மண்ணில் தோன்றிய வைரம் 14

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறுநாள் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது ரத்னா மஹால்........
வண்ண நிற விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இது திருமணத்திற்கான நேரம் என்ற தோரணையுடன் கம்பீரமாய் நின்றிருந்தது அத் திருமண மண்டபம். வெளியே அங்காங்கே சில அலங்கார வேலைகள் நடைப்பெற்ற வண்ணம் இருக்க உள்ளே உறவினர் கூட்டம் நிரம்பி வழிந்தது....
மணமகனது உறவுமுறைகளும் மணப்பெண்ணின் உறவினர்களும் அம்மண்டபத்தில் குழுமி இருந்தனர்..... அங்கு மணமேடையில் நலுங்கு வைக்கும் வைபவம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது..... நெருங்கிய உறவினர்கள் சூழ்ந்திருக்க மணப்பெண்ணிற்கு முதலில் நலுங்கு வைக்கப்பட பின் மாப்பிள்ளைக்கு நலுங்கு வைக்கப்பட்டது....

ஒருபுறம் மணமக்களுக்கு நலுங்கு வைக்கப்பட மறுபுறம் இளைஞர் பட்டாளம் சந்தனத்தை கையில் எடுத்துக்கொண்டு யுவதிகளை நோக்கி படையெடுத்தனர்.... சிலர் அவர்களது ஆக்கிரமிப்பில் சிக்கிக்கொள்ள சிலர் லாவகமாக தப்பிக்கொண்டனர்....இவ்வாறு அந்த இடமே அமர்களமாய் இருந்தது....நலுங்கு உற்சவத்திற்கு அழைக்கப்பட்டிருந்த உறவினர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
இவ்வாறு எட்டு மணியளவில் நலுங்கு உற்சவம் முடிவடைய பந்தி ஆரம்பிக்கப்பட்டது...பெரியவர்கள் அனைவரும் உணவிற்கு சென்றுவிட சிறியவர்கள் பட்டாளம் மெஹேந்தி இடுவதற்காக நடுச்சாலையிலே தங்கியது.....

பெண்கள் ஒரு புறம் மெஹேந்தி இட்டவாறு இருக்க மறுபுறம் ஆண்கள் அவர்களை வம்பளந்து கொண்டு இருந்தனர்....
அங்கு ஆண்கள் குழுவில் மணமகன் அஸ்வின் நடுநாயகமாக அமர்த்தப்பட்டு கேலி கிண்டல்களுக்கு தலைமை தாங்க பெண்கள் புறம் சாரு நடுநாயகமாக அமர்ந்திருக்க மற்ற பெண்கள் அதற்கு பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தனர்...

முதலில் மணப்பெண் சாருவிற்கு மருதாணி இடப்பட அதில் மணமகன் பெயரின் முதல் எழுத்தை மருதாணி இடும் பெண் கேட்க அதற்கு பெண்கள் கூட்டத்தினர் டி என்று கூற சாருவோ ஆர் என்று உளறி விட அந்த பட்டாளம் ஒன்றாக ஓ போட்டது.... அதில் சாரு வெட்கப்பட்டு மறுகையால் முகத்தை மூடிக்கொள்ள அஸ்வினோ அவளிற்கு மேல் வெட்கப்பட மறுபடியும் கூட்டம் ஓ போட்டு அவர்களை ஓட்டியது...

கூட்டத்தில் ஒரு பெண்
“ மருதாணி நல்லா சிவந்திச்சினா பொண்ணுக்கு பையன் மேல அன்பு அதிகமா இருக்கமாம்.....”

“அப்போ சிவக்கலைனா ???” என்று ஆண்கள் கூட்டத்தில் ஒருவன் கேட்க

“ பையனுக்கு பொண்ணு மேல பிரியம் அதிகமாக இருக்குமாம்”என்று கூற

“ஆக மொத்தம் சிவக்குதோ இல்லையோ பிரியம் இருக்கும்னு சொல்லுறீங்க??” என்று இன்னொருவன் கேட்க

“ஆமா..... கையில போடுற மருதாணி சிவப்பதற்கும் பல வருஷம் வாழப்போற வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்... வெளிநாட்டுக்காரன் கல்யாணத்தில பொண்ணு மருதாணி போட்டுக்குதா.... இல்லையே??? அவங்க சந்தோஷமா வாழலையா?? மருதாணி பங்ஷனை நம்ம முன்னோர்கள் கொண்டு வந்ததற்கு காரணம் மருதாணி எல்லா வகையான மருத்துவ குணங்களையும் கொண்ட பொருள்.... உடல் சூட்டை தணிக்கிறது, ஹார்மோன் குறைபாட்டை தீர்ப்பது, நோயெதிர்ப்பு சக்தியை வழங்குவது, கிருமி தொற்றுகளுக்கு வேலியா இருப்பது இப்படி பல நன்மைகள் இருக்கு.... மணமகளுக்கு மெஹெந்தி பங்ஷன் செய்வதற்கு காரணம் அவங்களோட ஸ்ரெஸ்சை குறைப்பதற்கு..... திருமணம்னு வரும் போது மணமகளுக்கு பல வேறுபட்ட பயம் உருவாகும். அது கடைசியாக ஸ்ரெஸ்ஸாக உருவெடுக்க வாய்ப்பிருக்கு.... அப்படி இருக்கும் பட்சத்தில் அவங்க வாழ்க்கையின் முக்கிய நிகழ்வான திருமணத்தை அனுபவித்து கொண்டாட முடியாது..... அதை நிவர்த்தி செய்வதற்காக தான் இந்த மெஹெந்தி பங்ஷன்....... அதோடு எந்த வித நோய் தொற்றும் மணமகளுக்கு வந்துவிட கூடாது அப்படிங்கிற காரணமும் இருக்கு.......
ஹார்மோன்கள் செயற்பாட்டை இந்த மருதாணி கட்டுப்படுத்துகின்றது..... இதெல்லாம் மருத்துவ குணம்.... இதில்லாமல் அந்த காலத்தில் லவ் மேரேஜ் ரொம்ப கம்மி.... ஆரேன்ஜ்ட் மேரேஜ் தான் ரொம்ப அதிகம்... புகுந்த வீட்டில் தம் பெண்ணை எப்படி நடத்துறாங்கனு பெண் வீட்டினர் தெரிந்துக்கவும் இந்த மருதாணி உதவியது....”

“அது எப்படி??”

“பெண் மறுவீடு வரும் போது பெண்ணோட அம்மா மணமான பெண்ணோட கையை நோட்டம் விடுவாங்களாம்... அதோட சிவப்பு தன்மையை வைத்து அவங்க பொண்ணை புகுந்த வீட்டில் எப்படி நடத்துறாங்கனு தெரிந்துகொள்ளுவாங்களாம்.... இப்போ எல்லாம் நிறைய வசதிகள் இருக்கு...ஆனா அப்போ அதெல்லாம் இல்லை.... அதுனால மெஹெந்தியோட சிவப்பு தன்மையை வைத்து பெண்ணோட நிலையை கண்டுபிடித்து திருப்தி அடைவாங்கலாம்..”

“அதாகப்பட்டது என்னான்னா சி.சி.டி.வி கேமராவோட வேலையை மருதாணி செய்திருக்குனு சொல்லுறீங்க....”

“அதே அதே.... அப்புறம் இந்த பங்ஷனில் இன்னொரு விடயம் இருக்கு”

“அது என்னது??”

“மணப்பெண்ணோட கையில மணமகன் எழுத்தை எழுதும் போது அதை பார்த்தவுடன் தெரியாத மாதிரி தான் எழுதுவாங்க.... அதை மணமகன் சரியாக கண்டுபிடிக்கனும்.... அவங்களுக்குள்ள ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தோடு இப்படி செய்றாங்க...”

“ ஓ...இப்படி ஒரு மேட்டரும் இருக்கா?? டேய் அஸ்வின் சாரு கையில உன்னோட நேம் எங்க இருக்குனு கண்டுபிடி போ.....” என்று என்று நண்பர் பட்டாளம் அஸ்வினை எழுப்பிவிட அவனும் சாரு அமர்ந்திருந்த இடம் நோக்கி சென்றான்...

அஸ்வின் சாரு அருகில் சென்றதும் பெண்கள் பட்டாளம் அவர்கள் இருவரையும் கலாட்டா செய்யத்தொடங்கினர்.
சாருவின் அருகில் அமர்ந்த அஸ்வின் அவளது மருதாணி இடப்பட்ட கரத்தினை கேட்டு அவனது கரம் நீட்ட அவளோ சிறு வெட்கத்துடன் நாணம் கலந்து தன் கரத்தினை நீட்ட அவன் எழுத்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான்..

அப்போது அஸ்வினை ஓட்ட எண்ணி சஞ்சு மற்றும் வருண்
“சஞ்சு நீ ஆஞ்சநேயர் பக்தனை பார்த்திருப்ப.... ஆனா ஆஞ்சநேயர் பக்தர்னு சொல்லி அந்த கிருஷ்ணர் வேலை பார்க்கிறவங்களை பார்த்திருக்கியா??” என்று வருண் ஆரம்பிக்க

“யூ மீன் இந்த மொரட்டு சிங்கிள்னு சொல்லிட்டு மன்மதன் வேலை பார்க்கிற பிளே பாய்சை சொல்லுறியா???”

“அட அவங்க கூட பரவாயில்லை டா..... இந்த துர்வாசகர் மாதிரி காதல் கசக்குதய்யானு இருந்திட்டு திடீர்னு ரோமியோவா மாறி சுற்றியுள்ளவர்களுக்கு ஹய் வால்டேஜில் ஷாக் கொடுக்கிறவங்களை நீ பார்த்திருக்கியா???”

“இல்லை வருண் இவ்வளவு நாள் பார்த்ததில்லை.... ஆனா இப்போ இங்க என் கண் முன்னாடி பார்க்கிறேன்... கடைசி வரைக்கும் சன்னியாசம் தான் அப்படிங்கிற லெவலுக்கு பிரபோஸ் பண்ண வந்த பொண்ணுங்களை எல்லாம் சிஸ்டர்னு கூப்பிட்டு ஓட விட்ட ஒருத்தன் இப்போ மேரேஜ் பண்ண போறானாம்.... அதுவும் லவ் மேரேஜாம்......”

“அவன் சன்னியாசம் இருப்பதால நண்பனான நானும் சன்னியாசியாக தான் இருக்கனும்னு ஒரு கெட்ட எண்ணத்துல செட்டாகின்ற பொண்ணுங்க எல்லார்கிட்டயும் அட்வைசுங்கிற பேரில் கழுத்தறுத்து எல்லோரையும் தலை தெறிக்க ஓட வைத்தவன் இப்ப வருங்கால மனைவியோட கையில் மருதாணி போட்டு கேம் விளையாடிட்டு இருக்கானாம்...... என்ன கொடுமை சஞ்சு இது.... வேணா வேணானு சொன்னவனுக்கு லட்டு மாதிரி என்னோட தங்கச்சி கிடைச்சிருக்கா....... ஆனா வேணும் வேணும்னு சொன்ன எனக்கு ஒரு அட்டு பிகர் கூட கிடைக்க மாட்டேன்குது....”

“ பீல் பண்ணாதிங்க ப்ரோ யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்....”

“எங்க யானைக்கும் பூனைக்கும் வருகின்ற காலம் மொத்தமா அவனுக்கு மட்டுமே வருது....... ஒரு பாதி எனக்கு வந்திருந்தா கூட இன்னேரம் இரண்டு பிள்ளைக்கு அப்பாவா இருந்திருப்பேன்..... இவனுக்கு பிரண்டா இருந்ததுக்கு தண்டனையா எனக்கு சன்னியாசம்னு அந்த கடவுள் முடிவு பண்ணிட்டாரு போல...” என்று வராத கண்ணீரை வருண் துடைத்துவிட அவனது பாவனையில் அனைவரும் சிரித்தனர்.... ஆனால் அந்த கேலிக்கு உரியவனோ மருதாணி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான்.....
சாருவின் கையில் வரையப்பட்டிருந்த டிசைனில் ஒரு இதய வடிவ குறிக்குள் ஜே என்ற எழுத்துடன் பின்னிப் பிணைந்து எழுதப்பட்டிருந்த ஆர் என்ற எழுத்தினை கண்டுபிடித்து கூற அங்கிருந்த அனைவரும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.... சாருவோ அவனை சைட் அடித்துக்கொண்டிருக்க அஸ்வினோ அவள் பக்கம் திரும்பாது தன் நண்பர் பட்டாளத்தின் கலாட்டாக்களுக்கு இசைந்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

நிச்சயத்திற்கு பின் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது வருவதாக கூறி அஸ்வின் யூ.எஸ் பறந்துவிட்டான். நிச்சயத்திற்கு பிறகு அஸ்வின் சாருவை தொடர்பு கொள்ளவில்லை..... இவள் தொடர்பு கொள்ள முயன்றபோதும் வாய்ஸ் மெசேஜிற்கே சென்றது..... இது தொடர சாரு தன் பழைய அதிரடியில் இறங்கினாள்... முன் போல் தாறுமாறாக பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்..... தினமும் அவன் மொபைல் ஹாங் ஆகும் அளவிற்கு வாய்ஸ் மெசேஜ், லவ் கோட்ஸ், அவளது புகைப்படங்கள் ,கவிதைகள் என்று பலவற்றை அனுப்புவாள்......... அவன் கடுப்பாகி அவளை திட்டுவதற்காகவேனும் அழைப்பான் என்று காத்திருக்க அவனிடமிருந்து எந்தவித பிரதிபலிப்பும் இல்லை....... இவ்வாறு நாட்கள் செல்ல திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் அஸ்வின் யூ.எஸ் இல் இருந்து வந்தான்.... வந்த பின்னும் இதே கண்ணாம்பூச்சி ஆட்டம் தொடர இன்று தான் இருவரும் நேரடியாக பார்த்துக்கொண்டனர்..... அப்போதும் அஸ்வின் அவளிடம் மட்டும் பாராமுகம் காட்ட சாருவிற்கு எவ்வாறு அஸ்வினை சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.... ஆனால் திருமணத்திற்கு முன் அவனை எவ்வாறாயினும் சமாதானப்படுத்தியே ஆக வேண்டுமென உறுதி பூண்ட சாரு அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்......
ஆடல் பாடல் கலாட்டாக்களுடன் பெண்கள் மெஹெந்தி வைத்து முடிக்க, பின் ஒவ்வொருவாராக அங்கிருந்து கலைந்து சென்றனர்....
ஆண்கள் பட்டாளம் பாச்சுலர்ஸ் பாட்டி என்று கூறிவிட்டு அஸ்வினை இழுத்துக்கொண்டு அருகிலிருந்த பப்பிற்கு சென்றனர்.....
சாருவோ எப்படியேனும் அஸ்வினை சந்தித்து விட வேண்டும் என்று எண்ணி சஞ்சுவை தொடர்பு கொண்டாள்... ஆனால் அவளால் தொடர்பு கொள்ள முடியவில்லை... வருணிற்கு அழைக்க அவனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு அந்த விபரீத யோசனை தோன்றியது......

பப்பில் இருந்த சஞ்சுவிற்கு ஏதோ அதிர்வது போல் உணர்வு தோன்ற மது தந்த போதையின் தடுமாற்றம் என்று முதலில் எண்ணியவன் பிறகு அது தொடரவும் ஆடிக்கொண்டிருந்தவன் நின்று என்னவென்று ஆராயத்தொடங்கினான்..
அப்போது தன் பாக்கெட்டினுள் செல் ஒலிப்பதை கண்டறிந்தவன் அதை வெளியே எடுக்க அதில் ஆது என்று ஒளிர தான் ஆடிக்கொண்டிருந்த இடத்திலிருந்து வெளியே வந்தவன் போனை அட்டன்ட் செய்து காதில் வைக்க

“சஞ்சு ஏன்டா போனை எடுக்க இவ்வளவு நேரம்.....நீ எங்க இருக்க?? சீக்கிரம் கிளம்பி மண்டபத்திற்கு வா..... இங்க சாருக்கு...” என்று அழைப்பு துண்டிக்கப்பட சஞ்சுவிற்கு ஏறிய போதை மமளவென்று இறங்கியது.... ஆதுவின் பதட்டமான குரல் சாருவின் பெயர் என்று அனைத்தும் அவனுக்கு ஏதோ ஒரு விபரீதத்தை உணர்த்த அதில் அவனது பயம் அதிகரித்தது... மறுபடியும் ஆதுவிற்கு முயற்சிக்க அழைப்பு எடுக்கப்படவில்லை... நடந்தது என்னவென்று தெரியாது இங்கு நின்று நேரத்தை கடத்துவது உசிதமல்ல என்று எண்ணியவன் அஸ்வின் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான்...அடுத்த நாள் திருமணம் என்பதால் அஸ்வின் மது அருந்தாது அங்கிருந்த டேபிளில் அமர்ந்து ஜூசை குடித்தபடி இருந்தான்.. அப்போது அங்கு வந்த சஞ்சு விஷயத்தை கூற பதறிய அஸ்வின் என்னவென்று சரியாகத் தெரியாது மற்றவர்களின் மகிழ்ச்சியை குழப்ப வேண்டாம் என எண்ணி வருணிடம் மட்டும் விஷயத்தை தெரிவித்து விட்டு அங்கிருந்து சஞ்சுவுடன் சென்றான். பத்து நிமிடத்தில் மண்டபத்தை அடைந்த அஸ்வினும் சஞ்சுவும் வாசலில் இவர்களுக்காக காத்திருந்த ஆதுவிடம் விசாரிக்க அவள் சாருவிற்கு அடிபட்டிருப்பதாகவும் இப்போது அவளது அறையில் இருப்பதாகவும் கூற உடனடியாக அஸ்வின் அவ்விடத்தை விட்டு அகல அவனோடு பின் செல்ல முயன்ற சஞ்சுவை கரம் பற்றி தடுத்தாள் ஆது என அழைக்கப்படும் ஆத்விகா....

அவள் தடுத்ததும் என்னவென்று திரும்பிப்பார்த்த சஞ்சு அவளது குறும்புச்சிரிப்பில் குழம்பி அவளிடம் என்னவென்று விசாரிக்க அவனை இழுத்துச் சென்றாள் ஆது...
சாருவை பார்க்க விரைந்த அஸ்வின் சுற்றி நடப்பதை கவனிக்காது சாருவின் அறைக்குள் விரைய அவள் அங்கு கட்டிலில் காலில் பெரிய பண்டேஜுடன் படுத்திருந்தாள்....

அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்ததும் பதறி விட்டான் அஸ்வின். அவள் அருகே விரைந்தவன் அவள் கரம் பற்றி

“ஜிலேபி என்னாச்சு உனக்கு??? எப்படி அடிபட்டது??? பெரிய காயமா??? ஏன் இவ்வளவு பெரிய காயம்??? டாக்டர் வந்து பார்த்தாங்களா??? என்ன சொன்னாங்க? ரொம்ப வலிக்குதா??” என்று அவன் பாட்டிற்கு கேள்விகள் கேட்க அவன் கரம் பட்டதும் மூடியிருந்த விழிகளை திறந்த சாரு அவனது கேள்விப்படலம் முடியும் வரை அமைதியாக அவனை பார்த்துக்கொண்டிருந்த சாரு

“ என்ன ரௌடிபேபி இப்படி பதறுகிறாய்?? பெரிசா அடி இல்லை..... கால் பிரண்டிருச்சி.... காயம் எல்லாம் ஒன்றும் இல்லை .... லைட்டா கால் வலித்தது அதான் பாண்டேஜ் போட்டுருக்கேன்....இந்த அடிக்கெல்லாம் டாக்டரை கூப்பிட்டா டாக்டர் என்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க சொல்லிருவாரு....... சும்மா உன்னை வரவைக்க தான்அடிபட்டிருச்சினு ஆதுகிட்ட சொல்ல சொன்னேன்.... ஆனா நீ இவ்வவளவு சீக்கிரம் வருவன நான் எதிர்பார்க்கலை.... உன்னை தனியா மீட் பண்ண தான்.....” என்று சாரு பதில் கூறிக்கொண்டிருக்க ஏதோ தன்னை சுற்றி உள்ள அனைத்தும் சூழலுவது போல தோன்றி கண்கள் மங்கலாக தெரிய என்ன நடக்கின்றது என்று உணரும் முன் அஸ்வின் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான். சாருவிற்கு அப்போது கன்னத்தில் ஒரு வித எரிச்சல் உணர்வு தோன்ற தன்கையால் கன்னத்தை தொட எரிச்சல் உணர்வு இப்போது வலியாக மாறியிருந்தது...... அப்போதுதான் அஸ்வின் தன்னை அறைந்தான் என்பதை உணர்ந்தாள் சாரு..... இதுவரை யாரிடமும் அடிவாங்கியே பழக்கம் இல்லாத சாருவிற்கு அடி என்றால் என்ன என்பதை அன்று உணர்த்தினான் அஸ்வின்.... முதல் அடி என்பதால் அவளுக்கு கன்னம் சிவந்து கொவ்வைப்பழம் போல் இருந்தது.... அஸ்வின் நியாபகம் வந்தவளாக கையால் ஒரு கன்னத்தை பிடித்தபடி அவனைத்தேடி வந்தாள் சாரு...... அவன் மொட்டை மாடிக்கு சென்றதாக
வெளியில் நின்ற அவளது தோழிகள் கூற அவனைத் தேடி சென்றாள் சாரு.........

மொட்டைமாடியில் தன் கோபத்தை கட்டுப்படுத்த அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் அஸ்வின். ஆனால் கோபமோ அணை உடைத்த வெள்ளமாய் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது... அப்போது சாரு அங்கு வர அவளை பார்த்தவன் அவளை முறைத்துக்கொண்டு அவன் அங்கிருந்து செல்ல முயல அவன் கரம் பற்றி சாரு தடுக்க

“சாரு மரியாதையா கையை விடு இல்லைனா நடக்குறதே வேற..... ஐ காண்ட் கண்ரோல் மை டெம்பர்... பீளீஸ் லீவ் மீ....” என்று அவன் தன் கையை உதற அதை கண்டு கொள்ளாது அவள் இன்னும் அவனது கரத்தை இறுக்கமாக பற்ற அதில் கோபம் கொண்ட அஸ்வின் அவளை நேருக்கு நேர் பார்த்து முறைக்க அப்போது அவள் கன்னத்தில் இருந்த அவனது கைத்தடமும் அவளது கன்ன வீக்கமும் அவன் கண்ணில் பட்டது...

“ஷிட்... ஏன் ஜிலேபி இப்படி என்னை ரூடா பிஹேவ் பண்ண வைக்கிற??? உன்னை ரொம்ப சாப்டா ஹான்டல் பண்ணனும்னு நான் நினைத்தால் நீ ஏதாவது கிறுக்கு தனமா செய்து என்னோட கோபத்தை அதிகப்படுத்திட்டே இருக்க.... அது இன்று உன்னை அடிக்கும் அளவிற்கு கொண்டு வந்திருக்கு..... ஏன் இப்படி பண்ற ஜிலேபி??? நான் இப்படி உன்னை காயப்படுத்துவது எனக்கு தான் வலியை கொடுக்கின்றது... புரிந்துக்கோ ஜில்லு..... பிளீஸ் இனிமே இப்படி பண்ணாத.....”

“சாரி பேபி”

“சஞ்சு என்கிட்ட உனக்கு அடி பட்டிருக்குனு சொன்னப்போ எனக்கு எப்படி இருந்திச்சுனு உனக்கு புரியாது..... நான் ஒரு நிமிஷம் கலங்கிட்டேன்... என்னோட தவிப்பு கவலை எல்லாவற்றையும் வாய் வார்த்தையால் சொல்ல முடியாது... இப்படி தான் சொல்லாம கொள்ளாம சிங்கப்பூரிற்கு போன.... என்னை பற்றி என்னோட நிலையில் இருந்து யோசிச்சிருந்தா நீ போயிருப்பியா???? என்னோட மகிழ்ச்சிக்குனு சொன்னியே..... உன்னோடு சேர்ந்த வாழாத வாழ்க்கை எனக்கு எப்படி சந்தோஷத்தை கொடுக்கும்னு யோசிச்சியா????? எனக்கு என் குடும்பம் முக்கியம் தான் ஆனா அதுக்காக என்னை எனக்கு தெரியாமலே காதலித்து என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் உன்னை எப்படி கைவிடுவேன்னு நீ நினைத்தாய்???? உனக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்னு என் காதல் உனக்கு உணர்த்தவில்லையா???”

“நீ எனக்காக உன் குடும்பத்தை எதிர்ப்பன தெரிந்ததால் தான் நான் உன்னை பிரிந்து சிங்கப்பூர் போனேன்...... அந்த எந்த எல்லையும்கிறதுல உன் குடும்பம் வந்திடகூடாதுனு தான் நான் பிரிவை தேர்ந்தெடுத்தேன்......”

“ம்... உனக்கு பிரிவு சிம்பிளான விஷயமா போய்விட்டது ல???? அது என்னை எவ்வளவு பாதிக்கும்னு நீ உணர்ந்திருந்தா இந்த முடிவை நீ எடுத்திருக்க மாட்ட...”

“அது உன்னை மட்டும் இல்லை என்னையும் சேர்த்து தான் பாதித்தது.... உன்னோட பாதிப்புக்கு மருந்தா உன்னோட குடும்பம் எப்பவும் இருக்கும்.... ஆனா எனக்கு???? இதெல்லாம் தெரிந்து தான் நான் சிங்கப்பூர் போனேன்.”

“சரி.... நீ சிங்கப்பூர் போனா எல்லாம் மாறிரும்னு நீ எப்படி நினைத்தாய்??”

“தன் குடும்பத்திற்காக என் ரௌடிபேபி எதையும் தியாகம் பண்ணுவான்னு ஒரு நம்பிக்கை.....அந்த நம்பிக்கை தான் என்னை சிங்கப்பூர் போக வைத்தது....”

“நல்லா பேச கத்துக்கிட்ட....ஆனா நீ நினைத்த மாதிரி எதுவும் மாறலையே???? நாளைக்கு உனக்கும் எனக்கும் திருமணம்..”

“ஏன் மாறலை... என் பேபி அவங்க அப்பாவோடு சேர்ந்துட்டான்... அவரோட பிசினஸ்சை பார்த்துக்கிறான்....அவனுடைய பேமிலியுடன் சந்தோஷமா இருக்கான்....இது தானே நான் எதிர்ப்பார்த்தது....”

“ ஆனா நான் என்னோட அப்பா சொன்ன பெண்ணை திருமணம் செய்யனும்னு தானே நீ ஆசைப்பட்ட???? அதுதான் நடக்கலையே???” என்று அஸ்வின் வினவ சாருவிடம் பதிலில்லை...

அஸ்வினின் கேள்வியில் அவனது வேதனை புலப்பட சாருவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை... ஆனால் இன்று இக்கண்ணாம்பூச்சி ஆட்டத்திற்கு முடிவு வேண்டுமென்று எண்ணி

“ஆமா நான் ஆசைப்பட்டேன்... அதுவும் இப்போ நல்ல படியா நடக்கப்போகுது.... சோ சாரு ஹாப்பி ரௌடிபேபி..” என்று அவள் கூற

“என்ன சொல்லுற சாரு???”

“ஹாலோ பேபி கால் மீ ஜிலேபி”

“ரொம்ப முக்கியம்...”

“ஆமா இது எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தான்....சோ கால் மீ ஜிலேபி” என்று அவள் ஒரு திணிசாக சொல்ல அவளது பாவனையில் அஸ்வின் சிரித்துவிட்டான்...

“இந்த ரௌடிபேபியை மலையிறக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு.... சாரு இன்னும் என்னென்ன உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோ??”

“சூப்பரா டிராக்கை மாற்ற ட்ரை பண்ணுற ஜிலேபி....ஆனா என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் சரிப்படாது.. சோ சொல்லு நீ கடைசியா சொன்னதுக்கு அர்த்தம் என்ன??”

“கண்டுபிடிச்சிட்டான் சி.பி.ஐ சிகாமணி.... என்ன பண்ணாலும் கரைக்டா கண்டுபிடிச்சிடுறான்... டிடெக்டிவ்வா வேலை செய்யவேண்டியவன் இங்க வந்து நம்மள குறுக்குவிசாரணை பண்ணிட்டு இருக்கான்...” என்று சாரு முணுமுணுக்க, அவளது முணுமுணுப்பு காதில் விழுந்தபோதிலும் விழாது போன்ற பாவனையுடன்

“ நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம அங்க என்ன முணுமுணுப்பு??”

“ஒன்றும் இல்லை....”

“அப்போ சொல்லலாமே”

“சொல்லுறேன்... உங்க அப்பா என்னை ஓகே பண்ணதால தானே நம்ம நிச்சயத்திற்கும் நலுங்குக்கும் முன்ன நின்று எல்லாம் செய்தாரு.... இல்லைனா இந்த திருமணம் நடந்திருக்குமா??? அப்படியே நடந்திருந்தாலும் என்னோட மாமனார் வந்திருப்பாரா??? நிச்சயம் வந்திருக்க மாட்டாரு... சோ இதில் இருந்து என்ன தெரிகிறது...?? என் மாமனாருக்கு நான் தான் மருமகனு ஆல்ரெடி தெரிந்திருக்கு... அதான் ஓகே பண்ணிட்டாரு... அப்போ நான் ஆசைப்பட்ட மாதிரி என்னோட பேபி அவங்க அப்பா ஓகே பண்ண பெண்ணை தானே கல்யாணம் பண்ண போறான்....அப்போ என்னோட ஆசை நிறைவேறிரிச்சினு தானே அர்த்தம்??” என்று சாரு தன் கருத்தை விளக்க அஸ்வினுக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் என்று தோன்றியது..... ஒரு வருடம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அனைவரையும் சரியாக கையாண்டு, பல இரவுகள் தூக்கம் மறந்து , சில பல தில்லுமுல்லு வேலைகளை செய்து இன்று திருமணம் வரை அவன் அவதானமாக பயணித்திருக்க அவளோ சிம்பிளாக அவள் மாமனார் ஓகே பண்ணியதாக கூறினால் யாருக்கு தான் கடுப்பாகாது....???

“நீ உண்மையாவே லூசா இல்லாட்டி என்கிட்ட மட்டும் லூசு மாதிரி பேசுறியா??”

“நீ என்ன நினைக்கிற பேபி??? வாட்ஸ் யூர் ஒபினியன்??”

“நான் சீரியஸா கேட்டுட்டு இருக்கேன்... நீ காமடி பண்ணிட்டு இருக்கியா???”

“இல்லை பேபி.. சில பேர் அறிவாளினு சொல்லுறாங்க.... சில பேர் அரைகிறுக்குனு சொல்லுறாங்க.... சோ அதான் ஒரு கன்பியூஷன்... நீ அதை கிளியர் பண்ணேன்???”

“சரி வா கீழ்பாக்கத்திற்கு கூட்டிட்டு போறேன்.. அவங்க கிளியர் பண்ணுவாங்க...”

“என்ன பேபி சும்மா பேச்சுக்கு சொன்னா நீ பாட்டுக்கு வா போவோம்னு கூப்பிடுற??”

“அப்போ வேற என்ன பண்ணுறது??? இங்க ஒருத்தன் இராப்பகலா வேலைப்பார்த்து எல்லாத்தையும் பார்த்து நிதானமாக பிளான் பண்ணி செய்தா....நீ கிரெடிட்டை உன்னோட மாமனாருக்கு கொடுப்பியா?? அதெப்படி உங்க மாமனார் ஓகே பண்ணாறா?? நீ உங்க மாமனாரை பற்றி என்ன நினைச்சிட்டு இருக்க???? அவ்வளவு சீக்கிரம் அவர் கல்யாணத்திற்கு ஒத்துக்குவாருனு நினைச்சியா??? மாஸ்டர் பிளான் போட்டு அவரை வழிக்கு கொண்டு வந்திருக்கேன்....நீ பாட்டுக்கு எல்லாவற்றையும் புலம்பிட்டு சிங்கப்பூர் போய்ட்ட.... எனக்கு என்ன செய்றதுனு தெரியாம முழி பிதுங்கி இருந்தப்போ இந்த சஞ்சு பயல் வேற போன் பண்ணி என்கிட்ட நீ இப்படி பண்ணிட்டு போய்ட்டனு புலம்ப ஆரம்பிச்சிட்டான்......எனக்கு ஆறுதல் சொல்லாம என்னமோ அவனோட கேள்பிரண்ட் அவனை விட்டுட்டு போன மாதிரி பீல் பண்ணிட்டு இருந்தான். எனக்கு கடுப்பாகி நல்லா திட்டிட்டேன்........”

“ஹாஹா... அந்த லூசு உன்கிட்ட புலம்பிச்சா??? நீ திட்டின பிறகும் சும்மா இருந்திருக்காதே??? அது சரி நான் எப்போ உன்கிட்ட புலம்புனேன்???”

“ஓ மேடமிற்கு அது தெரியாதில்ல..... உனக்கு பீவர் வந்து ஆஸ்பிடலில் அட்மிட் பண்ண உன்னை நானும் சித்தியும் தான் கூட்டிட்டு போனோம்... நான் உனக்கு துணையா அங்க இருந்தப்போ நீ ஜுர வேகத்தில எல்லாவற்றையும் உளறிட்ட.... ஆனா அப்போ நீ சொன்னது எனக்கு சரியா புரியலை... நீ ரிக்கவர் ஆகிய பின் இதை பற்றி விசாரிக்கலாம்னு நினைச்சிருந்தேன்.... அதுக்குள்ள அம்மணி பறந்துட்டிங்க.... சஞ்சுகிட்ட நீ சொன்னது எல்லாம் என் காதிற்கு வந்தது.... நீ ஜுரத்தில உலறுனது அப்புறம் சஞ்சுகிட்ட சொன்னது எல்லாத்தையும் கனெக்ட் பண்ணி உன்னோட மென்டாலிட்டியை தெரிந்துக்கிட்டேன்.... அதற்கு பின் எப்படி உன் மாமனாரை லாக் பண்ணுறதுனு யோசிச்சேன்... இப்போதைக்கு கல்யாணம் வேணாம்ங்குற கண்டிஷனோட கம்பனியை பொறுப்பெடுத்துக்கிறேன்னு சொன்னேன். அவரும் விட்டு பிடிக்கலாம்னு ஒத்துகிட்டாரு....... அப்புறம் நான் அவுஸ்ரேலியாவில் இருக்கும் போது சில நண்பர்களோட ஆரம்பித்த சாப்ட்வேர் டிவலப்பர்ஸ் வேர்சுவல் கம்பனியை உன் மாமனார் கம்பனியோடு மேர்ஜ் பண்ணேன்... ஆல்ரெடி அவுஸ்ரேலியாவில் எங்க வேர்சுவல் கம்பனிக்கு நல்ல மார்க்கெட் இருந்ததால இப்போ மேர்ஜ் ஆனதும் எங்களோட பிசினஸ் வேர்ட் லெவலில் எக்ஸ்பான்ட் ஆகிச்சி...... ஒரு புறம் பிசினஸ்சில் அவரை லாக் பண்ண எனக்கு கல்யாண விஷயத்தில் எப்படி லாக் பண்ணுறதுனு தெரியலை.... நம்ம லவ் மேட்டரை சித்திகிட்ட சொல்லி இருக்கலாம்..... அவங்க நமக்கு சப்போர்ட் பண்ணி இருப்பாங்க... பட் டாக்டர்ஸ் சித்தப்பாவிற்கு எந்தவிதமான அதிர்ச்சியான விஷயங்களையும் தெரியப்படுத்த வேண்டாம்னு சொல்லியிருந்தாங்க... அது தான் எனக்கு அவங்க கிட்ட இதை சொல்ல பயமா இருந்தது... எங்க உன்னோட மாமனாருக்கும் எனக்கும் மறுபடியும் ஏதும் பிரச்சனை வந்து அது சித்தப்பா ஹெல்த்தை பாதித்திருமோனு பயந்தேன்.....அதனால நானே களத்துல இறங்குனேன்..... உன் மாமனார் எனக்கு பார்த்த பொண்ணு யாருனு தேடுனேன்.. அது என்னோட கிளாஸ் மேட் அதிதி....... அவ ஆல்ரெடி ரிலேஷன்ஷிப்பில் இருக்கானு தெரிந்துகிட்டேன்... அவளோட பேசி அவள் உதவியால அந்த திருமண பேச்சை நிறுத்தினேன்.... அப்பவும் உன் மாமனாரு சும்மா இருக்காம மறுபடியும் பொண்ணு பார்க்கிறேனு டீலிங் பேச கிளம்பிட்டாரு.....எனக்கு மறுபடியுமானு இருந்துச்சி.......அவரோட பி.ஏ நவீனை கைக்குள்ள போட்டுகிட்டு உன்னை பற்றி அவன் மூலமா அவருக்கு தெரியப்படுத்தினேன்......... சஞ்சு அப்பா கூட ஒரு காண்ட்ரக்ட் சைன் பண்ண வைத்தேன்... அப்போ அவரு கன்ஷ்ரக்ஷனுக்கு உன் கம்பனியை சஜஸ்ட் பண்ண உன்னை பற்றிய பேச்சு வந்திருக்கு.... அதை அந்த பி.ஏ நவீன் ஒரு சான்சா யூஸ் பண்ணி உன்னை பற்றியும் உன்னோட வளர்ச்சி பற்றியும் ஆஹா ஓஹோனு சொல்லியிருக்கான்... உன்னோட மாமனாரை பற்றி நல்லா தெரிந்த அவன் உன்னை திருமணம் செய்து வைத்தால் கம்பனியை இன்னும் எக்ஸ்பான்ட் பண்ணலாம் அது இதுனு சொல்லி கன்பியூஸ் பண்ணிட்டான்..... ராம் அங்கிள் காண்ரக்ட் விஷயமா வரும் போது எல்லாம் உன்னை பற்றி பேசி உன் மாமனாரை டோட்டலா கன்பியூஸ் பண்ணிட்டாரு ... ஆனால் உன் மாமனாருக்கு பிசினஸ் புத்தி மட்டுமே வேலை செய்வதால ஒரு ரியாக்ஷனும் இல்லை.. அப்போ தான் உன்னோட கம்பனியோட ஒரு கான்ரக்ட் சைன் பண்ண வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை நானும் சஞ்சுவும் உருவாக்குனோம்......அதை யூஸ் பண்ணி உன்னோட வெல்த்தை அவர் தெரிந்துக்கிற மாதிரி பண்ணோம்...... இப்படி ஸ்டெப் ஸ்டெப்பா அவரை கன்பியூஸ் பண்ணி அவர் வாயாலே உன்னை பெண் கேட்க வைத்தோம்.... இந்த பிளான் சக்சஸ் ஆக சஞ்சுவும் ராம் அங்கிளும் நிறைய கன்ட்ரிபியூட் பண்ணாங்க.... அப்புறம் உன் மாமனார் பி.ஏ நவீனிடம் லவ் மேட்டர் ஹெல்ப் பண்ணுடானு தான் கேட்டேன்.... அவனோ டேட்டே பிக்ஸ் பண்ணி குடுத்திட்டான்....

பிறகு உன் மாமனார் இதை பற்றி சித்தி சித்தப்பா கிட்ட பேச அவங்க அதுக்கு பிறகு எல்லாம் பார்த்துகிட்டாங்க.......ஆனால் உனக்கு இது தெரியக்கூடாதுனு எல்லோரிடமும் சொல்லிட்டேன்.... எங்க நீ மறுபடியும் எங்கயாவது போயிருவனு பயத்துல நான் அப்படி சொல்ல பெரியவங்க ஏதோ சப்ரைசு நினைத்து உன் இஷ்டம்னு விட்டுட்டாங்க... அதுக்கு பிறகு சஞ்சு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டான்.... இப்படி எல்லாம் பிளான் பண்ணி நாங்க செய்தா நீ சும்மா இருந்த உன் மாமனாருக்கு கிரடிட்டை கொடுக்கிறியா???”

“சப்பா ....எவ்வளவு வேலை பார்திருக்கீங்க எல்லோரும்.... நான் தான் ஒன்னும் தெரியாம சிங்கப்பூரில் இருந்திருக்கேன்.... “

"ஹாஹா... இப்படி கஷ்டப்பட்டு உன்னை கல்யாணம் பண்ண நான் ரெடியாகுனா நீ அடிப்பட்டிருக்குனு பொய் சொல்லி என்னை பதற வைக்கிரியா??"

"சாரி பேபி... உன்னை பதற வைக்க நான் இப்படி பண்ணலை.... உன்னோட பேசனும் உன்கிட்ட என்னோட நிலைமையை புரிய வைக்கனும்னு தான் அப்படி செய்தேன்.... நீ தான் என்கிட்ட பேசவே இல்லை... பேச ட்ரை பண்ண என்னை அவாய்ட் பண்ணினாய்.. நம்ம திருமணம் நடக்கும் போது நமக்குள்ள எந்தவித மனக்கசப்பும்
இருக்கக்கூடாதுனு அதுக்கு உன்னை மீட் பண்ணனும்னு தான் இப்படி பண்ணேன்"

"சாரி ஜிலேபி நான் உன்னை அடிச்சிருக்க கூடாது.... என்னால என்னோட கோபத்தை கன்ரோல் பண்ணிக்க முடியலை... அதான் அடிச்சிட்டேன்.... இனிமே இந்த தப்பை பண்ணமாட்டேன்.. சாரி ஜிலேபி..."

"சரி விடு ரௌடிபேபி.... உனக்கு என்மேல உரிமை இருக்கு அதான் அடிச்ச... சோ அது தப்பு இல்லை.... நான் பண்ண வேலைக்கு எல்லாம் இதை விட பலமான கவனிப்பு கிடைக்கும்னு எதிர் பார்த்தேன்.... ஆனா நீ ஒரு அடியோட விட்டதே பெருசு... சரி வா நாம போகலாம் .. கீழே எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க" என்று அஸ்வினை கீழே அழைத்தே சென்றாள் சாரு..

சாருவும் அஸ்வினும் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வர அங்கு சாருவை முறைத்தபடி ஆத்விகாவுடன் நின்றிருந்தான் சஞ்சு..அவனை கண்டதும் அவனது கோபம் புரிய அஸ்வினிடம்

“பேபி என்னை எப்படியாவது இந்த சஞ்சு பயகிட்ட இருந்து காப்பாற்று... என் மேல் கொலை காண்டுல இருக்கான்..இப்போ அவன் கிட்ட மாட்டுனா என்னை கடித்து குதறிருவான்.. அப்புறம் நாளைக்கு மணமேடையில் இருப்பதற்கு பதிலா ஆஸ்பிடல் பெட்டில தான் படுத்திருப்பேன்.... பிளீஸ் என்னை காப்பற்று” என்று அஸ்வினிடம் சாரு தஞ்சம்புக அவனோ

“என்னை ஒரு வருஷம் டீலில் விட்டல அதுக்கு இது தான் பனிஷ்மன்ட் அனுபவி...” என்று கைவிரிக்க அஸ்வினை முறைத்துவிட்டு ஆதுவின் அருகில் சென்று நின்று கொண்டாள் சாரு.....

ஏற்கனவே சஞ்சுவிடம் செம்மையாக டோஸ் வாங்கியபடி நின்றிருந்த ஆது சாரு அருகில் வந்ததும் இதற்கு சூத்திரதாரியே சாரு தான் என்று சஞ்சுவிடம் மாட்டிவிட சஞ்சுவின் ஏச்சுப்படலம் சாருவின் புறம் திரும்பியது....

“வாங்க மேடம்...உங்களை தான் தேடிட்டு இருந்தேன்....உனக்கு அடிப்பட்டதா கால் வந்ததை நம்பி இங்கு இரண்டு ஜீவன் அறக்கபறக்க ஓடி வந்தா அதை பிரான்க் கால்னு சொல்லுறீங்க.... நான் தெரியாம தான் கேட்குறேன் எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பைத்தியக்காரன் மாதிரியா இருக்கு??? உங்க இஷ்டத்திற்கு என்ன வேணாலும் பண்ணி எங்களை கலங்கடிப்பீங்களா??? கொஞ்சமாவது மூளையில் ஏதாவது சாமான் இருக்கா??? எப்பவும் உங்களுக்கு உங்க பிரச்சினை தான் பெரிசு... அதை சால்வ் பண்ண என்ன வேணும்னாலும் செய்வீங்க.... அதுல மற்றவர்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் உங்களுக்கு கவலையில்லை....அப்படி தானே??”

“இல்லை சஞ்சு அப்படி இல்லை....”

“ஷட் அப் சாரு.... நானும் பாவம்னு பொறுமையா இருந்தா உன்னோட கொட்டம் கூடிட்டே போகுது..... என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல??? நீ என்ன செய்தாலும் நான் ஆமா சாமி போடுவேனு நினைச்சியா??? எந்த விஷயத்துல விளையாடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா??? இப்படி அஸ்வினை மீட் பண்ணும்னு சொல்லியிருந்தா நானே அவனை கூட்டிட்டு வந்திருப்பேனே...... அதற்காக இப்படி தான் ப்ரான்க் பண்ணுவ??? ஒரு நிமிஷம் எனக்கும் அஸ்வினுக்கு என்ன பண்ணுறதுனு தெரியாம திகைத்துவிட்டோம்.... அஸ்வின் நான் சொல்ல சொல்ல கேட்காம எவ்வளவு ஸ்பீடா ட்ரைவ் பண்ணிட்டு வந்தான் தெரியுமா??? வரும் வழியில் ஏதாவது நடந்திருந்தா அப்போ என்ன பண்ணி இருப்ப???? அதெல்லாம் யோசிக்க மாட்டியா???? பொண்ணுங்க உங்களுக்கு நீங்க நினைத்தது நடந்தா சரி.மற்றதை பற்றி கவலை இல்லை அப்படி தானே??”

“சாரி சஞ்சு.... நான் பண்ணது தப்பு தான்... நான் உனக்கு பஸ்ட் கால் பண்ணேன்... நீ ஆன்சர் பண்ணலை... அதான் சும்மா உங்க ரெண்டு பேரிற்கும் ஒரு ஷாக் கொடுக்கலாம்னு இப்படி பண்ணேன்....?”

“ஷாக்... நல்லா வந்துரும் வாயில...... என்ன சொன்ன கால் பண்ணி அட்டென்ட் பண்ணாததால இப்படி பண்ணியா??? ஏன் மறுபடியும் கால் பண்ணியிருந்தா எப்படியும் அட்டென்ட் பண்ணி இருப்பேன் தானே....அதற்காக இப்படி தான் கிறுக்கு தனமா ஏதாவது பண்ணுவியா???”

“அதான் சாரி சொல்லிட்டேன்ல விட்டுறேன்......”

“அப்போ நீங்க சாரி சொன்னா நீங்க பண்ண தப்பை எல்லாம் நாங்க மன்னித்து விட்டுறனும்... அப்படி தானே??”

“ஆமா சஞ்சு....மன்னிப்பு கேட்பவன் மனிதன்..... மன்னிப்பவன் பெரிய மனிதன்..... நீ பெரிய மனிஷனா இரு....”

“ அடிங்க.... நீ பண்ணுற வேலைக்கு எல்லாம் உன்னை கொஞ்சிட்டா இருக்கனும்??” என்று சஞ்சு சாருவை அடிக்க துரத்த அங்கிருந்த ஆத்விகா அஸ்வினிடம்

“ஹப்பாடா நான் தப்பிச்சேன்... இவ்வளவு நேரம் பேசி பேசியே என் உயிரை எடுத்துட்டான்... இவனை மாதிரி தான் இவன் பிரண்டும் இருப்பாள்னு தெரியாம இதுங்க கிட்ட மாட்டிகிட்டு அல்லாடுறேன். நான் தான் மாட்டிக்கிட்டேனு பார்த்த நீங்களும் இப்படி வந்து இதுங்ககிட்ட மாட்டிகிட்டேங்களே அண்ணா...... எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்திருந்தால் இதுங்க சகவாசமே வேணாம்னு ஓடிருப்பேன்... நீங்க என்னாடானா சிங்கப்பூரிற்கு ஓடிப்போனவளை தேடி பிடித்து கூட்டிட்டு வந்து வம்பை விலைக்குடுத்து வாங்கிவாங்க இருக்கீங்களே அண்ணா??? இப்படி பிழைக்கத்தெரியாத பிள்ளையா இருக்கீங்களே??”

“ஹாஹா... என்னமா பண்ணுறது...கசக்கும்னு தெரிந்தே கசாயம் குடிக்கிறதில்லையா.... அதே மாதிரி தான்.... இதுங்களை சமாளிக்க முடியாதுனு தெரிந்தே தான் கூடவே வச்சிருக்கேன்.... அப்புறம் இதுங்களை வெளியில நடமாட விட்டா ஊரில் உள்ளவங்களை கலவரப்படுத்தி நமக்கு தர்ம அடி வாங்கி குடுத்திருங்க... நம்மால அடி தாங்க முடியாதுமா... அதுக்கு இதுவே பெட்டர்” என்று அஸ்வின் கூற அவர்கள் முன் சாருவும் சஞ்சும் முறைத்துக்கொண்டு நின்றனர்...

“இல்லை ஜிலேபி உன்னை பற்றி தான் பெருமையா சொல்லிட்டு இருந்தேன்.... அதுக்குள்ள நீயே வந்துட்ட...” என்று தான் மாட்டிக்கொண்டதை மறைக்க பல்லிளிக்க அவர்கள் இருவரையும் துரத்தினர் சாருவும் சஞ்சுவும்..... இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் செல்லச்சண்டை போட்டுக்கொண்டிருக்க பெரியவர்கள் வந்து அவர்களை உறங்குமாறு பணித்தனர்...

அடுத்த நாள் திருமணநாள் காலை அழகாக விடிந்தது சாருவிற்கும் அஸ்வினிற்கும்...

காலை ஒன்பது மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்ததால் அதிகாலை நான்கு மணிக்கே மணப்பெண் அலங்காரத்திற்காக வந்துவிட்டனர் பியூட்டிஷன்ஸ்... அவர்களின் இரண்டு மணிநேர கை வண்ணத்தில் அழகுப்பதுமையாய் மிளிர்ந்தாள் சாரு....ரோஸ் பிங்க் நிற சேலையில் பொன்னிற கறையுடைய பெரிய பார்டரை கொண்ட வண்ண நிற கற்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த அந்த சேலையில் மன்மதன் மயங்கும் ரதியாய் மிளிர்ந்தாள் சாரு...சேலைக்கேற்ற ஆபரணங்கள் இன்னும் மெருகூட்ட அவளது தொட்டால் சிவக்கும் பால் நிறமும் இன்னும் எடுப்பாக காட்டி அவளது வனப்பு உச்சகட்டத்தை அடைந்தது...
அந்த அழகை புகைப்படக்கருவியின் உதவியினால் புகைப்படமாக சேமிக்க முயன்று கொண்டிருந்தனர் புகைப்பட கலைஞர்கள்..... போட்டோ ஷூட் முடிவடைய மணப்பெண் சாருவை மணமேடைக்கு அழைத்து சென்றனர்...அங்கு அவளுக்கு சில சடங்குகள் நிறைவேற்றப்பட்டு கூரை சேலை வழங்கப்பட்டு மீண்டும் சேலை மாற்ற அறைக்கு அழைத்து வரப்பட்டாள்.... சாருவிற்கு பிறகு அஸ்வினிற்கு சடங்குகள் நிறைவேற்றப்பட அதன் பின் கூரை பட்டுடுத்தி சாரு மேடைக்கு அழைத்துவரப்பட்டாள்....

பல்லாக்கினுள் சாரு அமர்ந்திருக்க அதை நால்வர் ஏந்தியிருக்க அவர்களை சுற்றி யுவதிகள் ஆடிய வண்ணம் அரணிட்டிருக்க அழைத்து வரப்பட்டாள் சாரு...... கதைகளில் வரும் இளவரசிகள் போல் பல்லக்கில் அமர்ந்து கைகளை கால் மூட்டுக்களுக்கு அரணிட்டு அமர்ந்திருந்தாள்..... பல்லக்கின் இருபுறமும் மெல்லிய வலை போன்ற துணியினால் மூடப்பட்டிருக்க அவளது உருவம் மட்டுமே வெளியே உள்ளவர்களுக்கு தெரிந்தது.... அவளை காண ஆவலுடன் இருந்த அஸ்வினிற்கு இது இம்சையாய இருக்க அவன் வருணின் காதை கடித்தான்..

“டேய் யார் பார்த்த வேலைடா இதெல்லாம்..... சாருவை தெரியவே மாட்டேன்குது..... இந்த டான்ஸ் குரூப் வேற அவங்க ஆட்டத்தை முடிக்க மாட்டேன்குறாங்க.... இது வேணும்னு யாரு இப்போ அழுதா....??? நடையை கட்டச்சொல்லுடா இவங்களை.....”

“டேய் ஏன்டா இப்பவே இவ்வளவு அவசரப்படுற??? கல்யாணத்திற்கு முன்னமே இவ்வளவு அவசரப்படுறியே... அப்போ கல்யாணத்திற்கு பிறகு.....”

“ச்...லூசு நான் எதைப்பற்றி சொல்லிட்டு இருக்கேன்..... நீ எதைப்பற்றி பேசிட்டு இருக்க???”

“நானும் அதைப்பற்றி தான் பேசிட்டு இருக்கேன்... நீ ஏதாவது எடக்குமுடக்கா நினைச்சிக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்??? அவசரப்படாத அந்தா முடிந்துவிட்டது... இப்போ பார்த்து சைட் அடி உன்னோட ராஜகுமாரியை...”என்றுவிட்டு வருண் நிமிர பல்லக்கில் இருந்து ராஜகுமாரியின் தோரணையுடன் அன்னப்பதுமையாய் இறங்கிய சாருவை தன் விழிகளாலே பருகிக்கொண்டிருந்தான் அஸ்வின்..... ஒருவித மோனநிலை அவனை சூழ்ந்திருக்க சாரு மணமேடை நோக்கி வரும் வரையில் அவனது பார்வையில் எவ்வித மாற்றமும் இல்லை..... அவனருகில் அமர்த்தப்பட்ட சாரு அவனது பார்வையை உணர்ந்து அதை எதிர் கொள்ள துணிவில்லாது அவனை திசை திருப்பும் விதமாக பிறர் பார்க்கா வண்ணம் அவனை கிள்ள அதில் மோனநிலை கலைந்தவன் அவளை செல்லமாக முறைக்க அவள் தன் சிரிப்பை மறைக்க பெருப்பாடு பட்டாள்...

இவ்வாறு இருவரும் விரும்பியவாறு திருமணம் இனிதே நடைபெற்றது.....

திருமணம் மட்டுமன்றி ஹானிமூனும் அஸ்வினின் விருப்பப்படி அவனது பாட்டியின் பண்ணை வீட்டில் கொண்டாடினர்.....
பண்ணை வீட்டில் இரவு நேர வெண்ணிலவு காய்ந்து கொண்டிருக்க திண்ணையில் போடப்பட்டிருந்த மரக்கட்டிலில் அமர்ந்து வெற்றிலை மென்று கொண்டிருந்தான் அஸ்வின்..... சேலை மாற்றுவதாக சொல்லி வீட்டினுள்ளே சென்ற சாரு ஒரு மணித்தியாலமாக வெளியே வரவில்லை.... பொறுத்திருந்து பார்த்த அஸ்வின் அவளை அழைக்க பதிலில்லாமல் போக வீட்டினுள் செல்வதே சரி என்று முடிவெடுத்து கதவருகே சென்று கதவின் மேல் அஸ்வின் கையை வைக்க சரியாக கதவு திறந்தது..... திறந்த கதவின் பின் நின்ற சாருவை பார்த்த அஸ்வின் திகைத்து விட்டான்.... அவள் கண்டாங்கி சேலை கட்டி காலிற்கு மெல்லிய கொலுசு அணிந்து கைகள் கண்ணாடி வளையல்களால் அரணிடப்பட்டு இரட்டை ஜடை பின்னி அதில் ஒரு ஜடை மார்புப்புறம் போடப்பட்டிருக்க அதன் மேல் நெருங்கித்தொடுத்த மல்லிகைப்பூச்சரம் சொருகப்பட்டிருந்தது...

காதில் சிறிய வெள்ளி நிற தொங்கட்டான்கள் ஆடிய வண்ணம் இருக்க உதடுகள் கடும் சிவப்பு நிற உதட்டுசாயத்தை விரும்பிப்பெற்றிருந்தது.... இவற்றிற்கு மேல் நாசியை துளையிட்டு வீற்றிருந்த அந்த கல் பதிக்கப்பட்ட மூக்குத்தி அம்சமாய் பொருந்தி அந்த அழகை மெருகூட்டியது....
கண்களின் கீழ் கண்மை அகலமாக வரையப்பட்டு அந்த விழிகளை எடுப்பாய் காட்ட அது ஒரு வித மையலை அஸ்வினுள் கிளப்பியது.... அவளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த அதாவது அவளை காதல் கலந்த காமத்துடன் அணுவணுவாய் ரசித்துக்கொண்டு அஸ்வின் அவ்விடம் விட்டு அசையாமல் இருக்க சாருவோ அவனை தன் பின்னலிட்ட ஜடையால் வருடி விட்டு மரக்கட்டில் இருக்கும் இடம் நோக்கி சென்றாள்.... அவள் பின்னே ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் அஸ்வின் பின்தொடர அவள் இடை அசைந்து நடைபோட அதற்கேற்ப அவளது ஒரு ஜடை அசைய அந்த அசைவில் அவன் மொத்தமாய் மயங்கிபோனான்....... அவள் கட்டிலில் அமர அவன் கீழே அமர்ந்து அவளுக்கு வெற்றிலை மடித்து கொடுக்க அதனை அவளது நா சப்பும் போது காற்றடைத்த பலூன் போல் வெளிவரும் கன்னங்களும் இடையிடையே அசையும் அவளது சிவப்புசாய அதரங்களும் அவனை கிறுக்கனாக்கியது..... மென்ற வெற்றிலையை அவள் துப்புவதற்காக இருவிரல்களை வாயினருகே கொண்டு சென்று இருவிரல் இடைவெளியில் நாவினை வைத்து எச்சிலை துப்பியவள் அஸ்வினை நோக்கி ஒரு கள்ளச்சிரிப்புடன் ஒற்றை புருவம் தூக்கி என்னவென்று வினவ அவளது அந்த பாவனையில் அவனது ஆண்மை வீறு கொள்ள சுண்ணாம்பினால் மேலும் சிவந்திருந்த அவளது இதழ்கள் அவனை பித்தனாக்கி அந்த இதழ்களை கவ்வச்செய்தது..... இதழ் முத்தத்தில் இருவரும் நிலை தவறி கட்டிலின் மேல் சரிய தேன் சேகரிக்கும் தேனீயாய் அவளது இதழ்களை சுவைத்து இதம் காண ஆரம்பித்தான் அஸ்வின்.... இருவரும் வேறொரு உலகில் சஞ்சரிக்க தொடங்க சாருவின் கால்பட்டு கீழே விழுந்த வெற்றிலை டப்பா அவர்களை மோனநிலையை கலைத்தது....அப்போதுதான் தாம் இருந்த நிலையை உணர்ந்தார்கள் இருவரும்..... அப்போது வெட்கம் வந்து சாருவின் முகத்தில் அரிதாரம் பூசிக்கொள்ள அதில் அஸ்வின் கிளர்ந்தெழ மீண்டும் இருவருக்கும் இடையில் முத்தச்சண்டை மூண்டது....... அந்த யுத்தத்தில் சாருவிற்கு மூச்சுமுட்ட அஸ்வின் அவளை விடுவித்தான்........

என்ன ஜிலேபி உன்னோட ரௌடிபேபி எப்படி பர்போம் பண்ணான்??? என்னோட பர்போமன்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, கமென்ட் பண்ணுங்க, வன்ஸ் மோர் கேளுங்க” என்று சாருவை கலாட்டா பண்ண அவளோ

“சீ நீ ரௌடிபேபி இல்லை.... டேர்ட்டி பேபி.... “

“ஓ அப்படியா.....??? இந்த டேர்ட்டி பேபி இன்னும் நிறைய செய்வான்.... உனக்கு ஒரு டெமோ காட்டவா????” என்று அவளை நோக்கி குனிய அவளோ அவனை தள்ளிவிட்டு

“அதெல்லாம் இப்போ வேணாம். முதல்ல நான் கேட்பதற்கு பதில் சொல்லு.....உனக்கு எப்போ என்மேல லவ் வந்திச்சி????அதை நீ எப்போ ரியலைஸ் பண்ண???”

“எத்தனை தரம் இதே கேள்வியை கேட்ப ஜில்லுமா... இது ராத்திரி நேரம் அதுவும் நமக்கான ஸ்பெஷலான நேரம்.... இப்போ அதை பற்றி எல்லாம் பேசனுமா??? காலையில அதை பற்றி பேசலாமே???? இப்போ நாம விட்டதை கண்டினியூ பண்ணலாமே.... பிளீஸ்.....”

“நீ நான் கேட்டதுக்கு பதில் சொன்னா தான் கண்டினியூ பண்ணலாம். இல்லைனா நாம இங்க இருந்து கிளம்ப வரைக்கும் நான் தனியா உள்ள படுத்திடுவேன்.... நீ தனியா தான் இந்த கொட்டுற பனியில் தூங்கனும்....”

“ராட்சசி ..... நேரம் பார்த்து பழிவாங்குறா..... சரி சொல்றேன்.... உன்னை பஸ்ட் டைம் இன்டர்வியூவில் பார்த்தப்போ ஒரு கிரஷ்... ஆனா உன்னை எங்கயோ பார்த்த ஞாபகம்.... ஆனா எங்கனு தெரியலை.... இன்டர்வியூவில் உன்னை சைட் அடிச்சிட்டு தான் இருந்தேன்... திடீர்னு உன்னோட பொசிஷன் ஞாபகம் வந்து என்னோட எண்ணங்களை கட்டுப்படுத்தியது.... அதுக்கு பிறகு உன்னோட அட்மினிஸ்ரேஷன் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிச்சி..... நீ என்னோட வீட்டுக்கு வந்து எல்லாருடனும் சகஜமா பழகினப்போ எனக்கு ஏனோ ரொம்ப சந்தோஷமா இருக்கும்..... ஆனால் ஏன்னு என்னோட மனம் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்காது.... இப்படியே குழப்பத்தோடு நாட்கள் கடக்க நிஷா திருமணத்திற்கு நீ சாரியில் வந்தப்போ ஐயா டோட்டல் பிளாட்..... அப்பகூட உன்னை சைட் அடித்தேனே தவிர அதை நான் காதல் என்று உணரவில்லை.... உனக்கு அடிப்பட்டு ஆஸ்பிடலில் சேர்த்தப்போ தான் என்னோட லவ்வை ரியலைஸ் பண்ணேன்..... நான் உன்கிட்ட ஒன்று கேட்கனும்..... அந்த போனில் அப்படி என்ன இருக்கு.... எதுக்கு அடிப்பட்டு ஆஸ்பிடலில் இருந்தப்போ ரொம்ப அவசியமான பொருள் மாதிரி தேடுன??? அதில் அப்படி என்ன இருக்கு ஜில்லு??” என்று அஸ்வின் தன் நெடுநாள் சந்தேகத்தை வினவ சாரு அதில் சேமித்து வைத்திருந்த அவனது கல்லூரி கால உரையாடல்களை ஒலிக்க செய்தாள்......
அதை ஒவ்வொன்றாக கேட்ட அஸ்வினிற்கு அவளது காதலின் ஆழம் புரிந்தது... தன்னை அவள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உயிர் ஊன் மறந்து காதலித்ததை எண்ணி அவனது ஆண் மனம் கர்வம் கொண்டது.... தனக்கென தன்னவள் தன்னையே தியாகிக்க முயல்வது காதலினால் அன்றி வேறு எதனால்??? காதல் கொண்ட அவனது மனம் அவளிடம் மண்டியிட அதை உணர்ந்து அவளும் அவனை அணைத்துக்கொள்ள அவளை அள்ளி அணைத்தவாறு வீட்டினுள் சென்றான்..... வீட்டினுள் சென்றதும் தாழ்ப்பாள் போடப்பட்டு அவர்களது இல்லறம் இனிமையாய் ஆரம்பித்தது.......

அவர்களது இல்லறம் நல்லறமாய் மாறி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி இறைவனை பிரார்த்தித்து நாம் விடை பெறுவோம்....
 
Y

Yogapriya

Guest

Mam the story was very interesting super the way of love feeling and understanding its was wonderful I loved it ashwin and charu super nice well done mam waiting for more books thank you
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN