அத்தியாயம் 11

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 11
தாயும் நீயே...
தந்தையும் நீயே....
உயிரும் நீயே...
உண்மையும் நீயே...
தூணிலும் இருப்பாய்...
துரும்பிலும் இருப்பாய்...
கொடுமை அழித்துவிட...
கொள்கை ஜெய்த்துவிட சக்தி கொடு...
அர்ச்சனா தன் இனிய குரலை கணீர் குரலாக மாற்றி பூஜை அறையில் பாடிக்கொண்டு ( கத்திக்கொண்டு) இருந்தாள். இன்று பொதுத்தேர்வு ஆரம்பிக்கும் நாள். எப்பொழுதும் தேர்வு சமயங்களில் கந்த சஷ்டி கவசம் பாடிவிட்டு இறைவனுக்கு ஐஸ் வைத்து விட்டு செல்பவள் இன்று 'சக்தி கொடு' என்று பாடியதை யார் கவனித்தார்களோ இல்லையோ அர்ஜூன் நன்றாகவே கவனித்திருந்தான். அதன் விளைவு தேர்வு முடியும் வரை அர்ச்சனாவை பள்ளியில் விடும் பொறுப்பை அர்ஜூனே ஏற்றான்‌.
அதன்படி தற்போது அர்ச்சனாவை பள்ளியில் விட்டுவிட்டு காரில் சாய்ந்தபடி ஏதோ சிந்தனையுடன் அவள் தேர்வு அறைக்குள் செல்லும் வரை பள்ளி வளாகத்திலேயே காத்து கொண்டு இருக்க, அவன் சிந்தனையின் நாயகனே அவன் கண்ணெதிரே தோன்றினான்.
சக்தி தனது பைக்கில் இருந்து இறங்கி நேராக பள்ளியின் அலுவலக அறைக்கு வேக எட்டுக்களை எடுத்து வைத்து சென்றான். அவன் சென்ற வேகத்தில் அர்ஜூனை சற்றும் கவனிக்கவில்லை. ஆனால் அர்ஜூன் அவனையே தான் கவனித்து கொண்டு இருந்தான்.
சற்று நேரத்திலேயே வெளியே வந்து வேகநடையுடன் பள்ளியின் வகுப்பறைகளை பார்வையிட, அவன் பின்னே தலைமை ஆசிரியரும் மேலும் இரு ஆசிரியர்களும், அலுவலக உதவியாளர் ஒருவரும் சக்தியை பின்தொடர்ந்தது வந்தனர்.
அர்ஜூன் காரில் சாய்ந்து கொண்டு கைகளை கட்டியபடி அர்ச்சனாவையும் சக்தியையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான். அர்ச்சனாவின் பார்வை சக்தியையே விடாமல் தொடர்வதை கண்டவன் தனக்கு கிடைத்த தகவல் உண்மை தான் என்று முழுவதும் நம்பி வீட்டிற்கு புறப்பட்டு சென்றான். சக்தி மேல் வந்த கோபம் எல்லாம் சிவரஞ்சனி மேல் திரும்பியது அவளின் கெட்ட நேரமோ என்னவோ...
***********
அர்ச்சனா நீ இங்க தான் ‌படிக்கறியா... தெரிந்தும் தெரியாதது போல் கேட்ட சக்தியை பார்த்து உதட்டை சுழித்தவள் "ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுன்னு ஒரு பழமொழி இருக்கு.... கேள்விபட்டு இருக்கீங்களா...?" என்று அவள் கூறிய விதத்தில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. தேர்வு எழுத போகும் மாணவர்கள் மத்தியில் சிரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்று உணர்ந்தவன் அதை அடக்கி கொண்டான்.
"இது பழைமையான மொழி மாதிரி தெரியலையே..." அவள் பழமொழி என்று கூறியதால் அவ்வாறு கேட்டவன், அவள் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.
"பழம் போல் இனிக்கும் மொழி..." என்று விளக்கம் அளித்தவள் நேரம் ஆகியதை உணர்ந்து "நீங்க என்ன இந்த பக்கம்...?" என்றாள் கைக்கடிகாரத்தை பார்த்தபடி.
"இது நம்ம ஸ்கூல்ன்னு உனக்கு தெரியாதா...? எக்ஸாம் நடக்குது இல்ல... அதான் அப்பா கொஞ்சம் பார்த்துக்க சொன்னாரு... நியாயப்படி இது உன் அண்ணியோட வேலை... எனி வே... ஆல் த பெஸ்ட்... நல்லா படிச்சு இருக்கியா... ஸ்டேட் பஸ்ட் வந்துடுவ இல்ல..."
"எப்பவும் விட நல்லா படிச்சு இருக்கேன்... நல்லா தான் எழுதுவேன்னு நம்பிக்கை இருக்கு... நீங்க வேனா பாருங்க... கண்டிப்பா என்ன நீங்க லவ் பன்னுவீங்க..." என்று அவள் கேஷுவலாக கூற, ஒரு நொடி சுற்றிமுற்றி பார்த்தவன் யாரும் இதை கேட்டு இருக்க மாட்டார்கள் என்று உறுதி செய்து கொண்டு பிறகு அவளிடம் பேச ஆரம்பித்தான்.
"ம்... பாக்கலாம்... நீ ஸ்டேட் பஸ்ட் வந்தா கண்டிப்பா நான் உன்ன லவ் பன்னரேன்... இப்போ லாங்வேஜ் பேப்பர் தான... இதுல அட்லீஸ்ட் 99% எடுத்தால்தான் மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் சென்டம் வாங்கி ஸ்டேட் பஸ்ட் வரலாம்.... இல்லன்னா..." என்றவன் உதட்டை பிதுங்கி கையை இதய வடிவில் வைத்து அது இரண்டாக பிரிந்து செல்வது போல் காட்டினான்.
முதலில் அர்ச்சனாவை பார்த்தவுடன் சக்திக்கு பிடித்து தான் இருந்தது. பொங்கல் பண்டிகை அன்று நன்றாக சைட் அடித்தான். ஆனால் அர்ஜூன் சிவாவின் நிச்சயதார்த்தம் அன்று தான் அவனுக்கு தெரியும் அர்ச்சனா பள்ளி மாணவி என்று. அத்தோடு பள்ளி சிறுமியை காதலிப்பது அரஜூனுக்கு தெரிந்தால் சிவரஞ்சனிக்கு தான் நல்லதல்ல என்பதை உணர்ந்தே இருந்தான். அதனால் தன் வாலை சுருட்டி வைத்து கொண்டு நல்ல பிள்ளையாக மாறி இருந்தான் சக்தி.
ஆனால் அர்ச்சனாவே காதலை தெரிவித்ததும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவனின் விளையாட்டுத்தனம் தலைத்தூக்க கொஞ்சம் அவளை சீண்டி பார்க்க விரும்பினான். அதனாலேயே திரும்ப திரும்ப அவள் முன் வந்து நின்று அவளிடம் தானாக பேச்சை வளர்த்தான்.
நேரம் ஆனதற்கான பள்ளி மணி அடிக்க ஓகே பாய்...ஆல் த பெஸ்ட்... என்றவன் திரும்பவும் அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டான்.
********
அழைப்பு மணியின் ஓசை கேட்டு கதவை திறந்த சிவரஞ்சனிக்கு அங்கு அர்ஜூன் நின்று இருந்தது இன்ப அதிர்ச்சி தான். ராக்கியின் பிரச்சினையை அர்ஜூன் சுமூகமாக முடிந்ததில் இருந்து சிவரஞ்சனிக்கு அவன் மேல் ஒரு நல்லெண்ணம் தோன்றி இருந்தது.
அதனாலேயே இந்த மூன்று நாட்களாக அவன்‌ எள்ளு என்றால் எண்ணெயாக இருந்தாள். அதற்கும் திட்டு வாங்கியது எல்லாம் வேறு விஷயம்... அவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தாள். இப்பொழுது ‌அவன் அலுவலகம் செல்லாமல் வீட்டிற்கு வந்தது கூட அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
"அர்ச்சனாவை ஸ்கூல்ல விட்டுடீங்களா... ஒழுங்கா எழுத சொல்லி அட்வைஸ் பண்ணீங்களா... லீவ் போட்டுடீங்களா... இல்ல ஒர்க் ஃப்ரம் ஓம்அ... இப்போ லாங்இன் பன்ன போறீங்களா....?" கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டு இருந்த சிவரஞ்சனியிடம் "ம்ச்...." என்று சலிப்பாக பதிலளித்து அவளை கப்சிப் என்றாக்கியவன் தன்னறையில் அடைந்து கொள்ள சிவரஞ்சனி சமயலறை சென்றாள்.
டீக்கு அடிமையான அவனுக்கு பிடித்தபடி அதிகம் டிகாஷன் கொஞ்சம் பால் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து டீயை தயாரித்தவள் அவனுடைய கப்பில் எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். அப்பொழுது அவன் கையில் இருந்தது அவளும் சக்தியும் எடுத்த போட்டோ.
மரத்தால் ஆன வேலைபாடுகளுடன்‌ இருந்த அந்த‌ போட்டோ பிரேமில் இருந்த புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு சக்தியின் பட்டமளிப்பு விழா அன்று அவனின் கல்லூரியில் எடுக்கப்பட்டது. அதில் சிவரஞ்சனி சக்தியின் சிவப்பு நிற பட்டை வைத்த, வெள்ளை நிற கிராஜுவேஷன் கவுனை அணிந்து வலது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இரண்டையும் நீட்டி வெற்றி குறி காட்டி கொண்டு வாய்கொள்ளா புன்னகையுடன் இருக்க, சக்தி அவளின் தோலில் ஒரு கையைப் போட்டுக்கொண்டும் மற்றொரு கையையில் இருவிரல் காட்டிக்கொண்டும் இருந்தான்.
அதை பார்த்துக்கொண்டு இருந்த அர்ஜூனிடம் டீயை நீட்ட, சிவரஞ்சனியிடம் இருந்து டீயை வாங்கிய அர்ஜூன் மற்றொரு கையையில் இருந்த அந்த புகைப்படத்தை கீழே விட்டுவிட்டு அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்து சிவரஞ்சனியின் முகபாவனங்களையே பார்த்து கொண்டு அதை மெல்ல ரசித்து ருசித்து பருகினான்.
சிறிது நேரம் கீழே உடைந்து கிடந்த புகைப்பட சட்டத்தையே வெறித்த சிவரஞ்சனி பிறகு அர்ஜூனை முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள்.
"கண்ணாலேயே பொசுக்கிடுவ போல இருக்கே..." என்ற அர்ஜூன் டீ முழுவதையும் ஒரேயடியாக வாயினுள் சாய்த்திருந்தான்.
"அர்ஜூன்... நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லை... இப்போ எதுக்கு இந்த ஃபோட்டோவ உடச்சீங்க... கொஞ்ச நாள நல்லா தான இருந்தீங்க... இப்ப என்ன திடீர்னு முருங்கை மரம் ஏறிட்டீங்க...என்ன தான் பிரச்சினை உனக்கு..." சூடாக கேள்வி எழுப்பிய சிவரஞ்சனிக்கு பதில் சூடாகவே கிடைத்து.
"நீயும் உன் தம்பியும் தான் பிரச்சினை... எனக்கு வந்த கோபத்துக்கு அங்கேயே உன் தம்பிய ஒரு வழி ஆக்கி இருப்பேன். பப்ளிக்னு விட்டேன்... ஒழுங்கா இருக்க சொல்லிவை... இல்ல நடக்கிறதே வேற..."
"சக்தி என்ன பன்னான்...? "
"ம்... அதை உன் தம்பிட்டயே கேட்டுக்கோ... இப்போ இடத்தை காலி பன்னு..." என்றவன் உடைமாற்ற சென்றுவிட தனது கைப்பேசியை எடுத்தவள் காலி கப்புடன் வெளியே சென்று துடைப்பம் மற்றும் முறத்துடன் உள்ளே வந்தாள்.
அதை பார்த்த அர்ஜூன் ம்ச்... என்று மீண்டும் சலிப்பாக தனது மடிக்கணினியை எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான். ஃபோட்டோவை மட்டும் தனியாக எடுத்து மேசையின் மீது வைத்தவள் கண்ணாடி துண்டுகளை எல்லாம் வாரி எடுத்துக்கொண்டு வெளியே செல்ல, மேசை மீது அவள் வைத்த ஃபோட்டோவை எடுத்தவன் திரும்பவும் அதையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவன் பார்த்தவரையில் சிவரஞ்சனி இதுவரை அதில் உள்ள அளவுக்கு மகிழ்ச்சியாக சிரித்தது இல்லை. அவள் இங்கு மகிழ்ச்சியாக இருந்தால் தானே இவ்வளவு அழகாக சிரிப்பதற்கு... என்று நினைத்தவன் அதில் உள்ள சக்தியை பார்த்தான்.‌
'சக்தி நல்லவன் தான்... ஆனால் ஏன் பள்ளியில் படிக்கும் பெண்ணை போய் காதலிக்கிறான்...' என்று யோசிக்க, அவனின் மனசாட்சி 'நீ மட்டும் என்ன ஒழுங்கா... நீ இரு தங்கையுடன் பிறந்துவிட்டு மிகவும் சிறிய பெண்ணை காதலிக்கவில்லையா...? அதற்கு தான் ‌இப்போது உன் மச்சானே உனக்கு ஆப்பு வைத்துவிட்டான்... அதோடு வைத்தக்கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தது உன் தங்கை தான்... சக்தி இல்லை... ' என்று அவனை பார்த்து ‌எகத்தாளமாக சிரித்தது.
"வயது பெண் முன் சீன் போட்டுக்கொண்டு இங்கும் அங்கும் நடந்தால் எந்த பெண்ணாய் இருந்தாலும் பார்க்க தான் செய்வாள்..." என்று அதற்கு அவன் பதிலடி தர அவனின் மனசாட்சி அவனை விடுவதாக இல்லை.
"மூன்றாம் மனிதன் ஒருவன் சொல்வதை, வீடியோ காட்டுவதை எல்லாம் நம்பிக்கொண்டு உன் உறவுகளையே சந்தேக படுகிறாயா... நீ எப்போது இவ்வளவு மட்டமாக மாறினாய்..." என்று கேட்க அர்ஜூனின் பதில் மௌனம் மட்டுமே.
அந்த நேரத்தில் புயல் போல் உள்ளே நுழைந்த சிவரஞ்சனி "அர்ஜூன்... ப்ளீஸ்... அத ஒன்னும் பன்னிடாதீங்க... என்கிட்ட கொடுங்க..." என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.
முதலில் புரிந்து கொள்ளாத அர்ஜூன் பிறகு என்ன கூறுகிறாள் என கண்டுகொண்டு "அர்ஜூனா...?" என்றான் புகைப்படத்தை தராமல் முதுகுக்கு பின் ஒலித்து வைத்தபடி..
"சாரி... சாரி... இனி இப்படி சொல்ல
மாட்டேன்..." அவன் முதுகுக்கு பின் ஒலித்து வைத்ததை பார்த்துவிட்டு 'அந்த போட்டோவ பிடுங்குற மாதிரி கொஞ்சம் ரொமான்ஸ் பன்னலாமா...' என கிரிமினலாக யோசித்த மூளையை மானசீகமாக தலையில் தட்டி அடக்கிவிட்டு மன்னிப்பு கேட்டு வைத்தாள்.
"இதைத்தான் ஒவ்வொரு தடவையும் சொல்லிட்டு இருக்க...."
"ப்ளீஸ்ப்பா... அதை கொடுத்துடுங்க..."
"அவனை மட்டும் அத்தான் அத்தான்னு கூப்பிடற... கட்டன புருஷன பெயர் சொல்லி கூப்பிடற..." என்று அவன் கேட்க 'பொறாமை ரொம்ப பொங்குதே... அப்படி வா வழிக்கு...' என்று நினைத்தபடி அவனுக்கு பதிலலித்தாள்.
"நீங்க ஐ.டி ல வேலை செய்யறதால‌ நேம்‌ சொல்லி கூப்பிட்டேன்... அத்தான்ன்னு கூப்பிட்டா பட்டிக்காடுன்னு சொல்லிடுவீங்களோன்னு நினச்சு தான் அப்படி கூப்பிட்டேன். இனி கண்டிப்பா நேம் சொல்லி கூப்பிட மாட்டேன்... இனிமேல் உங்களையும் அத்தான்னு கூம்பிடரேன்...." என்று தன்னிலை விளக்கம் அளித்தவள், பிறகு தயங்கியபடியே "ப்ளீஸ் கொடுங்க அ...அத்தான்..." என்றாள்.
"கேவலமா இருக்கு... இனி என்ன மட்டும் இல்ல... யாரையும் அப்படி கூப்பிட கூடாது..." என்றவனிடம் நல்ல பிள்ளையாக வேகமாக தலையாடி வைத்தாள்.
"அவன் உன்ன எப்படி கூப்பிடுவான்...?"
"அத்.... நிரஞ்சனா..? எங்க பாட்டி கூப்பிடற மாதிரி பாப்பா பாப்பான்னு கூப்பிடுவாறு..." அத்தான் என்று கூற வந்தவள் மாற்றிக்கொண்டு பெயர் கூறினாள்.
"பாப்பாவா...?" என்று முகத்தை சுளித்தவன் அந்த புகைப்படத்தை அவளிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்டவள் மறக்காமல் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த, சக்தி மற்றும் ஸ்ரீதர் நின்றபடியும் சிவரஞ்சனி ஒரு மரநாற்காலியில் அமர்ந்தபடியும் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை எடுத்து கொண்டு வெளியே செல்லும் போது, அர்ஜூனை பார்த்து நாக்கை துருத்தி அழகு காண்பித்து விட்டு சென்றாள்.
'முதலில் எல்லாம் அழுது வடிந்த படி இருந்தது என்ன... இப்பொழுது குரங்கு சேட்டை எல்லாம் செய்வது என்ன...' என்று நினைத்தவனின் மனதில் வீட்டினுள் வரும்போது இருந்த கோபம் தற்போது துளியும் இல்லை.
"பாப்பா..." என்று கூறி பார்த்து சிரித்தவன் பிறகு ஏதோ யோசனையில் இருக்க, சிவரஞ்சனி திரும்பவும் உள்ளே வந்து அவன் முன் நின்றாள்.
"உங்கள இனி மாமான்னு கூப்பிடவா...?" என்று ஆர்வமாக கேட்டவளிடம் "உன் மாமனார அப்படி தானே கூப்பிடர... அவருடைய புள்ளையையும் அப்படியே கூப்டா நல்லாவா இருக்கு..." என்றவன் தனது லேப்டாப்பில் என்னவோ தட்ட ஆரம்பித்தான்.
"நிரஞ்சன உங்களுக்கு எப்படி தெரியும்...? அவர் நம்ம கல்யாணத்துக்கு ஏன் நிச்சயதார்த்தம் அப்போ கூட வரலையே..."
"தெரியும்..." மடிக்கணினியில் இருந்து அவன் பார்வையை சற்றும் அகற்றவில்லை.
"அதான் எப்படி?"
"உன்னை உன் அத்தை பையன் நிரஞ்சனுக்கு கல்யாணம் பன்னி வைச்சு இருக்கலாம் இல்ல... ஏன் எனக்கு கல்யாணம் பன்னி வைச்சாங்க..." என்று அவளுக்கு பதிலலிக்காமல் அவன் ஒரு காரணமாக அவ்வாறு கேட்க, வேறு விதமாக புரிந்து கொண்ட சிவரஞ்சனியின் முகம் இருண்டது.
"அவருக்கு என்னை கல்யாணம் பன்னி வச்சு இருந்தா நீங்க தப்பிச்சு இருப்பீங்க இல்ல. உங்களுக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கட்டிகிட்டு நிம்மதியா வாழ்ந்து இருக்கலாம். எல்லாத்தையும் கெடுத்துட்டேன் இல்ல..." முகம் சிவக்க கோபமாக கேட்டாள். ஆனால் அதற்கு எதிர்மறையாக அவளின் கண்கள் கலங்கி இருந்தது.
"ம்ச்... நான் ஜஸ்ட் என்ன ரீசன்னு தான் கேட்டேன்... நான் ஒன்னும் இங்க உட்கார்ந்துகிட்டு என் வாழ்க்கை போச்சேன்னு புலம்பிட்டு இல்ல. கிடைச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டு தான் இருக்கேன். உன்ன மாதிரி டைவஸ் வாங்கிட்டு விட்டுட்டு ஓடிட நினைக்கல... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. தேவையில்லாம பேசனா எனக்கு சுத்தமா பிடிக்காது..."
"பாட்டிக்கு அவங்கள பிடிக்காது. சக்திக்கும் தான்..." என்றாள் தன் கோபத்தை கட்டுப்படுத்திகா கொண்டு.
" ஏன்? "
"அவன் ஒரு வேஸ்ட் பீஸ், வெட்டி முண்டம் வீணாபோன தண்டம், யாரா இருந்தாலும் சீக்கிரம் ஏமாத்திடுவாங்க... படிப்பே வராத மக்கு பையன்... ஸ்மார்ட்டா இருக்க மாட்டான்..." என்று கோபமாக கூறியவள் கப்போர்டில் இருந்து அவளின் புடவையை எடுத்து குளியல் அறைக்குள் சென்று கட்டிக்கொண்டு வெளியே வந்து அர்ஜுனிடம் "நான் சக்திய பார்த்துட்டு அர்ச்சனாவ பிக்கப் பன்னிட்டு வரேன்...." என்று தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு அவனின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றாள்.
சிலநேரங்களில் பெட்டி பாம்பாய் அடங்கி இருப்பவள் சில நேரங்களில் சீறும் பாம்பை போல் நடந்து கொள்ள, அவளின் குணத்தை பற்றி புரிந்து கொள்ள இயலாமல் குழம்பி தவித்தான் அர்ஜூன். அவனுக்கு சற்றும் தெரிந்திருக்கவில்லை அவள் சற்று அடக்கி வாசிப்பது அர்ஜூனிடம் மட்டுமே என்று.
புது புது வரிகளால்
என் கவிதை தாளும் நிறையுதே...
கனவுகள் கனவுகள் வந்து
கண்கள் தாண்டி வழியுதே....
மறந்திட மறந்திட
என் மனமும் கொஞ்சம் முயலுதே...
மறுபடி மறுபடி
உன் முகமே என்னை சூழ...
தாமரை இலை நீர் நீதானா...
தனி ஒரு அன்றில் நீ தானா...
புயல் தரும் தென்றல் நீ தானா...
புதையல் நீ தானா...

- தொடரும்.
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 11
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN