காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 44

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காரிருள் மறைந்து வெள்ளி முளைத்திடும் விடியற்காலையில் தொடங்கிய உடற்பயிற்சியை மணி 8.30 என்பதை நெருங்கிய பின்னும் இன்னும் வெறித்தனமாகச் செய்துக் கொண்டு இருந்தான் சாருகேஷ்.

அவன் எண்ணத்தில், மூளையில், இதயத்தில் ஆழமாக கேஷவ் மீது பழி உணர்ச்சியை கட்டாயப்படுத்தி வரவழைத்து வளர்த்துக் கொண்டவன் அதையே மனதில் உருப்போட்டுக்கொண்டு அவன் மேல் கொஞ்சமும் இறக்கம் இல்லாது செயல்பட வேண்டும் என்று மனதில் மந்திரம் போல் அவ்வப்போது ஜெபித்துக் கொண்டான்.

அவனைக் கொன்றுப் போட்டால் கூட சிலமணி நேரங்களில் நிம்மதியான மரணத்தை அடைந்துவிடுவான் அதைவிட கொடுமையானது அவன் நிம்மதியை குலைப்பது ஒவ்வொரு நாளும் அவனை பதறவைக்க கங்கணம் கட்டிக்கொண்டவன். முதற்கட்ட வேலையை செவ்வனே செய்து இரண்டாம் கட்ட வேலையை அவனது தற்போதைய நண்பனான தேவராஜிடம் கொடுத்திருக்க அவன் கூறப்போகும் செய்திக்காக காத்து இருந்தான்.

இரும்பை ஒத்திருந்த அவன் உடற்கட்டு வியர்வையால் நனைந்து அவனுடைய வலிமையும் இறுகிய முகமுமாய் சிவந்த விழிகளில் தெரியும் வெறியுடன் த்ரெட் மில்லில் ஓடிக்கொண்டு இருந்தவனுக்கு "இன்னும் உன் வேகம் அடங்கலையா?" என்று தேவராஜின் குரலைக் கேட்கவும் லாவகமாக அதன் வேகத்தை மட்டுப்படுத்தி அருகில் இருந்த துவாலையில் முகம் துடைத்தபடி அதில் இருந்து இறங்கி வந்தான் சாருகேஷ்.

"அவனை உருதெரியாம அழிக்கற வரையிலும் என் வேகமோ கோவமோ அடங்காது தேவா" என்றவன் அறையை விட்டு வெளியேறி கூடத்திற்கு வந்திருந்தான். அவன் பின்னாடியே வந்த தேவராஜ் "அதுக்கு தானே நாம செய்ய வேண்டியதை செய்திட்டு இருக்கோம் நேத்து நைட் கூட அவனோட குடோன்ல இருந்து லோடு டிஸ்பேச் ஆகி இருக்கு அதோட மதிப்பு மட்டும் 3 கோடி இப்போ அடிச்சா எந்திரிக்கவே முடியாது சாருகேஷ்" என்றவனின் குரலில்

அத்தனை குஷி இருந்தது.

"பணம், பணம்.... எல்லாம் பெரிய விஷயமே இல்ல தேவா அவனுக்கு யோசிக்க கூட நெரம் கொடுக்கக் கூடாது குடைச்சல் கொடுத்துக்கிட்டே இருக்கனும்.... அவன் பயப்படனும் அவனோட பயம் கண்ணுல தெரியனும்... உடம்பு பதறனும் அடுத்து என்ன செய்ய போறானோ இந்த சாருகேஷ்ன்னு நெஞ்சை பிடிச்சிக்க வைக்கனும்" என்றான் அழுத்தமான குரலில்.

சிறிது நேர மௌனம், கண்களில் தாய் தந்தை மற்றும் தங்கையுடன் மகிழ்வாய் இருந்த தருணத்தில் எடுத்த புகைப்படம் அதில் மிகவும் சாதாரணமாக தாயின் பக்கத்தில் தரையில் அமர்ந்திருந்தான் சாருகேஷ். உத்ரா தந்தையின் பக்கத்தில் தரையில் அமர்ந்திருக்க எடுத்த படத்தை பார்த்திருந்தான். மனம் பின்நோக்கி சென்றது... அதையெல்லாம் இழுத்து பிடித்தவன் "அவன உயிரோட சித்ரவதை செய்யுனும் தேவா" என்றான் கண்களில் வெறியோடு

எரிந்த தீயில் எண்ணையெய் ஊற்றுவது போல் "யூ டோன்ட் வொரி சாருகேஷ் எல்லாம் பக்காவா பிளான்டு அவனுங்க இன்ஷூரண்ஸ் க்ளைம் பண்ணாகூட பாதிக்கு பாதிதான் வரும். ஆனா சொன்ன இடத்துல சரக்கு போய் சேரலைனா வர்ற தப்பான பெயரை மாத்துறது ரொம்ப கஷ்டம். இது அவனுக்கு பலத்த அடிதான்" என்றவன் சில செய்திகளையும் சொல்ல அதையும் கேட்டுக்கொண்டான்.

இருவருக்கும் பழச்சாறுகளை வேலையாள் கொண்டு வந்து தந்துவிட்டு சென்றதும் அதை கைகளில் எடுத்த தேவராஜ் "அந்த கவி பொண்ணுக்குதான் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணி இருக்கான். உன் மேல அவ்வளவு பயம்" என்றவனின் குரலில் ஏகத்திற்கும் கடுமை இருந்தது.

கேஷவின் வாழ்வில் கவியின் முக்கியத்துவத்துவத்தை உணர்த்த இந்த ஒரு செயலே போதுமனதாய் இருக்க 'என் தங்கை வாழ்வை அழித்தவன் தன் மனைவிக்கு இத்தனை பாதுகாப்பை தந்து காப்பத்துறானா?" என்று கோவத்தில் கையில் இருந்த பழச்சாறு இருந்த கண்ணாடி டம்பளரை கையாலையே நொறுக்கி "உன்னை கலங்க வைப்பேன் டா" என்று கத்தினான் வெறியேறியவனாய்.

"சாருகேஷ்" என்று அவன் கைகளில் இருந்த ரத்தத்தை பார்த்த தேவராஜ் "என்ன பைத்தியக்காரத்தனமான வேலை செய்யுற அவனை அழிக்க சொன்ன உன்னை நீயே அழிச்சிக்கிற?" என்று அவனை கடிந்து கொண்டவன் தனது சகோதரனுக்கு தகவல் தெரிவித்து உடனே வர பணிந்தான்.

கையில் தண்ணீரை கொண்டு அலம்பி இருந்த சாருகேஷ் "இது எல்லாம் வலி இல்ல தேவா... என் குடும்பம் இருந்த இடமே தெரியாம போச்சே அது தான் வலி அந்த வலிக்கு இது எல்லாம் சாதாரணம் அவனுக்கு வலிக்கனும். என் வலிய அவனுக்கு தரனும்" என்றவனின் உடல் இன்னும் இறுக்கத்தில் தான் இருந்தது பேசிப் பேசிப் புலம்பி ஒருகட்டத்தில் அப்படியே தலையை பின்னோக்கி சரித்து சோஃபாவில் படுத்து இருந்தான் .

அப்போது தேவராஜின் செல்ஃபோன் ஒலிக்க "உள்ளதான் இருக்கேன் வாடா மயக்கமாகுறா மாதிரி இருக்கான்" என்று பதட்டத்துடன் கூறி ஃபோனை வைத்துவிட சராசரி உயரத்துடன் கொஞ்சம் மாநிரமும் கையில் மருத்துவ பையுடன் கழுத்தில் ஸ்டெத்துடன் வந்தான் ஓருவன்.

"என்ன ஆச்சி அண்ணா?.".

"கையில் அடிபட்டுடுச்சிடா நீ ஹாஸ்பிடல் கிளம்பி இருப்ப அதான் உன்னையே வர சொல்லிட்டேன் அவனை பாருடா" என்று நண்பனை காட்டினான் தேவராஜ்.

கையில் கிழித்திருந்த கண்ணாடி சில்லுகளை அகற்றி முதலுதவி செய்து ஒரு டிடி ஊசியினையும் செலுத்தியவன் சில வலி நிவாரண மருந்துகளையும் வழங்கி ஓய்வு எடுக்க சொன்னான்.

"சரிடா எப்போ எந்திரிப்பான்?" என்றான் சாருகேஷ்.

"ஒரு டு ஹவர்ஸ் நல்ல தூக்கம் இருக்கும் நாளைக்கு ஈவ்னிங் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வாங்க அங்க ட்ரெஸிங் பண்ணிடலாம்" என்றான். அப்போதுதான் சுவற்றில் மாட்டி இருந்த அவர்களின் குடும்ப புகைப்படம் கண்களில் சிக்கியது சாதாரணமாக பேசியவனின் வாய் சட்டென மூடிக்கொண்டது. முகம் வெளிறியது சென்ட்ரலைஸ்ட் ஹால் ஏசியிலும் உடலில் வியர்த்து கொட்டியது 'இவளா!.' என்பது போல் பாவனையை கண்களில் தாங்கியவன் எச்சிலை விழிங்கியவாறு பேசிக்கொண்டே வந்த தேவராஜை பார்த்தான்.

"என்னடா பேசாம இருக்க அவன் கைக்கு ஒன்னும் இல்லையே!. நார்மல் தானே" என்றவன் கூற்றிற்கு காற்றிற்கு தக்கபடி தலை அசைத்தவன் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து உடனே வெளியேறி விட்டான்.

~

கல்லூரி முடியும் முன்னறே இறுப்புக் கொள்ளாமல் மதியமே வீட்டிற்கு கிளம்பி இருந்த கவி சித்துவிற்கு கால் செய்து இருந்தாள்.

"ஹலோ சித்து"

"சொல்லு கவி நான்தான்" என்று சித்து கூற.

"நான் வீட்டுக்கு போறேன்... நீங்க வரீங்களா?? அவர் வர்றதுக்குள்ள நாம பேசிடலாம். எனக்கும் இங்க இருக்க முடியல மைண்ட் முழுக்க உத்ரா பத்திய விஷயம் தான் ஓடிக்கிட்டு இருக்கு" என்று தன் மனநிலையை விளக்கினாள் கவி

"ம்... உன்னை திருத்தவே முடியாது உனக்கு எல்லாம் உடனே நடந்திடனும்...." என்றவன் "சரி நீ காலேஜ்லயே வெய்ட் பண்ணு. நானும் கோபியும் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறோம்" என்றான் சித்தார்த்.

"இல்ல சித்து. நீ நேரா வீட்டுக்கு வந்திடு நானும் அங்கயே வந்திடுறேன். இதோ நான் கிளம்பி வெளியே கூட வந்துட்டேன்." என்றவாறு கேட் வரை வந்தவளை பார்த்த செக்யூரிட்டி இருவரும் அருகில் வருவதற்குள் அவளை கடந்த ஒரு பைக் அவளை இடித்துவிட்டு சிட்டாய் பறந்து இருந்தது வாகன நெரிசலில் ஓடி மறைந்தது.

முதலில் சுதரித்த செக்யூரிட்டிகளில் ஒருவர் அவளை காண்பதற்கு ஓடவும் இன்னொரு நபர் பைக்கை பிடிக்கவும் ஓடி இருந்தனர். "ஆ.... அம்மா" என்றபடி கீழே

முழங்கையிலும் நெற்றியிலும் லேசான அடியுடன் சிறிது ரத்தமும் கசிந்து இருந்தது. விழுந்த வேகத்தில் மயக்கத்தை அடைந்தவளை குளிர்ந்த நீரைக்கொண்டு தெளியவைத்து இருந்தார் அந்த செக்யூரிட்டி.

"மேடம் மேடம். ஆர் யூ ஆல்ரைட்?" என்று அவளை கேட்டவர் உடனடியாக கேஷவின் எண்களை சுழற்ற அவரை தடுத்த கவி "நோ நோ.... சார் இப்போ சொல்லி அவரை டென்ஷன் பண்ண வேண்டாம் எனக்கு லேசான அடிதான்" என்று அவரை தடுத்தாள் கவி.

"மேடம் சாருக்கு சொல்லலனா திட்டுவார் மேம்" என்றவாறு மறுபடி மொபைலை எடுக்க.

"சார் ப்ளீஸ். நான் சொல்ல வேண்டாம்னு சொல்லல அவர் வீட்டுக்கு வந்த பிறகு சொல்லலாம். அவரை பயமுறுத்த தான் இப்படி பண்றாங்க" என்று அவருக்கு கூறி சம்மதிக்க வைத்தவள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று தலையிலும் கையிலும் பேண்டெய்ட் இட்டவள் வீட்டிற்கு வரும் போது உடலும் சோர்வுற்று இருந்தது.

கொஞ்சம் தாங்கி தாங்கி நடந்தவளின் தலையில் பட்ட அடி தன் வீரியத்தை காட்ட வின்னென்று தெரித்தது. இவர்கள் வந்த பத்து பதினைந்து நிமிடத்திற்குள் எல்லாம் சித்துவும் கோபியும் வந்துவிட அவளை பார்த்தவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

"கவி... என்ன இப்படி இருக்க?" என்று பதட்டத்துடன் அருகில் வந்தான் சித்து .

கண்களை மூடி இருந்தவள் அவன் குரல் கேட்டதும் அவனை பார்த்து புன்னகையித்தவாறே "ப்ச். ஒன்னுமில்லடா ஸ்லிப் ஆகிடுச்சி" என்று கூறி சமாளித்தவள் அவர்களுக்கு காஃபி கலந்துவர கிட்சன் நோக்கி அடி வைத்தாள்.

"நீ எங்க போற?. முதல்ல வந்து உட்காரு" என்று அவளின் கைப்பிடித்து உட்கார வைத்தவன் "பாத்து வரமாட்டியா எல்லாத்திலும் அவசரம் எந்த கோட்டைய பிடிக்க இந்த வேகம்" என்று கடிந்து கொள்ள கோபியின் முகத்தில் மட்டும் குழப்பத்தின் ரேகைகள்.

அவன் யோசனையை பார்த்தவள் "என்ன கோபி இல்லாத மூளைய வைச்சி ஏதோ கசக்குற போல" என்று அவனை கிண்டலடித்து தாங்கி தாங்கி வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டாள் விழுந்ததில் முட்டியில் இரண்டு மூன்று தையல் போடும் அளவிற்கு சதை கிழித்து இருந்தது

"நிக்க கூட முடியல. வாயி இருக்கு உனக்கு கேஷவ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டியா?? எங்க ஸ்லிப் ஆச்சி?." என்றான் சித்து

"அது.. வர்ற வழியில பள்ளம் பார்க்காம கால் வைச்சிட்டேன் அதான் கிழே விழுந்து அடி... அவருக்கா ப்ச் ப்ச் இல்ல பார்த்தா கலங்கிடுவாங்க இப்பவே சொன்னா பதட்டமாகி வீட்டுக்கு வந்திடுவார். அவர் ஈவ்னிங் வீட்டுக்கு வந்த பிறகு சொல்லலாம் நாம பேச வேண்டியதை எல்லாம் இப்போவே பேசிடுவோம்" என்று அவர்களை அவசரப்படுத்தினாள் கவி.

"ம்..." என்று அதற்கு ஆமோதித்த சித்து சமையலறையை நோக்கி சென்றான்.

"சித்து எனக்கு ஸ்ட்ராங்கா எனக்கு டீ" என்றவள் கண்களை மூடி தலையை சோஃபாவில் சாய்த்து இருந்தாள்.

அவளையேப் பார்த்து இருந்த கோபி "ஹேய் அவன்கிட்ட சொன்னா மாதிரி என்கிட்டயும் ரீல் விடாத வாசல்லையே பார்த்துட்டேன். செக்யூரிட்டி முகமே டென்ஷனா இருக்கு இதுல உன் ஹஸ்பண்டுக்கு வேற சொல்லாம இருக்க'னு சொல்ற. இதுல என்னமோ இருக்கு" என்றான் அவளை கண்டுபிடித்தவனாக.

விழி மூடி சாய்ந்தவள் இவன் கூறியதை கேட்டதும், "அடடா. உனக்கு தான் எவ்வளவு அறிவு டா" என்று வியந்தவள் போல் பேசி அவனை அருகில் வர சைகை செய்து தலையில் டங் என்று ஒரு கொட்டு வைத்து "வாய மூடிக்கிட்டு பேசமா இரு அவனுக்கு தெரிஞ்சது பிச்சிடுவேன்" என்று ரகசியமாய் கூறிவிட்டு மீண்டும் விழிகளை மூடிக்கொண்டவளை விசித்திரமாய் பார்த்துக்கொண்டே தலையை தேய்த்துத்கொண்ட கோபி "நான் சொல்லலனாளும் அவனே கண்டுபிடிச்சிட போறான் இவ என்னடான்னா என்னை கொட்டி அடக்கி வைக்கிறா. எருமை கையா இல்ல இரும்பு உலக்கையா இப்படி வலிக்குது ச்சே..." என்று அலுத்தபடி மாடிப் படி அருகில் நின்றுக்கொண்டான்.

கையில் ட்ரேயுடன் வந்தவன் "என்னடா அங்க நிக்குற?" என்றபடி கவியின் அருகில் வந்து டீயை கொடுத்தவன் எதிர் புறத்தில் அவளை முறைத்தவாறு நின்று கொண்டிருந்த கோபிக்கும் கொடுத்துவிட்டு சோஃபாவில் அமர்ந்து தனக்கும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டான்.

"இப்போ சொல்லு" என்று சாவகாசமாய் டீயை ஒரு மிடறு விழுங்கினான் சித்து.

"ப்ச் என்னடா சொல்றது எனக்கு ஒன்னுமே புரியல. ஒரு பக்கம் எல்லாம் தெரிஞ்சா மாதிரி இருக்கு ஒருபக்கம் ரொம்ப குழப்பமா இருக்கு" என்றாள் கவி.

"உனக்கு எது தெரிஞ்சது முதல்ல அதை சொல்லு" என்றான் சித்து.

"அவருக்கு இப்போதான் உத்ரா பத்தின உண்மை தெரிஞ்சு இருக்கு. ஆனா அவருக்கு எப்படி தெரிஞ்சது உத்ரா கதைய சொன்னதுல இருந்து அஸ்வின் பத்தி தெரிஞ்ச ஒரே ஃப்ரெண்டுன்னு பார்த்தா அவ ஃப்ரெண்ட் அங்கீதா தான் வேற யாருக்கும் அந்த பொறுக்கியை பத்தி தெரியலை" என்று தனக்கு உதியமாகி இருந்த பதிலை கூறினாள்.

"சரி அப்போ குழப்பமான விஷயம்" என்று கேட்டவாறு அவளையேப் பார்த்து இருந்தான் சித்து.

"என்ன குழப்பம்னா உத்ரா பத்தின விஷயத்தை இப்போ யார் சொல்லி இருப்பா!. அதுவும் இல்லாம உத்ராவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடி வரையும் தான் தெரிஞ்சு இருக்கு கேஷவ்க்கு அதுக்கு அப்புறம் தெரியல அப்போ கடைசியில என்னவோ நடந்நது இருக்கு அது என்னவா இருக்கும் இந்த உண்மைய சொன்ன அந்த இடையில இருக்கும் நபர் யார் ஒருவேல அங்கீதாவா??." என்றாள் யோசனையுடன்.

"ம்...... ஓகேவா தான் கண்டுபிடிச்சி இருக்க நீ சொன்ன விஷயத்தில் இருந்து எனக்கும் ஒரு சந்தேகம். இரண்டு மூணு மூறை கேஷவ் வெளியே அந்த பொண்ண பாத்து இருக்காரு அப்போ எல்லாம் சாதாரணமா இருந்த பொண்ணு அந்த அப்பார்ட்மெண்ட் கிட்ட ஏன் பயந்து ஓடனும்?. உண்மையாவே அங்க நாய் தான் இருந்துச்சா?. கேஷவ்க்கு முன்னாடி அந்த பொண்ணு யார் கூட வந்து போனான்னு தெரியனும்" என்றான் சித்து.

"டேய்.. இது நடந்து கிட்டதட்ட 4 வருஷம் ஆகுது. அங்க எத்தனையோ மாற்றம் வந்து இருக்கலாம் கேஷவோட டியூட்டர் அந்த ஃபோட்டோகிராஃபர் கூட இடம் மாறி இருக்கலாம்" என்றான் கோபி.

"வேலிட் பாய்ண்ட் பட் ஏதாவது நமக்கு யூஸ் ஆகுற தகவல் கிடைக்கும்ல அந்த இடம் எங்கங்னு யாருக்கிட்ட கேக்குறது??" என்றான் சித்து.

"கேஷவ்... கிட்ட" என்று உடனே கோபியிடம் இருந்து பதில் வெளிபட சித்துவும் கவியும் அவனை உக்கிரப்பார்வை பார்த்தனர்.

"என்னடா இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு பாசமா பாக்குறாங்க!." என்று அவள் மனதில் இருவர்களை பற்றி நினைக்க "உன் மூஞ்சி. எங்கப்பன் குதுருக்குள்ள இல்லன்னு நீயே போய் சொல்லுவியா!." என்றான் சித்து.

"எங்க இருந்துடா கண்டுபிடிக்கிற இப்படி பழமொழிய பின்னி பெடல் எடுக்குற மச்சான்" என்று அவன் கிண்டல்

செய்ததையும் பொருட்படுத்தாமல் பாராட்டை வீச.

"அட எருமை. என்ன நடக்குது அவனுக்கு மெடலா கொடுக்குற?." என்று அருகில் இருந்த பேப்பரை ரோல் செய்து அவன் மீது வீசினாள் கவி.

அதில் இருந்து தன்னை பாதுகாத்து கொண்டவன் "டேய் எங்க இருந்து இதுகளை பிடிச்ச?? தங்கச்சிக்கும் மரியாதை தெரியலை அக்காவுக்கும் மரியாதை தெரியலை" என்று அலுத்துக்கொள்ள

தங்கை என்றதும் அவன் முகம் மென்மையான புன்னகையை ஏந்திக்கொள்ள கவியின் பார்வையில் படாமல் அதனை மாற்றி அவனை முறைத்து "பீ சிரியஸ் மாப்ள. இது விளையாடுற நேரம் இல்ல. இவள காலைல அந்த சாருகேஷ் தட்டி தூக்கியும் இவளுக்கு கொழுப்பு அடங்களனா நீயுமாடா வாய மூடு" என இருவரையும் அடக்க கோபியும் கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அவன் ஜன்னல் அருகில் உள்ள தோட்டத்தில் பார்வையை பதித்து இருந்தான்.

"சித்....." என்று கவி தொடங்கும் முன்னரே,

"அந்த கதைய இப்போ பேசி உன் பீபிய ஏத்த மாட்டேன் பயப்படாத. நீ என்ன காரணமா என்கிட்ட சொல்லலன்னு எனக்கு தெரியும் அது அப்படியே இருக்கட்டும்... இப்போ நாம விஷயத்துக்கு வருவோம்" என்று கூறியவன் "கேஷவ்கிட்டயோ, இல்ல அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்டயோ உத்ரா விஷயம் பத்தி எதுவும் கேக்க முடியாது. கேட்டா ஏன் எதுக்குன்னு கேள்வி வரும். சோ இந்த விஷயம் எல்லாம் தெரிந்த ஆள் வேற யாரும் இருக்காங்களா கவி??" என்று சித்தார்த் கேட்டான்.

அவன் அவ்வாறு கூறியதும் "அப்பாடா" என்று இருந்தது அவளுக்கு. இவன் வரிந்துகட்டிக்கொண்டு சாருகேஷிடம் சண்டைக்கு போனால் என்ன செய்வது என்பதனால் அவனிடம் ஆக்ஸிடென்டை மறைத்து பொய் கூறி இருந்தாள். தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள் சிறிது நேர யோசனைக்கு பின் "கார்த்திக்...... கார்த்திக் அண்ணாவும் அப்போ அவர் கூட இருந்ததா சொல்லி இருந்தார். ஒரு வேல இந்த விஷயம் அவருக்கும் தெரிஞ்சி இருக்கலாம்" என்று கவி தன் ஐயத்தை கூற,

"சரி இது கெஸ்தான். கிடைச்சா லக்" என்று கூறி அவனுக்கு கால் செய்ய கூறினான் சித்து.

அவனுக்கு ஃபோன் செய்து அந்த ஃபோட்டோகிராஃபர் குடியிருந்த அப்பாட்மெண்டை பற்றி அவர்களுக்கு வேண்டிய தகவலை பெற்றுக் கொண்டனர். அவன் சந்தேகம் கொண்டு 'ஏன் எதற்கு' என்று கேட்டதற்கு மழுப்பலான பல காரணங்களை கூறி "கேஸ்ல ஏதோ கறுகுற வாசனை வருது நான் அப்புறம் பேசுறேன் அண்ணா" என்று அழைப்பை துண்டித்தாள் கவி.

~

"மச்சி உனக்கு வெளியே வேலை இருக்குன்னு சொன்னியே போலையா டா??"

"வேலையா...! இரண்டு நாள் அய்யா டோட்டல் ரெஸ்ட் மா" என்று கோபி சோஃபாவில் படுத்து டிவியை உயிர்பிக்க,

"டேய் சோம்பேரி உனக்கு ஞாபக மறதியாடா!. நீதானே சொன்ன சாயந்திரம் ஏதோ இம்பார்டன்ட் வொர்க் இருக்குன்னு. வேலைல எங்கயாச்சும் சின்சியர் இருக்கா??." என்று அவனை திட்டி விட்டான் சித்து.

"டேய் நிறுத்து. நிறுத்து நீ ஏன் என் வேலைக்கு இப்படி குதிக்கிற??" என்று உறக்க பேசியவன் அவன்

மொபைலையும் வாசலையும் மாறி மாறி பார்ப்பதை வைத்தே கண்டுபிடித்தவனாக "மச்சி என் ஆளு வரா வெளியே போடான்னு சொல்ற. வாழ்வுதாண்டா மச்சான்" என்றபடி ஹாங்கரில் மாட்டி இருந்த சட்டையை எடுத்து அணிந்தவன் வெளியே செல்ல எத்தனிக்க சற்று தூரத்தில் அவள் வருவது தெரிந்ததும் "மச்சி ஷீ இஸ் கம்மிங்" என்றவன் வெளியே சென்றுவிட்டான்.

அவளை கடந்து சென்றவன் "இதோ கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்" என்றபடி இருவருக்கும் தனிமையை கொடுத்து பைக்கில் பறந்துவிட்டான்.

வரும்போதே மனதில் திடத்தை வரவழைத்துக்கொண்டு தான் வந்தாள். ஆனால் வீட்டை நெருங்க நெருங்க எங்கிருந்தோ நடுக்கமும் தளர்வும் அவள் மனதை ஆட்கொண்டது. அவன் எதை பற்றி பேசபோறானோ என்ற எண்ணமா!. இல்லை அதற்கு என்ன எதிர்வினை ஆற்றுவோமோ!. என்று தான் படபடப்பு இருந்தது.

அவள் வீட்டுக்குள் நுழையும் போது வீடே வெறுமையாக இருந்தது யாரும் இல்லை உள்ளே தயங்கி தயங்கி வந்தவள் தலையை எல்லாப் பக்கமும் சுழற்றி தேடினாள் "நான் இங்க இருக்கேன் விது" என்றபடி கதவின் பின்னால் இருந்து வெளியே வந்தான் சித்தார்த்.

அதிர்வுடன் குரல் வந்த திசையை பார்த்தவள் விழிவிரித்தாள் தன்னிடம் சகஜமாக கூட பேசாதவன் இன்று இவ்வாறு ஓளிந்து ஆட்டம் காட்டுகிறானே என்று அவனின் இந்த செய்கையில் ஆடி போயிருந்தாள் தியா.

"ஏன் அங்கயே நிக்குற விது வா இப்படி உக்காரு" என்று அவள் அமர்வதற்காக இருக்கையை காட்டியவன் கதவை சாத்தினான்.

அவன் காட்டிய இருக்கையை பார்க்காமலேயே "உக்காந்து பேசுற அளவுக்கு நமக்குள்ள ஒன்னும் இல்ல. என்ன சொல்லனுமோ சொல்லு நான் கிளம்பனும்" என்று பட்டும் படாமல் பேசியவள் மனம் தடதடவென அடித்துக்கொண்டது.

"அப்படியா நமக்குள்ள ஒன்னும் இல்லையா!." என்றான் நக்கலான குரலில். அவ்வாறு கூறியதும் அவனை முறைக்க முயன்று பார்த்தவளின் பார்வையில் அத்தனை உக்கிரம் இல்லை

பின்பு அவனே "ம்.... போலாம் போலாம் நானே கொண்டு போய் விடுறேன்". என்று கூறி சிறிது நேரம் எடுத்துக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான். நான் எப்படி மாறினேன்னு தெரியல விது என்று தலையை அழுந்த கோதி விட்டு புருவத்தை தேய்த்து தன்னை நிதானப்படுத்தினான்.

அடுத்து என்ன சொல்ல போகிறானோ என்று தியாவிற்கு ஒருவித பதட்டத்தை கொடுத்தது அவன் செய்கை அவள் நினைத்ததிற்கும் மேலாக அவளுக்கு மயக்க நிலையை வரவழைக்க அவன் பேசிக்கொண்டு இருந்தான்.

"ஒரு நிமிஷம் கூட ஏன் ஒரு செகன்ட் கூட உன்னை நினைக்காம இருக்க முடியல விதுமா... நீ என் உயிரல கலந்துட்ட டா உன்னை குழந்தைன்னு சொல்லி உன்னை விட்டு பிரியனும்னு நினைச்சி நினைச்சே அதிகமா நெருங்கி இருக்கேன்... எனக்கே என் செயல் புதிரா இருக்கு இப்போ உன்னை பார்க்காம என்னால இருக்க முடியல" என்று முடித்தவனை அதிர்ச்சி கலந்து கண்களில் நீர்திரை மறைக்க அவனையே பார்த்திருந்தாள். அவன் கூறிய வார்த்தைகள் அவளை சிலையாய் ஸ்தம்பிக்க வைத்தது.

சட்டென அவன் மறைத்து வைத்திருந்ததை கையில் எடுத்து "ஐ லவ் யூ டா செல்லம்" என்று ஒரு பூங்கொத்தை அவளிம் நீட்ட சப்த நாடியும் ஒடுங்கி ஒன்றும் உறைக்காமல் அப்படியே மடங்கி சரிந்து தரையில் அமரந்தவள் உடைந்து போய் இருந்தாள். அவளால் இதை எப்படி எதிர்க்கொள்வது என்று தெரியவில்லை திக்பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள்.

அவள் மடங்கி அமரவும் கையில் இருந்ததை கிழே நழுவ விட்டவன் "விது விதுமா என்னடா ஏன்டா இப்படி இருக்க என்ன டா என்ன ஆச்சு??" என்று அவள் அமர்ந்ததை பார்த்து அவளை உலுக்க அவளை சுயநினைவிற்கு கொண்டுவர முனைந்தான்.

அமர்ந்து இருந்தவளின் மனதிலோ கோடி மின்னல் மின்னி மறைந்தது இதற்கு தானே ஆசைபட்டாள் இந்த வார்த்தையை கேட்கத்தானே இவனையே சுற்றி சுற்றி வந்தாள். அவன் சொன்ன செய்தி தேனாய் இனித்தது. லட்சம் பூக்கள் அவள் மேல் தூவியது போல் ஒரு சுகமான இதத்தை கண்டாள். இவை அனைத்தும் ஒரு நொடியே அடுத்த கணம் அவனின் தாய் ராதா அவள் கண் முன் தோன்ற, தான் செய்ய இருந்த தவறை நினைத்து தன்னையே நிந்தித்துக் கொண்டாள்.

அவளிடம் எந்த ஒரு எதிர்வினையும் இல்லாது போக தான்

காதலை கூறியபோது பலிச்சிட்ட முகத்தை பார்த்தான் பின் சில நிமிடங்களிலேயே அது வெறுமையாய் மாறி சோகத்தை பிரதிபலிக்க "ஹேய் என்னடி.. என்னடி ஆச்சு?? உனக்கு ஏன் இப்படி இருக்க??" என்று அவளை தன் மார்மீது சாய்த்துக்கொள்ள.

அவன் சூடான அணைப்பு இந்த நேரத்தில் இதத்தை கொடுத்தாலும் அதை ஏற்கமுடியாத சூழ்நிலையில் இருப்பதை அறவே வெறுத்தாள். உள்ளம் கொந்தளிக்கும் நிலையில் அவனை விட்டு சட்டென விளகி அமர்ந்தாள்

'நான் கிட்ட வந்தபோது எட்டி எட்டி உதச்சிட்டு இப்போ தள்ளி போகும்போது ஏன்டா இப்படி என்னை உயிரோட சாகடிக்கிற!!! என்னை நீ வெறுக்கும்போதே உன்னை உயிர நினைச்சேன்... இப்போ உன் வாயில இதையெல்லாம் கேட்ட பிறகு நான் என்னடா செய்வேன்... அய்யோ கடவுளே என்னை வாய்விட்டு கூட அழ முடியாதபடி படச்சிட்டியே... என் அத்தை மனசுல அந்த ஆசை ஏன் வரனும்!?? அதை ஏன் என்கிட்ட சொல்லனும்!!!' என்று மனதிற்குள்ளே குமுறியவளின் கண்களில் நிற்காமல் வழிந்தது. தன் திடம் மொத்தம் வடிந்து வாடிய மலர் போல் தரையில் அமர்ந்து இருந்தாள் தியா. மனம் குமுறி அழுதாலும் அதை வெளியே காட்டக்கூடாது கடின முகமூடியை அணிந்துக்கொண்டவள்.

என்ன பேசவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

"விது மா ஏன்டி என்னடி ஆச்சு?? உனக்கு உன் மாமா கேக்குறேன்ல சொல்லு டி நீ ஏன் எதுவும் சொல்ல மாட்டுற??" என்று அவளை கேட்க,

அவன் கைகளை தன்னிடம் இருந்து பிரித்தவள் விரக்தியாய் ஒரு புன்னகையை உதட்டில் தவழ விட்டு "காலம் கடந்த ஞானோதயம் யாருக்கும் பயன் இல்ல. உங்கள நான் என் மனசுல இருந்து எப்போவோ எடுத்துட்டேன். என்னை வேண்டாமுன்னு சொல்லி உதாசினப்படுத்தி அவமானபடுத்தியவர் எனக்கு வேண்டாம்" என்றவள் எழுந்து நின்று "என்னை இனி தொந்தரவு பண்ணாதிங்க இனி உங்கள பார்க்க நான் விரும்பல என் வாழ்க்கையில் உங்களை சந்தித்ததை கூட நான் மறக்க நினைக்கிறேன்" என்று அவள் வாசல் நோக்கி விடுவிடுவென விரய.,

அவள் கூறியவற்றில் ஆடிபோய் 'அது எல்லாம் இல்லை ஏதோ ஒன்று அவளை வாட்டுகிறது தன்னை வேண்டாம் என்று சொல்ல ஏதோ காரணம் வைத்திருக்கிறாள்" என்பதனை உணர்ந்து இருந்தவன். அவள் முன்னாடி வந்து நின்று "நீ என்னை வேண்டான்னு சொல்லுவேன்னு தான் நான் நினைச்சேன். என்னை அவாய்ட் பண்ணதுல இருந்தே தெரியுது உன் மனசுல முள்ளாட்டம் ஏதோ தச்சிக்கிட்டு இருக்கு அது என்ன? இல்லை உனக்கு எது தடையா இருக்கு? நீ ஏன் இப்படி இருக்க?" என்று அவளிடமே கேட்க

"ப்ச்" என்று சலித்தவள் "உங்கள பிடிக்கல அவ்வளவுதான்... காரணம் என்னவா இருந்தா உங்களுக்கு என்ன? என்னை வேண்டாம்னு நீங்க கூடதான் சொன்னிங்க நான் விட்டுடேனே... அதே போல நீங்களும் என்னை விட்டு விலகிடுங்க நான் போகனும் இனி என்னை தொந்தரவு செய்யாதிங்க... முடிஞ்சளவு என்னை சந்திப்பதையே தவிர்த்துடுங்க.." என்றவள் வேகமாக வெளியேற

அவள் கைபிடித்து உள்ளே இழுத்தவன் இருக்கமாக அணைத்துக்கொண்டு "உன்னை மறக்கறதும் விடுறதும் முடியாத காரியம் உன்னை எப்படி சம்மதிக்க வைக்கனுமோ அப்படி சம்மதிக்க வைப்பேன் டீ அதுவரை உன்னை நினைக்க நீ எனக்கு கொடுத்தத என்னை உனக்கு ஞாபகப்படுத்த நான் உனக்கு தரேன்" என்று அழுத்தமாக ஒரு முத்தத்தை அவளுக்கு கொடுத்து விடுவித்தான்.

அவள் அவனிடம் திமிரிய கனமே இடைவிடாது அவளின் தலையை கோதி சாமாதனபடுத்தியவன் அவன் செய்கைக்கு பின் விடுவிக்க எதிர்பாராத இந்த இன்ப தாக்குதலினால் நிற்க முடியாமல் தள்ளாடி துவண்டு விழ அவளை தாங்கி தன்னுடன் இறுக்கி சேர்த்து அணைத்தவன் "இரு நானே வரேன்" என்று தியா வீட்டு தெரு முனை வரை வந்து இறக்கி விட்டு "இப்போ நான் வீட்டுக்கு வரல நீ பார்த்து போ" என்று கூறி அவளை அனுப்பி வைத்தவன் அவள் கேட்டிற்கு உள்ளே சென்றதும் தான் கிளம்பி சென்றான்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 44
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN