தாயுமானவன் 24

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பிலே விளைந்தவள்..
பண்பிலே நிறைந்தவள்....
காதலினால் எனை வென்றவள்...
எனக்கு தாயும் ஆனாவள்...
உன் தாயுமானவன்...



சதீஸை தன் ஆசை தீரும் வரை அடித்தவன்... பின் பாய்ந்து அணைத்துக் கொண்டான்...

"ஏன்டா இப்படி பண்ண... சொல்லிருக்கலாம்ல... அம்மா அப்பாக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா ரொம்ப சந்தோஷம் பட்டுருப்பாங்கடா... உன்னையும் அவங்க மகன் மாதிரிதான பார்த்தாங்க... அவங்ககிட்ட உண்மைய மறைக்க உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு...", விக்ரம் குரலில் வருத்தம் இழையோடியது...

"மறைக்கனும்னு இல்லடா... ஆனா உண்மைய சொல்ல ஏதோவொரு தயக்கம்... எங்க நான் சொல்ற விஷயத்துனால கைல கிடைச்ச சந்தோஷத்த இழந்துடுவோமோனு...", சதீஸ்

"சரி... சரி... விடுடா... பட் இப்படிலாம் நடந்துருக்க கூடாது... சந்தோஷமா இருந்த நம்ப குடும்பம் இல்லாமலே போச்சே... இப்ப நான் என்னடா பண்ணுவன்... அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல... தங்கச்சி எங்க இருக்கானே தெரில... கடமை தான் முக்கியம்னு அவங்கள விட்டுக் கொஞ்ச நாள் பிரிஞ்சி போனன்... அதுக்குத் தண்டனையா என்னை ஒரேடியா விட்டுட்டு போயிட்டாங்களோ... அனாதையா நிக்க வெச்சிட்டாங்கடா...", விக்ரம் மனதை இத்தனை நாள் அழுத்திக் கொண்டிருந்த பாரம் வெளிப்பட அந்த ஆறடி ஆண்மகன் சதீஸின் தோளில் சாய்ந்தழுதான்...

பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க கற்றுக் கொடுத்த தன் குடும்பம் இனி தன்னோடு இல்லையென்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது அவன் மனம்...

சதீஸ் ஆறுதலாய் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து விக்ரமின் சோகங்கள் யாவும் வெளிப்படும் வரை அமைதி காத்தான்...

நிம்மிக்கு நடப்பது யாவும் புரியாமல் போக தன் அண்ணனும் அந்த புதியவனும் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதில் கவனம் செலுத்தினாள்...

(அதே😜 அதே😜 என்னோட அழகு எவர் சில்வர் டப்பா🙄🙄🙄 அடிதடி சண்டையே நடந்துருக்கு அத தடுக்கறத விட்டுட்டு😏😏😏 தள்ளி நின்னு வேடிக்க பார்க்குறதும் இல்லாம😕😕😕 ஒட்டுக் கேக்குற நீ😏😏😏)

அழுது ஓய்தவனாய் துவண்டு காணப்பட்டவனை சோபாவில் அமரச் செய்தான்...

திருதிருவென ஆடு திருடியைப் போல் நின்று கொண்டிருந்த நிம்மியிடம் திரும்பி...

"குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா நிம்மி..." என்றான்

"ஆங்... என்ன ணா???",

"ஏய் லூசு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா..."
சதீஸ் குரலை உயர்த்தி அதட்ட

"ஹான்... ஓகே... இதோ வரன்...", என்று துள்ளி குதித்து ஓடியவள் கையில் குளிர்ந்த நீரோடு திரும்பி வந்தாள்...

விக்ரமின் கையில் தண்ணீரைத் தினித்தவள் அங்கிருந்த விலக எத்தணிக்க "நீயும் இங்கயே இரு நிம்மி... உனக்கும் இந்த விஷயத்துல சம்மதம் இருக்கு...", என்று இறுகிய குரலில் கூறிய சதீஸ் தங்கள் குடும்ப வரலாற்றை ஆதியிலிருந்து அந்தம் வரை ஒவ்வொன்றாய் விளக்கி சொல்ல இப்போது அழுவது அவளது முறையானது...

"நம்ம அப்பா அவ்வளவு கெட்டவறா சதீஸ்...", சின்ன குழந்தையாய் தேம்பியவளைக் கண்டு சதீஸின் மனம் கனத்தது...

அவளை எந்த துன்பமும் நெருங்காது இன்றுவரை ஒரு அண்ணனாய் பாதுகாத்து வந்தான்...

எது எப்படி இருப்பினும் இதுதான் அனைவருக்கும் நல்லதென அவனுக்குத் தெரியும்...

உண்மையைத் தெரிந்து கொண்டால்தான் மயூவின் மீது அவளுக்கு இருக்கும் பகமை எண்ணமும் ஆகாஷை அடைய வேண்டுமென்ற பிடிவாதமும் அவளைவிட்டு விலகுமென நன்கு தெரிந்து வைத்திருந்தான் சதீஸ்...

நிம்மி ஆகாஷின் மீது கொண்டுள்ளது உண்மையான காதல் என்றால் சதீஸ் அவள் பக்கம் நின்றிருப்பான்...த ஆனால் அவள் ஆகாஷ் மீது காதல் என்று பிதற்றுவது மயூவின் மீது உள்ள பெறாமையால்...

சதீஸ் தன் யோசனையில் மூழ்கிருக்க விக்ரம் சின்ன குழந்தையாய் தேம்பிக் கொண்டிருந்தவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்...

புதிய ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டவளாய் விக்ரமை நோக்க
"என்ன லுக்கு அங்கிரி பெர்ட்... நானும் உன்னோட அண்ணன் தான்... ", என்று கண் சிமிட்டினான்...

"ஓகே விக்ரம்... இப்போ நான் சொல்ல போறத நல்லா கேட்டுக்கோ... எனக்கு மயூ எங்க இருக்கா எப்டி இருக்கானு தெரியும்... பட் மயூ என்னை அவ பக்கத்துல கூட நெருங்க விட மாட்றா... நடந்த எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம்னு அவளோட மனசுல பதிஞ்சிருச்சி...", சதீஸ் சின்ன குரலில் கூற விக்ரம் சிறகில்லாமல் பறந்தான்... சதீஸ் மயூ எங்கிருக்கிறாளென தெரியும் என்று சொன்ன ஒற்றை வார்த்தையே அவன் மனதில் நிலைத்தது... மற்றவை அனைத்தும் காற்றில் கலந்தது...

"நான் மீராவ இப்பவே பார்க்கனும்டா...", என்றான் ஆர்வமாக..

பல நாள் பிரிவின் தாக்கம் அவன் குரலில் தெரிந்தது..

"ம்ம்ம் போலாம்... பட் அதுக்கு முன்னாடி நீ இல்லாத காலகட்டத்துல மயூவோட வாழ்க்கைல என்னென்ன நடந்துச்சினு தெரிஞ்சிக்கினும்...", என்றவன் மயூ ஆகாஷை சந்தித்தது முதல் இப்பொழுது அவள் இருக்கும் நிலை வரை ஒவ்வொன்றாக விளக்கி கூறினான்...

"அன்ட் லாஸ்டா... மயூ இப்ப உன்னோட தங்கச்சி மட்டும் இல்ல ஆகாஷோட வைப்... அத மட்டும் மறந்துறாத அப்புறம் அந்த ஹிட்லர் உன்னைப் புரட்டி எடுத்துடுவான்... மயூ மேல உயிரையே வெச்சிருக்கான்னா பார்த்துக்கோயேன்... என்னைக் கேட்டா மயூ இஸ் ஸோ லக்கி... ஆகாஷ் அவ வாழ்க்கைல வந்ததுக்கு...", கிண்டலாக தொடங்கியவன் உணர்ச்சியோடு முடிக்க...

ஆகாஷை உடனே சந்திக்க வேண்டுமென்ற ஆவல் விக்ரமிடம் துளிர்விட்டது...

(போ போ😂😂😂 அங்க தான் உன்னோட காதல் பிசாசும் இருக்கும்😏😏😏 இன்னும் ரெண்டு அடி கூட அடிக்கும்🤣🤣🤣 சமத்துப் பிள்ளையா வாங்கிக்கோ😬😬😬)

ஆகாஷின் இல்லத்தில் கனத்த அமைதி நிலவியது...

அவனின் முகமோ இறுகி போய் காட்சியளித்தது...

ஆகாஷை ஒட்டி அமர்ந்திருந்த மயூ அவன் தோளில் அழுத்த முகம் புதைத்து தேம்பிக் கொண்டிருந்தாள்...

அவர்களின் முன் சதீஸ், விக்ரம், நிம்மி, திகைத்துப் போய் நின்றிருந்தனர்...

"ஏய் அம்மூ.. என்னனு சொல்லிட்டு அழுடி... யாரு இவங்க... இவங்கள பார்த்து யான் அழற... உனக்குப் பிடிக்கலனா வெளிய போக சொல்லிடலாம்... கூல் பேபி...", அவனின் கை தன்னிச்சையாக அவளது கூந்தலை வருடிற்று...

அவனிடம் மயூவிற்கிருக்கும் அந்நியோனியம் விக்ரமிற்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்தது... தன் தங்கை தவறான ஒருவனைத் தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கவில்லை என மகிழ்ந்தான்...

ஆனால் தன்னையும் அவளை விட்டு விலக்கி வைக்கிறாளே என்று நொந்தான்...

"ஆகாஷ் அவன போக சொல்லுடா... எனக்கு நீ மட்டும் போதும்... நம்ம மித்து அக்கா, குட்டி பாப்பு, இவங்க மட்டும் போதும்டா... அண்ணன் அண்ணனு சொல்லி ரெண்டு பேரு என்னை ஏமாத்திட்டாங்கடா...
ஒருத்தன் எங்க போறன், எதுக்கு போறன், உயிரோட இருக்கானா செத்தானானு கூட தெரிஞ்சிக்க முடியாதபடி பண்ணிட்டு போயிட்டான்... இன்னொருத்தன் கூட இருந்தே முதுகுல குத்திட்டான்... மனசு ரொம்ப வலிக்குது ஆகாஷ்...",
ஆகாஷின் முகம் பார்த்து பேசியவளின் கண்களில் வெறுமை மட்டுமே பிரதிபலித்தது...

அந்த வெறுமை அவர்கள் பால் அவள் கொண்டிருந்த அன்பையும் அந்த அன்பு பொய்த்து போனதால் ஏற்பட்ட வலியையும் நன்றாய் உணர்த்தியது...

தன்னவளைக் காயப்படுத்தியவர்களை முறைத்துப் பார்த்தவ ஆகாஷ் சதீஸிடம் பார்வையாலே விளக்கம் கேட்க...

"ஆகாஷ் இது விக்ரம்... நான் தான் சொன்னன்ல... திடீர்னு காணாம போயிட்டான்னு... அவன் இவன் தான்...", என்று சதீஸ் சொல்லவும் விக்ரம் ஆகாஷின் பார்வை நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது...

'அவள தனியா விட்டுட்டு போவ உனக்கு எப்படி மனசு வந்துச்சி...', என்பதாய் ஆகாஷூம்...

'அவள நல்லபடியா பார்த்துட்டதுக்கு ரொம்ப தெங்க்ஸ்...', என்பதாய் விக்ரமும் பார்வையால் பேசிக் கொள்ள...

சதீஸ் மீண்டும் நடந்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னான்...

"ஆகாஷ் அவன நான் பார்க்க மாட்டன்... போவ சொல்லு...", என்றாள் பிடிவாதக் குரலில்...

மயூவின் குழந்தைதனம் உணர்ந்தவனாய் அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்த விக்ரம் அவள் கைகளைத் தன் கைகளில் அடக்கிக் கொண்டான்...

"மீரா... என்னைப் பார்த்துச் சொல்லு... நான் வேணா... உன்னோட விக்ரம் அண்ணா வேணானு சொல்லு... நான் போயிடுறன்...", என்றான் கரகரத்த குரலில்...

ஆகாஷின் தோளிலிருந்து நிமிர்ந்து விக்ரமின் முகத்தைப் பார்த்தாள்...

தன் அப்பாவின் முகத்தை நகல் எடுத்ததைப் போல் இருக்கும் தன் அண்ணன்...

சின்ன சின்ன சேட்டைகளைச் செய்து தன்னை அன்னையிடம் மாட்டிவிடும் அண்ணன்...

குழந்தையாய் சிணுங்கிடும் போது கொட்டி வைத்து வெறுப்பேற்றும் அண்ணன்...

தன் கண்ணில் கண்ணீர் சிந்தினால் அரணாய் இருந்து தன்னைக் காத்திடும் அண்ணன்...

அவனது முகத்தையே இமைக்காது நோக்கினாள்...

கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் சுரந்து கொண்டே இருந்தது...

சந்தோஷத்திலும் அழுகிறோம் துக்கத்திலும் அழுகிறோம்... சில சமயங்களில் எதற்காக அழுகிறோம் என்று தெரியாமல் அழுகிறோம்...

"ஒன்னும் வேணா போ...", மயூ முகத்தைத் திருப்பிக் கொள்ள...

விக்ரம் மிகவும் காயப்பட்டவனாய் அந்த இல்லத்தைவிட்டு வெளியேற போனான்...

"டேய் தடியா நில்லுடா... நான் போன்னு சொன்னா... நீ போயிடுவியா... ரெண்டு அடி குடுத்து அப்பிடிலாம் சொல்லாதடினு சொல்ல மாட்டியா...", மயூவின் குரல் அவனைத் தடுக்க திரும்பியனை கன்னத்திலேயே சரமாறியாக அடிக்க தொடங்கினாள் அவனின் அன்பு தங்கை...

"இனிமே இப்படிலாம் பண்ணுவியாடா... நீ எல்லாம் ஒரு அண்ணன்... பன்னி பன்னாட கொரங்கு பிசாசு என்னையும் கூட கூட்டிடு போக வேண்டிதான... ஏன்டா விட்டுடு போனா... அம்மாவும் அப்பாவும் கூட என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டாங்க...", மயூவின் குரல் அழுகையில் உடைந்தது...

"ஏய் குட்டிமா விடுடா... போனவங்க திரும்ப வர மாட்டாங்க... பட் அவங்கள அப்படி செஞ்சவங்களுக்கு நிச்சயம் தண்டன கிடைக்கும்... உன் அண்ணன் நான் வந்துட்டன்ல... கவலைப்படாதடா..." தங்கைக்கு ஆறுதல் மொழி கூறினாலும் அவன் நெஞ்சில் வஞ்சம் இன்னும் தீரவில்லை...

குணசீலனை பழி தீர்க்க வேண்டுமென்ற பகைமை மட்டும் விக்ரமின் நெஞ்சில் எறிமலையாய் இன்றும் குமுறிக் கொண்டுதான் இருக்கிறது...

"ஹலோ ஹலோ போஸ்... போதும் உங்க பாசமலர் நாடகம்... அவ என்னோட வைப் ஞாபகம் இருக்கட்டும்...", என்று விளையாட்டாய் கூறினாலும் விக்ரம் மயூவை நெருங்கியவன் மயூவை தன்னருகே இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டான்...

அவனது செயலில் அங்கிருந்த அனைவரும் கவலையை மறந்து சிரிக்க, வாசல் வரை வந்திருந்த ஓர் உருவம் மட்டும் வெளியிட மொழியின்றி அமைதியாய் நின்றது...

அந்த சந்தோஷ சூழலில் தன்னை இணைத்துக் கொள்ளும் ஆவல் எழுந்தாலும் விக்ரமோடு தன்னை இணைத்துவிட நேருமோ என எண்ணியது போல் வாசல் வரை வந்த மித்ரா அவனைத் தவிர்க்க தோட்டத்துப் பூக்களிடம் தஞ்சம் புகுந்தாள்...



தாய்மை மிளிரும்...💜💚💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 24
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN