🌹மையலுடைத்தாய் மழை மேகமே -பாகம் 1🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
" அடியே முத்து கருப்பாயீ, எங்கடி போயிட்ட''?

"மவளே என் கைல நீ மாட்டினே செத்தடி'', அவனின் ஆத்திர குரல் அந்த மலை பிராந்தியத்தையே உலுக்கியது.

"அம்மா அம்மா..... எங்கம்மா போயிட்ட நீ, இங்க ஒருத்தன் காட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்கேன், நீ அங்க என்ன பண்ணிட்டு இருக்க ''?

மகனின் குரல் அவன் அம்மாவை அசைத்ததாய் கூட தெரியல. அவ்ளோ பொறுமையாய் அவன் அம்மா நடந்து வந்தார்.

"என்னாடா ருத்ரா காலைல கத்திக்கிட்டு இருக்க? சீக்கிரம் கோவிலுக்கு கிளம்ப வேண்டாமா? இன்னிக்கு பௌர்ணமி மலைக்கோவில் வேட்டைக்காரன் சாமியை போய் தரிசிக்க வேணாமா? அத விட்டுட்டு இப்படி மசமச னு நின்னுட்டு இருக்க '' ருத்ரனின் அம்மா பவானி அவன் நிலை புரியாது அவனை விரட்டிக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே உச்சி மண்டைக்கு ஒருத்தி ஆணி அடித்து விட்டிருந்த நிலையில், அம்மாவின் விரட்டல் அவன் கோவத்தை மேலும் கிளறி விட்டது.அதாங்க நம்ம கதாநாயகன் ருத்ரா ஆர்யகன்.

இழுத்துபிடித்து வைத்த பொறுமை எல்லை மீற, அம்மாவையும் அனல் கக்கும் பார்வையுடன் பார்த்தான்.

அவன் அம்மா அவனுக்கு அசருவாளா என்பது போல் அவனை பார்க்க, அவன்

ருத்ரா : "எப்படிமா கோவிலுக்கு கிளம்புவேன்? இங்க பாரு, பவி வாங்கிக்குடுத்த சட்டையை அந்த பிசாசு அயர்ன் பன்றேனு பொசுக்கி வெச்சிர்க்கு. அந்த கருப்பாயீ என் கைல மாட்டட் டும். என்ன பண்றேன்னு பாரு !

அவன் கையில் அரக்கு வண்ணத்தில் அந்த பட்டு சட்டை தீ பட்டு பொசுங்கியதில் பரிதாபமாய் காட்சியளித்தது.

பவானிக்கு அவன் ஆத்திரம் புரிந்தது. அவன் பவி வாங்கிக் கொடுத்ததை இப்படி பொசுக்கி வெச்சிருக்கா பாவி மக.இன்னக்கி அவளை அந்த சிவன்தான் இந்த ருத்ராகிட்ட இருந்து காப்பாத்தணும்.மனம் அவளுக்காய் வேண்டடிக் கொண்டது. இருந்தாலும்,

பவானி :"டேய் கண்ணா அவள் சின்ன குழந்தைடா, புள்ள தெரியாம பண்ணிட்டா, அலமாரி முழுக்க உன் பவி வாங்கிக் கொடுத்த உடைகள் தானே இருக்குது . அதுல ஏதாச்சும் ஒன்ன போட்டுக்கோ இப்போ. நல்ல நாள் அதுவும் அவள் கிட்ட வம்பு வேணாம். பவி கிட்ட சொல்லிடாத.இப்போவே டைம் ஆச்சுடா. கிளம்பு கிளம்பு.

வெற்று மார்போடு இடையில் துண்டு மட்டும் அணிந்திருந்த அந்த 24 வயது ஆண்மகனை அவன் தாய் விரட்டினாள்.

அன்னையை ஒரு வித இயலாமையோடு ருத்ரா முறைத்து விட்டு நகர்ந்தான்.

எல்லாம் இந்த அம்மா குடுக்கிற இடம். அதான் அந்த வாலு இப்படி அழிச்சாட்டியம் பண்ணுது. அவன் மனம் ஆறவே இல்லை .

அலமாரியில் இருந்த அதே அரக்கு வண்ணத்தில் வேறு ஒரு சட்டை யை மாட்டிக்கொண்டு கூடலூர் நம்பாலக்கோட்டை சிவன் கோவிலுக்கு கிளம்பினான்.

மற்றவர்கள் முன்னதாகவே கிளம்பியிருக்க, வெளி வேலையாக சென்று தாமதமாய் வீடு வந்தவனை அவன் தாய் கிளப்பி கூட்டி வருவதாய் கூறி மற்றவர்களை கிளப்பி விட்டிருந்தாள்.

அதுவும் நல்லதாய் போயிற்று. இல்லாவிட்டால் அவள் கண்மணியை ருத்ரா உண்டு இல்லை என்றல்லவா ஆக்கியிருப்பான். மகனின் குணம் அவள் அறிந்ததே. லேசில் சினம் தணியாதவன். அதுவும் தவறு அவளுடையது என்றால் கூடுதலாய் இரண்டு நாட்கள் முறுக்கி கொள்வான்.

இன்னிக்கு என்ன கச்சேரியோ என பவானி உள்ளம் பலவாறு நினைக்கத் தொடங்கியது.
 

Author: KaNi
Article Title: 🌹மையலுடைத்தாய் மழை மேகமே -பாகம் 1🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN