அத்தியாயம் 18

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 18
Baby Shark doo doo
Baby Shark doo doo
Baby Shark doo
Baby Shark...
இன்று புதிதாக கற்ற பாடலில், பாதியை முழுங்கியபடியும் மீதியை அபிநயத்துடன் பாடிக்கொண்டும் மாமனின் தோலில் ஏறி அமர்ந்து கொண்டு, இரு கைகளால் காற்றில் நீச்சல் அடித்துக்கொண்டு, தன் மழலை குரலில் பாடிக்கொண்டு இருந்தான் சித்தார்த். அறையில் அர்ஜூன் இல்லாததால் அவனை தேடிக்கொண்டே கீழே வந்த சிவரஞ்சனி இந்த கண்கொள்ளாக் காட்சியை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.
"சிவா... எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்... சைட் அடிச்சது போதும்..." மூச்சு வாங்க அவளிடம் வந்த சூசனை சிவரஞ்சனி "அண்ணி..." என ஆரத்தழுவி கொண்டாள்.
"சிவா... சாரிம்மா... நீ தீடீர்ன்னு கிளம்பினதால என்னால லீவ் எடுக்க முடியலை. எல்லா ஸ்டாபையும் வர சொல்லிட்டேன். நான் போகலன்னா நல்லா இருக்காது இல்ல... இன்னைக்கே எல்லா கணக்கையும் முடிச்சிட்டு நாளைக்கு நீ வரும்போது உனக்கு பிடிச்ச ஸ்வீட் அய்டம்ஸ்லோட நிக்கலாம்னு இருந்தேன். சரி எப்படியோ... இப்பயாவது பிறந்த வீட்டுக்கு வந்தியே... உன் அத்தை மாமா ஏன் வரல... அர்ச்சனா எப்படி இருக்கா..." படபடவென பேசிய தன் அண்ணியிடம் பதிலளிக்காமல் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள் சிவரஞ்சனி.
"ஓய்... என்ன சைட் அடிக்கிற உரிமை உன் அண்ணனுக்கு மட்டும் தான்... உனக்கெல்லாம் கிடையாது..." என்று சிவரஞ்சனியின் காலை வாரிய சுசி மீண்டும் அர்ச்சனாவை பற்றி விசாரித்தார்.
"நல்லா இருக்கா அண்ணி... நடக்க முடியல. வீல் சேர்ல தான் இருக்கா... இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு டாக்டர் சொன்னாங்க. ஆமா சீக்ரெட் ஆப் யுவர் எனர்ஜி என்ன... ஸ்கூல்ல போய் கஷ்டப்பட்டு வந்தாலும் இப்படி புது பூ மாதிரி இருக்கீங்களே எப்படி..."
"நீ வேற ஏன்டி... டயர்டாதான் வந்தேன். இப்போ என் அண்ணன் கூட பேச பேச எல்லாம் பறந்துபோச்சு..."
"அண்ணனா..." சிவரஞ்சனி ஆச்சரியமாக கேட்டாள்.
"எஸ்... அர்ஜூன் அண்ணா... ரொம்ப நல்லவரா இருக்காரு. நான் கூட ஸ்ரீதர் சொல்லும் போது நம்பல... நீ ரொம்ப லக்கி..." என்று கூற அவளுக்கு ஒரு வெட்க புன்னகையை பதிலாக தந்தவள், திடீரென நினைவு வர பெற்றவளாக "அண்ணி... அர்ஜூன் உங்கள் விட ஒரு மாசம் சின்னவரு... அண்ணான்னு சொல்லுறீங்க... நேம் சொல்லியே கூப்பிடலாமே..." என்றாள் அவசரமாக.
"நான் நேம் சொல்லி கூப்பிட ஆயிரம் பேர் இருக்காங்க..‌. ஆனால் அண்ணான்னு கூப்பிட யாரும் இல்லையே... அதான் உன் புருஷன என்னுடைய அண்ணனா தத்தெடுத்துகிட்டேன்..." என்றவள், ரகசியம் பேசுவதை போல் சிவரஞ்சனியின் காதருகில் வந்து "நான் அர்ஜூன விட பெரியவன்னு சொல்லிடாத... என்ன..." என்றாள்.
"சரி சரி... நான் சொல்ல மாட்டேன்... சக்திக்கு புத்தி சொல்லி என்கூட பேசவச்சதுக்கு உங்களுக்கு இத கூட செய்யமாட்டனா..." என சிரித்தவள் பள்ளி விஷயங்களை பற்றி பேச ஆரம்பிக்க இருவரும் பேசிக்கொண்டே வீட்டினுள் சென்றனர்.
"அச்சோ... சிவா சித்தார்த் இன்னைக்கு முழுக்க சொல்ல சொல்ல கேட்காமல் மண்ணுலையே விளையாடிட்டு இருந்தான். அவன குளிக்கவைக்கனும். நீ போய் குளிக்க வைக்கறியா... நான் அவன் சாப்பிட எதாவது செய்யரேன்...." தலை முடியை கொண்டையிட்டுக்கொண்டு சொன்ன அண்ணியின் சொல்லை தட்டாமல் சித்தார்தை குளிக்க வைக்க ஒப்புக்கொண்டாள்.
சித்தார்த் பிறந்ததில் இருந்து அவனை பாதி நேரம் பார்த்துக்கொள்வது சிவரஞ்சனியின் விருப்பமான வேலையாக இருந்தது. எனவே மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டாள். அவன் எப்படியும் குளித்துவிட்டு வந்த தன்னை நிச்சயம் தண்ணீரால் அபிஷேகம் செய்வான் என்று அவளுக்கு தெரியும். இருந்தாலும் அவனின் கலாட்டாக்களை பார்க்க ஆசையாக இருந்தது.
தற்போது சித்தார்தும் அர்ஜூனும் அங்கிருந்த மரப்பளகையில் அமர்ந்து ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தனர். எப்படி அர்ஜூனை எதிர்கொள்வது என முதலில் தயங்கியவள் பிறகு நடப்பது நடக்கட்டும்... எக்காரணம் கொண்டும் என்னுடைய சுயமரியாதையை அவன் இகழ்ச்சியாக பேசுவதை அனுமதிக்க கூடாது என்று சபதம் எடுத்தவளாக அவனை எதிர்கொண்டாள்.
"சித்து குட்டிபையா... என்னடா உன் மாமா வந்ததும் என்ன மறந்துட்ட..." சிவரஞ்சனி சித்துவிடம் வினவியபடி அவர்களின் அருகில் வர "தஞ்சி பப்பு..." என்றபடி அவளை கட்டிக் கொண்டான் சித்தார்த். அவன் அவளை அவ்வாறு அழைத்ததும் அர்ஜூனின் முகத்தில் ஒரு சிறு முறுவல் வந்தது.
"தஞ்சி பப்புவா..." ஆச்சரியமாக கேட்ட அர்ஜூனை பரிதாபமாக பார்த்தவள், "இவனுக்கு 'ர' வராது. ரஞ்சின்னு கூப்பிடரதுக்கு பதில் தஞ்சின்னு கூப்பிடரான். டேய் இன்னுமாடா உனக்கு 'ர' வரல... சிவான்னே கூப்பிடுன்னு சொன்னா வேற கேட்கமாட்டிங்குறான்...." முதல் வாக்கியத்தை சித்துவிடம் கூறியவள், இரண்டாம் வாக்கியத்தை அர்ஜூனிடம் கூறி முடித்தாள்.
"அண்ணி இவன குளிக்க வைக்க சொன்னாங்க... வீட்டுக்கு பின்னாடி ஒரு கிணறும் தொட்டியும் இருக்கு. நீங்களும் வரீங்களா... ஜாலியா இருக்கும்..." கண்கள் மிளிர கூறியவளிடம் மறுக்கமுடியவில்லை அவனால்.
சரி என்றவன் அங்கு வேலையாள் கொண்டுவந்த துண்டையும் சோப்பையும் வாங்கிக்கொண்டு சிவரஞ்சனியை பின்தொடர்ந்தான். ஓரிருமுறை இந்த இடத்திற்கு வந்தது நன்றாக நியாபகம் வந்தது.
பச்சை சாயம் பூசப்பட்ட அழகிய ஓவியம் போன்று இருந்த அவ்விடம் மிகவும் அழகாக இருந்தது.
தண்ணீர் செல்லும் வாய்க்கால்களில் ஓரத்தில் எல்லாம் ஒரு மரம் வைக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து பல வாழை மரங்கள், தென்னை, பலா, மா, வேப்பை என பறந்து விரிந்து அவ்விடம் முடிவில்லாமல் சென்றுக்கொண்டு இருந்தது.
கிணற்றுக்கு அருகில் முத்துப்போல் இருந்த மல்லிச்செடிகள் மாலை நேரம் என்பதால் பூத்துகுளுங்கி நறுமணம் வீசிக்கொண்டு இருந்தன. மூச்சை உள்ளிழுக்கும் போதெல்லாம் அந்நறுமணம் உள்ளே சென்று ஒருவித மண அமைதியை ஏற்படுத்தியது.
அர்ஜூன் அவ்விடத்தை இரசித்த வண்ணம் இருக்க அங்கே தனியாக அமைக்கப்பட்டு இருந்த ஒரு சிறிய அறைக்குள் சென்ற சிவரஞ்சனி மோட்டாரை போட்டுவிட்டு வந்தாள். தண்ணீர் அங்கிருந்த பெரிய தண்ணீர் தொட்டியில் பீச்சியடித்து செல்வதை பார்த்த சித்தார்த், துள்ளிக்குதித்து தொட்டியினுள் இறங்கிவன், மற்ற இருவர் மீதும் முதல் வேளையாக தண்ணீரை தெளித்துவிட்டே மறுவேலை பார்த்தான்.
அர்ஜூனின் பின்னால் ஒளிந்து கொண்ட சிவரஞ்சனி சித்துவின் மேல் தண்ணீர் தெளிக்க, அவனும் விடாமல் அவள் மேல் தண்ணீர் தெளிக்க, இடையில் மாட்டிக்கொண்ட அர்ஜூன் தான் மழையில் நனைந்த புறாப்போலானான்.
"அஜூ... பேசாம நீங்களும் இங்கவே குளிச்சிடுங்க... பாதி குளிச்சச்சு. அப்புறம் என்ன. நான் உங்களுக்கு ட்ரஸ் டவல்லாம் எடுத்தட்டு வரேன். ஒரு நிமிஷம்..." என்றவள் வேகமாக சித்துவிற்கு சோப் போட்டு விட்டு குளிக்க வைத்து, பிறகு நீரில் ஆட்டம் போட வைத்துவிட்டு துணிகளை எடுக்க வீட்டிற்கு சென்றாள்.
அவள் திரும்பி வரும் போது அர்ஜூனும் நீரில் இறங்கி இருந்தான். இரு கைகளிலும் சித்துவை படுக்கவைத்தபடி அவனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தான். சித்துவை இறக்கிவிட்டவன் சிவரஞ்சனியிடம் கை நீட்ட‌, டவலை தான் கேட்கிறான் என நினைத்து டவலை நீட்டியவளை, டவலுடன் பிடித்து உள்ளே இழுத்து தன் மீதே படரவிட்டவன், அழகாய் சிரிக்க அவனையே மெய் மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் அவனிடம் காதலில் விழுந்தவள். அவனோ அவளின் பார்வையில் தன்னை தொலைத்து அவளை தாங்கிக்கொண்டு இருந்தான்.
"ஏஏஏஏஏ... தஞ்சி பப்பு...." என கைதட்டி சிரித்த சித்துவின் குரலால் நடப்புலகிற்கு வந்த இருவரும் வேகமாக விலகி நிற்க அப்போது தான் கவனித்தனர் அங்கே சக்தி நமட்டு சிரிப்புடன் நின்றிருப்பதை.
"சித்து..." என சக்தியை பார்த்து துள்ளிக்குதித்த சித்து அவனையும் தொட்டிக்குள் அழைக்க, "டேய் சித்தார்த்... ஏன்டா நந்தி மாதிரி இவங்களுக்கு இடையில இருக்க... வா வா சுசிமீ ( சுசி மம்மி) உனக்கு பஜ்ஜி செஞ்சிட்டு இருக்காங்க..." என்று கூற‌ ஐ.... என்றபடி சக்தியிடம் தாவினான் குட்டி பையன்.
"மாமா... நீங்க ஹார் கட் பன்னனும்னு சொன்னீங்களாமே... நிரஞ்சன் அத்தான் பார்பர் கூட்டிட்டு வந்து இருக்காங்க..." என்று சக்தி அர்ஜூனிடம் ரொம்ப நாட்கள் கழித்து இவ்வளவு பெரிதாக பேசிவிட்டு அங்கிருந்து சித்துவுடன்‌ அங்கிருந்து அகன்றான்.
அவன் நகர்ந்த பிறகு அவன் பின்னால் நின்றிருந்த நிரஞ்சனை பார்த்த சிவரஞ்சனி, வேகமாக அர்ஜூனின் கையில் ஈரமாக இருந்த துண்டை பிடுங்கி தன்மேல் போர்த்திக்கொண்டு, எப்படி வெளியே ஏறிவருவது என முழிக்க, அவளின் சங்கடத்தை கண்டுகொண்ட அர்ஜூன், தொட்டியில் இருந்து மேலேறி சிவரஞ்சனியையும் கைக்கொடுத்து தூக்கிவிட்டான்.
அர்ஜூன் சிவரஞ்சனியை தொட்டிக்குள் பிடித்து இழுக்கும் போதே அங்குவந்த நிரஞ்சன் இருவரின் அன்யோன்யத்தை பார்த்து யோசனையில் மூழ்கி சிலையாகவே நின்றிருந்தான். சிவரஞ்சனி அங்கிருந்து செல்லும் போது அவனிடம் எதுவும் பேசாமல் சென்றது அதுவும் 'வாங்க...' என்று அழைக்காமல் கூட சென்றது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
"என்ன பங்காலி... நான் உன்கிட்ட பார்பர கூட்டிட்டு வரவே சொல்லலையே... இந்த ஹார்ஸ்டைல்க்கு என்ன... கொஞ்சம் ஷேவ் பன்னி இன்னும் கொஞ்சம் முடி வளர்த்தா விஜய் டீவில வர மகாபாரதம் அர்ஜூனன் மாதிரியே இருப்பேன்னு ரஞ்சி சொன்னா... சோ உங்க ஹெல்ப் தேவையில்லை. அப்புறம் இதுலாம் என்ன இங்க வந்துபோக சாக்கா... இல்ல என் கழுத்துல கத்தி வச்சு மிரட்ட ப்ளானா...?" என்று நிரஞ்சனிடம் கேள்வி எழுப்பிய அர்ஜூன் அவன் பதில் அளிக்காமல் இருப்பதை பார்த்துவிட்டு,

"நீ என்ன பன்ன முயற்சி பன்னற... சிவரஞ்சனி என்னுடைய மனைவி. அவள அடைய நினைக்கிறயே நீயெல்லாம் என்ன ஜென்மமோ தெரியல... நீ எங்கள பிரிச்சே தீருவேன்னு சபதம் போட்டியே, அப்பவே உன்ன உண்டு இல்லைன்னு பன்னியிருக்கனும்... எல்லாம் என்னுடைய தப்புதான்... உன்னுடைய சாந்தமான முகத்தை பார்த்து கொஞ்சம் ஏமாந்துட்டேன். இப்போ நான் ரஞ்சிகிட்ட உன்னபத்தி சொன்னா உன்ன அவமானப்படுத்தி வெளிய அனுப்பிடுவா... ஆனா சொல்லமாட்டேன்... ஏன்னா நீ அப்படி என்னதான் கிழிக்கிறன்னு பார்க்க எனக்கு ஆசையா இருக்கு..." என்றவன் நிரஞ்சன் சிரிப்பதை கண்டு கடுப்பானான்.
"எப்படி... நீ சொன்னா அவ என்ன வெளிய தள்ளிடுவாளா... குட் ஜோக்... அர்ஜூன் உனக்கு சிவரஞ்சனிய ஒரு ஆறுமாசமா தெரியுமா... இல்ல அவ சின்ன வயசா இருக்கும் போது எப்பவாவது பார்த்து இருப்பியா... ஆனா நான் அப்படி இல்ல. அவ குழந்தையா இருக்கும் போது அவளுடைய அம்மாட்ட இருந்ததை விட என்கிட்ட இருந்தது தான் அதிகம். அவள எத்தனை நாள் கண்முழுச்சி பாதுகாத்து இருந்திருக்கேன் தெரியுமா... அவளுக்கு நடக்க சொல்லி கொடுத்ததே நான்தான்டா... அவ ஏஜ் அட்டன் பன்னப்போ அவளுக்கு மாலை போட்டது நான்தான்டா... அவள இத்தனை வருஷமா நான் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துட்டு இருந்தா நேத்து வந்த நீ அவள கல்யாணம் பன்னிக்குவியா..." நிரஞ்சன் தன் ஆதங்கத்தை யெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்க, அர்ஜூனுக்கு கலகலப்பு படத்தில் சந்தானம் கூறிய தத்துவம் நினைவில் வந்தது... "முறை பொண்ணும் மொட்டமாடில காயவச்ச வத்தலும் ஒன்னு.... எப்ப எவன் தூக்கிட்டு போவான்னே தெரியாது..."
பார்க்க சூரியா போல் இருந்தாலும், சூது கவ்வும் படத்தில் நடித்த பாபி சிம்ஹா போல் சாந்தமான முகத்தை வைத்து கொண்டு இருக்கும் நிரஞ்சனை காமெடியனாக நினைத்து அர்ஜூன் உள்ளுக்குள் சிரித்து கொண்டு இருக்க, நிரஞ்சன் சாமி 2 படத்தில் வரும் பாபி சிம்ஹா போன்றவன் என்று அவனுக்கு தெரியாமல் போனது.
"நான் சின்ன வயசா இருக்கும் போதே நீ அவகூட ஜோடி சேர்ந்துட்டு டேன்ஸ் ஆடறத பார்த்து, உன் கால உடச்சு படுக்கையில படுக்க வச்சு, உனக்கு பதில் நான் அவகூட ஆடினேன். இப்போ அவளை கல்யாணம் பண்ணி உன் உயிருக்கு நீயே ஆப்பு வச்சுகிட்ட. பார்க்கலாம் உன் கல்யாணம் ஜெயிக்குதா இல்ல என் காதல் ஜெயிக்குதான்னு..." ஆவேசமாக பேசிவிட்டு அங்கிருந்து விடைபெற்றவனுக்கு தெரியவில்லை சிவரஞ்சனிக்கும் மனது ஒன்று இருக்கிறது அதிலும் காதல் ஒன்று இருக்கிறது என்று.
. பல நாட்களாக சிறு வயதில் நிகழ்ந்த விபத்துக்கான காரணம் தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்த அர்ஜூன், தற்போது அதற்கான விடை கிடைத்தப் பிறகாவது ஜாக்கிரதயாக இருந்திருக்கலாம். ஆனால் எப்போதும் எதிலும் வெற்றி கனியை தட்டுபவன் நிரஞ்சனை அலட்சியமாக எடுத்துக்கொண்டான்.
அதோடு நாய்க்குட்டி போல் தன்னையே சுற்றி வரும், செல்ல சண்டையிடும், கோபம் கொள்ளும், கலகலப்பாக இருக்கும், திடீரென அமைதிக்கு மறுபெயராக இருக்கும், தன் குடும்பத்தின் மீது உயிரையே வைத்திருக்கும், உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்ய துடிக்கும், ஆளை விழுங்கும் பார்வை பார்க்கும், திடீரென முத்தமிட்டு தன்னை ஆட்டிப்படைக்கும் சிவரஞ்சனி மேல் நம்பிக்கை வைத்தான் அர்ஜூன்.
ஆனால் நிரஞ்சனோ தன் ஒருதலை காதலின் மேல் நம்பிக்கை வைத்தான். சிவரஞ்சனியின் மனதை பற்றி அவன் சிந்திக்கவில்லை. சிந்திக்கவில்லை என்று கூறுவதைவிட அதை ஒரு பொருட்டாய் கருதவில்லை என்று கூறினாலே சரியாக இருக்கும்.
சென்ற வேகத்திலேயே திரும்ப வந்து சிவரஞ்சனி, அர்ஜூன் நின்றபடியே ஏதோ சிந்தனையில் மூழ்கி இருப்பதைப் பார்த்து விட்டு, அவன் தோலை பிடித்து குலுக்கி என்னவென்று விசாரித்தவள் அவன் ஒன்றும் இல்லை என தலையாட்டிய பிறகு அவனின் கைகளில் துண்டை திணிக்க, அப்பொழுது தான் கவனித்தான் தன்னை போலவே சிவரஞ்சனியும் தலையில் தண்ணீர் சொட்ட சொட்ட நின்றிருப்பதை. உடையை மட்டும் மாற்றியிருந்தாள்.
"நீ முதல்ல உன்னுடைய தலைமுடிய கவனி..." என்றவன் அவள் எடுத்து வந்த உடைகளை பக்கத்தில் இருந்த அறைக்குள் சென்று மாற்றிக்கொண்டு அவளிடம் வர இன்னும் அவள் அப்படியே தான் இருந்தாள்.
"ரஞ்சி... நான் உன்கிட்ட தலைய துவட்ட சொன்னேன்..." என்றவன் அவளின் அருகில் வர, அவள் அவனிடம் அமைதியாக இருக்கும் படி சைகை காண்பித்தாள்‌.
"என்ன ஆச்சு..."
"அங்க பாருங்க பச்சைக்கிளி..." என்றவள் கீ கீ என அவற்றை போல் கத்தச்செய்ய அவளின் குரலால் பயந்த கிளி பறந்து சென்றது.
"அச்சச்சோ..." என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டவளையே மனதிற்குள் சித்திரமாக பதித்து வைத்தான் அர்ஜூன்.
மனதோடு மட்டும் இங்கு
உறவாடும் நேசம் ஒன்று
உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே...
படியேறி கீழே செல்லும்
புரியாத பாதை ஒன்று
அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே...
காலம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்
கண் முன் மெல்ல சிந்தனை என் சிந்தனையிலே...
கடிகாரம் வாங்க போனால்
அந்த நேரம் வங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே...
இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை...
(Kathale from # IndruNetruNalai)
- தொடரும்.
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN