நீயே காதல் என்பேன் - 4

sizzling_saran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

2 ஆண்டுகளுக்கு முன்...

மாதவி,சாதனா,அனு மூவரும் அவர்களின் முதுகலை படிப்பான எம்.பி.ஏ வில் காலடி எடுத்து வைத்த நேரம் அது...

ஏய் என்னடி இவ்வளோ சிக்கிரமா படிப்பு மூடியர மாறி இருக்கு??இன்னும் ஒரு வருஷம்தா!!!-மாதவி சோகமாக கூற மீதம் இருந்த இருவரும் அதை அப்பொழுதுதான் எண்ணியவர்களாக ஆம் என்று தலை அசைத்து ஆமோதித்தனர்...

இந்த வருட படிப்பின் முதல் நாளை யாரும் மறக்க முடியாதபடி செய்ய வேண்டும் என்று யோசித்தவர்களாக ஒவ்வொரு பேராசிரியர்களின் நடை,பாவனை என அனைத்தையும் ஒப்பனை செய்து காட்டிய வண்ணம் இருக்க....உடன் இருந்த அனைவரும் அவர்களின் பெயரை கோஷமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தினர்...

நீனா என்ற பேராசிரியர் போல் சாதனா பாடம் எடுத்துக் கொண்டிருக்க,அவளிடம் சந்தேகம் கேட்பதை போல் மாதவி செல்கிறாள்..

அந்த சந்தேகத்திற்கான விடை தெரியாத சாதனா(நீனா)மாதவியின் காதை திருக....மாதவி கையில் இருந்த சாக்பீசை கொண்டு சாதனாவை அடிக்க.... அங்கே அவர்களின் முடிவில்லாத மற்றொரு சண்டை துவங்கியது

இவை அனைத்தையும் நல்லபிள்ளை(silent killer)போல் அமர்ந்து இருந்த அனு படம் எடுத்து கொண்டிருந்தால்...

மாதவி மற்றும் சாதனாவின் கலாட்டவில் மூழ்கி அவர்களை பார்த்து சிரித்தும் கூச்சலிட்டும் கொண்டிருந்த அனைவரும் வகுப்பறையின் வாயிலில் பேராசிரியர் நீனா நிற்பதை பார்க்க தவறினர்...

எல்லா ட்ராமாவும் ஓவரா??எனக் கைகளை கட்டியவாரு பேராசிரியருக்கே உரிதான ஒரு செறுக்குடன் நீனா குரலை உயர்த்தி கேட்க....அனைவரும் பேயை கண்டது போல் உரைந்து இருந்தனர்...

செத்தோ...போயும் போயும் நம்ப இவகிட்டயா மாட்டனுஎன சாதனா முனுமுனுக்க..

நம்பல இன்னைக்கு வச்சி செய்ய போறா!!!!என மாதவி சாதனாவிற்கு மட்டும் கேட்கும்படி கூறினாள்...

அங்க என்ன பேச்சு இரண்டு பேருக்கும்??

நத்திங் மேம்!!!என கோரசாக இருவரும் சொல்ல...

யு போத் கம் டு தி ஷ்டாப் ரூம்,ரைட் நவ்!!!எனக் கூறி அங்கு இருந்து செல்ல இருந்த நீனாவை நிறுத்திய இருவரும்...

மேம் அனு என அவளை சுட்டிக் காட்டினர்...

தன் கைப்பேசியுடன் உரைந்தபடி அமர்ந்து இருந்த அனுவை பார்த்த நீனா...

ஓ நீங்கதா இவங்க படத்துக்கு கேமராமெனா???

யு டூ கம் டு தி ஷ்டாஃப் ரூம் என சொல்லி வெளியேறினாள்...

அனு...சாதனா மற்றும் மாதவியை முறைக்க,இருவரும் என்ன நடந்தது என்பது போல் அவளை பார்த்தனர்...

உங்களலாம் என்ன செய்யுறதோ...ரொம்ப நல்ல வருவீங்கடீ என பற்களை கடித்தபடி அனு கூற

இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்ப என்றபடி இளித்து வைத்த இருவரையும் பார்த்து முறைக்க முயன்ற அனு அதில் தோற்று சிரிக்க....

அதன் பின் மூவரும் தங்களை சமன்படுத்திக் கொண்டு முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு...

ஷால் ஐ கம் இன் மேம்....

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN