துளி 9

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தீராத தாகம்
தீயாகும் போது காதல்
தான் காப்பாற்றுமா
நீயாக தானே நானாகி
போனேன் காதல் தான்
ஏமாற்றுமா....

மறுநாள் காலை முகத்தில் தண்ணீர் துளிகள் உணர கண்விழித்தான் தேவ்...
காரிருள் வானை மறைத்திருக்க மழை பொழிவதற்கு தயாராகிக்கொண்டிருந்தது.... அதற்கு வலு சேர்க்கும் வகையில் காற்றும் பலமாய் அடிக்க அதை ரசித்தபடியே இருந்தவன் நேரமாவதை உணர்ந்து வீட்டினுள்ளே சென்றான்....
அவன் உள்ளே சென்ற மறுநொடி ஓவென்று மழைபொழிய ஆரம்பித்தது...
உள்ளே சென்ற தேவ் முகம் கழுவிவிட்டு ஸ்ரவ்யாவை பார்க்கச்சென்றான்.. அவளோ உதவியாளர் அழைக்க அதை கவனிக்காது அவரோட வரமறுத்தபடி அமர்ந்திருந்தாள்...
இதை கண்ட தேவ் சிரித்தபடியே அவள் குழந்தைத்தனத்தை ரசித்துக்கொண்டு அவர்களருகே வந்தான்...
அவனை கண்டதும் உதவியாளர் சீதா
“தம்பி... இந்த புள்ள முகம் கழுவ வரமாட்டேனு அடம்பிடிக்குது... காலையில எழுந்ததுல இருந்து பாத்ரூம் கூட போகல...” என்று கூற தேவ்வோ தான் பார்த்துக்கொள்வதாக கூறி அவரை அனுப்பி வைத்தான்..
“என்ன சூட்டி..... வாஸ்ரூம் போகலையா???” என்று கேட்க அவளோ
“அப்பு...” என்று கூறிவிட்டு வாஸ்ரூமை பார்க்க அதை புரிந்துகொண்டவன் அவளை வாஸ்ரூம் அழைத்து சென்று காலைக்கடன்களை முடித்தவன் மீண்டும் அழைத்து வந்து அமரவைத்தான்... மழை அதிகமாக பெய்ததால் முகம் மட்டும் கழுவச் செய்து அழைத்து வந்தவன் அவளுக்கென தயாரிக்கப்பட்ட உணவை எடுத்துவந்து ஊட்டினான்...
அவள் உண்டு முடித்ததும் அவளை வெளியே அழைத்து வந்தவன் அவளை ஹாலில் அமரச்செய்து தன் உணவையும் எடுத்துவந்து அவளோடு பேசியபடி உண்ணத்தொடங்கினான்...
இவன் அவளுடன் பேச அவள் கவனமோ வெளியே பெய்துக்கொண்டிருந்த மழையிலேயே இருந்தது...
அதை கவனித்தவனுக்கு அப்போது தான் ஸ்ரவ்யாவிற்கு மழை என்றால் கொள்ளைப்பிரியமென்று நியாபகம் வந்தது ....
ஒருமுறை இரவு ஒரு மியூசிக் ப்ரோகிரேமிற்கு தேவ்வின் குழுவினர் சென்றிருந்தனர்...
இரவு நேரமென்பதால் தேவ் ஸ்ரவ்யாவை வரவேண்டாமென்று கூற அவளோ எப்போதும் போல் தன் பிடிவாதத்தால் தேவ்வுடன் அந்நிகழ்ச்சிக்கு சென்றான்....
அவர்கள் குழுவில் பாடகனான ஜீனியர் மாணவனால் இறுதி நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை... அவனிருக்கும் தைரியத்தில் தேவ்வின் குழுவினர் வேறொரு நபரை தயார்படுத்த தவறியிருக்க என்னசெய்வதென்று குழம்பித்தவித்தனர்....
அப்போது அக்ஷய் ஸ்ரவ்யாவை பாடச்சொல்லுவோமா என்று கேட்க தேவ்வோ அவள் மறுத்துவிடுவாள் என்று உறுதியாக கூறினான்..
ஏற்கனவே பலமுறை அவளை பாடச்சொன்னபோது அவள் மறுத்ததையும் அதற்கு அவள் சொன்ன காரணத்தையும் மனதில் நிறுத்தியே அவள் மறுத்துவிடுவாள் என்று தேவ் கூறினான்....
ஆனால் அவனே எதிர்பார்க்காத வகையில்
“நான் பாடுறேன்..” என்று பின்னாலிருந்து ஒரு குரல் வர அனைவரும் திரும்பி பார்க்க அங்கு ஸ்ரவ்யா நின்றிருந்தாள்...
அவள் வார்த்தைகளை நம்ப மறுத்த தேவ்
“நிஜமாக தான் சொல்லுறியா சூட்டி.. ??” என்று மீண்டும் தேவ் கேட்க
“அபி அண்ணா.. நீங்க சாங் லிஸ்டை தாங்க.. நான் ப்ரிபேர் பண்ணனும்..” என்று ஸ்ரவ்யா அபியிடம் கேட்க அவனும் தேவ் கையிலிருந்து அந்த கடதாசி துண்டினை பறித்து ஸ்ரவ்யாவிற்கு விளக்கத்தொடங்கினான்...
தேவ்வோ நடப்பது கனவா நனவா என்று புரிய்து நிற்க அக்ஷய் அவனை இழுத்து சென்றான்...
சபையில் அனைவரும் நிறைந்திருக்க மேடையில் தேவ்வின் குழுவினரும் தயாராயிருந்தனர்....
தேவ் அனைவரிடமும் தயாரா என்று என்று கண்களால் கேட்க அனைவரும் தயார் என்று தம் இசைக்கருவிகளை ஒருமுறை மீட்டி உறுதிப்படுத்தினர்..
மேடையின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒவ்வொரு இசைக்கருவிக்கும் நேர் மேலே இருந்த ப்ளாஸ் லைட் மட்டும் ஒளிர முதலில் பியானோவின் இசை ஆரம்பிக்க அப்போது மேடைக்கு நடுவே பாடியபடியே நடந்து வந்தாள் ஸ்ரவ்யா.. கையில் மைக்கோடு நின்றவளை மேடை விளக்குகள் அழகுபடுத்த தன் காந்தக்குரலால் பாடத்தொடங்கினாள் ஸ்ரவ்யா..

நோபாடி சீஸ், நோபாடி நோஸ்
வீ ஆர் த சீக்ரட் கான்ட் பீ எக்ஸ்போஸ்ட்
தாட்ஸ் ஹௌ இட் இஸ், தாட்ஸ் ஹௌ இட் கோஸ்
பார் ப்ரோம் தி ஆதர்ஸ், க்ளோஸ் டூ ஈச் அதர்.
இன் த டே லைட், இன் த டே லைட்
வென் த சன் இஸ் ஷைனிங்
ஆன் த லேட் நைட், ஆன் த லேட் நைட்
வென் த மூன் இஸ் ப்ளைன்டிங்
இன் த ப்ளேய்ன் சைட் ப்ளேய்ன் சைட்
லைக் ஸ்டார்ஸ் இன் ஹைடிங்
யூ என்ட் ஐ பர்ன் ஆன், பர்ன் ஆன்
நோபாடி சீஸ், நோபாடி நோஸ்
புட் டூ அன்ட் டுகெதர், போரெவர் வீல் நெவர் சேன்ஜ்
புட் டூ அன்ட் டுகெதர், போரெவர் வீல் நெவர் சேன்ஜ்

என்று ஆங்கிலப்பாடல் முடிய அடுத்து அதே தாளத்தில் தமிழ் பாடலென்றை தேவ்வின் இசைக்குழுவினர் இசைக்க மறுபடியும் பாடத்தொடங்கினாள் ஸ்ரவ்யா... அவளுடன் இடையே இணைந்து கொண்டான் தேவ்

மிருதா மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா
மிருதா மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா
இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா
இவள் கண்களில் முன்னே சிதைவாயா மிருதா
நான் மனிதன் அல்ல கொல்லும் மிருகம் அல்ல
இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று
நான் நிஜமும் அல்ல நீ கனவும் அல்ல
இரண்டுக்கும் நடுவில் ஆனோம் இன்று
மிருதா மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா
மிருதா மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா

நான் அழுகை அல்ல நீ சிரிப்பும் அல்ல
இரண்டுக்கும் இடையில் கதறல் இது
நான் சிலையும் அல்ல நீ உளியும் அல்ல
இரண்டுக்கும் இடையில் சிதறல் இது
நான் முடிவும்அல்ல நீ தொடக்கம்அல்ல
இரண்டுக்கும் இடையில் பயணம் இது
நான் இருளும் அல்ல நீ ஒளியும்அல்ல
இரண்டுக்கும் இடையில் விடியல் இது

தொலைவில் அன்று பார்த்தகணமா
அருகில் இன்று மீறும் ரணமா
கொல்லாமல் நெஞ்சை கொல்வதென்ன கூறாய்
வாய் விட்டு அதை கூறாயோ
சொல்லாமல் நீயும் என்னை விட்டு போனால்
என்னாவேன் என்ற பாராயோ
சில மேகங்கள் பொழியாமலே
கடந்தே விடும் உன் வானிலே
எந்தன் நெஞ்சமும் ஒரு மேகமே
அதை சிந்தும் முன்னே வானம் தீர்ந்ததே
மிருதா மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா
மிருதா மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா
இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா
இவள் கண்களில் முன்னெ சிதைவாயா மிருதா

என்று தேவ்வும் ஸ்ரவ்யாவும் பாடிமுடிக்க அடுத்த பாடலுக்கான இசை முழங்கத்தொடங்க தேவ் தன்னிடத்துக்க திரும்பிட ஸ்ரவ்யா மீண்டும் பாடத்தொடங்கினாள்..

பல் ஏக் பல் மெய்ன் ஹி தம் ஷா கயா
து ஹாத் மெய்ன் ஹாத் ஜோ தே கயா
சாலுன் மெய்ன் ஜஹான் ஜாயே து
தாயென் மெய்ன் தேரே பாயேன் து
ஹூன் ருத் மெய்ன் ஹவாயென் து ஷாதியா..

ஹன்சு மெய்ன் ஜப் சாயே து
ரௌன் மெய்ன் முர்ஜாயே து
பீகூன் மெய்ன் பர்சாயே து
ஷாதியா..

ஷாயா மேரே ஹை தேரி ஷகல்
ஹால் ஹை ஜஸா குச் ஆஜ்கல்
சுபா மெய்ன் ஹீன் து தூப் ஹை
மெய்ன் ஆய்னா ஹூன் து ரூப் ஹை
ஏ தேரா ஷாத் கூப் ஹை
ஹம்சஃபார்...

து இஸ்க் கே ஷாரே ரங் தே கயா
பிர் சீன்ச் கே அப்னே சங் லே கயா
கஹின் பே கோ ஜாயே சல்
ஜஹான் ருக் ஜாயே பல்
கபி நா பிர் ஆயே கல்
ஷாதியா...

என்று ஸ்ரவ்யா பாடிமுடித்த மறுகணம் சபையிலிருந்த அனைவரும் எழுந்துநின்று கைதட்டி பாராட்டினர்....
தேவ் மற்றும் அவனது குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தனர்...
மேடையிலிருந்து கீழிறங்கியதும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து ஸ்ரவ்யாவிற்கும் தேவ்வின் குழுவினருக்கும் வாழ்த்து சொல்லிச்சென்றனர்...
அனைவரும் மகிழ்ந்திருக்க அபியோ
“மச்சான்... இதெல்லாம் சூட்டியால தான்டா.. கடைசி நிமிஷத்துல அவ மட்டும் நான் பாடுறேன்னு சொல்லாமலிருந்தா நம்மை வாழ்த்திய எல்லாரும் கைதட்டி சிரிச்சிருப்பாங்க...” என்று உண்மையை எடுத்துரைக்க அனைவருமே சூட்டியை அணுகி நன்றி கூற அவளோ
“ஐயோ அண்ணா.. இதெல்லாம் ஒரு விஷயமா.. சொல்லப்போனா நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.. பல வருஷங்களுக்கு பின் இத்தனை பேருக்கு முன்னாடி பாடுறேன்... இது என்னோட பலவருஷக் கனவு...” என்று சூட்டி கூற மற்ற அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு அவளுக்கு வாழ்த்து தெரிவிக்க தேவ்வோ எதுவும் கூறவில்லை...
அதை கவனித்த ஸ்ரவ்யாவும் போகும் போது விசாரிக்கலாமென்று விட்டுவிட்டாள்...
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கிளம்ப தேவ் சூட்டியை அழைத்தான்...
வெளியே ஓவென்று மழைக்கொட்டியபடியிருக்க தேவ் டாக்சி புக் செய்வதாக கூற ஸ்ரவ்யாவோ வேண்டாம் என்று மறுத்தவள் தங்கள் இருவரின் உடமைகளைகளையும் அபியிடம் கொடுத்து எடுத்து செல்லுமாறு கூறியவள் தேவ்வை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்..
இரவு நேரம் மழை ஓவென்று பொழிந்தபடியிருக்க தேவ்வோ
“ஹேய் சூட்டி... என்ன பண்ணுற?? மழையில நனைந்தால் காய்ச்சல் வந்திடும்... வா..” என்று அவளை அழைத்துச்செல்ல முற்பட அவளோ
“அப்பு... எனக்கு மழையில நனைறதுனா ரொம்ப பிடிக்கும்.. ப்ளீஸ்.. இப்படியே நனைந்துக்கொண்டே வீட்டுக்கு போகலாமே..”
“ஹேய்.. வேணாம்.. வா.. டாக்சி புக் பண்ணுறேன்..அதிலேயே போயிடலாம்...”
“அச்சோ அப்பு..இப்படியொரு சான்ஸ் கிடைக்காது அப்பு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்...” என்றவள் கெஞ்ச அவனும் சரியென்றான்..
அந்த நிகழ்ச்சி நடைபெற்றது கொள்ளுபிட்டியவில்.. அங்கிருந்த மெரைன் ட்ரைவ் பாதையினால் சற்று தூரம் நடந்து சென்றாலே ஸ்ரவ்யா தங்கியிருக்கும் ப்ளாட் வந்துவிடும்.. அதனாலேயே தேவ்வும் சரியென்றான்..
அந்த மண்டபத்திலிருந்து வெளியே வந்தவர்கள் மெரைன் ட்ரைவ் பாதைக்கு வந்தனர்..
இரவு நேரமென்பதாலும் மழைகொட்டிக்கொண்டிருந்ததாலும் வாகனங்களின் வரவு குறைவாயிருந்தது... ஸ்ரவ்யா தேவ்வின் இடப்புற கையில் தன் கைகளால் கோர்த்தபடி அவனுடன் இணைந்து நடந்தாள்.. இருவரும் மெரைன் ட்ரைவ்விற்கு வந்ததும் ஸ்ரவ்யா
“அப்பு அப்படியே பீச் சைட் போகலாமா??” என்று கேட்க அவனும் சரியென்று ரயில் பாதையை கடந்து கடற்கரையிற்கு அழைத்து சென்றான்..
அங்கு சென்றதும் தேவ்வை அமரக்கூறியவள் மழையில் துள்ளிக்குதித்து விளையாடினாள்..
அதை அமர்ந்தபடியே கண்டு ரசித்தபடியிருந்த தேவ்விற்கோ அவளை புரிந்துகொள்ளமுடியவில்லை...
எப்போதுமே அவளது ஆசைகள் சிறியவை தான்... இது போன்று இயற்கையை அனுபவிப்பதே அவளது பேரவா... இவள் வயது பெண்கள் ஏதேதோ ஆசைகளோடு திரிய இவளோ இன்னும் தன் குழந்தைத்தனத்திலிருந்து மீளவில்லை... அப்போது அவன் சிந்தையில் ஒரு கேள்வி எழ ஸ்ரவ்யாவிடம் கேட்டான் தேவ்..
“ஏன் சூட்டி... நீ தான் எந்த காரணத்துக்காகவும் பாட்டு பாடமாட்டேன்னு முடிவோட இருந்தியே.. அப்போ எப்படி இன்னைக்கு பாட்டுப்பாட ஒத்துக்கிட்ட..” என்று மழையில் நனைந்தபடியே கேட்க தன் விளையாட்டை நிறுத்தியவள் தேவ் முன்னே முட்டி போட்டு அமர்ந்து
“உனக்காக தான் அப்பு..” என்று கூற
“எனக்காகவா??” என்று ஆச்சரியமாய் கேட்க ஸ்ரவ்யாவும்...
“ஆமா... என்னோட அப்புக்காக தான்... என்னோட முடிவை மாற்றிக்கிட்டேன்... என்னோட அப்பாவுக்கு நான் பாடுறது பிடிக்காததால தான் நான் பாடுறதையே நிறுத்துனேன்... ஆனா என்னோட அப்புக்கு நான் பாடனும்னு ஆசை... அவன் ஒரு இக்கட்டான நிலைமையில இருந்தபோது கூட என்னோட உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னை பாடுனு அவன் ஒரு வார்த்தை சொல்லலை. அவனோட அந்த குணத்துக்காக தான் என்னோட கொள்கையை நான் மாற்றிக்கிட்டேன்..எனக்கு எங்க அப்பாவை விட நீ முக்கியம் அப்பு..” என்று ஸ்ரவ்யா கூற அவளது அன்பில் தேவ் திக்குமுக்காடிவிட்டான்...
இதுவரை அவன் அவளுக்கென்று பெரிதாய் எதுவும் செய்ததில்லை ... இன்று வரை அவளுக்கு எதனால் தன்மீது காதல் வந்தது என்று கூட அவனுக்கு காரணம் தெரியவில்லை... காரணம் கேட்டபோது கூட அவள் எதுவும் சொல்லவில்லை.... ஆனால் தினம்தினம் தன் காதலால் தேவ்வை அவள் திக்குமுக்காடச்செய்தது மட்டும் மெய்யே...
அவள் வதனத்தை தன் கைகளால் ஏந்தியவன் அவள் முன்னுச்சியில் இதழ்பதித்து
“லவ் யூ பேபி...” என்று கூற அவளோ அவனை இறுக அணைத்து கன்னமிரண்டிலும் முத்தமிட்டு
“மீ டூ அப்பு...” என்றவள் அவனிடமிருந்து விலகியவள் மீண்டும் மழையில் நனைந்தபடி கடல்நீரில் ஆடத்தொடங்கினாள் ....
சற்று நேரம் ஆடியவள் கொட்டும் மழையில் தேவ்வருகே வந்தமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கண்மூடி அந்த கணத்தை அனுபவித்தாள்..
“என்ன சூட்டி... போகலாமா??”
“இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் அப்பு... இப்படி கொட்டுற மழையில கடலை பார்த்தபடி காலை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது எத்தனை சுகம் தெரியுமா?? அது ஒரு பீல்... “ என்று கூறியபடி அவன் கையினை தன் கைகளால் இறுக்கியபடி அவன் தோளில் சாய தேவ்வோ அவள் செயலில் சற்று தடுமாறித்தான் போனான்.. கொட்டும் மழையும் இரவு நேரமும் அவன் வயதிற்கு சவாலாகிட தன் உணர்வுகளை கட்டுப்படுத்த சிரமப்பட்டவனை சோதிக்கவென ஸ்ரவ்யா அவன் மார்பை கட்டிக்கொள்ள நிலைதடுமாறினான் தேவ்...
அவள் முகத்தை கையில் ஏந்தியவன் அவள் இதழ்களை தன் இதழ்களால் சிறையிட ஸ்ரவ்யாவும் அதில் விரும்பியிணைந்தாள்..
முத்த யுத்தத்தை ஆரம்பித்தவர்களுக்கு சுற்றுப்புறத்தையுணர்த்தியது தூரத்தில் கேட்ட ரயில் சத்தம்...
உடனே ஸ்ரவ்யாவை தன்னிடமிருந்து பிரித்தவன் அவளிடமிருந்து சற்று தொலைவில் சென்று நின்றுக்கொண்டான்...
அவன் செயலை எண்ணி அவன் மனம் வெட்கியது... கணப்பொழுதில் தடுமாறிய அவனை அவன் மனம் வசைபாடியது..
ஸ்ரவ்யாவை எதிர்கொள்ள பயந்தான் தேவ்....
ஸ்ரவ்யாவே அவன் முன் வந்து நின்று
“இப்போ என்ன நடந்துபோச்சினு இப்படி என்னை பேஸ் பண்ண பயந்து நிற்கிற??”
“அப்போ நான் பண்ணது சரினு சொல்லுறியா?? அப்படியொரு காரியத்தை பண்ணிட்டு என்னால எப்படி உன்னை பேஸ் பண்ணமுடியும்??? நியாயப்படி பார்த்தா நீ என்மேல கோபப்படனும்....” என்று தேவ் கூற ஸ்ரவ்யாவோ வாயை மூடிக்கொண்டு சிரிக்கத்தொடங்கினாள்..
அதில் குழம்பியவன்
“இப்போ எதுக்கு சிரிக்கிற??”
“இது ஒரு சின்ன விஷயம்.. இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு டென்ஷனாகுற???”
“நீ புரிந்து தான் பேசுறியா?? நான் பண்ணது தப்பு சூட்டி...”
“நீ பண்ணது தப்பில்லைனு நான் சொல்லலை... ஆனா அது தப்புனா உன்னை தடுத்து நிறுத்தாதது என்னோட தப்பு...”
“சூட்டி...”
“நீ என்ன நினைக்கிறனு எனக்கு புரியிது அப்பு.... இது ஏதோ உணர்ச்சிகளோட பிடியில் நீ சிக்குண்டதால அப்படி நடந்துக்கிட்ட...அதுக்காக ஏதோ கொலை குற்றம் பண்ணவன் மாதிரி பீல் பண்ணாத... இரண்டு பேர் மேலேயும் தான் தப்பு... சோ நீ அதையே நினைத்து உன்னை கஷ்டப்படுத்திக்காத ப்ளீஸ்....”
“நீ என்ன சொன்னாலும் நான் செய்தது பெரிய தப்பு... என்மேல உள்ள நம்பிக்கையில தானே நீ என்னை நம்பி என்கூட வந்த... அந்த நம்பிக்கையை உடைக்கிறமாதிரி நான் அப்படி நடந்துக்கிட்டது தப்பு சூட்டி...”
“அப்பு ப்ளீஸ்... இப்படி உன்னை நீயே ப்ளேம் பண்ணிக்காத.. தப்பு என்மேல தான்.. நீ இப்படி நடந்துப்பனு தெரிந்தும் கூட உன்னை தடுக்காமல் இருந்தது என்னோட தப்பு... ப்ளீஸ் அப்பு...இதை இதோடு மறந்திடு..” என்று கெஞ்ச அவனோ மறுபடியும் அதையே கூற ஸ்ரவ்யாவோ என்ன செய்வதென்று யோசிக்க அவள் மனதில் ஒரு யோசனை உதித்தது..
சற்றென்று அவள் மயங்கி சரிய தேவ்வோ பதறியபடி அவளை தாங்கிக்கொண்டான்.. அவளை எழுப்பமுயல கஷ்டப்பட்டு கண்முழித்தவள்
“என...க்கு... வீட்டுக்கு. போகனும்..... வயிறு வலிக்..கிது..” என்று திக்கித்திணறி கூறியவளை கைத்தாங்கலாய் தூக்கிக்கொண்டவன் ரோட்டிற்கு அழைத்து வந்து அந்த வழியால் வந்த முச்சக்கரவண்டியில் அவள் ப்ளாட்டிற்கு அழைத்து சென்றான்.. ஸ்ரவ்யாவின் தோழிக்கு அழைத்து கீழே வரச்சொல்ல அவளும் அவர்களுக்காக காத்திருந்தாள்..
ப்ளாட் வந்ததும் துள்ளிக்குதித்து இறங்கிய ஸ்ரவ்யாவை விழி விரித்து பார்த்திருந்தான் தேவ்..
அவளோ பாய் என்று கூறிவிட்டு அவன் ஏதும் கூறும் முன் தன் தோழியை இழுத்துக்கொண்டு ப்ளாட்டிற்குள் ஓடினாள்..
அவள் செயலில் அவளுக்கு எதுவும் இல்லையென்று புரிந்திட அவள் தனக்காக தான் அப்படி நடந்துகொண்டாள் என்று புரிய அவன் உதடுகள் புன்னகையை தத்தெடுத்தது..
அன்றைய நாளின் நினைவுகள் இன்றும் அவனுள் புன்னகையை உண்டாக்க விரைந்து உண்டுமுடித்து வந்தவன் ஸ்ரவ்யாவை வெளியே அழைத்து வந்தான்...
தேவ்வின் கையினை பற்றியபடி வெளியே வந்த ஸ்ரவ்யாவௌ கொட்டும் மழையில் நிறுத்தினான்..
அவளோ கொட்டும் மழையை கண்சிமிட்டாமல் பார்த்தபடியிருந்தாள்...
அதை கண்டவனுக்கு உள்ளுக்குள் வருத்தமிருந்தபோதிலும் எதையும் வெளிக்காட்டாது
“சூட்டி... உனக்கு மழை பிடிக்கும்ல??” என்று கேட்க அவளது கருவிழிகள் அங்குமிங்கும் அசைந்தது..
அதை கண்டவன்
“ஆ.மா... சொல்லு சூட்டி....” என்று அவளை பேசச்செய்ய முயற்சிக்க அவளிடம் பதிலில்லை...
ஆனால் தேவ்வோ அதோடு விடாமல் ஏதாவது செய்தாகவேண்டுமென எண்ணியவன் தன் மொபைலை எடுத்துவந்து ஒரு பாடலை ஓடவிட்டு ஆடத்தொடங்கினான்... ஸ்ரவ்யா அவன் ஆடுவதை கண்ணிமைக்காமல் பார்த்திருக்க அதை கண்டும் காணாதபடி தேவ் தன் ஆட்டத்தை தொடர்ந்தான்..
தேவ்வருகே வந்த ஸ்ரவ்யா
“அப்பு... மழை .. சூட்டி...” என்று மூன்று வார்த்தைகளை கோர்வையாய் சொல்லிட அதை கேட்டிருந்த தேவ்விற்கு மட்டில்லா மகிழ்ச்சி...
இதுவரை காலமும் தன் பெயரை தவிர வேறெதையும் உதிர்க்காதிருந்த அவளது நா இன்று மேலும் இரண்டு வார்த்தைகளை உதித்தது அவளது முன்னேற்றத்திற்கான முதல் படியல்லவே....
அவளை இறுக அணைத்துக்கொண்டவன் அவள் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு
“ஆமா சூட்டி.. மழை தான்... உனக்கு பிடித்த... நீ நனைய விரும்புற அதே மழை தான்.. இந்த கொட்டுற மழையில உன்னோட ஆசைப்படி எவ்வளவு நேரம் வேணாலும் நாம ஆடலாம்... யாரும் கேட்கமாட்டாங்க... வந்து உன் அப்பு கூட சேர்ந்து ஆடு..” என்றவன் அவள் கைகளை தன் கைகளோடு பிணைத்து ஆடத்தொடங்கினான்...
இத்தனை நாட்கள் உணர்வு மறந்து நின்றவள் இன்று மழையில் நனைந்த மகிழ்ச்சியில் சிரிக்க அதை கண்ட தேவ்விற்கு கூடிய விரைவில் ஸ்ரவ்யாவை குணப்படுத்திவிடலாம் என்று நம்பிக்கை பலப்பட்டது...
மகிழ்வில் மலர்ந்த அவள் வதனமும் அடிக்கடி மழைநீருக்கு பயந்து மூடித்திறக்கும் அந்த விழிகளுமே அவள் உள்ள மகிழ்ச்சியை எடுத்துக்காட்டியது..
அதை தன் மனப்பெட்டகத்தில் சேமித்தவன் அந்த மழையில் அவளோடு ஆட்டம் போட்டான்..
சற்று நேரத்தில் அவள் களைத்துவிட அவளை உள்ளே அழைத்து வந்தவன் சீதாவிடம் கூறி அவளுக்கு உடைமாற்றிவிடச்சொன்னான்..
அவனும் சென்று உடைமாற்றி வர ஹாலில் ஸ்ரவ்யாவிற்கு தலைமுடியை காயவைத்துக்கொண்டிருந்தார் சீதா..
அவரிடமிருந்து உண்டை வாங்கியவன் தனக்கும் ஸ்ரவ்யாவிற்கு குடிப்பதற்கு சூடாக இஞ்சி டீ கேட்க அதை தயாரிக்க சென்றார் சீதா..
அவர் சென்றதும் ஸ்ரவ்யாமுடியை துவாயின் உதவியால் நன்கு உலரச்செய்தவன் ஹேயார் ட்ரயரையும் பயன்படுத்தினான்...
அதற்கிடையில் சீதா இருவருக்கும் குடிப்பதற்கு இஞ்சி டீ எடுத்துவந்தார்..
ஸ்ரவ்யாவிற்கு தேநீரை புகட்டியவன் தானும் குடித்துவிட்டு சீதாவிடம் பழைய செய்தித்தாள் கேட்க அவரும் எடுத்துக்கொடுத்தார்..
செய்தித்தாள்களோடு ஸ்ரவ்யாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன் அவளை வாசலில் மழையில் நனையா வண்ணம் அமர்த்திவிட்டு தானும் அருகில் அமர்ந்தான்..
பின் செய்தித்தாள்களை கிழித்து தேவ் காகித கப்பல்கள் செய்ய ஸ்ரவ்யாவும் அதை விழியசைக்காது பார்த்தபடியிருந்தான்...
காகித கப்பல்களை செய்து முடித்ததும் அதை அவன் நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் விட்டான்..
முதல் கப்பலை அவனே தண்ணீரில் விட இரண்டாவது கப்பலை ஸ்ரவ்யாவின் கையில் கொடுத்து அவள் அந்த காகித கப்பலை நீரில் வித உதவி செய்தான்..
சற்று நேரம் தேவ்வின் உதவியோடு கப்பல் விட்டவள் பின் தானே தனியாக கப்பல் விடத்தொடங்கினாள்....
தேவ் காகித கப்பல்களை செய்ய ஸ்ரவ்யாவோ அதை கவனமாக நீரில் நீந்தச்செய்தாள்....
அவளது மாற்றத்தை மனதில் குறித்துக்கொண்டவன் சற்று நேரம் அங்கிருந்துவிட்டு ஸ்ரவ்யாவை உள்ளே அழைத்து வந்தான்...
அன்றைய நாள் அவ்வாறே கழிய நடு இரவில் யாரோ வீலென்று அலறும் சத்தம் கேட்டு அடித்து பிடித்து எழுந்தான் தேவ்..
எழுந்தவன் எங்க சத்தம் வருகிறதென்று பார்க்க அது ஸ்ரவ்யாவின் அறையிலிருந்து வர அங்கு ஓடினான் தேவ்..
உள்ளே சென்று பார்த்தவன் அந்த அறையிருந்த கோலத்தில் அதிர்ந்துவிட்டான்..
அங்கிருந்த பொருட்களனைத்தும் சுக்கு நூறாய் உடைந்திருக்க தன் கைப்பிடியிலிருந்து கத்தியபடியே திமிறிக்கொண்டிருந்த ஸ்ரவ்யாவை கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார் சீதா...
அவருக்கு உதவும் பொருட்டு ஸ்ரவ்யாவினருகே சென்ற தேவ் அவளை அமைதிப்படுத்த முயல அவளோ ஆக்கிரோஷமாய் கத்தியபடியே அவனை பலமாய் தள்ளிவிட அவனும் பிடிமானமின்றி கீழே விழுந்தான்...
கீழே உடைந்துகிடந்த கண்ணாடிச்சில்லொன்று அவன் கையை பதம் பார்த்திட வலியில் அலறிவிட்டான்...
அத்தனை நேரம் ஆக்கிரோஷமாய் கத்தியபடி இருந்தவள் திடீரென அமைதியாகிட தேவ்வோ என்னானது என்று அவளை நோக்கினான்...
சீதாவின் பிடியிலிருந்து மெதுவாக வெளி வந்தவள் தேவ்வருகே வந்து அவன் முன் முட்டியிட்டு அமர்ந்து அவனது வெட்டுப்பட்ட கையினை தன் கைகளில் ஏந்தியவள் வீறிட்டு அழுதாள்...
அவளது அழுகையில் பயந்தவன் அவளை தேற்றமுயல அவளோ மூச்செடுக்க சிரமப்பட்டபடி மடங்கிசரிந்தாள்...
அவள் கீழே விழாதபடி தாங்கிப்பிடித்துக்கொண்ட தேவ் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க சீதாவோ இன்ஹெலரை கொடுத்து அதை ப்ரயோகிக்கும் முறையை கூற தேவ்வும் அதுபடியே செய்தான்...
சற்று நேரத்தில் அமைதியாகிட இப்போது மயக்கத்தில் இருந்தாள் ஸ்ரவ்யா..
அவளை கைகளில் ஏந்தியவன் தூக்கி வந்து அவளை படுக்கையில் கிடத்தினான்..
சீதா தாமதிக்காது அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டு வர அவரிடம்
“என்னாச்சுக்கா அவளுக்கு... ஏன் இப்படி நடந்துக்கிறா..??”
“தெரியலை தம்பி... ஆரம்பத்துல நடுராத்திரியில எழுந்து உட்கார்ந்து சுவற்றையே வெறிச்சிட்டு இருப்பா... அப்படி இருக்கும் போது இப்படி மூச்செடுக்க முடியாமல் தடுமாறுவா.. ஆனா இப்போ ஒரு வருஷமாக அந்த பிரச்சினை இல்லை... இன்னைக்கு மறுபடியும் இப்படி நடந்திருக்கு... என்னதுனு புரியலை... டாக்டர்ட காட்டுறது நல்லதுனு தோன்றுது...” என்று சீதாகூற அதை மனதில் குறித்துக்கொண்டவன்
“சரி... நான் பார்த்துக்கிறேன்... இப்போ என்ன பண்ணுறது??”
“அவ தூங்கட்டும்.. தூங்கி எழுந்தா சரியாகிடுவா...” என்று சீதா கூற அதை ஏற்றவன் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டுவிட்டு வெளியே வந்து படுக்கையில் விழுந்தவனுக்கு அவளது நிலை அச்சமூட்டியது...
ஏன் திடீரென்று இவ்வாறு நடந்துக்கொள்கின்றாள்??? இன்று முழுதும் வழமைக்கு மாறாக மகிழ்வுடன் தானே இருந்தாள்.. கூடுதலாக இன்று இரண்டு வார்த்தைகள் பேசினாளே... என்று பல யோசனைகள் மனதில் அலைபாய பின்னிரவிலேயே துயில் கொண்டான் தேவ்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN