உன்னாலே உனதானேன் 15

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆபிஸ் அலுவலகத்தை அடைந்த வினய் பார்க்கிங் ஏரியாவில் காரினை பார்க் செய்துவிட்டு அலுவலக கட்டிடத்தை நோக்கி செல்லும் வழியில் யாரோ அவனது தோளில் கை வைக்க திடுக்கிட்டு திரும்பினான் வினய்.

“டேய் எவ்வளவு நேரம்டா உன்னை கூப்பிடுறது?? பார்த்துட்டு பேசாமல் போற???” என்று அவன் தோழன் தர்ஷன் கேட்க

“ஐயோ கூப்பிட்டியா மச்சி??? நான் கவனிக்கலை டா.. சாரி மச்சி” என்று வினய் மன்னிப்பு வேண்ட தர்ஷனோ வினயை ஒரு முறை சுற்றி வந்தான்.

“மச்சி என்னடா ஏதும் வேண்டுதலா?? எதுக்கு என்னை சுத்தி வர்ற??” என்று வினய் கேட்க அவனை முறைத்தான் தர்ஷன்.

“உன்னை சுத்துறதை வேண்டுதலா வைக்கிற அளவுக்கு என் நிலைமை இன்னும் மோசமாகலடா...”

“அப்போ எதுக்கு என்னை சுத்தி வந்த??”

“தலையில ஏதும் அடிபட்டுருக்கானு பார்க்க தான்..”

“டேய் லூசுப்பயலே அப்படி ஏதும்னா தலையில கட்டு போட்டுருப்பேன்ல???”

“ஆமாடா டேய்... லூசு மாதிரி நீ பிஹேவ் பண்ணிட்டு என்னை லூசுனு சொல்லுறியா??”

“சாரி மச்சி.. நான் வேறு ஒரு யோசனைல இருந்தேன்... அதான் நீ கூப்பிட்டதை கவனிக்கலை.....”

“முகத்துக்கு நேரே இருந்து கூப்பிட்டும் கவனிக்காமல் போற அளவுக்கு அப்படி என்னடா யோசனை உனக்கு??”

“இல்லை மச்சி... அது ... அது..”

“அதுனா எதுடா??”

“டேய் புரிஞ்சிக்கோடா...”

“டேய் நீ சொன்னா தானேடா புரியும்??”

“இதுக்கு தான் காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லுறது...”

“என்னடா ஆளாளுக்கு இதையே சொல்லுறீங்க... நானா கல்யாணம் வேணாம்னு இருக்கேன். என் மாமனாரு அடிச்ச கூத்துல கல்யாணத்தை போஸ்ட் போன்ட் பண்ணிட்டாங்க... இது தெரிஞ்சும் ஆளாளுக்கு கல்யாணம் பண்ணிக்கோனு அட்வைஸ் பண்ணி கடுப்பேத்துறீங்களே...” என்று புலம்பியவனை ஆறுதலாக அணைத்தவாறு

“விடு மச்சி...பாச்சுலர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் டா..” என்று வார்த்தைகளால் தர்ஷனை ஆறுதல் படுத்தியவன் மைண்ட் வாயிசில்

“யப்பா சாமி...நல்ல வேளை பய டாபிக்கை மறந்துட்டான்... இல்லைனா டவுட்டு கேட்டே வச்சி செய்வான்... ஏன்டா கவின் கொஞ்சம் ஓவரா தான் பண்ணுறியோ??? இவனெல்லாம் விளக்கம் கேட்குற அளவுக்கு நடந்துகிட்டியே டா... டேய் நீ சரியில்லை.... காலையில கட்டின பொண்டாட்டியை சைட் அடிக்க பிளான் போடுற... இப்போ அவ ஆசையா கொடுத்ததை இப்படி ஓவராக்ட் பண்ணி எல்லோரும் என்னடானு கேட்குற அளவுக்கு நடந்துக்குற..... டேய் கவினு அடக்கி வாசி... அடக்கி வாசி...” என்று மைண்ட் வாயிசில் பேசியபடி தர்ஷன் கூறுவதற்கு தலையாட்டியபடி ஆபிசினுள் சென்றான்.

அவன் சென்று இருக்கையில் அமர தர்ஷனும் அவனுக்கு எதிரே அமர்ந்தான்.. ட்ராயரை திறந்து ஏதோ பைலை தேடிக்கொண்டு இருந்தான் வினய். அப்போது அவனது மொபைல் ஒலிக்க அதில் ஷிமி என்ற பெயர் விழுந்தது....

“மச்சி போன் ரிங் ஆகுதுடா...” என்று தர்ஷன் கூற வினயோ ஏதோ நினைவில்

“காலை அட்டன்ட் பண்ணிட்டு ஸ்பீக்கரில் போடுடா..” என்று யாரென்று அறியாமல் தர்ஷனிடம் சொல்ல அவனும் அவ்வாறே செய்தான்..
பைலை தேடியபடி வினய் ஹலோ என்று கூற எதிர்புறம் ஒரு நீண்ட முத்தம் அலைபேசியூடாக பறந்து வந்தது...

குனிந்து இறுதியாக இருந்த ட்ராயரில் பைலை தேடிக்கொண்டிருந்தவன் இந்த முத்தத்தில் பதறி தட்டு தடுமாறி மேலே எழுந்து போனை பார்க்க அதில் ஷிமி என்றிருக்க அதை கைப்பற்ற முயன்று ஸ்பீக்கரை ஆப் செய்வதற்கு முன்

“லவ்யூ புருஷா.... காலையில குடுத்த கிப்ட்டுக்கு விஷ்ஷஸ் சொல்லலை அதான்.... ஈவினிங் சீக்கிரம் வாங்க..பாய் டேக் கேயார்...”என்றுவிட்டு மறுபடியும் ஒரு முத்தத்தை அவள் கொடுக்க ஆரம்பித்ததும் ஸ்பீக்கரை ஆப் செய்துவிட்டான் வினய்...

ஸ்பீக்கரை ஆப் செய்ததும் எதிரே இருந்த தர்ஷனை பார்க்க அவனோ குலுங்கி குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தான்...
அவனது சிரிப்பில் நொந்து போன வினயின் பரிதாபமாக விழித்தான் ... ரேஷ்மியின் இந்த அதிரடி அழைப்பை எதிர்பார்க்காதவனுக்கு தர்ஷனிடம் இருந்து எப்படி தப்புவது என்று தெரியவில்லை...

“மச்சி அது வந்து...”என்று தட்டித்தடுமாறி ஏதோ கூற தர்ஷனோ வயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரிக்கத்தொடங்கினான்..
தர்ஷனின் சிரிப்பில் கடுப்பான வினய்

“டேய்...” என்று குரலை உயர்த்த தர்ஷனோ

“சாரி மச்சி... என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலைடா.... கொஞ்சம் இரு வர்றேன்...” என்று எழுந்து வாஸ்ரூமிற்கு சென்றவன் சில நிமிடங்கள் சிரித்துவிட்டு மீண்டும் வினயிருக்கும் இடத்திற்கு வந்தான்.. வினயோ தர்ஷன் சென்றதும் தலையில் அடித்துக்கொண்டான்.

“மானமே போச்சு....இப்படியாடா ரேஷ்மி கோலை ஸ்பீக்கரில் போட சொல்லுவ??அவளே இரண்டு நாளா ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்கா...எப்போ எத பண்ணுவானு கெஸ் பண்ணமுடியாம இருக்கும்போது இப்படியாட ஸ்பீக்கரில் போனை போடுவ?? அதுவும் தர்ஷன் இருக்கும் போது....காலையிலேயே ரொம்ப கஷ்டப்பட்டு தான் அவனை சமாளிச்ச...இப்போ வந்து உன்னை வகையா வச்சி செய்யப்போறான். நல்லா அனுபவி...”என்று புலம்பியபடி இருந்த வினயின் முன் வந்து அமர்ந்தான் தர்ஷன்...

“டேய் அது வந்து தெரியாம..” என்று வினய் தொடங்க

“அப்போ காலையில சொன்ன அது வந்து இதுதானா மச்சி??? இதுக்கு தான் அப்படி மென்று முழுங்குனியா???”என்று தர்ஷன் சிரிப்பை அடக்கியபடி கேட்க வினயோ வெட்கத்தில் நெளிந்தான்...

“சரி விடு... இன்னைக்கு உனக்கு நடக்குது..... நாளைக்கு பின்ன எனக்கும் இது நடக்கலாம்... யாரு கண்டா??? தப்பு என்மேல தான்டா...சிஸ்டர் கால் பண்ணுராங்கனு சொல்லியிருந்தா நீ ஸ்பீக்கரில் போட சொல்லியிருக்க மாட்ட.... நானும் ஒரு லைவ் ரொமேன்ஸ்ஸை கேட்டிருக்க மாட்டேன்...” என்றுவிட்டு தர்ஷன் மீண்டும் சிரிக்க வினயோ அவனை முறைத்தான் ...

“ஓகே கூல்....இதுக்கு மேல நான் இங்க இருந்தா நீ எனக்கு டின் கட்டாமல் விடமாட்ட...நீ அந்த பைலை குடு நான் இடத்தை காலி பண்ணுறேன்...” என்றவன் வினயிடம் இருந்து பைலை வாங்கிக்கொண்டு தன் இருக்கைக்கு திரும்பினான்...

அவன் சென்றதும் தன் மொபைலை எடுத்து பார்த்ததும் சற்று முன் நடந்த சம்பவம் நினைவில் வந்து அவனது இதழ்களில் புன்னகையை பதித்திருந்தது....

அவனது எண்ணங்களோ தன்னவளிடம் மண்டியிட்டு கிடந்தது... ஏனோ அவனது மனம் அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் தென்படுகிறது என்று அவனுக்கு உணர்த்த தவறவில்லை....ஆனால் அதை முழுமனதாக ஏற்க அவனது மனமோ ஒத்துழைக்கவில்லை...
வெறுப்பு என்ற ஒன்று அறவே இல்லாத போதிலும் அவளின் மனக்குழப்பம் அவர்களுக்கிடையிலான இடைவெளியை இன்னும் அதிகரித்து விடுமோ என்று பயந்தான்... அதற்காக இந்த கோப முகத்தை சிறிது நாட்கள் அணிய வேண்டும் என்று அவனது மூளை அறிவுறுத்த அவனது மனமோ

“ஆமா நீ ஈசியா சொல்லிட்ட.... அவளை பார்த்ததும் கோவமா இருக்கிற மாதிரி நடிக்க நான் படுற கஷ்டம் எனக்கு தான் தெரியும்... இந்த கண்ணு வேற அடிக்கடி அலைபாயிது... அதையே கண்ட்ரோல் பண்ண முடியலை... இதுல கொஞ்ச நாளைக்கு கோவமா இருக்க மாதிரி நடிக்கிறதா??? ஐயய்யோ கேட்கும் போதே கண்ணை கட்டுதே .... இதை நான் எப்படி இம்ப்ளிமண்ட் பண்ணபோறேன்....” என்று மனமோ மறுபுறம் புலம்ப என்னசெய்வதென்று புரியாமல் தவித்தான்...
இப்போதைக்கு வேலையை பார்ப்பதே சாலச்சிறந்தது என்று முடிவெடுத்தவன் தன் அலுவலை கவனிக்க தொடங்கினான்.

மாலை வீடு திரும்பிய வினய் வீட்டின் காலிங் பெல்லினை அடித்துவிட்டு கதவு திறக்கும் வரை வாசலில் நின்றிருந்தான்.
கதவு திறந்ததும் எதிரே ரேஷ்மியை கண்டவன் அவளை கவனியாதது போல் உள்ளே செல்ல முயல ரேஷ்மி தன் கையினால் வழிமறித்தாள்.

“ஷிமி ரொம்ப டயர்டா இருக்கேன்மா....” என்று கூற மறித்திருந்த கையை எடுத்து அவன் செல்ல வழிவிட்டாள்.
வீட்டினுள்ளே நுழைந்தவன் அறைக்கு சென்று உடைகளை கூட மாற்றாது கட்டிலில் விழுந்தான். கட்டிலில் விழுந்தவனை உறக்கம் தழுவ அந்நிலையிலையே கண்ணயர்ந்தான் வினய்.

வினய் வந்ததும் அவனுக்கு காபி கலந்து வந்த ரேஷ்மி அவனை ஹாலில் தேட அவனோ அங்கில்லை... தங்கள் அறைக்கு வந்தவள் கட்டிலில் உடையை கூட மாற்றாது அயர்ந்து உறங்குபவனை கண்டாள்.
கழுத்திலிருந்த டையை சற்று தளர்த்தியிருந்தவன் கழுத்து பட்டனையும் அதை அடுத்திருந்த பட்டனையும் திறந்துவிட்டிருந்தான். எப்போதும் இன் செய்திருக்கும் சட்டை வெளியே நீண்டிருக்க நீள் கைசட்டையை பாதியாய் மடித்து உயர்த்திவிட்டிருந்தான். கட்டிலில் மல்லாக்காய் படுத்திருந்தவனின் கால்கள் இரண்டும் வெளிப்புறமாக தொங்கிக்கொண்டிருந்தது....

அவனது அயற்சி அவனது தோற்றத்திலேயே புலப்பட அங்கிருந்த மேசையின் மீதிருந்த ஏசி டிமோர்ட்டினை எடுத்த ரேஷ்மி அதன் உதவியால் ஏசியை அதிகரித்தவள் தொங்கிக்கொண்டிருந்த அவனது கால்களுக்கு ஏதுவாக டீபாயை வைத்து அதன் மேல் அவனது கால்களை தூக்கி வைத்துவிட்டு அவன் தூக்கி எறிந்திருந்த அவனது லாப்டப் பையினை அதன் இருப்பிடத்தில் பத்திரப்படுத்திவிட்டு ஓசையெழுப்பாதவாறு கதவை அடைத்துவிட்டு வெளியேறினாள் ரேஷ்மி.

ஒன்றரை மணிநேர உறக்கத்தின் பின் துயில் கலைந்து எழுந்த வினய் நேரத்தை பார்க்க அது இரவு எட்டு முப்பது என்று காட்டியது.
கட்டிலில் இருந்து எழுந்தவன் குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வர அவனது மொபைல் ஒலித்தது..
மொபைலை எடுத்து பார்க்க அதில் அபி என்று தோன்ற அதை அட்டன்ட் செய்தான் வினய்.

“கவின் எங்க இருக்கீங்க?? வந்துட்டீங்களா?? இல்லை வேறு எங்கயாவது போயிட்டீங்களா??” என்று அபி கேட்க

“அபி நான் வீட்டுல தான் இருக்கேன்...”

“அப்போ நீங்க வரலையா??”

“எங்கடா??”

“ரேஷ்மி சொல்லலையா கவின்??”

“இல்லைடா.. நான் வந்ததும் டயர்டா இருக்குனு தூங்கிட்டேன் டா..இப்போ தான் எழும்பினேன்..”

“ஓ.. நான் ரியா அனு அம்மாவை கூட்டிட்டு ஷாப்பிங் வந்துட்டேன்டா...ரேஷ்மியை ரியா கூப்பிட்டா..அவ நீ வந்ததும் உன்னை கூப்பிட்டுகிட்டு வர்றேன்னு சொன்னா...அதான் நீங்க எங்க இருக்கீங்கனு கேட்கத்தான் கால் பண்ணேன்...” என்று அபி கூற வினயோ

“சரி..நீங்க பர்ச்சஸ் முடிச்சிட்டீங்களா???”

“இல்லை கவின்.. இன்னும் கொஞ்சம் இருக்கு...”

“சரி...நீங்க எங்களுக்காக பார்க்க வேண்டாம்... பர்ச்சஸ்ஸை முடிச்சிட்டா வீட்டுக்கு வந்திடுங்க...நாங்க இனி தான் கிளம்பி வரணும்...”

“சரிடா...நான் பார்த்துக்கிறேன்... ”என்று அபி அழைப்பை துண்டிக்க வினய் ரேஷ்மியை தேடிச்சென்றான்.
ரேஷ்மியோ இரவு உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள். ரேஷ்மியின் பின்புறம் வந்து நின்றவன் தன் கோபம் மறந்து

“ஷிமி அண்ணா கால் பண்ணான்... ஏன் என்கிட்ட சொல்லலை???”என்று கேட்க ரேஷ்மியோ தன் வேலையை தொடர்ந்தபடி

“நீங்க ரொம்ப டயர்டா இருந்தீங்க..அதான் சொல்லலை.... கொஞ்சம் இருங்க காபி போட்டு தாரேன்....” என்று அவனுக்கு காபி கலக்க ஆரம்பிக்க

“அதை நான் கலந்துக்கிறேன்... இப்போ நீ போய் ரெடியாகு... நாம ஷாப்பிங் போகலாம்...” என்று வினய் அவளருகில் வர

“இல்லை வினய்... நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க..நாம நாளைக்கு போகலாம்..நீங்க ஹாலில் இருங்க... நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று தன் வேலையை தொடர

“டயர்ட் எல்லாம் ஒன்றும் இல்லை...தூங்கி எழுந்ததால இப்போ ரிலாக்ஸ்ஸா பீல் பண்ணுறேன்... நீ போய் ரெடியாகு...” என்று வினயோ ரேஷ்மியை கிளப்ப முயல அவளோ மறுக்கத்தொடங்கினாள்...

“இல்லை வினய் இப்போவே லேட்டாகிவிட்டது... உங்களுக்கு தான் கஷ்டம்.... நாம நாளைக்கு போகலாம்....” என்றதும் தான் தாமதம்

“ஆமா என்னோட கஷ்ட இஷ்டத்தை பார்த்து தானே எல்லாம் செய்ற..... உனக்கு என்னோட வர பிடிக்கலைனா நேரடியா சொல்ல வேண்டியதுதானே... எதுக்கு ஏதேதோ சாக்கு சொல்லிட்டு இருக்க???” என்று வினய் குரலை உயர்த்த அதில் பதறிய ரேஷ்மி

“ஐயோ வினய் நா அப்படி சொல்லலை வினய்... உங்களுக்கு டயர்டா இருக்குமேனு தான்....”

“அப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?? உனக்கு என்னை அவொய்ட் பண்ணனும்... அதுக்கு இது ஒரு காரணம் அவ்வளவு தான்...” என்று மீண்டும் வினய் தொடங்க ரேஷ்மியோ

“இப்போ என்ன நாம ஷாப்பிங் போகனும்...அவ்வளவு தானே....இந்தாங்க இந்த காபியை பிடிங்க... நான் ரெடியாகுறேன்....” என்று விட்டு ரேஷ்மி சமையலறையில் இருந்து வெளியே வர வினயோ அவள் கொடுத்த காபியை சுவைத்தவாறு இதழில் புன்னகை உதித்தவாறு குரலில் கடுமையை ஏற்றி

“அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் என்னோடு ஷாப்பிங் வரவேண்டிய கட்டாயம் இல்லை..” என்று இதழ்களால் வார்த்தைகளை உதித்தவன் மனதினுள்

“ஷாப்பிங் கூப்பிட்டால் ரொம்ப தான் பண்ணுறா... வாடா ஷாப்பிங் போகலாம்னு அவளே கூப்பிட்டிருக்கனும்... ஆனா கூப்பிடலை.. சரி நம்மளே கேட்டு அழைச்சிட்டு போகலாம்னா கஷ்டமா இருக்கும் நஷ்டமா இருக்கும்னு கத சொல்லிட்டு இருக்கா..... இவளை இப்படியே விட்டா இடைவெளியை இன்னும் பெருசாக்கிருவா.... நாம தான் இவளை ட்ரெயின் பண்ணலாம்... வினய் பொண்டாட்டி இப்படி நல்ல பொண்டாட்டியா இருப்பது சரியில்லையே...” என்றவன் காபியை குடித்து முடித்துவிட்டு அறைக்கு செல்ல அங்கு ரேஷ்மி வெள்ளையும் நீலமும் கலந்த லாங் ஸ்கெர்ட்டும் இளம்பச்சை நிற குர்த்தியில் தயாராகிக் கொண்டிருந்தாள். வினயோ அவளை பார்த்தவாறு அருகில் வந்து அவள் அமர்ந்திருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் நின்று கண்சிமிட்டாமல் பார்த்திருந்தான்.

அந்த கண்கள் காதலால் கனிந்திருக்க அந்த காதல் பாஷையை புரிந்துகொண்டவள் தலை குனிந்து வெட்கத்தால் நாணிச்சிவந்தாள்.
அந்த வெட்கத்தை மிகைப்படுத்த எண்ணிய அந்த காதலன் அவளுடனான இடைவெளியை குறைத்து அவள் புறம் குனிய அதனால் வெட்கமுண்டு பேதையவள் கண்களை இறுகமூடிக்கொண்டு அவனது நெருக்கத்தையும் அந்த நெருக்கம் தரும் பரிசையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருத்திருந்தாள்.

கணத்திற்கு கணம் மூச்சுக்காற்றின் வெப்பம் அதிகரிக்க கையில் வைத்திருந்த சீப்பினை இறுக பற்றிக்கொண்டு ஒருவித இன்ப நடுக்கத்துடன் அந்த கணத்தை அனுபவிக்கத்தொடங்கினாள் ரேஷ்மி.
ஆனால் நெருங்கிய மூச்சுக்காற்றின் வெப்பமோ நெருங்கிய மறுகணமே விலகியது.. அந்த விலகல் நடுக்கத்தை குறைத்த போதும் பெண் மனதை காயப்படுத்த தவறவில்லை...

கண்விழித்தவள் கண்ணாடியை பார்க்க அவளது ஏமாற்றம் தேவையற்றது என்ற வகையில் அவளது கன்னத்துக்கு வெகு அருகிலேயே பட்டும் படாமலும் முகத்தை வைத்திருந்தான் வினய்.

அவள் கண்விழித்ததும் வினயின் உதடுகள் கள்ளச்சிரிப்பை தத்தெடுத்திருக்க

“ஓய் பொண்டாட்டி.... நீ ரொம்ப ஸ்பீட்டுமா.. மூச்சுக்காற்றை வைத்து நான் இருக்கேனா இல்லையானு கண்டுபிடிக்கிறியே..... நீ லவ் சப்ஜெக்ட்டில் ரொம்ப வீக்குனு நினைத்தேன்.... ஆனா நீ வேற லெவல் மா..” என்று அவள் காதில் உரைத்தவன் அவளை பின்னாலிருந்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.

முத்தமிட்டதோடு நிறுத்தாமல் அவளை இருக்கையிலிருந்து எழுப்பியவன் அவள் அமர்ந்திருந்த இருக்கையை காலால் அகற்றியவன் இருவருக்கும் இடையிலான இடைவெளியை இன்னும் குறைத்தான். அவள் கழுத்திடைவெளியில் தன் முகம் புதைத்தவன் இன்னும் அவளை இறுக்கியணைக்க பேதையின் கைகளோ தன்னிச்சையாக மணாளனின் தலையை கழுத்திடைவெளியில் இறுக்கியது....
அவளது அந்த செயல் பெண்ணவளின் சம்மதத்தை தெரிவிக்க மன்னவனும் தன் முத்த ஊர்வலத்தை தொடங்கினான்.
மோகம் தந்த மயக்கத்தில் கோபம்தாபம், மனசஞ்சலம், தயக்கம் என்று அனைத்தும் மறக்கப்பட காதலால் சிக்குண்டு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாத இரு உயிர்களும் சங்கமிக்க சங்கல்பம் எடுக்கத்தொடங்கியது.

அந்த சங்கமத்தில் காதல் இருந்த போதிலும் அதை அந்த இரு உயிர்களும் உணர்ந்ததா இல்லையா என்று அந்த இரு ஜீவனுக்கும் தெரியவில்லை..

ஆனால் தங்கள் முதல் சங்கமத்தில் கூடி கழித்தது அந்த ஜோடி புறாக்கள்.

இடம், பொருள், ஏவல் மறந்து தொடர்ந்த சங்கமம் முடிவடைந்த நேரம் ஒலித்தது வினயின் மொபைல்.
கட்டிலில் படுத்த நிலையில் ஒருகையில் மனையாளை அணைத்தவாறு மறுகையால் மொபைலை எடுத்து காதிற்கு கொடுத்தான் வினய்

“கவின் என்னடா பண்ணுற??? எவ்வளவு நேரமா கதவை தட்டுறது??? வந்து கதவை திற...”என்று வீட்டிற்கு வெளியே இருந்து அபி அழைக்க தான் வருவதாக கூறி அழைப்பை துண்டித்தவன் கூடலில் விளைவால் அயர்ந்திருந்த மனையாளை விலக்கி படுக்க வைத்தவன் மேலாடையை அணிந்து கொண்டு கதவை திறக்க சென்றான்.

கதவை திறந்ததும்

“டேய் எவ்வளவு நேரம்டா...” என்று தொடங்கிய அபி பாதியிலேயே தன் பேச்சை நிறுத்திவிட்டு வினயை உற்று நோக்க வினயோ என்னவென்று புரியாது முழித்திருந்தான்.

வினயை பார்த்த அபி ரியாவிடம் கண்ணை காட்ட இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு கள்ளச்சிரிப்பொன்றை பரிமாறிக்கொண்டனர். இவர்களது சிரிப்பிற்கு அர்த்தம் புரியாத வினயோ அவர்களையே பார்த்தபடியிருக்க அபியோ வினயை அங்கிருந்து இழுத்து செல்ல ரியாவும் வீரலட்சுமியும் தத்தமது அறைக்கு சென்றனர்.

வினயை ஓரமாக இழுத்துவந்த அபியிடம்

“டேய் எதுக்குடா என்னை பார்த்து நீயும் அண்ணியும் சிரிச்சீங்க??? நான் என்ன அவ்வளவு காமடியாவா இருக்கேன்..”

“டேய் நாங்களாவது சிரிக்க தான் செய்தோம்... அனு முழிச்சிருந்தானா உன் மானத்தையே வாங்கியிருப்பா.. போ போய் கண்ணாடியை பாரு...”என்று வினயை அவனது அறைவாசலில் விட்டுவிட்டு அபி தன்னறைக்கு சென்றான்.

தன்னறைக்கு வந்த வினய் கண்ணாடியில் முகத்தை பார்க்க அதில் அவனது கன்னம் இரண்டிலும் சிவப்புநிற உதட்டு சாயமும் அவனது முன்னுச்சியில் சிவப்பு நிற பொட்டும் அங்காங்கே இருந்தது.. இதை பார்த்தவனுக்கு அசடு வழிந்தது...
அந்த பாவனையுடன் மனையாளை பார்க்க அவள் கண்ணயர்ந்த நிலையிலேயே இருந்தாள்.

கூடல் தந்த அயற்சியுடன், இவ்வளவு நாட்கள் மனதில் அழுத்திய பாரமும் நீங்க நிம்மதியில் கண்ணயர்ந்திருந்தாள் பெண்ணவள். அவளை கண்ணிமைக்காது பார்த்திருந்த கணாளனுக்கு அவளது இந்த மாற்றம் அவன் எதிர்பாராதது... அவளிடம் மாற்றம் உண்டாகியிருப்பதை அறிந்த போதிலும் அவளின் இந்த சம்மதத்தை இவ்வளவு விரைவாக பெறுவான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.... அவளின் விலகலுக்கான காரணத்தை அறியாமல் அவர்களது வாழ்வை தொடங்கப்போவதில்லை என்று தீர்மானித்திருந்தவன் இன்று ஏற்பட்ட சலனத்தால் தன் முடிவில் இருந்து பின்வாங்கியதை அவனது மனம் கண்டித்தது... மனைவி என்ற போதிலும் அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளது முழு சம்மதத்துடன் தம் உறவை ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவன் மோகத்தின் பிடியில் சிக்கியிருந்த வேளையில் நடந்த கூடலை அவனது மனம் ஏற்கவில்லை... முரண்பட்ட மனதால் இவ்வளவு நேரம் இன்பக்கடலில் மூழ்கியிருந்தவனின் மனம் குற்றவுணர்வால் தவிக்கத்தொடங்கியது...

அந்த குற்றவுணர்வு அவர்களுக்கு இடையிலான உணர்வு பாலத்திற்கு பங்கமுண்டாக்கும் என்று உணராதவன் அதன் பிடியில் சிக்கித்தவித்தான்.
விளக்கை அணைத்துவிட்டு படுத்தவனுக்கு உறக்கம் தழுவவில்லை... அருகில் படுத்திருந்த மனையாளோ நிம்மதியான உறக்கத்தின் பிடியில் இருக்க கணாளனோ தூக்கம் தொலைத்து குற்றவுணர்ச்சி என்ற சாத்தானின் பிடியில் சிக்கத்தவித்துக்கொண்டு இரவை கழித்தான்.
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN