தாயுமானவன் 15

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பே எனதுயிரே...
மெல்ல மெல்ல என்னுள் நுழைந்தாய்...
ஜென்மம் முழுவதையும் உன்னோடு கழிக்கும் கனவைக் தந்தாய்.....
என் வாழ்வின் வசந்தமாய் எனை தேடி வந்த இன்பம் உனைக்
கொள்வேன் மனைவியாய் என் வாழ்நாள் உள்ளவரை.....

உன் தாயுமானவன்...

கைத்தொலைபேசி திரையில் மின்னி மறைந்த சதீஸ் என்ற பெயரைக் கண்டதும் ஆகாஷின் கோபம் மீண்டும் ஊற்றெடுத்தது...

அவனிடமிருந்து 30 மிஸ்ட் கால்களைக் கண்டதும் இந்த பிரச்சனையைப் பேசிதான் தீர்க்க வேண்டுமென்று புரிந்து கொண்டான்...

சதிஸிடமிருந்து வந்த அடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டவன் நிதானமாக பேசவே முயற்சித்தான்...

"ஹலோ.. சொல்லு..." ஆகாஷ்

"மச்சி ப்லீஸ் கால கட் பண்ணிடாத.. உன் கிட்ட முக்கியமா பேசனும்... மயூவ பத்தினது மச்சான்..." சதீஸ்

"மயூ என்னோட பொண்டாட்டி... எனக்குச் சொந்தமானவ... அவள பத்தி நீ என்ன பேசனும்... ", ஆகாஷ் சீறினான்...

"உனக்கு மயூ இன்னிக்கு தான் பொண்டாட்டி... பட் பத்து வருஷத்துக்கு முன்னாடியே அவ என்னோட தங்கச்சி... உனக்கு அவள பத்தி என்ன தெரியும்னு ரொம்ப பேசுற... அவ என்னோட சித்தப்பா மகடா... இப்பயாவது புரிஞ்சிக்கோ... உன்கிட்ட இத நான் பேசிதான் ஆகனும்... ப்லீஸ்..." சதீஸ்

"சரி வரன்... ரிபீனா பார்க்கு வா...ஓகே பாய்..." என்று அழைப்பைத் துண்டித்தவன் மயூவின் அறைக்குச் சென்றான்...

எந்தவித ஆரவாரமுமின்றி சிறு குழந்தையென உறங்கிக் கொண்டிருந்தாள் மயூ...

கட்டிலின் அருகில் அமர்ந்தவன் அவளது தூக்கம் கலையாதவாறு மென்னையாக அவள் தலையைக் கொதினான்...

"ம்பிச்...டிஸ்தப் பண்ணாதம்மா... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்குறன்... ப்லீஸ்... ", தூக்கத்தில் சிணுங்கியவள் நகர்ந்து ஆகாஷின் மடியில் தலை வைத்து தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள்...

'நீ இன்னும சின்ன குழந்தடி... பட் நிறைய கஷ்டத்த பார்த்துட்ட... இனி உன் வாழ்க்கைல எந்த துன்பமும் இருக்க கூடாதுனுதான் கடவுள் உன்னை என்கிட்ட அனுப்பி வெச்சிருக்காரு... என் பக்கத்துலே இருந்துருடி... உன் கிட்ட என்னோட அம்மாவ பார்க்குறன்டா... உனக்கு நான் எனக்கு நீ... நமக்குனு ஒரு குட்டி பாப்பா... அப்புறம் மித்துக்கா... இது நம்மலோட இராஜியம் டா... உன்ன சுத்தி இருக்குற எல்லா மர்ம முடிச்சையும் கலைச்சிட்டு உன்னை என்னோட பொண்டாட்டி ஆக்கிக்குறன்டி... இப்போ நல்லா தூங்கு செல்லம்...', தன் மடியிலிருந்த அவள் தலையை மீண்டும் தலையணைக்கு மாற்றியவன்...

மயூவின் வயிற்றில் இதழ் பதித்து "அம்மாவ பத்திரமா பாத்துக்கோ செல்லம்...", என்று பிறக்காத தன் பிள்ளையிடம் கூறிவிட்டுச் சென்றான்...

ஆகாஷ்... சதீஸ்.. இருவரும் ரிபீனா பார்க்கை அடைந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது... ஏனென்று தெரியாத மெல்லிய கோடு அவர்கள் நட்பின் இடையே விழுந்திருந்ததால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்ற பட்டிமன்றமே இருவர் மனதிலும் நடந்து கொண்டிருந்தது...

பொறுத்துப் பார்த்த ஆகாஷ் தானே பேச்சைத் தொடங்கினான்...

"சரி சொல்லு... என்னை யான் வர சொன்ன... மயூ உன்னோட தங்கச்சினா உன்ன பார்த்தோன அவ யான் பயப்படனும் சொல்லு சதீஸ்... ஐ நிட் தி அன்ஸர்... அவ கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வந்தாலும் என்னால தாங்க முடியாது... பட் அவ எப்போதுமே அழுந்துட்டே இருக்கா... என்னால ஒன்னும் பண்ண முடில... உண்மையில என்ன நடந்துச்சினு எனக்கே கொஞ்சம் தெரியும்னாலும்... நீ சொல்றதுல எனக்கு இன்னும் நிறைய விஷயம் தெரியவரும்... ஸோ எதையும் மறைக்காம சொல்லு...", என்றவனின் கண்களும் கலங்கியிருந்தது...

எதற்கு கலங்கி பார்த்திடாத தன் நண்பன் இன்று ஒரு பெண்ணுக்காக கலங்குகிறான் எனில் அவளின் மீது ஆகாஷ் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தைச் சதீஸால் புரிந்து கொள்ள முடிந்தது...

ஆகாஷிடம் மயூவின் இறந்தகாலத்தைச் சொல்ல தொடங்கியவன் அதனுள்ளே மூழ்கி போனான்...

நாமும் காலத்தைப் பின் நோக்கி அவர்களோடு பயணிப்போம்...

காலம் பல மாறினாலும் தங்கள் பராம்பரியத்தை விட்டு விலகாது அதோடு இணைந்து வாழும் ஜமீன் வம்சம் அது...

பார்ப்போரை வியக்க வைக்கும் ராஜ கலை பொருந்திய கோட்டை அது...

ரிஷிபுறத்தில் யாரைக் கேட்டாலும் தெரியும் என்று சொல்லும் அளவு செல்வ செழிப்போடு வாழையடி வாழையாக அந்த கிரமத்தில் வாழ்ந்து வரும் குடும்பம் அது...

அந்த கோட்டையில் முக்கியமானவர் பார்த்திபன்...

ஜமின் வம்சத்து முரட்டுக் காளையென பெயர் பெற்றவர்...

அவர் முன்னே நின்று பேசவே அனைவரும் பயந்து நடுங்க...

அவர் அடங்கி போவது அவரின் சரிபாதியான சாரதாம்மாவிடம்தான்..

வெளியே சிங்கமென கர்ஜிப்பவர் தன் மனைவியிடம் மட்டும் பொட்டி பாம்பாய் அடங்கி விடுவார்...

சாரதாம்மா மிகவும் அன்பானவர்.. பண்போடு அனைவரையும் ஆதரிக்கும் குணம் கொண்டவர்... பெரியோரின் வற்புறுத்தலினால் அவரை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டாலும்... காலப் போக்கி சாரதாம்மாளின் ஆர்ப்பாட்டமில்லா குணத்தில் தன்னை இழந்தார் பார்த்திபன்...

அதன் பயனாக அத்தம்பதியினருக்கு

குணசீலன்... ருத்ரன்.... பிரதாப் என மூன்று ஆண்சிங்கங்கள் மகன்களாய் பிறந்தனர்..

முத்தவன் குணசீலன்.. பெயரில் மட்டுமே குணத்தைக் காண முடியும்.. நிஜ வாழ்வில் பாட்டனாரின் சொத்துகளை ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டு வெட்டியாய் ஊர் சுற்றி கொண்டிருந்தான்...

அதற்கு துணையாய் அவனோடு நண்பர்கள் பட்டாளமும் ஒன்று சேர அனைத்து கெட்ட பழக்கங்களும் அவனோடு ஒன்றி போனது...

மது, மாது, ஊர் வம்பு என அனைத்து பிரச்சனையிலும் இவனது தலையீடு இருக்கும்...

ஊர் மக்கள் போற்ற தலை நிமிர்ந்து வாழ்ந்த அந்த ஜமீன் வம்சத்திற்கு இழுக்கென பிறந்தவன்தான் இவன்...

பெற்றோர் எவ்வளவு முயற்சி செய்தும் அவனைத் திருத்தி நல்வழிபடுத்த முடியவில்லை...

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நேரத்தில் தான் அந்த குடும்பத்தின் இரண்டாம் வாரிசு ருத்ரன் பட்டணத்திலிருந்து தன் உயர்படிப்பை முடித்து விட்டு ஊர் திரும்பினான்...

ருத்ரன்....

எந்த நேரத்தில் அவனுக்கு அந்த பெயரை வைத்தனரோ அவன் நிஜ ருத்ரமூர்த்தியாகவே விளங்கினான்...
அநீதியை எதிர்த்து நியாயத்திற்கு துணைப் போகும் குணம் கொண்டவன்...

எந்த கெட்ட பழக்கமும் இல்லாத காரணத்தால் உடற்பயிற்சியில் வலிமை பெற்ற தேகம்...
மாநிறத்தில் கிராமத்து அய்யனார் சிலைப் போல் இருப்பான்...

ருத்ரனின் வருகை அவனின் பெற்றோர்க்கு பக்க துணையாய் விளங்கியது... அதோ சமயம் குணசீலனுக்கு ருத்ரனின் மீது பகையை உண்டாக்கியது...

தன்னை விடுத்து ருத்ரனைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பெற்றோரையும் ஊர்மக்களையும் வெறுத்தான்...

கல்வி அறிவுதான் ருத்ரனைப் பக்குவபடுத்திவுள்ளது என எண்ணிய பார்த்திபன் அவரது இளைய மகனான பிரதாபையும் உயர்கல்வியைத் தொடர அனுப்பி வைத்தார்...

பிரதாப் வெளிநாட்டின் மீது அதிக மோகம் கொண்டவன்... அதனால் அவன் தன் படிப்பை அமெரிக்காவில் தொடர தன் தந்தையிடம் அனுபதி பெற்றான்...

அவனை வழியனுப்பி வைத்த நாள்தான் பிரதாப்பை அவர்கள் கடைசியாக பார்த்தனர்...

அதன்பின் அவன் தன் தாய்நாட்டிற்கு திரும்பவேயில்லை...

குணசீலனுக்கு திருமணம் செய்து வைத்தால் அவனது வாழ்க்கை மாறும் என நம்பியவர்கள் தங்கள் தூரத்து உறவான கமலினியை அவனுக்குத் துணையாக தேர்ந்தெடுத்தனர்...

குணசீலனின் திருமணம் நடந்தேறி இரண்டாண்டைக் கடந்திருந்தது... அவர்களுக்கு சதீஸ் மூத்த பையனாக பிறந்திருந்தான்...

கமலினி கிராமத்துப் பெண்களுக்கே உரிய அமைதியான குணவதியாக இருந்த காரணத்தால் அந்த குடும்பத்தில் எந்தவொரு பூகம்பமும் வெடிக்காமல் நாட்கள் சுமுகமாக நகர்ந்தது...

இல்லை இல்லை.. நகர்வது போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்தியிருந்தான் குணசீலன்...

புலி பதுங்குவது பாய்வதற்குதான் என கணிக்க தவறினான் ருத்ரன்...

திருமணமும் குழந்தையும் அவன் குணத்தை மாற்றியது என நம்பினான்...

தன் அண்ணனின் வாழ்க்கை மலர்ந்துவிட்டதாக மகிழ்ந்தான்...

குணசீலனுக்கோ சகோதர பாசம் துளியும் இல்லை...

அதிகாரமும் சொத்தும் அவன் கண்ணை மறைக்க ருத்ரனை எப்படியாவது அந்த ஜமீனை விட்டு துரத்த திட்டம தீட்டினான்...

காலமும் அவனது குள்ளநரி திட்டத்திற்கு கைக்கொடுத்தது...

ருத்ரனை அவர்களது தந்தையே ஜமீனை விட்டு ஒதுக்கி வைக்கும் காலம் கனிந்தது..

ருத்ரன் படிக்கும் காலத்தில் அவனோடு படித்தவள் துளசி...

துளசியியைப் போலவே புனிதமானவள்...

யாரிடமும் அதிகம் பேச மாட்டாள்... ருத்ரனைப் பார்க்கும் பொழுது சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு செல்வாள்...

ருத்ரனுக்கும் அவளின் மீது பிடித்தம் இருந்தது...

அது காதல் எனும் மாயையில் மூழ்காமல் நட்பின் பெயரில் சுமுகமாக சென்றது...

ஒரு நாள்... அந்தி சாயும் வேளையில் துளசி ருத்ரனைக் காண வந்தாள்...
திருமண கோலத்தில் யாருக்கும் தெரியாமல் வந்துவிட்டாள் என்பது துளசியைக் கண்ட மாத்திரத்தில் ருத்ரனால் இனம் காண முடிந்தது...

"துளசி... நீ எப்படி இங்க வந்த... இந்த கோலத்துல வந்துருக்கனா என்ன நடந்துச்சி... பதில் சொல்லு... ஊம மாதிரி இருக்காத... புரியுதா...
ஐ நீட் தி அன்ஸர்... டெல் மீ...",
ருத்ரனின் உறுமலில் துளசியின் பூ மேனி நடுங்கியது...

வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கி கொள்ள கண்கள் மட்டும் தாரை தாரையாய் கண்ணீரை ஊற்றெடுத்தது...

"ஏய் கேக்குறன் தானா.. எதுக்கு இங்க வந்த அத மொதல்ல சொல்லு..." ருத்ரன்

"அது... வந்து... அது... ", துளசிக்கு வார்த்தைத் தந்தியடித்தது...

இவர்கள் இருவரும் தனியே பேசிக் கொண்டிருப்பதை கண்டு கொண்ட குணசீலனின் சகா ஒருவன் ஊர் பஞ்சயத்தை கூட்ட...

ஊருக்கே நியாயம் சொல்லும் ருத்ரன் பஞ்சயத்தில் நிறுத்தப்பட்டான்...

துளசியும் மணக்கோலத்தில் அவன் அருகே நிறுத்தப்பட்டாள்...

தன் அருகே தேம்பிக் கொண்டிருந்த துளசியின் மீது ஏனோ ருத்ரனுக்கு கோபம் எழவில்லை...
தாய்மை மிளிரும்...💜💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN