அத்தியாயம் 22

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"நான் எதுக்கு இந்த வீட்டுல கை நினைக்கனும்...‌ இது ஒன்னும் என்வீடு இல்லையே..." நிரஞ்சனின் தாய் கோபமாக முகத்தை திருப்பி கொண்டு இருந்தார். சிவசக்தி பாட்டியின் நினைவஞ்சலி நல்லபடியா முடிந்தபிறகு தான் அவர் தன் வேலையை ஆரம்பித்து இருந்தார்.
"என்னம்மா நீ... நம்ம அம்மாவோட காரியம்மா இது..." லிங்கம்.
"நம்ம அம்மாவா... என்ன அவங்களுடைய மகளா நினைச்சி இருந்தா உன் பொண்ணுக்கு வெளில மாப்பிள்ளை பார்த்து இருப்பாங்களா..."
"அவங்க எது செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்மா... அவங்களுடைய கட்டளைய நாம எப்போ மீறி இருப்போம் சொல்லு... புரிஞ்சுக்கோம்மா..."
"சரி இப்போ அவங்க தான் இல்லையே... இனி உன் விருப்பப்படி நடக்கலாம் இல்லையா... இப்ப சொல்லு என் பொண்ணுக்கு உன் பையன் சக்தியை கொடுக்க முடியுமா முடியாதா..."
கூட்டத்தில் இருந்த ஒருவர் "சிவசக்தி சித்தி அது முடிவுதான் முக்கியம்னு, பாப்பா கல்யாணத்தை முடிச்சு வச்சிட்டு செத்துபோச்சு... வாழரது நம்ம பிள்ளை தான... நம்ம நிரஞ்சன் தம்பி இந்த ஊருலயே நல்ல பிள்ளை. ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அதுக்கு கொடுத்து பிள்ளைய கண்ணுக்கு எதுருலயே வச்சுக்காம இப்படி கண்காணாத இடத்துக்கு அனுப்பி வச்சுட்ட... ஏதோ மாப்பிள்ளை தம்பி நல்லவங்களா இருக்கிறதால நல்லதா போச்சு... ஒருவேளை ஒழுங்கா இல்லன்னா என்ன பன்னியிருக்க முடியும்... சரி நடந்து முடிஞ்சத விடு... உன் தங்கச்சிக்கு இப்ப என்ன பதில் சொல்லர..."
லிங்கம் சக்தியை பார்க்க, சக்தி ஒரு நொடி யோசித்தவன், பின் நிரஞ்சனை பார்த்து விட்டு ஏதோ யோசித்தவனாக தலையை மெல்ல ஆட்டி, கண்களை மூடி திறந்து தன் சம்மதத்தை தெரிவித்தான்.
"சரிம்மா... நிக்கித்தாவ என்னுடைய மருமகளா ஆக்கிக்க எங்களுக்கு முழு சம்மதம். உன் பொண்ணை கேட்டுட்டு நீ முடிவ சொல்லு..." லிங்கம்.
சரி என்றவர் நிரஞ்சனிடம் நிக்கித்தாவை கேட்கும்படி கூற, அவன் கைப்பேசியில் நிக்கியை தொடர்பு கொண்டு அவளின் சம்மதத்தை பெற்றுத் தந்தான். நிக்கித்தா மும்பையில் ஃபேஷன் டெக்னாலஜி இறுதியாண்டு பயில்கிறாள்.
ஒருவழியாக உறவினர்கள் எல்லாம் சேர்ந்து, சக்தியின் திருமணத்தை பற்றி பேசிவிட்டு இன்னும் மூன்று மாதத்தில் நிக்கித்தாவின் படிப்பு முடிந்த பிறகு திருமணம் என்றும் தற்போது ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தம் என்றும் முடிவு செய்து விட்டு விடைபெற்றனர்.
நிரஞ்சன் தனியாக கைப்பேசியை எடுத்தபடி வெளியே சென்றதை பார்த்து விட்டு அவனை பின்தொடர்ந்த சக்தி, நிரஞ்சனிடம் "அத்தான் நீங்க எதுக்கு சிவாவோட லைஃப்ல குறுக்க வரீங்கன்னு எனக்கு தெரியல. ஆனா இனி நீங்க இந்தமாதிரியான வேலைய விட்டுடுங்க... அப்புறம் உங்களோட தங்கச்சி தான் கஷ்டப்படவேண்டி இருக்கும்..‌." என்றவன் கோபமாக விடைபெற்றான். நிரஞ்சனுக்கு தான் சக்தியை நினைத்து பாவமாக இருந்தது.
சக்தி சென்றபிறகு சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்வையை சுழல விட்ட நிரஞ்சன், யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு தான் தொடர்பு கொள்ள நினைத்த எண்ணை அழைத்தான்.
"நாம ப்ளான் போட்டதுக்கு மாறா இங்க வேற என்னென்னமோ நடக்குது... சக்தி நிக்கிய கல்யாணம் பன்னிக்க ஓகே சொல்லிட்டான்... அதோட அர்ஜூன் சக்திகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான்..." என்றவன் அங்கு நடந்ததை விளக்கமாக கூறினான்.
தனது அம்மாவின் மனசை களைத்து சக்தி மற்றும் நிக்கியின் திருமணத்திற்கு அடிக்கல் நாட்டியதே நிரஞ்சன் தான்.
அவன் திட்டம் என்னவென்றால் சக்தி எப்படியும் நிக்கியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டான். அப்போது எதற்கு என்று துருவி துருவி கேட்டால், எப்படியும் அர்ச்சனாவை அவன் கைக்காட்ட அதிக வாய்ப்பு உள்ளது. அர்ச்சனாவை காதலிக்கிறேன் என்று மட்டும் சக்தி கூறிவிட்டால் அர்ஜூன் சும்மா இருப்பானா... கண்டிப்பாக சக்தி அர்ஜூனுக்குள் சண்டை மூளும். சிவரஞ்சனியால் நிச்சயம் சக்தியை விட்டு கொடுக்க இயலாது. அவர்களின் சகோதர பாசத்தை வைத்து எப்படியேனும் அர்ஜூனை விலக்கிவிட திட்டமிட்டு இருந்தான். ஆனால் இவை எல்லாவற்றையும் சக்தி ஒரேயொரு தலையசைப்பால் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டான்.
........
"நானும் அப்படிதான் நினைச்சேன்... ஆனா சக்தி அன்னைக்கு சொன்ன மாதிரி அர்ச்சனா தான் இவன் மேல இன்ட்ரஸ்டா இருக்கா போல..." மறுமுனையில் என்ன கேட்டார்களோ... நிரஞ்சனின் பதில் இதுவாக இருந்தது.
.....
"அர்ச்சனாவ வச்சி கேம் ஸ்டார்ட் பன்னலாமா... ஏ லிசன்... நீ அர்ஜூன் நொம்ப கெட்டவன்னு சொன்னதாலதான் பாப்பாவுக்காக நான் இவ்வளவு கீழ்தரமான வேலையும் செய்துட்டு இருக்கேன். ஆனா அர்ஜூன் ரொம்ப நல்லவனா இருக்கான். எந்த அறுவறுப்பும் இல்லாமல் என்னுடைய சித்தப்பாக்கு சி.பி.ஆர் ட்ரீட்மெண்ட் கொடுத்து, அவருடைய உயிர காப்பாத்தனான் தெரியுமா...." என்றவன் அங்கு நடந்ததை தெளிவாக, அதே நேரம் அர்ஜூனை உயர்த்தியும் கூறினான்.
........
"நீ என்னவேனா சொல்லு... எனக்கு என்னமோ நாம ரொம்ப தப்பான ரூட்ல போறமாதிரி இருக்கு... அர்ஜூனும் பாப்பாவும் ரொம்ப அன்யோன்யமா தான் வாழர மாதிரி தெரியுது... அவளுடைய வாழ்க்கையில எந்த குழப்பமும் வேண்டாம்ன்னு நினைக்கிறேன்..."
.......
மறுமுனையில் ஏதோ கூறப்பட நிரஞ்சன் சிறிது நேரம் அமைதி காத்தான்.
பிறகு அவனே "அர்ச்சனா சின்ன பொண்ணு... ஏற்கனவே சக்தியும் அர்ச்சனாவும் லவ் பன்னராங்கன்னு சிசிடிவி புட்டேஜ்லாம் கலெக்ட் செய்து, அதை எடிட்லாம் செய்து, நியூஸ்ல போட்டு பாவம் அவளுடைய பெயரையே கொடுத்துட்டோம். இனி அவள இந்த பிரச்சினைல இழுக்காத... சரி நான் வைக்கிறேன். யாரோ வராங்க..." என்றவன் தன் நண்பன் ஒருவனை தொடர்பு கொண்டு, தற்போது பேசிய அந்த வெளிநாட்டு எண்ணை அவனிடம் கொடுத்து, அதற்கு சொந்தகாரரின் முழு விவரத்தை சேகரித்து தரும்படி கூறினான்.
*****
"டேய் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா... நிக்கிய போய் கல்யாணம் பன்னிக்க ஒத்துகிட்ட... உனக்கு என்ன மூளை குழம்பிடுச்சாடா... நீ வேண்டாம்னு தலையாட்டி இருந்தா அப்பா அப்பவே அத்தைட்ட மறுத்து பேசி இருப்பாங்களே... எதுக்குடா இப்படி தேவையில்லாமல் உன் வாழ்க்கையை கொடுத்துக்குற.... வாயை திறந்து பதில் சொல்லு..." சிவரஞ்சனி சக்தியிடம் வெடித்து கொண்டு இருந்தாள்.
"ரஞ்சி... ரிலாக்ஸ்... நான் விசாரிக்கறேன்... நீ வெளியே போ..." சிவரஞ்சனியை வெளியே அனுப்பிய அர்ஜூன் சக்தியிடம் பேசினான்.
"சக்தி... ரஞ்சி நிக்கிய பத்தி சொன்னா... ரஞ்சி சொன்னது பார்த்தா நிரஞ்சன் மாதிரி தான் அந்த நிக்கியும் போல... ஏன்டா இந்த விபரீத முடிவு...இது லைஃப் மேட்டர்...."
"மாமா... நிக்கி மேல அத்தானுக்கு அன்பு இருக்கு... நிக்கிய நான் கல்யாணம் பன்னிகிட்டா அவளுடைய எதிர்கால வாழ்க்கைக்கு பயந்தாவது, நிரஞ்சன் சிவா வாழ்க்கையில குறுக்க வராமல் இருப்பான் இல்லையா... அதனாலதான் ஓகே சொன்னேன்..."
"டேய் டேய்... பைத்தியமா நீ... நிரஞ்சன் பிரச்சினை ஒரு சின்ன விஷயம். நாளைக்கே எங்களுக்கு குழந்தை பிறந்துச்சுன்னா‌ அப்பறமாவது அவனுக்கு நிதர்சனம் புரியவரும்... ஏன் இன்னும் இரண்டு மாசத்துல நானும் ரஞ்சியும் யூ.எஸ்க்கு போரோம். திரும்பி வர எத்தனை வருஷம் ஆகும்ன்னு தெரியாது. அந்த டைம்ல நிரஞ்சன் மனசு மாற மாட்டானா. அவனும் நல்லவனா தான் இருக்கான்டா... அவனோட சித்தப்பாக்கு ஆர்ட் அட்டாக்னு எப்படி கலங்கிட்டான் தெரியுமா..."
"மாமா... அத்தான் உண்மையிலேயே ரொம்ப நல்லவர் தான். யாருக்கு எதுவானாலும் நல்லா உதவி செய்வாரு... ஆனா அவரு இப்படி நடந்துக்க காரணம் சிவாமேல வச்ச அன்பா இருக்கலாம், இல்ல காதலா இருக்கலாம்... அந்த அன்பும் காதலும் தான் இன்னொரு பொண்ணுடைய வாழ்க்கையை கூட கெடுக்க காரணமா இருக்கு. நான் இன்னைக்கு எங்க மாமாவ கூட்டிகிட்டு ஹாஸ்பிடல் போனேன் இல்ல. அப்போ தான் எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அர்ச்சனாவையும் என்னையும் சேர்த்து வச்சு நியூஸ்க்கு தப்பான தகவல் கொடுதத்து அத்தான்தான்..."
"வாட்... பட் எதுக்கு..."
"உங்களுக்கும் எனக்கும் சண்டைய மூட்டிவிட்ட தான். நாம சண்டை போட்டா சிவா எப்படியும் எனக்கு சாதகமா பேசுவா அப்போ உங்களுக்கும் அவளுக்கும் சண்டையாகும்னு அவர் நினச்சி இருப்பாங்க. பட் சிவா அமைதியா இருந்துட்டா..." என்றவன் சிறிது இடைவெளி விட்டு "மாமா... நான் கரெக்டா தான் முடிவு எடுத்து இருக்கேன்... நான் இனி நடக்க போறத பாத்துக்கிறேன். நீங்களும் சிவாவும் சந்தோஷமா இருங்க. அது எனக்கு போதும்..." என்ற சக்தி தனக்குள் சிரித்துக் கொண்டான்.
'சக்தி கல்யாணம்கிறது லைஃப் மேட்டர். அதுல ரிஸ்க் வேண்டாம்,,,".
"மாமா... நீங்க கவலைபடாதீங்க. நான் பார்த்துக்கறேன். நிக்கிக்கு அவ்வளவு சீன்லாம் இல்லை..."
'நிக்கி.... எப்படி உன் வாயாலேயே எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வைக்கிறேன் பாரு...‌' என்று நினைத்துக்கொண்ட சக்தி, பிறகு நியாபகம் வரப் பெற்றவனாய் "மாமா என்ன யூ.எஸ்லாம் சொன்னீங்க..."
"இவனுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது....' என்று நினைத்து கொண்டு இருந்தவன் சக்தியின் கேள்வியில் நியாபகம் வரப்பெற்றவனாய் "ம்... சொல்ல மறந்துட்டேன். இப்போதான் மெயில் வந்துச்சு. ப்ரொமோஷன் கிடைச்சிடுச்சு. சோ... இனி வெளிநாட்டு வாசம் தான்..."
"சூப்பர் மாமா. கன்கிராட்ஸ்..." என்றவன் கையை பிடித்து குலுக்கி விட்டு ட்ரீட் கேட்க, நாளை வெளியே சென்று வரலாம் என்று கூறி வைத்தான் அர்ஜூன்.
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 22
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN