காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுலி 48

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஷீலாவின் வீட்டில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவள் மயங்கி விழுந்து 1 வாரம் கடந்த நிலையில் ராஜீவின் தாய் அவளிடம் சாதாரணமாகவே பேச தொடங்கி இருந்தார். “சமையலை நான் பாத்துக்குறேன் உனக்கு பரிட்சைன்னு கண்ணன் பையன் சொல்லிட்டு இருந்தான் போ.. போய் படி” என்று அவளை அனுப்பி வைத்து விட்டார்.

“அம்மா…… அண்ணி……” என்று வாசலில் இருந்து அழைத்துக்கொண்டு வர “டேய் நான் இங்க இருக்கேன்” என்று குரல் வந்த சமையல் அறையில் எட்டி பார்த்தான் கண்ணன். “என்னம்மா நீங்க சமைக்கறீங்க அண்ணி எங்க??” என்று கேட்டவன் “என்ன நல்ல மாமியார் அவார்ட் வாங்க பிளானா??” என்று அவரை வம்புக்கு இழுத்தான். “கரண்டியிலேயே ஒன்னு இழுத்தா தான் சரிபட்டு வருவ. வாய பாரு” என்றவர் “ஒரு பொம்பள பொண்ணு இல்லாத குறைய இந்த வாயாலையே தீத்துடுற” என்று அவனை வார ‘அம்மா போதும் சட்டுன்னு தூக்கிபோட்டு என்னை டேமேஜ் பண்றிங்க!?” என்று அவரை கும்பிட்டவன் “அண்ணி எங்கம்மா??” என்றான்.

“நீ எதுக்குடா முதல்ல ஏலம் போட்டுட்டு வந்த??” என்று கேள்வியை எழுப்ப “நத்திங் மா இவினிங் எங்கயாவது வெளியே போலாமான்னு கேக்கத்தான் வந்தேன்” என்று கூற “அவளுக்குத்தான் எக்ஸாம் இருக்குன்னு சொன்னா’ல முடிஞ்சதும் போங்க” என்று கூறியவர் விட்ட இடத்தில் இருந்து சமையலை தொடர்ந்தார்.

மாலை தோட்டத்தில் அமர்ந்து படித்து இருந்தவளிடம் காபியை வந்து நீட்டியவரை “அத்த நீங்க எனக்கு எதுக்கு அத்த!.” என்றிட “பரவாயில்லை இந்த காபியை குடிச்சிட்டு படி” என்று கூறி திரும்பிசெல்ல அவளுக்கு தான் உள்ளுற குற்ற உணர்ச்சியில் விழியில் நீர் திரையிட்டது. “அத்த” என்று அழைக்க “வேற என்ன வேணும்?” என்று திரும்பியவர் அவர் விழியில் நீரை பார்த்து கேள்வியாய் நோக்கினார்.

சட்டென அவரின் கால்களில் விழுந்தவளை பதற்றத்துடன் பார்த்தவர் “என்ன ஷீலா. எழுந்திரு” என்று அவளை எழுப்பி விட்டவர் “உனக்கு என்ன ஆச்சு? ஏன் அப்படி பண்ற??” என்றார் சற்று அதட்டலான தோனியில்.

“அத்த நாங்க பண்து தப்பு தப்பு தான் அத்த. எங்களுக்கு வேற வழி தெரியலை அப்பா வேற ஒரு ஆளுக்கு என்னை பேசி முடிச்சி நிச்சயம் வரையும் போனதுனால தான் அத்தா நாங்க அவசரப்பட்டுட்டோம்...

எங்களுக்கும் எல்லாரோட ஆசிர்வதத்திலேயும் எங்க கல்யாணம் நடக்கலன்னு கஷ்டம் இருக்கு அத்தை... இதுக்கு முழுக்க முழுக்க நான் மட்டுமே தான் காரணம்... எங்க அப்பா பார்த்து வச்ச மாப்பிள்ளை ரொம்ப அய்யோக்கியன் கொலைக்கும் அஞ்சமாட்டான். நாங்க போய் காதலிக்கிறேன்னு சொன்னா அவர் உயிருக்கு ஆபத்து ஆகிடுமோன்னுதான் பயந்து தான் கல்யாணம் வரைக்கும் போயிட்டோம்... எங்களை மண்ணிச்சிடுங்க ப்ளீஸ் அத்தை” என்று அவர் கால்களில் விழ போனவளை கரம் பற்றி தடுத்தவர்.

அவளின் செய்கையில் மனம் கனிந்து “உன் வேதனை புரியுதுமா ஆனா ஒரு பெற்ற தாய் தகப்பான இருந்து எங்களையும் நினைச்சி இருக்கலாம் அதுதான் என் ஆதங்கம்... தப்பு முழுசும் உன் மேலேயே இல்ல என் பையனும் சம்மதிச்சிதானே இது நடந்தது... எது எப்படியோ நீ இந்த வீட்டு மருமகள் அந்த உரிமை உனக்கு எப்பவும் உண்டு புரியுதா சுமங்கலி பொண்ணுங்க பொழுது சாயும் நேரம் கண்கலங்கி நிற்க கூடாது.... வீட்டுக்கு நல்லது இல்லை. விடு யார் தலையில் என்ன இருக்கோ அதுதான் நடக்கும் உங்க கல்யாணத்தை பார்க்கலனா என்ன உன் பசங்க கல்யாணத்தை கண்குளிர பார்க்குறேன்....” என்று அவளுக்கு ஆறுதல் கூறி அவளை தேற்றியவர். “கண்டதையும் மனசுல போட்டு குழப்பிக்காத நல்லா படி... எப்பவும் ஒன்னு மனசுல வைச்சிக்கோ இது உன் குடும்பம் அது மட்டும் போதும் எனக்கு” என்று கூறி உள்ளே சென்று விட்டார்...

மறுநாள் காலை வேலைகளை முடித்தவள் மாமியரிடம் சொல்லிக்கொண்டு சர்ச்சுக்கு கிளம்பினாள் இன்று எப்படியாவது தாய் தந்தையரை காண வேண்டும் என்று தூரத்தில் அவர்களை பார்ந்துவிட்டாள் என்னதான் முரட்டு தனமான நபராய் இருந்தாலும் மகள் மீது மொத்த பாச்த்தையும் கொட்டி வளர்த்தார்.

ஓடி சென்று அவரின் கால்களில் விழுந்து “அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்றவளை உக்கிரமாக பார்த்தார் டேவிட்

“சீ எழுந்திரு கண்ட ஓடுகாலி எல்லாம் மன்னிக்க நான் என்ன பாதிரியாரா காலை விடு” என்று அவளை உதறி தள்ளியவரை எழுந்து அவரின் கரம் பிடித்து “அப்பா அப்பா ப்ளீஸ் பா என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்று கெஞ்சியவளை இழுத்து பளார் பளார் என்று கன்னத்தில் அறைய வலியில் உதடு கிழிந்து இரத்தம் கசிந்தது.

“அடிங்கப்பா அடிங்க. நீங்க அடிச்சாலும் பரவாயில்லை. என்னை அன்பா பாசமா உயிரையே வச்சி வளர்த்த என் அப்பா திரும்ப வந்தா போதும். இது ஊருக்காக மாறிய டேவிட். என் அப்பா இல்ல என் அப்பாவுக்கு பொண்ணுணா உயிர் அவ கேட்டு எதையும் அவர் மறுத்தது இல்லை” என்று கண்ணீர் வழிய கேவியவளை பார்த்து கண்ணீர் வடித்தார் அவளின் தாய். கணவருக்கு பயந்து மகளுக்கு ஆதாரவாய் கூட நிற்க முடியாத தன் நிலையை நினைத்து அழுதார்.

“என்ன உனக்கு இப்போதான் அந்த அப்பன் இருக்கான்னு தெரியுதா ஒடி போய் கல்யாணம் கட்டிக்கிட்டு என் மானத்தை வாங்குனியே அப்போ தெரியலையா!! உன்னையெல்லாம் வெட்டி போட்டு இருக்கனும் அன்னைக்கே முடியாதத இன்னைக்கு செய்ய வைச்சிடாத என் கண்ணு முன்னால நிக்காத போயிடு. இந்த இடத்துல உன் இரத்தத்தை சிந்தாதே” என்று அவளை எச்சிர்த்து விட

“என் உயிர் போனாலும் அது என் தகப்பன் கையாலதானே போகுது அது வரை சந்தோஷம் தான். உயிர்உயிர் கொடுத்து வளர்த்தவரே உயிரை எடுக்குறாரு உங்களுக்கு என் மேலே கொஞ்ச கூட பாசமே இல்லையாப்பா” என்று அருகில் வந்தவளை பிடித்து கீழே தள்ளி விட “ஷீலா” என்று தாய் பதறி அருகில் வர “போடி போய் வண்டில ஏறு” என்று அவரை மிரட்டி ஷீலாவை தொட விடாமல் செய்ய அந்நேரம் அவளை அழைத்து செல்ல வந்த ராஜீவின் கண்களில் அவள் தந்தையின் கொடுர செயல் பட பைக்கை அப்படியே கீழே விட்டு வந்தவன் அவளை தூக்கி நிறுத்தி இருந்தான்.

“என்னடி இதெல்லாம். ஏன் நீ இங்க வந்த?? அம்மா நீ இந்த சர்ச்சுக்கு தான் போனன்னு சொல்லும்போதே எனக்கு சந்தேகம். வந்துதான் இங்க வந்தேன் உன்னை புரிஞ்சிக்கமா இருக்காரு அவர் கோவம் நியாயமானது தான் அவரே மனசு மாறட்டும். நீ வா அதுவரை இது நமக்கு தண்டனைன்னு நினைச்சிப்போம் வா போலாம்” என்று அவளிடம் கூறியவன் திரும்பி “உங்க பொண்ணா இருந்த வரையிலும் அவளை அடிக்க உங்களுக்கு உரிமை உண்டு. இப்போ அவ என் மனைவி அதையும் மனசுல வைச்சிக்குங்க ப்ளீஸ்” என்று கூறியவன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

வழியில் ஒரு வார்த்தைக்கூட அவளிடம் பேசவில்லை மிகுந்த கோவத்தில் இருந்தவன் ஏற்கனவே வலியில் இருப்பவளை நாமும் ரணப்படுத்த வேண்டாம் என்று பேசாமல் வந்தான். அவள் அழுதுகொண்டே வந்தவள் வீடு வர, “ஒரு நிமிஷம் கண்ணை துடச்சிக்கோ. இப்படியே போனா அம்மா என்ன ஏதுன்னு கேட்பாங்க மாமாவ தப்பா நினைக்க நீயே இடம் கொடுக்காதே. புரியுதா” என்று அவள் முகம் பார்க்கமல் சொல்லி உள்ளே சென்றுவிட வாசலில் இருந்த குழாயில் முகம் கழுவியல் வீட்டுக்குள் வந்தாள் தனக்கு தலை வலிப்பதாக கூறிக்கொண்டு மதிய உணவினை மறுத்தவள் படுக்கையில் வந்து விழுந்துவிட்டாள். அழுது அழுது தலைவலியே வந்துவிட அப்படியே கண்ணுறங்கி விட்டாள்.

~

இன்று காலையே ஜெயந்திற்கு போட்டி இருப்பதால் முதலிலேயே அந்த இடத்திற்கு சென்று விட வீட்டில் இருந்த ஆதியையும் ராஜாராமனையும் அழைத்து செல்வதற்காக வந்தாள் மதுவந்தி. வீடு திறந்து இருக்கவும். வீட்டிற்குள் வந்தவள் ஹாலில் மாமனாரை பார்க்க “ரெடியா மாமா??” என்றாள்.

“நான் எப்பவோ ரெடி? உங்க அத்த தான் உள்ள போய் அரை மணி நேரம் ஆச்சு” என்று மறுபடி நாளிதழில் தலையை முக்கிக்கொண்டார். அவர் கூற்றில் லேசாக சிரித்தவள் “அத்த கிளம்பியாச்சா??” என்று அறை வாசலில் நின்று கேட்க “ஒரு ரெண்டு நிமிஷம் மா இதோ வந்துடுறேன்” என்று குரல் கொடுத்தார் ஆதி... அவருக்காக காத்திருந்தவள் “மாமா உங்களுக்கு சாப்பிட ஏதாவது வேணுமா??” என்று கேட்டு அவருக்கும் தனக்கும் காபியை தயாரித்து அவருக்கும் கொடுத்து தானும் எடுத்துக்கொள்ள மேலும் பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில் வெளியே வந்தார் ஆதி.

வெளியே வந்த மனைவியை பார்த்துதும் “வயசு பொண்ணா இருந்தாலும் வயசானா கிழவியா இருந்தாலும் வெளியே கிளம்பி போகனும் சொன்னா வர எப்படியும் ஒரு மணி நேரம் எடுத்துக்குறிங்க” என்று ஆதியை வார

அவரை நக்கலாக பார்த்தவாறே ஏன் “உங்களை மாதிரி ஒரு பேண்டையும் சட்டையும் போட்டுக்கொட்டு சோளகொள்ளை பொம்மை மாதிரி வரசொல்றிங்களா??” என்று கணவருக்கு பதிலை வழங்கியவாறு மதுவை பார்த்தவர் “வா மா நானும் ரெடி” என்றார் பளீர் புன்னகையுடன்.

கணவன் மனைவி கிண்டல்களையும் அதில் தேங்கிய அன்பையும் பார்த்தவள் மகிழ்வுடனே போட்டி நடத்தும் இடத்திற்கு வந்து சேர சீமாவும் ஜெய்ந்தின் போட்டியை காண அங்கு வந்திருந்தாள்.

தூரத்தில் இருந்தே மது தன் வருங்கால மாமனார் மாமியர் சகிதம் வந்து கொண்டிருந்தவளை காண மனம் நிறைந்தது சீமாவிற்கு. அவளது கடந்த காலம் எவ்வளவு வலிகளை கொண்டது என்று அவள் தெரிந்தவளாயிற்றே இந்த வாழ்க்கை அவளுக்கு பூரண சந்தோஷத்தையும் மனநிறைவையும் கொடுக்க வேண்டும் என்று கடவுளை பிராத்தித்தாள்.

“ஏய் சீமா வந்துட்டியா வா வா” என்று அருகே அழைத்தவளை ராஜராமனும் ஆதியும் விசாரித்தவர்கள் அவகர்ளின் அருகே அமர்ந்து கொள்ள தோழிகள் இருவரும் ஆர்வமாக ஜெயந்தின் போட்டியை கண்டு அதிசயத்தனர். அவனை இதுபோன்ற ஒரு தோற்றித்தில் முதன் முறையாக பார்க்கிறாள். ஆண்மைக்கே உண்டான வீரம் அவளை மீண்டும் அவன் பால் காதல் கொள்ள வைத்தது.

கடுமையான போராட்டத்திற்கு பின் அந்த போட்டயின் வெற்றியை தனதாக்கி கொண்டவன் இறுதி கட்ட போட்டி தேர்வாகி இருந்தான். இன்னும் 5 நாட்களில் இறுதி போட்டி இருக்க “பேபி ஹேன்ட்சம் எவ்வளவு சூப்பரா ஃபைட் பண்றாருல.... செம டி...” என்று அவனுக்கு பாராட்டை பறக்கும் முத்தத்தின் மூலம் சீமா கொடுக்க தன் பக்கத்தில் இருந்த சீமாவின் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்த மது “ஏய் மடச்சி என்ன இது??” என்று சிணுங்கி எழ “அட என் பேபிக்கு பொசசிவ்னஸ் வந்துடுச்சே. மேடம் லவ்ல மிதக்குறிங்க போல...” என்று அவளின் கன்னத்ததை இடித்து தோளோடு சேர்த்து அணைத்தவள் “நீ பயப்புடாத. உன் ஹேன்ட்சம்ம யாரும் கொத்திக்கிட்டு போக மாட்டாங்க. அப்படியே கொத்திக்கிட்டு போலாம்னு நினைச்சா கூட உன்னோட ஹேன்ட்சம் நான் ஶ்ரீ ராம சந்தர மூய்த்தியின் மறு அவதாரம் என் மதுவை தவிர யாரையும் கண்களால் கூட தீண்ட மாட்டேன்னு சொல்லிடுவாரு போதுமா” என்று கேளியில் இறங்கிட

அவள் கூற்றில் முகம் மலர வெட்கப்பட்டவள் தலையை குனிநீது விரல்களை ஆராய்ந்தாள். “ஷ்ப்பா முடியலா டா இப்போ என்ன உன் கையில எத்தனை விரல்னு குவிஸ்ஸா நடத்தபோறாங்க!!” என்று மறுபடி அவளை வம்பிழுக்க “சீமா” என்று பல்லை கடித்து அவளை அடக்கினாள் மதுவந்தி.

“சரி சரி ரொம்பவும் சலிச்சிக்காத” என்று தோழியை போனால் போகிறது என்று விட்டவள் “ஹோய் உனக்கு விஷயம் தெரியுமா ஒன் வீககா சேம் ஷாப் பக்கமே வரலை. நேத்து என்னன்னு அங்கிள் கிட்ட விசாரித்தப்போ அவன் வீட்டு மாடில இருந்து போதைல கீழே விழுந்து பலமா அடிப்பட்டு கை கால் உடைஞ்சு இருக்கான் எப்படியும் ஒரு ஆறு ஏழு மாசத்துக்கு எழுந்துக்கவே முடியாதாம்” என்று கூற

மனதில் ஒருவித நிம்மதி படர்ந்தாலும் திடீரென்று இவ்வாறு ஆகவும் “இது எப்போ??” என்றாள் மது

“எக்ஸாக்டா சொல்லனும்னா ஒரு வாரததுக்கு முன்னாடி” என்று அவனுக்கு விபத்து ஆன நாளை கூறினாள் சீமா.

செய்தியை கேட்டு இருந்தவளின் முகம் கொஞ்சம் குழப்பத்தைக் கொண்டு இருந்தது. மீண்டும் அதை நினைக்க கூடாது அப்படி எதுவும் நடந்து இருக்காது என்று தனக்கு தானே சமாதானம் கூறியவள் அந்த இடத்தில் இருந்து நகர்ந்தவள் சீமாவோடு வீட்டிற்கு செல்ல புறப்பட்டு வந்து தன் அத்தை மாமாவிடமும் சொல்லிக்கொண்டு ஜெய்ந்திடம் கூறியவள் கிளம்ப எத்தனிங்க அவளின் முகம் பார்த்தவன் மனதில் ஏதோ அவள் கலக்கமாக இருப்பதாக பட “மது இரு நான் வரேன்” என்றவன் “சீமா நீங்க பைக் எடுத்து வந்து இருக்கிங்களா??” என்றான்

“ஆமா ஹேன்ட்சம் எடுத்து வந்து இருக்கேன்” என்றவளுக்கு ‘நன்றி’ என்று மனதோடு சொல்லிக்கொண்டவன் “அப்பா உங்களுக்கு அம்மாவுக்கும் என் ஃப்ரெண்ட் வண்டி அனுப்பி இருக்கான் அதுல போறிங்கறாளா? மதுவை நான் விட்டுட்டு வர்றேன்” என்றிட

மதுவின் முகம் ‘இவர் ஏன் இப்போது என் உடன் வருகிறார்!?’ என்ற ஐயத்தை வெளிபடுத்தியது.

“சரிப்பா பார்த்து பத்திரமா விட்டுட்டு வா” என்று கூறி தங்கள் சம்மதத்தை ராஜா ராமன் உறைக்க.

“ஜெய் நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க நான் சீமா கூட போய்க்குவேன்” என்று அவனுக்கு ஓய்வை கொடுக்க அவள் நினைத்து கூறினாள்.

“மதுமா அவனே ஆசையா ஏதோ வந்து விடுறேன்னு சொல்றானே நீ ஏன் அதை தடுக்குற என்னு ஆதி மகனுக்காக பேச

அதுல இல்ல அத்தை என்று கூற நீ போ ஆதி அவளை கூட்டிக்கு என்று ஆதியின் குரலில் இருவரும் வண்டியை நோக்கி சென்றனர்.

காரில் பலத்த அமைதி அவளின் தெளிவற்ற முகம் என்றால் கூட பரவாயில்லை பயந்த முகமாக தெரிய, “மதுமா” என்றாள் அன்பாக கனவில் இருந்து விழிப்பவள் போல் “ஹங் என்..ன.. என்ன ஜெய்” என்றாள் பதட்டமாக.

காரை ஒரு பக்கம் நிறுத்தியவன் “உடம்புக்கு என்ன செய்யுது??” என்றான் அவள் புறம் திரும்பி.

ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க “பின்ன என்ன? ஏன் ஒரு மாதிரி இருக்க என்ன உன் மனசுல ஓடுது??” என்றான் அவளை தன் புறம் திரும்பி...

“அது வந்து….” சேமின் வீட்டிலிருந்து நடந்த விபத்தை பற்றி உறைக்க “இதுக்கா நீ இவ்வளவு ஃபீல் பண்ணிட்டு இருக்க??” என்றான் சிரித்தபடி

“ப்ச் நீங்க” என்று அவனை சலித்தவள் “உண்மைய சொல்லுங்க நீங்க நீங்க தானே அவனை ஏதோ செய்து இருக்கிங்க??” என்றவள் அவனை நோக்கி வீரலை நீட்டி “உங்ககிட்ட சொல்லி கஷ்டப்பட்ட அடுத்த நாளே இப்படி நடந்திருக்கு இதுக்கு நீங்கதானே காரணம்!!!” என்று தன் சந்தேகத்தை அவனிடமே கேட்டுவிட்டாள்.

அவள் முகத்தில் தோன்றி மறையும் பல வித உணர்வுகளில் இந்த பதற்றமும் பயமும் கலந்த முகம் அன்று கோவிலில் கலங்கியபடி நின்ற பழைய மதுவை ஞாபகப்படுத்த கண்களை மூடி தன்னை நிதானபடுத்தி வார்த்தைகளை தேடி பிடித்து “ஆமா மதுமா நான் தான் நானே தான் இவ்வளவுக்கும் காரணம்” என்று கூற அவள் அதிர்ந்தது விழிகளை விரித்து அவனையே பார்க்க அவளின் பட்டுகன்னங்களை இரு கையில் ஏந்தியவன் “நீ என்கிட்ட சொல்லி வருத்தப்படுற வரைக்கும் அந்த ரோக் மேல ஒரு பர்சன்ட் கூட எனக்கு அந்த எண்ணமில்லை... ஏன் கேட்குறியா அன்னைக்கு நடந்த பிரச்சனையில தானே நீ என் லைஃப்ல வந்த... அந்த ஒரு நல்லதுக்காகத்தான் அவனை எதுவும் பண்ணாம விட்டு வைக்க சொல்லி இருந்தேன். ஆனா நீ அவனை நினைச்சி பயந்து பயந்து உன்னை நீயே தாழ்த்தி பேசுறதும் மத்தவங்க உன்னை தவறா நினைக்க கூடாதுன்னு நீ வருத்தப்படுறதும் என்னால பாக்க முடியலடா அதான் அவன்கிட்ட உன் சம்மந்தபட்டது ஏதவாது இருக்குமான்னு தேடித்தான் அங்க போயிருந்தேன். எனக்கு தேவை பட்டதும் கிடைச்சது இன்னும் சிலதும் கிடைச்சுது எல்லாத்தையும் அவன் கண்ணெதிரே அழிச்சதும் அவனை விட சொல்லி கெஞ்சிட்டுதான் இருந்தான். இருந்தும் உன்னை வாட்டி எடுத்தவனை அப்படியே விட்டுட்டு வர எனக்கு மனசு வரலை அதுக்கு தான் உன்னை தொட நினைச்சதுக்கும் சேர்த்து அவனுக்கு தண்டனை இனி தப்பு செய்யனுமுன்னு கூட அவனுக்கு தோனாது” என்றான் ஒரு கபடச்சிரிப்புடன்.

புரியாது அவன் முகத்தையே பார்த்து இருந்தவளை அவன் சிரிப்பும் மயக்கியது சில நிமிடங்களில் தான் இருக்கும் நிலையை உணர்ந்தவள் நாணம் கொண்டு திரும்பி அமர்ந்து சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு “ஏன் இன்னும் ஆறுமாசத்துல உடம்பு சரியானதும் மீண்டும் இதே தப்பை தானே செய்வான்” என்று கூற

“அவனாலே எந்திரிக்கவே முடியாதுடா இனி ஆயுசுக்கும் அவன் வீல் சேர்லதான் இருக்கனும் இனி. எதை செய்வான்” என்று கூறியவன் அவளுக்கு விளக்கும் பொருட்டு “மேல இருந்து விழுந்ததுல இடுப்புக்கு கீழே பலத்த அடி எழுந்து நடப்பது என்பது கண்டிப்பா சாத்தியம் இல்லாத ஒன்னு. இதை டாக்டரும் உறுதி படுத்தி இருக்காங்க” என்றான் சாதாரணமாக

அவளுக்குதான் மிகுந்த அதிர்ச்சி அவளால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை கண்மூடி தன்னை சமன்படுத்தி அதை உள்வாங்கியவள் தன் பெரியப்பாவின் ஞாபகம் வரவும் சட்டென கண்விழித்து அவனை பார்த்து “ஜெய்” என்றாள். அதுவரை எண்ண யோசிக்கிறாள் என்பதை ஒரளவு யூகித்து இருந்தவன் விஷமமான புன்னகையுடன் “உன் பெரியப்பாவை பத்தி தானே நினைக்கிற!! இந்த செப்பு சிலையை இத்தனை வருஷம் பாசம் கொடுத்து பார்க்கா விட்டாலும் பாதுகாப்பா இருந்த காரணத்தாலேயே தான் அவருக்காக நான் எதுவும் யோசிக்கல” என்றான் கண்களில் காதலுடன்.

அவன் கூற்றில் நிம்மதி பெருமூச்சி விட்டவள் அவளும் காதல் கொண்டு அவனை நோக்கினாள். கண்கள் நான்கும் சந்தித்தது தன் நிலை இழுக்கும் தருவாயில் சுதாரித்தவன் தலையை அழுந்த கோதி “போதும் மதுமா நீ பார்த்தாலே எனக்கு ஏதேதோ தோனுது நீ ஏதோ நினைச்சி குழப்பிக்கிறன்னு தான் உன்னை விட வந்தேன். ஆனா என்னை நானே இழந்துடுவேன் போல... உன் பக்கத்துல இருந்தாலே மொத்தமா என்னை ஆக்கிரமிச்சிக்கிறடா” என்றவன் மீண்டும் வண்டியை செலுத்த ஆரம்பித்தான். அவன் சொல்லிய விதத்தில் கன்னங்கள் சிவப்பேற வெட்கப்பூக்கள் பூத்தது அவளின் அழகிய முகத்தில்.

~

தன்னை கடந்து சென்ற நபரை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றவன் தன் கைபேசி சிணுங்கிய பிறகே தன்னிலை வந்து தான் காண்பது நினைவா இல்லை ஏதேனும் விழித்துக்கொண்டே கனவை காண்கிறேனா என்று சந்தேகத்துடன் தன்னை தானே ஒரு முறை கிள்ளி பார்த்தவன் ‘இல்லை இது கனவில்லை. தான் கனவு காணவில்லை' என்று உறைக்க வெளியே சென்று கொண்டு இருந்த நபரின் பின்னாள் கிட்டதட்ட ஓடினான்.

அவனின் செல்லும் விடாமல் அடித்துக்கொண்டு இருக்க அதை எடுத்து பார்த்து கோபி எனறு அறிந்துகொண்டவன் அவர் ஏறிச்செல்லும் காரின் எண்களை பதிவுசெய்துகொண்டே கோபியின் அழைப்பை ஏற்று பேசி இருந்தான் தான் என்ன முயன்றாலும் அவரை பின்தொடர்வது என்பது நடக்காத காரியம் இந்த எண்ணை வைத்து கண்டுபிடிக்கலாம் என்று அதை செய்து இருந்தான்.

அலைபேசியில் இருந்த கோபி மாணிக்கம் மற்றும் கேஷவின் ஆக்ஸிடென்ட்டை பற்றி கூற

மாணிக்கத்தின் ஆக்ஸிடென்டில் அதிர்ச்சியானவன் அவரின் நிலையையும் கேஷவின் நிலையையும் அறிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்ய சொன்னவன் தியாவின் நிலையையும் கேட்டு அறிந்தான்.

பின்னர் நினைவு வந்தவனாக தான் கூறிய வேலைகளை பற்றிய தகவல் கிடைத்ததா!! என்று கேட்க

அப்பார்ட்மென்டில் நான்கு ஐந்து வருங்களுக்கு முன் இருவர் அறை எடுத்து தங்கி இருப்பதும் அதில் ஒருவன் மருத்துவ கல்லூரி மாணவன் என்றும் அவன் பெயர் நிர்மல் என்றும் கூறி இருந்தான் கோபி.

இங்கு சித்துவும் தான் கண்ட காட்சியை பற்றி கூற அதில் குழப்பமடைந்தவன் “நீ அங்க தனியா எப்படி தேடுவ சித்து நான் வரேன்” என்று கூற தனக்கும் கோபியின் துணை கட்டயம் வேண்டும் ன்று நினைத்தவன் “நைட்டே கிளம்பி வா கவிக்கிட்ட தைரியமா இருக்க சொல்லு” என்று மட்டும் கூறியவன் தான் குறித்துக்கொண்ட எண்ணை பார்த்தவன் ஹோட்டலுக்கு கிளம்பிச்சென்றான்.

காலை சூரியன் உதிப்பதற்கு முன்னே சித்து தங்கியிருந்த ஹோட்டலிற்கு காரில் வந்து இறங்கியவன் தன் நண்பனை காண சித்துவின் அறையை நோக்கி சென்றான் கோபி. அவனுக்காவே காத்திருநதவன் விடிந்தவுடன் தன்னிடம் உள்ள அந்த எண்ணை வைத்து தகவலை பெறுவதற்கு RDO அலுவலகம் சென்று இருந்தனர்.

“என்னடா செய்யபோறதா இருக்க மாப்ள??” என்று கோபி கேட்டதும்,

“இது என்னடா கேள்வி இந்த நம்பரை வைச்சி உள்ள போய் கேக்கலாம் மச்சான்” என்றான் சித்து

“தெரிஞ்சி தான் பேசுறியா!!!! நீ கேட்டவுடனே ஒரு கவர்மென்ட் ஆஃபிஸ்ல இந்தா பா இதை இது வைச்சிக்கோன்னு டிட்டையலை தூக்கி கொடுத்துடுவாங்களா??” என்றான் கோபி

“ச்ச... அதை யோசிக்காம விட்டுட்டேனே” என்று தன் நேற்றியை தேய்த்தவனின் தோளை பற்றி அவனை சாந்தபடுத்தியவன் ‘ஏன்டா இவ்வளவு ரெஸ்ட்லஸ்ஸா இருக்க நல்லதே நடக்கும் நம்பு” என்று அவனுக்கு தெம்பூட்டியவன் “இங்க ஏற்கனவே மாமா மூலயாமா ஒருத்தர்கிட்ட பேசி வச்சி இருக்கேன் அவரும் இந்த டிபார்ட்மென்ட்ல வேலை செய்யறதால சுலபமா முடியும் நீ வொரி பண்ணிக்காத. காலைல உன்கிட்ட நம்பர் வாங்கினதும் அவர்கிட்ட கொடுத்து பார்க்க சொல்லி இருக்கேன் ஃபோன்லயே சொல்றேன் சொன்னாரு உன்னோட பதட்டத்தை பார்த்துதான் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தேன்” என்று கூறியவனுக்கு ஃபோன் வர

“இதோ சார் உள்ள வந்துட்டோம்” என்று கூறியவன் ஒருவரை பார்த்து கை அசைத்து தன் இருப்பை தெரியப்படுத்த அவரும் பேசியபடி வந்து தன்னிடம் இருந்த விலாசத்தை கொடுத்தார். அதில் Dr தயாபரன் ஆர் கே சாலை அடையாறு சென்னை என்று இருக்க அவருக்கு நன்றி கூறியவர்கள் அதில் இருந்த முகவரிக்கு சென்றனர்.

பெரிய விஸ்தாரமான பங்களா நவனமயமாகவும் அதே சமயம் கலைநயத்தோடும் அமைந்திருந்தது. கம்பௌன்ட் கேட்டை திறக்க அங்கே நின்ற செக்யூரிட்டியிடம் தயாபரனை சந்திக்க வந்துள்ளதாக தெரிவிக்க அவர்களின் ஐடி கார்டுகளை பரிசோதித்த பின் உள்ளே அனுப்பி வைத்தார் அவர்.

இரு மருங்கிலும் அழகிய பச்சை வண்ண ஆடையை உடுத்தியபடி இருந்த புல்வெளிகள் நடுவில் அமைக்கப்பட்ட பாதையில் சென்றவர்கள் வீட்டின் காலிங்பெல்லை அழுத்தவும் ஒரு 35 வது மதிக்க தக்க ஒரு பெண்மணி வந்து கதவை திறந்தார்.

“தயாபரன் சார் இருக்காரா??” என்றதும் “நீங்க யாரு உங்களுக்கு யார் வேணும்??. சார் வீட்ல இல்ல” என்றார்.

“நாங்க ஊட்டில இருந்து வர்றோம் இந்த ஃபோட்டோல இருக்கவங்க உங்களுக்கு தெரியுமா??” என்று கேட்க... விழிகள் தெறிப்பதுப்போல் அதை பார்த்தவள் “அட இது நம்ம மகிலாம்மா” என்று கூறியதும் இருவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க ”இதோ இருங்க அம்மா மேல தான் இருக்காங்க பாப்பாவுக்கு சாதம் ஊட்டிக்கிட்டு” என்று கூறி அவளை அழைத்து வர சென்றாள் அந்த பெண்மணி கையில் 5 வயது குழந்தையுடன் புடவை உடுத்தி வந்த மகிலாவை பார்த்ததும் கோபி மயக்கம் போடாத குறையாக சோபாவில் தொப் என்று அமர்ந்து இருந்தான்.

இதுவரையிலும் அவளாய் இருக்காது என்று நினைத்து இருந்தவன் நேரில் வந்தவளைப் பார்த்து அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்க சித்துவிற்கு மட்டும் அவளை ஆராய்ந்து புகைபடத்துடன் ஒப்பிட்டு பார்த்து இவள் அவள் தான என் ஊர்ஜிதபடுத்திக்கொண்டு இருந்தான்.

இருவரின் வெவ்றேறு நிலையை கண்ட மகிலா “நீங்க யாரு உங்களுக்கு யார் வேணும்??” என்று தனது சாரீரத்தால் கேட்க கோபிக்கு குயில் தான் கூவியதோ என்று இருந்தது. இரு முறை கண்களை கசக்கி அவளை பார்த்தவன் “டேய் கேளுடா” என்று நண்பனை ஊக்கினான்.

தொண்டையை கனைத்த சரிபடுத்திய சித்தார்த் “நீங்க... உங்க பேர்??” என்று கேட்க

“ அவளை பற்றி கேட்டதும் ஆர்வமாக நீங்க என்னை பார்க்கத்தான் வந்திங்களா... நீங்க யாரு... உங்க பேரு என்னன்னு சொல்லவே இல்லையே??” என்று அவள் கேட்டதும்

“என் பெயர் சித்தார்த் இது என் ஃப்ரெண்ட் கோபி” என்றதும் தனது பெரியரை ‘மகிலா’ என்று கூறினாள்

‘என்னது மகிலாவா' என்று உள்ளுக்குள் கூறிக்கொண்டவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள “நீங்க ஏன் என்னை பார்க்க வந்தீங்க?” என்று கேட்டவளிடம் கையில் இருந்த புகைப்படத்தை நீட்டி அதை பார்க்க சொல்ல அதில் தான் இன்னொரு ஆண்மகனுடன் நிற்பது போல் இருக்க இதுவரை அந்த முகத்தையோ இல்லை அது போல் தான் ஃபோட்டோவிற்கு நின்றதையோ ஞாபகம் இல்லாதவள் அதிர்ச்சியுடன் “இவர் யாரு இவங்க என்னை மாதிரியே இருக்காங்க???!” என்று அவர்களையே கேள்விக் கேட்டுக் கொண்டு இருந்தாள் உத்ரா மாதிரியே இருக்கும் மகிலா.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுலி 48
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN