காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 58

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு தனியே சாப்பிட மனதில்லாமல் சோஃபாவில் அமர்ந்திருந்த உத்ரா வாயில் புறமே பார்வையை பதித்து அண்ணனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.... கண்கள் தான் வாசலை பார்த்திருந்தது மனமோ இன்னும் கோபி காதலை சொல்லிய நிகழ்விலேயே சுழன்று கொண்டு இருந்தது.

அவன் காதலை கூறி இன்றோடு ஒரு வாரம் கடந்த நிலையிலும் உத்ராவினால் அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தாள்.

அவளுக்கு கோபியினை சந்தித்த நாட்களில் அவன் மேல் பெரிதாய் விருப்போ, வெறுப்போ என்று எதுவும் இருந்தது இல்லை... ஆனால் அவனுடன் தங்கி இருந்த அந்த ஒருவாரத்தில் ஓரளவு கோபியின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவனுடைய சுபாவம் சிரிப்பு கலகலப்பு நண்பர்களுக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவம் என அத்தனையும் பிடித்து இருந்தது. கோபியை நல்ல நண்பன் என்பதை தாண்டி அவனை பற்றி எதுவும் அவள் யோசித்தது இல்லை....

பிடித்தம் என்பதை காதல் என்று முடிவு செய்து விட முடியாதே... ஏற்கனவே ஒருவனை நம்பி தானும் ஏமாந்தது இல்லாமல் தன் குடும்பத்தையும் அதற்கு பலி கொடுத்து விட்ட பிறகு அவளுக்கு 'காதல்' என்ற வார்த்தையே வேப்பங்காயாய் கசந்தது.

உத்ரா, அவனுக்கும் தனக்கும் நடந்த சம்பாஷனைகளை மனதில் அசைப்போட்டபடி அமர்ந்திருந்தாள். எந்த இடத்திலாவது தான் எல்லை மீறி நடந்துக்கொண்டோமா??? கோபியின் மனதில் தன் மீது காதல் என்ற உணர்வு வர எது காரணமாய் அமைந்தது!.... தான் பேசிய பேச்சா இல்லை தன் செயலா! என்று யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம். தலையை கைகளில் தாங்கியபடி குனிந்து அமர்ந்திருந்தவள் சாருகேஷின் காரின் சத்தம் கேட்க வாசலில் கண்கள் நிலைக்க அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றாள்.

வெகு நேரம் முழித்து இருந்த தங்கையை பார்த்தவன் "இன்னும் என்னடா தூங்காம இருக்க??" என்று அவள் அருகில் வந்து தங்கையின் தலையில் கை வைக்க சோர்ந்து வந்த சாருகேஷின் முகத்தை பார்த்த வண்ணம்

"என்ன அண்ணா இவ்வளவு லேட்டா வர்ற!! நேரா நேரத்துக்கு சாப்பிடாம உடம்பையும் கெடுத்துக்குற. முகம் வேற எவ்வளவு வாடி போயிருக்கு. உன்னை பார்க்கவே அவ்வளவு டையார்டா இருக்கு இன்னும் எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுற??" என்றாள் அக்கரையாக.

தங்கை இறந்ததாய் நினைத்து தாய் தகப்பனை இழந்ததிலிருந்து இது போன்ற அக்கரையான சொல்லை கேட்டிறாதவன் கண்கள் குளமாக புறம் கை கொண்டு அதை அவளுக்கு தெரியாமல் துடைத்தவன், "கொஞ்சம் வேலை இருந்ததுடா சாரி" என்று கூறியவன் "நீ ஏன் மா இவ்வளவு நேரம் தூங்காம இருக்க.... முதல்ல நீ சாப்பிட்டியா??" என்றான் தங்கையை பார்த்து.

"உங்கள விட்டுட்டு சாப்புறத.... காலை தான் நேரமா கிளம்பிடுறீங்க. மதியம் எப்போதாவது ஒரு முறை தான் வீட்டுக்கு வர்றீங்க... இரத்திரியாவது ஒன்னா சாப்பிடலாம்னு பார்த்தேன்... இருக்கறது ரெண்டு பேரு. எவ்வளவு நேரம் தான் வாசலை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கிறது. சீக்கிரம் வரலாம்ல... இதுல தனியா வேற சாப்பிடனுமா...!!!" என்று சிணுங்கி வேறு புறம் திரும்ப.

யாரும் இல்லாமல் இருப்பதாய் கூறிய தங்கையின் சொற்கள் அவனை சுட அவளை தன் புறம் திருப்பி "ஓகே ஓகே சாரி டா சாரி. இதுதான் லாஸ்ட் டைம். இனி இதுபோல லேட்டா வரமாட்டேன் டா" என்று தான் காதுமடலை பிடித்து மன்னிப்பு வேண்ட அவன் காதுகளில் இருந்து கைகளை பிரித்து விட்டவள் "இது எல்லாம் வேணாம். ஒழுங்க வீட்டுக்கு சீக்கிரம் வாங்க ணா அது போதும்" என்றவள் "உங்க முகத்துல பசி தெரியுது வாங்க சாப்பிடலாம்" என்று சாப்பாடு மேசைக்கு அழைத்து சென்றாள்.

அண்ணனுக்கும் தனக்குமான உணவினை பறிமாறியவள் தானும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க "ஏன் அண்ணா நாளைக்கு மத்த வேலைய பார்க்க கூடாதா அவ்வளவு அவசரமா முடிக்கிற வேலையா??" என்று சாதரணம் போல் பேச்சை துவங்க.

"மத்த எல்லா வேலையையும் விட இது ரொம்ப முக்கியமான வேலை தான்" என்று பீடியுடன் கூறியவனின் முகம் மலர்ந்து பிரகாசமாய் இருக்க ஆராய்ச்சியுடனே

அவனை பார்த்தவள் "அப்படி என்ன முக்கியமான வேலை இராத்திரி பகல் பாக்கமா செய்ற வேலை!!!" என்று அலுப்பாக அவனை கேட்க.

"ஒரு அழகான ராஜகுமாரனை தேடி கண்டுபிடிக்கிற வேலைதான் மும்மரமா பார்த்துட்டு இருக்கேன்" என்று கூறினான்

"ராஜகுமாரனா!!!" என்று புரியாமல் கேட்டவள் அவன் கூறிய அர்த்தத்தை கிரகிக்காமலேயே "எந்த நாட்டு ராஜகுமாரனை தேடுறீங்க??" என்று கேள்வியை சிரிப்புடன் கேட்க.

"தி க்ரேட் சாருகேஷோட தங்கை ராஜகுமாரி உத்ராவுக்கு தான் ஒரு அழகான ராஜகுமாரனை தேடிதான் சுத்திட்டு இருக்கேன்" என்று கூறியதும் கண்கள் இரண்டும் நிலைகுத்தியது போல் வெறிக்க கைகள் அதன் இயக்கத்தல நிறுத்தி முகத்தில் அதிர்ச்சியுடன் உறைந்து போய்விட்டாள்.

சாப்பிட்டுக்கொண்டு இருந்தவன் அவளது சத்தம் வராது போகவே உத்ராவை பார்க்க சிலையாய் அமர்ந்து இருந்தவளை தட்டி அழைத்தான்.

அவளின் அதிர்வு வெட்கம் என்று உருவகப்படுத்திக் கொண்ட சாருகேஷ் "என்ன டா ??? ஒன்னும் சொல்லாம இருக்க???" என்று மகிழ்வுடனே அவளை கேட்க.

அவன் அழைக்கவும் தன்னிலை பெற்ற உத்ரா, "கல்யாணமா யாருக்கு??" என்றாள் சட்டென.

'இது என்ன கேள்வி!!!" என்பதை போல் உத்ராவை பார்த்தவன் "யாருக்குனா...... உனக்குதான் உனக்குதான் கல்யாணம்" என்றான்.

அய்யோ கடவுளே என்று உள்ளுக்குள் அலுத்தவள் "எனக்கு கல்யாணமா என்ன அண்ணா ஜோக் பண்றீங்க. பட் சிரிக்கத்தான் முடியல" என்றவள் "ப்ளிஸ் ண்ணா நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பல. உன் கூடவே இப்படியே இங்கேயே இருந்துடுறேன்" என்று கூறிவிட.

"உன்னை யாரு வெளியே அனுப்ப போறேன்னு சொன்னா!!! உனக்கு கல்யாணம் ஆனாலும் இங்கேயே தான் இருக்கனும் அப்படி சொல்லி தான் மாப்பிள்ளையை தேட சொல்லி இருக்கேன்" என்றவன் தன் மொபைலில் இருந்து சில ஃபோட்டோக்களை எடுத்து அவளின் முன் காட்டி "இதை பாரு" என்றான்.

அவன் காட்டியதை பார்க்க விருப்பம் இல்லாதவள் அவன் கைகளை கீழே இறக்கியவள் "எனக்கு காதல், கல்யாணம் இதுல எல்லாம் விருப்பமே இல்ல. அதுவும் இந்த நிலையில கல்யாணம் பண்ணிக்க துளியும் இஷ்டம் இல்லை" என்று கூற பாதி சாப்பாட்டிலிருந்து எழுந்துக்கொள்ள.

அவளின் கை பிடித்து நிறுத்திய சாருகேஷ் "என்னடா….. இப்படி உட்காரு.... இது என்ன பாதி சாப்பாட்டுல எழுந்துக்கறது??" என்று அவளை கடிந்துக்கொண்டவன் அவளுக்கு ஊட்டியவாறே "ஏன் விருப்பமில்லை. உனக்கு ஒன்னும் இல்லடா நீ நல்லா இருக்க" என்று அவளின் தலையை வருடி சமாதானம் செய்து உணவை உண்ண வைக்க.

அவன் கைகளை பிடித்து அதில் தரையை கவிழ்த்தவள் "இல்ல ண்ணா. எனக்கு எதுவும் புடிக்கல எதுலயும் விருப்பம் இல்ல.... உன்னை ஞாபகம் இல்லை என்னை சுத்தி இருக்கவங்கள ஞாபகம் இல்ல…. நான் யாருன்னு தெரியலை….நீங்க எல்லாம் சொல்றத நம்புறேன். அப்படியே கூப்பிடுறேன் தவிற நடந்தது எதுவும் நினைவு இல்லை இப்படி நானே நானா இல்லாம இருக்கேன். இப்போ இந்த கல்யாணம் எனக்கு இது தேவையா அவசியமா???" என்று மனதில் இருப்பதை உணர்ச்சி பிழம்பாக கொட்ட.

தங்கையின் பிரச்சனை புரிய அவளுக்கு உணர்த்தி விடும் நோக்கத்தில் அவள் கைகளை அழுத்தி அமைதி படுத்தியவன் கண்களில் வழிந்த நீரை துடைத்து "இல்லடா உனக்கு ஒன்னும் இல்ல. நல்லாதான் இருக்க இது பெரிய பிரச்சனை இல்லடா. இப்ப இல்லனாலும் உனக்கு எங்க ஞாபகம் கண்டிப்பா வரும். அதுக்கு இந்த கல்யாணம் ஒரு தடையா இருக்கனுமா??" என்று கேட்டிட.

"வேணாம் அண்ணா. எனக்கு கல்யாணம் வேணாம் ப்ளிஸ் என்னை கம்பல் பண்ணாதீங்க. என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்று திடமாக உத்ரா மறுத்துவிட்டாள்.

"இங்க பாரு... என்னை பாருடா..ஶ்ரீ" என்று தன் முகம் பார்க்க வைத்தவன் "உத்ராமா நான் உனக்கு நல்லதை மட்டும் தான் பண்ணுவேன். என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா??இல்லை....." என்றவனை இறைஞ்சல் கண்களோடு பார்த்தவளை "சரி உனக்கும் நம்பிக்கை வரனும்ல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு. நாளைக்கு ஒரு இடத்துக்கு போறோம் அதுக்கப்புறம் நீ நம்புவ. தயாரா இரு" என்றவன் கை கழுவிக்கொண்டு எழுந்து அவளையும் எழுப்பி விட்டவன் "வா தூங்கு" என்று உத்ராவை அறைக்கு அனுப்பிவிட்டு தானும் அறைக்கு சென்று படுத்துவிட்டான்.

காலை பத்துமணி அளவில் கோபியின் வீட்டு காலிங்பெல் அலறிக்கொண்டிருந்தது

காதல் அணுக்கள்

உடம்பில் எத்தனை

நியூட்ரான் எலெக்ட்ரான் – உன்

நீல கண்ணில் மொத்தம் எத்தனை

உன்னை நினைத்தால்

திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை

என்று உத்ராவின் நினைவில் பாடியபடி தலை வாரிக் கொண்டு இருந்தவன் காலிங் பெல்லின் சத்தம் கேட்கவும் "ப்ச்" என்று சலிப்புடனே சீப்பை கண்ணாடி மேசையில் எரிச்சலுடன் எரிந்தவன் "எவன்டா அது ஒருத்தனை லவ் சாங் பாடி ஒழுங்கா தலையக் கூட வார விடாம இம்சை பண்றது!!!" என்று பேசிக்கொண்டே கதவை திறக்க ஸ்டைலாக சாவியை சுழற்றியபடி கோபிக்காக காத்திருந்த சித்தார்த் அவனை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான்.

'அய்யோ இவன் எங்கடா இங்க வந்தான்... மனசுல பேசறது கூட படம் புடிச்சா மாதிரி சொல்வானே!!... நம்மல கண்டுபுடிச்சிட்டான்னா என்ன பண்றது... நம்ம ஃபேஸ்கட்டு வேற அப்படியே காட்டுமே…. நம்ம சீரியஸா இருக்கா மாதிரி காமிஞ்சிக்குவோம்… பயபுள்ள நம்பிடுவான்' என்று மனதில் நினைத்தவன் அவன் பின்னாடியே வால் பிடித்த குரங்காய் சென்று நின்றுகொள்ள.

சாதாரணமாக தான் நண்பனை பார்க்க வந்தான் சித்தார்த். தவளை தன் வாயலையே கெடுவது போல் அவனுக்கு அவனே காட்டி கொடுக்க ஆரம்பித்தான் கோபி. பின்னாலேயே அனுமார் வால் பிடித்து வந்த நண்பனை விசித்திரமான பார்வையால் பார்த்தவன் ' என்னடா இது பேய் முழி முழிக்கிறான் இவன் முழியே சரியில்லையே!!! என்னமோ நம்மலுக்கு தெரியாம ஏதாவது பண்றானா!!! சம்திங் ராங் இந்த அனுமாரு ஏதோ பண்ணுது' என்று அவனை நோட்டம் விட்டவன்

"அப்புறம் என்ன மாப்ள எங்கேயோ வெளியே கிளம்புறா மாதிரி இருக்கு???" என்று லேசாய் தூண்டிலை போட.

'ஆஹா.... நம்ம வாயாலையே உண்மைய வாங்கிடுவான் போல இருக்கே கரைக்கடா பேசனுமே இவன் லெவலுக்கு ஏமாத்துறது கஷ்டம் ஆச்சே!!! என்று பயம் இருந்தாலும் நான் யாரு. சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்குமா!!!!' என்று அவனுக்கு மனதிற்குள்ளேயே கவுண்டர் கொடுத்து நம்பிக்கையுடன் தெளிவாய் பொய் சொல்ல தயாரானான் கோபி "உன்ன பாக்கலாம்னு தான் மச்சி கிளம்பினேன். நீயே வந்துட்ட வீட்டுல அம்மா அப்பா எல்லாம் சவுக்கியமா?? நீ எப்படி இருக்க???" என்று கேட்க சித்துவின் பார்வை மாற்றம் அடைவதை பார்க்கவும் 'அய்யய்யோ உளறுரோமே அடேய் கோபி கோபி பிளேட்டை மாத்துடா' என்று தனக்கு தானே பேசி தன்னை நிலைபடுத்தியவன் 'அவகிட்ட லவ்வ சொல்லி ஒரு வாரம் ஆகுது இன்னைக்காவது அவ முகத்தை தூரமா இருந்தாவது பாக்கலாம்னு கிளம்பினா இப்போ வந்து லந்து பண்றானே ஆண்டவா' என்று கடவுளுக்கு கோரிக்கை வைத்தவன் இவனை டைவர்ட் பண்ணுமுன்னா தியா பக்கிய நியாபகம் படுத்துவோம் என்று தியாவின் ஞாபகம் வர "சரி மாப்ள அந்த ராட்சசி உன்னை எப்படி தனியா விட்டா எப்பவும் உன்னை தொத்திக்கிட்டே அலையும் எங்காயவது கழட்டி விட்டுட்டியா !!!" என்று பேச்சினை தியாவின் புறம் திசைதிருப்பி அவனின் எண்ணத்தை கலைக்க முயற்சி செய்தான்.

அவனையே பார்த்து இருந்த சித்து 'நேத்துக்கூட நல்லா பேசினா மாதிரி இருந்துச்சி இப்போ என்ன ஆச்சி இவனுக்கு இப்படி உளர்றான்!!!.. தீடிர்னு அப்பா அம்மாவா எல்லாம் கேங்குறான் சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசுறான்... ஒருவேல பைத்தியம் புடிச்சிடுச்சோ இல்ல ஏதாவது பேய கிய பார்த்து பயந்துட்டானா!!!" என்று சித்துவின் எண்ணவோட்டம் கோபியின் மனநிலையை பற்றி ஆராய்ச்சியாய் ஓடியது...

தன்னை பார்வையால் துளைப்மதை உணர்ந்த கோபி "என்ன மச்சி அப்படி பாக்குற??" என்று தன்னை பார்த்துக்கொண்டே கேட்டவன் "அப்புறம் மச்சி டீ சாப்புடுறியா இல்ல காபி சாப்புடுறியா???" என்று உபசரிப்பாய் கேட்க 'இவன் நம்மள கேட்டு செய்றவன் இல்லையே நம்மலே இவனை ஸ்டாவ்கிட்ட தள்ளி விட்டாதான் போவான் இன்னைக்கு என்ன ஏகபோகமா உபசரிக்கறானே என்று இவ்வளவு நேரம் சந்தேகம் கொண்டு பார்த்தவன். இப்போது முடிவே செய்து விட்டான். கோபி தன்னிடம் ஏதோ மறைக்க முயற்சிக்கிறான் என்று

சட்டென எழுந்து கோபியின் பக்கம் வந்த சித்தார்த் அவன் எதிர்பார்க்காத நேரம் தோள்களில் கரம் போட்டு கழுத்தை வளைத்து இடிக்கிப்பிடி போட்டு "மரியாதையா உண்மையை சொல்லு ஏதாவது மறைக்கிரியா என் கிட்ட??" என்று கேட்க "கடவுளே உன் கிட்டயா??? அதுவும் நானா???" என்று வியப்பை காட்டி அவனிடம் இருந்து தப்பிக்க போராடியவன் "டேய் அய்யா சாமி தலை கலையுது விடுடா" என்று கெஞ்ச கெஞ்ச அவன் தலையில் கையை வைத்து கலைத்து விட்டான் சித்தார்த்

சித்து தலையை கலைத்துவிட்டதும் பொங்கி எழுந்த கோபி அவனிடம் இருந்து போராடி தப்பியதும் தலையை கையைக்கொண்டு சரிபடுத்தியபடியே அவனை முறைத்தபடி வாயை மூடி முனங்கிக்கொண்டே அவனிடம் இருந்து ஒரு இரண்டு அடி தள்ளி நின்றுக்கொண்டான்.

சித்து "டேய் மாப்ள" என்று பாசமாய் அழைத்துக்கொண்டு கோபியின் அருகில் செல்லவும் பின்னால் அடி வைத்து சோஃபாவை சுற்றி ஓடியவன் "வேணா வேணா மாப்ள" என்று சோபாவை பிடித்தபடி அவனிடம் பேச.

"நீயா உண்மைய சொல்ற இல்ல நான் சொல்ல வைப்பேன்" என்று எச்சரிக்கையை விடுத்த சித்து யோசனையாய் கையை தாடையில் வைத்து தேய்த்துக்கொண்டே "உன் மூஞ்சி ஜீரோ வாட்ஸ் பல்பு மாதிரி சொங்கி போயிருக்கும் ஆனா இன்னைக்கு LED லைட்டு போல நல்லா பிரைட்டா இருக்கே காரணம் என்ன???" என்று எக்கி அவன் சட்டையை தொட போக.

அவனிடம் இருந்து இலாவகமாக தப்பிய கோபி இஸ்திரி செய்த சட்டையை அவன் கைபட்டதால் கசங்கி விட்டதோ என்று தேய்த்து விட்டுக்கொணடு "இது எல்லாமா டா உத்து பார்ப்ப!!!. ஏண்டா சண்டாளா. மனுசன படுத்தர உன்னையெல்லாம் ஃப்ரெண்டுன்னு நினைச்சிதானே உள்ள விட்டேன் தானம் கொடுத்த மாட்டையே பல்ல புடிச்சி பதம் பாக்குறா மாதிரி இப்படி என்னைய சோஃபாவை சுத்தி ஓட விடுறதும் சட்டைய கசங்க வைக்கரதும் தலைமுடிய கலைக்குறதுமா வஞ்சைனையே இல்லாம என்னைய அலைய விடுறியே உனக்கு நல்லா இருக்கா. அந்த தெய்வத்துக்கு அடுக்குமா இது!!!" என்று புலம்பலுடன் தெய்வத்துக்கும் அவசர செய்தியை அனுப்பி விட.

"அது எல்லாம் அடுக்கும் இப்படி வா..." என்று அவனை அழைக்க, "முடியாது" என்று தலையை ஆட்டி மறுத்தவன் மொபைல் டிபாயின் மேல் ஒலி எழுப்ப மொபைலையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு அதை எடுக்க குனிய, கோபிக்கு முன்னே ஒடி மொபைலை எடுத்து கையில் வைத்து ஆட்டிய சித்து "ஒழுங்கா இங்க வந்து நிக்கற. இல்ல டொன்டடொன்" என்று ராகத்தோட கீழே போடுவது போல் செல்லை கீழ் நோக்கி இறக்க.

"மச்சான்...... ப்ளீஸ் டா. என்னை விட்டுடுடா" என்று அருகில் அந்த மொபைலை வாங்க முயற்சி செய்ய அது அடித்து அடித்து ஓய்ந்து போய் விட "அட நின்னுடுச்சி" என்று அதை முன்னும் பின்னும் ஆட்டியவன் "வேணுமா வேண்டாமா!!!" என்று அவனுக்கு ஆட்டம் காட்ட பொருத்து பொருத்து பார்த்தவன் பொங்கி எழுந்து "மச்சான்...." என்று கோபம் கொண்டு தீ ஜ்வாலையாக கத்த சித்து மெதுவாக ஸ்லோ மோஷனில் திரும்பி 'என்ன!!' என்பது போல் பார்க்க உடனே அணைந்த கொள்ளிகட்டையாய் மாறி இருந்தான் கோபி. எச்சிலை தெண்டையில் விழுங்கி இருந்தவன் "சொல்றேன் எல்லா கருமத்தையும் சொல்றேன். ஆனா சொன்ன பிறகு சிரிக்கப்பிடாது" என்று கண்டிஷனோடு பார்க்க.

கண்களை மூடி தலையை ஆட்டிய சித்து "சொல்லு சொல்லு. உன்னை இப்படி அப்போவென மாற்றிய அந்த காந்த கண்ணாழகி யார்???" என்று கிண்டலுடன் சித்து கேட்க

எப்புடி மச்சா லவ்னு கரெக்டா தண்டுபிடிச்ச என்று கோபி ஆச்சரியத்தை முகத்தில் தேக்கி கேட்க

உன் பின்னாடி ஒரு ஒளி வட்டம் தெரியுது அதுல கண்டுபிடிச்சேன் என்று கிண்டலுடன் கூறியவன் ஸ்கூல்ல முட்டை வாங்கினதுல இருந்து வது கிட்ட கேலவமா திட்டு வாங்குற வரை எல்லாத்தையும் மறைக்காம சொல்றவன் மறைக்கிற அதுலையும் மடிப்பு கலையாத சட்டை தலைமுடிய கலைச்சா கோவம் வருது இதையெல்லாம் வைச்சி தான் சென்னேன் நீ லவ்வுல குதிச்சிட்டனு என்று சித்து கூறியதும்

கோபி என்றால் வாய்கொழுப்பு கேலி கிண்டல் அறிவு ஜீவி மூளை உறுகி வழிந்து ஊற்றும் ஒரு சிந்தனை களஞ்சியம் என்று அடுக்கடுக்கான பெயருக்கு சொந்தக்காரர் என்பது போய் வெட்கம் கொண்டும் கால் கட்டைவிரலால் டைல்ஸ் பதித்த தரையில் மண்ணை தோண்டும் அபூர்வ காதலனாய் மாறி போனான்.

"அது வந்து... அது வந்து... அதான் பாதி கிணறு வந்துட்டியே மீதியும் தாண்டு ராமைய்யா" என்று குரங்காட்டி வித்தைகாரன் போல் சொல்ல அவனை முறைத்த கோபி "சரி சரி உன் நெற்றி கண்ணை அப்புறம் திறக்கலாம் அந்த துரதிர்ஷ்டசாலி யாருப்பா அவங்க முகத்தை கடைசியா ஒரு முறை சிரிக்க சொல்லி பாத்துக்குறேன்" என்று கூற.

தன் மொபைல் கேலரியில் சேவ் செய்து வைத்திருந்த உத்ராவின் புகைப்படத்தை எடுத்து காட்டியதும் வாயடைத்து நின்ற சித்தார்த் "உத்ராவா!!!!!!" என்று சத்தம் வராமல் வாயசைத்து கேட்கவும் "ம்" என்று தலையை மேலும் கீழமாய் ஆட்டிய கோபி வெட்கத்தில் விரல் நகத்தினை கடித்து பிய்க்க.

"என்... என்னடா இது" என்று அவன் கோலத்தை பார்த்து செய்கையால் கேட்டு "இதுக்கு பேர் தான் வெட்கமா???" என்றதும் அவன் முதுகிலேயே ஒன்று வைத்த கோபி "உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியாடா???" என்று வடிவேலுவைப் போல் பேச "சரி சரி ரொம்ப கோச்சிக்காத. நான் கூட இந்த பொண்ணை சும்மா சைட் அடிக்கத்தான் பாக்கறியோன்னு நினைச்சேன்" என்று உண்மையை கூற.

"நான் கூட இது வெறும் அட்ராக்ஷன்னு தான்டா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எப்படி என் மனசுக்குள்ள வந்தான்னு தெரியல அவளை பிரிந்து இருந்த அந்த ஒரு நாள் எனக்கு எல்லாத்தையும் உணர வைச்சிடுச்சி" என்று தன் விளையாட்டுதனத்தை அத்தனையும் மூட்டை கட்டி வைத்தவன் தீவிரமாக பேச அவன் குரலில் உள்ள பேதமையையும் உத்ரா மேல் அவன் வைத்த காதலையயும் உணர்ந்தவன் நண்பனை அணைத்து விடுவித்து "உனக்கு அவ பாஸ்ட் லைப் பத்தி......!!!!".

"ப்ச் அவளுக்கே ஞாபகம் இல்லாத ஒன்னை பத்தி நாம ஏன் தோண்டி துறவி பாக்கனும். இப்போ அவளுக்கு எந்த லவ் அஃபேரும் இல்ல. சாதாரணமா இருக்கா. இது அப்படியே இருக்கட்டுமே" என்றதும்.

"ஒரு வேலை ஞாபகம் வந்துட்டா!!!"

"என்னோட வாழும் நாட்கள்ல என் காதலால் அவ மனசை மாத்த முடியும்னு நம்புறேன் டா. எதுக்குமே ஒரு பாஸிட்டிவ் தாட்ஸ் வேணும் தானே. அவளுக்கு ஞாபகம் வந்தாலும் என்னை விட்டு போகாத மாதிரி என்னால அவளை பாத்துக்க முடியும்".

சித்து "ஏன்டா சீயான் விக்ரம் மாதிரி கடத்தி வைச்சி காதல் செய்ய போறியா??" என்று சிரியஸ் மோடை காமெடி மோடாக மாற்ற.

அதற்கு கோபியோ "கிட்டதட்ட அப்படிதான் வைச்சிக்கோயேன்" என்று புதிராய் கூறினாலும் அவன் ஆழ் மனதுக்குள் உத்ராவை தன் மனைவியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டான். அவளை தொந்தரவு செய்ய கூடாது என்று தான் நினைத்து இருந்தான் ஆனால் அவன் போட்ட வேலியை அவனே தாண்டி தேவி உத்ராவின் தரிசனத்தை காண செல்ல தயாராகி இருந்தான்.

சித்து "இப்போ எங்க?? உத்ராவ பாக்கதான் போறியா??? அதான் அவசராமா கிளம்பிட்டு இருந்தியா?"

இரு பாக்கட்டிலும் கையை விட்ட படி இருந்த கோபி "ம்" என்று அமோதிப்பாய் தலையை குனிந்து சிரிப்புடன் உண்மையை ஒத்துக்கொள்ள.

"எங்க??? வீட்டுக்கா?? ஆனாலும் உனக்கு செம தில்லு தாண்டா???"

"தூர இருந்தாச்சி அவள பாக்கனும்னு மனசு பிராண்டுது டா மாப்ள" என்றிட.

"அது சரி" என்று சிரித்தபடியே தலையை ஆட்டியவன் "ஆல் தி பெஸ்ட் மச்சி" என்று நண்பனின் காதலுக்கு ஊக்கம் தந்து வெளியே கிளம்புவதாக கூற.

"எங்க எஸ் ஆகுற இன்னைக்கு ப்ளானே உன்னை வைச்சி தான் பண்ணபோறேன் மாப்ள.... வந்து சிக்கிட்டல என் ஆள பாக்க ஹெல்ப் பண்ணிட்டு போ..." என்றிட.

"டேய் நான் எப்படி டா!!! அவன் அண்ணன் வேற அர்ணாலட் மாதிரி உடம்பை ஏத்தி வைச்சி ஆம்சை காட்டி பயம்புறுத்துவானே" என்று பயந்தவன் போல் பம்ம.

"நடிக்காதடா வாடா" என்று அவனை அடக்கிய கோபியும் சித்துவும் இரு சக்கர வாகனத்தில் பயணத்தை மேற்க்கொண்டனர்.

*************

சாருகேஷ் "டாக்டர் நிர்மலை பார்க்கனும்" என்றதும்

"யா ஷ்வர் சார்" என்று அந்த ரிசப்ஷன் பெண் கூறியதும் ஒரு சின்ன சிரிப்பை சிந்தியவன் அவள் கூறப்போகும் செய்திக்காக காத்திருந்தான். வெகுநேரம் தாமதப்படுத்தாமல் சில நாழிகைகளிலையே அவனை அழைத்து போக சொன்னாள் அந்த பெண்.

சிறு பதட்டத்துடன் அமர்ந்திருந்த உத்ராவின் கையை பிடித்து எழுப்பி "வா உதி. நிர்மல் கிட்ட பேசிட்டு வந்துடுவோம்" என்று அழைத்துக்கொண்டு சென்றான் சாருகேஷ்.

போகும் வழியில் அவளை குழந்தையை அழைத்து செல்வது போல் கைப்பிடித்து அழைத்து செல்லும் போது அவளின் கை சில்லிட்டு சிறு பதட்டம் முகத்தில் தெரிய "என்னடா" என்று கேட்டான் சாருகேஷ்.

"நத்திங் அண்ணா. ஏதோ சொல்ல முடியாத ஒரு அழுத்தம். அது என்னன்னு என்னால டிஸ்கிரைப் பண்ண முடியல" என்று கூறி அவனை பார்த்தாள்.

உத்ராவை பார்த்தவன் "பயமா இருக்கா டா??" என்று கேட்டான் அக்கரையாக.

"என்னன்னு தெரியல ண்ணா. தயா அப்பாக்கூட ஹாஸ்பிட்டல் போயிருக்கேன். எல்லார்கிட்டயும் நல்லா பேசுவேன். எதுவும் வித்தியாசமா தெரிஞ்சது இல்லை... ஆனா இந்த ஆஸ்பிட்டல், இங்க இருக்க அட்மாஸ்பியர் என்னை பயப்பட வைக்குது. என்னோட ஆக்டிவிடீஸ் முன்னுக்கு பின் முரனா இருக்கு. மனசுல ஏதோ தப்பா படுது" என்றிட

உத்ராவின் தலையை வருடி அவளின் பயத்தை குறைக்க முயன்றவன் அவளின் தோளில் கை வைத்து "சில் டா உனக்கு ஒன்னும் இல்ல. இதை தயா சாரோட ஹாஸ்பிட்டல்னு நினைச்சிக்க. இங்க நாம பாக்கபோறது தேவா தம்பி நிர்மலை தான்… அவன் தான் இந்த ஹாஸ்பிட்டலோட ஓனர் ஓகே வா....... இது நார்மல் செக்கப் தான் நான் ஏற்கனவே வந்து டிஸ்கஸ் பண்ணி தான் உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணேன். அதனால பேனிக் ஆக எதுவும் இல்லை உன் கூடவே எப்பவும் நான் இருப்பேன்" என்றதும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவளை நிர்மல் அறைக்கு அழைத்துச் சென்றான்.

கதவை தட்டி உள்ளே வர அனுமதி கேட்டு இருவரும் உள்ளே நுழையவும் உத்ராவை பார்த்தவன் ஒரு நிமிடம் திடுக்கிட்டு நின்றவன் அவளுக்கு சுயநினைவு இல்லை என்பது நினைவில் வந்து, உடனே முகத்தை தெளிவாக வைத்துக்கெண்டு "வாங்க ண்ணா.. வாங்க" என்று பொதுவாய் அழைத்து அமர வைத்து இருந்தான் நிர்மல்.

அன்று கத்திக்குத்து நடந்த சம்பவத்திற்கு பிறகு நேரில் ஒரு முறை பார்த்து இருந்தாலும் இவ்வளவு அருகில் பார்க்கவும் கொஞ்சம் தடுமாற்றம் வந்தென்னவோ உண்மை தான். ஆனால் அது தேவையற்ற பயம் என்று தெரிய வந்ததிலிருந்து சிறிது சிறிதாக அதிலிருந்து வெளியேறி கொண்டு இருந்தான் நிர்மல்.

நிர்மல் "சொல்லுங்க அண்ணா" என்றதும்.

"நிர்மல், இது என் தங்கை உத்ரா" என்று கூறிய சாருகேஷ் தங்கைக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்து இருந்தான்.

"நிர்மல் இவ பழசையெல்லாம் மனசுல வைச்சிக்கிட்டு கல்யாணமே வேணாம்னு சொல்றா. மெண்டலி நான் ஸ்டேன்டர்டா இல்ல. எனக்கு பழைசு ஞாபகம் வந்துடிச்சினா என்னோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் அப்படின்னு எல்லாத்தையும் போட்டு மண்டைய குழப்பிக்கிறா" என்று தங்கையின் மன அழுத்தத்தை கூற.

"இதுக்கு பதில் நான் சொல்றதை விட டாக்டர் கல்யாணி சொல்லுவாங்க. நான் சொல்ற சில விஷயம் உங்களால ஏத்துக்க கூட முடியாம போகலாம். அவங்க உங்க மனசுல இருக்குற பயத்தையும் அதோட தாக்கத்தையும் குறைக்க உதவி செய்வாங்க" என்று கூறி "ஆனா என்னை பொறுத்த அளவில் ஃபிஸிகலி உங்க குடும்ப வாழ்வுக்கு எந்த வித பங்கமும் இருக்காது" என்று உத்ராவை பார்த்து கூறிய நிர்மல் அவளுக்கு சிறு நம்பிக்கை கொடுத்தான்.

நர்சை வரவழைத்து அவர்களை டாக்டர் கல்யாணியின் அறைக்கு அனுப்பி வைத்தான் நிர்மல்.

"ஹலோ டாக்டர் இவங்க தான் என் சிஸ்டர் உத்ரா" என்று கூறி 'அவளின் ரிப்போர்ட்' என்று சாருகேஷ் கொடுக்க உத்ராவை பார்த்து சின்ன சிரிப்புடன் வாங்கியவர் ஒரு முறை அதை பார்த்து விட்டு "நான் டாக்டர் தயாபரன் சார்கிட்ட பேசிட்டேன். அவருக்கும் இதுல வேண்டாம்னு சொல்ற‌ அளவுக்கு பெருசா எந்த காரணமும் இல்லை" என்று நம்பிக்கையாக பேச ஆரம்பித்தவர் இன்னும் குழப்பத்துடன் இருந்த உத்ராவை பார்த்ததும் மருத்துவர் "இஃப டோன்ட் மைன்ட், நான் உத்ராகிட்ட தனியா பேசனும்" என்று கூறி சாருகேஷை வெளியே அனுப்பிவிட்டு உத்ராவிடம் பேச்சை தொடர்ந்தார்.

"மிஸ் உத்ரா உங்ளுக்கு குழப்பமா இருக்கா??" என்றுதும்.

"தெரியல டாக்டர் கல்யாணம் லவ் இந்த வார்த்தை எல்லாம் கேட்கும் போது ஏதோ மனசுல திக் திக்னு இருக்கும். அதுவும் என் கடந்த காலம் நினைக்கும் போது ரொம்பவே பயமா இருக்கு" என்னு கூறினாள்.

"பயம்னா நீங்க எதை மீன் பண்ணி பயமா இருக்குன்னு சொல்றீங்க!!!"

"அந்த ரீலேஷன்ஷீப் தான் டாக்டர். கணவன் மனைவி அப்படின்னு என்னால அதுல ஃபுல்பில்டா மனசார இருக்க முடியும்னு தோனலை இதுவே என் பயத்துக்கு முக்கிய காரணம். செக்கன்ட் திங் எனக்கு எதுவும் நஞாபகம் இல்லாம இருக்கு. ஒருவேலை எனக்கு பழைய ஞாபகம் வந்து… வந்து..." என்று திக்க.

"யூ மீன் உங்க ஃபர்ஸ்ட் லவ் பத்தியா???" என்றதும் தலையை குனிந்து "ஆம்" என்று தலை ஆட்ட.

"யூ சீ உத்ரா எல்லாருக்கும் இதுபோல நடக்குமான்னு தெரியல இது. ரேர் கேஸ் தான். இதுல ஒன்னு உங்களுக்கு பாசிபல்லிடியா இருக்கு. நடந்த கசப்பான சம்பவம் எல்லாம் மறந்து இருக்கிங்க" என்று சிரித்தவர், "அதுல நீங்க பெருசா பாதிக்கப்பட்டாலும் இப்ப அண்ணான்னு ஒரு உறவு உங்களுக்காக காத்து இருந்து இருக்கு. நீங்க எப்படி வந்தாலும் ஏத்துக்க தயாரா இருந்து இருக்காங்க. சரியா???" என்று அவளிடம் கேள்வியை எழுப்ப.

"ஆம்" என்று தலை ஆட்டினாள்.

"கல்யாணம் ஆனா உங்க கம்ஃபர்ட் சோன் விட்டு வெளியே வந்துடுவிங்களோன்னு பயப்படுறீங்க. அந்த ரீலேஷனுக்கு தேவையான அன்பா இருக்கறது பாசமா பேசுறது புரிதலோட விட்டுக் கொடுக்கறதுன்னு எல்லாம் உங்களாலையும் பண்ண முடியும் உத்ரா…. நீங்களும் எல்லாரும் போல நார்மல் பொண்ணு தான். ஓகே…." என்று அவளுங்கு புரியும்படி கூறியவர்.

"கல்யாணம் பெரிய பாண்டிங். அது உங்களை சீக்கிரம் குணப்படுத்தும். உங்களை புரிஞ்சி நீங்க மட்டுமே வேணும்ன்ற ஒரு ஹஸ்பண்ட் கூட வரலாம் இல்லையா???" என்றதும் அவளுக்கு.கோபியின் முகம் தான் சட்டென கண் முன் ஊசல் ஆடியது.

மருத்துவரின் வார்த்தைகள் அவள் மனதை தெளிய வைத்து இருந்தாலும் அவர் புரிதல் என்ற சொல்லை உதிர்க்கும் தருணம் கோபியின் முகம் மனக்கண்முன் வந்துபோகவும் கைகள் இரண்டும் சில்லிட்டு போக "கேன் ஐ ஹேவ் சம் வாட்டர்!!!" ன்று கேட்டு அவளுக்கு முன்னால் இருந்த தண்ணீர் டம்ப்ளரை குடித்து முடித்து கீழே வைத்து இருந்தாள்….
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 58
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN