காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 49

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாணிக்கத்தினை மருத்துவமனையில் சேர்த்தவன் கார்த்திக்கினை அழைத்து விவரங்கள் கூறி பார்த்துக்க சொல்லி சக்தியுடன் கமிஷ்னர் அலுவலகத்திற்கு புறப்பட்டு விட்டான். அவனை வலுக்கட்டாயமாக தடுத்தும் "ஆளவந்தானின் கைகளில் விலங்கினை மாட்டனும் இல்லை அவன் சாவை பார்க்கனும். இதுல எதை செய்தால் நீ சந்தோஷ படுவ கார்த்திக்..??" என்று கேட்க கேஷவிற்கு இருக்கும் கோபத்தில் கொலையே செய்து விடுவான் என்பதனை உணர்ந்தவன் அவனை அவன்போக்கில் விட்டு மருத்துவமனையில் இருந்தான்.

சக்தியுடன் கமிஷ்னர் அலுவலகம் சென்றவன் அவரிடம் மாணிக்கத்திற்கு நடந்த கொலை முயற்சியையும் இதற்கு காரணமான ஆளவந்தான் மீதும் புகார் கொடுக்க அதற்கு ஆதாரமாய் அவரிடம் இருந்த சிப்பினை கொண்டு உடனே மந்திரியின் பண்ணை வீட்டினை சோதனை செய்ய ஆணை பிறப்பித்தவர் கதிரின் வாக்குமூலத்தினை ஆதரமாக கொண்டுக் கைது செய்யவும் ஆணையையும் வழங்கி இருந்தார். சக்தியும் மற்றகாவல் அதிகாரிகளுடன் பண்ணை வீட்டை சோதனை செய்ய புறப்பட்டான்.

"டேய் ஒரு கொலைய கூட ஒழுங்க பண்ண துப்பில்லையா!! துப்பு கெட்ட பசங்களா... உங்களலாம் நம்பி இருந்தா தலைல துண்டை போட்டுத்தான் திரியனும்... இதுல நான் மட்டுமா இருக்கேன் இதுக்கு முதலீடா பணம் போட்டவன் கழுத்தை நெறுக்குவான்டா... மாப்ள மாப்ளைக்கு வேற பதிலை சொல்லனும் தண்ட சோறுகளா" என்று வாய்க்கு வந்த படி திட்டிக்கொண்டு இருந்தார் மந்திரி.

"அண்ணாத்த நாங்க கரெக்ட்டாதான் பண்ணோம்... அந்த கிழவனுக்கு கூட இருந்தவன் தான் நம்ம ஆளுங்களை அடிச்சிப்போட்டு ஒரு வழியாக்கிட்டான்" என்றான் ஒருவன்.

"நான் ஜெயிலுக்கே போனாலும் பரவாயில்லை... நான் உள்ள போக காரணமா இருந்தவனை மட்டும் உயிரோடவே விடமாட்டேன்... போங்கடா போய் அவனை கொன்னு புதைச்சிட்டேன்னு நீயூசோட வாங்கடா" என்று தனது ஆட்களை ஏவி விட்டவன் தனக்கு மருமகனாகவும் தான் ஆரம்பிக்கப் போகும் புது ஃபேக்டீரிக்கு மூளையாகவும் இருக்கும் அஷ்வின் பிரசாத்திற்கு தொடர்புகொண்டு பேசி இருந்தான்.

தன் காதல் வித்தையின் மூலம் வலை வீசி தன் தந்தையின் நகைக் கடைக்கு ஒரு விசேஷத்திற்கு வந்திருந்த மந்திரி ஆளவந்தான் மகளை தன் கைக்குள் கொண்டு வந்து ஆளவந்தானுக்கு மருமகனாய் நிச்சயம் ஆனவன்..

தற்போதும் தன் நகைக்கடையில் வேலை செய்யும் பணிப்பெண்ணிடம் நகைகளின் விதம் பார்க்கும் சாக்கில் அவளின் மேனியில் விளையாடிக் கொண்டிருந்தவனை கலைத்தது ஆளவந்தானின் அலைபேசி அழைப்பு..

தன் மோனநிலையை கலைத்த அலைபேசியை கடுப்புடனே எடுத்து காதில் பொருத்தியவன் மந்திரியின் "மாப்பள" என்ற குரலில் வரவழைத்த உற்சாகத்துடன் "சொல்லுங்க மாமா எப்படி இருக்கிங்க நம்ம வேலை எல்லாம் எப்படி போகுது" என்று விசாரித்து இருந்தான்.

"அதை சொல்லத்தான் மாப்ள ஃபோன் பண்ணேன் இந்த கதிர் பய மேட்டர் போலீஸ்க்கு தெரிஞ்சி போச்சி கமிஷ்னர் என்னை கைது பண்ண வாரண்ட் ரெடி பண்ணிட்டானாம் எந்த நேரத்திலும் அரெஸ்ட் ஆக வாய்ப்பு இருக்கு மாப்ள" என்று கூற.

"என்ன மாமா இப்படி அந்த கிழவனை விட்டுட்டிங்க போட்டு தள்ளி இருந்தா இந்நேரத்துக்கு ஃபாக்டீரிய ரன் பண்ணிட்டு இருந்திருக்கலாம்.. நீங்க தான் அவன் ஒன்னுத்துக்கும் உதவ மாட்டான் அவனை போய் எதுக்குன்னு விட்டிங்க இப்போ பாருங்க அந்த கிழவனால எல்லாமே போகப்போகுது எத்தனை கோடி ப்ராஜக்ட் தெரியுமா மாமா என்னுடைய உழைப்பு இது" என்று தன்னுடைய ஆத்திரத்தை ஆதங்கமாக கொட்டிக்கொண்டு இருந்தான் அஷ்வின் பிரசாத்.

"நீங்க கவலை படாதிங்க மாப்ள எல்லாம் பொய்னு அடிச்சி சொல்லி நிரூபிக்கலாம். சட்டதை கரைச்சி குடிச்சவன் எல்லாம் நம்ம பாக்கெட்ல இருக்கானுங்க இந்த கதிர் பையனோட வாக்குமுலம் கிராஃபிக்ஸ்ன்னு சொல்லாம் நம்ம நினைச்சதை நடத்தி முடிப்போம்... எவன் என்ன பண்ணிட முடியும் தைரியமா இருங்க மாப்ள அவனுக்கும் அவன் மருமகனுக்கும் சமாதி எழுப்பிடலாம்" என்று அந்த நிலையிலும் தன் ஆணவத்திலும் மக்களை ஏமாற்றுவதிலும் பி எச் டி பெற்றவர் என்று நிரூப்பித்துக்கொண்டு இருந்தார் ஆளவந்தான்.

-------------

மருத்துவமனைக்கு விரைந்து வந்தவன் கண்களில் பட்டது மஞ்சு கவி மற்றும் தியா மூவரும் கண்களில் நீருடன் அமர்ந்திருந்த கோலம் தான். கார்த்திக் தான் அவர்களுக்கு உதவியாய் இருந்தான். ராஜாராமனிற்கு தகவல் பறந்திருக்க ஆதியும் அவரும் அடுத்த விமானத்திலேயே வந்துக்கொண்டு இருந்தனர். கவி மற்றம் தியாவிற்க்கு மட்டும் இது சதியின் மூலம் நடந்த விபத்தாகவே பட்டது எனினும் இந்த சமயத்தில் தாயாரை பதறவைக்க வேண்டாம் என்று கொஞ்சம் தங்களை திடப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தனர். தந்தையின் உடல் நிலை முன்னேற்றத்தில் கொஞ்சம் சிக்கலாக இருக்க தாயின் கலங்கியமுகம் அவர்களின் இதயத்தை பிழிந்து எடுத்தது. மஞ்சுவிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினாலும் சுவற்றில் சாய்ந்து பிரம்மை பிடித்தவரை போல் அமர்ந்து இருந்தார் அவர். அவருக்கு புரியவைக்கும் நோக்கில் பல சமாதானங்கள் கூறினாலும். எதற்கும் அசைந்தபாடில்லை வயிற்றில் புளியை கறைக்க இவருக்கு என்ன ஆனதோ என்று பெண்கள் இருவரும் தவிக்க அந்நேரம் பார்த்து மருத்துவமனைக்கு வந்த கேஷவினை பார்த்த பிறகே அவளுக்கு சற்றே தெம்பே வந்தது.

அவர்களின் அருகே வந்தவன் அருகே நின்றிருந்த கார்த்திக்கிடம் "என்ன கார்த்திக் மாமாவோட கண்டிஷன் எப்படி இருக்காம்?" என்று கேட்க,

"கொஞ்சம் கிரிட்டிக்கல் பொஸிஷன் தான் கேஷவ் பிளட் லாஸ் ஆனதுல மயக்கத்துல இருக்காரு அவர் ரெக்கவர் ஆக இரண்டு நாள் ஆகும் கால்லையும் ஹெவி ஃப்ராக்சர் கைலயும் அடிபட்டிருக்கு நேரத்துல கொண்டு வந்து சேர்த்ததால உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல பட் அவரோட கண்ஷனை நினைச்சிதான் ஆண்ட்டி பயந்து இருக்காங்க இதுவரையிலும் பச்ச தண்ணிக்கூட பல்லுல படல. இவரை நினைச்சி அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு. கவியும் தியாவும் எவ்வளவு சொல்லியும் அவங்க நினைவு நம்ம கிட்ட இல்லை" என்று மஞ்சுவின் நிலையை எண்ணி வருத்தப்பட்டு கூற.

மஞ்சுவின் அருகில் சென்று மண்டி போட்டு அமரந்தவன். "அத்தை மாமாவுக்கு ஒன்னும் ஆகாது நீங்க தைரியாமா இருக்கனும். உங்க தைரியத்துல தான் கவியும் தியாவும் இருக்காங்க. அவர் இன்னும் கொஞ்ச நோரத்துல கண் முழுச்சிடுவார் அப்போ நீங்க நல்லா இருந்தா தானே அவருக்கு நிம்மதியா இருக்கும் அவரை இங்க சேர்க்கும் கடைசி நிமிஷத்துல கூட 'மஞ்சுவ தைரியமா இருக்க சொல்லுங்க நான் அவக்கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு'ன்னு சொன்னாரு அதை கேக்கவாச்சி உங்களுக்கு தெம்பும் திடமும் வேண்டாமா??" என்றதும் கண்ணை மறைத்து கொண்டு திரையிட்ட கண்ணீர் இமைகளை தாண்டி கீழ் இறங்கியது.

"இங்க பாருங்க அத்தை நீங்க இப்படி இருக்குறதை பார்த்து இவங்க ரெண்டுபேரும் அழுகுறாங்க" என்று மகள்களை முன்நிறுத்தி அவரின் கரங்களை எடுத்து தன் கைக்குள்ளே வைத்தவன் "என்னை நம்புங்க அத்தை மாமாவுக்கு எதுவும் ஆகாது நல்லபடியா திரும்பி நம்மகிட்டயே வருவார்" என்றதும் தான் அவனின் கரங்களை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டு அழுது தீர்த்தார் அதுவரையிலும் இறுகிபோய் இருந்தவர் உடைந்து அழவும் சற்று நேரத்தில் தெரிவிடுவார் என்று நம்பியவன் கவியிடம் கண்களால் அத்தையை பார்த்துக்கொள்ள சொல்லியவன் அவருக்கு மற்றவர்களுக்கும் பழச்சாறை வாங்கி வர சென்றான்.

அதுவரையிலும் அருகில் இருந்த கார்த்திக் கேஷவின் கரங்களில் ரத்தம் கசிவதைக் கண்டு "ஏய் கேஷவ் கையபாரு" என்றதும் தான் ஏற்கனவே ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வருவதை உணர்ந்தான்.

அவன் கரங்களில் ரத்தம் வருவதை கண்ட கவி "அய்யோ என்னங்க ரத்தம் வருது...!! கவனமா இருக்க மாட்டிங்களா" என்று கடந்தபடி அவன் அருகில் செல்ல முன்னேற அவள் கால்களில் உண்டான வலிகூட மறந்து அவனிடம் சேர்ந்தவள் கைகளை பற்றி வாங்க டாக்டரை பார்க்கலாம் என்று அவனை விடாப்பிடியாக இழுத்து செல்ல

அவள் பதட்டத்தினை கண்டு நெகிழ்ந்தவன் "ஒன்னுமில்லடா" என்று கூறினாலும் "தம்பி போய் முதல்ல காயத்துக்கு மருந்து போடுங்க" என்று கூறி இருந்தார் மஞ்சு அந்த பேச்சே இப்போது அவர் சிறிது இயல்பாக இருப்பது போல் பட "இப்போ வந்துறேன் அத்த. தியா அம்மாவ பாத்துக்க" என்றவன் கார்த்திக்கிடம் கண்களால் அவர்களை காட்டி அவர்களுக்கு பழச்சாற்றை தருவிக்க சொல்லி இருந்தான்.

மனைவியை கூட்டிக்கொண்டு மருத்துவரை அணுகி காயத்திற்கு சிகிச்சை அளித்தபின்னும் அவனை விட்டு ஒரு நொடியும் பிரிந்திருக்க முடியாதவள் "உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால உயிரோடவே இருக்க முடியாது மச்சி" என்று அவள் மார்பினில் சாய அவளின் தவிப்பை புரிந்த கேஷவ் "பயப்படாத ஆட்டோபாம் நீ எவ்வளவு தைரியமான பொண்ணு. நீயே பயந்தா எப்படி.... என்கூட மட்டும் வாய்ககு வாய் தைரியாமா பேசுவியா...!!" என்று அவளை சமாதனபடுத்த முனைந்தான்.

"நான் எவ்வளவு தைரியமான பொண்ணா இருந்தாலும் நீங்கன்னு வரும்போது எனக்கு முடியலங்க. என் தைரியம் எல்லாம் காணாம போயிடுது" என்று தழதழக்க கூற அவளின் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்து அவளை சமாதானப் படுத்தினான் கேஷவ். அவனின் அழுத்தம் அவளுக்கு வேண்டியதாய் இருக்க கைகளை பிரிக்காமலேயே அவனோடு நடந்து வந்தாள். அப்போதுதான் அவளின் காலில் இருந்த காயத்தை நினைவு கூர்ந்தவன் "கால் உனக்கு பரவாயில்லை யா டா??" என்று கேட்க அந்த நொடியில்தான் வலியையே அவள் உணர்ந்தாள் அவள். உணர்ந்த அடுத்த நொடியே தள்ளாடி அவனை பிடித்துக்கொள்ள கவி நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வர அவளை அப்படியே இரு கைகளிலும் தூக்கியவன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து மரத்தடி கல்மேடையில் அமரவைத்து அவளுக்கு பருக பழரசத்தை வாங்கி வரச்சென்றான்.

சிறிது நேரத்தில் பழரசத்துடன் வந்தவன் அவளின் கைகளில் திணித்து "மொத்தமா இதை காலிப்பண்ணாதான் இங்க இருந்து போக முடியும்" என்று கூறி அவளை அருந்த வைத்து இருந்தான்.

"மச்சி எனக்கு ஒரு சந்தேகம்" என்றாள் கவி அவனை எப்போதும் அழைப்பது போல் அழைக்க அவள் அழைப்பில் விரிந்த கண்களுடன் "ஆட்டோபாம் ஃபார்முக்கு வந்துட்ட போல என்ன சந்தேகம்??" என்றான் சிரிப்புடன்.

"அப்பா...... அப்பாவுக்கு நடந்த விபத்து எனக்கு தற்செயலா நடந்ததா தெரியல யாரோ திட்டம்போட்டு தான் செய்தா மாதிரி இருக்கு. அப்பாவுக்கு நமக்கு கல்யாணம் நடக்கும் முன்னாடியும் இப்படிதான் நடந்தது" என்று அவளின் சந்தேகத்தை கூற "உன் சந்தேகத்துக்கு எல்லாம் விடை வந்திடுச்சி ஆட்டோ பாம்" என்றான் அவள் முகம் பார்த்து.

"அப்போ உங்களுக்கு!!" என்று அவனை பார்த்து தெரியுமா என்பது போல் வாயசைக்க

"ம்" என்று தலையாட்டியவன் அனைத்து விஷயங்களையும் கூறலானான் அவனின் கைது செய்திகளை விழிவிரித்து கேட்டவள் தந்தையின் உன்னதமான பணியை நினைத்து பெருமைப்பட்டவள் "இவனுங்களை எல்லாம் சும்மாவே விடக்கூடாது எங்க அப்பா சிந்திய ரத்தத்துக்கும் ஒரு உயிர் போனதுக்கும் அவனுங்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைச்சே ஆகனும்" என்று கண்கள் சிவக்க பேசியவளை அணைத்து ஆறுதல் கூறியவன் "எதுவும் பண்ணமுடியாத அளவுக்கு எல்லாம் பக்கமும் ப்ளாக் பண்ணியாச்சி டா. அவனும் அவன் கூட சேர்ந்த எவனும் தப்பிக்க முடியாது" என்றவன் அவளை தூக்கிக்கொள்ள

"மச்சி கீழே விடுங்க நானே நடந்து வரேன் உங்களுக்கும் கையில காயம் இருக்கு வலிக்கப் போகுது என்று அவள் இறக்கிவிட சொல்ல "நிக்கவே கஷ்டப்படுற இதுல நடக்கவேறையா பேசாம வா எனக்கு கை வலிச்ச வுடனே உன்னை கிழே போட்டுறேன் அதுவரை தூக்கிட்டு போறேன் என்று கேளியாய் மொழிந்தவன் அவளை கைகளில் தாங்கி மருத்துவமனைக்குள் நுழைந்தான்.

~

ஒரு மாலின் முன்னால் வண்டியை நிறுத்திய சாருகேஷ் ஆண்கள் பிரிவிற்கு சென்று உடையை தேர்ந்தெடுத்த வண்ணம் நின்றிருந்தான். எதை எடுத்தாலும் மனதுக்கு ஏனோ பிடிக்கவில்லை. அதுவும் அல்லாமல் அவனுக்கு சுத்தமாய் பிடிக்காத விஷயம் உடையை தேர்ந்தெடுப்பது. உத்ரா இருந்தவரையிலும் அவள் தான் தேர்வு செய்து தருவாள் "டேய் அண்ணா இது உனக்கு செமையாஹபொருந்தும் டா. இது நல்லா இருக்கும். இந்த கலார் உனக்கு நல்லா இருக்கும் இதை போடு நாலு ஃபிகர் பார்க்கும்" என்றெல்லாம் வம்பு இழுத்து தான் அவள் தேர்தேடுத்து தருவாள்...

அவள் இறந்த பின் இந்த பக்கம் கூட வருவதே இல்லை கையில் கிடைக்கும் ஏதோ ஒரு ஆடையை உடுத்துவான். தோற்றத்தை கவனிக்க மறந்தான்... தன்னை கவனிக்க மறந்தான்... நாளைய தினம் உத்ராவின் பெயரில் ஆரம்பித்திருந்த டிரஸ்டின் 4 ம் ஆண்டு விழாவிற்கு தான் ஏதோ உந்துதலின் பேரில் ஆடையை எடுக்க வந்து இருந்தான்.

இங்கு வந்ததும் ஏனோ அவளின் ஞாபகம் அவன் அழையலேயே வந்து ஒட்டிக்கொண்டு அவனை வாட்ட அப்படியே நின்றிருந்தவனின் கண்கள் எதேச்சையாய் பார்க்க எதிரில் ஒரு சிறு பெண் குழந்தை நின்றிருந்தது. அக்குழந்தையை பார்க்க தன் தங்கையே தலையை சாயத்து தன்னை பார்ப்பது போல் இருக்க அக்குழந்தையின் அருகில் சென்றவன் சுற்றும் முற்றும் பார்த்து "பேபி நீ தனியா இங்க என்ன பண்ற?? உன் கூட யாரும் வரலையா??" என்று கேட்க அவனையே பார்த்தது அந்த குழந்தை "நான் பேசுறது உனக்கு புரியுதா பேபி நீ தனியாவா வந்த??" என்று மறுமுறை கேட்க சுற்றும் முற்றும் பார்த்த குழந்தை உதட்டைப் பிதுக்கி "மம்மி.... மம்மி......" என்றது.

ஏதோ புரிந்தவனாக "உங்க அம்மா கூட வந்தியா?" என்று கேட்க "ம்" ன்று தலையை ஆட்டியது "நோ பேபி இப்படி சேடா இருக்க கூடாது. தென் அம்மா எங்க அம்மாவ விட்டு ஏன் வந்திங்க!!" என்று கேட்டபடி அக்குழந்தையை தூக்கிக்கெண்டவன் "வாங்க உங்க அம்மா எங்க இருக்காங்கன்னு பாக்கலாம்" என்று கூறி முன்னே நடக்க "அம்மு குட்டி எங்க இருக்க.. வேர் ஆர் யூ மீனு?? கம் ஹ்யர் மீனு.... மீனு வேர் ஆர் யூ??" என்றபடி ஆங்கிலத்தில் அழைத்துக்கொண்டு வந்த பெண் சாருகேஷ் கரங்களில் குழந்தையைப் பார்த்ததும் சாரி சாரி சார் என்று அள்ளிக்கொண்டு "மீனு மீனு மா" என்று அணைத்து முத்தமிட்டாள். அப்போதுதான் தன் முன்னால இருந்தவனை பார்த்து "சாரி சார் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டாளா?? என் கூடதான் நின்னுட்டு இருந்தா தீடிர்னு இங்க வந்துட்டா. காணோம்னு ரொம்ப பயந்துட்டேன்" என்று சொல்லிக்கொண்டே வந்தவள் அவனை யாரென கண்டுகொண்டாள்.

~

காலி மதுககோப்பையில் ஆல்கஹாலை நிரப்பியபடி அதில் இரண்டு துண்டு ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டவன் போதையில் சிடியில் ஒலிக்கும் மேற்கத்திய இசைக்கு அங்கும் இங்கும் தள்ளாடியபடி உடன் இருக்கும் பெண்ணுடன் ஆட அவனை கடுப்போடு பார்த்துக்கொண்டு இருந்தான் விஜய் நிர்மல் தேவராஜின் சகோதரன்.

"டேய் நாயே ஒரு வாரமா எங்கடா போய் தொலைஞ்ச? உனக்கு ஃபோன் பண்ணி பண்ணி என் கை விரல் தேஞ்சதுதான் மிச்சம்" என்று அலுத்தவன் அருகில் இருந்த மதுக்கோப்பையை தொண்டையில் சரித்து இருந்தான்.

"மாமு நான் எங்க போயிட போறேன் இதோ இங்க இருக்க ஏற்காடு வரைக்கும் போயிட்டு வந்தேன். ஒரு ஃபிகர் ரொம்ப நாள கரெக்ட் பண்ணிட்டு இருந்தேன் போன வாரம் தான் மடிஞ்சிது அதான் செலிபரேட் பண்ணிட்டு வந்தேன்" என்று கூறியபடியே அந்த பெண்ணின் மீது விழ

அவனை பிடித்து இழுத்து நிறுத்தி அந்த பெண்ணை போக சொன்ன விஜய் நிர்மல் "டேய் டேய் அடங்கமாட்டியா மச்சான்... நீ மந்திரிக்கு மாப்பிள்ளை ஆக போற. ஆட்டத்தை நிறுத்திக்கோ அந்த ஆளுக்கு ஏதாவது தெரிஞ்சா ரொம்ப டேஞ்சரா போயிடும் சொல்லிட்டேன்" என்றிட "அவனே பல்ல பிடுங்கன பாம்பட்டாம் உஸ்ஸ் உஸ்ஸன்னிட்டு இருக்கான். நீ வேற ஏன்டா ஏழரையை கூட்டுற... அனுபவிக்கனும் மச்சி அனுபவிக்கத்தான் வாழ்க்கை" என்ற தத்துவத்தினை பேச

பெருமூச்சி ஒன்றை வெளிபடுத்தி தலையை ஆட்டியவன் தன் உறக்கத்தை கெடுத்தவளை பற்றி பேசினான். "மச்சான் உத்ரா வீட்டுக்கு போயிருந்தேன் டா" என்றிட

"உத்ரா... உத்ராவா அது யாரு அவ உத்ரா" என்று மதுவின் போதையில் நா குழற கேட்க "அதான் தான்:5 வருஷத்துக்கு முன்னாடி என்னை ஒருத்தி குத்திட்டு போனவளை நீ மறக்கலாம் நான் எப்படிடா மறக்கறது உயிர் பயத்தை காமிச்சாளே அவளதான்டா சொல்றேன்" என்று பற்களை கடித்தபடி கூற

"ப்ச் அவளா.... நீ என்னமோ அவளை ஜான்சிராணி கணக்கா பேசுற .. அன்னைக்கு ஏதோ அப்படி நடந்துடுச்சி விட்றா விட்றா" என்றவன் "அவ ஒரு ரேர் பீசுடா அவளை எல்லாம் மைன்ட்ல வைச்சிக்க கூடாது ஆனா கடைசி வரையிலும் கைக்கு எட்டினது எனக்கு எடுத்துக்க கொடுத்து வைக்கல பட் செம கட்டை டா இப்போ கூட அவளை நினைக்கும் போதே போதை ஏறுது" என்று கூறி "அவளை நான் கொல்லல ஆனா என்கிட்ட இருந்து தப்பிக்க மூனாவது மாடியில இருந்து அவதானே கீழே விழுந்தா அதுக்கு நான் எப்படி மச்சி காரணம் ஆவேன்!!" என்று தோல்களை குலுக்கி தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் பேசியவனை பார்த்து முறைத்தவன்

"மச்சி அடக்கி வாசி அவ செத்துக்கு காரணமே நீதான். அவ தப்பி ஓடும் போது அவளை புடிக்க வந்த உன்கிட்ட இருந்து மானம் போறதை விட உயிர் போறது பரவாயில்லைன்னு விழந்து செத்தாடா அது தெரிஞ்சா அவ அண்ணன் உன்னை சும்மா விடமாட்டான். காட்டு மிராண்டி போல வெறி புடிச்சி இருக்கான். நீதான் தெரிஞ்சா உன்னை உயிரோட எரிச்சி கொண்டுவான்" என்றிட

"அட போடா உண்மை தெரிஞ்சவன் நீதான்.... நீ சொல்லாம இருந்தா போதும் அவன் கையில் நான் எப்படி மாட்டுவேன் பீ கூல் மாமு இந்தா அடி இன்னொரு ரவுண்டு" என்று கிளாசை அவன் கைகளில் திணிக்க ஏதோ பெரியதாய் நடக்க போகிறது என்று உள்ளுணர்வு அவனுக்கு எச்சரிக்கை விடுத்தது.

~

மகிலாவின் புகைபடத்தை காட்டி கேட்டதில் அந்த வீட்டு பெண்மணி தயாபரனுக்கு அழைத்து விஷயத்தை கூறிட தயாபரன் இல்லத்தில் எல்லோரும் கூடி இருந்தனர்... அங்கே நிலவிய அமைதி ஊசி முனை விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவில் இருந்தது... அந்த இல்லத்தின் முத்தவரே மௌனத்தை உடைத்து பேச ஆரம்பித்தார். "நீங்க மகிலாவிற்கு என்ன வேண்டும்?" என்று கேட்க "அண்ணன்" என்ற சொல்லோடு முடித்த சித்துவை பார்த்தவர்

"தம்பி நாங்க டாக்டர் குடும்பம்" என்று தன்னுடன் தங்கள் குடும்பத்தையும் சேர்த்து அறிமுகப்படுத்தி கொண்டார் தயாபரன் "இது என் மகன். அவங்க என் மருமக இவங்க போன மெடிக்கல் கேம்ப் வேன்ல சென்னை திரும்பி வரும்போது தான் மகிலா சுயநினைவு இல்லாம தலையில் அடிபட்டு இருந்தா... எப்படி வந்தா என்ன ஏதுன்னு யாருக்கும் தெரியல டிரைவர் லக்கேஜ் எல்லாம் இறக்க மேல ஏறிய போதுதான் மகிலாவை பார்த்து இருக்கார்.

எங்க ஹாஸ்பிட்டல்லையே மகிலாவுக்கு சிகிச்சை கொடுத்தோம். அவ கண்முழிக்க ஒரு வாரம் ஆகிடுச்சி பட் அவளுக்கு தன்னை யருன்னு கூட தெரியல எல்லத்தையும் மறந்துட்டா டோட்டல் ப்ளாங்க் ஆக இருந்தா... ஃபர்ஸ்ட் எதுவும் ஞாபகத்துக்கு வரல நாங்க எவ்வளவு முயற்சி செய்தும் முடியல அவளுக்கு தலையில் அடிபட்டதும் ஒரு காரணம் தீவிர மன அழுத்தம் இருந்தாலும் இது போல லட்சத்துல ஒருத்தருக்கு சித்தம் தடுமாறும் நிலை வர வாய்ப்பு இருக்கு.. இவ எந்த கேட்டகிரில வரான்னு எங்களால யூகிக்க முடியல. ஒரு நிமிடம் எல்லாரையும் வெறிச்சி பார்ப்பா அடுந்த நிமிஷம் அழுவா அவளை ஹாஸ்பிட்டல்ல 6 மாசம் வைச்சி பாத்துக்கிட்டோம்.

அவளை பற்றிய தகவளும் இல்லை ஆதாரம் எதுவும் இல்லை இருந்தும் நாங்க சென்னையிலும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தோம் அவ எங்க இருந்து வந்தான்னு தெரியாமத்தான் அன்அஃபிசியலா சொல்லி வச்சிருந்தோம். அவளோட உயிருக்கு ஆபத்து கூட வந்திருக்கலாம்ன்னு ஒரு நிலையில் யோசித்தோம். தென் அவளை வெளியே ஹஸ்டல்ல தங்க வைக்கவும் முடியாது தன்னையே யாருன்னு தெரியாத பொண்ணை எங்க தங்க வைக்க அவளுக்கு ஒரு பாதுகாப்பு வேணும்னு என் மருமக நினைச்சா அது எனக்கும் சரியா படவே எங்க வீட்டுல எங்க கூடவே இருக்க வைச்சிக்கிட்டோம் அவளுக்கு நாங்களே மகிலான்னு பேரை வைச்சோம்" என்றிட

அப்போதுதான் போன உயிரே வந்தது சிந்துவிற்கு 'அப்பாடா நாம்ம கேஷவ் பிரச்சனையில் இருந்து விடுபட்டுடுவான்னு முகத்தில் சந்தோஷம்' எட்டி பார்த்தது.

தயாபரனிடம் தங்களை பற்றியும் உத்ராவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றியும் கூறியவன் தான் அவளை ஒரு தங்கையாக கருதிய காரணத்தினாலயே அவளுக்கு அண்ணன் என்று கூறி இருந்ததாக தெரிவிக்க தன் சிநேகிதியின் வாழ்க்கைக்காக எவ்வளவு பெரிய விஷயத்தை கண்டுபிடித்த சித்துவிற்கு பாராட்டினை தெரிவித்தார். இதுவரையிலும் காட்சி பொருளாக இருந்த உத்ரா தன் வாழ்க்கையில் இத்தனை துயர சம்பவங்கள் நடந்ததா என்று வெறித்துக்கொண்டு இருந்தவளுக்கு கையில் பிடித்து இருந்த குழந்தை சிணுங்க அதனை பார்த்த மகிலா அனைத்தையும் மறந்து "சோ... சோ செல்லகுட்டிக்கு என்ன வேணும்" என்று அக்குழந்தையின் மழலையிலையே கேட்க

உதட்டினை பிதுக்கி "மம்மம்" என்று கூற "அட குட்டிக்கு பசிக்குதா!! வா வா" என்று அழைத்து செல்லும் உத்ராவினை பார்த்த கோபி சித்துவிடம் "அந்த குழந்தை என் மகனுடையது, மகிலா இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து குழந்தைய அவ தான் பார்த்துக்குவா" என்றவரின் குரல் அவள் கோயம்பத்தூர் செல்வதை நினைத்து வருத்தத்துடன் வெளிவந்தது.

"மகிலா இங்க வந்ததுல இருந்து பேஷண்ட் டாக்டர் என்றதையும் தாண்டி நல்ல மகளாதான் என் கண்ணுக்கு தெரிஞ்சா அவ இங்க இருந்து போறது வருத்தமாதான் இருக்கு ஆனா தவறா திசைமாறி போன பறவை அதோட கூட்டுக்கு திரும்பி போற காலம் வந்ததை நினைச்சி சந்தோஷப்படுறேன். மகிலாவுடைய லைஃப் நல்லபடியா இருக்கனும்" என்று கூறினார்.

இதுவரையிலும் அமைதியாக இருந்த கோபியோ தயாபரனின் கூற்றில் "என்னடா சார் மனுஷங்களுக்கு தானே வைத்தியம் பாக்குறாரு வெட்னரி ஹாஸ்பிடல்ல இருக்கரமாதிரி பறவை கூடுன்னு சொல்லிட்டு இருக்காரு" என்று தன் சந்தேகத்தை கேட்க.

அருகில் இருந்த கோபியை முறைத்த சித்து "டேய் ஏன்டா... வாயாடா உனக்கு அவருதான்டா தாத்தா தங்கி இருக்க ஹாஸ்பட்டலோட ஓனர் நல்ல வேலை நீ பேசினது அவருக்கு கேக்கல" என்று கூறிக்கொண்டு இருக்கும்போதே

"நான் மனுஷங்களுக்கு வைத்தியம் தான் தம்பி பாக்குறேன்... விலங்குகள் பாவம் அதை ஏன் துன்புறுத்துவானே நீயும் வேணா வாயேன் உனக்கும் வைத்தியம் பாத்து நிரூப்பிக்கிறேன்" என்றிட "அய்யோ தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கிட்டேன் போலயே" என்று நினைத்தவன் "சாரி சாரி சார்" என்று கூறி ஈஈஈஈஈ என்று இளித்தபடி வாயை பெரிய பூட்டாய் போட்டு பூட்டிக்கொண்டான் கோபி.

பெரிய சிரிப்புடன் அவனின் மன்னிப்பை அதை மறுத்தவர் "சே சே நானும் இதுபோல சிரித்து பேசி ரொம்ப காலம் ஆச்சு தேங்க்ஸ் ஃபார் திஸ்" என்று கூறி சிறிது நேரம் பேசியவர்கள் மகிலாவிடமும் கூறிவிட்டு அவளை கோயம்பத்தூர் அழைத்து செல்லும் நாளையும் கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்று சென்றனர் இருவரும்.

"ராதா இந்த பையன் எங்கதான் போனான் ஒரு ஃபோனும் இல்லை தகவலும் இல்லை காலைல வரேன்னு சொன்னான் மணி மூனு ஆக போகுது இன்னும ஆளை காணோம்" என்று மனைவியிடம் கடுப்படித்துக்கொண்டு இருந்தார் நவநீதன்.

அவர் பாட்டிற்கு ஒரு புறம் கத்திக்கொண்டு இருக்க மறுபுறம் சவகாசமாய் அமர்ந்து இருந்த ராதா கணவரை ஒரு முறை திரும்பி பார்த்த பார்வையில் நவநீதனின் வாய் தானாய் மூடிக்கொண்டது.

"அவன் எங்க போனான்னு எல்லாம் சொல்லிட்டு போகல வர நேரம் ஆனாலும் ஆகலாம்னு மட்டும் சொல்லி இருந்தான்... ஆமா இப்போ அவனை நீங்க ஏன் இவ்வளவு அவசரமா தேடுறிங்க??" என்று கேட்டார் ராதா.

"ப்ச் ராதா. என்ன கேள்வி இது எல்லா பேரபசங்களும் இங்கதானே இருக்காங்க... அவன் என் தங்கச்சி வீட்டுக்கு தான் வரமாட்டேன்னு சொல்லிட்டான்... சரி பரவாயில்லை இங்க இருக்க ஆளுங்ககிட்ட கூடவா பேசமாட்டான்... எல்லாரும் என்னை கேக்குறாங்கடி... என் தங்கச்சி வீட்டுக்காரர் கூட ஏன் மச்சா நம்ம வீட்டுல எல்லாம் சித்தார்த் தங்கமாட்டானான்னு கேக்குறாரு" என்று கடுகடுக்க

"இதை கொண்டுபோய் அவன் கிட்ட செல்லிடாதிங்க அவரை நார் நாரா உறுச்சி தோரணம் கட்டி தொங்கவிட்டுடுவான்..." என்று கூற அது உண்மையே என்பதால் வாயை அடக்கி அங்கிருந்த சேரில் அமர்ந்தார் நவநீதன்.

அதே சமயம் ஹாஸ்பிடலுக்கு நுழைந்து இருந்தான். சித்தார்தை பார்த்த ராதா "எங்க போயிருந்த சித்து எவ்வளவு நேரம் உன்னை எதிர்பார்த்து இருந்தார் தெரியுமா உன் அப்பா அவர் வாசலை பார்த்தே கண்ணு பூத்துபோச்சி தெரியுமா??" என்று நவநீதனை சாட்டிவிட

அப்பாவா என்று வியப்பை காட்டியவன் "ஏன் தேடினார் நான் தான் அம்மாகிட்ட சொல்லிட்டு போனே பா வர லேட்டாகும்னு என்ன விஷயமா தேடுனிங்க பா" என்று கேட்க

மனைவியை பார்வையால் துணைக்கு அழைத்தவர் "அது அது ஒன்னும் இல்லப்பா தாத்தா உன்னை கேட்டார் இதோ வந்துடுவன்னு சொல்லி இருந்தேன்... நேரம் ஆகிடுச்சி அதான் அம்மாகிட்ட கேட்டேன்" என்றார்.

கணவனை காப்பாற்றும் பொருட்டு வாயில் உண்டான கேலிச்சிரிப்புடனே கணவனை நோக்கியவர் "சித்து மணி மூனு அகுது நீ சாப்பிட்டியா!??" என்றிட "ம்" என்று சுரத்தையே இல்லாமல் கூறியவனை பார்த்த ராதா "என்ன சித்து" என்று கேட்க தியாவின் தந்தை மாணிக்கத்திற்கு நடந்த விபத்தினை கூறினான்.

"இதை ஏன்டா முன்னமே சொல்லல??" என்றவர் எடுத்த எடுப்பிலையே "தியாவுக்கு ஃபோனை போடு மஞ்சு என்ன நிலைமைல இருக்காளோ!!" என்று வருத்தப்பட்டார்.

தியாவின் எண்ணுக்கு அழைக்க முதல் அழைப்பிலையே எடுத்திருந்த தியா "ஹலோ" என்றாள் .

"ஹலோ வது நான் தான். அங்கிள் எப்படி இருக்கார்??" என்றிட மருத்துவர் கூறியதை கூறியவள் அழுகையை அடுக்கியபடி பேசி இருந்தாள். அவள் அழுகை மனதினை என்னவோ செய்ய தாயிடம் பேசியை அளித்தவன் "பேசுங்கமா அழுகுறா" என்று கூறினான்.

"தியாமா அப்பா எப்படி இருக்காரு டா??" என்றிட "கண் முழிக்க டூ டேஸ் ஆகும்னு சொல்லி இருக்காங்க ஆண்ட்டி" என்றாள் அழகையுடனே.

"என் தங்கம் ல அழக்கூடாது டா செல்லம். அம்மாவுக்கு நீங்கதான் பலமே" என்றிட மேலும் அவள் அழுகை அதிகரிக்க இப்படியே பாசமாய் பேசினால் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த ராதா "வாய மூடுடி எலிக்குட்டி வந்தேன்னு வை வந்து ஒன்னு வாயி மேலையே வைப்பேன் கண்ணை துடை தைரியமா இரு. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. நல்லபடியா வருவாரு இதுபோல அழுதுட்டே இருந்தா என்ன பண்ணுவேன்னே தெரியாது சொல்லிட்டேன்" என்று இரண்டு சத்தம் போடவும்

"ம் பண்ணுவிங்க. என்ன அந்த பனைமரம் சொல்லிகொடுத்துச்சா திட்ட சொல்லி" என்று சண்டைக்கு செல்ல "அம்மா தாயே என் புள்ள பாவம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு கருவேப்பிலை கொத்தாட்டம் ஒத்த புள்ளைய பெத்து வைச்சிருக்கேன். உன் ரவுடி தனத்தையும் சண்டிராணி தனத்தையும் அவன்கிட்ட காட்டி மிரள வைச்சிடாதே" என்று அவளை வம்பிழுத்து சிரிக்க வைத்து நவநீதனிடம் கொடுக்க அவரும் மாணிக்கத்தின் நலனை விசாரித்து சித்துவிடம் கொடுத்திருந்தார்.

தொலைபேசியை வாங்கியவன் சற்று நகர்ந்து வந்து "ஹலோ" என்றதும் அழுகை முட்டிக்கொண்டு வர "என்ன இன்னும் அழுகையா அம்மாகிட்ட ஃபோனை தரவா!!" என்று அவளை மிரட்ட

மூக்கை உறிஞ்சி காரமாக "மூஞ்சி நீதான் அவங்களை உசுப்பேத்திரியா??" என்று வெடிக்க

"ஏய் ஏய் நான் ஏண்டி உசுப்பேத்தனும். நீ பண்ற வேலைக்கு அவங்க ஏதாவது சொன்னாலும் அதுக்கும் என் மண்டைதான் உருலுமா நல்லா வந்து சேர்ந்திங்க பாரு எனக்குன்னு? ஜாடிக்கேத்த மூடி" என்று தன்னை தானே நொந்தபடி பேச அவன் புலம்பலில் சிரிப்பு வந்திட "அம்மா சொன்னதைதான் நானும் சொல்றேன் ஆண்ட்டிய பாத்துக்க நாளைக்கு காலைல உன் கண்ணு முன்னாடி நான் இருப்பேன்" என்றிட

"சித்து அங்க தாத்தா!!" என்று ஞாபகம் செய்தவளை தடுத்தவன் "இங்க அவரை பாரத்துக்க நிறைய பேரப்பசங்க இருக்காங்க. நான் இல்லாதது தெரியாது" என்றவன் "என் செல்லகுட்டி கஷ்டப்படும்போது நான் இங்க எப்படி இருப்பேன்??" என்று அவள் மனதை குளிர்வித்தவனை எதிர்த்து பேச திராணியற்று வார்த்தைகள் தொண்டைக்குழியில் சண்டித்தனம் செய்ய அதை மறுத்து பேச முடியாமல் மௌனமாகினாள்... அவளை மேலும் வருத்த விரும்பாமல் சில வார்த்தைகள பேசி ஃபோனை வைக்க தியாவின் மனதில் புது தெம்பு வந்து ஒட்டிக்கொண்டது.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 49
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN