காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 34

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பகுதி 34

நான்கு வருடங்களுக்கு முன்..

கோவை மாவட்டத்தில் இரு பாலரும் பயிலும் புகழ்பெற்ற கல்லூரியின் கேன்டீனில் அக்கல்லூரியில் 'நானும் ரவுடி' பேர்வழி என்றிருப்போர் பட்டியலில் ஒருவனான சதீஷ் தன் பட்டியலில் உள்ள மற்ற சகாக்களுடன் தீவிர உரையாடலில் இருந்தான் ..

"என்ன மச்சான் காலைல உன் லவ்வ ரொம்ப ஆக்ரோஷமா சொன்ன போல நித்யா கிட்ட ?." என்றான் கலை.

"டேய் லவ்வ சொன்னான்னு சொல்லாத டா சேது பட ஸ்டைல்ல மெரட்டிட்டு வந்திருக்கான்னு சொல்லு டா" என்றான் வினோத்.

"கேள்விப்பட்டேன் மச்சான். பத்தாத குறைக்கு கேக்க வந்த அவ பிரெண்ட் கிட்டயும் சண்டையை போட்டுட்டு வந்திருக்கான். இவன் சேது விக்ரம் மாதிரி தான் கிளைமாக்ஸ்ல ஆக போறான் போல" என கலை கூற, "டேய் ஜாஸ்தி பேசாத. நானே இப்ப தான் காலேஜ்ல ஒரு பார்ம்க்கு வந்துட்டு இருக்கேன் இவ போய் பெரிய இவனாட்டம் அவன பஞ்சாயத்துக்கு கூட்டிட்டு வர்றா. அவன் எல்லாம் எனக்கு நேரா நின்னு பேசினா என் கெத்து என்ன ஆகறது மச்சி. அதான் கீழ இறக்கி நாலு காட்டு காட்டிவிட்டேன். இனிமே அவனுக்கு பயம் இருக்கும்".

"மச்சி அவன் பயப்படற ஆள் இல்ல டா. அவன் அந்த நேரம் அமைதியா போய் இருக்கான்னா வேற ஏதோ காரணம்............" என சொல்லிக்கொண்டிருக்கும் போதே சதீஷ் முதுகில் யாரோ உதைக்க அவன் டேபிளில் இருந்து கீழே விழுந்தான்.

சதீஷ் அரண்டு போய் திரும்பி பார்க்கையில், அங்கே கேஷவ் "எங்க வந்து யாரு மேல கைய வைக்கற. ?" என கையை முறுக்கிக்கொண்டே அவனருகில் வந்து அவனை காலால் மிதிக்க செய்வதறியாது அதனை தடுத்து கொண்டிருந்தான் சதீஷ்.

பின் சுதாரித்து கொண்டு அவனும் தாக்க முற்பட, சுற்றி இருந்தோர் கேஷவை தடுத்தும் திமிறிக்கொண்டு போய் சதீஷை ஆக்ரோஷமாய் தாக்க, இருவரது நண்பர் பட்டாளமும் அவர்களை அடக்கி நிதானத்துக்கு கொண்டு வந்த பொழுது இருவரும் தலைகுனிந்து கை கட்டி ப்ரின்ஸிபல் அறையில் நின்று கொண்டிருந்தனர்.

"ஆர் யூ நாட் ஆஷேம்ட் ஆஃப் யுவர் ஆக்டிவிட்டிஸ். படிக்கிற பசங்களா இல்ல ரவுடிகளா இப்படி சண்டை போட்டுக்கிட்டு காலேஜே வேடிக்கை பாக்குற அளவுக்கு நடந்துகிட்டு இருக்கிங்க* என்று திட்டிக்கொண்டு இருந்தார் கல்லூரி முதல்வர்..

குனிந்த தலை நிமிராமல் இருந்த கேஷவ் பிரின்ஸிபலை பார்த்து "சார் அவன் பண்ணது.... .." என்று வாய் திறக்க

"ஷட் அப்.. நோ மோர் எக்கீயூசஸ். அண்ட் ஐ டோன்ட் வான்ட் எனி எக்பிளனேஷன்ஸ். இங்கு பிரின்ஸிபல்னு நான் எதுக்கு இருக்கேன். இல்ல கல்லூரி நிர்வாகம்னு எதுக்கு இருக்கு.. அவன் என்ன தப்பு செஞ்சி இருந்தாலும் வேற எந்த பிரச்சனையா இருந்தாலும் எங்ககிட்ட தான் நீ கம்ளைன்ட் பண்ணி இருக்கனும் அதைவிட்டுட்டு நீயே அதிகாரத்தை உன் கையில் எடுத்துக்குவியா???? ம்.." என்று கேட்டவர் "போத் ஆர் சஸ்பெண்ட்டட் ஃபார் ஒன் வீக்" என்று கூறி இருவரின் பெற்றவர்களையும் அழைத்து வருமாறு எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

வேறு எதுவும் பேசாமல் அமைதியாக வெளியே வந்த கேஷவ் சதிஷை முறைத்துக்கொண்டே போக அவனை இழுத்துக்கொண்டு வேறு இடம் சென்றான் சாருகேஷ்.

"ஏன்டா இவ்வளவு கோவம் இவ்வளவு மூர்க்கம் நீ அடிச்ச அடியில ஏதாவது ஒன்னுகெடக்க ஒன்னு ஆகி இருந்த என்ன பண்றது அவனை பார்த்தியா உதடு கிழிஞ்சி ரத்தம் கொட்டுது" என்று கவலை குராலாக கூறிக்கொண்டு இருந்தான் சாருகேஷ்.

"உன்னை.........." என்று திட்ட வந்த கேஷவ் அவன் நெற்றியையும் கையையும் காட்டி "என்ன இது ?." என்றான்.

"அது... அது... பைக்ல இருந்து ஸ்லிப் ஆகிடுச்சி டா" என்றான் தடுமாற்றமான குரலில்.

"ஹோ... அப்படியா எப்போ ஸ்லிப் ஆச்சி இவினிங் 4. மணிக்குதானே சரி அதுக்கு ஏண்டா உளர்ர இல்ல இன்னும் வேற என்ன பொய் சொல்லலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா ?." என்றான் சாதாரணகுரலில்.

அவன் கேள்வியில் அதிர்ச்சியான முகபாவத்தோடு "உனக்கு எப்படி தெரியும் ?." என்று சாருகேஷ் கேட்க.

"நான்தான் சொன்னேன் ?." என்றபடி வந்தாள் உத்ரா... ஐந்தரை அடி செப்பு சிலை அழகான வட்டமுகம் பெரிய கண்கள் படபடபேச்சு கலகலப்பாக பழகும் சுபாவம் என அப்படியே அன்பால் அனைவரையும் கட்டி வைத்திருப்பவள். கொஞ்சம் கோபத்துடனே வந்து நின்றிருந்தாள் அவள்.

"ஏய் ஏண்டி இப்படி பண்ண எனக்கு தெரியாதா அவன்கிட்ட எது சொல்லனும் எது சொல்ல கூடாதுன்னு ராட்சசி இப்ப பாத்தியா எது வரைக்கும் போய் நின்னு இருக்குன்னு எனக்கு அவறுங்கள அடிக்க தெரியாதடி நித்யா பேரு இதுல சம்பந்தபடக்கூடாதுன்னு தானேடி அடங்கி போய் வந்தேன்" என்று அவளை கை ஓங்கிக்கொண்டு அடிக்க வந்தான் சாருகேஷ்.

அவன் கையை இறுக பற்றிய கேஷவ் "அவ மேல கைய வைச்ச வச்ச கைய ஒடச்சிடுவேன் பாத்துக்க" என்று அவளை தன் அருகில் இழுத்து நிறுத்தி "இப்போ சொல்லு அங்க என்ன நடந்துச்சி நித்யாவுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் ?." என்று சாருகேஷிடம் கேள்வி கேட்டான் கேஷவ்.

"டேய்... என்ன நடந்து இருக்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ... என்னை கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க அவளுக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம் நீங்களே புதுசா கதைகட்டி விட்டுடுவிங்க போல டா ?." அவனை கேஷவ் முறைக்க "நம்பு மச்சான் ஒரு கிளஸ்மேட்டா தான்டா ஹெல்ப் பண்ண போனேன்...... இந்த மாவுமூஞ்சால இப்போ பிரச்சனை எதுவரையும் போயி இருக்கு பாத்தியா இது என்னோட சாதாரணமா போற பிரச்சனைய பெருசா ஆக்கி வைச்சி இருக்கா இவன் வேற ஒரு மாதிரி பாக்கறான் எல்லாம் உன்னால தாண்டி" என்று அவளை துரத்த கேஷவின் பின் புறம் ஒளிந்தாள் உத்ரா "டேய் பாருடா உண்மைய சோல்லிட்டேன்னு அடிக்க வர்றான்" என்று கேஷவிடம் சாருகேஷை போட்டுகொடுத்தாள்.

"டேய் ஒரு வாட்டி சொன்னா புரியாதாடா விடுடா அவள. நடந்துடுச்சி இனி மாத்த முடியாது அவளையே தப்பு சொல்லிட்டு இருக்காத முதல்ல என்ன நடந்துச்சின்னு சொல்லி தொலை பக்கி" என்றான் கடுப்பாக...

"சொல்றேன். சொல்லி தொலைக்கிறேன்". என்று பல்லிடுக்கில் பேசிய சாருகேஷ் "இன்னைக்கு ஆஃப்டர் நூன் நித்யா தனியா உட்காந்து அழுதுகிட்டு இருந்தா அந்த சைடு போகும்போது அவள பார்த்தேன்... ரொம்ப டிப்ரஸ்டா தெரிஞ்சா நெர்வசா வேற இருந்தா அவள அப்படியே பார்த்துட்டு விட்டுட்டு போக மனசு கேட்கல என்னனு கேட்டப்போ 'சதிஷ் லவ் பண்ண சொல்லி மிரட்டியதாகவும் அப்படி பண்ணலன்னா அவனுக்கும் நித்திக்கும் இடையே லவ் இருக்கரதா அவனோட பிரெண்ட்ஸ் புரலிய கிலப்பி விடுவாங்கனும் அப்படி அவனை எதிர்த்து பிரின்ஸிகிட்ட போனா இன்னும் இதை அசிங்கமாக எழுதி வைப்பேன்'னு சொல்லி ரொம்ப அசிங்கமா பேசி இருக்கான்.

"ம்" என்று அதில் அழுத்தம் கொடுத்தவள் "அப்புறம் என்ன இந்த மாவீரன் அந்த சதிஷ் நாயிகிட்ட சமாதான கொடிய பறக்கவிட்டு நியாயம் கேட்டாரம் அவன் இவரை போட்டு பின்னு பின்னுன்று பின்னி அனுப்பிட்டாங்களாம்." என்று உத்ராவும் கடுப்பில் ஒவ்வொன்றாக கூறிக்கொண்டே வந்தவள் "உனக்கு கை இல்ல அடிச்சவன கைய ஒடிக்கலனாலும் அட்லீஸ்ட் அவனை இரெண்டு அடியாவது அடிச்சிட்டு வந்து இருக்காலாம். உன்னை என்னடா செய்றது.... போனா போகுதுன்னு வந்தேன்னு வேற சொல்றான் பண்ணாட போட தடியா உன்னையெல்லாம் இயேசு வாழ்ந்த காலதுல கொண்டுபோய் விட்டு இருக்கனும் ஒரு கன்னத்தை காட்டுன்னு சொன்ன மறுகன்னத்தை காட்டிட்டு வந்து இருப்ப" என்று அவன் அடிவாங்கிய காயத்தை பார்த்து ஆத்திரமாக கூறினாள்

"அடியேய் ராட்சசி அடிக்க முடியாம வந்தன்னு நினைங்கிரியாடி அவனை பிரிச்சி போட்டு இருப்பேன் இப்போ நடந்துச்சே அதுதான் அப்போ நடந்து இருக்கும் ஒருத்தன் பொறுமையா வரான்னா ஏதாவது காரணம் இருக்கும் டி எருமை அவசரத்துலயும் ஆத்திரத்திலையும் எடுத்த முடிவு என்னைக்குமே சரியா இருக்காதுடீ அவ எனக்ககாக வந்து சாட்சி சொல்லி இருப்பாளா சொல்லு அவ வீட்டுக்கு தெரிஞ்சா படிக்க அனுப்புவாங்களா ?." என்று தங்கையிடம் கேள்வி கேட்டவன். "சாரிடா இவ என்ன சொன்னாலும் இவ பண்ணது தப்பு தாண்டா மன்னிச்சிடு டா" என்று சாருகேஷ் இயலாமையுடன் கூறினான்.

"சீ விடு சாரி சாரின்னு சொல்லிக்கிட்டு இப்போ என்ன ஒரு வாரம் நல்ல ஜாலியா ஊர சுத்தலாம் சினிமா பார்க் பீச்னு என்ஜாய் பண்ணலாம்" என்று கூறி அவனை சாமாதானபடுத்தினான் கேஷவ்.

"சாரிடா நான் இவ்வளவு பேருசா ஆகும்னு நினைக்கல இந்த குரங்கு அப்பவாவது உண்மைய சொல்லுவான்னு எதிர்பார்த்தேன் அது எப்படி டா வாய மூடிடாடு சைலண்டா இருந்தான்" என்று உத்ரா சாருகேஷை சந்தேகமாக கேள்வி கேட்டாள்.

வாய மூடிட்டு போயிடு கடுப்ப கிளப்பாதே செய்யுறதையும் செஞ்சிட்டு பேச்ச பாரு சீ போடி..." என்று தங்கையை திட்டியவன் நண்பனிடம் திரும்பி "உன்னாலதான்டா இவ இப்படி நிக்கறா அவ எது பண்ணாலும் சப்போர்ட் பண்ணிக்கிட்டு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சி இருக்க" என்று கூறி கோபத்துடனே அந்த இடத்தை விட்டு செல்ல.

"ஏண்டி அவனை டென்ஷனேத்திக்கிட்டு இருக்க டேய் நில்லுடா சாருகேஷ் டேய் மச்சான் நில்றா" என்று பின்னாடியே ஒடினான் கேஷவ்.

"பெரிய கலெக்டரு கோச்சிக்கிட்டு போறாரு போடா குரங்கு அவன் போயிட்டான்னு இவனும் பின்னாடியே தேடிட்டு போறான். போங்கடா இனி என்கிட்டயே வராதிங்க வந்திங்க ஒவ்வொருத்தனையும் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்று தனியாய் புலம்ப அவளின் மொபைல் போன் ரிங்கானது....

இவன் வேற நேரம் காலம் தெரியாம என்று அலுத்தவள் அதை எடுத்து காதில் பொருத்தி "உனக்கு எத்தனை முறை சொல்றேன் நான் காலேஜ்ல இருக்கும் போது கால்பண்ணாத பண்ணாதன்னு" என்று படபடவென பொறிய.

அந்த பக்கம் என்ன செய்தி வந்ததோ "சரி சரி இப்போதான் அவனுங்க போனானுங்க உடனே கிளம்பினா எங்கன்னு கேள்வி வரும் நான் எப்படியாவது ஒரு அரைமணி நேரத்துல வர பாக்குறேன்" என்று அலைபேசியை வைத்தவள் சாருகேஷிடம் என்ன காரணம் கூறுவது என்று யோசித்துக்கொண்டு அவனிடம் சென்றிருந்தாள்.

"ஆதி... ஆதி...." என்று மனைவியை கோபமாக அழைத்தபடி போனை ஆஃப் செய்தார் ராஜாராமன்.

"என்னங்க கூப்பிட்டிங்களா ?." என்றபடி வந்தார் ஆதிநாராயணி..

"புள்ளையா பெத்து வைச்சி இருக்க டி ரவுடி ரவுடி பயல பெத்து வைச்சி இருக்க ஊருல ஒரு சண்டைய விடுறானா ?." என்று காச் மூச் என்று எதிறி கொண்டு இருந்தார் ராஜராமன்.

"என்னங்க என்ன நடந்துச்சி தலையும் புரியாம வாலும் புரியாமா நீங்க ஏதேதோ சொல்லிட்டு இருக்கிங்க என்னன்னு தெளிவா சொல்லுங்க முதல்ல" என்று கேட்க.

"அதான் தருதலை ஒன்னு வீட்டுக்கு அடங்காம இருக்கே அது இன்னைக்கு காலேஜுக்கு அடங்கலயாம் சஸ்பெண்ட் பண்ணி வைச்சி இருக்காங்கலாம் வீட்டுல மட்டும் போயிட்டு இருந்த மானம் இன்னைக்கும் காலேஜ்லயும் போயிருக்கும் இன்னாரு புள்ள இப்படி ரவுடியாட்டம் ஆட்டம் போடுறான்னு... தண்டத்தை பெத்து வளத்து விட்டு இருக்கோம்... மிலிட்டரிகாரன் புள்ள ஊதாரி நல்ல இருக்குள்ள பேரு.. !. என்ன ரூல்ஸ் போட்டு வளத்தாலும் அதை தாண்டி தானேடி வளர்ந்து நிக்கறான்.. தருதலை தருதலை. என்ன பாவம் செஞ்சேனோ மொத்தமா அவன் உருவத்துல வந்து பொறந்து இருக்கு ஒரு நாளாவது நிம்மதியா இருக்க முடியுதா !." என்று எரிச்சலோடு திட்டிக்கொண்டு இருந்தார்.

"சும்மா அவனையே தப்பு சொல்லாதீங்க. ஒன்னுமே நடக்காம சண்ட போடுறதுக்கு அவனுக்கு என்ன பைத்தியமா புடுச்சி இருக்கு... எந்த காரணமும் இல்லாம அவன் இப்படி நடந்துகிட்டு இருக்க மாட்டான்." என்று ஆதி உறுதியாய் மகனுக்கு பறிந்து வர.

"அடியேய்...... இப்படி அவன் எது பண்ணாலும் காரணம் இருக்கும் காரணம் இருக்கும்னு செல்லியே செல்லங்குடுத்து குட்டி சுவரா ஆக்கி இருக்க" என்று மனைவியை திட்ட.

அதே நேரம் அவன் உள்ளே நுழையவும் காதில் அந்த வார்த்தைகள் விழவும் சரியாய் இருந்தது. அவன் வந்து நின்ற அரவம் தெரிந்ததும் கையில் கிடைத்த அன்றைய நாளிதழை தூக்கி வீசி எரிந்தவர் "இதோ வந்துட்டார் துரை அவருக்கு ராஜ உபசாரம் நடக்கட்டும்" என்று மனைவியிடம் கோபமாக மொழிந்தவர் "என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன் மனசுல இதே மாதிரி பண்ணிட்டு இருந்தான் இந்த வீட்டுலயே இருக்க முடியாது சொல்லி வை" என்றவர் அவனை தீ பார்வை பார்தது வெளியே சென்று விட்டார்.

'மகன் என்ன குற்றம் செய்தான்' என்று தெரியாமல் கணவரின் கோபத்திற்கும் பதில் கூறமுடியாமல் இருவருக்கும் இடையில் தவித்தபடி இருந்தார் ஆதி ராஜராமன் வெளியே சென்றதும் மகனிடம் வந்தவர் "ஏண்டா அவருக்கு பீபிய ஏத்திவிட்டுகிட்டு இருக்க நீ வெளியே பண்றது எல்லாம் வீட்டுல எப்படி வெடிக்குது பாரு" என்று மகனிடம் கூறியவர் "என்னதான்டா நடந்தது காலேஜ்ல ?." என்று கேட்டார் ஆதி.

"அம்மா நீ பயப்படறா மாதிரி ஒன்னும் இல்லமா சின்ன சண்ட அது எல்லாம் நான் பாத்துக்குறேன் உன் வீட்டுக்காரரு தான் தானாவே டென்ஷன் ஏத்திக்குறாரு. என்ன ஏதுன்னு தெரியமலேயே கோவம் வரும் யார் என்ன செய்தாங்கன்னு கேட்க மாட்டார் நான் ஒருத்தன் அங்க இருந்தா ஒட்டுமொத்தத்துக்கும் காரணம் நான் தான் அவரே உறுதிபண்ணிக்குவார். போதும் டா சாமி முடியல" என்று இரு கரம் கூப்பி தலையின் மேல் வைத்தவன் ஒரு கும்பிடு போட்டு "ரொம்ப பசிக்குது கொல பசியில இருக்கேன் சாப்பாடு போடுவியா இல்ல உன் புருஷன மாதிரி விரட்டி விடுவியாமா ?." என்று தாயை பார்த்து வயிற்றை தடவியபடி முகத்தை சூழித்து கேட்டான் கேஷவ்.

"ம்கூம். திருத்தவே முடியாதுடா வா வந்து உட்காரு அவரு என்னடான்னா உன்னை சொல்லிட்டு போறாரு நீ என்னன்னா அவர சொல்ற என்னமோ போங்க உனக்கும் அவருக்கும் இதுக்கு மேல முட்டிக்காம இருக்குனும்" என்றபடி உணவினை பறிமாறினார்.

"அது இந்த ஜென்மத்துல நடக்காது என்னடா நான் சொல்றது சரிதானே ?." என்று ஜெய் உள்ளிருந்து தலை துவட்டியபடி வெளிப்பட்டான்.

"அடப்பாவி இவ்வளவு ரணகலம் நடக்குது உள்ளயா இருந்த ?." என்று வாயில் கைவைத்து தன் அதிருப்த்ரியை வெளிபடுத்திய கேஷவின் தலையை தட்டிய ஜெய் "மூடு ஏதாவது உள்ள போயிட போகுது நான் வந்து மட்டும் என்னடா மாறிட போகுது இல்ல உன்னை திட்றத நிறுத்திட போறாறா சொல்லு" என்று தம்பிக்கு நிலமையை விளக்கியவன். "சரி இன்னைக்கு என்ன பிரச்சனைல சிக்கின ?." என்று கேட்டபடி உணவு மேசையில் அமரந்தான்..

"ஆமாடா என்னை திட்றதையே ஒரு வேலையா வைச்சி இருக்காரு இதுல நீ வேற நக்கல் பண்ணிட்டு இரு" என்று எரிச்சலாய் மொழிந்தவன் அன்றைய கல்லூரி நிகழ்வுகளை கூற மறக்கவில்லை... "இப்போ என்ன பண்ணபோற கேஷவ் இந்த சஸ்பேண்ட் உனக்கு ஒரு ப்ளாக் மார்க் இல்லையா அப்பா உன்னை சும்மாவா திட்றாரு. சொல்லு உன் கேரியருக்கே இது டேஞ்சர்னு உனக்கு தெரியலையா ?." என்று தம்பிக்கு அறிவுறை கூறவும் தவறவில்லை.

இளைய மகனின் சண்டைக்கான காரணம் கேட்டுகொண்டிருந்த ஆதி மகன்களுக்கு உணவினை பறிமாறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார். தாயின் நடவடிக்கையை கவனித்த கேஷவ் ஒரு பேருமூச்சை வெறியேற்றி உணவினை உண்ணாமல் அமைதியாய் சாப்பாட்டை அளந்துக் கொண்டிருந்தான் கேஷவ் அவன் முதுகை தட்டி கொடுத்த ஜெய் "விடு கேஷவ் பார்த்துக்கலாம் அப்பாகிட்ட சொல்லி பிரின்ஸிகிட்ட நாளைக்கு பேச சொல்றேன்.. அங்கே இவ்வளவு நடந்து இருக்கு எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லனும்னு உனக்கு தோணலயாடா ?. எடுத்தோம் கவிழ்த்தோம்னு கோவப்படுற உன்னோட குணத்தை கொஞ்சம் மாத்திக்க அது உனக்கு மட்டும் இல்ல உன்னை சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது இல்ல புரியும்னு நினைக்கிறேன். சாப்பிட்டு போய் அம்மாவ பாரு" என்று கூறி அவனை சாமாதானபடுத்தி உணவினை உண்ண வைத்து தாயிடம் அனுப்பி வைத்தான் ஜெயந்த்.

தாயின் அறையின் கதவை தட்டிய கேஷவ் கதவு திறந்திருப்பதை பார்த்து உள்ளே நுழைந்தான். ஆதி மெத்தையில் அமர்ந்திருப்பதை பார்த்தவன் அவர் மடியில் தலை வைத்து படுத்து கொண்டு விடாப்பிடியாக அவர் கைகளை பற்றி கொண்டவன் "அம்மா ப்ளீஸ் மா நீயும் கோவபடாத மா வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சிடு மா" என்று அவரின் கையை பற்றிக்கொள்ள.

அமைதியாய் வேறுபுறம் பார்வையை பதித்திருந்தார் ஆதி "அம்மா ப்ளீஸ்" என்று அவர் தாடையை தன்புறம் பற்றி திருப்பியவன் "பேசுமா" என்று கெஞ்ச.

"விடு கேஷவ் உன் மேல நான் எவ்வளவு நம்பிக்கை வைச்சி இருந்தா உனக்காக நான் அப்பாகிட்ட பேசி இருப்பேன் ஆனா நீ என் நினைப்பே தப்புன்னு சொல்லாம சொல்லிட்டியே டா" என்று மனம் சுணக்கத்துடன் கூறி அவன் கையை தட்டி விட்டு தன் கோபத்தை வெளிபடுத்தினார் ஆதி.

"மா.. மா.. பிளிஸ் மா நான் இனிமேட்டு அடிதடி சண்டைக்கு போகமாட்டேன்... எதுவந்தாலும் இறங்கிபோறேன் மா பீளிஸ் மா இது என் மேல பிராமிஸ் இல்ல இல்ல உன் மேல பிராமிஸ் மா ப்ளீஸ் மா என்னை பாறேன்..." என்று தாயை தன் முகத்தை பார்க்க வைத்தவன் அவர் சிரிக்காமல் உம்மென்று இருக்க "மா.. சரி மா ப்ளீஸ் ப்ளீஸ் என் செல்லம் இல்ல. சிரிமா" என்று தாயை சமாதானபடுத்தினான்.

தொடரும்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 34
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN