காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 26

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல் 26

கோயம்பத்தூர்

கல்லூரி மாணவர்களுக்கே உரிய ஆர்பாட்டத்துடன் ஆரம்பிதத்து அந்த காலை பொழுது ஊட்டிக்கு செல்லும் மகிழ்ச்சியில் அனைவரும் பேருந்தில் ஏறி இருந்தனர்.

"சீ கைஸ் எல்லோரும் அவங்க அவங்க திங்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டிங்களா" என்று மீண்டும் ஒரு முறை நியாபகபடுத்தினார் அவர்களின் பேராசிரியர்.

"வைச்சாச்சி வைச்சாச்சி" என வடிவேலு பாணியில் நக்கலடித்தது நம் மாணவ செல்வங்கள் 'ம்ஹீம் திருந்தாத ஜென்மங்கள்' என்று வாயக்குள்ளே முனுமுனுத்தவர் அருகில் இருந்த காலி இருக்கையில் வந்து அமர்ந்தார்.

"மூச்ச பாரு சொட்ட என் ஆளு கூட உட்கார விடாம கேர்ஸ் கேள்ஸ் கூட உட்காரு… பாய்ஸ் பாய்ஸ் உட்காருன்னு எகத்தாலம் பண்ணி பிளானையே சுதப்பிடுச்சி... மூஞ்சியபாரு தேவாங்கு" என்று புதிது புதிதாய் பெயர் வைத்து கொண்டு இருந்தாள் தியாவின் பக்கத்தில் அமரந்திர்ந்த அவளின் தோழி

தியாவோ காதல் நாயகனை காண போகும் ஆவளில் அவனுடன் கனவினில் டூயட் பாடியபடி காதல் உலகில் சஞ்சரிக்க இவளின் விடாது நச்சரிப்பில் "என்னடி எருமை" என்று கத்தியே விட்டாள். தோழியின் மிரண்ட பார்வையில் ஹீ…. ஹீ….. என அசடு வழிந்த தியா அவளிடம் பல்லைகாட்டி இளித்து வைத்தாள்.

அவளின் வித்தியசமான நடவடிக்கையை பார்த்தவள் "காலையில் இருந்து நீ ஒரு மார்கமாதான் திரியுற" என்று அவளை கூர் பார்வை பார்த்தபடி தன் கதையை மறந்து தோழியின் தற்போதைய நிலையை ஆராய்ச்சி செய்ய அவளின் கவனத்தை திசை திரும்பும் பொறுட்டு "என்னடி உன் ஆள சைட் அடிக்கரத விட்டுட்டு என்னை சைட் அடிச்சி கிட்டு இருக்க" என்று சரியாய் அவள் நாடியை பிடித்தாள் தியா.

அது அழகாய் வேலை செய்ய "நீ வேற ஏண்டி கடுப்ப கிளப்பிக்கிட்டு அந்த சொட்ட மண்ட சோட புட்டி பண்ற லொல்லுக்கு அதை காதை புடிச்சி நல்லா கடிச்சி வைக்கத்த்தான் போறேன்" என்றவள் ஏக்கமாக அவளுக்கு எதிர் இருக்கையில் இருக்கும் அவள் காதலன் அஜய்யை பார்த்தாள்.

"குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்

மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்…"

என்று நேரம் காலம் தெரியாமல் பக்கத்தில் இருந்த தியா தோழியை வெறுப்பேற்ற இரண்டு அடிகளை பரிசாய் பெற்றக்கொண்டவள் தோழிகளுடன் கலகலப்பாக ஆட்டம் பாட்டத்தில் இறங்கி இருந்தாள் உட்காருவதற்க்குதான் ஆண் பெண் என்று கட்டுபாடுகள் விதித்த ஆசிரியர் இவர்கள் அடிக்குக்கும் கொட்டத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் அமர்ந்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் இவளும் அமர்ந்து விட மறுபடியும் தன் சித்துவின் நினைவுகள் சுகமாய் தாக்கியது தன்னை காண வருவான தன்னை கண்டதும் அவன் முகம் திருப்புவானா இத்தனை நாள் பிரிவு அவனுக்கு தன்னை பற்றிய அபிப்ராயத்தை மாறி இருக்குமா என் பல கேள்விகளுக்கு விடை காணும் ஆவளில் அந்த பயணத்தை அனுபவித்தாள்.

"என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன்…"

என்று அவளின் மனநிலைக்கு ஏற்ற பாடல் பேருந்தில் ஒலிக்க பாடலை மனதில் உள்வாங்கி இயற்கை காற்று முகத்தில் மோத அமர்ந்திருந்தாள்.

ராஜீவின் வீடு

மாலை வேலைத் தென்றல் இதமான ஈரக்காற்றை வீச வெண்பஞ்சு மேகங்கள் அனைத்தும் ஆரஞ்சு நிறமாய் மாறி சூரியன் பந்து போல் அழகாய் காட்சி தந்துகொண்டிருந்து. தங்கள் அறையில் புத்தகமும் கையுமாய் அமர்ந்து இருந்தாள் ஷீலா. கையில் புத்தகத்துடன் இருந்தாளே தவிர கவனம் அதில் பதியவில்லை அவள் எண்ணம் முழுவதும் இன்று நாள் தொடங்கியது முதல் தாய் தந்தையரையே சுற்றி வந்தது எவ்வளவு முயன்றும் எண்ணத்தில் உதித்ததை ஒதுக்கி தள்ள முடியாமல் மெத்தையின் மீது சாய்ந்த வாக்கில் கதவிற்கு முதுகு புறம் காட்டி அமர்ந்து இருந்தாள் ஷீலா.

அறைக்குள் நுழைந்த ராஜீ ஷீலாவின் பின்புறம் பார்த்தவன் புதுமனைவியை அணைக்க ஆவள் கொண்டு சத்தம் இல்லாமல் கதவை தாளிட்டு அடிமீது அடிவைத்து பூனை நடை நடந்தவன் காதலியின் கண்களை மூட ஒரு நொடி அதிர்ந்தவள் அவன் ஸ்பரிசத்தை உணர்ந்ததும் "என்ன ராஜீ பட்டபகல்ல கையை எடுங்க" என்று சிணுங்கி கொள்ள அவள் சிணுங்கிய அழகில் மையல் கொண்டவன் மனைவியின் முகத்தில் தன் விரல் கொண்டு கோலம் வரைந்து ரோஜா இதழ்களை வருட கணவன் கைகளுக்குள் ஆடங்கி இருந்தாலும் அவன் போக்கை கண்டு திகைத்து கையை தட்டிவிட்டு அலுப்பாக அவனிடமிருந்து விலகினாள்.

ஷீலாவின் விலகலில் சற்று கோபம் எட்டி பார்த்தாலும் மனைவியின் மேல் உள்ள காதல் கோபத்தை அடக்கிவிட "என்னடி உடனே தட்டிவிட்டு எழுந்துக்குற" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான். அவன் முகபாவத்தை கண்டவளின் மனம் மீண்டும் சுணக்கம் கொள்ள அவனை கேளாமலையே அவன் மார்பில் தஞ்சம் கொண்டு ஆழபுதைந்து கொண்டாள்.

மனைவியின் செயலில் ஒரு புறம் அகமகிழ்ந்தாலும் மறுபுறம் அவளின் தீடீர் அணைப்பு அவளின் மன்னவனுக்கு சிந்தனையே கொடுத்தது. ஷீலாவின் தலையை ஆதுரமாக தடவியவன் தன் மார்பில் புதைந்தவளின் நாடியை தன் முகம் நோக்கி உயர்த்தி அவளின் கண்களை பார்க்க அதிலிருந்த கலக்கத்தை கண்டவன் "என்னாச்சிடா" என்றான் கரிசனமாய்..

"நாம தப்பு பண்ணிட்டோமா ராஜீ" என்றபடி அவனை பார்த்தாள்.

"தப்பா எங்கடி நான் இன்னும் கட்ட பிரம்மச்சாரி டீ" என்றான் இன்னும் நெருங்கி நின்று

"பச் நீங்க வேற ராஜீ" என்று சலித்துக்கொண்டவள் அவனை தள்ளிவிட்டு திரும்பி நின்றுகொண்டாள். "நான் என்ன சொல்ல வரேன்னு புருஞ்சிக்காம இப்போ போய் ரோமேன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கிங்க" என்றாள் எரிச்சல் நிறைந்த குரலில்.

"இப்போ என்னதாண்டி சொல்ல வர" என்றான் சலித்த குரலில் அவளை தன் புறம் திருப்பி இந்த கல்யாணம் என்று கூற வந்ததும் அவள் வாயை பொத்தியவன் "நீ என்ன காதலுக்கு மரியாதை படம் பார்த்தியா நேத்து... நம்ம வாழ்க்கைல தைரியாமா முடிவு எடுத்து நல்லபடியா வாழ தொடங்கிட்டோம். அப்கோர்ஸ் இன்னும் கொஞ்ச நாள்ல உண்மையா வாழப்போறோம் இப்போ வந்து தத்துபித்துன்னு தப்பு பண்ணிட்டோம்ன்னு கல்யாணத்த பத்தி பேச்சி எடுத்து அது இதுன்னு உளறுற வேலைய வைச்சிக்காத ஷீலு' என்று கேளியாக ஆரம்பித்து கண்டிப்புடன் முடித்தான் ராஜீ.

"அது இல்ல ராஜீ என்னால தானே பிரச்சனை உன் நிம்மதியும் கெட்டுச்சி" என்று அவளும் தன்மனதில் இருப்பதை கொட்ட

அவள் கூற கூற ஏதோ என்று நினைத்தவன் மறுபடியும் விட்ட இடத்திற்கே வர மறைந்த கோபம் இன்னும் அதிகமாய் வெளிபட 'அறைஞ்சேன்னா பாரு' என்று அவளின் கையை அழுத்தி பிடித்தவன் அதுக்கு "இதை தூக்கிப்போட்டு விலகிடனும்னு சொல்றியா" என்று கூற வர அவனின் வாயை கைகளால் பொத்தியவள் 'நான் உன்னை விட்டு விலகனும்னு நினைச்சா அது நான் செத்த பிறகுதான் முடியும் ராஜீ உன்னை அவ்வளவு லவ் பண்றேன் டா" என்று அவனின் மீது சாய்ந்துகொண்டு கண்கலங்கினாள்.

அவளின் பதிலில் கீற்று புன்னகை உதயமாக அவளை இறுகி அணைத்தபடி அப்பக்கூட உன் தனியா விடாம உன் கூடவே எப்பவும் நான் இருப்பேன் டி என் செல்ல பொண்டாட்டி". என்றவன் "இப்போ என் செல்ல குட்டிமாவுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத குழப்பம்லாம் வந்துச்சி என் கண்ணை பார்த்து உண்மை சொல்வாளாம் என் குட்டிமா' என்று இறுக்கிய பிடியை தளர்த்தாமலேயே தன் மனைவியிடம் கேள்வியை எழுப்பினான் ராஜீ.

அவனை பார்த்து தயங்கியடியே "இன்னைக்கு என் பேரண்ட்ஸ் வெட்டிங் டே ராஜீ... விவரம் தெரிஞ்சதுல இருந்து எப்பவும் முதல் ஆளா நான்தான் அவங்களுக்கு விஷ் பண்ணுவேன் இன்னைக்கு" என்று மேலும் கூறமுடியாமல் அழ ஆரம்பித்தாள்.

"ஷ்….. முதல்ல ஆழறத நிறுத்துடி எதுக்கு எடுத்தாலும் இந்த வாட்டர் ஃபால்ஸ ஆன் பண்ணிடுற அதுவும் நிக்காம ஊத்திடுது" என்று கிண்டல் செய்தவாறே தன் மொபைலை அவளிடம் கொடுத்து போன் பண்ணி பேசு என்று விட அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி தான். சட்டென அதை வாங்கியவள் விறு விறுவென எண்களை அழுத்தி காதில் பொறுத்தி பதிலுக்காக ஆவளாய் காத்திருந்தாள். ஆனால் அதை எடுப்பார் யாரும் இல்லாமல் அடித்து அடித்து ஓய்ந்து போனது.

மலர்ந்திருந்த மனைவியின் முகம் சட்டென வாடிவிட "என்னடா" என்றான். "ரிங் போகுது யாரும் எடுங்கல ராஜீ" என்று ஏமாற்றதுத்துடன் கூறியவள் விழிகளில் இப்போவோ அப்பவோ என கண்ணீர் நிறைந்திருக்க ஸ்…. என்ற பெரூமுச்சிடுடன் "வா கொஞ்சம் வா வெளியே போயிட்டு வரலாம்" என்றான்.

'இல்ல ராஜீ நான் எங்கேயும் வரல" என்று சோர்ந்துபோய் மெத்தையில் அமர்ந்தாள்.

"நீ கிளம்பி வர" என்று அவளிடம் கூறிவிட்டு வெளியே வந்தவன்… சிறிது நேரம் கழித்து வந்து அவளை வலுகட்டாயமாக வெளியே அழைத்து சென்றான்.

ஊட்டி…

ஆடி பாடி கொட்டமடித்து சேட்டைகளுடன் ஆரவரமாய் இருந்த மாணவர்கள் கூட்டம்

ஊட்டியை அடைந்தது. சில்லென்று காற்று மேனியை தீண்ட தேகம் சிலிர்த்து அடங்கியது தியாவிற்கு கூடவே அழையா விருந்தாளியாக தன் காதல் கண்ணனின் நினைவுகளும் வந்து ஒட்டிக்கொண்டது.

பேருந்தில் இருந்து இறங்கியவளுக்கு கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தது அவள் நாயகனின் காட்டேஜ் இதை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை அவனை எப்படியும் இந்த ஊட்டியில் சந்திக்க வேண்டும் என்று நினைத்தவள் அவனுடைய ஹோட்டலிலேயே தாங்குவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை

அவனுடைய நினைவினிலேயே லக்கேஜை எடுத்து இறங்கியவள் மலர்ந்த முகமாகவே இருந்தாள். அங்கு இங்கு என்று அவனை தேடி அலைபாய்ந்த கண்கள் அவனை காணாத ஏக்கத்தை தத்து எடுக்க ஏமற்றத்துடனே மொபைலை எடுத்தவள் மஞ்சுளாவிற்கு போன் செய்து தான் ஊட்டி வந்து இறங்கிய தகவலை தெரிவித்தபடியே வர எதிரில் காட்டேஜ் விஸ்தாகரிப்புகாக மரபலகை சுமந்தபடி வந்து கொண்டிருந்த ஆட்களை கவனிக்க தவறியவள் அதன் மீது மோதும் முன் அவளை இழுத்து விட்டது ஒரு கரம்.

எதிரில் வந்த பொருளுடன் மோதாமல் இழுத்ததில் ஒரு பக்கம் அதிரிச்சியாய் நின்றவள் அவளை இழுத்து பிடித்து நிறுத்திய கரத்திற்குறிய முகத்தை பார்த்ததும் அவள் வகுப்பு தோழன் அஜய் நிற்க்கவும் "தெங்கஸ்... தெக்யூ சோமச் அஜய்" என்றாள் தியா.

அவளின் பார்வையில் இருந்த பயத்தை போக்க நினைத்த அஜய் "என்ன நினைப்புல வந்துக்கிட்டு இருக்க…. இந்நேரம் அந்த பலக மேல மோதி இருந்தா பலக இரண்ட பொளந்து இருக்கும் பாவம் இந்த காட்டேஜ் ஓனர் நஷ்டத்துல போயிட்டா அதான் ஏதோ என்னால முடிஞ்ச ஒரு உதவிய செஞ்சேன்" என்று அவளை கலாய்த்தான்.

"போடா எருமை... ஏதோ மோதவிடாம காப்பதினன்னு நினைச்சி தாங்கஸ் சொன்னா என்னையே நக்கலடித்கிரியாடா குரங்கு ??? என்று வசைபாடி இரண்டு கொட்டு அவனை தலையில் கொட்டியவள் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக முதல் ஆளாய் காட்டேஜிற்குள் ஓடினாள்.

'என்னையே கொட்டுறியாடி குரங்கு உண்மைய சொன்னா கோவம் தான் வரும் அதுக்கு பயந்து சொல்லாம இருக்க முடியுமா?" என்றபடி அவளை துரத்துவது போல் பாசாங்கு செய்தவன். அவள் உள்ளே ஓடவுடவும் இவனும் பின்னாலேயே தூரத்தினான்.

அவன் வருகிறான் என்று தெரிந்ததும் எங்கே அடித்து விடுவானோ என்ற எண்ணத்தில் "போடா பன்னி என்னை புடிக்க முடியாதுடா மலமாடு" என்று அவனை பாரிகாசம் செய்தபடியே ஓடியவள் எதிரே வரும் நபரின் மீது மோதிவிடுவோம் என்று தெரிந்து தன் கால்களுக்கு சடன் பிரேக் இட்டு நிறுத்தியவள் சற்று தள்ளாட்டத்துடன் நின்றாள்.

தியாவின் பின்னே துறத்தி வந்தவன் அவள் மேல் மோதாமல் சற்று கைகளால் இடித்தபடி நின்றான். இதுதான் சாக்கு என்றவள் எண்ணியவள் வேண்டுமென்று எதிரில் நின்றவன் மேல் மோதிவிட அவளை தன்மீது இருந்து பிரித்து நிறுத்தியவன் உனக்கு "அறிவு என்பதே இல்லையா" என்று கோவமாக கத்திவிட்டான்.

"ஏன் ??? என்ன?... இல்லன்னதும் அதை வாங்கி எனக்கு கொடுக்க போறிங்களா சார்!!!!" என்று நக்கலாக ஆரம்பித்தவள் இந்த தடிபய என் மேல இடிச்சிதுனால தெரியாம உங்க மேல மோதிட்டேன் அதுக்கு சாரி சார் ஆனா அதுக்கு போய் நீங்க அறிவில்லையான்னு கேப்பிங்களா??? நீங்க யார் சார் என்னை அப்படி கேக்க??" என்று விட்டு அவனை பார்த்தபடி இவளும் விவகாரமாய் ஆரம்பித்தாள்..

ஏய் என்ன திமிரா... எங்க விளையாடனும். எங்க அமைதியா இருக்கனும்னு தெரியாம இப்படி வந்து நிக்கிற யார் வர்ரன்னு தெரியாம மேல வந்து மோதுர கேட்டா நீ யார்ன்னு கேள்வியா கேட்டு ஏடாகூடமா பதில் சொல்ற கொஞ்சம் கூட மேனர்ஸ்ன்னா என்னான்னு தெரியாதா?"... என்று அவளிடம் சத்தம் போட்டவன் வேறு யாரும் அல்ல சாட்சாத் அவளின் காதல் நாயகன் சித்துவேதான் அவனிடம் ஆசையாய் காதலாய் பேசமுடியாமல் ஏங்கியவள் அவனிடம் வம்பு வளர்க்கும் ஆசைகொண்டு பேச்சை வளர்த்தாள். இதன் உள் நோக்கம் அறியாமல் அவளிடம் ஒரு ஆடவன் விளையாட்டு தனமாய் பழகுவது எரிச்சல் தர அதன் காரணமாய் கோபம் கொண்டு அவளை திட்டிக்கொண்டு இருந்தான் சித்து..

"இப்போ என்னங்குரிங்க…. இடிச்சிட்டேன் அதுக்கு சாரி. அதுக்கு நான் என்னோமோ உங்கள மேல வேணும்ன்னே மோதனா போலவும் உங்களுக்கு முத்தம் கொடுத்து கட்டிபுடிச்சது போலவும்ல சீன் போடுரிங்க…. இப்போ என்ன சார் வேணும் என்ன வேணும் நான் தெரியாம இடிச்சிட்டேன் வேணுன்னா நீங்க என்னை இடிச்சிடுங்க சார்" என்று அவன் முன்னே சற்று நெருங்கி வந்தவளை பார்க்க அவனுக்கு இதய துடிப்பு வேகமாய் ஏறி இறங்கியது.

'இவகிட்ட தெரியாதனமாய் வாயகொடுத்து வாங்கி கட்டிக்கிரியேடா வந்த முதல் நாளே என்னை திக்குமுக்காட வச்சிட்டாளே ஏதோ காலேஜ் மூலமா இந்த புக்கிங் வருதே இவ ஆலும்பல் பண்ணமாட்டான்னு நினைச்சது தப்பா போச்சே டா தடி தாண்டவராயா' என்று அவன் தலலையில் கை வைக்காத குறையாக நொந்துதான் போனான். இருந்தும் அவள் மேல் சற்றும் கோவம் குறையாமல் இருந்தான்.

இவர்கள் பேசுவதை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனோ வாய்பேச்சு முற்றி வருவதை உணர்ந்து "சார் சார் சாரி சார். இவ சரியான லோடலோட டப்பா கொஞ்சம் துருதுருன்னு பேசுவா… சரியான சண்டி ராணி இப்போ கூட உங்களோட மரக்கட்டை கிராஸ் பண்ணும் போது இவ தலை பட்டு உங்க மரம் உடைஞ்சு போகமா நான் காப்பாத்தியதுக்கு தான் இப்படி என்னை அடிச்சிட்டு ஓடி வந்துட்டா... அறுந்தவாலு" என்று அவளின் தலையில் அவள் கொட்டியது போலவே கொட்டிவிட வலியில் தலையில் கை வைத்து முறைத்து "சீ எருமை மரமண்டை போடா" என்று தியா அவனை திட்டவும் மறக்கவில்லை….

'இவன் ஒருத்தன் அவளுக்கு வக்காளத்து வாங்கிக்கிட்டு அவள பத்தி என்கிட்டியே கதை அளந்துகிட்டு இருக்கான்' என்று ஏக கடுப்பில் நின்றிருந்தான் சித்து.

"நீ வாட... ஆளு விரப்பா நிக்கட்டும் ஊட்டி குளுரூக்கு விறச்சி போய் இருக்காபோல" என்று அவனை நக்கலடித்தவள் நண்பனின் தோளில் முழங்கையை ஊணியது போன்ற தோறணையில் பேச இவனுக்கு ஏகத்திற்கும் பிபி எகிறியது.' நான் பேசுற பேச்சிக்கு கொஞ்சமாச்சி ரியாக்ஷன மாத்து மாமு எப்பயும் கண்ணை கோலிகுண்டு உறுட்டுரா மாதிரி உறுட்டிக்கிட்டு' என்று அவனை மனதிற்குள் வறுத்து எடுத்தாள் தியா.

'பொண்ணுன்னு உன்னை நினைக்க ஏதாவது ஒன்னாச்சி செய்றியா பெரிய ரவுடி மாதிரி அவன் தோள் மேல கைய போட்டுகிட்டு நிக்கிற... ஸ்டைல பாரு குள்ள வாத்து எலின்னு எங்க அம்மா பேரு வைச்சது சரிதான் இருக்கு... குடைஞ்சிகிட்டே இருக்க டீ 'என்று மனதில் நினைத்து பற்களை கடித்தான் அவனின் தாடையின் இறுக்கத்திலேயே சித்துவின் கோபத்தை உணர்ந்தவள் இதுக்குமேல போனா அடிச்சிடுவானோ என எண்ணினாள்.

"ஏய் அனுமாரு வாய மூடுடி உன் சேட்டைய அவருக்கிட்ட காட்டத அறுந்த வாலு.. நீ வா நாம போலாம்" என்று அவளின் கையை பிடித்து இழுத்து செல்ல சித்துவை பார்த்து நக்கலாக "நமக்கு ஒரே ரூம் தானே அஜய் நீ மாத்திடலையே" என்று கேட்டுக்கொண்டே வேகமாக அந்த இடத்தை காலிசெய்து இருந்தாள். கொஞ்சம் தாமதித்து சென்றிருந்தாள் சித்து என்று சாந்த சொரூபிணி நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்து இருந்திருப்பது மூளைக்கு உறைத்திருக்கும் இவளுடைய நல்ல நேரமோ என்னவோ அவனிடம் தனியாக அகப்படாமல் சென்றது. மீதம் இருக்கும் நாட்களும் இவ்வறாகவே அமையுமா இருவருக்கும்…… அனைத்தும் அவன் செயல்..
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 26
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN