துளி 14

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடைமழை தந்து
என்னை மிதக்கவிட்டாய்
சிலுவைகள் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து
என்னை நிமிர வைத்தாய்....


மறுநாள் காலை கண்விழித்த ஸ்ரவ்யா சுற்றும் முற்றும் பார்க்க அவளருகில் திவ்யா படுத்திருந்தாள்.... அப்போது நேற்றிரவு நடந்த அனைத்தும் நினைவில் வர எழுந்தமர்ந்தவள் தன்னுருகில் துயில் கொண்டிருந்த திவ்யாவை எழுப்பினாள்..
உறக்கம் கலைந்தெழுந்த திவ்யா
“என்னடி???” என்று கேட்க
“நாம இப்போ எங்க இருக்கோம்... எப்படி இங்க வந்தோம்...” என்று ஸ்ரவ்யா கேட்க இரவு நடந்ததனைத்தையும் கூறினாள் திவ்யா...
“ஆனால் தேவ்விற்கு எப்படி எனக்கு குணமான விஷயம் தெரியும்??”
“அவரு சொல்லி தான்டி எனக்கே தெரியும்...”
“என்ன திவி சொல்லுற??”
“ஆமாடி... நேற்று நைட்டு நாம ரூமிற்கு வந்ததும் அண்ணா எனக்கு கால் பண்ணாரு... உன்கிட்ட ஏதோ மாற்றம் தெரியிது... உன்னை கண்காணிக்க சொன்னாரு... அவரு சொன்னபடியே நீயும் நடுராத்திரி ரூமில இருந்து வந்து இங்க உட்கார்ந்துட்ட... உடனே அண்ணாவுக்கு கால் பண்ணிட்டு உன்னை தேடி வந்தேன்.....”
“அப்போ சொல்லித்தான் உனக்கு தெரியுமா??”
“ஆமா... இதுல என்ன டவுட்டு??”
“அப்போ ஏதுக்குடி... நான் கேட்டப்போ ஏதோ டிடெக்டிவ் ஏஜன்ட் கேஸை கண்டுபிடித்த ரேன்ஜிற்கு கதையொன்னு சொன்ன???”
“இல்லைனா நீ நம்பமாட்டியே... அதான்...”
“போடி.... சரி வா போகலாம்... அங்க நம்மை தேடிவாங்க...”என்று கூறி அங்கிருந்து கிளம்பினர்...
இருவரும் மற்றைய பெண்கள் இருந்த அறைக்கு வர அங்கு நிம்மியும் கபிலனின் மனைவியான நித்யாவும் பதற்றத்துடன் திவ்யாவை விசாரிக்க அவளும் ஸ்ரவாயாவிற்கு குணமாகிவிட்டதை கூற இருவரும் அவளை கட்டியணைத்து தமா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்...
நித்யா உடனேயே கபிலனுக்கு அழைத்து விஷயத்தை கூறி அனைவரையும் கார்டன் ஏரியாவுக்கு வரச்சொன்னாள்..
திவ்யாவும் ஸ்ரவ்யாவும் உடைமாற்றிவிட்டு வர அவர்களை அழைத்துக்கொண்டு நித்யாவும் நிம்மியும் கார்டன் ஏரியாவிற்கு செல்ல ஆண்கள் அனைவரும் அங்கு நின்றிருந்தனர்...
ஸ்ரவ்யா அங்கு வந்ததும் ஆளாளுக்கு அவள் குணமடைந்ததை எண்ணி மகிழ தேவ்வும் அஜயும் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாது நின்றிருந்தனர்...
ஸ்ரவ்யாவின் கண்கள் தேவ்வை நோக்கியபடியிருக்க அவனோ இவளை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை...
அப்போது அபி தேவ்விடம்
“மச்சான்... என்னடா அமைதியாக இருக்க... ??சூட்டி குணமாகி பழையபடி வந்துட்டாடா.... அவ கூட பேசுடா...” என்று கூற அவனருகே வந்த நிம்மி அவன் கையை கிள்ளியபடியே அவன் காதருகே
“டேய் மக்கு.. இப்படி சுத்தி எல்லாரும் இருந்தா அவன் எப்படி பேசுவான்??? முதல்ல எல்லாரையும் இங்கிருந்து கிளப்பு...” என்று கூற மெதுவாக தன் கையை விடுவித்துக்கொண்டவன்
“இதை சொல்லுறதுக்கு எதுக்குடி கிள்ளி என் கையை டேமேஜ் பண்ணுற??? இப்போ என்ன எல்லாரையும் பேக் பண்ணனும்... அவ்வளவு தானே...” என்றவன் அனைவரையும் அங்கிருந்து கிளப்பிச்சென்றான்..
அனைவரும் அங்கிருந்து சென்றிட தேவ்வும் ஸ்ரவ்யாவும் மட்டுமே அங்கு தனித்து விடப்பட்டனர்.....
ஸ்ரவ்யா ஏதோ பேச முயற்சிக்க தேவ்வோ அங்கிருந்து நகர்ந்தான்...
அவனை அழைத்தபடியே அவன் பின்னாலேயே ஓடினாள் ஸ்ரவ்யா...
தேவ்வின் நடை அவன் தங்கியிருந்த அறையில் முடிவடைந்தது...
தேவ்வை தொடர்ந்து அறைக்குள் வந்த ஸ்ரவ்யா அறைக்கதவை அடைத்துவிட்டு
“தேவ்... நான் சொல்லுறதை....”
“என்ன சொல்லப்போற??? நீ இதெல்லாம் எனக்காக தான் செய்தேன்னு சொல்லப்போறியா?? போதும் சூட்டி....ஏற்கனவே உன்னால ரொம்ப நொந்து போயிருக்கேன்... மறுபடியும் என்னை கஷ்டப்படுத்தாத..”
“அப்பு ப்ளீஸ் அப்பு.... நான் சொல்லுறதல ஒரு நிமிஷம் கேளு..”
“எதை கேட்க சொல்லுற சூட்டி..கேவலம் சொத்துக்காக உன் உயிரை பணயம்வைத்ததற்கான நியாயத்தை சொல்லப்போறியா??? உனக்கு உன்னோட உயிரை விட அந்த சொத்து அவ்வளவு முக்கியமா??? உன்னோட கிறுக்குத்தனமான முடிவால கஷ்டப்பட்டது நீ தான்.. இது ஏன் புரியமாட்டேங்குது. ??”
“அப்பு...உனக்கு விஷயம் எவ்வளவு தூரத்துக்கு தெரியும்னு எனக்கு தெரியலை. ப்ளீஸ்.. ஒருதடவை நான் சொல்லுறதை முழுதாக கேட்டுட்டு அதற்கு பிறகு நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்...”
“எனக்கு எதுவும் தெரியவேண்டாம்....”
“ப்ளீஸ் அப்பு.. ஒரு தடவை நான் சொல்லுறதை கேளு..”என்று காலில் விழாத குறையாக கெஞ்சி தேவ்வின் சம்மதத்தை பெற்றுக்கொண்ட ஸ்ரவ்யா ஆதிமுதல் நடந்த அனைத்தையும் கூறினாள் ஸ்ரவ்யா...
அனைத்தையும் ஸ்ரவ்யா கூறி முடிக்க அப்போது தேவ்
“அப்போ நீ தான் குட்டிமாவா??” என்று தேவ் கேட்க ஸ்ரவ்யாவோ தனக்கு பரிச்சயமான அந்த பெயரில் குழம்பியவள்
“அப்பு உனக்கு எப்படி அந்த பெயர்????”
“சூட்டி... அத்தை அப்படி தானே உன்னை கூப்பிடுவாங்க...??”
“ஆமா அப்பு.... ஆனா உனக்கு எப்படி???”
“அத்தையும் தாத்தாவும் எங்களை பார்க்க நுவரேலியா வந்திருந்தாங்க....”
“என்ன சொல்லுற அப்பு...???”
“ஆமா சூட்டி... அம்மாவை தேடி தாத்தாவும் அத்தையும் வந்திருந்தாங்க.... வந்தவங்க அம்மாவுக்கு சேர வேண்டிய சொத்து பத்திரங்கனு சில பேப்பர்ஸை அம்மாகிட்ட கொடுக்க அம்மா வாங்க மறுத்துட்டாங்க... அப்பாவுக்கும் இதில் உடன்பாடில்லாத காரணத்தால அம்மாவை வற்புறுத்தவில்லை.. ஆனால் தாத்தாவோ தொடர்ந்து வற்புறுத்த அம்மாவோ மறுக்க வழியில்லாமல் என்னோட பெயருக்கு எழுத சொல்லிட்டாங்க..... நான் மைனர் அப்படீங்கிறதால இப்போதைக்கு எதுவும் பண்ணமுடியாது... எனக்கு பதினெட்டு வயதானதும் சொத்து என்னோட பெயருக்கு மாறிடும்னு சொன்னாங்க.. அப்போதைக்கு இதுவே போதும்னு நாங்க அப்பவே இந்த விஷயத்தை மறந்துட்டோம்.... ஆனா அந்த சொத்துக்காக மாமா மோசமாக நடந்துப்பாருனு நான் நினைக்கலை....”
“அப்பு... அந்த சொத்து எனக்குரியதுனா நான் நிச்சயம் அதை கைகழுவி விட்டிருப்பேன்.... ஆனா அதில் பாதி உனக்கு சேர வேண்டியது.... அதனால தான்.... இத்தனையும் செய்தேன்... அதோடு தாத்தாவுக்கு அந்த சொத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தனும் என்று ஆசை.. ஆனால் என்னோட அப்பா அதை பல தவறான தொழில்களுக்கான மூலதனமாக பயன்படுத்தி அதை பெருக்கிக்கிட்டே போறாரு.. அதை நிறுத்தனும்னு தான் நான் இவ்வளவும் செய்தேன்....”
“உன்னோட நிலைமை எனக்கு புரியிது சூட்டி... ஆனால் இதை நீ என்கிட்ட சொல்லியிருக்கலாமே... இந்த பிரச்சினையை இத்தனை தூரம் கொண்டு வராமல் முடிச்சிருக்கலாமே...”
“அப்பு... எங்க இந்த விஷயம் வெளியே தெரிந்தால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோனு பயந்து தான் நான் உன்கிட்ட இருந்து இதை மறைத்தேன்....”
“நீ சொல்லுறது எல்லாம் சரி தான் சூட்டி... ஆனால் நீ உன்னுடைய வாழ்க்கையை இந்த சொத்து விஷயத்திற்காக பணயம் வைத்திருக்க கூடாது... நீ பண்ண காரியத்தால உன்னுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்திருந்தா என் நிலைமையை யோசித்து பார்த்தியா??” என்று தேவ் கேட்க அதுவரை அவன் ஒதுக்கத்தை எண்ணி மனதினுள் வருந்தியபடியிருந்தவள் ஓடிச்சென்று அவனை இறுக அணைத்துக்கொண்டாள்...
தேவ்வும் அவளை இறுக அணைத்தப்படி
“இந்த அணைப்புக்காக எத்தனை வருஷமாக ஏங்கினேன் தெரியுமா??? உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டி....” என்று தேவ் கூற அவன் முகம் முத்தமாரி பொழிந்தவள்
“நீ இல்லைனு சாகமுடிவெடுத்த நிமிஷம் கூட உன்னை ஒரு தடவை இறுக்கி அணைக்கனும்னு ஆசைப்பட்டேன் அப்பு.... நீ எனக்கு அவ்வளவு முக்கியம்...எனக்கு நினைவு திரும்பியதும் உன்னை தான் முதலில் பார்த்தேன்... அப்போ மறுபடியும் நீ என்கிட்ட வந்துட்டனு நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா???”
“அப்போ ஏன் என்னை போகச்சொன்ன??”
“அது தான் நான் பண்ண பெரிய தப்பு.... அந்த இடத்தில் பயத்தை உதறித்தள்ளிட்டு உண்மையை சொல்லியிருந்தா நாம் வாழ்க்கை இப்படி ஆளுக்கொரு திசையாய் சிதறிப்போயிருக்காது...” என்று ஸ்ரவ்யா அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் சிந்த அவளை தன்னிடமிருந்து விலக்கிய தேவ் அவள் கண்ணீரை துடைத்தபடி
“நீ அழுததெல்லாம் போதும்... இந்த நொடியில இருந்து உன் அழுகைக்கு என்டு கார்ட் போட்டுரு சூட்டி...” என்றவன் அவள் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு
“சரி வா போகலாம்....”என்று தேவ் கூற ஸ்ரவ்யாவோ அவன் கரம் பற்றி தடுத்தவள்
“தேவ் உன்கிட்ட ஒன்று சொல்லனும்...”
“சொல்லு சூட்டி...”
“நீ கடைசிவரைக்கும் என்னை உன்கூடவே வைத்திருப்பியா??”
“சூட்டி நீ என்ன கேட்கிறனு எனக்கு சரியாக புரியவில்லை...”
“அப்பு... உனக்கு மேரேஜ் ஆனாலும் என்னை உன்கூடவே இருக்கவிடுவியா??”
“ஸ்ரவ்யா.... நீ என்ன சொல்லுற??”
“கடைசிவரைக்கு எனக்கு உன்கூடவே இருக்கனும் தேவ்... உன்னோட நிழலிலேயே வாழனும்... நீ திருமணமாகி மனைவி குழந்தைனு சந்தோஷமாக வாழ்வதை நான் பார்க்கனும் தேவ்....”
“ஸ்ரவ்யா உன்னோட பேச்சுக்கான அர்த்தம் எனக்கு புரியலை...”
“நான் உனக்கு வேண்டாம் தேவ்.. நான் உனக்கு தகுதியானவள் இல்லை... என்னோட வாழ்க்கையை அந்த பரத் முடித்துவிட்டான்.... எனக்கான வாழ்க்கை முடிந்துவிட்டது... ஆனா இந்த பாழாய் போன மனசு உன்கூடவே இருக்க ஆசைப்படுது..... எனக்கு துணையாக நீ வேண்டும் தேவ்... ஆனா உனக்கான துணை நான் இல்லை தேவ்...”
“ஓ....அப்போ நான் வேறொரு பொண்ணை திருமணம் பண்ணிட்டு உன்னை என்னோட கீப்பாக வச்சிக்க சொல்லுற அதானே....” என்று தேவ் நக்கலாக கேட்க அவன் வார்த்தையில் துடித்தவளுக்கு அப்போது தான் அவளது வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது...
கண்களில் கண்ணீருடன் அப்பு என்றழைத்தவளை
“நீ அதுக்கு தானே ஆசைப்பட்ட??? நீ மனதில் எதையோ வைத்துக்கொண்டு தான் இப்படி பேசுறனு புரியிது... ப்ளீஸ்... தயவு செய்து உன் மனசுல என்ன ஓடுதுனு சொல்லு... இதுவரைக்கும் எல்லாவற்றையும் மறைத்து தான் நமக்குள்ள இத்தனை குழப்பங்களும் பிரச்சினைகளும்.... இனியாவது நாம ஆசைப்பட்டப்படி சந்தோஷமாக வாழனும் சூட்டி.... சொல்லு.... எதனால் என்னை விட்டு விலகனும்னு நினைக்கிற??”
“அப்பு... நான் உனக்கு தகுதியான இல்லை அப்பு...”
“நீ தகுதினு எதை சொல்லுற??? நான் ஒரு உண்மையை சொல்லட்டா...?? நான் தான் உன்னோட காதலுக்கு தகுதியானவன் இல்லை... உன்னோட பிரச்சினையை புரிந்துக்கொள்ளாமல் நீ ஒரு வார்த்தை சொல்லிட்டனு உன்னை பிரிந்து சென்ற நான் தான் உனக்கு தகுதியானவன் இல்லை....” என்று தேவ் கூற அவன் வாயினை தன் கரத்தினால் மூடியவள்
“இல்ல அப்பு.... அப்படி சொல்லாத.... நான் தான் தப்பு பண்ணேன்... உன்னை காப்பாற்றனும்னு நான் தான் நீ என்னை விட்டு பிரிந்து போக வழிசெய்தேன்.... நீ எல்லா விதத்திலயும் தகுதியானவன்டா... உன்னை மாதிரி ஒருத்தன் வாழ்க்கைத்துணையாக கிடைக்க அதிஷ்டம் பண்ணியிருக்கனும்டா.... ஆனால் எனக்கு அந்த அதிஷ்டம் இல்லை அப்பு...”
“சூட்டி... நீ தகுதினு எதல சொல்லுறனு எனக்கு புரியலை.. என்னை பொறுத்தவரை உன்னை விட வேறு யாரும் என்னோட காதலுக்கு தகுதியானவங்க இல்லை.... நீ தகுதினு எதை சொல்லுற??” என்று தேவ் கேட்க அவனிடமிருந்து விலகியவள் சற்று தூரம் சென்று மறுபுறம் திரும்பிநின்றவள்
“ஐயம் நாட் வர்ஜின் அப்பு... அந்த தகுதியை இழந்துட்டேன் அப்பு...”
“ஓ..... அது தான் காதலுக்கான தகுதியா??”
“ஒரு திருமணத்திற்கான அடிப்படை தகுதி அது... ஆனால் அது கூட என்கிட்ட இல்லை... நான் உனக்கு வேணாம் அப்பு..”
“சரி.. நான் ஒன்று கேட்கிறேன்... நீ அதுக்கு மட்டும் பதில் சொல்லு... நீ கற்பை இழந்துட்டேன்னு சொன்னியே... எந்த கற்பை சொல்லுறனு தெரிந்துக்கொள்ளலாமா??” என்று தேவ் கேட்க அவன் கேள்வியில் விதிர்விதிர்த்து திரும்பியவள்
“அப்பு...”
“நீ கற்புனு சொன்னியே... அதில் இரண்டு வகையான கற்பு இருக்கு... ஒன்னு உடல்ரீதியான கற்பு... மற்றது மனரீதியான கற்பு... என்னை பொறுத்தவரை மனரீதியான கற்பு தான் திருமண வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம்... அது உன்கிட்ட இன்னமும் பத்திரமாக தான் இருக்கு....”
“அப்பு நான் உடல்ரீதியாக இன்னொருவனால் அனுபவிக்கபட்டவள்...”
“அது உன்னுடைய விருப்பம் இல்லாமல் நடந்த ஒரு விபத்து.... அதில் உன் கற்பு கலங்கப்பட்டதுனு நீ சொல்லமுடியாது... நான் அடித்து சொல்லுவேன்... நீ அந்த நொடிகூட என்னை தான் நினைச்சிருப்ப....” என்று தேவ் கூற ஸ்ரவ்யாவும் அது உண்மை என்று உணர்ந்தாள்..
“ஆனால் அப்பு..”
“ஸ்ரவ்யா.. கற்பு என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம்... நீ அதை சரியாக புரிந்துக்கொள்.. இல்லை.... உடல் சம்பந்தப்பட்டதுனு நீ நினைத்தால் வா.. இப்போவே டாக்டர்கிட்ட போகலாம்... இப்போ வர்ஜினிட்டி ரிக்கவரி ஆப்ரேஷன் இருக்கு . அதை பண்ணிக்கிட்டா நீ உடல் ரீதியாகவும் கன்னி தான்...”
“அப்பு..... ப்ளீஸ்...”
“சூட்டி.. முதலில் நீ ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்.... நடந்த விஷயங்கள் எதுவுமே உன்னுடைய சம்மதத்தோடு நடந்தவையல்ல... இதில் உன்னை நீயே குற்றாவாளியாக உருவகிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை... முதலில் உன்னை நீயே தப்பாக நினைக்கிறதை நிறுத்து.... அது தான் உனக்குள் இந்தமாதிரியான எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது.. உன்மேல எந்த தப்பும் இல்லைனு உன் மனசுக்கு எப்ப புரியிதோ அப்போ என்கூட சேர்ந்து வாழ்வதில் உனக்கு எந்தவித சங்கடமும் இருக்காது... நல்லா யோசித்து முடிவெடு சூட்டி.... ஆனால் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள். எந்தகாலத்திலயும் நான் உன்னை விட்டு இன்னொரு பெண்ணை மணப்பேன்னு மட்டும் நினைத்துவிடாதே... அது இந்த ஜென்மத்தில் நடக்காது..” என்று தேவ் தன் மனதை முழுதாய் வெளிப்படுத்திட ஸ்ரவ்யாவோ மேலும் குழம்பித்தவித்தாள்...
அவள் மனம் தேவ்வை தான் விரும்புகிறது.... ஆனால் அவனுடன் சேர்ந்து வாழ துணிவில்லை... துணிவில்லை என்பதை விட ஏதோ துரோகம் இழைக்கிறோம் என்ற உணர்வே மேலோங்கியிருந்தது. .... ஆனால் இதில் துரோகம் என்ற வார்த்தை இடமில்லை என்ற உண்மை அவளிற்கு புரியவில்லை....
இதற்கு மேல் ஸ்ரவ்யாவை யோசிக்கவிட்டால் தன்னைத்தானே குழப்பிக்கொள்வாள் என்றுணர்ந்த தேவ் அவளருகே வந்து அவள் கரங்களை பற்றியவன்
“சூட்டி.... உன்னோட நிலைமை எனக்கு புரிகிறது... இப்போதைக்கு இந்த விஷயத்தை பற்றி யோசிக்காத..... இதை பற்றி வீட்டுக்கு போனதும் பேசிக்கலாம்... நம்மை எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருப்பாங்க.... முகத்தை கழுவிட்டு வா... போகலாம்...”என்று கூற அதை ஏற்றவள் முகம் கழுவி வந்து தேவ்வோடு அறையிலிருந்து வெளியேறினாள்...
வெளியே வந்தவன் அபிக்கு அழைக்க அவனோ புட் கோட்டிற்கு வரச்சொல்ல தேவ் ஸ்ரவ்யாவை அழைத்துக்கொண்டு அங்கு சென்றான்...
அங்கு அனைவரும் உணவோடு ஒரு நீண்ட மேசையில் அமர்ந்திருக்க தேவ்வையும் ஸ்ரவ்யாவையும் உணவை எடுத்துக்கொண்டு வரச்சொல்ல அவர்களும் ஆளுக்கொரு தட்டுடன் அங்கு வெறுமையாயிருந்த இரண்டு இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர்...அனைவரும் உணவுண்ணத்தொடங்கினர்..
கதை பேசியபடியே உணவுண்டு முடித்தவர்களிடம் ஹோட்டல் அதிகாரிகள் இசை நிகழ்ச்சியிருப்பதாய் கூற அனைவரும் அங்கு சென்றனர்....
அன்று ஞாயிற்றுக்கிழமையென்பதால் பலர் விடுமுறையை கழிக்க தத்தமது குடும்பங்களோடு அங்கு வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த விடுதியில் குடும்பங்களாக பங்கேற்கும் நிகழ்ச்சிகள் செய்யப்பட்டிருக்கும்...
அன்றும் அவ்வாறு போட்டிகள் ஒழுங்குப்படுத்தியிருக்க ஹோட்டலின் பின்புறமாக இருந்த ப்ளே ஏரியாவில் அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.... ஒரு புறம் போட்டிகளுக்கான ஏற்பாடுகளும் மறுபுறம் அவர்களை ஊக்குவிப்பதற்காக இசை நிகழ்ச்சிகளும் நடைந்தபடியிருந்தது...
தேவ்வும் அவன் குழுவினரும் அங்கு வர அப்போது தம்பதியினர்களுக்கான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது... அதில் திருமணமான தம்பதியினர் மற்றும் காதல் ஜோடிகள் என்று அனைவரும் பங்கேற்க அழைக்கப்பட்டனர்....
அபி கபிலனை பங்கெடுக்கச்சொல்ல அவனோ தேவ்வையும் அபியையும் வர சொன்னான்... அபி நிம்மியோடும், கபிலன் தன் மனையாளான நித்யாவோடும் போட்டியில் பங்கெடுக்கத்தயாராக தேவ்வோ ஸ்ரவ்யாவை பார்க்க அவளும் அவன் ஜோடியாக போட்டியில் பங்கெடுக்க முன்வந்தார்... அதை கண்ட தேவ்விற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஊற்றெடுத்த போதும் அதை அவன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை...
அஜய், திவ்யா, முபாரக்,அக்ஷய் அனைவரும் அமர்ந்து போட்டியை பார்க்கத்தொடங்கினர்..
தேவ் ஜோடியோடு மொத்தம் எட்டு ஜோடிகள் பங்கெடுத்தனர்.. அதில் நான்கு திருமணமான ஜோடிகளும் நான்கு காதல் ஜோடிகளும் இருந்தனர்..
அப்போது போட்டி நடத்துனர்
“வார இறுதி விடுமுறையை தம் குடும்பத்தாரோடு இங்கு கழித்து மகிழ வந்திருக்கும் அனைவருக்கும் பென்தோட்ட விடுதியின் சார்பாக எனது வணக்கங்கள்... வழமை போல் இல்லாமல் இந்தமுறை அதிகளவான காதலர்களும் புதிதாக திருமணமான தம்பதியினரும் நம் விடுதிக்கு வந்திருப்பதால் இம்முறை அவர்களுக்காகவென்றே போட்டிகளை உருவாக்கியிருக்கிறோம்.... கொஞ்சம் போட்டி...நிறைய காதல் தான் இன்றைய நாளின் கருப்பொருள்... இங்கு சில சிங்கிள் பசங்க டென்ஷன் ஆகிறது புரியிது... அவங்களை சந்தோஷப்படுத்துற மாதிரி நடக்க போற போட்டிகளில் இந்த ஜோடிகளுக்கிடையில் கொழுத்திப்போடுற வேலையையும் சிறப்பாக செய்வோம் என்ற உறுதி மொழியோடு..... இப்போ போட்டியை ஆரம்பிக்கலாம்...” என்று அறிவிப்பாளர் மைக்கில் கூற பார்வையாளர்களாக இருந்தவர்கள் கைதட்டி விசலடித்து தம் ஆதரவை தெரிவித்தனர்...
“சரி இப்போ போட்டி வருவோம்.... முதல் போட்டி.... இது போட்டினு சொல்வதற்கு பதில் ஒரு வார்ம் அப்னு சொல்லலாம்.... இப்போ ஒவ்வொரு ஜோடியும் இந்த ஸ்டேஜில் ஏதாவது செய்துகாட்டனும்... பாடலாம்,ஆடலாம்...,ப்ரபோஸ் பண்ணலாம், ஏதாவது ரோல் ப்ளே செய்யலாம், எதுவேணும்னாலும் செய்யலாம்.. ஆனால் அது உங்க லவ்வை எக்ஸ்போஸ் பண்ணுற மாதிரி இருக்கனும்.... சண்டை போடுறதுனா கூட பரவாயில்லை... ஆனால் அதில் காதல் மட்டும் தான் இருக்கனும்.... புரியிதா??? ரைட் முதலில் யாரு வரப்போறீங்க???” என்று அந்த அறிவிப்பாளர் கேட்க எவரும் முன் வராததால் அவரே ஒரு ஜோடியை அழைத்தார்....
முதலில் வந்த ஜோடி தம் காதல் கதையை அனைவருக்கும் கூறினர்..... அதை அவர்கள் ரசித்து நகைச்சுவையோடு சுவாரஸ்யமாக கூறிய வித அனைவரையும் கவர்ந்தது... பெரும் இன்னல்களுக்கு மத்தியில் நடந்த அவர்களது திருமணத்தை அவர்கள் ஏதோ நகைச்சுவை திரைப்படம் போல் கூற அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்... இடையிடையே அந்த ஆண் தன் மனையாளை காதலோடு நோக்குவதும் அப்போது அப்பெண் வெட்கத்தால் நாணி கோணி நிற்பதுமென்று அவர்களிருவரும் வெகு சுவாரஸ்யமாக தம் கதையை கூறி முடித்தனர்..
பெரும் கைதட்டலோடு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அறிவிப்பாளர் அடுத்து நிம்மியையும் அபியையும் அழைத்தார்...
நிம்மி என்ன செய்வதென்று தெரியாது குழம்பியபடி மேடையேற அபியோ எந்தவித கவலையும் இல்லாமல் மேடையேறினான்..
மேடையேறியதும் நிம்மி என்ன செய்யப்போகிறோம் என்று அவன் காதில் கேட்க அபியோ
“அது தெரிந்தால் உன்கூட ஸ்டேஜ் ஏறியிருக்கமாட்டேன்..” என்று கூற அதில் கடுப்பான நிம்மி மேடையில் இருப்பதை மறந்து அவனோடு சண்டையிடத்தொடங்கிவிட்டாள்...
“ஓ... அப்போ யார்கூட ஸ்டேஜ் ஏறியிருப்ப...”
“ஹேய் என்ன நினைச்சிட்டு இருக்க என்னை பற்றி??? எத்தனை பொண்ணுங்க எனக்கு ப்ரபோஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா??? எத்தனை பேர் நான் அவங்க ப்ரபோசலை ரிஜெக்ட் பண்டிட்டேன்னு தேவதாசினியா சுத்துறாங்க தெரியுமா??”
“என்னது தேவதாசினியா??”
“ஆமா... பசங்க லவ் பெயிலியரில் சுத்துனா தேவதாஸ்... பொண்ணுங்க லவ் பெயலியரில் சுத்துனா தேவதாசினி....”
“ரொம்ப கேவலமான கண்டுபிடிப்பு... ஆனால் உன் மூஞ்சை பார்த்து யார்டா லவ் ப்ரபோஸ் பண்ணா?? அந்த அப்பாவியை நான் பார்க்கனுமே....”
“என்னை உன்னோட பாய் பெர்ண்டா வைத்திருக்க நீயெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும்... “
“யார்கிட்ட கொடுத்தா வச்சிருக்கனும்...??”
“ஐயோ நிம்மிமா.. தயவு செய்து காமெடி பண்ணாத... என்னால கஷ்டப்பட்டு சிரிக்கமுடியாது....”
“நீ ரொம்ப ஓவராப்பேசுற டா... காலேஜில் உன்னை அண்ணானு கூப்பிடாத ஒரே பொண்ணு நான் தான்... பாவம் பையன்னு... ஓகே சொன்னா ஓவர் பில்டப்பா பண்ணுற??”
“ஏது பில்டப்பா... நான் உண்மையை சொன்னேன்மா... எனக்கு பொய் சொல்லத்தெரியாது... “
“உனக்கு பொய் சொல்லத்தெரியாதா???? உனக்கு பொய் சொல்ல வராது... கேனத்தனமாக பொய் சொல்லி எத்தனை தடவை எக்குத்தப்பா என்கிட்ட மாட்டிட்டு முழிச்சிருக்கனு யோசித்து பாரு... “
“ஹாஹா..அதெல்லாம் நான் நியாபகம் வைத்துக்கொள்வது இல்லை...”
“ஆமாமா... உன்னை பத்தி தான் எனக்கு தெரியுமே.. பார்க்கிற எல்லாருகிட்டயும் ஜொள்ளுவிட்டு உன்னைமாதிரி வாங்கிக்கட்டிக்க யாராலயும் முடியாது...”
“அதுதான் எனக்கு வரலைனு தெரியிது இல்ல... அப்புறம் ஏன்டி நான் விளையாட்டுக்கு சொல்வதுக்கெல்லாம் சண்டைக்கு வர்ற??”
“அது அப்படி தான்.... நீ நல்லபிள்ளையாக இருந்தா கூட நான் உன்கூட சண்டைக்கு வருவேன்.... நீ செய்யமாட்டனு எனக்கு தெரியும்.. ஆனாலும் நான் உன்கூட சண்டை பிடிப்பேன்...”
“ஓ.. மை.. கடவுளே... எதற்கு எனக்கு இந்த ரோதனையை சோதனையாக அனுப்பி வைத்திருக்க??”
“நான் உனக்கு ரோதனையாடா...” என்று அபியை நெருங்கிய நிம்மி அவனை மொத்தினாள்..
சற்று நேரம் அவளிடம் அடிவாங்குவதை போல் பாவனை செய்தவன் அவளை தடுத்து
“வலிக்கிதுடி.... இன்னும் எவ்வளவு நேரம் தான் அடிப்ப??”
“நான் உனக்கு ரோதனையாடா??”
“அப்போ நீ மட்டும் என்னை டம்மி பீஸ்னு சொல்லலாமா??”
“அது.. நான் அப்படி தான் சொல்லுவேன்...”
“அப்போ நீயும் எனக்கு ரோதனை தான்.. அதாவது காதல் ரோதனை..” என்று கண்ணடிக்க நிம்மியோ அவன் மார்பில் செல்லமாக குத்தியபடி அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்..
அப்போது அனைவரும் கைதட்ட நிம்மியோ சூழ்நிலை உணர்ந்து சற்று வெட்கத்தோடு அபியிடமிருந்து விலகிநின்றாள்...
அவர்களது நடிப்பை பாராட்டிய அறிவிப்பாளர் அடுத்து தேவ்வையும் ஸ்ரவ்யாவையும் மேடைக்கு அழைத்தார்....
தேவ் கிட்டாரோடு மேடையேற ஸ்ரவ்யா கீபோர் ஒன்றினை கேட்டு பெற்றிருந்தாள்....
இருவரும் தத்தமது இசைக்கருவிகளோடு அமர்ந்தவர்கள் தம் இசைக்கருவிகளை மீட்டத்தொடங்கினர்...
அவர்களது மீட்டல் இசையினூடு எவ்வாறு காதல் செய்வதென்று என்று அங்கிருந்தவர்களுக்கு தெரியப்படுத்தியது....
தேவ் ஒரு பாடலை மீட்ட அதற்கு இணையான இசையால் காதலை வெளிப்படுத்தும் வகையில் கீபோர்ட்டினை வாசித்தாள் ஸ்ரவ்யா... இவ்வாறு இருவரும் வெவ்வேறு பாடல்களை வாசித்தபடியே இறுதியாக ஒரு பாடலை சேர்ந்து வாசித்து தம் இசைக்கச்சேரியை முடித்தனர்... வார்த்தையில்லாமல் இசையால் மட்டுமே நடந்தேறிய அவர்களது காதல் நாடகத்திற்கு அனைவரும் எழுந்துநின்று கைத்தட்டினர்...
மேடையேறிய அறிவிப்பாளரோ
“வாவ் வாவ் வாவ்... எப்படி... இப்படி இசையிலேயே காதலை சொன்னீங்க இரண்டு பேரும்... நீங்க வாசித்த அத்தனை பாடல்களும் வார்த்தைகள் இல்லாமலேயே பேசியது... பார்த்துட்டு இருந்த எங்களையும் அப்படியே ஒரு லவ் மோடிற்க்கு கூட்டிட்டு போயிட்டிங்க...இப்படியொரு அருமையான பர்போமன்சை கொடுத்த தேவ்விற்கும் ஸ்ரவ்யாவிற்கும் மீண்டும் ஒரு கைதட்டல் கொடுத்திடலாம்..” என்று அறிவிப்பாளர் கூற மீண்டும் அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்...
இவ்வாறு மற்றைய அனைத்து ஜோடிகளும் மேடையேறி தாம் காதல் நடனம்,நாடகம் என்று அனைத்தையும் அரங்கேற்றி முடித்ததும் மேடையேறிய அறிவிப்பாளர் அடுத்த போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டார்... இவ்வாறு மூன்று மணிநேரம் போட்டி நடைபெற அனைவரும் மகிழ்வுடன் அதில் கலந்துகொண்டனர்..
போட்டி நிறைவடைய அனைவரும் உணவுண்டுவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தவர்கள் அறையை காலி செய்துவிட்டு ஹிக்கடுவ கடலிற்கு சென்றனர்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN