பொன் மாலைப் பொழுது என்று தான் அகராதியில் உள்ளதா... பொன் காலைப் பொழுது என்று சொல்லக் கூடாதா? அப்படி சொல்லலாம் என்றால்... இந்த ஊரில் இருப்பவர்களுக்கு எல்லா நாளும் பொன் காலைப் பொழுது என்று தான் சொல்லவேண்டும். நாம் சினிமாக்களில் மட்டுமே பார்த்து ஏங்கி ரசித்த... வானுயர்ந்த மரங்களும்... மலை முகடுகளும் அதன் நடுவே தவழும் மேகங்களும்... குயிலின் கானமும்... பறவைகளின் கொஞ்சலும்... ஓடைகளின் சலசலப்பும்... ஆடு, மாடுகளின் கழுத்தில் ஒலிக்கும் மணியின் ஓசையும் என ரம்மியமான இப்படி ஒரு காலைப் பொழுதைக் காண கிடைக்கப் பெற்றவர்கள் தான் இவ்வூர் மக்கள்.
நாற்பத்தி நான்கு வருடங்களாக இந்த காட்சிகளைக் கண்டு களிக்கிறாள்... அப்போதும் ஏனோ மீனாட்சிக்கு சலிப்பதில்லை இக்காட்சிகள். வேப்பங்குச்சியால் பல்லைத் தேய்த்தபடி இவள் இயற்கையோடு ஒன்றிப்போக... என்னைப் பார்க்க மாட்டியா என்ற கோபத்தில் “ம்ம்மேஏஏஏ....” என்று இவளை அழைத்து தன் இருப்பைக் காட்டியது அங்கு கட்டியிருந்த பசு.
“என்ன சுந்தரி, உன்னைய கண்டுக்கலன்னு மொனைப்பா... தோ… லச்சுமி, சரஸ்வதியை கட்டவுக்குறேன்.. செத்த இரு” என்றவள் வேப்பங்குச்சியை பல்லில் வைத்துக் கொண்டே... முன்னரே கணுக்கால் வரை ஏறியிருந்த புடவையை இவள் இன்னும் தூக்கி சொருகியபடி அவர்கள் இருவரையும் அவிழ்த்து விட.... தாயிடம் ஓடின அந்த இரு கன்றுகளும். பசுவுக்குப் புல்லை எடுத்து வந்து போட்டவள்... இரண்டு கன்றுகளும் முட்டிக்கொள்வதைப் பார்த்து
“இந்தா... ஒங்களுக்குத் தானே எல்லா பாலும்... பெறகு எதுக்கு இப்படி முட்டிக்கிறீங்க?” இவள் சொல்லிக் கொண்டிருந்த நேரம்...
“எக்கோய், நான் வந்துட்டேன்” என்றபடி வந்து நின்றாள் அந்த வீட்டில் வேலை செய்யும் அவளின் வலது கையாய் இருக்கும் பூரணி.
“அடிக் கழுத! ஆடி அசைந்து வந்துட்டு… என்னமோ கருக்கல்லயே வந்தாப்ல சொல்லுற... போ...போய் விசுக்குனு சோலியப் பாரு டி. மொதல்ல பொழக்கடையக் கூட்டி சுத்தம் பண்ணு. தோ, இதுங்க பாலைக் குடிச்சி முடிச்சதும் மீதி பாலைக் கறந்துடு. நான் போய் விசுக்குனு மேலாக்கா ஊத்திகிட்டு வரேன்” என்றவள் தான் சொன்னபடி குளியல் அறைக்குள் புகுந்தாள் மீனாட்சி.
இதோ இப்போது நின்று ரசித்தாளே... அந்த ரசிப்பும், இதோ நின்று இரண்டொரு வார்த்தை பேசினாளே இது தான் மீனாட்சிக்கான நேரம். அதன் பிறகு அவளின் நாள் பொழுது எல்லாம் சாட்டையில் சுற்றப்படும் பம்பரமாய் இரவு படுக்கும் வரை சுற்றப்படுபவள் அவள்.
என்ன தான் இந்த வீட்டில் இவள் கை வேலைக்கும் மேல் வேலைக்கும் ஆட்கள் இருந்தாலும்... சமையல் மட்டும் இவள் தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் இவளைப் பெற்ற அப்பாரு அன்று முழுக்க பட்டினி தான். இவள் காலை உணவையும், இன்னும் மதியத்திற்கான சில உணவுகளையும் தயாரித்துக் கொண்டிருந்த நேரம்... அவள் வீட்டிலிருந்த சில உருப்படிகள் வந்து உணவை உண்டு விட்டுச் சென்றனர்.
இவள், மதியம் எடுத்துச் செல்ல இருக்கும் உணவுகளை அதற்கு உரிய டப்பாக்களில் அடைத்த நேரம்… அவள் வீட்டு பூஜை அறையில் மணி சத்தம் கேட்கவும், “இந்தா… மத்த சோலியப் பாருங்க. அப்பாரு சாப்ட வந்துடுவாரு... நான் போறேன்” இழுத்து சொருகிய முந்தானையில் கைகளைத் துடைத்த படி இவள் உணவு மேஜைக்கு வர..
தூய்மையான வெள்ளை வேட்டி கட்டி... அதே வெள்ளை நிற அங்கவஸ்திரம் தோளில் தவழ... விபூதி, சந்தனம் மணக்க... கழுத்தில் தங்க முகப்புகளான துளசி மற்றும் ருத்திராட்சை மாலைகள் ஒளிர... பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார் கார்மேகம். இவர் தான் மீனாட்சி உட்பட நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பன். இது இல்லாமல் பெரிய பண்ணையார் என்ற அடைமொழி வேறு இவருக்கு இருக்கிறது.
“வா டா... வா டா மீனாட்சி... இன்னைக்கு என்ன டா பலகாரம்?” இவர் கேட்டுக் கொண்டே அமர...
“எல்லாம் ஒங்களுக்குப் பிடிச்சது தான் ப்பா…” என்றவள் சிரித்த முகமாக தந்தைக்குப் பரிமாறினாள் அவள். இது எப்போதும் நடப்பது தான்... தந்தை உணவு மேஜைக்கு வர... அதற்கு முன்பே மகள் உணவு மேஜைக்கு வந்து விட வேண்டும். அவள் பரிமாறி இவர் சாப்பிட... என்னமோ அவரை பெற்ற தாயே பரிமாற, தான் வயிறு நிறைய உண்டதாக சொல்லுவார் அவர்.
மகள் கழுத்தில் தினமும் மின்னும் வைர அட்டிகை... அதனோடு காதில்... கையில்... எல்லாம் வைரம் தான். ஆனால் ஒரு பொட்டு கூட இல்லாமல்... குளிக்கும் போது பூசிய மஞ்சளோடு.. தலை வாராமல்... ஏனோ தானோ என்று கட்டிய புடவையுடன் அவள் இருக்க... அதெல்லாம் தகப்பனாய்... கார்மேகம் கண்ணுக்குத் தெரியவில்லை. தெரிந்தாலும் கருத்தில் படாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம் “பசி…” ‘ருசி...” “மணம்...” அதுவும் “உணவின் மணம்...” அது மட்டும் தான்.
நன்றாய் இலையை வழித்து உண்டவர் ஒரு ஏப்பத்துடன் அவர் எழுந்து விட... இன்னும் காத்திருக்கும் தன் மற்ற வேலைகளைப் பார்க்க நகர்ந்தாள் மீனாட்சி.
இவள் ஷாலினியைக் குளிக்க வைத்து... உடை மாற்ற... அந்நேரம் உணவு மேஜைக்கு வந்தான் இளங்குமரன்... நம் கதையின் நாயகன். அங்கு எல்லாம் தயாராக இருக்க… அதைப் பார்த்தவன்,
“அக்கா... செத்த இப்படி வா” இவன் மீனாட்சியை அழைக்க...
“குமரா... பலகாரம் எல்லாம் மேஜை மேலே தயாரா இருக்கு பாரு… எடுத்துப் போட்டு சாப்டு” இவள் நின்ற இடத்திலிருந்தே சொல்ல
“உன்னைய இங்க வரத் தான் சொன்னேன்....” என்றவன்… உணவை உண்ணாமல் அமர்ந்து இருந்தவன் எழுந்திருக்க
தம்பியின் குணம் அறிந்தவள் என்பதால்… நான்கு வயது ஷாலினியைத் தூக்கிக் கொண்டு தம்பியிடம் வந்தவள், “அப்படி என்ன டா... உனக்கு இவ்ளோ பிடிவாதம்? பிள்ளைக்கு உடுப்பு தானே போட்டுகிட்டு இருக்கேன்... சாப்டா தான் என்ன..” தமக்கை அங்கலாய்க்க
“ஷாலினி பட்டு.. சித்தப்பா ஒனக்கு உடுப்பு போட்டு விடவா?” என்று தன் அண்ணன் மகளிடம் கேட்டவன்... கூடவே தமக்கையுடன் இருந்து அவளை வாங்கிக் கொண்டு...
“முதல்ல நீ உட்காரு க்கா...” அவன் உத்தரவு இட... எப்போதும் அதிகம் பேச மாட்டான்... இதோ இது தான் இவ்வளவு தான் அவன் பேச்சு இருக்கும்... இந்த குரலுக்கு அவன் சொல்வதை யாராக இருந்தாலும் செய்தே தீர வேண்டும். அவள் அமர்ந்ததும் தமக்கைக்கு இலையில் உணவைப் பரிமாறிய படி
“சாப்டு க்கா...” என்றவன் பின் குழந்தை பக்கம் திரும்பி, “ஷாலினி பட்டு... சித்தப்பா ஒனக்கு சோறு ஊட்டி விட்டு பெறகு டிரஸ் போட்டு விடுவனாம்… நீங்க சமத்துப் பிள்ளையா சாப்டுவீங்களாம்… சரியா?” இவன் இப்படி பல பேச்சுகளைக் கொடுத்துக் கொண்டே... அவளுக்கு உணவை ஊட்ட... கண்கள் பனித்தது மீனாட்சிக்கு.
அவளைப் பெற்ற அப்பாரு கூட நீ சாப்பிட்டாயா என்று அவளைக் கேட்டது இல்லை. எத்தனையோ முறை குமரன் அவருக்கு எடுத்துச் சொல்லியும், ‘சமைக்கத் தெரியற என் மகளுக்கு சாப்பிட தெரியாதா?’ இப்படியாகத் தான் கார்மேகத்தின் பதில் வரும்.
கதை பேசியபடி சாப்பிட்ட சின்னக் குட்டி, “ஏன் சித்தப்பா... நான் ஸ்கூல் போகிறதுக்குள்ளே அம்மா எழுந்துருவாங்க தானே?” பூட்டியிருக்கும் தாயின் அறையைக் காட்டி அவள் கேட்க
இளங்குமரன் என்ன பதில் சொல்லுவான்... அவனுக்கே இந்த விஷயத்தில் சின்ன அண்ணி கல்பனாவின் செய்கைகள் பிடிக்காதே. இந்த குடும்பத்தில் ஒரு பழக்கம்... அதென்ன அப்படி ஒரு பழக்கமோ... மனதிற்குள் எப்போதும் சாடிக் கொள்வான் அவன்.
திருமணம் செய்து வந்த தம்பதிகள்... தங்கள் அன்னியோன்யத்தை நிரூபிக்க... பூட்டிய அறைக்குள்ளே தான் எப்போதும் இருக்க வேண்டும். பெரியவர்கள் யாராவது வீட்டிற்கு வந்தால்... வெளியே வந்து முகம் காட்டி விட்டு பழைய படி அறைக்கு சென்று விட வேண்டும். அதென்னவோ திருமணம் நடந்த புதிதில் சொல்வது... இன்று வரை அதைக் கடைபிடிக்கிறாள் கல்பனா. உணவு எடுத்துக்கொள்ளவும்... வெளியே போகவும் தான் அவள் அறையை விட்டே வெளியே வருவது. உடன் துணைக்கு கணவன் சேரனையும் பக்கம் வைத்துக் கொள்வாள்.
பெரிய தொழிலதிபரின் மகள்... தந்தையின் கண்டிப்பால் தன்னுடைய அடையாளத்திற்காகவும்... பொழுதுபோக்கிற்காகவும் இவள் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராய் வேலை பார்க்க... அங்கு வேலை செய்த சேரனுடன் காதல் ஏற்பட... இருவரும் ஒரே இனம் என்பதால்... கூட்டுக் குடும்பமாய் இருக்க வேண்டும்... குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடாது என்ற நிபந்தனையுடன்... இவர்கள் திருமணத்திற்கு சம்மதித்தார் கார்மேகம்.
கல்பனாவுக்குப் பெற்ற மகள் உட்பட எல்லாமே இரண்டாம் பட்சம் தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால்… மகள் அவளுக்கு ஒரு சுமை. சேரனின் பிடிவாதத்தால் தான் ஷாலினியைக் கூட பெற்றுக் கொண்டாள். அதனால் ஷாலினியின் தூக்கம் முதற்கொண்டு அவளின் முழு பராமரிப்பையும்... பல வேலைக்கு நடுவில் மீனாட்சி தான் பார்க்க வேண்டும். அதனாலேயே கன்பனாவை குமரனுக்கு எப்போதும் பிடிக்காது.
‘ச்சே! இந்த மதனி ஏன் இப்ஙடி இருக்காங்க... மகா... இப்படி இருக்கக் கூடாது’ என்று வேண்டியது அவனின் மனது. மகா என்கிற மகாலஷ்மி... அவனின் வருங்கால மனைவி. பெரியோர்களால் வீட்டில் முறைப்படி பெண் பார்த்து முடிக்க... இன்னும் ஒரு வாரத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
இப்படியான அவன் சிந்தனையைக் கலைத்தது, “என் அப்பனே முருகா.. எல்லா மக்களையும் நல்ல படியா வையப்பா...” என்ற வேண்டுதலுடன் அங்கு வந்து அமர்ந்த அவன் தாத்தாவின் வார்த்தைகள். இந்த வீட்டின் மூத்த தலைமுறை அவர். காது கொஞ்சம் கேட்காது. செவிட்டு மிஷினை காதில் அழுத்தி வைத்தால் தான் கேட்கும். அவசரமாய் உணவை உண்டு முடித்த மீனாட்சி பின் அவருக்கு உணவைப் பரிமாற... அண்ணன் மகளுக்கு உடுப்பைப் போட்டு விட்டு… அக்கா பரிமாற, தானும் உணவை உண்டான் குமரன்.
இதற்குள் வெளியே ஸ்கூல் வேன் வந்திருக்க, இவன் ஷாலினியைத் தூக்கிக் கொண்டு அக்காவுடன் முன் வாசலுக்கு நடக்க... எதிர் பட்டார் அழுக்குத் துணியை எடுத்துச் செல்ல வந்த சேது.
அவரைக் கண்டதும் மீனாட்சி, தன் கையில் இருந்த பையை எல்லாம் தம்பியிடம் கொடுத்து விட்டு உள்ளே விரைய... குமரனுக்கோ மனது வேதனையாகிப் போனது. அந்த வீட்டில் யாரும் தங்கள் உடுப்புகளை அலச மாட்டார்கள். அழுக்கு உடையை அதற்கென்று இருக்கும் பிரம்புக் கூடையில் போட்டு விட வேண்டும். இதை வீட்டில் உள்ள எல்லோரும் செய்தாலும்… ஏன், எண்பத்தி இரண்டு வயதான அவன் தாத்தா அழகுமலை கூட செயல் படுத்தினாலும்... அவன் தந்தை மட்டும் அதைச் செய்ய மாட்டார்.
அவரின் அழுக்கு உடையைப் பார்த்து பிரித்து சலவைக்குப் போடுவது முதற்கொண்டு அனைத்தும் செய்வது மகள் மீனாட்சியாகத் தான் இருக்க வேண்டும். அதை எடுத்துக் கொடுக்கத் தான் அவளும் வயதை மீறி இந்த ஓட்டம் ஓடுகிறாள். இவன் மகளை வேனில் ஏற்றி விட்டு வர.. மீனாட்சியும் சேதுவை அனுப்பிவிட்டு வர..
“ஏன் க்கா... சேது அண்ணனை செத்த நேரம் இருக்கச் சொன்னா இருக்கப் போறார்... எதுக்கு இப்படி ஓட்டப் பந்தயம் போல ஓடுற...” இவன் கடிக்க
“இல்ல டா... இன்னைக்கு அப்பா அறையில் இருந்து உடுப்பை எல்லாம் எடுத்து வெக்கணும்... மத்த சோலியில் அதை மறந்துட்டேன். சேதுவும் அவர் பொழப்ப பார்க்க நாலு எடத்துக்குப் போறவர். அவர ஏன் நாம புடிச்சி வெக்கணும்?” மீனாட்சி நியாயமாய் பேச
“இதை எல்லாம் வக்கனையா பேசு... ஆனா வீட்ல யாரு என்ன சோலி சொன்னாலும்... மொத ஆளாப் போய்ச் செய்ய நில்லு...” இவன் காரசாரமாய் குட்டு வைக்க
தம்பியின் கோபக் குரலில் இவள் முகமோ வாடியது. அதைக் கண்டவன், “சரி சரி... ஒடனே மூஞ்சிய கசக்காத... செத்த சிரிச்சு வழியனுப்பி வையி.. வெளிய கெளம்பறேனில்ல...” என்றவன் தன் புல்லட்டை எடுக்க
“என்ன டா.. கார்ல போகலையா...”
இந்த வீட்டில் நாலு கார் உள்ளது. மூன்று பிள்ளைகளுக்கு என்று தனியாகவும்... கார்மேகம் வெளியே செல்லத் தனியாகவும் என்று நான்கு கார் இருக்கிறது.
“இல்லக்கா... பக்கத்துல தான் ஒரு சோலி… வந்துடறேன்...”
“அப்போ… மதியம் சாப்பாடு?”
“அது இல்லாமையா... நான் வரலனா நீ எங்க சாப்டுற? ரெண்டு உருண்டைய கூடத் திங்க மாட்ட.. அதுக்கே வந்துடறேன்...”
உண்மை தான்… இவன் வரவில்லை என்றால்… வேலை என்ற போர்வையில் அந்த இரண்டு உருண்டைகளைக் கூட உண்ண மாட்டாள் அவள்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் பள்ளி செல்லத் தன் சைக்கிளை எடுக்க வந்தான்... அந்த வீட்டின் கடைக்குட்டி சதீஷ். கடைக்குட்டி என்றால் இவன் கார்மேகத்தின் மகன் இல்லை... அவரின் தம்பி மகன் இவன். தாய் தந்தையரை ஒருங்கே ஒரு விபத்தில் இவன் இழந்து விட... தான் இவனை வளர்ப்பதாகச் சொல்லி இங்கு அழைத்து வந்தவர் அதைச் செவ்வனே செய்கிறார் கார்மேகம்.
“எலேய்... ஒழுங்கா படிக்கிறியா? அடுத்த வருசம் பண்ணென்டாவது போற… நல்லா படி... இல்லாட்டி ஒனக்கு இருக்கு டி...” குமரன் தான் மிரட்டியது. இந்த வீட்டில் குமரனுக்கு மட்டும் தான் சதீஷ் பயப்படுவான். அப்படி கூட சொல்லக் கூடாது… தன் வால் தனத்தை எல்லாம் அடக்கி வைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய் இருப்பது... குமரன் வீட்டில் இருக்கும் போது மட்டும் தான்.
“அதெல்லாம் நல்லா படிக்கிறேன் ணா...” இவன் பவ்வியமாய் சொல்ல
தம்பியின் பதிலில், “என்னமோ போ... நீ பண்ற சேட்டை எல்லாம் என் காதுக்கு வருது... ஒரு நேரம் போல நான் இருக்க மாட்டேன் பாத்துக்க...” என்று மிரட்டியவன்
“சரி க்கா... நான் கெளம்பறேன்” என்றவன் தன் புல்லட் உறும... அங்கிருந்து விலகியிருந்தான் இளங்குமரன்.

Last edited: