காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி56

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பார்கவி, கேஷவுடன் சாருகேஷின் வீட்டிற்கு உத்ராவை விட சென்றவுடன் சித்தார்த் தியா ராஜாராமன் மற்றும் ஆதியையும் அழைத்து சென்று கேஷவின் வீட்டில் விட்டவன் கடைசியாக தியாவை அழைத்துக்கொண்டு அவள் இல்லம் நோக்கி புறப்பட்டு இருந்தான்.

காரில் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவள் அவன் புறம் பார்வையை திருப்பாமலேயே ஜன்னலின் புறம் பார்வையை பதித்து தன்னை இவனிடம் மாட்டி விட்டு சென்ற தமக்கையை மனதில் திட்டிக்கொண்டே அமர்ந்து இருந்தாள். (அவளும் வேண்டும் என்று தானே இவனிடம் விட்டுசென்றாள் காதலர்கள் இடையில் என்றுமே மூன்றாவது தலையீடு இருக்கக்கூடாது என்று உறுதியாக இருப்பவள் பார்கவி இவர்களின் பிரச்சனையை இலைமறை காய்மறையாக சித்துவிடம் விஷயத்தை வாங்கியவள் தியாவிடம் பேச சித்துவையே களத்தில் இறக்கி விட்டிருந்தாள்)

அவனின் புறம் பார்வையை தவிர்த்து இருந்தவளின் செய்கையை கண்டுக்கொண்டவன் என்ன இதுவரை எத்தனை போயிருக்கு அவளை பார்க்காமலையே கேட்டான்.

அவனின் திடீர் கேள்வியை புரிந்துக் கொள்ள முடியாமல் அவனை பார்த்தவளின் எண்ணவோட்டத்தை படித்தவன் “அதான் விண்டோ வழியா பார்த்துட்டே வந்தியே உன்னை க்ராஸ் பண்ணி எத்தனை மரம் போச்சின்னு எண்ணிட்டியான்னு கேட்டேன்” என்று நக்கலாகவே பதிலளிக்க அவன் கூற்றில் முறைத்தவள் பார்வையை சாலையின் புறம் திருப்பினாள்.

“ம்...” என்று புருவம் உயர்த்தி தோல்களை குலுக்கியவன் “என்ன முடிவு எடுத்து இருக்க வது???” என்றான் அழுத்தமான குரலில்.

எப்படியும் அவனிடம் பேசாமல் வீட்டிற்கு சென்று விட்டால் போதும் தப்பிவிடலாம் என்று நினைத்து கண்களை மூடி என்று தூக்கம் வருவது போல் கண்களை சொக்கியவள் “நீ என்ன பேசுறன்னு புரியல சித்து. எனக்கு தூக்கமா வருது வீடு வந்ததும் சொல்லு இறங்கிடுறேன்” என்று சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு தூங்குவதை போல் இருந்தாள்

அவளின் நடவடிக்கையை பார்த்துக்கொண்டு இருந்தவன் “உன்னை, மனுஷன் என்ன நிலமையில இருக்கான். உனக்கு தூக்கம் கேக்குதா தூக்கம்” என்று அவளை முறைத்தவன் தன் கையின் பக்கத்தில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிப்பது போல் குடித்துக்கொண்டு இருந்தவன் கைதவறி விட்டது போல் அவள் மேல் கொட்டி விட பாட்டலில் இருந்து பாதிக்கு மேல் தண்ணீர் அவள் மேல் கொட்டி இருந்தது.

தண்ணீர் பட்டதில் அதிர்ந்து போய் திடுக்கிட்டு விழித்தவளை பார்த்தவன் நமுட்டு சிரிப்புடன் பாக்கெட்டில் இருந்து கைகுட்டையை எடுத்து அவளிடம் நீட்டி இருந்தான்.

நீட்டி இருந்தவனின் கரங்களை தட்டி விட்டு தன் கைகளினாலையே முகத்தில் இருந்த தண்ணீரை வழித்து விட்டவள் அவனை தீ பார்வையாய் கோபமாக பார்த்தபடி “எதுக்கு என் மேல தண்ணீய உத்தின???” என்றாள்.

அமைதியாக இருந்தவன் “மேடம் கொஞ்சம் திருத்தம் தண்ணிய உங்க மேல வேணும்னே நான் உத்தல. கைதவறி கொட்டிடுச்சி” என்று அவளுக்கு திருத்தி விளக்கம் கொடுத்தவன். “எல்லாத்தையும் இப்படி தான் தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு முடிவு எடுப்பியா டி ராங்கி என்று அவளை பார்த்தான் முகமெல்லாம் நீர்திவளைகள் கண்களிலோ கனல் கொண்ட பார்வை, பன்னீரில் உறிய அதரங்களும் கோபத்தில் துடிப்பதை பார்க்க அவள் மேல் ஆசை பொங்கினாலும் தியாவிடம் பேச வேண்டிய நிர்பந்தத்தில் கண்களை மூடி நிதானத்தை வர வழைத்துக்கொண்டு

ஒரு முடிவு எடுத்தா அதுல ஸ்ட்ராங்க இருக்கனும் டி அது நமக்கு வேணுங்கறதுல ஸ்டெடியா இருக்கனும். கடைசி வரை போராடனும். நேசிச்சதை எதுக்கவும் யாருக்கவும் இழக்கவோ, குறிப்பா விட்டுக்கொடுக்கவோ, உதறிதள்ளவோ மனசு வராது அது நாமா உண்மையா நேசிச்ச மனசா ..” என்று அவன் கூற அவனை சட்டென திரும்பி முறைத்தவளின் பார்வையை கண்டவன் “அது உதவாத பொருளா இருந்தாக்கூட” என்று தன் கருத்தையும் சேர்த்துக் கூற இவன் வேண்டுமென்றே எதை எதையோ பேசி மனசை மாத்த முயற்சி செய்கிறான் என்று உணர்ந்தவள் அவனுக்கு திருப்பி கொடுக்கும் பொருட்டு

உதட்டை சுழித்து மூக்கை உறிஞ்சியவள் “நான் எதையும் தப்பாவும் புரிஞ்சிக்கல தவறாவும் எடுத்துக்கல. விருப்பு வெறுப்பு என்பது அவங்க அவங்க தனிப்பட்ட விஷயம். அதை நான் நல்லா புரிஞ்சதுனாலதான் எதுலையும் யார்கிட்டயும் ஒதுங்கி இருக்கனும்னு நினைக்கிறேன்” என்று கூறியவளின் மனதும் கலங்கி போய் இருந்தது அவன் எரிந்த கல்லில்.

“ஆமா யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்குற மாதிரி வேலையை தான் செய்ற எலி” என்று உள்ளுக்குள் குமைந்தவன்

"எத்தனை வாட்டி டி கிளிபிள்ளைக்கு சொல்றா போல சொல்றது" என்று அவளின் தாடையை இறுக பற்றி தன்னை நோக்கி திருப்பியவன் “இந்த கண்ணு பொய் சொல்லுது டி இந்த வாய் பொய் சொல்லுது டி , உன் மனசு பொய் சொல்லுதுடி என்றவன் “என்னை பார்த்து பயப்புடுறடி உன் மனசுல இருக்கறது உன்னையும் மீறி வெளியே வந்துடுமோன்னு. அதனாலதான் எப்பவும் வெறுப்பா பாக்குறா பாதிரி நடிக்கற நான் பார்க்காத போது என்னை பார்த்து ரசிக்கிற” என்று அவளின் மனநிலையை தெள்ள தெளிவாய் விளக்கி விட தியாவின் கண்களில் நீர் படலம் உருவானது.

இனியும் அவளை சோதிக்கும் எண்ணத்தை கைவிட்டவன் “உன் வாயாலேயே உண்மை வரும்டி அப்போ உனக்கும் தண்டனை இருக்கு. பொய் சொன்ன இந்த உதடுகளுக்கும் தண்டனை இருக்கு” எனறு கூறி அவளை விட்டவன் நேராய் மாணிக்கத்தின் வீட்டிற்கு வண்டியை செலுத்தி இருந்தான்.

ஏற்கனவே பெற்றவர்கள் வரும் தகவலை அறிந்து வைத்திருந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவளுக்கு காத்திருக்காமல் வீட்டுற்குள் சென்று பெற்றவர்களுடன் அமர்ந்து விட்டான். அவனுக்கு பின் வீட்டுக்குள் வந்தவளுக்கு ராதா நவனீதன் தம்பதியரின் வருகை திகைப்பை தர வந்திருந்தவர்களை கண்டு புன்னகையை வரவழைத்துக் கொண்டவள் சிரித்த முகமாகவே அவர்களை வரவேற்றாள்.

எப்போதும் சரவெடியாக ஏட்டிக்கு போட்டியாக பேசுவதும் எப்போதும் வம்பும் வழக்குமாக இருக்கும் தியா இன்று அமைதியின் முழு சொரூபமாய் மாறிய செயல்களை மனதில் குறித்துக்கொண்ட ராதா “என்னடி எலிக்குட்டி சர்பிரைஸா வந்து இறங்கி இருக்கோம். ஒரு கவுண்டர் கூட கொடுக்காம அமைதியா இருக்க!!!” என்று மனதில் பட்ட கேள்வியை கேட்க

“அது... வந்து... அது..” என்று திணறியவள் “வெளியே போயிட்டு வந்தேன்ல அத்த அது கொஞ்சம். என்று வாய்க்கு வந்ததை உளறிகொட்டியவள் “இதோ வந்துடுறேன்” என்று தப்பித்து உள்ளே விடு விடு என சென்று விட்டாள்.

“அவ மனசுல இருக்கரதை எல்லாம் நான் சொல்லிட்டேன் அதான் மேடம் ஜெர்க்ல இருக்காங்க” என்று மனதிற்குள்ளே அவளுக்கு பேசியவன் நல்ல பிள்ளையாக வந்து தந்தையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

அவள் சென்ற திக்கையே பார்த்த ராதா மகனிடம் கண்களால் என்னவென்று கேட்க ஒன்னுமில்லை என்று அன்னைக்கு கண்களால் சைகை செய்தான்.

மஞ்சு மறுபடியும் மாணிக்கத்தின் உடல் நிலையை நினைத்து ராதாவிடப் புலம்ப அவருக்கு ஆதரவாய் கைகொடுத்தவர் “மஞ்சு நான் ஒரு விஷயம் நினைச்சி இருக்கேன்... ஆனா அதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல. முதல்ல அண்ணா என்ன நினைப்பாருன்னு கொஞ்சம் யோசனையா இருக்கு” என்று பீடிகையுடன் ஆரம்பிக்க நவனீதனும் சித்துவும் தாயையே பார்க்க மாணிக்கம் நினைக்க என்ன மா இருக்கு உனக்கு மனசுல பட்டதை சொல்லுமா நமக்கு தகுந்தா மாதிரி இருக்கும்னு எனக்கு எப்பவுமே நம்பிக்கை உண்டு என்று தைரியம் கூற மஞ்சுவும் ராதாவின் சொல்லை கேட்க அவரின் முகத்தையே பார்த்திருந்தார்.

தன்மனதில் இருப்பதை கூற கேட்ட அனைவருக்கும் முதலில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்த மாணிக்கம் நான் நினைச்சதைதான் நீ சொல்லி இருக்க மா இருந்தும் நவநீதனின் முடிவு என்று இழுக்க

மாணிக்கத்தின் அருகில் வந்தவர் நான் வேற இவ வேற இல்ல மாணிக்கம் எனக்கும் இதுல பூரண திருப்தி என்று உறைக்க மஞ்சுவிற்கு மனசெல்லாம் நிம்மதி பரவியது போல் முகம் மலர அதை பார்த்த ராதா “உங்க முகமெல்லாம் பார்க்கும் போது தான் நல்ல முடிவைதான் எடுத்து இருக்கேன்னு மனசு நிறைவா இருக்கு” என்றவர் அதே மனநிலையுடன் தியாவை பார்க்க அவளின் அறைங்கு சென்றவர் தியா மெத்தையில் படுத்திருப்பதை பார்த்து அவள் அருகில் அமர்ந்தார்.

அவரை பார்த்ததும் எழுந்து அவர் மடியில் தலையைய வைத்துக்கொண்டவளின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவருக்கு பாவமாய் இருந்தது.

மனது கேளாமல் “என்னடா அழறியா?” என்று கேட்டதுமே எழுந்து அமர்ந்தவள் “நானா அழறனா எதுக்கு நான் ஏன் அழனும் வண்டில வந்தேன்ல அப்போ கண்ல ஏதாவது பட்டு சிவப்பா ஆகி இருக்கும்” என்று சமாளிக்க

“ம் குப்புற விழுப்தாலும் மீசையில மண்ணு ஒட்டல வாடி என் சக்கரவள்ளி கிழங்கே. இன்னும் என் மகனை காதலிக்கிற விஷயத்தை என்கிட்டயே மறைக்கிற எதுவரையும் போறன்னு பாக்குறேன் வா” என்று நினைத்தவர்.

“ஹோ.. நீ அப்படி சொல்றியா சரி சரி அப்படியே இருக்கட்டும் நான் எதுக்கு வந்தேன்னு தெரியுமா???” என்று கேள்வி கேட்க

“ப்ச் தெரியாது” என்று உதட்டை பிதுக்க

“சீக்கிரமே சித்துவோட கல்யாண சாப்பாட்டை போட நாள் வந்துடுச்சுன்னு அதை சொல்லதான் வந்தேன்” என்று கூற

கட்டுபடுத்திய அழுகை தொண்டையில் முட்டி நிற்க உடனே குளியலறை நோக்கி சென்னவளின் கையை பிடித்து நிறுத்தியவர்

“பொண்ணு யாரு எப்படின்னு கேக்கலயே!!!” என்று வம்படியாக அவளை நிற்க வைத்து கேட்க

உங்க பையனுக்கு நீங்க தானே பொண்ணை பார்த்திங்க அந்த ஆனாலப்பட்ட அதிரூப சுந்தரிய பத்தி எனக்கு எப்படி தேரியும் என்று கடுப்பாகவே பதிலளித்தவள் வேறு புறம் பார்வையை திருப்பிக்கொண்டு
பாவமாய் முகத்தை வைத்து பரிதாபமாய் நின்றிருந்தவளை பார்க்க உள்ளுக்குள் கஷ்டமாக இருந்தாலும் கொஞ்சம் சீண்டித்தான் பார்ப்போமே என்று நினைத்தவர்

ஆமா டீ அவ “அழகுன்னா அழகு அப்படியோரு அழகு. நீ சொன்னா மாதிரியே அதிரூப சுந்தரியே தான் தங்க சிலை உயரமும் இல்ல குள்ளமும் இல்ல அவனுக்கு பொறுத்தமான உயரம்.

படிப்பு அவ நாக்குல சரஸ்வதியே இருக்கா அவ்வளவு கெட்டகாரி. முக அழகு இருக்கே அடடா இன்னைக்கு முழுக்க பாத்துக்கிட்டே.இருக்கலாம் அப்படி ஒரு அமசமான முகம் ” என்று கூறிவிட இப்போது கண்களில் முட்டிய நீர் கண்ணத்தில் இறங்கியது இவங்க வேற பொண்ண பாத்தாச்சி அதைஜவேற என்கிட்டயே வந்து சொல்றாங்க இப்படியே செஞ்சிங்க அவனை கடத்திக்கூட்டிட்டு போல் நானே தாலிய கட்டிடுவேன் என் விரதத்தை கலச்சிடுவேன் என்று மறதில் பொங்க

அவளின் உள்ள உணர்வுகளை அறிந்தாரோ என்னவோ சித்துவின் அடுத்த கட்ட நிலமையை உணர்ந்தவர் இதுக்கு மேல இவள வெறுப்பேத்தினா என் மனகனுக்குதான் சேதாரம் போலையே கண்ணும் முழியும் சரியில்ல ஏதோ ஏடாகூடமா யோசிக்கிர என்று நினைத்தழர் விளையாட்டை முடிக்கும் எண்ணத்துடன் “நீ பாக்குறியா அவளை???” என்று கேட்டவர் அவள் கண்களை கைகளால் பொத்தியபடி சற்று நகர்த்தி நின்றவர் “இப்போ பார்” என்று கண்களை திறந்துவிட எதிரில் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை கண்டவள் முதலில் குழம்பிப்போய் அவரை பார்க்க சிரித்தபடியே நின்றிருந்த ராதா “எப்படி என் மருமக தங்கசிலையாட்டம் இல்ல!!!” என்று கண்ணாடியை பார்த்து புருவம் உயர்த்த “அத்த……” என்று அவரை கட்டிக்கொண்டவள் “நான்... நான்... பயந்துட்டேன் தெரியுமா என்று அழுதுக்கொண்டே சொன்னவளின் முதுகை வருடி விட்டவர் அவர் கையோடு கொண்டு வந்திருந்த அவளின் டைரியை அவளிடம் கொடுத்து “இதை பார்த்த பிறகும் உன்னை வேற ஒரு வீட்டுக்கு மருமகளா அனுப்ப இந்த மாமியாருக்கு மனசு வருமா சொல்லுடி என் எலிக்குட்டி. ஏதோ அப்போ இருந்த நிலமையில நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு உன் மனசார விரும்பியதையே விட்டுக்கொடுக்க துணிஞ்சிட்டியே டி என் செல்ல மருமகளே” என்று அவளை திருஷ்டி கழித்து நெற்றி முத்தம் வைத்தவர் அவளை வெளியே அழைத்து சென்று அவளின் பெற்றவர்கள் முன்னாள் நிறுத்தியவர் “அண்ணா, மஞ்சு.... இதோ என் மருமகளை நானே அலங்காரம் பண்ணி கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன்… இவ படிப்பு முடிஞ்சதும் அடுத்து வர்ற நல்ல முகூர்த்ததிலேயே கல்யாணம் வச்சிக்கலாமா ” என்று கூற கேட்க

தியா குட்டி உனக்கு இதுல என்று மாணிக்கம் மகளின் முகத்தை பார்த்து கேட்க

தந்தையின் அருகில் சென்றவள் சம்மதம் என்று தலையை அசைத்து தன் சம்மதத்தை கூற மஞ்சு அவளை அணைத்துக்கொண்டு உன் கிட்ட எப்படி ஆரம்பிக்கிறுன்னு ரொம்ப மறுகி போய் இருந்தேன்டா என் வயித்துல பாலை வார்த்த என்று அவள் நெற்றியில் முத்தம் வைக்க தலையை தாழ்த்தி இருந்தவள் ஓரவிழியால் சித்தார்த்தினை பார்க்க உதட்டை தடவி தண்டனை என்று ஞாபகடுத்தியவனின் செய்கையில் அந்தி வானமாய் சிவந்து போனாள் மங்கை அவள் அழகை கண்டு ரசித்தவனோ வைத்த கண் வாங்கமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

~

காலையில் எழுந்தது முதலே ஏனோ மனதில் ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது கோபிக்கு, எதிலும் மனம் லயிக்கவில்லை எதையோ இழந்ததை போல் ஒரு உணர்வு சோர்வுடனே படுக்கையை விட்டு எழுந்தவன் காலை கடன்களை முடித்து சமையலைறைக்கு சென்று காஃபியை கலக்க பழக்க தோஷத்தில் இரு காஃபி கப்புகளை கலக்கி எடுத்து வந்தவன் எப்போதும் போல் “உத்ரா காஃபி ரெடி” என்று குரல் கொடுத்துவிட்டு அவனுடைய கப்பை எடுத்து குடிக்க ஆரம்பித்து இருந்தான். அவளின் காஃபி கப் எடுக்காமல் இருக்க “உத்ரா” என்று மறுமுறை அழைக்க அப்போது தான் அவள் இங்கு இல்லை என்பதை உணர்ந்தவன் சோபாவில் தலையை சாய்த்துக்கொண்டான்.

அவன் அலைபேசியில் இருந்து அழைப்பு வர அதை எடுக்க அறைக்கு சென்றவன் அன்னையிடம் பேசிவிட்டு வந்து பார்க்கும் போது உத்ராவிற்கு என வைத்துவிட்டு போன கப் இல்லாமல் போக ஏதோ ஞாபகத்தில் அவள் அறையை பார்க்க காலி கோப்பையுடன் உத்ரா வெளியே வருவதை கண்டவன் அவளை கண்டதும் உறைந்து போய் அவளின் உருவத்தையே தன் பிரம்மையோ என்று எண்ணி அசந்து போய் கண்களை அகலவிரித்து பார்த்தான்.

அவன் அருகே வந்து உத்ரா “ஹலோ கோபி என்ன முழுச்சிட்டே கனவு காணுறீங்களா!!!” என்று கையை ஆட்டி கேட்கவும் தான் சுயத்தை அடைந்தவன் அவளை கண்டு விட்ட ஆனந்தத்தில் தன்னை மறந்து கட்டி அணைத்து “வந்துட்டியா என் கிட்டயே வந்துட்டியா?” என்று அவளை அணைத்தபடியே கேட்க

அவனின் திடீர் அணைப்பிலும் அவன் வார்த்தைகளிலும் கோபியை தள்ளிவிட கூட தோன்றாமல் சிலையாகி இருக்க மறுபடி அழைத்த அலைபேசியின் ஒலியில் தன்னிலை உணர்ந்த கோபி தான் செய்த காரியத்தை நினைத்து அவளிடம் மன்னிப்பை வேண்டி விலகி நின்றான்.

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத உத்ரா உறைந்து போய் பார்க்க அவளை கைத்தொட்டு உலுக்கியவன் “சா… சாரி உத்ரா. சாரின்னு ஒரு வார்த்தையில கேட்ட நான் செய்தது எல்லாம் சரின்னு ஆகிடாது தான். ஆனா என்னோட ஃபீளிங்க்ஸ் உன் கிட்ட என்னையும் மீறி எக்ஸ்பிரஸ் பண்ணிட்டேன்… அயம் ரியலி சாரி. என்னை உணர்ந்துதான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறியவன்

“இதை கடைசி வரையிலும் உன்கிட்ட காட்டக்கூடாதுன்னு தான் இருந்தேன். ஏற்கனவே காதல்ன்ற பேரால ஒருத்தாரால காயம் பட்ட மனசு அதை மறுபடி நானும் லவ்ன்னு சொல்லி உன்னை நோகடிக்க வேண்டாம்னு தான் மறைக்க நினைச்சேன்… ஆனாலும் முடியல…. என்ன மறைச்சாலும் அதை உணர்ந்துகிட்டே இருக்கேன் ஒவ்வொரு நொடியும்

உன் கூட இருக்கும் போது எல்லாம் நான் கன்ட்ரோலா தான் இருந்தேன் என்னை மாத்திக்க முடியும்ன்ற நம்பிக்கையும் இருந்துச்சி ஆனா நீ போன அந்த நிமிஷம் அந்த செகண்ட்ல இருந்து உன்னை மட்டும் தேடுது மனசு சாரி... சாரி உத்ரா…. அயம் ரியலி சாரி…. பட் இது இப்பவும் சொல்லப்படாமலேயே செத்து போக வேண்டாம்னு தான் சொல்றேன் … உன்னை கட்டாயபடுத்தல ஆனா என் காதல் நிஜம் நான் நிஜம் i am in love with you…. I love you …..” என்று அவன் முடிக்கவும் அவள் கண்கள் கலங்கி இமை தாண்டிய நீர்மணிகள் கன்னத்தில் உருண்டு மார்ப்பை தொட்டது.

திரும்பி நின்றிருந்த உத்ராவின் விழிநீரை கவனிக்காமல் வாசலில் இருந்து உள்ளே வந்த கவி “ஹோய் உதிமா வந்துட்டியா நீ கிளம்பிட்டேன்னு சாரு அண்ணா சொன்னாங்க” என்றவள் இருவரின் அதிர்ந்த நிலையையும் பார்த்து “என்னடா ஏதோ ஏலியனை பார்த்த மாதிரி அவளை பாக்குற!!! முன்ன பின்ன பொண்ணுங்கள பாத்து இருக்கியா இல்லையா??” என்று நக்கலாக கேட்டவள் “உதிமா உன்னோட திங்ஸ் ஏதோ விட்டுட்டு வந்துட்டேன்னு சொன்னல எடுத்துட்டியா” என்றவள் சோஃபாவில் அமர்ந்து “என்னடா தடிமாடு. அம்மா இன்னும் வரலையா??? அக்கா பாப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா??? சரி நீ இன்னும் என்னடா இந்த கோலத்துல இருக்க போ… போ… எருமை போய் குளி இங்க வரையும் நாறுது” என்று மூக்கை மூடி அவனை வம்பு இழுக்க

சற்று சகஜ நிலைக்கு திரும்பிய கோபி “போடி அராத்து” என்று அதை சிரித்து மழுப்பி விட சிறிது நேரம் அவனை வம்பிழுத்தவள் “சரி சிரி போய் சீக்கிரம் கிளம்பி வாடா. வெளியே போறோம் சித்து தியா கல்யாணம் அண்ட் லவ் ஓகே ஆகிடுச்சில அதனால அவன் டீரிட் இன்னைக்கு காலையிலையே வயிறை காலி பண்ணிக்கோ அவனை நல்லா வைச்சி செய்யனும்” என்றாள் கவி.

எதிலும் சுரத்தை இல்லாமல் இருந்தவன் “எனக்கு வேலை இருக்கு அரவேக்காடு. நீங்க போங்க நான் வரலை இன்னொரு நாள் பாக்கலாம்” என்றிட

“டேய் ஓவரா பண்ற என்ன வேலை இருக்கு இந்த சன்டே அதுவுமா எல்லோரும் போறோம் நீயூம் தான் வா” என்றிட

“என்ன வேலையா ஆஹ்… மாவு அரைக்கிர வேலை டீ . இன்னைக்கு இல்லன்னா என்ன இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என்னு கோபி கூற

“நீ அரைச்ச வரையும் போதும் கிளம்பு” என்றிட அவனையும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சென்றாள் பார்கவி.

இங்கோ தியாவை அழைத்துச் வரும் அரும்பணியை செய்து கொண்டு இருந்தான் சித்து ‘அவன் அவன் ஜோடியை கூப்பிட்டு வர்றத்துக்குள்ள நமக்கு நாக்கு தள்ளுதே’.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி56
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN