ஊட்டி
அறைக்கு வந்ததும் அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த அழுகை கண்ணீராய் வெளிபட வாய்விட்டு அழுதவள் பின் அடுத்தவர் கவனம் கவராதவாறு கண்களை மூடி தன்னை சமன் செய்து சக மணவர்களுடன் பயணிக்க ஆரம்பித்தாள். ஊட்டிக்கு வரும்போது எவ்வளவு சந்தோஷத்துடனும் ஆர்வத்துடனும் இருந்தாளோ ராதாவிடம் பேசிய பின்பு அதை விட பத்துமடங்கு அதிகமான மனபாரத்தை சுமந்து கொண்டிருந்தாள். உடல் மட்டும் இங்கே இருக்க மனது சிறுக சிறுக செத்துக்கொண்டு இருந்தது.
அவர்கள் நினைப்பதும் நியாயம் தானே தனக்கு அடுத்து சொந்தங்கள் மகனுக்கு இல்லையே என்று ஏங்கிய பெற்றவரின் நிலையில் இருந்து யோசிக்க சரியெனவே பட்டாலும் அவன் மனதில் இடம் பிடித்து அவனுடனான வாழக்கையை கற்பனை செய்து கொண்டு வந்தவள் இன்று கண்ணீரை யாரும் அறியாமல் மூடி மறைத்துக்கொண்டு இருந்தாள்.
அவளின் சிரிப்பு, பேச்சி எண்ணம் என்று அனைத்திலும் நிறைந்து அவளை கொள்ளை கொண்டவனை இனி பார்க்கவோ அவனை பற்றி நினைக்கவோ கூடாது என்று மூளை நினைத்தாலும் மனது அவனையே சுற்றி வருவதை தடுக்க முடியவில்லை
சோகமாக அமரந்திருந்தவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான் அவளின் நண்பன் அஜய். ஏய் பக்கி என்று அவளை வம்பு இழுத்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் மறுபடியும் யோசனையுடனே அமர்ந்திருந்தாள்.
மேடம் என்ன யோசனைல இருக்கிங்க அடுத்து யாரை போட்டு வாங்களாம்ன்னு யோசிச்சிட்டு இருங்கிங்களோ என்று அவளின் தலையை தட்டி என்னடி பக்கி டீப் திங்கிங் என்றான்.
பச் ஒன்னும் இல்ல டா சும்மாதான் நீ என்ன இங்க உன் உருப்படதா பிரெட்ண்ஸ் விட்டுட்டாங்க போல என்று தன் மனநிலையை மாற்றி பேசினாள்.
சும்மா தான் அப்படியே ஜாலியா வந்தேன் என்றவன் இங்க என்னடான்னா நீ இஞ்சி திண்ண மங்கி மாதிரி மூஞ்ச வைச்சிட்டு உட்காந்து இருக்க உன் கூடவே சுத்துமே அந்த அல்டாப்பு மகாராணி எங்க... நீ மட்டும் தனியா இருக்க என்று கேட்டான்.
அதை சொல்லு எருமை உன் ஆளை தேட நான்தான் உனக்கு கிடைச்சேனா அவ உன் கிட்ட வந்தா மூஞ்சை காட்டு, அவ பார்க்கும் போது கண்டுக்காம சுத்து. பண்ணாட ஒரு பொண்ண இப்படியா வெறுப்பேத்துவ? உன் ஆம்பள கெத்த காட்டுரியா? காட்டெருமை ஒழுங்க மரியாதையா லவ்வ சொல்லி தொலை என்று இருக்கும் கடுப்பில் அவனை வசைபடினாள்.
அசடு வழிந்தபடி மண்டையை சொறிந்தவன் "உனக்கு எப்படி தெரியும்?" என்று கேள்வியாக நோக்கினான். "மொச புடிக்கிர நாய மூஞ்சிய பாத்த தெரியாது? அவளை வெறுப்பேத்த என்ன என்ன பண்றன்னு எனக்கு தெரியும் குரங்கே..." என்று அவனிடம் கடுகத்தவள் "இங்கு இருந்து போறத்துக்குள்ள அவகிட்ட லவ்வ சொல்லி தொலை நாயே" என்றாள்.
ஹீ... ஹீ... என்று வழிந்தவன் பக்கவாட்டில் இருந்து "லவ்யூ ஸ்வீட் ஹார்ட்" என்று அணைத்து விடுவித்தவன் இது லவ்வர்ஸ்குல்ல இருக்க விளையாட்டு மங்கி இப்போ நான் அவளை வெறுப்பேத்தினா பதிலுக்கு அவ என்னை வெறுப்பேத்துனும் ல அதுக்கு தான் டிரைன் பண்றேன் டி... இப்போ பாரு என் பிரபோஸல்ல மேடம் எப்படி அசந்து போறாங்கன்னு... என்று எழுந்துக்கொண்டான்.
அவளை ஹோட்டலில் இறக்கி விட சில இடங்களுக்கு தியா இவர்களுடன் சென்று வந்ததும் அவள் முகம் வாடி சோர்த்து இருப்பதாகவே தோன்றியது சித்துவிற்கு. நேற்று அவளுக்கு தேவையான உணவுகளை அன்னை கூறி இருந்தது நியாபகம் வர அவளுக்காக பார்த்து பார்த்து செய்தவன் மதிய உணவினை உண்பதற்காக அழைக்க வர, அந்நேரம் அஜய் "லவ் யூ ஸ்வீட் ஹார்ட்" என்று கூறுவதற்கும் சரியாய் இருந்தது.
இவள் மறுக்கவும் இல்லை, அவனை விளக்கவும் இல்லை. இதை கண்டவன் கோபம் கொண்ட முகத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றான். எப்படி சும்மா இருந்தா? அவன் லவ்வ சொல்றான் மறுத்து ஒரு வார்த்தை பேசல!... என்று கோபநெருப்பு உள்ளே கழன்று கொண்டு இருந்தது. எதிலும் மனம் செல்லவில்லை அவளை சுற்றியே அவனின் பார்வை வட்டம் இருந்தது.
மதியவேலை நெருங்கிய சமயம் பசி இல்லை என்றாலும் வெளியே செல்ல வேண்டும். ஏற்கனவே கூடிய மட்டும் உடலில் இருந்த அத்தனை சக்தியும் இழந்ததை போல் இருங்க சற்று வயிற்றுக்கு இட்டால் மட்டுமே கொஞ்சம் தெம்பாய் இருக்கும். என்று தோன்ற நண்பர்களுடன் சென்று உணவருந்தும் இடத்தில் அமர்ந்தாள். அவள் வந்து அமர்ந்தது தெரிந்ததும் அவளுக்காய் தயாரித்த உணவினை எடுத்து சென்று அவளுங்கு பறிமாற இது எனக்கு வேண்டாம் நான் ஆர்டர் பண்ணது கொண்டு வாங்க என்று அனுப்பிவிட்டாள். அவளுக்கு தெரியும் இது அவனுடைய வேலை தான் என்று அதனால்தான் வேண்டாம் என்று திருப்பி அனுப்பினாள் அவன் கரிசனம் முதற்கொண்டு எதுவும் தனக்கு வேண்டாம் என்று உறுதியாய் இருந்தாள்.
"மேடம்... சார் இதுதான் உங்களுக்கு கொடுக்கனும்னு சொல்லிட்டாரு." என்று மறுபடி அந்த வைட்டரும் எடுத்து வந்து தர, அந்த உணவு மேசையில் இருந்து எழுந்தவள் "எனக்கு சாப்பாடே வேண்டாம் இதையும் சேர்த்து உங்க சார்கிட்ட சொல்லுங்க" என்று விர்ரென்று அவள் அறைக்கு திரும்பி விட்டாள்.
அவள் உணவினை மறுத்தது அவள் அறைக்கு சென்றதையும் பார்த்து கொண்டு இருந்தவன் நேரே அவள் அறைக்கு விரைந்து கதவை தட்ட நண்பர்களாக இருக்குமோ என்று கதவினை திறந்தவள் நிச்சயமாய் இவனை எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகத்தில் ஏற்பட்ட அதிர்சியினை வைத்தே தெரிந்து தொண்டான் சித்தார்த்.
"ஏன் சாப்பிடல?" என்றான் கோபமாற குரலில்
எங்கோ பார்வையை பதித்தபடி "எனக்கு பிடிக்கல"
"அதான் ஏன் பிடிக்கல?" என்றான் சித்தார்த்
"உஃப் அதை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல அந்த அளவுக்கு நமக்குள்ள எதுவும் இல்ல." என்று அவனை பார்க்கமல் கைகளை குறுக்காக கட்டி "பீளிஸ் வெளியே போங்க" என்றாள்.
"உன்னை ஏன் சாப்பிடலன்னு தான் கேட்டேன் நமக்குள்ள என்ன இருக்கு இல்லன்னு கேட்கல." என்று காரம் நிறைந்த குரலில் கேட்டான்.
"பச் எனக்கு பசி இல்ல. லிவ் மீ அலோன் நீங்க முதல்ல வெளியே போங்க. யாராவது பார்த்த தப்பாகிடும்." என்று அவனை வெளியே அனுப்ப முயன்று கொண்டிருக்க
"என்ன என்னை பார்த்த பொறுக்கிய பாக்குறா மாதிரி இருக்காடி? யாருன்னா பார்த்த தம்பாகிடும்னு சொல்ற? பார்க்கட்டுமே நாளு பேரு என்ன நார்பது பேரு பார்க்கட்டுமே." என்று அஜய் அவளுக்கு காதலை சொல்லியதை மனதில் வைத்து அவளின் கையை பிடித்து இழுத்து பின்பக்கமாய் அவனின் நெஞ்சில் அவளின் முதுகை படுமாறு வைத்து "ஜாக்கிரதை பேசறதுக்கு முன்னாடி யோசிச்சி பேசுடி" என்று பற்களை கடிக்க
"விடு சித்து விடு கிராஸிங் யுவர் லிமிட்ஸ். நீ தெளிவாதான் இருக்கியா? என்ன பண்றன்னு தெரிஞ்சிதான் பண்றியா?" என்று சிற்றம் கொண்டாள்.
"வாய மூடுடி நான் தெரிஞ்சிதான் பண்றேன் ஒருத்தன் வந்து கட்டிபிடிச்சி ஐ லவ்யூன்னு சொல்றான். நான் உன்னை தொட்டா எரிச்சலா இருக்கா?" என்று சிங்கமாக கர்ஜிக்க
"என்ன உளர்ர சரி அப்படியே நான் அக்சப்ட் பண்ணேன் அதுல உனக்கு என்ன வந்தது? நீதான் என்ன வேணாம்னு சொல்லிட்டியே உனக்குதான் நான் தேவை இல்லையே. நான் யாரை லவ் பண்ணா என்ன? கல்யாணம் பண்ணா என்ன? இல்ல கட்டிபிடிச்சாதான் என்ன?" என்று வெடித்தாள்.
அவள் கேட்ட கேள்வி நியாயம் தானே அவளை வேண்டாம் அவள் காதல் வேண்டாம் என்று அவளை நிராகரிந்த பின்னே அவள் யாருடன் இருந்தால் என்ன? நெற்றி பொட்டில் அடித்தாற் போல் உறைக்க அவள் கையை விடுவித்து ஒரு அடி பின்னால் நகர்ந்தான்.. அவனுக்கே அவனின் மனநிலையினை புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னை தெளிவு படுத்திக்கொள்ள தனிமை வேண்டி இருக்க அறையை விட்டு விருட்டென வெளியேறினான்.
அவன் சென்றதும் முடிந்த மட்டும் அழுது கரைந்தவள் நண்பர்கள் வந்து அழைக்க மீண்டும் சில இடங்களுக்கு சென்று வர வேண்டி இருப்பதால் மனதே இல்லாமல் அவர்களுடன் கிளம்பினாள்.
நான் ஏன் அவ மேல கோவபட்டேன்? அவ யாரையோ லவ் பண்ணா எனக்கு ஏன் வலிக்குது? அவளோட சிரிப்ப ரசிக்க தோனுது. அவளுக்கு ஒன்னுனா ஏன் மனசு பதறுது என்று தலையை பிடித்து அமர்ந்துவிட்டான். தன் தனி அறையில் எவ்வளவு தேடியும் அவன் கண்டுபிடித்த பதிலை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் நான் அவளை விரும்புறேனா என் மனசுல விது இருக்காளா என்று அவனையே மறுபடி மறுபடி கேள்வி கேட்டுக்கொண்டான்.
மாலை ராதா தியாவை நேரில் வந்து பார்த்து சிறிது நேரம் பேசிவிட்டு செல்ல அவள் இருக்கும் அறை பக்கம் கூட வருவதை தவிர்த்து இருந்தான் சித்தார்த். இப்படியே மௌனங்களோடே இருவரது காதலும் ஒருவருக்கு ஒருவர் அதிக வலிகளை தந்தது. அடுத்த நாள் காலை அவள் ஊட்டியில் இருந்து புறப்பட நாளும் வந்தது அதுவரையிலும் அவனை பார்க்காமல் பேசாமல் தவிர்த்து வந்தவளின் மனது கடைசியாய் அவளுடைய சித்துவை காண நினைத்தது.
எங்கு தேடியும் அவன் இல்லை மனதில் வலியுடன் பேருந்தில் ஏறியவள் சன்னல் இருக்கையில் அமர மறைவாய் நின்று தியாவையே பார்த்துக்கொண்டு இருந்தான் சித்தார்த். அவள் முன் நின்று தன் காதலை சொல்லும் தருணம் மறக்க முடியாத நாளாய் இருக்க வேண்டும் என நினைத்து அவளின் முன் வருவதை தவிர்த்தான். இதுவரை சிறுகுழந்தையாய் கண்ணுக்கு தெரிந்தவள் இன்று அவனுக்கான இணையாய் தெரிந்தாள். அவளின் ஒவ்வொரு செய்கையையும் ரசித்தான் அவளின் தேடுதல் தனக்கானது என்று தெரிய இதயத்தில் சில் என்ற சாரலை உணர்ந்தான் சித்தார்த். ஆனால் இங்கோ "இதுவே உன்னை கடைசியாய் நான் பார்க்கனும் நினைச்சேன் ஆனா பார்க்காமலே போறேன் லவ் யூ சித்து." என்று மனதில் எண்ணத்துடனே கனக்கும் மனதுடன் பயணமானாள் தியா.
கோவை
கேஷவ் அலுவலகத்திற்கு சென்ற பின்னர் சாப்பிட அமரந்தவள் அன்று அவனுக்கான சர்பிரரைஸ் செய்வதற்கான திட்டமிடுதலை செய்து கொண்டு இருந்தாள்.
"பாப்பா" என்றபடி சமையல் செய்யும் அம்மா வர
திட்டமிடுதலில் கவனத்தில் வைத்திருந்தவள் அவரின் குரல் கேட்டதும் அவரிடம் திரும்பி "சொல்லுங்க அக்கா" என்றாள்.
"வேலையெல்லாம் முடிஞ்சிடிச்சி.. மதியத்துக்கு என்னன்னு சொன்னா செய்வேன் பாப்பா" என்று கூற..
"அக்கா இன்னைக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருக்கனும்... அத்தை எல்லாம் சொல்லிட்டாங்க அவருக்கு என்ன என்ன புடிங்குமோ அதோடது எல்லாம் லிஸ்ட் போட்டு வைச்சி இருக்கேன்... ஒன்னு கூட சொதப்பிடக் கூடாது." என்று கூறியவள் "அப்புறம் எனக்கு கொஞ்சம் திங்கஸ் வேணும் அதையும் சேர்த்து வாங்கிட்டு வரிங்களா?" என்று அவளுக்கு தேவையான சில பொருட்களின் பட்டியல் அடங்கிய காகிதத்தையும் கொடுத்தாள்.
"கொடு பாப்பா வாங்கி வறேன்." என்றவர் "என்ன பாப்பா தம்பிக்கு பிறந்த நாளா?" என்று யோசனையாய் கேட்க
"ஹா... ஹா..." என்று சிரித்தவள் "இல்லக்கா அவரு ஒரு போட்டில ஜெயிச்சி இருக்காரு... அதான் கா." என்றவள் "கொஞ்சம் சீக்கிரம் வாங்கிட்டு வாந்திடுங்க." என்று அவளை அனுப்பி வைத்தாள்.
கேக் ஷாப்பிற்கு கால் செய்தவள் அழகிய டிசைனில் அவனுக்கு பிடித்தமான சாக்லேட் பிளேவரிலையே கேக்கினை ஆடர் செய்தாள்... வண்ணமலர்களை தோட்டத்தில் இருந்து பறிக்க சென்றவள், பூத்து குலுங்கி காற்றில் சிரிக்கும் ரோஜா மலர்களை காண மனதெல்லாம் அவன் சிரிப்பதாய் தோன்றியது. கையில் ஒரு சேர அனைத்து அதன் வாசத்தை முகர்ந்தாள்.
"சாரி பிரெண்ட்ஸ்.... இங்க வந்ததுல இருந்து நீங்க தான் என் கிளோஸ் பிரெண்ட்ஸா இருந்திங்க என் ரூம்ல இருந்த நேரத்தை விட உங்க கூட அதிக நேரம் இருந்து இருக்கேன். என் கவலை எல்லாம் உங்கள பாத்தா இருக்க இடம் தெரியாம போயிடும்... அப்படிபட்ட உங்களையே மறக்கவஞ்சிட்டான் அந்த கஞ்சி பவுர், அய்யனாரு மாதிரி மீசை வச்சிக்கிட்டு என்னமா என்னை மிரட்டி உருட்டிக்கிட்டு இருந்தான், இப்போ என்மேல உயிரா இருக்கான்." அவைகளை பார்த்து வெட்கபட்டுக் கொண்டே "நானும் தான்..." என்று முகத்தை சுருக்கியவள்... "ம் அவனுக்கு இன்னைக்கு ஒரு சர்பிரஸ் பார்ட்டி தரலாம்னு யோசிச்சி இருக்கேன்... இத ஏன் என்கிட்ட சொல்றன்னு கேக்குறிங்க தானே ஹீ.. ஹீ.. நீங்கதானே அதுக்கு மெயினா தேவைபடுறிங்க..." என்று தன் கைகளினால் தன் காதை பிடித்து கொண்டவள் "பீளிஸ் பிளீஸ் இன்னைக்கு உங்களை எல்லாம் பறிச்சிக்கிறேன்.... உங்களுக்கு நேரம் தவறாம தண்ணி ஊத்தி இன்னும் நல்லா பாத்துக்குறேன் சரியா?" என்று மலர்களை பறித்து கூடையில் போட்டவள் "உம்மா டாடா" என்று வீட்டிற்கு உள்ளே சென்றாள்.
அப்பாடா ஒரு வழியா பூ பறிச்சாச்சி கேக் ஆர்டர் பண்ணியாச்சி இன்றும் 1 ஹவர்ல கேக் வந்திடும் இன்னும் என்ன என்ன பண்ணனும் டைம் இல்ல கவி சீக்கிரம் சீக்கிரம் என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு ஒவ்வொரு வேலையையும் செய்தாள்.
சமையல்கார பெண்மணியிடம் கூறிய பொருட்களும் வர மிகுந்த ரசனையுடன் அவனுக்காக பார்த்து பார்த்து செய்து கொண்டு இருந்தாள். பாதி வேலையை முடித்திருந்தாள்.
அவளது அறையில் வேலையாய் இருந்த பார்கவியிடம் பாப்பா என்று சமையல் செய்யும் பெண்மணி வந்து நின்றார்.
"சொல்லுங்க அக்கா. என்ன?" என்றாள் மேலே இருக்கும் பேனில் பலுனை கட்டியபடியே
பாத்துமா ஏதாவது வேலை இருந்தா சொல்லுமா என்று கேட்க
உங்க வேலை முடிஞ்சதா அக்கா என்றாள் இன்னும் இறங்காமல்
ம் முடிஞ்சிடுச்சிமா வேற ஏதாவது இருந்தா சொல்லுமா என்றார்.
உங்க வேலை முடிஞ்சிடுச்சினா கிளம்புங்க கா இது மட்டும் தான் நான் பாத்துக்குறேன் என்றவள் கால் இடறி கைபிடிமானத்திற்க்காக அலமாறியில் கை வைக்க, அவள் கை பட்டு அலமாறியில் இருந்து சில புத்தகங்கள் சிதறியது.
அம்மாடி பாத்து பாத்து என்றவர் அவளை பிடித்து நேராக நிற்க வைத்தவர் பாத்துமா என்று கூறினார்.
"உஃப்..... அப்பாடா என்று நெஞ்சில் கைவைத்து ஆஸ்வசமானவள் தெங்க்ஸ் கா..." என்று ஸ்டுலை விட்டு கிழே இறங்கி நின்றவள்.எல்லாம் முடிஞ்சிடுச்சி கா சின்ன சின்ன வேலைகள் தான் நான் பாத்துக்குறேன்... என்று அவளை அனுப்பி வைக்க நியாபகம் வந்தவளாக அக்கா இவினிங் வர வேண்டாம் நாங்களே பாத்துக்குறோம் நாளைக்கு காலைல எப்பவும் போல வந்திடுங்க என்று கூறி விட சரி பாப்பா என்று கூறி அவரும் சென்று விட்டார்.
சே... நமக்கு மட்டும் ஒரு வேலை செய்ய போனா பத்து வேலை லைன் கட்டி நிற்கும் என்று எரிச்சலுடனே அலமாறியில் இருந்து விழுந்ததை எல்லாம் எடுத்து வைக்க கடைசி புத்தகத்தை எடுக்கும் போது அதன் அடியில் ஒரு புகைபடம் கிடந்தது அதை கையில் எடுக்க அதில் இருக்கும் பெண் நல்ல சிரித்த முகமாய் கேஷவின் தோளில் கையை வைத்துக்கொண்டு இருப்பது போல இருக்க அவளுக்கு பெண்களுக்கே ஏற்படும் சிறு உறுத்தல் தன் உடைமையை யாரோ எடுத்தது போன்ற உணர்வு இருந்தும் அதை பெரிதாக எண்ணாமல், இது பரெண்டா கூட இருக்கலாம் ஆனா ஏன் இதுல இருக்கு என்று யோசித்தவள் எதுல இருந்து விழந்து இருக்கும் என்று எண்ணியபடியே சில புத்தகங்களை எடுத்து பார்க்க அதில் சில கவிதை வரிகள் காதலின் ஆச்சரமாய் விழந்து விதைக்கான வரிகள்.... அவளை மேலும் சிந்திக்க விடாமல் வீட்டு தொலைபேசி அழைப்பை உணர்த்த ஒடி சென்று அதை எடுத்து காதில் வைத்து "ஹலோ" என்றாள்.
"ஹலோ என்றதும் ஹய் கவி என்ன அண்ணாவ சர்பிரைஸ் பண்ணிடியா? எங்க போறிங்க வெளியே அண்ணா என்ன சொன்னாரு?" என்று கலகலப்பாக ஷீலா அரம்பிக்க
மவளே வந்தேன் வை கும்மு கும்முன்னு கும்மிடுவேன் நானே வேலை முடியலையேன்னு இருக்கேன். என்று மிரட்டல் விடுத்தவள் மனதினுள்ளே இடையில இந்த போட்டோ வேற மண்டைல நண்டு பிராண்டராப்ல போல பிராண்டுது என்று நினைத்தாள்.
என்னடி ரொம்ப வேலையா அண்ணன் உன்னை வேலை செய்யவே விடலையா என்று கிண்டலடிக்க
வாய் ரொம்ப ஒவராகிடுச்சி இரு உன் மாமியாரு கிட்டயே மாட்டி விடுறேன்... நல்லா கவனிப்பாங்க என்று பதிலுக்கு மொழிய.
அய்யோ தெய்வமே இப்பதான் ஏதோ வண்டி ஓடுது டிராக்க கீக்க மாத்தி வண்டிய ஆக்ஸிடன்ட் பண்ணிடதமா தேவி என்று அவளும் கவியிடம் சரண்டராக
"அது" என்று இல்லாத காலரை தூக்கி விட்டவள் சில கதைகளை பேசி பேசியை வைத்தவளின் கண்களில் நேத்து மாலை வந்த பெயரிடத பிரிக்காத காகிதம் இருக்க அதை கையில் எடுத்தவள் நேத்தே சொல்லனும் இருந்தேன் மறந்து தொலைச்சேன் இதுல என்னதான் அப்படி இருக்குன்னு பார்ப்போம் என்று பிரிக்க அவளுக்கான பேரிடிடாய் இருந்தது.
கடிதத்தை படித்தவள். அப்படியே சோபாவில் பொத்தேன அமர்ந்தாள். உலகம் தட்டமலை சுத்தியது போல் சுழன்றது... கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. மூச்சு முட்டியது. ஏதோ ஒன்று அவள் கையை விட்டு நழுவியது போல் இருக்க அப்படியே பிரம்மை பிடித்தவள் போல் கடிதத்தை கீழே விட்டுவிட்டாள். நேரம் போறதே தெரியவில்லை 3 மணி நேரம் என்று சொல்லி இருந்தவன் வழியில் கார் பஞ்சராகி அதில் மேலும் ஒருமணி நேரம் கடக்க மதியம் 3 மணிக்கு மேல் வீட்டிறக்குள் நுழைந்தான்
வீடு ஓரே அமைதியாய் இருந்தது அவள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை... "பார்கவி... பாரு... பாரு..." என்று கிச்சன், கீழ் அறை என்று பார்த்தவன் இறுதியாய் மாடியில் தனது அறைக்குள் நுழைந்தான்.
அறை முழுவதும் இருட்டு பால்கனியின் கண்ணாடி கதவில் திரைசிலையினால் வெளிச்சம் மறைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருக்க. பக்கத்தில் இருந்த மின்விளக்கை ஒளிர விட இருமுழாங்கால்களையும் கைகளால் கட்டியபடி, காலில் தலை புதைத்து இருக்கும் மனைவியை கண்டான்.
அவள் இருக்கும் கோலம் ஏதோ சரி இல்லை என்பது மட்டும் உணர்த்தியது அவனுக்கு அம்முமா அம்மு ஏன்டா இப்படி இருக்க என்று அருகில் அமர்ந்து அவளை தொட்டு பார்க்க, உடல் நெருப்பாய் தகித்தது அழுது அழுது கண்கள் கோவை பழமாய் இருந்தது. அவளை தொட்டவுடன் அவனது கைகளை பலம் கொண்டமட்டும் தட்டி விட்டவள் தொடாதிங்க என்னை தயவு செய்து தொடாதிங்க ஒரு கொலைகாரனோட பாவபட்ட கை என்னை தொடவேண்டாம். என்று நெத்தியில் அடித்துக்கொண்டு அழ,
என்ன ஏது என்று புரியாமல் குழம்பி இருந்தவன் அவள் கால்களுக்கு அடியில் ஒரு காகிதமும் அவனுடைய புகைப்படமும் சில கவிதை வரிகள் இருக்கும். புத்தகத்தையும் ஒரு வரைபடத்தையும் காண அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி என்ன நடந்தது எப்படி தெரிஞ்சது ஒரு வேலை அவன் வந்தானோ இவளை ஏதாவது என்று நினைத்தவன் தன்னை பற்றி தவறாக நினைத்ததை எல்லாம் தூர எரிந்தவன் "வீட்டுக்கு யாரவது வந்தங்களா பாரு" உன்னை ஏதாவது என்று அவளை ஆராயந்து அவளுக்கு ஏதேனும் நேர்ந்ததா என்று கவலையும் பதட்டாமுமாய் கேட்க அதான் "உயிரோட கொன்னுட்டியே டா" என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கி அவள் கால் அடியில் இருந்த புகைபடத்தையும் அந்த காகிதத்தையும் அவன் முகத்தில் எரிந்தாள்.
அந்த காகித்தை கையில் எடுத்தவன் படிக்க ஆரம்பித்தான்.
ஏமாளியான பார்கவிக்கு தான் இந்த கடிதம்...
என்னடா பெயர் இல்லாத கடிதம்னு பாக்குறிங்களா.. இல்ல மொட்ட கடுதாசின்னு பாக்குறிங்களா... இது ரெண்டுத்துக்குமே உன் புருசன் தான் காரணம் பார்கவி.... இப்போ நான் என் குடும்பம் மொத்தம் இல்லாம போனதுக்கு ஒரு உயிர் இந்த உலகத்தை விட்டு போனதுக்கும் அவன் மட்டுமே காரணம்.... நீ உன்னை கல்யாணம் பண்ண வந்தவன் அயோகியன், பொருக்கின்னு தானே இவன கல்யாணம் பண்ண… ஹா… ஹா… நரி வாயில இருந்து தப்பிச்சி புலி வாயில மாட்டிங்கிட்டியே பார்கவி.... சோ சேட்... உனக்காக நஆன் அனுதாபபடுறேன்… அவனை நம்பாதே பொண்ணுங்கள நம்ப வைச்சி கழுத்தறுக்கும் முதல் நம்பர் அயோக்கியன்… துரோகி உன்னையும் தான் நல்லவனா நடிச்சி ஏமாத்திக்கிட்டு இருக்கான்... ஜாக்கிரதை .
இப்படிக்கு
உன் நலவிரும்பி
என்று எழுதி இருக்க அதை முழுவதும் படித்து முடித்தவன் இயலாமையுடன் அவளை பார்த்தான். பாருமா என்று அவள் கைகளில் கை வைக்க மனசுல இவள வைச்சிக்கிட்டு என்னை எப்படி கல்யாணம் பண்ண? அவளை தான் காதலிக்கிறேன்னு சொல்லி இருந்தா இந்த கல்யாணமே நடந்து இருக்காதே நமக்கு கல்யாணம் நடந்த பிறகும் இன்னும் இந்த போட்டோ இங்க இருக்குன்னா உன் பழைய காதலை இன்னும் நீ மறக்கலனு தானே அர்த்தம் ஏன் ஏன் என்னை கல்யாணம் பண்ண? என் வாழ்க்கைய ஏன் அழிச்ச? என்று அழுதாள். மனசுல ஒருத்திய வைச்சிக்கிட்டு தான் என்னோட குடும்பம் நடத்துறியா உன்னலாம் சே என்று முக்தை திருப்பிக் கொண்டாள்.
அவளை சமாதனபடுத்த முயன்றவன் பிளீஸ் பாரு என்னை நம்பு டீ உனக்கு துரோகம் பண்ணுவேனா என்று அருகில் வர கட்டிலில் இருந்து எழுந்து தூர நின்றவள் "என் பக்கத்துல வந்த, என்னை உயிரல்லா பிணமா தான் பார்ப்ப." என்று மேஜை அருகில் இருந்த கண்ணாடி பிளர்வாசை கீழே ஓரே அடியில் உடைத்து கை மணிகட்டில் வைத்து அவனை மீரட்டினாள்.
ஏய் ராட்சசி சொல்ற கேளுடி என்ன ஏதுன்னு தெரியாம ஆளு ஆட்ரஸ் இல்லா ஒரு லெட்டாரை வைச்சி முடிவு பண்ணாதடி உனக்கு எல்லாம் உண்மையும் சொல்றேன் என்று அருகில் வர
"வேணாம் வேண்டாம் நீ எதுவும் சொல்ல வேண்டாம் …." என்று இரு காதையும் பொத்திக் கொண்டவள் "இன்னொரு பொண்ணை நீ நினைச்சத உன் வாயல வேற சொல்ல போறியா வேண்டாம்டா வேணடாம் அதை தாங்க சக்தி எனக்கு இல்ல என்னை உயிரோட சாகடிச்சிடாத என்று கதறியவள் ஒரு அடி எடுத்து வைச்சாலும் என்னை உயிரோட பாக்கமுடியாது" என்று அவனை பேச்சிழக்க வைத்தாள்.
"பாரு சொல்றத கேளுடி உன்னை ஏமாத்தலடா நீ என் உயிர் டா நீ இல்லான நான் இல்லாடா. வெறும் ஜடம். அம்முமா பீளிஸ் டீ நான் எல்லாம் சொல்றேன் டீ எனக்கு ஒரு சேன்ஸ் கொடுமா" என்று கெஞ்சினான்.
"நீ என்னை ஏமாத்திட்ட என்னை ஏமாத்திட்ட என்று கத்தி கூப்பாடு போட" அவள் கண் இமைக்கும் நேரம் அவள் கையில் இருந்ததை பிடிங்கி தூர எரிந்தவன் அவளை ஓங்கி அறைய கையை உயர்த்த அவன் அரைய போகிறான் என்றதை யூகித்து இருந்தவள் கண்களை இறுக்க மூடிக்கொள்ள பக்கத்தில் இருந்த டிரெஸிங் டேபிறளில் ஓங்கி குத்தினான். கண்களை முடி இருந்தவளுங்கு சில்லுசில்லாய் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டதும் கண்களை திறந்தவள், அவன் கைகளில் வழியும் இரத்தத்தை பார்ந்ததும் "அய்யயோ என்ன பண்றிங்க?" என்று அவன் கைகளை கெட்டியாக பற்றியவள் துடிதுடித்து போனாள்.
"என்னங்க பண்றிங்க?" என்று அவன் முகம்பார்த்து அழுதபடி கேட்க விட்றி விட்றின்னு சொன்னேன் என்று தன் கைகளை அவளிடம் இருந்து உறுவியவன் இந்த ஒவ்வொரு துளி ரத்தத்து மேலயும் சத்தியம் பண்ணி சொல்லுவேண்டி நான் காதலிச்ச ஒரே பொண்ணு நீ மட்டும் தான் நீ மட்டும் தாண்டி... நீ என்னை சந்தேகப்பட்டுடல என்று அவளிடம் இருந்து நகர்ந்தவன் நான் இந்த உலகதுலேயே என் அம்மாக்கு அப்புறம் அதிமா நேசிச்ச பொண்ணும் நீதான் டீ ராட்சசி .. ரொம்ப வலிக்குதுடி இங்க என்று அவன் நெஞ்சை தொட்டு காட்டியவன் இதை சொல்லாம மறச்சது தான் தப்புனா ஆமா நான் தப்பு செஞ்சவன் தான் அப்படியே இருக்கட்டும் அந்த தப்பு ஏன் மறைச்சேன் நீ என்னை வெறுக்க கூடாதுன்னு தான் மறைச்சேன் என்று சத்தம் போட்டு கத்தியவன் அந்த கவிதைகளையும் அவன் வரைந்த ஓவியங்களையும் எடுத்து அவளிடம் நீட்டி உன்னை பார்த்த அன்னையிலருந்து நான் எழுதின கவிதைகள்.... இத. காதல் கவிதை னா அது உனக்காக எழுதியது தான் அவளின் காலுக்கு அடியில் போட்டான். அதை நடுங்கும் விரல்களுடன் எடுத்து பார்த்தவள். அவளை சந்தித்த எவ்வொரும் நாளும் ஒவ்வொரு கவிதையாய் எழுதி வைத்திருக்க கண்ணீர் தூளி கண்களை விட்டு உருகியபடியே வாசித்தாள்.
அன்று அழுதபடி பார்த்த அவளது கண்களின் ஓவியத்தையும் பார்த்தாள.
உன்னை சந்திக்கிர அன்னைக்கு எல்லாம் ஏன் எரிஞ்சி விழரேன்னு யோசிச்சி இருக்கியா. என்னை அறியாமலே எனக்குள்ள நீ வந்தத நான் உணர்ந்துட்டேன் பாரு உன்னை மறுபடியும் சந்திக்கவே கூடாதுன்னுதான். பார்க்கும் போது எல்லாம் திட்டி என்னை நானே சாமாதாபடுத்திக்கிட்டேன் நீ எனக்கு கிடைக்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டேன் என்றவன் கையில் வலியின் காரணமாய் ஸ் ஆ.... என்றான். " என்னங்க" என்று அருகில் வர "அங்கயே நில்லு" என்றவன் "உன்னை கல்யாணம் பண்றது எனக்கு அதிர்ச்சியாதான் இருந்துச்சி ஆனந்த அதிர்ச்சி எனக்கு வானத்துல மிதக்குற மாதிரி இருந்துச்சி எனக்கு கிடைக்காதுன்னு நினைச்ச சொர்க்கம் கிடைச்சதா உணர்ந்தேன் டி... சொல்ல முடியாத சந்தோஷம் வெளியே காட்டிக்க முடியாத சூழ்நிலை... உன்னை அனு அனுவா ரசிச்சேன் என் கூடவே இருக்கனும். நீ என்னை புரிஞ்சிக்கிர வரையும் காத்திருக்கனும்னு எல்லாம் நினைச்சேன் டி". என்று தலையை சாய்த்து காட்டில் அமர்ந்தான். "நீ என்னை நம்பலியே டி." என்று கண்களில் இரு சொட்டு நீர் இறங்கியது அவ அவ யாருன்னு தானே தெரியனும் அந்த போட்டோவை எடுத்து கேட்டவன் "இவ பேரு உத்ரா... என் கிளோஸ் பிரெண்ட் சாருகேஷோட தங்கச்சி" என்றான்.

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 33
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.