மண்ணில் தோன்றிய வைரம் 13

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாடு திரும்புவதற்காக தயாராகிக்கொண்டிருந்த சாருவிற்கு அழைத்தான் சஞ்சு...

“சொல்லு சஞ்சு???”

“.......”

“இன்னும் வன் ஹவரில் ஏர்போர்ட்டில் இருக்கனும் டா..... பாக்கிங் கொஞ்சம் இருந்தது.... அதான் அதை செய்திட்டு இருக்கேன்....”

"......"

“ஆமா டா சரியா மார்னிங் நைன் ஓர் கிளாக் ரீச் ஆகிருவேன்.... நீ பிக்கப் பண்ண வந்துருவ தானே??”

“....”

“ஓகே நான் லாண்ட் ஆனோன உனக்கு கால் பண்றேன்.... பாய்...” என்றுவிட்டு அழைப்பை கட் செய்தாள் சாரு.....

ஆம் இன்றோடு சாரு சிங்கப்பூர் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது......
இடத்தில் மட்டுமல்லாது வாழ்விலும் பல மாற்றங்கள்...

சிங்கப்பூரில் சஞ்சுவின் அக்கா ப்ரீத்தி வீட்டிலேயே தங்கியிருந்தாள் சாரு.... ப்ரீத்தியிற்கு அப்போது தான் குழந்தை பிறந்து நான்கு மாதம். அதனால் ப்ரீதிக்கு துணையாய் சஞ்சுவின் அம்மா இருந்தார்.... சாரு வந்ததும் இரு மாதங்கள் தங்கியிருந்த சஞ்சுவின் அம்மா மகனை சீராட்ட தாயகம் திரும்பி விட்டார்.... சாருவின் நிலை பற்றி சஞ்சு ஏற்கனவே ப்ரீதிக்கு சொல்லியிருந்த படியால் ப்ரீதியும் சாருவிற்கு தன் முயற்சியால் யதார்த்தத்தை உணர்த்த முயன்றாள்... அது சாருவிற்கு புரிந்தாலும் அவள் அதை வெளிக்காட்டாது நடந்து கொண்டாள்.... அவளுக்கு அந்த குட்டி தேவதை கவினயா உடனே நேரம் சுகமாக கரையும்.... காலையில் அவளை குளிப்பாட்டுவதில் உதவி செய்யும் ப்ரீதியின் கணவர் ஶ்ரீதரை பார்க்கும் போது ஏனோ சாருவிற்கு அஸ்வின் நியாபகம் வரும்.... ப்ரீதியும் ஶ்ரீதரும் ஒருவருக்கு மற்றொருவர் துணையாய் வேலைகளை பரிமாறிக்கொள்வதும் வார்த்தையாடிக் கொள்வதையும் பார்க்கும் போது சாருவிற்கு ஏனோ அஸ்வினோடு தான் அவர்களது எதிர்காலம் பற்றி பேசியது நினைவில் வரும்..... அது அவள் மறக்க நினைக்கும் அனைத்தையும் மீண்டும் நியாபகப்படுத்தும்...

அவன் தன்னை மறக்க வேண்டுமென சிங்கப்பூர் வந்தவள் அவனது நினைவிலேயே தன் நாட்களை கடத்தினாள்..... இடையிடையே சஞ்சுவும் ஷெண்பாவும் அவளுக்கு அழைத்து அவளது நலம் விசாரிப்பார்கள்.....
அவ்வாறு ஒரு நாள் சஞ்சு பேசும் போது அஸ்வின் அவனது ரெசிக்னேஷன் லெட்டரை சமர்ப்பித்துள்ளதாக கூறினான்... அதை கேட்ட சாருவிற்கு முதலில் அதிர்ச்சி என்றாலும் அதை தொடர்ந்து அவன் தன் தந்தையின் கம்பனியில் மானேஜிங் டைரெக்டராக சார்ஜ் எடுத்துக்கொள்ளப்போவதாக சஞ்சு கூறிய செய்தி அவளுக்கு தான் எண்ணியது நடந்துவிட்டது என்ற திருப்தியை அளித்தது.... அடுத்து அவனது திருமணம் பற்றி சஞ்சுவிடம் கேட்க அவளுக்கு நா எழவில்லை.... அவள் கேட்கவில்லை என்றாலும் சஞ்சு அவன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் ஒரு வருடத்திற்கு பின் திருமணத்தை வைத்துகொள்ளலாம் என்று அவன் கூற வீட்டு பெரியவர்களும் சரி என்று அவன் விருப்பப்படி நடக்கட்டும் என்று சம்மதித்ததாகவும் கூறினான். இதை கேட்ட சாருவிற்கு சொல்லொண்ணா துக்கம் அவளை சூழ்ந்து கொண்டது…..இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்று அவளது மனசாட்சி அவளை ரணப்படுத்த பதில் சொல்லமுடியாது அழுகையில் கரையவே அவளால் முடிந்தது…… அந்த வேதனையை ஆற்ற அவளுக்கு உதவியாய் இருந்தது அவளது பிசினசும் கவினயாவுடன் அவள் களிக்கும் பொழுதுகளும்… காலையில் இருந்து தன் கம்பனி விரிவுபடுத்தல் வேளைகளில் மூழ்கி இருப்பவள் வீட்டிற்கு வந்ததவுடன் குழந்தையோடு குழந்தையாக மாறி விடுவாள்…. குழந்தையுடன் விளையாடுவது, ஒவ்வொரு வார்த்தைகளையும் சரியாக பேசக்கற்றுக்கொடுப்பது, காட்டூன் பார்ப்பது, உணவூட்டுவது, தூங்கவைப்பது என்று அவளது நேரத்தை கடத்துவாள்……..
பகலெல்லாம் தன் துயரை மறைக்க முடிந்த அவளால் இரவு படுக்கையில் வீழ்ந்த பின் எழும் அஸ்வினின் நினைவுகளை அவளால் என்றும் தடுக்க முடிந்ததில்லை……. அவளது எண்ணங்கள் முழுதும் அவனை சுற்றியே வட்டமிட அதற்கு அவளது மொபைலில் இருந்த அவனது புகைப்படங்களும் அவனது வாய்ஸ் ரெக்காடிங்கும் தீனியாய் இருக்கும்……அஸ்வினுடன் இரவில் உரையாடுவதை வழமையாய் வைத்திருந்தவள் ஒவ்வொரு இரவும் அவர்கள் உறையாடுவதை போனில் ரெக்கோர்ட் செய்து வைத்திருப்பாள்….. இப்போது அந்த வழமையை மாற்றியவளால் அவனது குரல் கேட்காது உறக்கம் வராது…..
இரவில் அவன் நினைவுகள் ஆக்கிரமிக்கும் போது அந்த வாய்ஸ் ரெக்கோடிங்சை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.. அது அவளை துயில் கொள்ளச்செய்யும் இன்றியமையாத தாலாட்டாக மாறிப்போனது.

சோசியல் மீடியாவில் அவனைப்பற்றி அறிய முயன்ற போது அவன் அவளை அனைத்து கணக்குகளிலும் பிளாக் பண்ணியிருப்பது தெரியவந்நது………
அவள் சிங்கப்பூர் வந்த பின் புதிய நம்பர் மாற்றியதும் சஞ்சுவிற்கு அழைத்து தெரியபடுத்தியவள் புதிய இலக்கத்தை யாரிற்கும் கொடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டாள்…

இவ்வாறு பன்னிரு மாதங்கள் கடக்க அவளது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரான்சும் இலாபம் ஈட்ட தொடங்க இதோ தாயகம் திரும்ப புறப்பட்டு விட்டாள் சாரு….

ஏர்போட்டில் போர்டிங் பாஸ் உடைத்துவிட்டு தனக்கு பதியப்பட்டிருந்த விமானத்தில் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த சீட்டில் சென்று அமர்ந்தாள் சாரு…. என்னதான் சிங்கப்பூரில் இருந்தாலும் அவளது நினைவுகள் எப்போதுமே அஸ்வினை சுற்றியே இருந்தது….ஒவ்வொரு நிமிடமும் அவனை பற்றி எண்ணியே கரைந்தது…..

நாடு திரும்பிய பின் அஸ்வினை சந்திக்க வேண்டு வருமோ என்ற பயம் வந்தாலும் அவன் தன் தந்தையின் கம்பனியை பொறுப்பெடுத்திருப்பதாக சஞ்சு கூறியதால் நிச்சயம் அவன் யூ.எஸ் இல் தான் இருப்பான் என்று உறுதியாக நம்பினாள்…அதை எண்ணி ஒரு புறம் ஆசுவாசப்பட்டாலும் மறுபுறம் அவனை தன் கண்களால் காணமுடியாதே என்ற ஏக்கமும் எழுந்தது…..

தன் எண்ணங்கள் கட்டுக்கடங்காது அஸ்வினை சுற்றியே வலம் வர அதை அடக்கும் வழி தெரியாது தன் ஏன்ட் பார்க்கில் இருந்த ஐபோடில் பாடல் கேட்க எண்ணி ஹெட்செட்டை காதில் பொருத்தினாள்…. அதுவும் சிட்டுவேஷன் சாங் பாடியது…..

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது – நீ

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே

சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு
கிழக்கு-க்கு நீ தன் உயிரே

எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது

சொன்னாலும்
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே

நதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன்
ioகடைசியில் கலந்தேன் கடலே

எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை

பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே வஞ்சி கொடியே

சொன்னாலும்
சொன்னாலும் கேட்டிராது கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது....

பாடலின் ஒவ்வொரு வரிகளும் அவளது மனநிலையை எடுத்திரைக்க அதில் ஆண் பாடகர் பாடும் வரிகள் அஸ்வின் அவளை கேள்வி கேட்கும் விதமாய் அமைய பாட்டை நிறுத்துவிட்டு கண்மூடி தூங்க முயற்சிக்க அங்கேயும் அவளுக்கு அமைதி கிட்டவில்லை.

இவ்வாறு சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின் தரையிறங்கியது விமானம்... செக்கின் முடிந்து வெளியே வந்த சாருவை கையசைத்து தன்னை அடையாளம் காட்டினான் சஞ்சு... அவனருகே வந்த சாருவை பயணம் பற்றி விசாரித்துவிட்டு கிளம்புமாறு அவசரப்படுத்தினான் சஞ்சு.....

“டேய் சஞ்சு எதுக்கு இப்படி அவசரப்படுத்திற?? இப்படி அவசரப்படுகின்ற அளவுக்கு எந்த நடந்தது???”

“இதுவரைக்கும் எதுவும் நடக்கலை.... ஆனா இனிமே தான் பல தரமான சிறப்பான சம்பவங்கள் நடைபெறபோகுது...”

“என்ன நேற்று பேட்ட படம் பார்த்தியா??”

“ஈஈஈஈஈஈ...”

“போதும் ரொம்ப இளிக்காம விஷயத்தை சொல்லு.....”

“அதுதான் நீ பார்க்க போறியே.... ஏன் அவசரப்படுற????”

“பில்டப் எல்லாம் ரொம்ப பலமா தான் இருக்கு.... மகனே ஏதாவது மொக்கையா இருந்துச்சி உனக்கு இருக்கு கச்சேரி.....”

“ஹாஹா.... கச்சேரி உனக்கா எனக்கானு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்திரும்...”

“என்ன சொல்ற???”

“ஒன்றும் இல்லை.... கொஞ்ச நேரத்திற்கு கேள்வி கேட்காம வா....... அதுவே நீ எனக்கு பண்ணப்போற பெரிய உதவி...”

“சரி பிழைத்து போ” என்று சாரு காரினுள் அமர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள்...

கார் அவளது வீட்டை அடைந்ததும் அதிலிருந்து இறங்கிய சாரு வீட்டின் முன்புற அலங்கரிப்புக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.... வீடு ஏதோ விசேஷ வீடு போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.... வாசலிற்கு செல்ல முயன்ற சாருவை தடுத்த சஞ்சு அவளை பின் வாசல் வழியே அழைத்து சென்றான்... தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்று புரியாத சாரு சஞ்சு இழுத்த இழுப்பிற்கு அவன் பின்னால் சென்றாள்... அவன் அவளை அழைத்து சென்று நிறுத்திய இடம் அவளது படுக்கையறை.

அங்கு பல பெண்கள் சூழ்ந்திருக்க வாசலில் நின்ற சாருவை ஷெண்பா
“வந்துட்டியாமா சாரு.....நானும் எங்க நேரத்திற்கு வராம இருந்திருவியோனு பயந்திட்டேன்.... சரி போய் சீக்கிரம் குளிச்சிட்டு இந்த புடவையை மாத்திட்டு வா.. பியூட்டிசியன் வெயிட் பண்ணுறாங்க... சீக்கரம்...” என்று சாருவின் கையில் டவலையும் ஒரு சேலையையும் கொடுத்து அவளை ஏதும் கேட்க விடாது பாத்ரூமிற்குள் தள்ளாத குறையாக உள்ளே அனுப்பினார் ஷெண்பா......
என்ன நடக்கிறது ??? என்ன நடக்கப்போகின்றது என்று புரியாத சாரு பாத்ரூமில் யோசித்தவாறு நின்றாள்.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சாருவை அலங்கரிக்கத் தொடங்கினர் பியூட்டிஷன்ஸ்.... என்ன நடக்கின்றது என புரியாது சாரு அறிய முயல அனைவரும் அங்கு சூழ்ந்திருக்க அவளால் ஏதும் ஷெண்பாவிடம் கேட்க முடியவில்லை..... ஆனால் அங்கு நடப்பது தனக்கு சாதகமான சம்பவம் இல்லை என்று மட்டும் சாருவிற்கு புரிந்தது.... ஆனால் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள்.... பியூட்டிஷனின் கைவண்ணத்தால் அவளது வழமையான வனப்பு இன்னும் மெருகேற்றப்பட்டது..... தன்னை கண்ணாடியில் பார்த்த சாரு தானா இவ்வளவு அழகாய் இருக்கின்றோம் என்று வியந்து நிற்க அந்நேரம் அவளது மனசாட்சி

“ அஸ்வின் உன்னை இப்போ பார்த்தான்னா அவன் டோட்டல் பிளாட் தான்.... சும்மாவே ஜிலேபி ஜிலேபினு உன்னையே சுற்றுவான்.... இப்போ பார்த்தான்னு உன்னை கடத்திட்டு போயிருவான்” கூற

“இங்க என்ன நடக்குதுனே புரியலை இதுல நீ வேற கடுப்ப கிளப்பிகிட்டு....கொஞ்ச நேரம் கம்முனு இரு... நானே என்ன நடக்க போகுதுனு சரியா தெரியாம முழுச்சிட்டு இருக்கேன்...இதுல நீ வேற” என்று தன் மனசாட்சியை மைண்ட் வாயிசில் அடக்கினாள் சாரு.

பின் அவளை அழைத்து செல்லவென ஒரு கும்பல் வந்தது.... அதற்கு தலைமை தாங்கியவரை பார்த்த சாருவிற்கு தான் காண்பது கனவா நினைவா என்றிருந்தது.... ஏனெனில் அந்த கும்பலிற்கு தலைமை தாங்கியது நம் அஸ்வினின் சித்தி சித்ரா தான்.... அவரை கண்டதும் ஓரளவு விஷயத்தை ஊகித்த சாரு அடுத்து வந்த கவியின் அண்ணி என்ற அழைப்பு அவளது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.

“ஆகா ரௌடிபேபி தான் இந்த நாடகத்திற்கு கதை திரைக்கதை வசனம் எல்லாமா???? ஆனால் நான் எப்படி இந்த ஏற்பாட்டிற்கு சரி சொல்வேன்னு அவன் நினைத்தான்????? இப்போ இந்த நிகழ்வில் எனக்கு விருப்பம் இல்லைனு சபையில் சொன்னா என்னா செய்வான் அந்த ரௌடிபேபி?? என்னை கேட்காமல் அவன் எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்கலாம்????? என் வாழ்க்கை பற்றி முடிவெடுக்க அவன் யார்??” என்று தன்னுள் கேள்வி கேட்டுக்கொண்ட சாரு அதே கேள்விகளை அஸ்வின் தன்னிடம் கேட்க நேர்ந்தால் அவளால் பதிலளிக்க முடியுமா என்ற யதார்த்தத்தை மறந்து விட்டாள்.......

சாரு அருகில் வந்த சித்ரா
“ சாரும்மா செதுக்கின சிலையாட்டம் இருக்க...... அப்படியே வரம் கொடுக்க வந்த வனதேவதையாட்டம் மிதமிஞ்சிய அழகோட இருக்க.... கல்யாணக்களை முகத்தில் தாண்டவமாடுது... என் கண்ணே பட்டுரும் போல இருக்கு..... சரி வா நேரமாச்சு.... எல்லோரும் சபையில் உனக்காக காத்திட்டு இருக்காங்க....” என்று சாருவை அழைத்து சென்றார் சித்ரா....

ஹோலிற்கு ஒரு படை சூழ அழைத்து வரப்பட்ட சாரு குனிந்த தலை நிமிராமல் அன்னநடையிட்டு வர சபையில் ஒருகுரல்

“இந்தா பொண்ணும் வந்தாச்சி.....மாப்பிள்ளை பொண்ணா நல்லா பார்த்துக்கோங்க...... நாளைக்கு பின்ன இது சரியில்லை அது சரியில்லைனு சொல்லக்கூடாது.....இப்போவே சொல்லிட்டோம்.....” என்று கூற சாரு தன் தலையை உயர்த்தி மணமகனாய் அமர்ந்திருக்கும் அஸ்வினை நோக்க அதாவது முறைக்க அவனோ அவளை பார்க்காது வேறு எங்கயோ பார்த்தவாறு மென்னகை புரிந்தான்...... அதில் வெட்கம் கலந்திருக்க பலநாள் கழித்து அவனை பார்த்த சாரு அதில் லயித்து நிற்க சஞ்சுவோ

“அட அட அட நம்ம அஸ்வினையே வெட்கப்பட வச்சிட்டீங்களே பா.... டேய் என்னமோ இந்த புள்ளையும் பால் குடிக்குமாங்குற ரேஞ்சில் இருந்திட்டு என்னமா வெட்கப்படுற??” என்று அஸ்வினை ஓட்ட அதற்கு ஆது

“எல்லாரும் உன்னை மாதிரி பியூஸ் போன பல்பாவே இருப்பாங்கனு நீ எப்படி நினைக்கலாம் சஞ்சு..... எங்க அண்ணா பார்க்க தான் பழம் மாதிரி ஆனால் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் தான்.....” என்று அஸ்வினிற்கு சார்பாக போர்கொடி தூக்க

“யாரு இவன் பழமா???? யம்மா சாமி..... நீ சொல்லுறதுல ஒரு நியாய தர்மம் வேணாமா??? போயும் போயும் இவனை பழம்னு சொல்லுற???.....”
என்று ஒருவர் மாற்றி மற்றொருவர் கலாட்டா பண்ண சபையில் இருந்த பெரியவர் ஒருவர்

“இங்க பாருங்க பிள்ளைகளா உங்க கலாட்டாக்களை நிச்சயம் முடிந்த பிறகு வைத்துக்கோங்க.... இப்போ நல்ல நேரம் முடிவதற்கு முன் தட்டை மாற்றிக்கலாம்..... அம்மாடி சாரு வந்து சபையை நமஸ்காரம் பண்ணிட்டு இப்படிக்கா உட்கார்ந்துக்கோ” என்று அனைவருக்கும் நிகழ்வை நினைவு படுத்த அவரின் சொல்படி அஸ்வினை முறைத்துக் கொண்டிருந்த சாரு சபையினருக்கு வணக்கம் செலுத்தும் முகமாக வீழ்ந்து வணங்கி எழ அவளை கவி மற்றும் சித்ரா அழைத்து சென்று அமர வைத்தனர். அவள் அமர்ந்ததும் ஐயர் திருமண ஓலையை வாசிக்க ஆரம்பிக்க சபை அமைதியை கடைபிடித்து ஓலை வாசிப்பை கவனிக்கத் தொடங்கியது.... அந்த சந்தர்ப்பத்தில் சாரு அங்கு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று கடைக்கண்ணால் ஒரு ஆராய்ச்சியை முன்னெடுக்க அங்கு அஸ்வினின் அப்பா உட்பட அவனது குடும்பத்தினர், சஞ்சு,ஆது, மிஸ்டர் அன்ட் மிசஸ் ராமமூர்த்தி,ஷெண்பா, ரதன் , வருண், நிஷா மற்றும் அவளது கணவன் , ராக்கேஷ் என்று ஒரு படையே அந்த ஹாலை ஆக்கிரமித்திருந்தது... சாரு அவளது மைண்ட் வாயிசில்

“ எல்லாம் பிளான் பண்ணி தான் செய்திருக்காய்ங்க....... எல்லா பயபுள்ளயும் இதுல கூட்டு தான்...... இந்த சஞ்சு பயகூட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே........” என்று மைண்ட் வாயிலில் பேச அவளது மனசாட்சியோ

“ஏன் சொல்லியிருந்த மறுபடியும் எங்கயாவது ஓடுவதற்கு ஈசியா இருந்திருக்குமோ???? நீ பண்ணுற அட்டூழியத்திற்கு உன்னை அவன் அடிக்காம விட்டதே பெரிய விஷயம்.... இதுல அவன் உன்கிட்ட சொல்லாம பிளான் பண்ணான்னு குறை சொல்லுறியா???? இது மட்டும் அவனுக்கு தெரிந்தது அப்போ அவன் உனக்கு செய்வான் சிறப்பான ஒரு சம்பவத்தை....”
என்று மனசாட்சி பதிலடி கொடுக்க தன் வசை பாடுதலை நிறுத்திவிட்டு நடப்பதை கவனிக்க தொடங்கினாள்.....

பெரியவர்கள் தாம்பூல தட்டு மாற்றியதும் மணமகனையும் மணப்பெண்ணையும் மோதிரம் மாற்ற அழைத்தனர்.....
அஸ்வினும் சாருவும் சபை நடுவே நிற்க இருவர் கையிலும் நெருக்கமாக தொடுக்கப்பட்ட ரோஜா பூ மாலை கொடுக்கப்பட்டு மாலைகளை மாற்றிக்கொள்ளுமாறு சபையில் பெரியவர் ஒருவர் பணித்தார்.... அதன் படி சாரு முதலில் அஸ்வினிற்கு மாலையிட அவளைத் தொடர்ந்து அஸ்வின் சாருவிற்கு மாலையிட்டாள். அச்சந்தர்ப்பத்தில் அஸ்வினை நேருக்கு நேர் நோக்கிய சாருவிற்கு எந்தவித உணர்வுகளையும் பிரதிபலிக்காத அஸ்வினுடைய முகம் மட்டுமே தெரிந்தது.....

“ஆஹா ரௌடி பேபி செம்ம காண்டுல இருக்கான் போல இருக்கே... இவ்வளவு நேரம் சிரிச்ச முகமா இருந்தவன் இப்போ நம்மளை பேஸ் டூ பேஸ் பார்க்கும் போது ஒரு ரியாக்ஷனும் காட்டாம இருக்கானே..... சிரிச்சிட்டு இருந்தாலே இவனை நம்மால சமாளிக்க முடியாது.... இப்ப நம்ம மேல ஹய் ரெம்பரில் இருப்பான்... என்ன செய்ய போறானு தெரியலையே....... நான் வைத்த ரௌடிபேபி பேருக்கு ஏற்ற மாதிரி ரௌடி ஆகிட்டான்னா நம்ம நிலைமை????? சாரு செம்மையா மாட்டிக்கிட்ட போ..... இதைவிட நான் அவனை பிரிந்து செல்ல காரணமா சஞ்சுகிட்ட சொன்னது எல்லாவற்றையும் சரி பண்ணிட்டான் போல .... அஸ்வின் அப்பா மற்றும் அஸ்வினோட குடும்பம் இங்க இருப்பதிலேயே அது புரியுது..... ஐயோ ஆண்டவா இவன்கிட்ட இருந்து எப்படியாவது என்னை காப்பாற்று.....” என்று மனதினுள் நினைத்தாலும் வெளியே சிரித்து வைத்தாள்....... மோதிரம் மாற்றும் போதும் இதே நிலையே தொடர்ந்தது....... சாரு தான் உள்ளுக்குள் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தாள்...

அஸ்வினுடைய காதல் முகத்தை மட்டுமே பார்த்திருந்த சாருவிற்கு அவனது கோப முகம் எப்படி இருக்கும் என்று கற்பனையில் கூட வரையறுக்கமுடியவில்லை..... ஆனாலும் அவன் தன் மீது கொண்ட காதலுக்காக அவளை மன்னித்து விடுவான் என்று நம்பினாள்.... அந்த நம்பிக்கை அவளுள் ஒரு தைரியத்தை உண்டு பண்ண அஸ்வினை சீண்ட முடிவு செய்தாள்...

மோதிரம் மாற்றி முடிந்ததும் மணமக்கள் இருவரையும் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தினர் புகைப்படக்கலைஞர்கள்..... அப்போது அவர்கள் சில போஸ்கலை சொல்ல அதை பட்டும் படாமலும் அஸ்வின் அவர்கள் கூறியபடி செய்ய சாருவோ அவனை உசிப்பேற்றவென்று அதீத நெருக்கம் காட்டினாள்..... அவள் அப்படி செய்தும் கூட அஸ்வினிடம் ஒரு சிறு சலனம் கூட இல்லை........ கடைசியில் அலுத்து போய் அவளும் அவனைப்போல் கடமையே என்று புகைப்படக்கலைஞர்கள் கூறியது போல் செய்தாள்...

போட்டோ சூட் முடிந்ததும் இளைஞர் பட்டாளம் அவர்களை முற்றுகையிட்டது.... அவர்கள் மணமக்களை வம்பிழுத்துக்கொண்டிருக்க சாருவோ அஸ்வினை எப்படி நெருங்குவதென்ற தீவிர யோசனையில் இருந்தாள்....

“என்ன சாரு நாங்க இவ்வளவு பேர் இருக்கும் போதே அஸ்வினோடு கற்பனையில டூயட் பாட போயிட்டியா???? சரியில்லையே..... ஆ... ஐடியா நீ கனவுல எல்லாம் டூயட் பாடி கஷ்டப்பட வேண்டாம்.... இப்போ எங்க எல்லார் முன்னாடியும் இரண்டு பேரும் ஆடுங்க.....எங்கயா மைக் செட்டு ?????? ஸ்டார்ட் த மியூசிக்” சஞ்சு அவளது சிந்தனையை கலைக்க சாரு திரு திருவென முழித்தாள்..... அவளது பாவனையில் அனைவரும் சிரிக்க நிஷா

“என்னா சாரு இந்த முழி முழிக்கிற??? உன்னை நாங்க அண்ணாவுக்கு பப்ளிக்கா முத்தம் கொடுக்கவா சொன்னோம்???? ஜஸ்ட் ஒரு டான்ஸ் பர்போமன்ஸ் தானே???? அதுக்கு ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன்???? ஓ... ஒருவேளை நான் முதல்ல சொன்னதை செய்ய ஆசைப்படுறியோ???”என்று நிஷா ஓட்ட அங்கிருந்த அனைவரும் ஓ போட்டனர்... தன் இருக்கையில் இருந்து எழுந்த அஸ்வின் சாருவிற்கு கை கொடுத்து அழைப்பு விடுக்க அவள் மறுப்பேதும் சொல்லாமல் எழுந்து ஆடத்தொடங்கினாள்.......

ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஹே சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு காட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திக்கிருச்சா

ரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு
ஐ வில் கிவ் யு பூச்செண்டு
வி'வில் மேக் Us நியூ ட்ரெண்டு பேபி

பொத்தாம் வெஸ்தாம் ரவுடி பேபி
கேர்ள் பிரியெண்டு பூச்செண்டு நியூ ட்ரெண்டு பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி

உன்னாலே ஏய் மூடாச்சு
மை ஹோர்மோனு பலன்ஸு டேமேஜூ

ஏய் காமக்ச்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சி

ஒன்னு பிளஸ் ஒன்னு டூ மாமா
யு பிளஸ் மீ த்ரீ மாமா

வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
ஐ வில் பெய் யு போனி அத ஓட்டீனு வா நீ
என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி நம்ம செம்ம ஜோடி..

என்ற பாடலுக்கு ஏற்றவாறு இருவரும் ஆட அங்கிருந்த அனைவரும் கைதட்டலுடன் அவர்களது ஆடல் முடிவுக்கு வந்தது....

இளைஞர் யுவதிகள் பட்டாளம் மணமக்களை கலாட்ட செய்தவாறு இருக்க மணமக்கள் இருவரும் இரு வேறு மனநிலையில் இருந்தனர்....
சாரு அஸ்வினை தனியாக சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க முயல அஸ்வினோ அதை சமார்த்தியமாக தடுத்தான்...

மணமக்கள் இருவரையும் உணவிற்கு அழைக்க ஷெண்பா சாருவிடம் அஸ்வினிற்கு வாஸ்பேசின் இருக்கும் இடத்தை காட்டச்சொல்ல அவனோ கழிவறைக்கு செல்லவேண்டுமென கூறி ரதனிடம் கேட்டுக்கொண்டே அவனுடன் அவ்விடம் விட்டு நழுவினான்... அப்போது அவனிற்கு துவாய் எடுத்துக்கொடுக்க சாரு அறைக்குள் வர சாருவின் கண்ணசைப்பில் வெளியேற முயன்ற ரதனை வெளியேற விடாது கதையளந்து கொண்டிருந்தான் அஸ்வின்.

அவன் தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறான் என்று தெரிந்தும் கூட அவளால் சண்டையிட முடியவில்லை..... தவறு அனைத்தும் அவள் மேல் இருக்கையில் அவன் இவ்வளவு தூரம் பொறுமையாய் இருப்பதே பெரிய விடயம்..... இதில் அவளை அவன் தவிர்க்கிறான் என்பதற்காக அவனிடம் சண்டையிட துணிந்தால் அவளிற்கு தர்ம அடி நிச்சயம்...

“ஏன் சாரு நீ எவ்வளவு பெரிய பிஸ்தா நீ இதுக்கெல்லாம் பயப்படலாம???? உன்னோட அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப சகஜமாச்சே..” என்று சாருவின் மைன்ட் வாய்ஸ் ஆரம்பிக்க அவளது மனசாட்சியோ

“பிஸ்தா முந்திரினு நீ தான் மெச்சிக்கனும்.... போர் யோர் கைன்ட் இன்பர்மேஷன் அது அரசியல் வாழ்க்கை.......இது குடும்ப வாழ்க்கை.... ஊருக்கு எப்படியும் டிமிக்கி காட்டலாம்......ஆனா ரௌடிபேபி கிட்டமட்டும் உன்னால வாலாட்ட முடியாது..... இவ்வளவு நாள் நீ பண்ண அடி முட்டாள் வேளைக்கு வேறு யாராவதா இருந்தா நீ சிங்கப்பூர் போனவுடன் உன் பின்னாலே வந்து நாலு சாத்து சாத்திட்டு நீயும் வேணாம் உன் சங்காத்தமும் வேணாம்னு உன்னை தலை முழுகி இருப்பாங்க.....அஸ்வினா இருக்கப்போக உனக்கு பாவம் பார்த்து இது வரைக்கும் உன்னை ஒன்றும் செய்யாம இருக்கான்.. அதுனால எதுவும் இனி சகஜம் இல்லைனு புரிந்துக்கோ” என்று அடக்கியது.....
இவ்வாறு சாருவின் நிலையிருக்க அங்கிருந்த வானரக்கூட்டம் அவர்கள் இருவரையும் தொடர்ந்து வம்பளந்து கொண்டே இருந்தது..... மதிய உணவிற்கு பின் மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப சாருவிற்கு அஸ்வினோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிட்டாமலே போய்விட்டது..... அவர்கள் கிளம்பும் நேரம் சாரு சஞ்சுவிடம் அஸ்வினோடு தனித்து பேச ஏதாவது வழி செய்யுமாறு
போனில் மெசேஜ் செய்ய அவன் ஷெண்பா காதில் ஏதோ கூற அவரோ

“அம்மாடி சாரு மாப்பிள்ளை ஏதோ உன்கிட்ட கேட்டாருனு சொன்ன???? அது என்னோட ரூமில் தான் இருக்கு... மாப்பிள்ளையை அழைச்சிட்டு போய் அதை எடுத்துக்குடு” என்று கூற அதை அஸ்வின் மறுக்கும் முன் சாரு

“சரி சித்தி.... வாங்க அஸ்வின்” என்றுவிட்டு முன்னே நடக்க அங்கு அனைவரும் கூடியிருந்தபடியால் ஏதும் கூறாது அவளை பின் தொடர்ந்தான் அஸ்வின்....
அஸ்வினை அவளது அறைக்கு அழைத்து சென்றவள் அவன் ரூமிற்குள் நுழைந்ததும் கதவை மூடிவிட்டு அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

அவளது வதனம் அவனது மார்பில் பதிந்திருக்க கைகள் அவனது இடையை அரணிட்டிருந்தது.... ஆனால் அஸ்வினோ எந்த வித உணர்வினையும் வெளிக்காட்டாது கைகளை வெறுமனே வைத்துக்கொண்டு தன்னை எதுவும் பாதிக்கவில்லை என்ற ரீதியில் நின்று கொண்டிருந்தான்.....

“சாரிடா ரௌடி பேபி நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்..... உன்கிட்ட சொல்லாம சிங்கப்பூர் போனது தப்பு தான்... ஆனா என் ஒருத்திக்காக நீ கஷ்டப்படுவதை என்னால் பார்த்திட்டு இருக்க முடியலை..... நீ உங்க அப்பாவை எனக்காக எதிர்ப்பதை நான் விரும்பவில்லை.... உனக்கும் உன்னோட அப்பாவிற்கும் இடையில் ஏற்கனவே கருத்து வேறுபாடு நிறைய இருப்பதாக சித்ரா அம்மா சொல்லி இருக்காங்க.....அப்படி இருக்கும் போது என்னால் நீ உங்க அப்பாவை பகைத்துக்கொள்வது எனக்குள்ளே ஒரு குற்றவுணர்ச்சியை உண்டு பண்ணியது..... கிருஷ்ணன் அப்பாவிற்கு மறுபடியும் நெஞ்சுவலி வர காரணம் நீ உங்க அப்பா சொன்ன பெண்ணை திருமணம் செய்ய மறுத்தது. அதற்கு காரணம் நான் உன்னை நேசித்தது......இப்படி என்னோட காதலுக்காக நீயும் என்னோட குடும்பமும் கஷ்டப்படுவதை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை.... உன்கிட்ட சொன்னா நீ இதை ஒத்துக்கமாட்ட....... அதுனால தான் நான் உன்கிட்ட சொல்லாம சிங்கப்பூர் போனேன்...... போன பின்பும் உன்னை காண்டக்ட் பண்ணலை.... எங்க உன்னை காண்டக்ட் பண்ணா நீ சிங்கப்பூர் வந்திருவியோனு பயம்...... அப்படி வந்தா நான் உன்கிட்ட எல்லாம் சொல்லியிருப்பேன்...........

எனக்காக மறுபடியும் நீ உன் அப்பாவை எதிர்க்க அதனால கிருஷ்ணன் அப்பாவுக்கு ஏதும் ஆகிருமோனு பயந்தேன்....... என்னால எந்த விபரீதமும் வேணாம்னு தான் சொல்லாம வந்தேன்..... ஆனா இப்போ உன்கிட்ட இதை சொல்லியிருக்கலாமோனு தோணுது..... என்னோட மாமனார் நிச்சயதார்த்தத்திற்கு வந்திருக்காருனா நீ அவரை கன்வின்ஸ் படுத்திட்டனு புரியிது..... நீயாவது உன் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கனும்னு தான் நான் உன்னை விட்டு பிரிய நினைத்தேனே தவிர உன்னை வெறுத்தோ வேணாம்னோ பிரிய நினைக்கவில்லை........ நான் இழந்தவற்றை மீட்டு கொடுத்த என் பேபியிற்கு எந்த இழப்பும் நேரக்கூடாதுனு தான் நான் பிரிவை தேர்ந்தெடுத்தேன்.... ஆனால் அந்த முடிவை நான் என் மனதை கொன்றுவிட்டு தான் எடுத்தேன்....... அதை நினைத்து அழாத நாட்களே இல்லை.. சிங்கப்பூரில் இருக்கும் போது என் பேபியோட நியாபகம் என்னை அணுவணுவாக ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும்.... அந்த நேரத்தில் என்னுடைய பேபியோட வாய்ஸ்சும் போட்டோசும் நியாபகங்களும் தான் எனக்கு துணையா இருந்தது.... அவை மட்டும் இல்லைனா எனக்கு என்னைக்கோ பைத்தியம் பிடித்திருக்கும்...... இது எல்லாம் உனக்காக மட்டும் தான்....... என்னோட ரௌடிபேபி எப்பவும் சந்தோஷமா இருக்கனும்.... அதுக்காக எதுவும் செய்ய நான் தயார்... எதையும் இழக்கவும் நான் தயார்.. அது என்னோட வாழ்க்கையோ என்னோட உயிரோ எனக்கு கவலையில்லை நீ நல்லா இருக்கனும்” என்று சாரு கூற அவ்வளவு நேரம் ஒரு இறுக்கத்தோடு இருந்த அஸ்வின் சாருவை அவளது எலும்புகள் நொருங்கும் அளவிற்கு இறுக்கி அணைத்தான்.. பெண்ணவளின் கண்ணீர் தகித்துக்கொண்டிருந்த கோபத்தை சற்று குறைத்தாலும் அவள் மீதிருந்த வருத்தம் அஸ்வினிற்கு குறையவில்லை.

அவள் தனக்காகவே அவன் உட்பட அனைத்தையும் இழக்க துணிந்தது தெரிந்தாலும் ஏனோ அவள் பிரிவு அவன் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையின்மையால் தான் நிகழ்ந்ததாக எண்ணினான்...... தன் காதலை இன்னும் அவள் சரியாக புரிந்து கொள்ளாமையே அவள் பிரிவு எனும் தவறான முடிவை எடுத்ததாக கண்டுகொண்டான்......

அதனால் தன் காதலை அவள் உணர வேண்டுமெனின் தன் மௌனம் தான் சரியான ஆயுதம் என்று முடிவெடுத்து அதை பிரயோகிக்க முடிவெடுத்தான்...
இறுக்கி அணைத்திருந்த சாருவை தன்னிடம் இருந்து விலக்கியவன் ஏதும் கூறாது அங்கிருந்து சென்றான்.....

அவனது அணைப்பில் நெகிழ்ந்திருந்தவள் திடீரென அவன் விலகிச் செல்லவும் அவனது மனநிலை என்னவென்று அறியமுடியாது குழம்பி நின்றாள். அப்போது அங்கு வந்த கவி, சித்ரா மற்றும் சில உறவினர்கள் அவளிடம் கூறிவிட்டு விடைப்பெற்றனர்....
அவர்கள் விடைபெற்று சென்றதும் சஞ்சு அங்கு வர அவளது முகத்தை வைத்தே அங்கு நடந்திருக்க கூடியதையும் அவளது மனநிலையையும் யூகித்து

“சாரு எது நடக்கனும்னு இருந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது... இனி அதை நினைத்து வருதப்படுவதில் எந்த யூசும் இல்லை...... இனி நடக்கப்போற நிகழ்வுகளில் சரி நம்மோட பங்களிப்பு சரியானதா இருக்கனும்.... அது நம்ம நடந்துக்கிறதுல தான் இருக்கு.... அஸ்வினிக்கு உன் மேல கோபம் இருக்க தான் செய்யும்... ஏன்னா நீ செய்த வேலை அப்படிபட்டது.... அஸ்வின் இவ்வளவு தூரம் அமைதியா இருப்பதே பெரிது..... எந்த ஆண்மகனும் தன்னோட காதலியோ மனைவியோ தன்னோட காதலை நம்பனும்னு தான் விரும்புவான்...... ஆனா உன்னோட செயல் அவனுக்கு மனவருத்தத்தை கொடுத்திருக்கும்.... அதை நீ உன்னோட காதலால் தான் நீக்கனும்..... அதுனால சின்ன விஷயத்திற்கு எல்லாம் சிணுங்கிட்டு கவலைபட்டுட்டு இருக்காம அவனது எப்படி கன்வின்ஸ் பண்ணலாம்னு யோசி... .. நான் சொன்னது உனக்கு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.... ஓகே பாய்.....நான் இப்போ கிளம்புறேன்” என்றுவிட்டு சஞ்சுவும் விடைபெற சாரு சஞ்சு கூறியவற்றை யோசிக்கத்தொடங்கினாள்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN