மண்ணில் தோன்றிய வைரம் 11

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்று கிருஷ்ணனுக்கு ஆப்ரேஷன் என்று திகதி குறிக்கப்பட்ட நாள்....

சாரு, அஸ்வின்,சித்ரா,வருண் , சஞ்சய் என அனைவரும் அந்த ஆப்பரேஷன் தியட்டரிற்கு வெளியே போடப்பட்ட இருக்கையில் பலதரப்பட்ட மனநிலைகளை தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தனர்.

சாரு சித்ராவின் அருகே அவருக்கு ஆறுதல் கூறியவாறு இருந்தாள்.. அஸ்வினை வருண் மற்றும் சஞ்சய் ஆறுதல் படுத்தினர்... இடையில் வற்புறுத்தி சித்ராவை வருணும் சஞ்சுவும் காண்டினிற்கு அழைத்து சென்றனர்... அப்போது அங்கமர்ந்து சுவற்றை வெறித்துக்கொண்டிருந்த அஸ்வினை சாரு அழைக்க அவனிடம் அசைவில்லாமல் போகவே அவனது தோள்களில் அவள் கரம் பதிக்க அதில் சுயவுணர்வு அடைந்தவன் கண்ணில் நீர் கொட்டியது....

அதில் பதறிய சாரு
“ஹே பேபி என்னாச்சு??? எதுக்கு இப்படி அழுற??? நீயே நம்பிக்கை இல்லாத மாதிரி நடந்தா பாவம் சித்ராம்மா என்ன பண்ணுவாங்க??? இது ஜஸ்ட சர்ஜரி தான்.... அதுவும் இதெல்லாம் இப்ப எல்லாரும் செய்துகிறாங்க.... அதோட சர்ஜரி பண்ணுற டாக்கர் இதை போல் பல கேஸஸ் பார்த்து சக்சஸ் பண்ணவரு.... அதனால உன்னோட பயம் அவசியமற்றது... என்னோட ரௌடிபேபி ரொம்ப போல்ட் டைப் ஆச்சே...... இதுக்கெல்லாமா பயப்படுவ.... பாரு அங்கிள் எப்படி திரும்பி பழைய மாதிரி வரப்போறாருனு...” என்று தன்னால் முடிந்தவாறு அஸ்வினை சாரு சமாதனப்படுத்த அவன் முக பாவனையோ மாறவில்லை......

அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று சாரு யோசிக்க அவளது மூளையில் ஒரு யோசனை தோன்றியது.. தோன்றிய மறுகணம் தாமதிக்காது நிறைவேற்றினாள்.....

சுவரை வெறித்தவாறு கண்களிலிருந்து நீர் சிந்திக்கொண்டிருந்த அஸ்வின் முன் சென்று நின்றவள் அவனை அணைத்துக்கொண்டாள்.... அவனும் அவளது வயிற்றைக்கட்டிக்கொண்டு அழுதி தீர்த்தான். அவளோ அவனது தலையை கோதிக்கொடுத்தாள். அதில் அவனது மனச்சஞ்சலம் நீங்குவதாய் உணர்ந்தான்.......
தாயின் அணைப்பை பெற்ற தாயினால் மட்டும் அல்ல... உயிராய் நினைக்கும் காதலியால் கூட வழங்க முடியுமென அன்று உணர்ந்தான் அஸ்வின்.

பல நாட்களுக்கு பிறகு மறைந்த தன் அன்னையின் அணைப்பு மீண்டும் கிட்டியதாய் உணர்ந்தான் அஸ்வின்... அதுவே அவனது மனதிற்கு ஒரு வித ஆறுதலை தந்தது..... என்னதான் ஒரு ஆண்மகன் சமூகத்தில் உயர்ந்து சிறந்திருந்தாலும் அவனை சீராட்ட ஒரு மடி தேவை..... அந்த மடி அவனது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும்... தனிமை என்ற உணர்வு அவனை நெருங்க விடாமல் தடுக்கும்..... துக்கமான சந்தர்ப்பத்தில் அதிலிருந்து மீள வழி செய்யும்..... அந்த மடி ஒரு பெண்ணின் மடியாக இருப்பது அவனுள் ஒரு நிறைவுத்தன்மையை உணர்த்தும்.... அந்த மடி தாயாகவோ தாரமாகவோ அல்லது காதலியாகவோ கூட இருக்கலாம்.... அந்த சீராட்டல் அவனை அந்த நேரத்தில் குழந்தையாய் மாற்றிவிடும்...... நிஜ உலக பிரச்சினைகளை மறக்க செய்யும்.....

அந்த சீராட்டலை சாரு அஸ்வினிற்கு தன் அணைப்பினால் உணர்த்தினாள்.. அதுவும் அவனை அவனது துக்கங்கள் மறக்க வழி செய்தது..... நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியது......அந்த அணைப்பு அவனை சகஜ நிலைக்கு திருப்பியது.....

அவனது தலையை கோதியவாறு இருந்த சாருவை தன்னிடம் இருந்து விலக்கியவன் அவளது கரத்தினை ஏந்தி
“தாங்ஸ் ஜிலேபி” என்றுவிட்டு அவளது புறக்கையில் தன் இதழ் பதித்தான்..
அது அன்பை மட்டுமே தாங்கி நின்ற இதழொற்றல்... பாடசாலைக்கு முதல் நாள் செல்லும் மகன் அன்னைக்கு கொடுக்கும் முத்தத்திற்கு ஈடானது.... அந்த உணர்வினை பிரதிபலித்ததாலோ என்னவோ வழமையாக அவனது முத்தத்திற்கு முகம் சிவக்கும் சாரு இன்று அவனது தலையை கலைத்துவிட்டு

“தாட்ஸ் மை பாய்” என்றாள். பின் சில நிமிடங்களில் காண்டினிற்கு சென்ற மற்றவர்கள் வர அஸ்வினும் சாருவும் காண்டின் சென்றனர்... அங்கு எதுவும் வேண்டாம் என்று கூறிய அஸ்வினை வற்புறுத்தி உணவருந்த வைத்தாள் சாரு.. பின் இருவரும் திரும்பும் போது அங்கு யாரோ புதிய நபரொருவர் சித்ராவுடன் பேசிக்கொண்டிருப்பதை சாரு கண்டாள்.. சுமார் அறுபது வயது குறிப்பிடத்தக்க ஒருவர் சித்ராவுடன் பேசிக்கொண்டிருக்க அஸ்வினிடம் யாரென்று கேட்கும் பொருட்டு அவன் புறம் திரும்ப அவன் முகமோ இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்வை தத்தெடுத்திருந்தது.....

அது கோபம், வெறுப்பு, வேதனை,குரோதம் என்று பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்தியது......அவனது இந்த முகமாற்றத்திற்கான காரணத்தை அறிய சாரு “ரௌடிபேபி யார் அது சித்ராம்மா கூட பேசிட்டு இருக்க பெரியவர்?”

“மிஸ்டர் தனசேகரன்..... ஜே.ஓ.டி ஐடி சலூஷன் ஓட சி.ஈ.ஓ” என்று சாருவின் கேள்விக்கான பதிலை அஸ்வின் அளிக்க சாருவிற்கோ உச்ச கட்ட அதிர்ச்சி.... ஏனெனில் ஜே.ஓ.டி ஐடி சலூஷன் யூ.எஸ் இல் பெயர்போன நிறுவனம்.... பல சாப்ட்வேர் பட்டதாரிகளுக்கு வாழ்வில் ஒருமுறையாவது அங்கு வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு உண்டு.... பல போட்டியாளர்கள் உருவாகியும் ஜே.ஓ.டியின் அங்கீகாரத்தை யாராலும் பெற முடியவில்லை..... அதனாலேயே இன்று வரை அந்த துறையில் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனமாக திகழ்கின்றது....

“என்ன பேபி சொல்லுற??? அவரு உங்களுக்கு யாரு???”

“எங்க சித்தப்பாவோட கூடப்பிறந்த அண்ணன்.....” என்று விட்டு சாருவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்

“என்னோட அப்பா....”

“என்ன பேபி சொல்லுற???” என்று சாரு உச்சகட்ட அதிர்ச்சியில் வினவ

“ஆமா ஜிலேபி.... அவர் தான் என்னோட அப்பா மிஸ்டர். தனசேகரன்.... யூ.எஸ் ரின்டன்” என்று அஸ்வின் கூறிய விதம் சாருவிற்கு சிரிப்பை வரவழைக்க சாருவோ

“என்ன ரௌடிபேபி என்னமோ மாப்பிளை எந்தவூரு பாரின் ரிட்டன் அப்படிங்கிற மாடிலேஷனில் சொல்லுற??? ஆனாலும் உனக்கு இம்புட்டு குசும்பு ஆகாது மாமோவ்” என்று சாரு சிரிக்க அப்போதும் அவனது பாவனை மாற்றிக்கொள்ளாத அஸ்வினை கண்டு சாருவிற்கு ஏதோ நெருடியது..... இருந்தும் எதை பற்றியும் விசாரிக்காது அவர்கள் இருந்த இடம் நோக்கி அஸ்வினும் சாருவும் சென்றனர்...

அவ்விடத்தை அடைந்ததும் சித்ரா சாருவை தனசேகரனுக்கு அறிமுகப்படுத்த அஸ்வினோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்ற தோரணையில் ஓரமாக வருணை இழுத்து சென்றான்...

“டேய் அஸ்வின்... அப்பா வந்திருக்கார்டா.... வாங்கனு ஒரு வார்த்தை சொன்னா குறைந்தா போய்ருவ.... அங்க பாரு சாரு சிஸ்டர் என்னாச்சினு நம்மையே பார்த்துட்டு இருக்காங்க....நீ செய்றது சரி இல்லை அஸ்வின்... அவரு உன்னோட அப்பா.... மூன்றாம் மனிதன் இல்லை..... இவ்வளவு நாள் கழித்து உன்னை பார்க்க வந்திருக்காரு..... அவரை பார்த்து வாங்கப்பானு சொல்றதுல நீ எங்க குறைந்து போய்டுவ???? இப்படி அவரை அவாய்ட பண்ணுறது தப்பு அஸ்வின்”

“ வருண் உனக்கு அவரை பற்றி சரியா தெரியாது... அம்மா இறந்ததும் சித்தியும் சித்தப்பாவும் இல்லாட்டி என்னோட நிலைமை எப்படி இருந்திருக்கும்னு உனக்கு தெரியாது.... அம்மாவை இழந்த எனக்கு ஆதரவாய் இருப்பதை விட அப்போ அவருக்கு அவரோட பிஸ்னஸ் தான் முக்கியமா இருந்தது... அதனால என்னைப்பற்றி கவலைப்படாம சித்தி சித்தப்பா பொறுப்பில் என்னை விட்டுட்டு போய்ட்டார். ஏதோ சித்தியும் சித்தப்பாவும் என்னை அவங்க பிள்ளையா நினைத்து வளர்ந்ததால நான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கேன்.... வேறு யாராவது தப்பானவங்க கையில் என்னை ஒப்படைத்திருந்தால் என்னோட நிலையை யோசிச்சி பார்த்தியா??? அவருக்கு உயிருள்ள மனிதர்களை விட உயிரில்லாத அந்த பணத்தின் மேல் தான் பிரியம் அதிகம்..... இவ்வளவு நாள் நான் இருக்கேனா??? செத்தேனா என்று கூட விசாரிக்காத அவரை நான் வாங்கனு சொல்லனுமா???? சாரி வருண் நான் ஒன்று அவ்வளவு நல்லவன் இல்லை... ஐ ஜஸ்ட் கான்ட எக்ட் எஸ் ஐ ஹெவ் பொகொட்டின் எவ்ரிதிங்....” என்று அஸ்வின் கூற அவனது வலியை புரிந்து கொண்ட வருண்

“ஓகே என்னால உன்னை புரிந்து கொள்ள முடிகிறது... பட் இப்போ அங்கிள் கிருஷ்ணன் அங்கிளை பார்க்க வந்திருக்காரு”

“ஹாஹா.... அவரு ஒன்னும் பாசத்தில் அவர் தம்பியை பார்க்க வந்திருக்க மாட்டாரு.... ஏதாவது பிஸ்னல் டீலை முடிக்கவேண்டி இருந்திருக்கும்.. அந்த சாக்கில் இங்க வந்த அட்டன்டஸ் போட்டுருப்பாரு... நீ வேணும்னா பாரேன்... அவர் ஏதோ டீலிங்கிற்காக தான் இங்க வந்திருப்பார்... அவரெல்லாம் அன்பு பாசம்னு சொன்னா எந்த கடையில் விற்கிறார்கள் என்று கேட்கிற ஆளுடா..” என்றுவிட்டு ஒரு அசட்டு புன்னகையை உதிர்த்தான் அஸ்வின்...

அவன் எந்த நேரத்தில் எதனால் அப்படி கூறினானோ தெரியவில்லை .... ஆனால் அவனது தந்தை ஒரு டீலிங்கை பேசி முடிப்பதற்காகவே தாய்நாடு வந்திருந்தார்.... பிசினசில் பல டீலிங்கை வெற்றிகரமாக பேசி முடித்தவரால் தன் மகனது வாழ்வில் அதை நடைமுறைப்படுத்த முடியுமா???அதற்கு அஸ்வின் பதிலடி கொடுப்பானா இல்லை மறுக்காமல் சரி என்பானா???

ஐந்து மணிநேர சிகிச்சையின் பின் இருதய சத்திரசிகிச்சை வெற்றியடைந்தது என்ற செய்தியுடன் ஆப்ரேஷன் தியட்டரில் இருந்து வெளியே வந்தார் சர்ஜன்.... அங்கு ஆப்பரேஷன் தியேட்டருக்கு வெளியே அச்செய்திக்கென காத்திருந்த அனைவருக்கும் அச்செய்தியை தெரியப்படுத்த அங்கிருந்த அனைவருக்கும் இதுவரை இருந்த கலக்கம் நீங்கப்பெற்றது..... சித்ராவோ அந்த டாக்டரை கையெடுத்து கும்பிட்டு தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்...... பின் டாக்கர் தன்னை வந்து தனது அறையில் பார்க்குமாறு அஸ்வினிடம் கூறிச்சென்றார்..... அவர் அங்கிருந்து சென்றதும் வீட்டிற்கு அழைத்து பாட்டியிடம் அச்செய்தியை பகிர்ந்து கொண்டான் அஸ்வின். பின் டாக்டர் அறைக்கு செல்ல தயாரானவனுடன் தானும் சென்றார் தனசேகரன். அவரை அழைத்து செல்ல விருபப்பமில்லாத போதிலும் அவரிடம் வேண்டாம் என்று கூறி இப்போதிருக்கும் சுமூக நிலையை கெடுக்க வேண்டாம் என்று எண்ணி அவரையும் தன்னுடன் அழைத்துசென்றான் அஸ்வின்.. அவர்களிருவரும் அங்கிருந்து அகன்றதும் சஞ்சுவையும் வருணையும் அங்கிருக்கச் சொல்லிவிட்டு அருகிலிருந்த கோவிலுக்கு சாருவை துணைக்கு அழைத்துக்கொண்டு சென்றார் சித்ரா...
ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த அந்த அம்மன் கோவிலினுள் சென்று வணங்கிய சாரு மற்றும் சித்ரா அங்கிருந்த படிக்கட்டில் சிறிது நேரம் அமர்ந்திருக்க முடிவு செய்தனர்....

அப்போது ஒரு வித அமைதி அவர்களை சூழ்ந்து கொண்டது.... கிருஷ்ணருக்கு எதுவுமில்லை என்று கூறிய பின்பும் சித்ராவின் முகம் ஏதோவொரு கலக்கத்தை குத்தகைக்கு எடுத்ததிருந்தது போல் இருந்தது.....

“ஏன்மா இன்னும் ஒருமாதிரி இருக்கீங்க......??? அதான் அப்பாக்கு எதும் இல்லைனு சொல்லிட்டாங்களே...... அப்புறம் எது மா உங்க மனசை கஷ்டப்படுத்துது???”

“அஸ்வின்.....”

“அஸ்வினிற்கு என்னாமா??”

“அஸ்வின் அவங்க அப்பா கூட ஏதும் பிரச்சனை பண்ணுவானோனு பயமா இருக்கு....”

“என்னாமா சொல்லுறீங்க நீங்க சொல்லுறது எதுவும் எனக்கு புரியலை...”

“உனக்கு முழுசா சொன்னா தான் புரியும்.... அஸ்வின் அவங்க அம்மா அதாவது என்னோட அக்காவுக்கும் அஸ்வின் சித்தப்பாவோட அண்ணா தனசேகரன் மாமாவுக்கும் ஒரே பையன்.... அவங்க ரெண்டு பேரும் யூ.எஸ் இல் தான் இருந்தாங்க..... மாமாவுக்கு எப்பவும் தன்னோட பிசினஸ் பற்றி தான் நினைப்பு... ஏதோ கடமைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி அஸ்வின் அம்மாவோட ஒரு ஒட்டுதல் இல்லாம வாழ்ந்தாரு.. அஸ்வின் அப்பாவுக்கு பணம் இருந்தா எதையும் விலைக்கு வாங்கலாம்னு எண்ணம்..... ஆனா அஸ்வினோட அம்மா அதற்கு நேர் எதிர்... ரொம்ப அன்பானவங்க..அவங்க ரொம்ப சாப்ட் டைப்..... அவங்க பேசும் விதத்திலே எல்லோரையும் கவர்ந்திழுத்திருவாங்க.....
அவங்க எப்படி தான் மாமவோட செயல்களை சகிச்சிக்கிட்டு எட்டு வருஷம் வாழ்ந்தாங்கனு எனக்கு இன்னும் வரைக்கும் ஆச்சரியம் தான்.....
மாமா எப்பவும் எந்த ஒரு இன்ப துன்பத்திலும் அவங்களுக்கு பக்க துணையா இருந்தது இல்லை... அவங்க அஸ்வின் கிடைக்க இருந்தப்போ ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க...
அவங்க கஷ்டத்தை வெளியில சொல்லவும் மாட்டாங்க.... அவங்க பிரண்டு ஒருத்தவங்க தான் கால் பண்ணி எங்களுக்கு அவங்க கஷ்டப்படுறதா தெரியப்படுத்துனாங்க.... உடனே அம்மா கிளம்பி போய்ட்டாங்க.... பிரசவம் முடிந்து ஆறு மாதம் வரைக்கும் அங்க தான் இருந்து பார்த்துக்கிட்டாங்க.... அஸ்வின் பிறந்தப்போ என்ன குழந்தைனு கேட்டுட்டு ஆஸ்பிடல் பில்லிற்கு பணத்தை குடுத்திட்டு மாமா கிளம்பிட்டாங்கனு அம்மா சொன்னாங்க.....
இப்படி அவங்க வாழ்க்கை போயிட்டிருக்க அஸ்வினிற்கு எட்டு வயதா இருக்கும் போது மறுபடியும் அவங்க கன்சீவ் ஆனாங்க....அப்போ டெலிவரி டைம் ரொம்ப பிளட் லாஸ் ஆகி அக்கா இறந்துட்டாங்க...... அதோடு பிறந்த குழந்தையும் இறந்து போயிருச்சி. அவங்க இறந்த பிறகு அஸ்வினை அவங்க அப்பா எங்கிட்ட விட்டுட்டு பிசினசை பார்க்க போறேனு கிளம்பிட்டாரு......
அந்த எட்டு வயசு சின்னப்பையனுக்கு என்ன தெரியும் சொல்லு???? அவரு கிளம்பும் போது அவரை கட்டிக்கொண்டு அழுத அஸ்வினை பார்த்து அவர் இனிமே நீ இங்க தான் இருக்கப்போற..... சோ சும்மா சின்னப்பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்காம உன் வாழ்க்கையை நீ வாழ கத்துக்கோனு சொல்லிட்டு போயிட்டாரு .... அம்மாவை இழந்த பையனுக்கு ஆதரவா இருக்காம அவர் அப்படி சொல்லிட்டு போனது அஸ்வின் மனதில் காயத்தை உண்டு பண்ணி இன்று வரை மறையாத வடுவாக இருக்கு.......
நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம் அவங்க உறவை சீர்படுத்த.. ஆனா அஸ்வின் மாறவே மாட்டேனு பிடிவாதமாக இருக்கான்...
மாமா இங்க வரும் ஒவ்வொரு முறையும் அவருக்கும் அஸ்வினிற்கும் ஏதாவது ஒரு மோதல் வரும்....
அவன் தன் மேல்படிப்பை யூ.எஸ் இல் தான் தொடரனும்னு அவனோட அப்பா அழைச்சிட்டு போக வந்தாரு.....
முடியவே முடியாதுனு அடம் பண்ணி இங்கயே ஆரா காலேஜில் சேர்ந்துட்டான். இரண்டாவது முறை அவரது கம்பனியை டேக் ஓவர் பண்ண சொன்னப்போ முடியாதுனு முரண்டு பண்ணான்....நானும் அவனது சித்தப்பாவும் அதை பற்றி பேச அவன் எனக்கு நீங்க தான் அம்மா அப்பா..... உங்க சொத்து தான் என் சொத்து எனக்கு அவரு சம்பாதிச்சதோ சேர்த்ததோ எதுவும் வேண்டாம். பீளீஸ் என்னை போஸ் பண்ணாதீங்கனு சொல்லிட்டான்.. அதற்கு பிறகு அவங்க அப்பாவுக்கு தன்னோட எதிர்ப்பை காட்ட மாஸ்டர்ஸ் செய்ய அவுஸ்ரேலியா போய்ட்டான்.... இப்படி எப்போ அவங்க அப்பா வரும்போதும் அவனோடு பேசும் போதும் எதாவது பிரச்சனை தான் கிளம்புது. அதான் பயமா இருக்கு.....”

“ பயப்படாதீங்க அம்மா அப்படி எதுவும் நடக்காது. அஸ்வினோட அப்பா தன் தவறை உணர்ந்து திருந்தி இந்த முறை வந்திருப்பாரோனு எனக்கு தோணுது மா...... நாம நல்லதே நினைப்போம் எல்லாம் நல்லதாவே நடக்கும்.... நீங்க இதை பற்றி யோசிச்சி உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க மா...”
“நீ சொல்லுற மாதிரி எல்லாம் சரியா நடந்தா சரி தான் சாரு.... எல்லாம் அந்த ஆண்டவன் கையில் தான் இருக்கு... சரி வா நேரமாச்சு நாம கிளம்பலாம்” என்று சாரு மற்றும் சித்ரா கோயிலிலிருந்து கிளம்பினர்.......

ஒரு வார ஆஸ்பிடல் வாசம் முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் கிருஷ்ணர்......

அன்று அவரை வீட்டில் விட்டு சென்ற சாருவால் வேலைப்பலு காரணமாக அஸ்வின் வீட்டிற்கு செல்ல முடியவில்லை... தினமும் அலைபேசியில் அழைத்து கிருஷ்ணரை நலம் விசாரித்ததோடு ஆபிசில் அஸ்வினிடமும் கிருஷ்ணரின் உடல் நலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வாள்...

அன்று அஸ்வின் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தான்.... என்வென்று விசாரிக்க அழைத்த போது அவனது அழைபேசி அணைக்கப்பட்டிருந்தது.... அவனது வீட்டிற்கு அழைத்த போது அழைப்பை எடுத்த கவி சாருவின் குரலை கேட்டதும் அழத்தொடங்கினாள்....

அவளிடம் என்னவென்று விசாரிக்க அஸ்வினது சித்தப்பாவிற்கு நெஞ்சுவலி வந்து ஆஸ்பிடலில் சேர்த்திருப்பதாக கூறினாள். அவளிடம் எந்த ஆஸ்பிடல் என்று விசாரித்து விட்டு போனை அணைத்த சாரு சஞ்சுவை அழைத்து விஷயத்தை கூறிவிட்டு ஆஸ்பிடலிற்கு சென்றாள்.....

அங்கு அவளை கண்டதும் அவளை கட்டிக்கொண்டு அழுத சித்ராவை சமாதானப்படுத்தும் வலி தெரியாது தடுமாறினாள். ஏனெனில் நிலைமையின் வீரியத்தன்மையை அவள் அறிவாள்.... சர்ஜரி முடிந்து ஒரு வாரமே ஆகியிருந்த நிலையில் இப்படி நிகழ்வது உயிரை பறிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்....
இதை சித்ரா அறிந்தால் அவரை சமாதானப்படுத்துவது யாராலும் முடியாத காரியம்.... எனவே அவரை சமாதானப்படுத்துவதற்காக இல்லாத ஒரு நட்பை பற்றி கூறி அவளது இல்லாத தந்தைக்கு இப்படி நடந்ததாகவும் அவரின் உயிருக்கு ஏதும் நடவாது டாக்டர்ஸ் காப்பாற்றியதாகவும் கதையளந்தாள்.... அதை உண்மை என்று நம்பிய சித்ரா சிறிது சமாதானம் அடைந்தார்.... அவரை அமைதிப்படுத்திய சாரு அஸ்வினை தேட அவனோ சித்ராவை விட மோசமான நிலையில் இருந்தான்....... சிலையாய் உணர்வற்று சமைந்து நின்றவனை சாரு தன் தொடுகையால் உணர்வு கொடுக்க எதுவும் கூறாது அவ்விடத்திலிருந்து சென்றான்.. அவனது செயல் விசித்திரமாக இருந்தாலும் அவன் ஏனோ அவன் துக்கத்தை தாங்க முடியாது அவ்வாறு நடந்துகொள்கின்றான் என்று சாரு தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு சித்ராவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.....

சிறிது நேரத்தில் அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணரின் உயிரிற்கு ஆபத்தில்லை என்று கூறிவிட்டு அஸ்வினை தன்னறைக்கு வருமாறு பணித்தார். அஸ்வின் அங்கிருந்து நகன்றதும் சாரு நடந்ததை விசாரிக்கத் தொடங்கினாள்....... அதை சித்ரா கூற கேட்டதும் சாருவிற்கு தனக்கு மட்டும் ஏன் எதுவும் சரிவர நடப்பதில்லையென்ற கழிவிரக்கம் எழுந்தது..... அவளால் தன்னிலை எண்ணி அழுவதா மகிழ்வதா இல்லை ஏன் பிறந்தோம் என்று நினைப்பதா என்று தெரியவில்லை..... வாழ்வின் முதன் முறை தன்னை ஒரு தாழ்மையான படைப்பாக எண்ணினாள்..... தன்னை படைத்ததற்கு பதில் அந்த கடவுள் வேறோரு ஜீவனை படைத்திருக்கலாம் என்று கடவுளை வசை பாடினாள்...... சாருவை கொந்தளிக்கச்செய்யும் வகையில் சித்ரா கூறியது என்ன???? இனி சாரு என்ன செய்ய போகிறாள்??? அதற்கு அஸ்வினின் பிரதிபலிப்பு என்ன???

சித்ரா கிருஷ்ணரின் இந்நிலைக்கு அஸ்வின் அவன் தந்தையுடன் சண்டையிட்டதே காரணம் என்று கூறினார்....

“அஸ்வினோட அப்பா கால் பண்ணி இருந்தாருமா.... அவனுக்கு அவர் பெண் பார்த்திருப்பதாகவும் அவன் அந்த பெண்ணை திருமணம் செய்யனும்னு எங்ககிட்ட சொன்னாரு.... சிறுவயதிலிருந்தே அஸ்வினிடம் கேட்காம அவன் சம்பந்தப்பட்ட எதுலயும் நாங்க முடிவெடுத்ததில்லை.... இது அவன் வாழ்க்கை ....
அதுனால அவன்கிட்டயே கேட்போம்னு அவன் இருக்கும் போது அவங்க அப்பா கூட பேசினோம். ஸ்கைப்பில் பேசினதால நாங்க எல்லோரும் ஒரேடியா ஒரு இடத்தில் இருந்து தான் பேசினோம் ...... மனசுக்குள்ள பயம் அஸ்வினுக்கும் அவங்க அப்பாவிற்கும் மறுபடியும் மோதல் வந்திருமோனு......
அதுபடியே அஸ்வினும் அவங்க அப்பா சொன்னதை மறுத்துட்டான்.... அவங்க அப்பா காரணம் கேட்டப்போ அதை எதுக்கு உங்ககிட்ட சொல்லனும்னு அப்படி இப்படினு அவங்க அப்பா கூட வாக்குவாதம் பண்ண ஆரம்பிச்சிட்டான்... வாக்குவாதம் முற்றிப்போய் அஸ்வின் அப்பா இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்னு சொல்லிட்டாரு..... அதுக்கு அஸ்வின் என் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்குற உரிமையை நான் உங்களுக்கு கொடுக்கவில்லை.... அது என்னோட சித்தி சித்தப்பாவிற்கு மட்டும் தான் இருக்கு.... உங்க உரிமை என்னோட இனிசியலில் உங்க பெயர் இருப்பதில் மட்டுமே.... அதுவும் அம்மாவுக்காக தான் மாற்றாமல் இருக்கேன்... இல்லைனா அதையும் எப்பவோ மாற்றி இருப்பேன்... அப்படினு நிறைய பேசிட்டான் மா.... எனக்கும் அப்பாக்கும் இவங்க சண்டையை எப்படி நிறுத்துவதுனு தெரியாம இருந்தப்போ அப்பா நெஞ்சை பிடிச்சிகிட்டு மயங்கி விழுந்துட்டாரு..... அவரு அப்படி விழுந்தவுடன் உடனே ஆஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டோம்.... அஸ்வின் தான் ரொம்ப பயந்துட்டான்......அவனால தான் இப்படி ஆகிருச்சினு ரொம்ப அழுதுட்டான்.....
அஸ்வின் இந்த விடயத்தில் அவங்க அப்பா பேச்சை கேட்டுருக்கலாம்..... அவங்க அப்பா சொல்லுறாருங்கிற ஒரே காரணத்திற்காக அவன் இப்படி மறுப்பான் என்று நான் எதிர்பார்க்கலை...
நானும் அப்பாவும் பேசி இருந்தோம்னா அவன் மறுத்திருக்க மாட்டான்... இப்போ இப்படி ஆகியிருக்காது..... அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள விரிசலை இந்த கல்யாணப்பேச்சில் சரி படுத்தலாம்னு நினைத்தோம்... ஆனா அது கடைசியில் இப்படி ஆகிவிட்டது.... யாரு செய்த பாவமோ இப்படி அஸ்வினையும் அவங்க அப்பாவையும் பிரித்து வைத்திருக்கு.... ஆனா இந்த கல்யாணம் நடக்கலைனா கடைசி வரைக்கும் அஸ்வின் அவங்க அப்பா கூட ஒட்டாமலே போய்ருவான்..... இதுக்கு கடவுள் தான் ஒரு வழி செய்யனும்..... சாரு நீ அஸ்வின் கூட கொஞ்சம் பேசிப்பாரேன்...... அவனுக்கு உன் மேல் மதிப்பு கலந்த மரியாதை இருக்கு. நீ சொன்னா கொஞ்சம் யோசிப்பான்” என்று சித்ரா சாருவிடம் உதவி கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை... தன் ஆருயிர் காதலனிடம் தானே சென்று வேறொருவரை மணம் புரியச்சொல்ல எந்த காதலியால் முடியும்??? அதுவும் தன்னை மனதால் விரும்பிய காரணத்திற்காக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த காதலனை நோகடிக்க எந்த காதலியால் முடியும்???? இப்படி ஒரு நிலை ஏன் வந்தது என்று சாரு மனம் நொந்தாள்...

தன்னால் அவனது குடும்ப உறுப்பினரின் உயிரிற்கு ஆபத்து வந்த போதிலும் குற்றவுணர்ச்சியுடன் சென்ற அஸ்வினின் முகம் அவள் கண் முன் வந்தது.... அவனது குற்றவுணர்ச்சிக்கு காரணம் என்ன???? அனைத்து இடர்களிற்கும் தானே காரணகர்த்தாவாக இருக்கின்ற பட்சத்தில் அவன் ஏன் குற்றவுணர்ச்சியை சுமக்க வேண்டும்.... என்னை விரும்பிய காரணத்திற்காக தன் தந்தையை எதிர்த்து அவருடனான உறவையே முறித்துகொள்ள துணிந்தான்...இல்லையேல் அவர் தந்தை பார்த்திருந்த பெண்ணிற்கு சம்மதம் தெரிவித்திருப்பான் ( ஆனால் சாரு உணராத ஒன்று அவரது தந்தை பார்த்ததாலே எந்த காலத்திலும் அந்த திருமணத்திற்கு அஸ்வின் சம்மதம் தெரிவித்திருக்க மாட்டான்..)

இன்று அப்பாவிற்கு இந்த உயிர் போகும் நிலையும் வந்திருக்காது..... இவை அனைத்திற்கும் நானே காரணம் என்று தன்னுள் பிதற்ற தொடங்கினாள் சாரு....
இறுதியாக தன் காதலே அவனை இவ்வளவு வருத்துகின்றதென்றால் அதை அவனது நன்மைக்காக துறப்பதே அவனது நல்வாழ்வுக்கு சிறந்தது என்று முடிவெடுத்தாள்....
ஆனால் அப்போது சித்ராவிற்கு அவர்களது காதல் விவரம் தெரிந்திருந்தால் அவரே அவர்களது திருமணத்தை எந்தவித எதிர்ப்புமின்றி செய்து கொடுத்திருப்பார்.... அவர் பெறா மகன் என்றாலும் அஸ்வினிற்கு அவன் விரும்புவதை பெற்றுக்கொடுப்பதில் எந்த எதிர்ப்பையும் சமாளிக்க சித்ராவும் கிருஷ்ணரும் துணிவார்கள். சித்ரா உண்மையறியாது யதார்த்தமாக கூறியதை சாரு வேறு விதமாக எடுத்துக்கொண்டது யாரின் தவறு????

சாரு அங்கிருந்து சித்ராவிடம் சொல்லிக்கொண்டு தன் இல்லம் திரும்பினாள்... அங்கு தன் அறைக்கு சென்றவள் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை உகந்தாள்... அவள் முடிவெடுத்த போதும் அவளது மனம் அதை ஏற்கவில்லை.... அவளது மனசாட்சியோ பல கேள்விகளை எழுப்பி அவளை இன்னும் நோகடித்தது.... எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவளிடம் சரியான பதில் இல்லை..... அவளிடம் இருந்த ஒரே பதில் தன்னால் அஸ்வினிற்கு எந்த இழப்பும் நேரக்கூடாது.... அவன் தன் குடும்பத்துடன் எப்போதும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதே....... ஆனால் தன் பிரிவு அவனுக்கு அவன் அன்னையின் இழப்பிற்கு ஈடான ஒரு பெரிய இழப்பு என்பதை சாரு உணரத்தவறினாள்....
அந்த பிரிவு என்ற வார்த்தை சாருவிற்கு அவனுடனான இனிமையான தருணங்களை நினைவுபடுத்தி இம்சித்தது...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN