🤴9🤴சிம்டாங்காரன்

meerajo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடனே ஒவ்வொரு நாளும் விடிகிறது.... பார்க்க முடியாத கவலையுடனே ஒவ்வொரு நாளும் முடிகிறது...

மேகனுக்கு நிறைமதியை எங்கே சந்திப்பது என்று தெரியவில்லை.

'கோயிலில் பார்த்தது அவளை. காலேஜ் பெயரைத் தவிர வேறெதுவும் கேட்டுத் தெரிஞ்சுக்கலை... சின்ன பையன் மாதிரி காலேஜ் வாசலிலா போய் நிற்கமுடியும்? கோயிலிலும், அந்த காலேஜிலிருந்து, நாடகம் பண்ண வந்தபோது, காலேஜ் பெயர மட்டும் தான் கொடுத்திருக்கிறார்கள். இவளாவது ஃபோன் பண்றாளா?...' என்று நினைத்தவன், என்னைப் பார்க்க வேண்டும் என்று அவளுக்குத் தோணலையா?......' என்று கோபப்பட்டான். அவளைப் பார்த்து விடவேண்டும் என்றே தினமும் சாயந்தரம் தவறாமல் கடற்கரைக்கு போனான். கடற்கரை மணலை எட்டி உதைத்ததைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை. வீடுவரை தேடிச் சென்றால் நல்லாயிருக்காது. அவ ஃபிரண்ட்ஸ் யாராவது கண்ணில் படுறாளுகளா? ... ஹும்!

இன்றும் அதே நம்பிக்கையுடன் கடற்கரையில் காத்திருந்தான். போற, வர்ற பெண்களை மேகன் கவனித்து பார்த்ததைப் பார்த்த சில ரௌடி பேபீஸ், ( rowdy babies)
" என்ன மாம்ஸ்! உன் ஆள் உன்னை கலட்டி விட்டுட்டாளா?" என்று கலாய்த்து விட்டு சென்றனர்.

ஒரு சில குடும்ப குத்துவிளக்குகள், "பொண்ணுங்களயே பார்த்திருக்க மாட்டான் போல, பொறுக்கி! " என்று வாழ்த்தி விட்டு சென்றனர்.

'நீ ஏம்மா என்னை பார்க்குற?.... நீ பார்த்தா சரி, நான் பார்த்தா பொறுக்கியா? என்னங்கய்யா நியாயம் இது?' என்றவன், " அடிப்பாவி! எங்கடி இருக்க? போற, வர்ற பொண்ணுங்க கிட்ட என்னை, திட்டு வாங்கி நிக்கவச்சுட்டு..." என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தான்.

"ஏய்! தனியா பேசுறான்டி! பார்க்க அம்சமா இருக்கான்,,, ஆனா பாவம் .... "
என்று மற்றொரு கும்பல் கூற,

"முடிவே பண்ணிட்டாளுங்க. .. இன்னும் கொஞ்ச நேரம் நின்னா பைத்தியம் னு கல்லை விட்டு அடிச்சுடுவாங்க போலிருக்கே? கிளம்புடா மேகா... ' என்று நினைத்தவாறு வண்டி நிறுத்தி
யிருக்கும் திசையில் திரும்பினான்.
சட்டென்று யார் மீதோ மோதியவன்,
'இன்னைக்கு தர்மஅடி நிச்சயம்.' என்று நினைத்தபடி நிமிர்ந்தவனுக்கு ஆச்சரியம்! நிறைமதி மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தாள்.

"வரும் போதே மோதல் தானா? மேடம் என்ன இந்த பக்கம்? கோயிலில் பார்த்தது.... தரிசனம் கிடைப்பதே பெரிய விஷயமா இருக்கும் போலிருக்கே?

"என்னை தான் தேடுறீங்களா?" என்று கேட்டாள்.

"என்ன தனியா வந்திருக்கீங்க? கூட யாரும் வரலயா?" என்று கேட்டான் மேகன்.

அவன் பேச்சை மாற்றுவது புரிந்து,

"நான் உங்களத்தான் தேடி வந்தேன்... எங்க வீட்ல நம்ம ரெண்டு பேரையும் கோயிலில் பேசியபோது பார்த்ததால் சந்தேகப் படுறாங்க... அன்னைக்கு கோயிலில் அடிச்சீங்களே அவனோட அவசரமா கல்யாணம் பேசுறாங்க.... படிப்பைக் கூட நிறுத்தப்போறாங்க... ஜாதகம் பொருந்தியிருக்கிறது.... இனி அங்க இருக்க முடியாது.... நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். என்னை உங்க கூட கூட்டிட்டு போறிங்களா?"

இதை சுத்தமாக எதிர்பார்க்காத மேகன்,

"என்னங்க திடீர்னு வந்து இப்படி சொல்றீங்க? இந்த நேரத்தில உங்கள நான் எங்க கூட்டிப் போக முடியும்? வாங்க உங்க வீட்டிலயே விட்டுட்டு வர்றேன்." என்றதும்.

"உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க! என்னை ஏத்துக்க மாட்டாங்களா?" என்று கேட்டபடியே சுற்றும் முற்றும் பார்த்தபடி பேசினாள்.

'ஏதோ விளையாடுறா மேகன்! நம்பாத... அது எப்படி உடனே கல்யாணம் பேசுவாங்க? படிப்பு கூட முடிக்கல! கோயிலில் நான் இவளோட பேசுனத பார்த்து விட்டு, ஏன் னு கூட கேட்காம சும்மா போவாங்களா என்ன? இவள் மீண்டும் நம்மை ஏமாற்றப் பார்க்கிறாள்.' என்று யோசித்தவன். 'நாமும் கொஞ்சம் விளையாடுவோம். ' என்று நினைத்தபடி,

"ஹேய்! யார் நீ? ரெண்டு மூணு தடவை பார்த்திருப்போமா? உன் பேர் கூட எனக்குத் தெரியாது... அதுக்குள்ள என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி, நீ யார் னு சொல்ல? என்று தன் பங்குக்கு நடிக்க,

"என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க? கோயிலில் நல்லாதானே பேசினீங்க?"

"புரிஞ்சுதான் பேசுறியா? வீட்ல நீ யாரு னு கேட்டா என்ன சொல்ல?"

"நீங்க விரும்புற பொண்ணு னு சொல்ல முடியாதா?" என்று தயங்கியபடி கேட்டாள்.

"பாரு! கேட்கும் உனக்கே தயக்கமாக இருக்கு... நான் எப்படி திடீர்னு உன்னைக் கூட்டிப்போய் நிறுத்துவேன்? எங்க வீட்ல மட்டும் காதல் கல்யாணத்துக்கு திடீர்னு போய் நின்னு கேட்டா சம்மதிப்பாங்களா?

"சம்மதிக்க மாட்டாங்களா?" என்று கேட்கும் போதே நிறைமதிக்கு கண்களில் நீர் முட்டியது....

'போதும் டா மேகா! அவ அழறா. .. விடு! அவள் ஏமாற்றியதாவே இருக்கட்டும்.' என்று மேகன் அவளைப் பார்த்தபடி நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவன் அமைதியை 'சம்மதிக்க மாட்டார்கள்!' என்று தவறாக புரிந்து கொண்டு, நிறைமதி,
ஒன்றும் கூறாமல் பின்னால் திரும்பி அழுதுகொண்டே கடலை நோக்கி ஓடினாள்.

" என்ன கால் நனைக்க ஓடுறீயா? பேரை சொல்லிட்டு போ!" என்று சிரித்துக் கொண்டே அவள் ஓடுவதை வேடிக்கை பார்த்தான்.

அவள் திரும்பி பார்க்காமல் ஓடவே, "அப்போ அகிலாண்டம் னே கூப்பிடவா?" என்றதும் நின்று திரும்பிப் பார்த்தாள்,

"நீ இல்லாம என்னிடம் உயிர் இல்லை!" என்று கூறி விட்டு வேகமாக நடந்தாள். அவள் பின்னாடியே தொடர்ந்து வந்தவன்,

"ஹேய்! பேர கேட்டா, காதல் வசனம் பேசுற?!! லூசாடி நீ?"

"அதுல தான்டா என் பேர் இருக்கு." என்று திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

"டா" வா?" என்று கேட்டவன், 'அதானே இவ்வளவு நேரம் குழப்பமில்லாமல் பேசிட்டாளே னு நினைச்சேன்... ' என்று
நின்று யோசித்தான்.

'நீ இல்லாமல்.... என்னிடம் உயிர் இல்லையா? ஹேய் தப்பான அர்த்தம் வருதுடி நில்லு! " என்று கூறி அவளைப் பார்க்க,

அவள் கடலில் விழுந்து விட்டாள்!

'ஐயோ! நிஜமாகவே விழுந்துட்டா.' என்று பதறி அடித்து அவளைக் காப்பாற்ற ஓடுகிறான்....

அவனுக்கும் முன்னால் சிலர் அவளைக் காப்பாற்ற கடலுக்குள் குதித்தனர். மேகன் கடல் நீரில் இறங்கும் முன்னர், அவளைத் தூக்கி கரை நோக்கி ஓடிவந்தனர். அவளை கீழே படுக்கவைத்து ஒரு பெண் முதலுதவி செய்ய, சுற்றிலும் நின்றவர்கள் இந்தப் பெண்ணிற்கு தெரிஞ்சவங்க யாரும் இல்லையா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தின் உள்ளே வந்த மேகன்,

"நிறைமதி! நிறைமதி!" என்று கதறினான்.

உடனே கூட்டத்தில் இருந்தவர்கள், "ம்ஹுக்கும்! காதல் பிரச்சனை!" என்று சலித்தவாறு நகர, அதில் சிலருக்கு வீரம் வர, "டேய்! நீ தான் காரணமா?" என்று மேகனை நெருங்க,

"அந்தப் பெண்ணிற்கு தலையில் அடிபட்டு இருக்கிறது. பெண்ணிற்கு தெரிஞ்சவங்கங்களிடம் ஒப்படைக்கிறத விட்டுட்டு அந்த பையனோட பிரச்சனை பண்ணாதிங்க!" என்று ஒருவர் கூற வீரர்கள் பின்வாங்கினர்.

"ஆம்புலன்ஸ் ஐ கூப்பிடுவோம்." என்று சிலர் கூறவும். "என்னிடமே கார் இருக்கு" என்றவன், நிறைமதி யைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கி ஓடினான். ஒருசிலர் பின்னால் ஓடிவந்து காரில் ஏற்றுவதற்கு உதவினர்.

அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவர்கள் வீட்டிற்கு தெரியப்படுத்த ஒரு ஆளை அனுப்பச் சொல்லி, தாத்தா விற்கு போன் பண்ணியவன், "தற்கொலை முயற்சி னு சொல்ல வேண்டாம் தாத்தா, சின்ன விபத்து என்று மட்டும் கூறுங்கள் அப்படித்தான் ஆஸ்பத்திரியிலும் சொல்லியிருக்கிறேன். காலேஜில் போய் விசாரிச்சா அவ வீட்டு முகவரி தெரியும். சீக்கிரம் தாத்தா..." என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரி நர்ஸ் வந்து, "கடற்கரையில் விபத்து நடந்த பொண்ணுக்கு யார் துணைக்கு வந்திருக்காங்க?" என்று கேட்டார். மேகன் எழுந்து வந்து,

"நான்தான் மேம் (madam)" என்றான்.

"உங்களை டாக்டர் கூப்பிடுறார்"

டாக்டர், "நிறைமதியின் தலை ஏதோ ஒரு பாறை அல்லது இரும்பில் பலமாக மோதியிருக்கிறது. இரத்தம், இன்னும் நிற்கவில்லை. எவ்வளவு சீக்கிரம் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை பண்ண வேண்டும். அதற்கு குடும்பத்தினர் கைரேகை வைத்தால்தான் அறுவை சிகிச்சை பண்ண முடியும். நீங்க அவங்களுக்கு என்ன உறவு?" என்று கேட்டதும்,

"அவ என் மனைவி." என்றான் மேகன்.

"சரி! வெளியே வரவேற்பு பகுதியில் அவங்க சொல்ற இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, பணம் கட்டிவிடுங்கள்." என்று டாக்டர் கூறியதும், வெளியே வந்து அவர்கள் சொன்னபடி செய்து முடித்து திரும்பியவனிடம்,

"சார்! உங்க பேர் என்ன?" என்று அவன் எழுதிக் கொடுத்த பேப்பரை பார்த்தவாறு கேட்டாள் ஒரு நர்ஸ்.

"மேகன்" என்று கூறி விட்டு சென்று விட்டான், அந்த நர்ஸ் அவன் எழுதிக் கொடுத்த பேப்பரில் எதையோ திருத்தி எழுதுவதைப் கவனிக்காமல்.

மேகனுக்கு மிகவு‌ம் பதற்றமாக இருந்தது. 'அவளுடைய வீட்டைக் கண்டு பிடித்து சொல்லியிருக்க வேண்டுமே' என்று வேறு கவலையாக இருந்தது. அவள் சொன்னதெல்லாம் நிஜம்தான் போலிருக்கிறது. ... அவளுடைய அப்பா எங்களைப் பார்த்திருக்கிறார்.... மகனுக்கு கல்யாண பேச்சு நடக்கும் போது பிரச்சனை பண்ண வேண்டாம் என்று பார்த்தும் பார்க்காதது போல் போயிருக்க வேண்டும்... என்னிடம் அடி வாங்கியவன் "முறைப்பெண் அது இது" என்று அன்றைக்கே ஏதோ உளறினான்.... ஷ்ஷிட்! நான் தான் தப்பு பண்ணிட்டேன். அவளிடம் முழுமையாக விசாரித்து இருக்க வேண்டும். ' பாவி! நீயாவது பொறுமை யாக என்னிடம் விளக்கியிருக்கலாமே?' என்று நினைக்கும் போதே, 'அவளே சுற்றும் முற்றும் பார்த்தபடி தான் பேசினாள்... எந்த நிலையில் என்னை நம்பி வந்தாளோ? முட்டாள்! உன்னை நம்பி வந்த பெண்ணை உயிரைக் கொடுத்து காப்பாற்றாமல், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்படி பண்ணிவிட்டாயே. .. என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டான்... தண்ணியில் மட்டும் விழுந்திருந்தால் இத்தனை கஷ்டம் இருந்திருக்காது... உனக்குன்னு அங்கே பாறை வேறா இருந்தது. என்று நொந்து கொண்டான்... எல்லா கடவுளிடமும் "அவளுக்கு குணமாக வேண்டும்" என்று வேண்டினான். அவனையறியாமல் கண்களில் கண்ணீர் பெருகியது. எப்பொழுதும் சிரித்தபடி இருக்கும் அவள் முகம் இன்று வாடியிருந்ததைப் பார்க்க முடியவில்லை.... தன்னால்தான் அவளுக்கு இந்த நிலைமை என்று நினைத்தாலே அவனுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது.

ஆப்பரேஷன் ரூமிலிருந்து சீனியர் நர்ஸ் ஓடிவந்து வரவேற்பு பகுதியில் இருந்தவர்களிடம் ஏதோ விசாரித்தவர் நேராக மேகனிடம் வந்து, "சார்! அறுவை சி‌கி‌ச்சையில் இருப்பவர் உங்க மனைவிதானே?" என்று கேட்டார்.

"ஆமாம்! எப்படி இருக்கா?"என்று பதற்றமாக கேட்டான்.

"வாங்க! உங்களை டாக்டர் கூப்பிடுறார்."

வேகமாக டாக்டர் அறையை நோக்கி ஓடினான். அங்கு வேறு டாக்டர் இருக்கவே, வந்தவுடன் பார்த்த டாக்டர் பெயரைச் சொல்லி "அவர் கூப்பிடவில்லை யா?" என்று கேட்டான்.

"அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். .. இவரும்தான் உங்க மனைவிக்கு சிகிச்சை அளித்தார்கள்." என்று கூறி விட்டு நர்ஸ் வேகமாக சென்று விட்டார்.

"உங்க மனைவிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது... ஆனால் எங்களால் அவங்களை காப்பாத்த முடியல. நீங்க போய் கடைசியா ஒரு தடவை பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்... பெரிய டாக்டர் அங்கே தான் இருக்கிறார்... உறவினர் யாரும் பார்க்க விரும்பினால் தொந்தரவு செய்யாமல் பார்த்து விட்டு வாருங்கள்." என்று டாக்டர் கூறியதுதான் தாமதம்... மேகனுக்குத் தலை கிறு கிறு வென்று சுத்தலாயிற்று, எழுந்தவன் தடுமாறவே, " பார்த்து!" என்று கூறியவர், நர்ஸை அழைத்து மேகனை ஒப்படைத்தார்.

மேகனுக்கு குளிர்பானம் கொடுத்து, "தயவுசெய்து பதற்றமடையாதீர்கள் சார்... போய் உங்கள் மனைவியை பாருங்கள்.." என்று கூறி ஐ.சி.யூ அறை வாசல்வரை கூட வந்தவரிடம், "இல்லை! என்னால் அவளை இந்த நிலையில் பார்க்க முடியாது... " என்று அழ, அருகில் இருந்த இருக்கையில் அமரவைத்து விட்டு, "நீங்க இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டா, என்ன செய்வது? உங்கள் மனைவியை நீங்க பார்க்க வேண்டாமா? அவர்களும் உங்களைப் பார்க்க ஆசைப்படுவார்கள்தானே... அதற்காகவாவது மனதை திடப்படுத்திக் கொண்டு, போய் பாருங்கள்" என்றார்.

"கொஞ்ச தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான்.

"இதோ!" என்று கூறி நர்ஸ் வேகமாக நகர, அவர்களை விட வேகமாக ஆஸ்பத்திரிக்கு வெளியே பாய்ந்தான் மேகன்... உயிரே போய் விட்டதைப் போலிருந்தது மேகனுக்கு... அவளை அந்த நிலையில் பார்க்கும் சக்தி தனக்கில்லை என்று பைத்தியம் பிடித்தவன் போல் மருத்துவமனை வாசலை நோக்கி ஓடினான். பைத்தியம் பிடித்தே விட்டதைப் போல் அவன் தலை மிகவும் கொடூரமாக வலி எடுக்க, இன்னும் வேகமாக ஓடினான்... மருத்துவமனை வாசலில் அமர்ந்து, "ஓ ஓ ஓ " வென்று வாய்விட்டு அழுது கொண்டிருக்கும்பொழுது, நிறைமதியின் இரு அண்ணன்களும் அப்பா, அம்மா இன்னும் சிலரும் பதறியடித்து மருத்துவமனைக்குள் நுழைவதைப் பார்த்தவன்,

" நிறைமதி யை பார்த்து அவர்கள் படும் துயரத்தை காண சக்தியில்லாமல் அவர்கள் மேகனைக் கடந்து சென்றதும், பித்து பிடித்தவன் போல காரை எடுத்து வீட்டை நோக்கி விரட்டினான். கண்கள் தெளிவில்லாமல் இருக்க, தாறுமாறாக ஓடிய கார் எதன்மீதோ மோத, சுயநினைவை இழந்தான்.....

மேகனுக்கு என்ன ஆனது?!!!

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...

Author: meerajo
Article Title: 🤴9🤴சிம்டாங்காரன்
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN