அத்தியாயம் 25
அன்று மலரை ஆதித்யா கொண்டு விடவில்லை என்பதை காலையிலேயே பார்த்திருந்த நந்தன்...மாலையில் மலர் பள்ளியை விட்டு வெளியே வரும்பொழுது அவள் முன் வந்து நின்றான்...
நந்தனை பார்த்ததும் மலர், "இவன் எதற்கு இங்கே வந்தான்?" என்று அவள் தயங்கி நிற்க...
அவளருகில் வந்த நந்தனோ,
"ப்ளீஸ் மலர் உன்கிட்ட ஒரு டென் மினிட்ஸ் தனியா பேசணும்" என்றான்.
மலருக்கு என்ன சொல்லி மறுக்க என்று தெரியாமல், தன்னை அழைத்து செல்ல வீட்டிலிருந்து கார் வந்திருக்கிறதா? என்று சுற்று முற்றும் முற்றும் பார்த்தாள்....
கார் இன்னும் வந்து இருக்கவில்லை...
"அச்சோ எப்பவுமே சீக்கிரம் வந்துடுமே.. இன்னிக்கு என்ன ஆச்சு" என்று உள்ளுக்குள் அழுத்து கொண்டவள்...
வெளியில் அவனிடம்...
"நம்ம பேசுறதுக்கு ஒன்னும் இல்ல நந்தன்..." என்று ஒட்டாத தன்மையுடன் தான் பேசினாள்.
இத்தனை நாள் அவளுக்காகவே வந்திருந்த வேலைகளை விட்டுவிட்டு அலைந்து கொண்டிருந்த நந்தனுக்கு கோபம் வந்தது...
அதை கட்டுப்படுத்திக்கொண்டு,
"மலர் ஏன் இப்படி பேசுற...நம்ம ரொம்ப வருஷமா ஃபேமிலி பிரண்ட்ஸ் தான்... இடைல நடந்த கசப்பான சம்பவம் பத்தி நான் இப்போ பேச கூப்பிடல... ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும் பக்கத்துல இருக்குற காபி ஷாப் போகலாம். எனக்காக ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ் உன்னால ஒதுக்க முடியாதா?" என்று உணர்ச்சி பிழம்பாக கேட்டான் நந்தன்.
மலரின் முகம் யோசனையை காட்ட... "உன்னோட வீட்ல இருந்து கார் வரதுக்குள்ள வந்துடலாம் ப்ளீஸ் மலர்" என்று அவன் கெஞ்ச...
மலரும் அதற்குமேல் மறுக்க முடியாமல் சரி என்று தலை அசைத்தாள்.
இங்கோ காலையில் மலரின் புன்னகையில் தன்னையே தொலைத்திருந்த ஆதித்யா... வேகமாக அன்றைய தினத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு... வீட்டிற்கு போன் செய்து மாலை மலரை பிக்கப் செய்ய கார் அனுப்ப வேண்டாம் என்றும்... தானே அழைத்து வந்து விடுவதாகவும் சொல்லிவிட்டு...
தன்னைப் பார்த்ததும் மலரும் புன்னகையோடு விழி விரித்து பார்க்கும் தனது மலரை காண ஆவலோடு கிளம்பி வந்து கொண்டிருந்தான்...
ஆதித்யாவின் கார் பள்ளி அருகே வரவும்... மலரும் நந்தனும் பள்ளியை அடுத்திருந்த ஒரு சிறிய காபி ஷாப்பிற்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
தூரத்திலிருந்தே மலரை பார்த்து விட்ட ஆதித்யா... காரை ஸ்லோ பண்ணியவன்... அவள் அருகில் ஏதோ பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்த ஆடவனை பார்த்ததும் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்திவிட்டான்.
நந்தன் மலரின் மனதில் இருக்கிறான் என்பதை பொட்டில் அடித்தது போல் திரும்பவும் ஞாபகம் வந்தது அவனுக்கு....
தன் அப்பாவின் சொல்லை நினைத்து பார்த்தவன் ...அப்போ மலர் மனசுல இருந்து நந்தன அழிக்கவே முடியாதா??... என்னோட அன்ப.... காதல... எதிர்பார்ப்ப.. மலர் இன்னும் புரிஞ்சிக்கவே இல்லையா? என்னோட அம்மா மாதிரி இவளும் என்ன விட்டு போய்டுவாளா?
காலையில் கூட நான் டிராப் செய்ய வரவில்லை என்றதும் புன்னகைத்தாளே அது இதற்கு தானா.... என்று நினைத்தவனுக்கு தான் மீண்டும் மீண்டும் தோற்றுப் போக போகிறேனா?
என்று ஏதேதோ நினைத்தபடி ஆதித்யா மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து பள்ளியின் அருகே சென்று நிறுத்தினான்.
ஏற்கனவே நந்தன் உடன் பேசிவிட்டு பள்ளியின் முன் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்த மலர்.
ஆதித்யாவின் காரை பார்த்ததும்
எதிலிருந்தோ தப்பிப்பது போல் வேகமாக உள்ளே ஏறி அமர்ந்தாள்.
அவள் எதாவது சொல்வாள் என்று என்று ஆதித்யா அவள் முகத்தையே பார்த்து கொண்டுவர... மலர் எதுவும் பேசாமல் அமைதியாகவே வரவும்.. ஆதித்யாவின் உள்ளம் முழுவதும் நெருப்பாகி தகிக்க ஆரம்பித்தது....
அவர் வாயைத் திறந்து நந்தனை சந்தித்தேன் என்று சொல்லியிருந்தால் கூட அவன் யோசித்து இருப்பானோ என்னவோ...
தன்னிடம் நந்தனை சந்தித்த விஷயத்தை மலர் மறைக்கிறாள் என்று தெரிந்ததும் கொதித்த மனதின் கோபத்தை காரின் மீது காட்ட.... கார் சாலையில் சீறிப்பாய்ந்து சென்றது.
தனது யோசனையில் இருந்து வெளிவந்த மலர் அப்போது தான் திரும்பி ஆதித்யாவை பார்த்தாள். நெருப்பைக் கக்கும் விழிகளுடன் கோபத்தினால் தாடை இறுகி கை நரம்புகள் புடைக்க ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்தவாறு மின்னல் வேகத்தில் கார் ஓட்டிக் கொண்டிருந்தான் ஆதித்யா.
அவனைப் பார்த்து பயந்து போன மலர் நடுக்கத்துடன், "கொஞ்சம் மெதுவா ஓட்டுங்களேன்..." என்று சொல்ல... காரின் வேக கூடியதே தவிர குறையவில்லை.
பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க கண்களை இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் மலர்விழி....
எப்படியோ ஆதித்யா ஓட்டிய வேகத்திற்கு... விபத்து எதுவும் நடக்காமல் கடவுள் புண்ணியத்தில் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
வாட்ச்மேன் வந்து கதவை திறந்துவிட காரை உள்ளே விடாமல், "இறங்கிப் போடி" என்று ஆதித்யா கர்ஜித்ததும்...
பயத்தில் வேகமாக மலர் இறங்க...
காரை திருப்பி மீண்டும் வெளியே சென்றுவிட்டான் ஆதித்யா.
உள்ளே வந்த மலருக்கு அவனின் திடீர் கோபம் வெறுப்பு ஏன்? என்று புரியவில்லை...
நேற்று களைப்பாக வந்தவனை ஓய்வெடுக்க விடாமல் அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டோமே... இன்றும் அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்றுதான் அவனிடம் நந்தனை சந்தித்ததை பற்றி எதுவும் பேசாமல் மலர் அமைதியாக வந்தது...
ஒருவேளை சொல்லியிருந்தால் நந்தனை சும்மா விடமாட்டான் ஆதித்யா என்று அவளுக்கு நன்றாக தெரியும்...
தனது அறைக்கு வந்து உடை மாற்றி விட்டு கட்டிலில் விழுந்தாள் மலர்.
தன் மேலேயே சுயபச்சாதாபம் வந்தது அவளுக்கு...
தனக்கு மட்டும் ஏன் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது ஒரு நாள் சந்தோஷமாக இருந்தால் ஒரு மாதம் துக்கம் தான் பரிசாக கிடைக்கிறது... மனதறிந்து இதுவரைக்கும் யாருக்கும் நான் எந்த கெடுதலும் நான் செய்வதில்லையே... பின் ஏன் எனக்கு மட்டும் இப்படி?
நந்தன் காபி ஷாப்பிற்கு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று அழைத்ததும் சென்றது இப்பொழுது நினைத்துப்பார்த்தால் தவறாக தான் தெரிந்தது ....
காபி ஷாப்பில் எதிரெதிரே அமர்ந்தனர் நந்தனும் மலரும்...
"ஆர்டர் ப்ளீஸ்..." என்று அருகில் வந்த பேரர் இடம் ...
"ரெண்டு டீ ..."என்று ஆர்டர் கொடுத்தான் நந்தன்.
"எனக்கு டீ வேண்டாம் நந்தன்... காஃபி தான் வேணும்" என்றாள் மலர்.
"ஆனா உனக்கு டீ தானே பிடிக்கும்..." என்று நந்தன் சந்தேகமாக கேட்க,
"எனக்கு இப்போ எல்லாம் காஃபி தான் பிடிக்கும் ..."என்று பட்டென்று பதில் சொன்னாள் மலர்.
அதைக் கேட்டு நந்தன் முகம் சுருங்கவும்...
"ஹம்ம்...அப்புறம் சொல்லுங்க மிஸ்டர் நந்தன்... என்ன பேசணும்? எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க ...என்னோட வீட்ல இருந்து எனக்கு கார் வந்துடும்"
என்று மலர் அவசர படுத்த...
"மலர் அதுவந்து..." என்று தயங்கினான் நந்தன்.
மலரிடம் இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று நிறைய நினைத்திருந்தான் தான்... ஆனால் அவளது முகத்தில் இருந்த தெளிவும் ஒட்டாத தன்மை எல்லாம் அவனின் வாய்க்கு பூட்டு போட்டது...
நந்தன் பேசுவதற்குள்... அவர்கள் ஆர்டர் செய்த காஃபி, டீ இரண்டும் வந்துவிட ...மலருக்கு காஃபியை எடுத்து கொடுத்துவிட்டு... தன் புறம் டீயை நகர்த்திக் கொண்டான் நந்தன்.
மலர் காபியை கையில் எடுக்கும் பொழுது தான், அவளது கையில் இருந்த காயத்தை பார்த்தான்.
"மலர் கைல என்ன காயம்?" என்று நந்தன் கேட்டதும்...
"ஃப்ரூட்ஸ் கட் பண்ணும் போது தெரியாம கைய பண்ணிட்டேன் ...சின்ன காயம் தான்" என்று சமாளித்தாள் மலர்.
அவள் சமாளிக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட நந்தன்...
பேசுவதற்கு தைரியம் வந்து...
"நீ ரொம்ப கஷ்டத்துல இருக்க மலர்... அது எனக்கு நல்லா தெரியும். ப்ளீஸ் மலர் இப்போ ஒன்னும் கெட்டுப் போகல... என் கூட வந்துரு... நான் உன்ன பாத்துக்குறேன்..." என்று சொன்னதும் தான் தாமதம் மலர் கண்களை உருட்டி கொண்டு பத்திரகாளி ஆக மாறி இருந்தாள்.
"மிஸ்டர் நந்தன்... மைன்ட் யுவர் வேர்ட்ஸ்... நீங்க என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க... நான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன்.இதுக்கு அப்புறம் இதை பத்தி பேசாதீங்க... நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு..." என்றும் மலர் கோபத்துடன் பேசப்பேச நந்தன் சுவாதி சொன்னதை யோசித்துப் பார்த்தான்.
"இப்போ நீங்களே போய் கேட்டாலும் மலர் உண்மையை சொல்ல மாட்டா... அவ எவ்வளவு கொடுமையை வேணாலும் அனுபவிப்பாலே தவிர தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டா..." என்று அன்றைக்கே சுவாதி சொல்லியிருந்தாள்.
அதை நினைத்து பார்த்தவன்,
"ப்ளீஸ் மலர் இப்படியெல்லாம் பேசினா...நா நம்பிடுவேனா உன்ன விட மாட்டேன் மலர்... கடைசி வரை உன் கூடவே இருப்பேன்...அப்போ உன்மேல சந்தேகப்பட்டது தப்புதான் இப்போ எனக்கு எல்லா விஷயமும் தெரியும் மலர்... சூழ்ச்சி பண்ணி நம்ம கல்யாணத்த நிறுத்தினான் அந்த ஆதித்யா இப்போ உன்னையும் தினம் தினம் கொடுமைப்படுத்தி அழ வைக்கிறான்... அவன் கூட உன்ன தனியா விட்டுட்டு நான் கண்டிப்பா அமெரிக்கா போகமாட்டேன்... ப்ளீஸ் மலர் நம்ம கல்யாணம் பண்ணிட்டு அமெரிக்காவுக்குப் போய் செட்டில் ஆகிடலாம். பழைய விஷயத்தை எல்லாத்தையும் மறந்துடு..." என்று நந்தன் பழைய பல்லவியை பாட...
"எனாஃப் நந்தன்... அவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை...என்னோட ஹஸ்பண்ட் பற்றி இனிமேல் இப்படி அசிங்கமா பேசாதீங்க... அப்புறம் என்னோட கோபத்தை நீங்க பார்க்க வேண்டியது இருக்கும்... இப்போ நீங்க கூப்பிட்டதும் நான் உங்க கூட வந்ததுக்கு ஒரே ஒரு காரணம்... என்னோட அப்பா தான்... என்னோட அப்பாவுக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்... எங்க அப்பாவுக்கு பிடிச்ச ஒருத்தர அசிங்கப்படுத்த எனக்கு மனசு வரல... அதுக்காக தான் என்னோட ஹஸ்பண்ட் பத்தி தப்பா பேசியும்... உங்க கூட இப்போ இங்க உட்கார்ந்து நான் பேசிட்டு இருக்கேன்.... அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுட்டு இருக்க மாட்டேன்... என்னமோ கொடுமை அது இதுன்னு சொல்றீங்க... என் புருஷன பத்தி பேச உங்களுக்கு ரைட்ஸ் இல்ல... மிஸ்டர் நந்தன்... லிமிட் யுவர் வேர்ட்ஸ் ... என்ன பொறுத்தவரை என்னோட ஹஸ்பண்ட் எனக்கு நல்லவர்தான்... நம்ம ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மென்ட் முடிஞ்சாலும் ... கல்யாணம் உடைஞ்சு... எப்பவோ நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள அந்த நம்பிக்கை இல்லாத உறவு முறிஞ்சு போச்சு...அது அவ்வளவுதான்..." என்று படபடவென்று பொரிந்து தள்ளிய மலர்,
ஒரு நொடி கண்களை மூடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டு...
"அது எப்படி? நீங்களே முடிவு பண்ணி என்ன விட்டு போவீங்க ...அப்புறம் நீங்களே திரும்பிவந்து கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்வீங்க... உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க... நான் என்ன அவ்வளவு சீப்பா போய்ட்டேனா...ஹான்ன்?
சரி சூழ்ச்சி பண்ணி தான் நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சாங்கனு வச்சுப்போம்... அப்பவே என் மேல நம்பிக்கை இல்லாத நீங்க இப்போ எந்த மூஞ்சிய வெச்சுட்டு.. என்கிட்ட வந்து திரும்ப வாழ்வோம் கல்யாணம் பண்ணிப்போம் னு கேக்குறீங்க நந்தன்... உங்க மேல எனக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை இருக்கு... இன்னொரு தாட்டி இப்படி பேசிட்டு என்கிட்ட வந்தீங்கனா... அந்த மரியாதையும் போய்டும்" என்றவள் தனது கைப்பையில் இருந்து தான் குடித்த காபிக்கு பணத்தை எடுத்து டேபிள் மேல் வைத்து விட்டு கோபமாக எழுந்து வெளியே வந்து விட்டாள்.
அவள் பின்னோடு வந்த நந்தன், "உண்மையிலேயே நீ சந்தோஷமா தான் இருக்கியா? மலர்" என்று கேட்க
"நான் எப்பவும் யாருக்காகவும் பொய் சொல்ல மாட்டேன் நந்தன்...நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்... ஆதித்யா என்ன நல்லா பாத்துக்குவார்" என்ற மலர்,
" அப்புறம் நா எப்பவும் இதே மாதிரி நல்லா இருக்கணும்னு நீங்க மனசார நினைச்சீங்கன்னா... தயவு செஞ்சு இனி என் வாழ்க்கையில வந்து தொல்லை பண்ணாதீங்க நந்தன்..." என்றுவிட்டு வேகமாக நடந்தாள்.
அவளுக்கு ஈடு கொடுத்த நடந்த நந்தன்...
"சாரி மலர்... இனி என்னால உனக்கு எந்த ப்ராப்ளமும் வராது..." என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று விட்டான்.( அப்பொழுதுதான் ஆதித்யா அவர்களை பார்த்தது)
மலருக்கு தான் குழப்பமாக இருந்தது... நந்தன் எதற்கு கொடுமை அது இது என்று பேசினான் என்று...
குழப்பத்துடன் நின்றவளின் முன்னால் ஆதித்யா காரை நிறுத்தவும் வேகமாக ஏறிக்கொண்டாள் மலர்.
ஆதித்யாவிடம் வீட்டிற்கு சென்றதும் இதை தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று மலர் நினைத்திருக்க... ஆனால் காரில் ஆதித்யா காட்டிய கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்த்து பயந்து போனாள்.
ஒருவேளை ஆதித்யா நானும் நந்தனும் சந்தித்ததை தவறாக புரிந்து கொண்டானோ?
ஆதித்யா வீட்டிற்கு வந்ததும் எப்படியாவது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும்.... என்று நினைத்தாள் மலர்.
வெகுநேரம் ஆதித்யாவின் வருகைக்காக காத்திருந்த மலர் ...
கீழே அவனின் கார் சத்தம் கேட்டதும் வேகமாக இறங்கி வந்தாள்.
ஆனால் ஆதித்யா வந்த நிலையை பார்த்ததும் மலரின் நெஞ்சம் நடுங்கி தான் போனது...
தொடரும்....