அத்தியாயம் 25

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"ஹாய் விஜய்... நான் சுபத்ரா பேசறேன்... எப்படி இருக்க.... ஐ மிஸ் யூடா..." என்பதைத் தொடர்ந்து, சுபத்ரா சிலபல முத்தங்களை தொலைப்பேசியிலேயே வழங்க, அவ்வளவு நேரம் நடப்பது நிஜமா கற்பனையா... எதற்கு இவள் எனக்கு கால் செய்திருக்கிறாள்... என்று சிந்தித்து கொண்டு இருந்த அர்ஜூன், தன் யோசனையை ஒதுக்கிக் தள்ளிவிட்டு அவசரமாக காதிலிருந்து தொலைபேசியை எடுத்து அணைத்து வைத்தான்.
சிறிது நேரத்தில் அதே எண்ணிலிருந்து திரும்பத் திரும்ப அர்ஜூனுக்கு அழைப்பு வந்தது. எடுக்கலாமா வேண்டாமா என்று மனதில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்க, அடுத்த வந்த மெசேஜ் அவனை எடுக்க வைத்தது. அதில் நாளை அவள் அவனை பார்க்க வருவதாக இருந்தது.
"விஜய்... நிக்கி என்னுடைய ஃப்ரண்ட்... நாளைக்கு அவளுடைய எங்கேஜ்மண்ட்க்கு நான் வரேன்... அப்படியே உன்னுடைய ஒய்ஃப்ட்ட சில விஷயங்களையும் பேசலாம்ன்னு இருக்கேன்..." அர்ஜூன் விஜயன் சுபத்ராவிற்கு மட்டும் எப்போதும் விஜய் தான்.
"என்ன ப்ளான் வச்சு இருக்க... நாம லவ் பன்னத சொல்லி, எங்களை பிரிக்கலாம்னு நினைச்சைன்னா... சாரி... உன்னுடைய முயற்சி வேஸ்டாதான் போகும்... ஏன்னா ஏற்கனவே அவளுக்கு என்னுடைய பாஸ்ட் லவ்வ பத்தி சொல்லிட்டேன். அவ என்னுடைய பாஸ்ட ஏத்துட்டு என்னை ரொம்ப லவ் பன்னறா... சோ இந்தமாதிரி சில்லியா ஃப்ளான் பன்னாம உன்னுடைய வேலைய பார்த்துட்டு போ..." என்று அர்ஜூன் கூறிவிட்டு கட் செய்ய போக, அவளின் சிரிப்பு சத்தம் அவனை கட் செய்ய விடாமல் செய்தது.
"விஜய்... அவ உன்னை லவ் பன்னறா சரி...‌ நீ அவளை லவ் பன்னறியா... ஆமாம்னு மட்டும் சொல்லிடாத... எனக்கு என்ன அங்க நடக்கிறது ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா... உனக்கு தான் உன் பொண்டாட்டி மேல ஒரே சந்தேகமாச்சே... எப்படி நீ அவளை லவ் பன்னுவ... "
"சோ... நிரஞ்சன நீ தான் என்னென்னமோ சொல்லி குழப்பி விட்டு இருக்க... ரைட்..."
"நாட் பேட்... சட்டுன்னு புரிஞ்சுகிட்ட... நீ என்னை ஏமாத்திட்டதா சொல்லி, நான் தான் நிரஞ்சன்ட்ட உங்க கல்யாணத்தை நிறுத்த சொல்லி சொன்னேன்... எல்லாம் நல்லாத்தான் போச்சு... ஆனா இடையில அந்த கெழவி மண்டைய போட்டு உங்க கல்யாணத்தை நடத்தி வச்சிடுச்சு... கல்யாணம் ஆகிடுச்சு இனிமேல் ஒன்னும் பன்ன முடியாதுன்னு சொன்ன நிரஞ்சன ப்ரைன் வாஷ் செய்து திரும்பவும் உங்க வாழ்க்கைல அவனை நுழைய வச்சது நான் தான்..."
"சரி... அம்மையாரின் திட்டம்தான் என்னவோ..." அர்ஜூனின் குரல் நக்கலாகவே வந்தது. ஏனெனில் குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்... சுபத்ராவை காதலித்தான் தான் அவன் இல்லை என்று சொல்லவில்லை.... ஆனால் வெளிநாட்டில் இருந்தும், அவன் காதலி பக்கத்து சிட்டியில் இருந்தும் ஒருநாளும் அவன் நம் கலாச்சாரத்தை விட்டுக்கொடுத்தது இல்லை. சுபத்ராவை தவறான கண்ணோட்டத்தில் கூட பார்த்தது இல்லை. அதுவே அவர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமைந்திருந்தது.
"உன் பொண்டாட்டி கொஞ்சம் ஓல்ட் டைப்பாமே... உன்னை மாதிரி... உன் புருஷன் உன்னை சந்தேகப்பட்டுட்டான், அதுவும் நீ அண்ணனா நினைக்கிற நிரஞ்சன் கூட சேர்த்துவச்சு சந்தேகப்பட்டுட்டான்னு சொன்னா... அவ தற்கொலைக்கு கூட முயற்சி செய்வாயில்ல.... அப்படியே அவளை நீ காப்பாத்திட்டாலும் நீங்க பிரிஞ்சி தான் வாழனும்... முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்... கொஞ்சம் ஃபோட்டோஸ் வீடியோஸ்லாம் மார்பிங் செய்து வச்சு இருக்கேன். நீயும் நானும் ரொம்ப க்ளோஸா இருக்குற மாதிரி... அதை‌ ஆல்ரெடி உன் ஒய்ஃப் வாட்ஸ்அப்க்கு அனுப்பிட்டேன். அவதான் இன்னும் ஆன்லைன் வரக்காணும்... சீக்கிரம் ஓடு... அவ ஆன்லைன் வரதுக்குள்ள ஓடிபோய் அதையெல்லாம் டெலிட் பன்னு... என்னுடைய வாழ்க்கைய கெடுத்த உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா..." என்றவள் காலை கட் செய்துவிட, அர்ஜூன் வேகமாக அவளின் அறையை நோக்கி ஓடினான்.
சிவரஞ்சனியின் கைப்பையை தேடி எடுத்தவன் அவளின் கைப்பேசியை எடுத்துப்பார்க்க, அது உயிரற்ற நிலையில் இருந்தது. அவசரமாக சார்ஜில் போட்டவன் போட்டபடியே அதை உயிர்ப்பித்தான். அது கடவுச்சொல் கேட்க, சிவரஞ்சனியின் பெயர் சக்தியின் பெயர், தன் பெயர் என எதை அழுத்திப் பார்த்தாலும் திறக்கவில்லை.
மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வராத தன் மடமையை நினைத்து வருந்தினான். அவன் என்ன தண்ணீர் தெளித்து விட்டவள் மீண்டும் தன் வாழ்க்கையில் நுழைவாள் என கனவா கண்டான். அடுத்து என்ன செய்வது என்று அர்ஜூனுக்கு புரியவில்லை. மடிக்கணினி இருந்தாளாவது ஹேக்கிங் செய்து மொபைலை ஓப்பன் செய்து இருக்கலாம்... தற்போது என்ன செய்வது. ‌அவளிடம் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறலாமா... என்று நினைத்தவன் அவள் நான் கூறினாள் நம்புவாளா...? என்ற கேள்வி எழ, இந்த கைப்பேசியை ஒலித்துவைப்பதே நல்லது என‌ நினைத்தவன் தன் துணிகளுக்குள் மறைத்து வைக்கலாம் என திரும்ப அந்த நேரம் பார்த்து சிவரஞ்சனி அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அவன் தன் கைப்பேசியை வைத்திருப்பதை பார்த்தவள் "என்ன ஆச்சு..." என்று கேட்க "நத்திங்... ஒரு முக்கியமான கால் பன்னனும்னு. என்னுடைய மொபைல் ஒர்க் ஆகல... அதான் உன்னுடையத எடுத்தேன்‌... பாஸ்வேர்ட் என்ன..."
"அப்படியா.... பாஸ்வேர்ட்.... பாஸ்வேர்ட் தான்... பாஸ்வேர்ட்ன்னு டைப் பன்னுங்க..."
"வாட்... இவ்வளவு மொக்கையா வச்சு இருக்க...." என்றபடியே மொபைலை ஓப்பன் செய்தான்.
"நான் என்ன இராணுவ ரகசியமா வச்சு இருக்க போறேன்..." என்றவள் அவளுடைய ட்ராலியை குடைந்து, ஒரு நைட்டியும் துண்டும் எடுத்துக்கொண்டு குளிக்க சென்றுவிட, அர்ஜூன் வேகமாக தன் வேலையை ஆரம்பித்தான். அந்த கைப்பேசி ரீசார்ஜ் செய்யப்படாமல் இருந்ததால், தன் கைப்பேசியில் ஹாட் ஸ்பார்ட் போட்டு அதன் ஓய்-பையை ஆன் செய்ய, அடுத்தடுத்த மெசேஜ்கள் பல குவிந்தவண்ணம் இருந்தது‌. வாட்சப்பில் மட்டும் நான்காயிரம் மெசேஜ்கள். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவள் இண்டர்நெட்டை உபயோகிக்காதது போல் இருந்தது.
வாட்சப்பில் சுபத்ராவின் எண்ணை தேடியவன், கிடைத்ததும் அவள் என்ன அனுப்பி இருக்கிறாள் என திறந்து பார்க்க, அதிலிருந்தது இரவு வணக்கம் தெரிவித்த ஒரு புகைப்படம் மட்டுமே... அதைப் பார்த்த மறுநிமிடம் அர்ஜூனின் கைப்பேசி தன் சத்தத்தை எழுப்பியது. எடுத்து பார்த்தவன் அழைத்தது சுபத்ரா என்பதை உணர்ந்து கோவத்தின் உச்சிக்கே சென்றிருந்தான்.
"ஏய்... நீ மட்டும் என் கைல கிடச்ச..."
"ஹே... கூல் விஜய்... என்ன பயந்துட்டியா பேபி... சும்மா விளையாடனேன்டா... நாளைக்கு நான் உன் கண்முண்ணாடியே வருவேன்... உன்னை பத்தின எல்லா விஷயமும் நீ செஞ்சது செய்யாதது எல்லாத்தையும் உன் பொண்டாட்டிட்ட சொல்லுவேன்... நீ அவளை சந்தேகப்பட்டத‌ தான் முதல்ல சொல்லுவேன்... முடிஞ்சா இப்பவே அவள்ட்ட உன் வாயாலேயே எல்லாத்தையும் சொல்லிடு..."
"ஏய்... ச்ச நீயெல்லாம் பொண்ணாடி..."
"பேபி நான் கொஞ்சநாள் நிரஞ்சன் வீட்டுல தான் இருப்பேன்.... அப்போ நீயே தெரிஞ்சுக்கோ... நான் பொண்ணா இல்லையான்னு... உங்க இரண்டு பேரையும் பிரிச்சிட்டு தான் நான் மும்பை கிளம்புவேன்... கவலைபடாத... ஒகே விஜய்... எனக்கு தூக்கம் வருது... டாடா... லவ் யூ... உம்மா..." என்று கட் செய்தாள்.

சிறிது நேரம் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அமர்ந்து இருந்தவன், சிவரஞ்சனி வருவதை பார்த்து விட்டு " ரஞ்சி... நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்..." என்று கூற,
"நீங்க என்ன சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும்... அர்ச்சனாவுக்கும் சக்திக்கும் இடையில மாமா வேலை பார்க்காத... அதானே.... பஸ்ட் ஒன்னு தெரிஞ்சிக்கோங்க... நான் சொல்லி அர்ச்சனா அந்த ட்ராயிங்க வரையல... தயவுசெய்து இப்படி அசிங்கமா சந்தேகப்படாதீங்க. நான் ஒன்னும் சக்திகிட்ட போய் அர்ச்சனாவ லவ் பன்னுன்னு சொல்லல... அர்ச்சனாவேதான் சக்திட்ட சொன்னா. அவளுக்கு ஆக்சிடன்ட் ஆன அப்போ கூட சக்திகிட்ட லவ்வதான் சொன்னா... இவ்வளவு லவ் பன்னறவ சக்தியோட கல்யாணம் விஷயம் தெரிஞ்சா எதாவது செய்துக்குவாளோன்னுதான் பயந்தேன்...." இவ்வளவு பேசியும் எதையும் கூறாமல் தன்னையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப்பவனை நினைத்து தலையில் அடித்து கொண்டவள் "நீங்க நம்புனா நம்புங்க... இல்லைன்னா போங்க..." என்றவள் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
தவுசன் வாலா மாதிரி இப்படி வெடிக்கறாளே... நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியலையே.... என்று நினைத்தவன் வெகுநேரம் யோசனையில் ஆழ்ந்த படியே அமர்ந்திருந்தான். திட்டனா... சண்டைபோட்டாக்கூட பரவாயில்லை... ஆனா டிவேஸ் வரைக்கும் போய்ட்டான்னா என்று நினைத்து வருத்திக் கொண்டு இருந்தான்.
" சாரி..." சட்டென்று கேட்ட குரலால் சுயநினைவு வந்தவன், அருகில் பார்க்க சிவரஞ்சனி தான் விட்டத்தை வெறித்துக் கொண்டு அர்ஜூனிடம் மன்னிப்பு வேண்டினாள்.
"எதுக்கு நீ சாரி சொல்லற... நீ செய்யாத தப்புக்கு என்னைக்குமே சாரி சொல்லாத... உன்னுடைய சுயமரியாதையை யாருக்காகவும் விட்டு கொடுக்காத... இல்ல என்ன மாதிரி ஆளுங்க தலைல ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பாங்க..." என்றவனை வினோதமாக பார்த்தவள் "ஏங்க இப்படிலாம் பேசறீங்க..." என்றாள் பாவமாக...
"சாரி ரஞ்சி... அப்படி பேசனதுக்கு... நான் செஞ்ச எல்லாத்துக்கும்..." மனம் நிறைந்த மன்னிப்பு வேண்டியவன், அவளை படுக்க கூறிவிட்டு தொலைபேசியை எடுத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்று, சக்தியிடம் அனைத்தையும் கூறுவதே நல்லது... அவன் சிவரஞ்சனியை சமாதானம் செய்து வைப்பான்... என்று எண்ணி, சக்திக்கு கைப்பேசியில் அழைப்பு விடுத்து, சுபத்ராவை பற்றிய அனைத்து தகவல்களையும் கூறினான்.
சக்தி நிரஞ்சனிடம் அனைத்தையும் கூறி, அவன் ஏமாற்றப்பட்டதை பற்றி கூற நிரஞ்சனும் இது எதிர்பார்த்தது தான் என்பதால் மனமுவந்து அர்ஜூனிடம் மன்னிப்பு வேண்டினான்.
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 25
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN