தாயுமானவன் 25

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இதயத்தில் உதித்த காதலா இது...
இன்று தோன்றிய உரிமையா இது...
நீ பிறந்தது முதலே எந்தன் உடமையல்லவா...
பெண்ணாய் நீ பிறந்தது எந்தன் கரம் சேர்ந்திடவல்லவா...
உன் தாயுமானவன்...




தொலைந்து போன சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு கொண்டிருந்தது ஆகாஷ் இல்லத்தில்...

இத்தனை வருட இருளைப் போக்கும் வெளிச்சமாய் வந்தவள் மயூ என்பதாலும் அவள் மீது ஆகாஷிற்கு காதல் பொங்கிற்று...

(இல்லனா மட்டும் நீ அவள லவ் பண்ணவே மாட்டல🙄🙄🙄 ஹிட்லர் நீ அமுல் பேபியா மாறுனாலும் மாறுன ரொம்பதான் பண்ணிக்குற😩😩😩 போ😒😒😒)

மித்ரா அமைதியாக அந்த தோட்டத்துப் பூக்களையே வெறித்துக் கொண்டிருந்தாள்...

விக்ரமின் ஞாபகம் ஒன்றன் பின் ஒன்றாக அவள் நினைவலையில் வந்து போயின...

என்னதான் அவனைத் தன் மனதிலிருந்து தூக்கி ஏறிய நினைத்தாலும் விக்ரம் அவள் மனதிலிருந்து வெளியேறாமல் அவளை நித்தம் வதைக்கிறானே...

(அடியே லூசக்கா அவன லவ் பண்றத ஒழுங்கா ஒத்துக்கோ😩😩😩இல்லனா ஐஸ்கிரிம்ல உப்பு போட்டு குடுத்துடுவன்😂😂😂)

சிந்தனையில் மூழ்கியிருந்தவளை சத்தமின்றி அணைத்தது இரு கரம்...

திடுக்கிட்டு கத்த போனவளை
"ஏய் லூசு கத்தாத... உன்னைக் கட்டி பிடிக்குற தைரியம் உன் ஆத்துக்காரன தவர வேற யாருக்கு வரும்...", கிசுகிசுப்பாய் வந்த விக்ரமின் குரலில் மித்ராவினுள்ளே ஏதோ ஒன்று கசிந்துருகியது...

மோன நிலையில் இருந்தவளைக் கலக்க எண்ணாமல்... மென்மையாய் தன் பிடியை தளர்த்தியவன்...

"அப்புறம் எப்போ நம்ம மேரேஜ் பத்தி ஆகாஷ் மச்சான் கிட்ட சொல்ல போற டார்லிங்... நீ சொல்றியா இல்ல நான் சொல்லட்டுமா...", என்றான் கிண்டலாக...

(எங்க போய் சொல்லு பார்போம்🙄🙄🙄 ஹிட்லர் உன்ன அடிச்சி தோச்சி காய போட்றுவான்😜😜😜 மயூகிட்டயே உன்ன போகவிட மாட்றான்😏😏😏 இதுல நீ பண்ண விஷயம் தெரிஞ்சிச்சு கைம்மாதான் செல்லம்😝😝😝)

"என்னை மொதல்ல விடு... நான் இங்க இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்... உன்னைப் பார்க்க பிடிக்காமதான் நான் இங்க வந்தன்... இங்கேயும் வந்து ஏன் என்னைத் தொல்ல பண்ற..."
மித்ரா ஆயாசமாக வினவினாள்...

"ஆமாமா... இது பெரிய கோட்டை... இதுல உன்னைத் தேடி கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்... சரிதான் போடி... வீடு புள்ளா உன்னோட ஆகாஷோட போட்டோ இருக்கு... வீட்டுக்கு முன்னாடி உன்னோட கார் நிக்குது... அப்போ நீ எங்க இருப்ப உன்னோட செல்லம்ஸ் ப்லவர் கூட தான் இருப்ப.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாத... " விக்ரம் கேலியாக பதிலளித்தான்...

"என்னைப் பத்தி எனக்குத் தெரிஞ்சா போதும் வேற யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை... உனக்கு என்னைப் பத்தி ஒன்னும் தெரியாது..." மித்ரா வார்த்தைகள் கோபமாய் வெளிவந்தது...

"சரி இருந்துட்டு போட்டும்... நம்ம ரெண்டு பேரும் ஓடிப் போலாமா...", என்று அவளைப் பார்த்துக் கண்ணடிக்க...

மித்ரா அவனை முறைத்துப் பார்க்க...
"அம்மாடியோ... பார்வையாலோ ஏறிச்சிடுவ போல... நான் உன் புருஷன்மா...", என்றான் பாவமாக...

"இனிமேல என்கிட்ட இப்படி வந்து பேசிட்டு இருந்த என்னை உயிரோடவே பார்க்க முடியாது... கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்குறதுக்கு ஒரேடியா கொன்று...", ஆவேசமாய் அவன் சட்டையை பிடித்து உலுக்கியவள் அவன் மீதே சாய்ந்தழுதாள்...

மௌனமாய் குலுங்கியவளைக் கண்டு கோபப்படுவதா இல்லை வறுத்தப்படுவதா என அவனுக்குத் தெரியவில்லை...

ஆனால் மித்ராவின் செயலுக்குத் அவன் தான் முழுக் காரணம் என்று விக்ரம் உணர்ந்தே இருந்தான்...

காதலை முரட்டுத்தனமாய் வெளிப்படுத்தியது... அவள் சம்மதமின்றியே அவளைத் திருமண பந்தத்தில் சிக்க வைத்தது...

காதல் கொண்ட மனம் அவள் எப்போதும் தனக்கு மட்டுமே சொந்தமாய் இருக்க வேண்டுமென்று சுயநலமாய் யோசித்தது...

மித்ராவிற்கும் ஒரு மனம் உண்டு அதிலும் ஆசாபாசங்கள் உண்டு என்பதை சிந்திக்க மறந்தது தன் தவறுதானே....

சொல்லாம் காணாமல் போன தனக்காக அவள் காத்திருக்க வேண்டுமென்று எண்ணியதும் என் தவறுதான்...

தவறு அனைத்தையும் தன் மீதே வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அவளைக் காயப்படுத்தி விடுகிறேனே...

இது எந்த வகையில் நியாயம்...

அழுது ஓய்ந்தவளைத் தன்னிடமிருந்து விலக்கியவன் அவளது பளிங்கு முகத்தை இமைக்காது நோக்கினான்...

முகபூச்சின்றி எப்போதும் வசிகறமாய் அவனை சொக்க வைக்கும் அவளது முகம்... அழுது களைத்த நிலையிலும் அவனை வசிகறிக்கவே செய்தது...
என்னதான் அவனை பிடிக்கவில்லை காதலிக்கவில்லையென மித்ராவின் வாய் பொய் கூறினாலும்..

விக்ரம் மீதிருக்கும் காதலை அவளது விழிகள் வெளிச்சம் போட்டுக் காட்டவே செய்தது...

'என்மீது நீ கொண்டுள்ள காதலை நீயே உணரவில்லை பெண்ணே...', என்று நினைத்தவனாய்...

"மித்ரா என்னை நல்லா பாரு... நான் சொல்றத கேளு... நீ என்னை லவ் பண்ற... பட் உனக்கே அது தெரியல... உன் மனசுல உள்ள கோபம் காதலை வெளிப்படுத்த விடாது... அதுக்கு முழுக் காரணமும் நான் தான்னு தெரியுது... என்னோட அவசர குணமும் முரட்டுத்தனமும் தான் உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சி வெச்சிருக்கு... ஒன்ன மட்டும் நல்லா புரிஞ்சிக்கோ மித்ரா... உன் மேல நான் வெச்சிருக்குற காதல் நிஜம்... இந்த ஜென்மத்துல நீ மட்டும் தான் என்னோட வைப் அதுவும் நிஜம்...", என்றவன் அவளை மென்மையாய் அணைத்து நெற்றியில் இதழ் பதித்து அவளை விட்டு விலகி சென்றான்...

அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றவள் மனதில் என்னென்று தெரியாத ஒரு நிம்மதி...

இவர்கள் வாழ்வும் மலருமா இல்லை காதல் கருகுமா என்பது விதியின் வழியில்???


காலம் அதன் போக்கில் நகர்ந்து சென்றது...

ஆகாஷிற்கு மயூவின் மீதிருந்த காதல் நாளுக்கு நாள் அதிகரித்தது...

மயூவின் உலகமோ ஆகாஷை மட்டுமே சுற்றியது...

விக்ரம் தன் சிறு சிறு செயல்களில் மித்ரா சிவக்க வைத்து அவளைத் தன்னவள் என்று உறுதி செய்து கொண்டே இருந்தான்...

மித்ராவோ விக்ரமை விட்டு விலகுகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு கணமும் அவனுக்குத் தன் காதல் வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டிருந்தாள்...

சதீஸ் தன் குடும்பம் மீண்டும் இணைந்துவிட்ட சந்தோஷத்தில் சுற்றி திரிந்தான்...

நிம்மி புதிய அண்ணன் தங்கையென கிடைத்த உறவுகளிடம் தன் அன்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தாள்...

அன்றைய காலைப் பொழுது சத்தமின்றி விடிந்தது...

ஆகாஷின் இல்லத்தில் நடக்கும் கலோபரத்தை இரசிக்க சூரியனும் கூட கண்சிமிட்டாது காத்திருந்தது...

"ஏய் மயூ செல்லமில்ல ஒரு இடத்துல நில்லுடி... உன் பின்னாடி ஓடி ஓடியே நான் பாதியா இளச்சிடுவன் போல.. அத்தான் மேல கருணை காட்டு செல்லம்...", ஆகாஷ் மயூவைப் பிடிக்க அவள் பின்னே ஓடிக்கொண்டிருக்க...

மித்ரா இது எனக்கு பழக்கமான ஒன்றுதானே எனும் பாவத்தோடு தன் வாட்ஸாப்பை பார்த்துக் கொண்டிருந்தாள்...

"டேய் ஆகாஷ் எனக்குதான் வேணாம்னு சொல்றன்ல.. பின்ன யான் கம்பல் பண்ற... நான் பாவம் தான விட்றுடா...", மயூவின் கெஞ்சுதல் எதும் அவனை அசைத்துப் பார்க்காமல் போக கையில் சிக்கியவளை அலுங்காமல் குலுங்காமல் நாற்காலியில் அமர்த்தியவன்... மயூவின் கையில் பால் டம்ளரைத் திணித்தான்...

பாலைக் கண்டதும் மயூவின் முகம் அஷ்ட கோணலாய் போக அவளின் முகத்தைக் கண்டதும் பீரிட்டு வந்த சிரிப்பைத் தன் உதட்டினுள் அடக்கியவன் ... 'இப்ப நீ குடிச்சிட்டு அடுத்த வேளைய பாரு', என்பது போல் தோரணையாய் நின்றான்...

ஆகாஷின் முகத்தையே பாவமாய் பார்த்தவள் " நான் வேணா நாளைக்கு சமத்து பிள்ளையா குடிச்சிறன் ஆகாஷ்... இன்னிக்கு வேணாமே ப்லீஸ்..",, என்றாள் உள்ளே சென்ற குரலில்...

(ஹீ😂 ஹீ😂 ஹீ😂 மயூ டார்லிங் பால் குடிக்கறதுக்கே இந்த பாடா😝😝😝பாவம் ஹிட்லர் ஜீ🤣🤣🤣 அவன இப்டி காமெடி பீஸா மாத்திட்டியே🙄🙄🙄 உன் பின்னாடி சுத்தி சுத்தியே அவன் தலை சுத்திப் போய் லூசா ஆக போறான் போ😋😋😋)

'ஓ அப்படியா',
என்று ஒற்று புருவத்தைத் தூக்கியவன்... "சரி சீக்கிரம் குடி மயூ...", என்றான் சற்றும் இளகாதவனாக...

"ம்ம்ம் இராட்சஷன்... ஹிட்லர்... பிசாசு... எரும... இப்படி படுத்தி எடுக்குறானே... போயும் போயும் பாலையா குடிக்க வைப்பான்... அதே பால்ல கொஞ்சோன்டு மைலோ சேர்த்துக் குடுத்தாலும் செம்மையா இருக்கும்...", பெருமூச்சி விட்டவளாய் பால் டம்ளரையே வெறித்துக் கொண்டிருந்தவளின் தலையில் தட்டியவன்.. "சீக்கிரம் குடிடி...." என்றான் சிரிப்புன்...

"ஹம்ம்...", என்றவள் குடிப்பதாய் பாவணை செய்தாள்...

ஆகாஷ் அவள் எங்கே டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடிவிடுவாளோ என அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்...

திடீரென்று முகத்தில் ஆச்சிரியம் காட்டியவள் "டேய் அண்ணா நீ எப்போ வந்த...", என்றாள் குதுகல குரலில்..

'என்ன விக்ரம் வந்துருக்கானா...', யோசனையோடு திரும்பியவனை வெற்று வாசல் வரவேற்க... மயூ தன்னை முட்டாளாக்கியதை எண்ணி நொந்தவன் மயூவைப் பார்க்க அவள் இருந்த இடம் வெறுமையாய் இருந்தது...

'இவள வெச்சிட்டு... சபா முடில சாமி... ', பெருமூச்சொன்றை வெளியிட்டவன்...

(இதுக்கே இப்டினா நீ பார்க்க வேண்டியது எவளோ இருக்கு😏😏😏 மயூவிடம் நீ சிக்கி கொண்டு நொந்து வெந்து நூடல்ஸ் ஆகி😂😂😂அப்புறம் கல்யாணம் பிரபிரஸ்து ஆக என்னோட வாழ்த்துகள்😂😂😂)

"அக்கா மயூ எங்க..."
என்ற கேள்விக்கு முறைப்பைப் பரிசாக கொடுத்தவள்...

"யான்டா உனக்கும் அவளுக்கும் வேற வேலையே இல்லையா... எப்ப பாரு அவகிட்ட அத செய் இத செய்யாதனு படுத்தி எடுக்குற... அப்புறம் அவ ஓடி போவாம என்ன பண்ணுவா???" மித்ராவின் முறைப்பிற்கு தன் மொத்த பற்கள் தெரிய இளித்தவறே

"ஈஈஈஈஈஈஈ... இல்லை கா... மயூ ரொம்ப வீக்கா இருக்கானு ஜானு டார்லிங் சொன்னாங்க அதான்... " ஆகாஷ் தன் பக்க நியாயத்தை முன் வைக்க

"அதுக்குன்னு இப்படியா... அவள அவ போக்குல விட்றுடா..." மித்ரா

"ம்ப்ச்... போ கா... உன்கிட்ட சொன்னன் பாரு.. நீ அவளுக்கு தான் சப்போட் பண்ணுவ... வரவர உனக்கு நான் தம்பியா... இல்லை அவ உனக்கு தங்கச்சியானு தெரியல..." என்றவன் மயூ தேடிக் கொண்டு செல்ல அவள் எப்போதும் விரும்பி தஞ்சமடையும் தோட்டத்தில் ஒளிந்து கொண்டிருந்தாள்...

"ஹீ... ஹீ... ஹீ... இங்கதான் இருக்கியா செல்லம் நீ... ", அவளைக் கண்டு கொண்டதும் ஆகாஷின் மனதிலிருந்த குறுப்பத்தனம் வெளிப்பட...

"மயூ... மயூ... எங்க இருக்க நீ... சீக்கிரம் வந்தா... ஐஸ் கிரிம் அன்ட் டெய்ரி மில்க் குடுப்பன்...", என்றான் ஆகாஷ்...

"வாவ் ஐஸ்கிரிம்டெய்ரிமில்க்...
மயூ நோ போய் மாட்டிக்க கூடாது.. அவன் கேடி பொய்
சொல்லுவான்... ",
மயூ மனதோடு வாதிட்டுக் கொண்டிருக்க...

சத்தமின்றி அவளை நெருங்கினான் ஆகாஷ்...

பூனை நடையோடு அவளை நெருங்கியவன் நிதானமாக அவளை இரசிக்க தொடங்கினான்...

தாய்மை அழகு அவள் முகத்திற்குத் தனி சோபையை தந்திருந்தது...

சில பல நிமிடங்கள் கடந்திருந்தும் ஆகாஷிடமிருந்து எந்தவொரு அசைவும் இல்லாமல் போக மெல்ல திரும்பியவள் ஆகாஷ் நின்றிருந்த விதம் கண்டு சொக்கினாள்..

மகிழம் மரத்தில் சாய்ந்தபடி ஒரு காலை மரத்தில் பின்புறமாய் தூக்கி வைத்திருந்தவன் மற்றொரு காலை நிலத்தில் ஊன்றி கைகளைக் கட்டியபடி மயூவை இரசித்துக் கொண்டிருந்தான்...



தாய்மை மிளிரும்...💜💚💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 25
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN