காரணம் தெரியாமல் உன் கைவிரலில் சிக்கி தவிக்கிறேன்...

உன் கண்ணில் துளிர்க்கும் ஒற்றைக் கண்ணீர் துளியில் என்னை நான் இழக்கிறேன்...

பெண்ணே என்னுள் வசிக்கும் உன்னை நான் காதலிக்குறேன்...

உன் தாயுமானவன்...

நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் அமைதி காத்தனர்...

என்றோ நடந்து முடிந்த சம்பவமாய் இருப்பினும் இன்றுதான் நடந்தது போல் அதன் தாக்கமும் வலியும் அவர்களின் நெஞ்சை துளைக்கவே செய்தது...

"மச்சி... ரொம்ப கஷ்டப்படாதடா... இதுக்கு மேல நீ ஒன்னும் சொல்ல வேணாம்... விட்டுறு...", வாய் சொன்னாலும் மயூவின் வாழ்வில் அடுத்து நடந்தது என்ன என்ற கேள்வியே ஆகாஷை வண்டாய் குடைந்தது...

"இல்ல மச்சான்... உனக்கு எல்லாமே தெரியனும்... அவள நீ எந்தளவுக்கு லவ் பண்றனு எனக்குத் தெரியுது பட் மயூவ பத்தி உனக்கு முழுசா தெரிஞ்சாதான் அவள எந்த கஷ்டமும் நெருங்காம நீ பாதுகாக்க முடியும்..." சதீஸ்

"ஹம்... சரி சொல்லு..." ஆகாஷ்

"மயூவோட அம்மா அப்பா இறந்து ரெண்டு மாசம் ஆகிருந்துச்சி... அந்த சமயத்துலதான் என்னோட அம்மாவும் ஹார்ட் அட்டக்ல இறந்துட்டாங்க...

உலகமே சூன்யமா மாறிடுச்சி..  நிம்மியும் ரொம்பவே உடைந்து போயிட்டா... அடுத்து என்ன செய்றதுனு யோசிக்ககூட முடில...

அப்பதான் அந்தாளு மயூவ பார்க்க வந்துருக்கான்... நான் உன்னோட பெரியப்பா... உன்னோட அப்பா ருத்ரா என்னோட தம்பி... உன்னைப் பார்த்துக்குற பொறுப்பை என் கிட்ட ஒப்படைச்சிருக்கான் அப்படினு பாசம் காட்டி வேஷம் போட்றுக்கான்...

இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் பத்தி எறியுதுடா... யாருமே கூட இல்லாதப்ப இப்படி ஒரு ஆள் வந்து நான் உன்னோட உறவு என் கூட வந்துருமான்னு சொன்னா... யாருக்கும் அந்த உறவ தக்க வெச்சிக்கதான் தோனும்...

அம்மா அப்பா இல்லனு ஆச்சி...

கூட பிறந்தவன் என்னானான் எங்க போனான்னு தெரில... நானும் அவ கூட அங்க இல்லை... மயூ அந்தாளு பேச்ச உண்மைனு நம்பி அவனோட ரிஷிபுறத்துக்கு போனா..." என்றவனது குரலில் நடுக்கம் தெரிந்தது...

ஆகாஷின் முகத்தின் கடினத்தனம் கூடியது... ரிஷிபுறத்தைப் பற்றிய மயூவின் டைரி குறிப்பு அவன் முன்னே மின்னி மறைந்தது...

"எனக்கே என்ன நடந்துச்சினு தெரியும் சதீஸ்...", என்றவனின் கை முஷ்டி இறுகியது...

தன் நண்பனின் மனப் போராட்டத்தைப் புரிந்து கொண்டார் போல் சதீஸ் மௌனம் காத்தான்...

(அவங்க ரெண்டு பேருக்கு தெரிஞ்ச கத உங்களுக்குத் தெரிய வேண்டாமா  வாங்க என்னனு போய் பார்க்கலாம்)

ரிஷிபுறத்திலிருந்து ருத்ரனின் வெளியேற்றத்திற்கு பிறகு பல மாற்றங்கள் நடந்து முடிந்தது...

குணசீலனின் கெட்ட குணத்தாலும் தீய பழக்க வழக்கத்தினாலும் அவனின் மனைவி தன் இரு பிள்ளைகளையும் தன்னோடு கூட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்...

இளைய மகனும் உடனில்லை...

மூத்த மருமகளும் பேரப்பிள்ளைகளும் அருகேயில்லை... அந்த வயோதிக நெஞ்சம் இரண்டும் தங்கள் தனிமையைப் போக்க துணைத் தேடியது...

உனக்கு நான் எனக்கு நீயென

பார்த்திபனும் சாராதம்மாளும் வாழப் பழகிக் கொண்டனர்...

அந்த கோட்டையில் பல காலமாய் வேலை செய்து வந்த அலமு பாட்டி மட்டுமே அவர்களுக்குத் துணையாய் இருந்தார்...

ருத்ரனின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பற்றி இவர் மூலமாகவே அவர்கள் தெரிந்து கொண்டனர்...

யோசிக்காமல் எடுத்த முடிவு தன் மகனை தன்னிடமிருந்து தள்ளி வைத்ததை எண்ணி பார்த்திபனின் மனம் தினம் தினம் வெம்மைக் கொண்டது...

முத்து முத்தாய் நான்கு பேரக்குழந்தைகள் இருந்தும் பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியா துக்கம் வாட்டியது...

குணசீலனின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போக...

அந்த ஜமீன் சொத்துகள் அனைத்தையும் ருத்ரனின் பராமறிப்பின் கீழும் அப்படி அவன் இல்லாமல் போனால் அவனது பிள்ளைகளின் பெயரிலும் எழுதி வைத்தார்...

சதீஸ் மற்றும் நிம்மிக்கு அநீதி இழைப்பதற்காக அவர் அப்படி செய்யவில்லை... அவர்களின் தாய் மானஸ்தி... அந்த கோட்டையை விட்டு வெளியேறும் பொழுது இனி இந்த ஜமீனுக்கும் தனக்கும் எந்தவித சம்மதமும் இருக்ககூடாதென சத்தியம் வாங்கிவிட்டுச் சென்றாள்...

அதுமட்டுமில்லாமல் ருத்ரனின் வளர்ப்பு என்றும் தப்பாகாது...

அவனது பிள்ளைகள் கண்டிப்பாய் அவன் குணத்தோடுதான் இருப்பர்...

எதிர்காலத்தில் வரும் சந்ததியினர்க்கு சொந்தமாய் இந்த ஜமீன் நிலைத்து நிற்க வேண்டுமெனில் இதுதான் சிறந்த முடிவாக அவருக்குத் தோன்றியது...

தன் கடமையைச் சரிவர செய்து முடித்துவிட்ட திருப்தியில் பார்த்திபனின் உயிர் தூக்கத்திலேயே அவரைவிட்டு விடைப்பெற்றுச் சென்றது...

அவரே சரணாகதி என்றிருந்த சாந்தாம்மாளின் உயிரும் கணவன் தன்னைவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் இம்மண்ணுலகை பிரிந்து சென்றது...

அவர்களின் இறப்பு யாரை பாதித்ததோ இல்லையோ அலமு பாட்டியை அதிகமாக நிலைக்குழைய செய்தது...

ருத்ரனிற்கு இந்த செய்தியை கடிதம் மூலம் தெரிவித்தார்... அவனின் வருகைக்காக காத்திருந்தார்...

இந்த விஷயத்தைத் தன் அடியாட்களின் மூலம் தெரிந்து கொண்ட குணசீலன் ருத்ரன் மீண்டும் ரிஷிபுறத்துக்கு வரும் முன்னே அவனைக் கொல்ல திட்டமிட்டான்...

பணம், சொத்து, அந்தஸ்து அவனை மிருகமாய் மாற்றியது...

தான் கொல்ல துடிப்பது தன் உடன்பிறந்தவன் என்பதை மறந்தான்...  அதன் விளைவு ருத்ரனும் துளசியும் மீண்டும் ரிஷிபுறத்துக்கு வரும் முன்னே தங்கள் உயிரைத் துறந்தனர்...

மயூ முதன் முறையாக ரிஷிபுறத்துக்கு சென்றாள்...

அந்த கோட்டையின் பிரமாண்டமோ செல்வ செழிப்போ எதுவும் அவள் கவனத்தை ஈர்க்கவில்லை...

தனிமை....

தனிமை....

தனிமை....

அது மட்டுமே அவளைச் சூழ்ந்திருந்தது...

அப்பாவோடு அரட்டை அடித்த தருணங்கள்...

அம்மாவைச் சீண்டிப் பார்த்து மகிழ்ந்த நாட்கள்...

அண்ணனிடம் செய்த சின்ன சின்ன குறும்புகள்...

மயூவின் மனத்திரையில் தோன்றி மறைந்து அவளது காயப்பட்ட மனதை இன்னும் இரணமாக்கியது...

பிரிந்து சென்றவர்களின் நினைவுகள் அவள் மனதில் ஆறாத வடுவாய் உருமாறியது...

எப்பொழுதும் அழுகையில் துவண்டு கிடந்தவளை அலமு பாட்டிதான் அன்பாய் அரவணைத்துக் கொண்டார்...

மயூ தன்னுடைய உலகத்திலே சூழல மாதங்கள் இரண்டைக் கடந்திருந்தது...

ஒரு நாள் மயூ தூக்கம் வராமல் மாடியில் உலாவி கொண்டிருந்த பொழுது, அக்கோட்டையின் பின்பறத்திலிருந்து ஏதோ சலசலப்பு கேட்டது... மனதில் பயம் சூழ்ந்து கொள்ள சத்தமின்றி அங்கு சென்றாள்...

ஏதோ தவறு நடப்பதைப் போல் அவள் மனம் மீண்டும் மீண்டும் கூக்குரலிட மறைந்து மறைந்து அங்கு சென்றாள்...

அங்கு அவள் கண்ட காட்சி மயூவை ஸ்தம்பிக்க செய்தது...

குணசீலனோடு சதீஸும் சேர்ந்து அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தான்...

போதை அதிகமான குணசீலன் பிதற்ற தொடங்கினான்...

" டேய் சதீஸ்.. நீ என்ன தேடி வருவன்னு நான் நினைக்கவே இல்லடா...

உன் அம்மா சதி செஞ்சிட்டாடா... உன்னையும் உன் தங்கச்சியையும் என் கண்ணுலே காட்டாம மறைச்சிட்டா...

அதான் நீ வந்துட்டல இனிமே எல்லாம் திரும்பி வந்துடும்டா...

இந்த ஜமீன்... சொத்து... அந்தஸ்து... எல்லாத்துக்கு நீயும் நிம்மியும் தான்டா வாரிசு...

உங்களுக்காக நான் என்னென்ன செஞ்சேன் தெரியுமாடா...

ருத்ரனையும் அவன் பொண்டாட்டியையும் ஆக்சிடன் மாதிரி செட் பண்ணி கொன்னுட்டன்...

இப்ப அவன் மகளையும் கொல்ல போறன்...

பட் இவ கொஞ்சம் கொஞ்சமா சாகனும்டா... இவன் அப்பனால எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு இவதான் பதில் சொல்லனும்...

அதுக்குதான் அவளுக்கு நான் கல்யாணம் பண்ணி வெக்க போறன்...

ஹா... ஹா... ஹா...

மாப்ள யாரு தெரியுமா... என்னோட அடியாளு சங்கிலி...

மூனு தடவ ஜெயிலுக்கு போயிருக்கான்... ", மது செய்த மாயத்தால் குணசீலன் இத்தனை நாளாய் புதைத்து வைத்திருந்த இரகசியங்கள் யாவும் தங்கு தடையின்றி வெளிவற தொடங்கியது...

சதீஸ் தன் தந்தையை எண்ணி வெட்கித் தலை குனிந்தான்...

இப்படி ஒரு மிருகத்திற்கு பிள்ளையாய் பிறந்ததை நினைக்கையில் அவனுக்கு அவன் மீதே அருவெறுப்பாய் இருந்தது...

குணசீலன் தானாகவே வந்து தன் வலையில் சிக்கியது சதீஸை ஆச்சிரியப்படுத்தியது...

குணசீலனின் ஒவ்வொரு வார்த்தையையும் தன் செல்போனில் பதிவு செய்தவன் தன் காவல் துறை நண்பனுக்கு அனுப்பியவன் தன் முன்னே இருப்பவனை கொலைச் செய்யும் வெறியில் இருந்தான்...

மயூவை சதீஸ் தன் சொந்த தங்கையைப் போல் தான் பார்த்தான்...  அந்த குடும்பத்தின் அன்பில் திளைத்தவன் எப்படி மயூவை பாளும் கிணற்றில் தள்ளுவான்...

தன் தாயின் இறுதிச் சடங்கு முடிந்தவுடன் சதீஸ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சில காலம் எடுத்துக் கொண்டதால் மயூவை அவனின்  தந்தை ரிஷிபுறத்துக்கு அழைத்துச் சென்றதை சற்று தாமதமாகவே தெரியவந்தது...

அந்த செய்தி சதீஸைப் புரட்டிப் போட்டது... குணசீலனைப் பற்றி முழுமையாக தெரிந்தவனானதால் மயூவின் பாதுகாப்பை எண்ணி கலங்கினான்...

பெற்ற பாசத்தைப் பகடைகாயாய் பயன்படுத்தி குணசீலனைத் தன் வலையில் சிக்க வைத்தான்...

மது அருந்திவிட்டால் எல்லா விஷயத்தையும் வெளிக் கொண்டு வந்து விடலாம் என்று அவனின் தாய் ஒருமுறை கூறியது தக்க சமயத்தில் நினைவுக்கு வந்தது அவனின் நல்ல நேரம்...

சதீஸ் மயூவைக் காப்பாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் செயல்பட அதுவே அவனுக்கு வினையாய் முடிந்தது...

சதீஸ் அவனின் தந்தை குணசீலனோடு சேர்ந்துதான் எல்லாவற்றையும் செய்ததாக மயூ தவறாக எண்ணினாள்...

விக்ரம் திடீரென்று மர்மமாய் காணாமல் போனது...

தன் பெற்றோரின் மரணம்...

இப்பொழுது தன்னைச் சுற்றி பிண்ணப்பட்ட சூழ்ச்சி...

எல்லாவற்றிர்கும் சதீஸின் பங்கும் இருப்பதாக தோன்றியது...

உண்மையை உணர்ந்து உணர்ச்சிவசப்பட்டவளாய் அவர்களை நோக்கி அடியெடுத்து வைத்தவளைத் தடுத்து நிறுத்தியது ஒரு கரம்...

ஆம்... அது அலமு பாட்டிதான்...

இந்த மாதிரியான சூழ்நிலையில் வேகத்தைவிட விவேகமே சிறந்ததாக இருக்குமென்று கூறியவர்...

மயூவைப் பத்திரமாக ரிஷிபுறத்தை விட்டு வெளியேற்றினார்.. அவளின் பாதுகாப்பிற்காக தன் கிராமத்திற்கு போகும்படி கூறினார்... அங்கு அவருக்குச் சொந்தமான வீட்டில் மயூவைத் தங்கி கொள்ளும்படி கூறியதோடு அவளின் இருப்பிடத்தை யாருக்கும் தெரிவு படுத்த வேண்டாம் என்றும் கூறினார்...

மயூ ரிஷிபுறத்தை விட்டு வெளியேறியதும் அவள் அறியாப் பல சம்பவங்கள் நடந்தேறிவிட்டன...

அவள் பெற்றோரைத் திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் குணசீலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது...

ஜமீன் சொத்துக்கள் யாவும் மயூவின் பெயருக்கு  மாற்றப்பட்டது...

சதீஸின் உண்மையான குணத்தைத் தெரிந்து கொண்ட அலமு பாட்டி மயூவின் இருப்பிடத்தை அவனிடம் கூறினார்...

சதீஸ் மயூவை தள்ளி நின்று கவனித்து வந்தான்...

ஆகாஷ் மயூவின் முதல் சந்திப்பு முதல் அவர்களிடையே உருவான மெல்லிய காதல் வரை அனைத்தும் சதீஸ் அறிந்த ஒன்றே...

இன்று நிம்மியின் குறுக்கீட்டால் மீண்டும் மயூவிற்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என்ற பயத்தினாலே அவளைச் சந்திக்க வந்தான்...

(அதுக்கப்புறம் நடந்தது எல்லாம்தான் உங்களுக்கே தெரியுமே  இப்ப ஆகாஷ் மயூவோட காதல் காவியத்த பார்க்க போலாமா )

தாய்மை மிளிரும்...

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.