இன்டர்வியூவிலேயே என்னை சைட் அடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டியா???”

“ஆமா ஜிலேபி…. உன்னை இன்டர்வியூவில் பார்த்தோனே சைட் அடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன்… ஆனா உன்னோட பொசிஸன் பெரிசா இருக்கும் அப்படி தோன்றியவுடன் கப்புசிப்புனு ஆகிட்டேன்….இப்படி செவனேனு இருந்தவனை கொஞ்சம் கொஞ்சமா கவுத்திட்ட நீ… ஆனாலும் எனக்கு அது லவ்வுனு புரியலை… உன்னை சைட் அடிக்கிறேனு உணராமலே சைட் அடித்தேன். எந்த பொண்ணையும் ஒரு சகோதரன் என்ற உணர்வோடு மட்டும் பார்த்து பழகிய எனக்கு உன்னை பார்க்கும் போது மட்டும் அந்த உணர்வு வரமறுத்தது. அது எதனால் என்று யோசித்தால் குழப்பம் தான் பதிலா கிடைக்கும். அதுனாலேயே எதுக்கு வம்புனு என் மனவிருப்பத்தை ஆராயாம விட்டுட்டேன். நீ எங்க வீட்டுல…. சாரி நம்ம வீட்டுக்கு வந்து எல்லோரோடும் சந்தோஷமாக இருக்கும்போது என்னை அறியாம ஒரு மனநிறைவு வரும். இப்படி எல்லாம் நடந்தும் கூட உன்மேல எனக்கிருப்பது காதல் என்பதை உணரத்தவறினேன். ஆனால் நான் காதல் என்று உணரும் சந்தர்ப்பம் நிஷாவின் கல்யாணம் என்ற ரூபத்தில் வந்தது. அன்னைக்கு நீ அந்த சாரியில் வந்து நின்னப்போ ஐயா டோட்டல் பிளாட்டு… இன்னும் கொஞ்சநேரம் அப்படியே இருந்திருந்தனா அங்க என்னென்னமோ நடந்திருக்கும். அப்படி ஏதாவது நடந்துவிடும் என்ற பயத்தில் தான் காருக்கு போறேன்னு வெளியில் வந்துட்டேன்.”

“அது என்ன அந்த என்னென்னமோ???”

“உனக்கு அந்த என்னென்னமோ என்னவென்று தெரியாதா?? தெரியாவிடின் சொல்லு…இப்ப அந்த என்னென்னமோ என்னானு டெமோ காட்டுறேன்..” என்றவாறு அவள் உதடுகளை கைகளால் வருட அதில் வெட்கிச்சிவந்தவள் அந்த வருடிய விரல்களை நறுக்கென்று கடிக்க

“ஆஆ….ஐயோ இந்த ஜிலேபி என்னை கடிச்சிட்டா….. என்னை காப்பாற்றுங்களே” என்று அவன் தன் கையை உதறி சிறு பிள்ளை போல் அழ

“டேய் ரௌடி கத்தி மானத்தை வாங்காதா “

“நான் கத்துவேன்…நான் கத்தாமல் இருக்கனும்னா நீ கடித்த இடத்திற்கு ஒரு உம்மா குடு” என்று டீலிங் பேச அவளும் சிரித்தவாறே அவள் கடித்த இடத்திற்கு ஒரு முத்தத்தை மருந்தாக வழங்கினாள். அவளது மென்மையான முத்தத்தில் ஒரு வித மோன நிலையில் கட்டுண்டு கிடந்த அஸ்வினை உலுக்கினாள் சாரு….

“மிஸ்டர் ரௌடி பேபி நீங்க டிரீம்ஸை வீட்டுக்கு போய் கண்டினியூ பண்ணலாம். நீங்க விட்ட கதையை தொடருங்கள்..”

“அராத்து… ஒரு நிமிஷம் மனிஷனை என்ஜாய் பண்ண விட மாட்டான்கிறா… இரு கதையை சொல்லித்தொலைக்கிறேன்” என்றவனை பார்த்து வந்த சிரிப்பை அடக்கினாள் சாரு…

“அப்போ தான் நீ விழுந்து அடிபட்டு கிடந்த. உன்னை தேடிட்டு வரும் போது உனக்கு கால் பண்ணிட்டு வந்தேன். அப்போ உன்னோட போன் ரிங் ஆகுற சத்தம் கேட்டு அதை தேடி எடுத்தப்போ அதில் ரௌடி பேபினு விழுந்திருந்தது. அப்போ உன்னை காணவில்லைனு தேடிட்டு வந்ததால் அது மைண்டில் பதியலை. ஆனா உன்னை ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தப்போ என்னோட லவ்வை ரியலைஸ் பண்ணேன். அதுக்கு பிறகு நீ நல்லா இருக்கனு சொன்ன பிறகு தான் நான் ஒரு நிலைக்கு வந்தேன்.அப்போ தான் அந்த ரௌடிபேபி மேட்டர் மைன்டிற்கு வந்தது.. அப்போ என் மொபைலில் இருந்து உன்னோடதுக்கு கால் பண்ணப்போ ரௌடிபேபி காலிங்னு வந்தது. அப்போ தான் அது நீ என்று தெரிய வந்தது. அதுனால தான் உனக்கு சப்ரைஸ் குடுக்கலாம்னு சைலண்டா இருந்தேன்”

“இவ்வளவு வேளை பார்த்திருக்கியா நீ??? நான் கூட நீ இந்த லவ் விஷயத்தில் ரொம்ப தத்தினு நினைத்தேன்… ஆனா நீயும் ஸ்மார்ட் தான்…” என்று சாரு அவனை பாராட்ட அஸ்வின் அவனது காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.....

“சரிங்க ஜிலேபி.... இப்போ உங்களோட ஸ்டோரியை சொல்லுங்க” என்று அஸ்வின் கேட்க தன் கதையை கூறத்தொடங்கினாள் சாரு. அவள் கூறி முடித்ததும் அஸ்வின்

“அடிப்பாவி நீ இவ்வளவு பெரிய கேடியா??? நானும் சின்னப்பொண்ணு ஒன்றும் தெரியாத பச்சை மண்ணுன்னு நினைத்தேன்... ஆனா நீ பண்ணியிருக்குற வேலையை பார்த்தா அப்படி தெரியலையே.... இதை விட கொடுமை காலேஜே தூக்கி வைத்து கொண்டாடுன என்னை நீ பேட்ட ரௌடி ரேஞ்சுக்கு டெமொனஸ்ரேட் பண்ணது...எனக்கு என்ன டவுட்டுனா இவ்வளவு தூரம் பாலோ பண்ண உன்னை நான் எப்படி கவனிக்காம விட்டேனு தான் புரியலை....”

“அதுதான் அம்மிணியோட டாலண்டு.... அப்படியிருந்தும் மூன்று தரம் மாட்டுப்பட போய்ட்டேன். கடைசி நிமிடத்தில் இந்த ரோஹினி வந்து காப்பாற்றிவிட்டாள்..... இதைவிட இன்னொரு காமெடி என்னவென்று தெரியுமா??? நான் ஆர்க்கெஸ்ரா டீமிலும் இருந்தேன். ஆனா நீங்க வந்தோன நைசாக அந்த இடத்திலிருந்து கழன்றுவிடுவேன். அதுனால அங்கேயும் நீங்க என்னை மிஸ் பண்ணிட்டீங்க......”

“ஆர்கெஸ்ட்ரா டீமிலா.....????அப்ப அந்த ராப்பன்சல் பிரின்சஸ் நீ தானா???” என்று கேட்க

“அது யாரு…??”

“ஆர்கெஸ்ரா டீமில் நீ ரொம்ப பேமஸ் தெரியுமா???”

“என்னடா சொல்லுற ரௌடி???”

“ஏன் ஜிலேபி உன்னை எவ்வளவு ஸ்வீட்டா வார்த்தைக்கு வார்த்தை ஜிலேபினு கொஞ்சி கொஞ்சி கூப்பிடுறேன். நீ ஏன்டி என்னை ஜில்லா ரௌடி ரேஞ்சுக்கு ரௌடி ரௌடி
னு கூப்பிடுற??? எனக்கு ஒரு மாதிரி ஷையா இருக்குடி… வேற ஏதாவது பேர் சொல்லி கூப்பிடேன்….. இந்த ஹனி, பனி, ஸ்வீட் ஹார்ட் ,ஹபி எப்படி எதாவது சொல்லி கூப்பிடேன்… நீ ரௌடினு கூப்பிடும் போது ஒரு நிமிசம் எனக்கு நான் உண்மையாவே ரௌடி தானோனு தோணுது…..” என்று தன் அன்புக்குரிய காதலி வைத்த அந்த அதிரடி செல்லப்பெயர் குறித்து அஸ்வின் புகார் கூற….

“நீ ரௌடி தான் டா என்னோட ரௌடி பேபி… உனக்கு இந்த பேர் பிடிக்காட்டி நீ சொன்ன இந்த ஹனி,பனி லிஸ்டுல பன்னி னு ஒரு ஸ்வீட் பெட் நேம் இருக்கு… அது ஓகேனா சொல்லு இனி அப்படியே கூப்பிடுறேன்” என்றுவிட்டு அவனை அப்பேர் கொண்டு அழைக்க…. அவளின் முன் தன் கைகளை பணிந்திருந்த தலைக்கு மேல் கூப்பி……

“அம்மா தாயே தெரியாம கேட்டுட்டேன்.மன்னிச்சுக்கோ… என்னை நீ ரௌடி பேபினே கூப்பிட்டுக்கோ… இனிமே நான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவும் மாட்டேன். கேட்கவும் மாட்டேன். மீறி கேட்டேனா நீ என்னை அந்த பெயரை சொல்லி கூப்பிடு…. இப்ப ஆளை விடு…” என்று ஜகா வாங்க அவனது செயலில் சிரித்த சாரு அவனது இரு கன்னத்தையும் பிடித்து கொஞ்சியவாறு “சோ ஸ்வீட் ரௌடி பேபி” என்று கூறி புன்னகைக்க அவளது செயல் அவனுக்கு அவன் தாய் இந்திராவை நியாபப்படுத்தியது. அவரது நினைவில் அவன் அமைதியாக அவனது இந்த அமைதியில் குழம்பிய சாரு

“என்னாச்சு அச்சு…. ஏன் திடீர்னு சைலண்டாகிட்ட???”

“ஒன்றும் இல்லை ஜிலேபி… நீ கொஞ்சும் போது அம்மா நியாபகம் வந்திருச்சி அதான்…வேற ஒன்றும் இல்லை..”

“சாரி டா…”

“ஹேய் கூல் ஜில்லு… சொல்லப்போனா நான் தான் உனக்கு தேங்ஸ் சொல்லனும். ரொம்ப வருஷங்களா எனக்கு கிடைக்காத இனிமே கிடைக்கவே கிடைக்காதேனு நினைத்திருந்த அந்த கொஞ்சல் உன்மூலமா எனக்கு கிடைத்திருக்கு… நான் சேட்டை பண்ணாம சமர்த்தா இருந்து அம்மாக்கு ஹெல்ப் பண்ணும் போது எல்லாம் அம்மா இப்படி என்னை கொஞ்சிட்டு என்னை அணைத்து ஒரு முத்தம் குடுப்பாங்க… அதுல அவ்வளவு பாசம் இருக்கும்… அந்த கொஞ்சலுக்காகவும் அம்மாவோட அந்த சோ ஸ்வீட் அப்படிங்கிற வார்த்தைக்காகவும் நான் எப்பவும் சமத்தா சேட்டை பண்ணாம இருப்பேன். அம்மா தவறிவிட்ட பிறகு அது இல்லாமலே போய்விட்டது. அதுக்காக சித்தி நல்லா பார்த்துக்கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. கவி,மாதுவை விட சித்திக்கு நான் என்றால் உயிர். நான் அம்மாவோட இழப்பிலிருந்து மீள அவங்க தான் காரணம்.. என் மனசு அம்மாவை தேடும் போது எல்லாம் அவங்களுக்கு அது புரிந்துவிடுமோ தெரியவில்லை என்னை வந்து அணைத்து தலையை கோதி விடுவாங்க… என்னோட மைண்டை சேஞ்ச் பண்ண ஏதாவது பேசிட்டே இருப்பாங்க…. நான் மைண்டை டைவர் பண்ண மியூசிக் தான் சரியான வழினு என்னை வெஸ்டர் மியூசிக் கத்துக்க அனுப்புனாங்க… அவங்க நினைத்த மாதிரி நானும் நார்மல் ஆகிட்டேன். என்னை அவங்க கண்ணுக்குள்ள வைத்து பார்த்துக்கிட்டாங்க… அம்மா இருந்திருந்தா கூட அப்படி என்னை பார்த்திருப்பாங்களானு தெரியலை… ஆனா என்னதான் அவங்க என்னை நல்லா பார்த்துக்கிட்டாலும் அம்மாவை யாராலும் ரீபிளேஸ் பண்ண முடியலை…. அது அம்மாவுக்கே உரிய தனித்துவம்… சித்தி மட்டும் இல்லை பாட்டி, தாத்தா,சித்தப்பா கவி,மாது எல்லோருமே என்மேல் இன்னும் வரை பாசத்தை வரையறையில்லாம கொட்டிட்டு தான் இருக்காங்க….. நான் எதையும் விருப்பப்பட்டு கேட்டு வாங்கிக்க மாட்டேன். அது தெரிந்து அவங்க ஒரு சின்ன பொருளா இருந்தாலும் எனக்கும் சேர்த்து வாங்கிக்கொடுப்பாங்க. சித்தியும் சித்தப்பாவும் எதையும் செய்ய சொல்லி போர்ஸ் பண்ணமாட்டாங்க.. ஆனா அவங்க பேசும் விதத்திலேயே நான் மனம் விரும்பி செய்யத்தொடங்கிடுவேன்.

இதுவரைக்கும் எல்லா விடயத்திலும் அவங்க தலையீடு இருக்கு….. ஆனா அது தொந்தரவா இல்லாம வழிகாட்டுதலா தான் இருந்திருக்கு…. நான் அவுஸ்ரேலியா போகக் காரணமே என்னோட சித்தப்பா தான். எனக்கு ஆப்சைட்ல மாஸ்டர்ஸ் செய்யனும்னு ஆசையிருந்தது. அதுக்கான ஆப்பர்சுனிட்டு கிடைச்சப்போ சித்தியும் பாட்டியும் அவ்வளவு தூரம் போக வேணாம்னு விடாப்பிடியா இருந்தாங்க. அவங்களை சரிகட்டி சித்தப்பா தான் என்னை அவுஸ்ரேலியா அனுப்பி வைத்தாரு… அப்புறம் அங்க ஜாப் கிடைத்தப்போ அங்க கொஞ்சநாள் வர்க் பண்ணட்டானு கேட்டப்போ சித்தி பாட்டி பேச்சை கேட்காம என்னோட விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்து எனக்கு சரினு சொன்னாரு. இப்படி எல்லா விஷயத்திலும் என்னை முதன்மை படுத்தினாங்க…. அவங்களுக்காக ஏதாவது செய்யனும்னு தோணுச்சி. அதான் இங்க வந்துட்டேன். நான் அவங்களோட செலவழிக்கிற நேரம் தான் அவங்களுக்கு நான் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சினு தோணுச்சி….. அதான் இங்கயே செட்டில் ஆகிட்டேன்….. ஆனா இப்போ நீயும் என்னோட குடும்பத்துல சேர போறனு நினைக்கிறப்போ நான் இழந்த என்னோட அம்மா தான் உன்னோட ரூபத்தில் வரப்போறாங்கனு தோனுது. ஐயம் சோ லக்கிடு ஹேவ் யூ இன் மை லைப்..”

“உண்மையில நான் தான்டா லக்கி. நீ என் லைப்பில் வந்திருக்காவிடின் எனக்கு இந்த ஸ்வீட் ரௌடி பேபியும் அவனோட அழகான உறவுகளும் எனக்கு கிடைத்து இருக்காது..... அம்மா இல்லாதது எவ்வளவு கொடுமைனு எனக்கு நல்லா தெரியும்டா. ஆனா உனக்கு அந்த தனிமையை போக்க உன்னோட சித்தப்பா குடும்பம் என்ற கூடு கிடைத்தது. ஆனா எனக்கு அப்படி யாரும் இருக்கலை.... அந்த விதத்தில் நீ லக்கி தான்டா.... ஆனா இப்போ நானும் லக்கி. அந்த கூட்டில் என்னையும் சேர்த்துக்க நீ என்னை அங்க கூட்டிட்டு போகப்போற.....” என்று துக்கம்,கவலை ,மகிழ்வு பல கலந்த உணர்வை அவளது முகத்திலீன் வெளிபட சூழ்நிலையினை மாற்றும் பொருட்டு அஸ்வின்

“ஓய் என்ன பீலிங்சா..... உனக்கு இதெல்லாம் செட்டாகல.. இப்போ உன்னோட பெட் நேமிற்கு ரீசன் வேணுமா வேண்டாமா???

“ஹா பார்த்தியா மறந்துட்டேன்.. சொல்லு ஏன் என்னை ராப்பன்சல் பிரின்சஸ்னு சொன்ன??”

“அதுவா.... பெருசா ஒன்றும் இல்லை....அது...”

“மிஸ்டர் ரௌடி பேபி பெரிசா சிறுசா அதெல்லாம் நான் பார்த்துக்கொள்றேன். நீங்க அது இதுனு இழுக்காம ரீசனை சொல்லுங்க....”என்று சாரு கேட்க அவன் ஒரு மார்க்கமாய் சிரித்தான்.

அஸ்வினின் சிரிப்பிற்கு காரணம்???

அஸ்வின் சிரிக்க அவனது சிரிப்பில் கடுப்பான சாருவோ
"இப்போ நீ சொல்ல போறியா இல்லையா" என்று கேட்க அஸ்வினோ

"எனக்கு பசிக்குது ஜிலேபி.. சோ பஸ்ட் சாப்பாடு பிறகு ரீசன் ஓகேவா?" என்று அவன் டீலிங் பேச பசி என்ற வார்த்தையை கேட்டவுடன் சரி என்ற சொல்ல வாயெடுத்த சாருவை அவளது மனசாட்சி

"சாரு பாவம்னு நினைக்காத அவன் உன்னை டைவர்ட் பண்ண தான் பசிக்குதுனு சாட்டு சொல்லுறான்... ஏமாந்துவிடாதே... முதலில் விஷயத்தை கறந்துக்கிட்டு அதுக்குபிறகு சாப்பாட்டிற்கு ஓகே சொல்லு... இல்லைனா இவன் டாபிக்கை மாற்றி விடுவான். பிறகு உன்னை பற்றிய அந்த பெட் நேக் சீக்ரெட் தெரியாமலே போய்விடும்....சோ உஷாராகிக்கோ சாரு" என்று அவளது மனசாட்சி சொல்ல அதன் படி நடக்க முடிவு செய்த சாரு

"சாப்பாட்டிற்கு ஒரு அவசரமும் இல்லை. நீ முதலில் அந்த பெட் நேமிற்கான ரீசனை சொல்லு... அதன் பின் ஆறஅமர சாப்பிடலாம்.."

"ஏன் ஜிலேபி இப்படி கொடுமை பண்ணுற??? எனக்கு பசிப்பதை விட உனக்கு அதை பற்றி தெரிந்து கொள்வதுதான் முக்கியமா??? உன்னோட ரௌடி பேபி பாவம்ல... முதலில் சாப்பாடு பிறகு ரீசன் ஓகேவா??"

"இப்போ ரீசன் சொல்லாம இங்க இருந்து எழும்பி பாரேன்.அப்போ தெரியும் இந்த சாரு யாருனு..." என்று சாரு எச்சரிக்கை விட அவளது எச்சரிக்கையை பொருட்படுத்தாது அஸ்வின் எழு முயல அவனை இழுத்து அமர்த்தி அவன் தலையில் கொட்டினாள் சாரு.... தன் தலையை தேய்த்தவாறு

"ஏன் ஜிலேபி இப்படி கொட்டுன??? ரொம்ப வலிக்குது மா.... இப்படி இரக்கமே இல்லாம இந்த பேபியை கொட்டிட்ட தானே .. போ உனக்கு ரீசன் சொல்லமாட்டேன் " என்று அஸ்வின் முறுக்கிக்கொள்ள அவனது பேச்சில் அசராத சாருவோ

"அப்போ நீ மறுபடியும் கொட்டு வாங்க ரெடியாகிட்ட.... சரி உன் ஆசையை ஏன் நான் கெடுக்கனும். இந்தா வச்சிக்கோ." என்றுவிட்டு அவனை மறுபடியும் அவனை கொட்ட முயல அவளை தடுத்த அஸ்வின்

"ஐயோ என்னை விட்டுரு ஜிலேபி.. இதுக்கு மேல என் மண்டை தாங்காது.... இப்ப உனக்கு ரீசன் தானே வேணும். சொல்லுறேன்.."

"இதை கேட்பதற்கு எவ்வளவு வேலை பார்க்க வேண்டி இருக்கு " என்றவாறு தன் கையை சுழற்றி காட்டி சிரிக்க அஸ்வின் அவளை முறைத்துவிட்டு கதையை சொல்ல தொடங்கினான்.

"உனக்கு ரப்பன்சல் பிரின்சஸ் ஸ்டோரி தெரியுமா???"

"பெருசா ஏதும் தெரியாது... அவளை ஒரு உயரமான கோட்டையின் உச்சியில் ஒரு விச் சிறை வைத்திருந்ததாகவும் அவளுக்கு அந்த கோட்டையின் உயரத்திற்கு நீளமான கூந்தல் இருந்ததும் தெரியும்.."

"அது மட்டும் இல்லை... அவ சூப்பரா பாட்டும் பாடுவா... அவளோட தனிமையை போக்குவதற்காக அவளது இனிமையான குரலில் பாட்டு பாடுவா.... அவளோட பாட்டு எல்லாருக்கும் கேட்கும்.... ஆனா யாரு பாடுறானு யாருக்கும் தெரியாது. அவளோட ராஜகுமாரன் அவளோட அந்த பாட்டை கேட்டு தான் அவளை தேடிட்டு வந்து காப்பாற்றி கூட்டிட்டு போவான்"

"அதெல்லாம் சரி... ஆனா எனக்கு எதற்கு அந்த பெயரை வைச்சாங்க???"

"அதானே உனக்கு எதற்கு அந்த பெயரை வைச்சாங்க இந்த பசங்க??" என்று அவள் கேட்ட கேள்வியை அவளிடமே திருப்பி படித்த அஸ்வினை முறைத்தாள் சாரு.
மறுபடியும் கொட்டு விழுமோ என்று பயந்த அஸ்வின்

"கூல் ஜிலேபி நானே என்னோட ஏழாவது அறிவை யூஸ் பண்ணி கண்டுபிடிக்கிறேன்" என்றுவிட்டு ஏதோ யோசனை வந்தவனாக சாருவின் நாடியை பிடித்து வலமும் இடமுமாக திருப்பினான்.

பின்
"ஜிலேபி உனக்கு காலேஜ் டைமில் ஹெயார் லாங்காவா இருந்தது??"

"ஆமா...இப்போ தான் வசதிப்படாதுனு சார்ட்டா கட் பண்ணி விட்டுக்குவேன்.. ஏன் கேட்குற??"

"ஆ மேட்டர் சிக்கி விட்டது.... "

"அந்த மேட்டர் என்ன?"

"அதுவா... என்னைக் கண்டவுடன் நீ எஸ் ஆகின்ற மேட்டர் நம்ம பயலுகளுக்கு தெரிந்திருக்கு... அதானப்பட்டது என்னவென்றால் நான் லாஸ்ட் இயர் அப்படிங்கிறதால பிராக்டிசிற்கு ரொம்ப ரேர் ஆ தான் வருவேன். அப்போ பசங்க இப்படி பஸ்ட் இயர் பொண்ணு நல்லா பாடுது கூட்டிட்டு வாரேன் அண்ணானு போறவங்க நீ கிளாசுக்கு போய்ட்ட அப்படிங்கிற செய்தியோட தான் வருவாங்க.. இப்படி மூன்று தரம் நடந்திருச்சி அதான் பசங்க உனக்கு அப்படி ஒரு பெயரை வச்சிட்டாங்க. வாய்ஸ் இருக்கு ஆனா ஆளைக்காணோம்.." என்று விட்டு அஸ்வின் சிரிக்க

"நான் என்ன பண்ண??? நீ அங்கிருந்த எல்லா கேள்சையும் சிஸ்டர்னு தான் கூப்பிட்டு பேசுவ... எங்க என்னையும் அப்படியே கூப்பிட்டுருவியோனு பயம் அதான் அப்படி ஓடி ஒழிந்தேன்.... உனக்கு என்னை பார்த்தா சிரிப்பா இருக்குதில்ல??"

"ஓகே கூல் ஜிலேபி... இப்ப சரி நம்ம சாப்பிட்ற வழியை பார்க்கலாமா??"

"ம்.. சரி"என்று சாருவிடம் உத்தரவினை பெற்றுக்கொண்டு உணவினை ஆடர் செய்ய சென்றான். அவன் ஆடர் செய்துவிட்டு வந்த இரண்டு நிமிடங்களில் பேரர் உணவுடன் வந்து அவர்கள் அமர்ந்திருந்த மேசையில் அழகாய் அடுக்கிவிட்டு அந்த காண்டில் ஸ்டேண்டில் இருந்த மெழுகுதிரியையும் மாற்றிவிட்டு அவர்கள் இருவரையும் நோக்கி "ஹெவ் எ நைஸ் டைம் சார் அன்ட் மேம்" என்று இருவரையும் வாழ்த்தி விட்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்... அவன் அங்கிருந்து நகர்ந்ததும் அங்கிருந்த உணவு வகைகளை பார்வையிட்ட சாருவிற்கு ஆச்சர்யம். அவளது ஆச்சரியத்திற்கு காரணம் அங்கிருந்த உணவு வகைகள் அனைத்தும் அவள் மிக விரும்பி உண்பவை..

"ரௌடி பேபி உனக்கு எப்படி எனக்கு இந்த டிஸ் எல்லாம் பிடிக்கும்னு தெரியும்??"

"வாட் எ பிளசன்ட் சப்ரைஸ்... உனக்கும் இந்த டிஸ் எல்லாம் பிடிக்குமா??? எனக்கும் இதெல்லாம் பிடிக்கும். அதான் ஆடர் பண்ணேன்."

"சும்மா ரீல் சுத்தாத .... உன் முகத்தை பார்த்தாலே நீ ஓவர் ஆக்டிங் பண்றது புரியிது.... சோ உண்மையை சொல்லு... யாரு உனக்கு ஸ்பை வேலை பார்த்தது???" அவளது கேள்வியில் சிரித்த அஸ்வின்..

"ஏன் ஜிலேபி இதை கண்டுபிடிக்க யாராவது ஸ்பை வைத்திருப்பாங்களா???"

"யாரு வைத்திருப்பாங்களோ இல்லையோ நீ வைத்திருப்ப...உன்னை நம்ப முடியாது...சொல்லு யாரு அந்த ஸ்பை...??"

"ஹாஹா.... என்ன ஒரு நம்பிக்கை...அந்த ஸ்பை வேற யாரும் இல்லை உன்னோட வன் என் ஒன்லி உயிர்த்தோழன் சஞ்சய் தான்"

"அவனா???"

"ஆமா அவன் தான்..."

"அவன் தான் அந்த கருப்பாடா?? இது தெரியாம போயிருச்சே எனக்கு...."

"ஜிலேபி நீ அவனை கருப்பாடுனு சொல்வது சரியில்லை... அவன் என்னா கலர்... அவனை போய் கருப்புனு சொன்னா பார்க்குறவங்க உன்னை லூசுனு தான் நினைப்பாங்க... "

"அப்போ அவனை ஆடுனு சொல்றது உனக்கு பிராப்ளம் இல்லை....அந்த கலர் தான் பிராப்ளம்..."

"ஆமா.. ஆமா.."

"இது சஞ்சுவுக்கு தெரிந்தது.....அவன் உன்னை வைத்து சல்சா ஆடிருவான்..."

"ஐயோ ஆமா.. யாருகிட்ட தப்புனாலும் அவன்கிட்ட இருந்த தப்பமுடியாது"

"என்ன ரௌடி பேபி அனுபவம் பேசுதா??"

"ஆமா ஜிலேபி இந்த பிளானை அவன்கிட்ட சொல்லி ஹெல்ப் வாங்குவதற்குள் டிசைன் டிசைனா கேள்வி கேட்டு என்னை கலங்கடிச்சிட்டான்"

"என் ரௌடி பேபியையே கலங்கடிச்சிட்டானா??"

" ஆமா ஜிலேபி ஒரு நிமிஷம் எனக்கு ஏதோ குற்றவாளிக்கூண்டில் ஏறி நின்று பதில் சொல்லுற பீலிங் வந்திருச்சி... அவ்வளவு பவரா இருந்திச்சு அவனது ஒவ்வொரு கேள்வியும்... உன்னோட உயிர்த்தோழன்னு ப்ரூவ் பண்ணிட்டான்" என்று அஸ்வின் கூற அவனது பாவனையில் சிரித்த சாரு

"அப்படி என்னதான் கேட்டான்??"

"எப்போ,எதுக்கு,எப்படி, எதனால, எங்க இப்படி எ னா வரிசையிலே கேள்வி கேட்டு என்னை திணறடிச்சிட்டான்" என்று அழும் பாவனையில் அஸ்வின் கூற அவனது பாவனையில் சிரித்த சாரு

"ஹாஹா அவன் எப்பவும் அப்படி தான். அவனோட விஷயங்களை பற்றி தேடுறானோ இல்லையோ என்னை பற்றிய விஷயங்களில் ரொம்ப கவனமாக இருப்பான். அவனும் நானும் சயில்வுட் பிரண்ட்ஸ்.. ஒரே ஸ்கூலில் தான் படித்தோம். அவனும் நானும் நண்பர்களா இருந்தா கூட அவன் என்னை தன் கூட பிறக்காத சகோதரியா தான் பார்த்துக்குவான்.. என்னோட பாடி கார்ட்னு சொல்லலாம். ஸ்கூல் டைமில் யாரும் என்கிட்ட வந்த வாலாட்ட முடியாது.. அப்படி வந்து சேட்ட பண்ணுறவங்களை உண்டு இல்லைனு பண்ணிடுவான்.. இவன் இப்படி பிஹேவ் பண்ணுறத பார்த்து எங்களோட நண்பர்கள் எல்லாம் அவனிடம் நீ சாருவை லவ் பண்ணுறியானு கேட்க அதுக்கு அவன் அவ என்னோட தங்கைடா... அவளை நான் எப்படி அப்படி நினைப்பேன்னு அவங்களோட சண்டை பிடித்து அவங்களோட பேசுவதையே நிறுத்திட்டான். நான் தான் அவனிடம் கெஞ்சி திரும்ப பேச வைத்தேன். அப்பா இறந்த பின் நான் என்ன பண்ணுறதுனு தெரியாம இருந்தப்போ அவன் தான் ராம் அங்கிளிடம் பேசி எல்லாவற்றையும் சரி பண்ணான். அங்கிளும் அப்பாவும் நண்பர்கள் அப்படிங்கிறதால அங்கிளும் எந்த ஹெசிடேஷனும் இல்லாம பிசினசை அவர் கண்ரோலுக்கு எடுத்துகிட்டாரு... நானும் டிகிரியை வீக் என்டிற்கு ஷிப்ட் பண்ணி அங்கிளோட சேர்ந்து பிசினசில் இன்வால்வ் ஆனேன். சஞ்சு பாரினில் படிச்சிட்டு இருந்ததால அவனால் இங்க வந்து எனக்கு ஹெல்ப்பா இருக்க முடியலை... அதுக்காக அவன் சும்மா இருக்கவில்லை. அவனும் அங்கே பார்ட் டைமில் டிகிரியை கண்டினியூ பண்ணிக்கிட்டே அங்கிளோட பிரண்ட் ஒருத்தரின் கம்பனியில் வர்க் பண்ணான். பிறகு டிகிரி முடிந்தவுடன் இங்க வந்து என்னோட வர்க் பண்ண தொடங்கிட்டான். இது வரை எல்லா வெற்றி தோல்வியிலும் அவனும் ராம் அங்கிளும் தான் கூட இருந்தாங்க.... எனக்கு பிறந்த வீட்டு உறவுனா அது அவங்க மட்டும் தான் என்றைக்கும்.."

"ஓகே ஓகே உன் நண்பன் புராணம் போதும்... எனக்கு பசிக்குது... வா சாப்பிடலாம்..." என்று உணவினை அவளுக்கு பரிமாறத்தொடங்க...
அவளோ சிரித்தவாறு

"என் ரௌடிபேபிக்கு கூட பொறாமைலாம் வருது...சூப்பர்..சூப்பர்" என்று அவனை கேலி செய்ய அவனோ தன் காரியத்திலேயே கவனமாக இருந்தான்...
அவளுக்கு பரிமாறிய பின் அவன் தனக்கு பரிமாறிக்கொண்டான். அவனது செயலில் மகிழ்ந்த சாரு அதற்கு பரிசாக அவனது கன்னத்தில் முத்தமொன்றை வைக்க அஸ்வின் அவளது செயலில் சிரித்தான். அவளது கைகளை அவனது கைகளால் பற்றியவாறு

"என்ன என்னோட ஜிலேபி செம்ம மூடில் இருக்கா போல"

"ஆமா... இல்லையா பின்ன... என்னோட ரௌடி பேபி கூட இந்த அழகான நிலவொளியில் கான்டில் லைட் டின்னர் சாப்பிடுறதுனா சும்மாவா.... எவ்வளவு சுகமான அனுபவம் இது.... "

"அப்போ உனக்கு இது பிடித்திருக்கா???" "எனக்கு அந்த நிலவொளி , இந்த கார்டன் வியூ, இந்த பிரபோசல் பிளான், ரௌடி பேபியோட சாங், இந்த கான்டல் லைட் டின்னர், சாக்கலேட்.... இப்படி நீ எனக்காக பார்த்து பார்த்து செய்த எல்லாமே பிடிச்சிருக்கு.... அதைவிட இது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்த என் ரௌடி பேபியை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா இதுல ஒன்று மிஸ்ஸிங்... நீ ஏன் எனக்கு ரிங் குடுக்கவில்லை....??"

"அதுவா ஜிலேபி... கொஞ்சம் பஜட் இடிச்சிருச்சி அதான்.."

"டேய் பொய் சொல்லாத... நீ ரீசன் இல்லாமல் ஏதும் செய்ய மாட்ட... அதுனால மறைக்காமல் என்னானு சொல்லு" என்று சாரு கூற அவளது புத்தி சாதூர்யத்தை என்றும் போல் இன்றும் வியந்தவாறு

" ஹாஹா கண்டுபிடிச்சிட்டியே.... ரிங் கொடுப்பது பாரின் கல்சர்... தாலி தான் நம்ம கல்சர்... அதை அணிவிக்க கூடிய சந்தர்ப்பம் இது இல்லை... அதான் அதை வேண்டாம்னு விட்டுட்டேன்"

"பா... பார்டா என்னோட ரௌடி பேபி கூட கலாச்சாரத்தை பாலோ பண்ணுது..." என்று சிரிக்க அவளது சிரிப்பை ரசித்துக்கொண்டு இருந்தவன் ஏதோ நியாபகம் வந்தவனாக

"ஐயோ ஜிலேபி பார்த்தியா ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன். வா ஒரு செல்பி எடுக்கலாம்.. நம்மளோட வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நாள் இது... இதை நம் மனப்பெட்டகத்தில் சேமித்தாலும் புகைப்படமா இருந்தா அது இன்னும் ஸ்பெஷல்...நீ ஒரு உம்மா குடுத்தா அது இன்னும் ஸ்பெஷலாக இருக்கும்" என்றவாறு அவளை நோக்கி கண்ணடிக்க அவள் முகம் சிவந்தாள்....
இவ்வாறு செல்லச்சீண்டல்களுடனும் , கவனிப்புக்களுடனும் அந்த இனிய உணவு நிறைவுபெற்றது...
அங்கிருந்து கிளம்பிய அஸ்வின் தன்னுடைய காரில் சாருவை அவளது வீட்டில் இறக்கி விட அவனிடம் விடைப்பெற்று இறங்க முயன்ற சாருவை கைபிடித்து தடுத்த அஸ்வின்...

"ஜிலேபி லவ் யூ சோ மச்" என்று கூறியவாறு அவளது முகத்தை அவனது கைகளில் ஏந்தி முன்னுச்சியில் அவன் முத்தமிட அவளோ ஒரு மோனநிலையில் சிக்குண்டாள்.... அதன் விளைவாக அவளது தலை அவன் மார்பில் சாய்ந்தது.

"ஜிலேபி நீ எப்பவும் இப்படியே என்கூடவே இருக்கனும். எதுக்காகவும் யாருக்காகவும் என்னை விட்டு போகக்கூடாது... அதே மாதிரி நானும் உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் விட்டு குடுக்க மாட்டேன். இன்னைக்கு உன்னோட முகத்தில் தெரிந்த மலர்ச்சி எப்பவும் உன்னை விட்டு போகவிடமாட்டேன்... உனக்குனு யாரும் இல்லைனு நீ இந்த நொடியில் இருந்து பீல் பண்ணக்கூடாது... எல்லாம நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன். இதை நீ எப்பவும் மனசுல வைத்திருக்கனும்.... இது நான் உனக்கு பண்ணித்தருகின்ற பிராமிஸ்.. அதோட நான் எது செய்தாலும் உன்னோட நலனை எப்பவும் கன்சர்ன் பண்ணுவேன். சோ எந்த ஒரு இக்கட்டான நிலைமையிலும் நீ என் மீதுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது புரியிதா??"

"ம்..."

"ஓகோ பாய் லேட்டாச்சி. நீ இறங்கு... பாய் குட் நைட்...லவ் யூ ஜிலேபி."

"ம்..." என்றுவிட்டு சாரு காரிலிருந்து இறங்கி தன் வீட்டினுள் சென்றாள்... அவளது கால்கள் தான் சென்றதே தவிர மனமோ அஸ்வினிடமே மண்டியிட்டுக்கிடந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN