காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 59

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புழல் சிறைச்சாலை காலை முதலே சாதாரண கைதிகள் முதல் அரசியல் கைதிகள் வரை அவர்களை காண மக்கள் கூட்டம் நிறைந்து காண முடிந்தது அங்கு, ஆட்டோ ரிக்ஷா முதல் ஆடி காரை வரை வரிசையில் நின்ற வண்ணம் காத்துக்கொண்டு இருந்த அந்த பகுதியில்.

ஆளவந்தானுக்கு கொடுக்கப்பட்ட அறையில் கையில் தினசரியுடன் இருந்தவரிடம், “சார் உங்கள பார்க்க ஒரு பொண்ணு வந்து இருக்காங்க??” என்றார் காவலாளி.

“பொண்ணா...!!!” என்று ஆளவந்தான் கேட்க காவலாளி “ஆம்” என்று தலை அசைத்ததும் ‘வர்ஷாவா தான் இருக்கும்’ என்று நினைத்த ஆளவந்தான் பெண்ணை பார்க்கும் ஆர்வத்தில் வந்திருந்த நபரின் பெயரை கூட விசாரிக்காமல் அவரை காண சென்றார்.

சிறைகாவலர்களின் பாதுகாப்பில் அழைத்து வரப்பட்ட ஆளவந்தான் மகள் என்று ஆசையாய் வர வந்திருந்த நபரை கண்டதும் முகம் முழுவதும் ஃப்யூஸ் போய் பார்வையில் அதிர்ச்சியை பிரதிபலித்து இருந்தார்.

ஆளவந்தான் கண்களில் அதிர்ச்சியை பார்த்தவுடன் “என்ன சார் என்னை பார்த்தவுடனே கோவப்படுவிங்கன்னு நினைச்சேன். இப்படி அசந்து போய் நிக்கறீங்களே??” என்று சிறு நக்கலுடன் கேட்டவர் வேறு யாரும் இல்லை ஊருக்கு தெரியாத ஆளவந்தானின் இரண்டம் மனைவியின் மகள் ஸ்டெல்லா.

“ஹோ.... நான் வந்தது நாலு பேருக்கு தெரிஞ்சிடும்னு கொஞ்சம் நர்வசா இருக்கோ!!!” என்றவளின் கேள்வியில் கேலி இழையோடி இருந்தது.

கையை பின்புறம் கட்டி தன் இயலாமையை கட்டுபடுத்தியவர் “நீ....... நீ ஏன் இங்க வந்த???” என்று தடுமாறிய வார்த்தைகளால் கேட்டதும்.

“நான் அப்பா மகள் உறவை கொண்டாட வரல” என்றாள் நறுக்கென்று.

பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர் “அது எனக்கும் தெரியும் பிறகு எதுக்கு இங்க வந்து இருக்க??” என்று சற்று காட்டமாகவே கேட்டு இருந்தார் அவர் தன் அதிகாரத்தையும் அகங்காரத்தையும் எங்கும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மனம் இன்றி.

சற்று நக்கல் தோனியில் “தெரிஞ்ச வரைக்கும் சந்தோஷம்” என்று எரிந்து விழுந்தவள் “உங்களுக்கு மகளா பொறந்த பாவத்துக்கு என் வாழ்க்கையை தான் ஒன்னும் இல்லாம ஆக்கிட்டிங்க ... அந்த பாவம் தான் உங்கள சுத்துதுன்னு நினைக்கிறேன்...."

"பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைங்க மடியிலன்னு சொல்வாங்க நீங்க செய்த பாவம் எல்லாம் உங்க மக தலையில இறக்கி வைச்சி இருக்கீங்க” என்று பேசவும் சரேலேன தலை நிமிர்ந்த ஆளவந்தான். “இது என்ன புது கதை” என்றார்.

“எல்லாம் பழைய கதைதான் உங்களால முடிஞ்ச என் கதிரோட கதைதான்” என்ற ஸ்டெல்லா “ஒவ்வொத்தருக்கும் ஒரு கணக்கை ஆண்டவன் போட்டு தான் வைச்சி இருக்கான். நீங்களோ இல்லை நானோ எல்லாரையும் ஏமாத்தலாம். ஆனா அந்த ஆண்டவனை ஏமாத்த முடியாது” என்று கூறி அவர் முகம் பார்த்தாள்.

கதிரை இவள் காதலித்தால் என்று தெரிந்த போதே இதயத்தில் ஏதோ முள் தைத்தது போன்ற வலி உணர்ந்தார் ஆளவந்தான். அவர் முகத்தில் மாற்றங்கள் தெரியவும் சற்று அமைதி காத்தவள் ஆளவந்தான் பேசுவதற்கு வாய்ப்பளித்து இருந்தாள்.

“ஸ்டெல்லா நான் பாவம் செய்தவன் தான் கொலைக்கு கூட அஞ்சாதவன் தான். ஆனா வர்ஷா மேல எவ்வளவு பாசம் இருக்கோ அதுல ஒரு சதவீதம் கூட குறையாம உன் மேலயும் இருக்கு.... நீயும் வர்ஷாவும் எனக்கு வேற வேற இல்ல ரெண்டு பேரையும் நான் ஒன்னாதான் பாக்குறேன். நீ..... நீ அவனை” என்று கூறும் போதே

“ஸ்டாப் இட் ஸ்டாப் இட்” என்று கதை பொத்தி அந்த வார்த்தைகளை காதுக்குள் நுழைவதை விரும்பாமல் காதை பொத்தியவள் “நான் இங்க என் உரிமையை நிலை நாட்டவும் வரல உங்க நியாத்தை கேட்டகவும் வரலை. என்னை மாத்துறதையோ இல்லை திருத்துறதையோ விட்டுடுங்க மிஸ்டர் ஆளவந்தான். உங்க பொண்ணோட நிலைமை தான் மோசமா இருக்கு. அவளை ஹால்பிட்டல்ல சேர்த்து இருக்கேன். அதை வர்ஷாக்கு அப்பான்ற முறையில அதை இன்ஃபார்ம் செய்யனும்னு தான் சொல்ல வந்தேன். முதல்ல உங்க மகளை பாருங்க. முடிஞ்சா இப்போவாவது செய்த பாவத்தை உணருங்க போகிறவாழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்” என்றாள்.

தன் உயிராய் நினைக்கும் மகள் மருத்துவ மனையில் இருக்கிறாள் என்றதை கேட்டதும் “வர்ஷாவா.. வார்ஷாக்கு என்ன அவ அவ நல்லாதானே இருக்கா???”

“ம்.... உங்களுக்கு மகளா பிறந்துட்டு எப்படி நல்லா இருக்க முடியும்!!!” என்று விரக்தியாய் கூறி “அவ இப்போ ஹாஸ்பிட்டல இருக்கா” என்று வருத்தக்குரலில் கூறியிருந்தாள்.

“என்னம்மா என்ன ஆச்சி அவளுக்கு???” என்று பதற்றத்துடன் ஆளவந்தான் கேட்க.

“ஓ... ரத்த பாசம் துடிக்குதோ உன் பொண்ணுனா துடிக்குது அடுத்தவன் பெத்து போட்டது உனக்கு எதிர செயல்பட்டா வெட்டி போட தோனுதோ. ஏன்யா அதுவும் உயிர் தானே உன்னை மாதிரி தானே. அந்த தாயும் துடிச்சி இருப்பா அவனை நம்பி எவளாவது ஒருத்தி இருந்து இருப்பால??” என்று கண்களில் இருந்த நீர் கன்னத்தில் உருண்டு ஓட நிறுத்தி நிதானமாக வாள் கொண்டு கூறு போட்டால் தகப்பனின் இதயத்தை.

“ஸ்டெல்லா...” என்று மகளின் பெயரை உச்சரிக்கவும் “தயவு செய்து பாசம் இருக்கா மாதிரி வேஷம் மட்டும் போடாத. அப்படி போட்டு போட்டு எங்க அம்மாவை ஏமாத்தியது வரை போதும். நான் சொல்லவந்ததை சொல்லிட்டு போயிடுறேன். வர்ஷா இப்போ கன்சீவா இருக்கா” என்றதும்.

அதிர்வுடன் அவளை பாரத்தவர் கண்கள் கோவத்தில் சிவந்து “ஸ்டெல்லா அவ உன் உன்” என்று கூற துடித்த வாய் அவளின் கோப பார்வையில் அப்படியே அமைதியாகி விட.

“உங்களால பொறந்தாலும் உங்கள மாதிரி கொடுற மனசு கிடையாது. எல்லாரையும் உங்கள போல ராட்சசனாவே இருப்பான்னு நினைக்காதிங்க” என்று சீறியவள் நடந்ததை கூற தொடங்கினாள்.

இரண்டு நாட்கள் முன் கதிரின் அம்மாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட அதற்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்திந்தனர் ஸ்டெல்லாவும் கதரின் தாயும். அதே நேரம் அழுதபடி அவர்களை கடந்து வர்ஷா வேகமாக செல்லவும் அதை கண்ட ஸ்டெல்லாவின் மனதிற்கு ஏதோ தவறாக பட தங்களுக்காக டோக்கன் எண் வர, மருத்துவரை சந்தித்து அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பியவள் ஆளவந்தான் வீட்டை நோக்கி ஸ்கூட்டியில் பயணமானாள்.

செக்கீயூரிட்டியிடம் வர்ஷாவை பார்க்க வந்ததாகவும் அவளின் கல்லூரி தோழி என்று கூறி அனுமதி வாங்கி உள்ளே சென்றவள் அவளை தேடி குரல் கொடுக்க வேலைகாரம்மா இவளை விசாரிக்கவும் காவலாளியிடம் கூறிய பொய்யையே இவரிடமும் கூறியவள் அவள் அறை எங்கு இருப்பதாக கேட்க

“இருங்க அம்மா பாப்பாவ நான் கூட்டி வாறேன்” என்று சென்றவர் பதட்டத்துடன் கீழே ஓடி வந்தார்.

“என்னமா... ஏன் ஓடிவரிங்க???”

“அம்மா பாப்பா கதவு தட்ட தட்ட துறக்கவே மாட்டங்குது ஏனக்கு பயமா இருக்கு. இந்த நேரத்துக்கு பாப்பா தூங்கவே தூங்காது” என்று கூற.

வெளியே இருந்த செக்கீயூரிட்டியை அழைத்து கதவை உடைக்க வைத்து பார்க்க வாயில் நுரை தள்ளிய நிலையில் வார்ஷா மயங்கி கிடக்கவும் உடனே ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்து மருத்துவமனையில் சேர்த்திருந்தாள் ஸ்டெல்லா.

அழைத்து சென்ற ஒரு நாள் முழவதும் ஐசியூவில் வைத்து வர்ஷாவின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களின் மூலமே அவள் கர்பமாய் இருப்பதும் அதற்காகவே அவள் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததும் தெரியவந்தது என்று கூற ஆளவந்தான் அதிர்ச்சியில் உச்சியில் இருந்தவர் தன் மகளின் உயிருடனும் மானத்துடனும் விளையாடிய அஷ்வினை வெட்டிபோடும் ஆவேசத்துடன் கண்களில் வெறியுடனும் காணப்பட்டார்.

“அம்மா பேசிட்டிங்களா டைம் முடிஞ்சிடுச்சி” என்று ஒரு காவலாளி வர அவரிடம் சொல்லிக்கொள்ள கூட பிடிக்காமல் சட்டென அங்கிருந்து ஸ்டெல்லா கிளம்பிவிட.

ஆளவந்தானுக்குதான் ‘ஒரு நரியை நல்லவன்னு நினைச்சேனே என் பொண்ணையே நாசம் பண்ணிட்டானே’ என்று ஆத்திரம் வர சிறை காவலாளியிடம் இருந்து ஃபோனை வாங்கிக தன் அடியாளை வர சொல்லி ஃபோன் பேசியவர் அஷ்வின் மீது கொலை வெறியில் இருந்தார்.

********

“மாமா”.

“ம்...”

“மாமா....”

“ம்....”

“யோவ் மாமா...”

“என்னடி மனசுல குயிலுன்னு நினைப்பா. அப்போல இருந்து மாமா மாமான்னு கூவிக்கிட்டே இருக்க!!!” என்று சித்தார்த் அவளின் காதை பிடிக்க.

மூக்கை உறுஞ்சியவள் “ம்.... குயிலு இப்படித்தான் கூவுமா” என்று கையை அவன் புறம் கொக்கு போன்று ஆட்ட.

“அம்மா” என்று உதட்டை வளைத்தவன் “உன் குரலுக்கும் குயிலோட குரலுக்கும் வித்தியாசமே தெரியலன்னு சொல்ல வந்தேன்” என்று கிண்டலுடன் கூற.

அவனை தன் அருகில் இருந்து தள்ளி விட்டவள் இரண்டு அடி தூர அமர்ந்து “குயிலு அதும் நானு நம்பிட்டேன். பொய் சொல்றேன்னு பச்சையா தெரியுது. நீ இதுக்கு திட்டியே விட்டு இருக்கலாம்...

என்னை... ஓட்டுறதுல அப்படி ஒரு ஆனந்தம் உனக்கு” என்று நம்பியார் பாணியில் கைகளை பிசைந்தவள் “செல்லம் பட் எனக்கு இந்த அப்ரோச் பிடிச்சிருக்கு. கீப் இன் த மைன்ட் யா” என்று கூறவும் “விளங்கிடும்” என்று தலையில் அடித்துக்கொண்டவன் கைகளை பற்றி “மாமா.. என் பிராணநாதா. ஏன் தலையில் அடித்தது கொள்கிறீர்கள்??? நீங்கள் அடித்துக் கொள்ளும் ஒவ்வொரு அடியும் என் இதயத்தில் சாட்டைக்கொண்டு அடிப்பதை போன்றே வலியை ஏற்படுத்துகிறதே கண்ணாளா” என்று சுத்த தமிழில் கேட்கவும.

“அய்யோ கடவுளே...

இவகிட்ட தாங்க முடியலையே

நாளைக்கு ஊருக்கு போறேனே கொஞ்ச நேரம் உன் கூட இருக்கலாம்னு வந்தா மனுசன இப்பவே விரட்டி அடிக்கிறா மாதிரி பேசி கடுப்பு ஏத்தறியேடி....

மாமா மாமான்னு காதுக்குல்ல கத்துற இல்ல பிராணநாதா பிசிரு இல்லாத நாதன்னு கூப்பிட்டு உயிரை எடுக்குற” என்று வலிக்காமல் அவளின் தலையில் கொட்டி விட..

“ம்கூம்.. ம் ம்..” என்று சிணுங்கி கொண்டவள் “நாளைக்கு போகதன்னு தானே சொல்றேன் இப்பவே போவேன்னு அடம் புடிச்சா எனக்கும் மட்டும் கோவம் வராதா!! ஏதோ இப்பதான் லவ்வையே அக்சப்ட் பண்ணி இருக்க” என்றதும்..

“அடியேய் வாய் பத்திரம். நான் இன்னும் தண்டனைய கொடுக்கல. கொடுக்க ஆரம்பிச்சேன் தாங்காநு பாத்துக்க...

நீதான் என்னை நாய் மாதிரி சுத்த விட்டு அக்சப்ட் பண்ணி இருக்க.... நீ பண்றதுக்கு எல்லாம் வட்டி கூடிக்கிட்டே போகுதுதுடி” என்று எழுந்து அவள் பக்கம் வர.

அவனிடம் இருந்து தப்பிக்க லாவகமாக எழுந்தவள் சித்து அவள் புறம் சாயவும் “ஸ்டேச்யூ” என்று கூற அப்படியே சிலைபோல் ஆடாமல் அசையாமல் நின்று இருந்தான்.

“ஹேய் மாமா. ஹேய் மாமா. வரியா??” என்று சினிமா பாடலை சத்தமாக அவன் காதில் கத்தியவாறே அவன் அருகில் வந்து அவன் மீசையை பிடித்து இழுத்து கன்னத்தில் இதழ் பதித்து விடவும் உறைந்த நிலையில் இருந்தவனுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் ஹார்மோன் மாற்றம் வந்திருந்தது.

பார்க் பெஞ்சில் கொஞ்சம் தள்ளி மற்றவர்களின் கருத்தை கவரா வண்ணம் அமர்ந்து இருந்தார்கள் தியாவும் சித்துவும்.... சிந்து நாளை ஊட்டி செல்வதால் அவளை காண முடியாது என்றும் அவளுடன் சிறிது தனிமையில் இருக்க வேண்டும் என்றும் தனியே அழைத்து வந்தவன் ஹோட்டல் சினிமா அழைத்துச் சென்று விட்டு கடைசியாக பார்க்கில் வந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க தியா இப்படி ஒரு செயலை செய்வாள் என்று எதிர்பார்க்காதவன் அதிர்ச்சியில் சற்று நேரம் கடந்த பின் நடந்த நிகழ்வை உள் வாங்கி இருந்தான்.

“யேய் வது.. நில்றீ” என்று அவளை அழைத்தபடி பின் சென்று அருகில் நின்றான்.

“இப்படி ஒரு கிஃப்ட் உன்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லடா நிஜமா‌. என்னால இந்த உணர்வை எப்படி சொல்றதுன்னே தெரியலடா. உன்னை.. உன்னை..” என்று அருகில் வந்தவன் “இது போதும் டா உன்னை நினைச்சிக்கிட்டே ஊருக்கு கிளம்பிடுவேன்....”

“மாமா.... நீ கட்டாயம் போய் தான் ஆகனுமா??” என்று சற்று இறங்கிய குரலில் கண்களில் நீர நிறைய கேட்க.

“வந்து ஒரு மாசம் மேல ஆகுதுடா. ஹோட்டலை மேனேஜர் கிட்ட ஒப்படிச்சிட்டு வந்து இருக்கேன். நீ அன்னைக்கு ஊருக்கு கிளம்பும்போதே என்னை தேடிய கண்களோட இம்சையில தான் உன்னை பார்க்க வந்தேன். உன் சம்மதத்தை வாங்கிட்டு தான் ஊருக்கு கிளம்பனும்னு இருந்தேன்” என்று‌ அவள் முகம் பார்த்திட.

“அப்போ அன்னைக்கு நீ...நீங்க.. என்னை பார்த்திங்களா...???” என்று ஆவளுடன் கேட்க.

“கடைசியா என்னை தேடி ஏக்கமாக இருந்த உன் முகம் தான் எனக்கு அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து தொந்தரவு பண்ணும்…. அவளை ஏண்டா ஏங்க வைச்ச!!! அழவைச்சன்னு எனக்கு நானே சண்டை போட்டுக்குவேனா பாத்துக்கோயேன்” என்று கிண்டலாக கூற.

“போ மாமா” என்று அவன் நெஞ்சில் குத்தியவளின் இருகைகளையும் இருக்க பிடித்தவன் அப்படியே அவளை அணைத்து இருந்தான்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் போது உத்ராவின் மனது மிகவும் லேசாய் இருந்தது. இதயத்தில் இருந்த அத்தனை அழுத்தமும் நீங்கி முகத்தில் புன்னகையுடன் இன்று ஹாஸ்பிட்டலில் கோபி அடித்த கொட்டத்தையும் லூட்டியையும் நினைத்து நினைத்து தனக்குத் தானே சிரித்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்து இருந்தாள்.

அவனை காண்பதற்கு முன்னர்வரை மருத்துவர் பல அறிவுரைகளை கூறி அவளை தெளிய வைக்க முயன்று இருந்தாலும் ஒரு விதமான இறுக்க மனநிலையிலையே அறையை விட்டு வெளியே கிளம்பி இருந்தாள்.

அதே நேரம் உத்ராவை பார்க்க வீடுவரை சென்றவன் அவள் வீட்டில் இருப்பதற்கான அறிகள் தென்படாததால் சித்துவை கவியிடம் பேச வைத்து அதே போக்கில் உத்ராவை பற்றியும் தெரிந்துக்கொள்ளும் நோக்குடன் பேச சொல்லி இருந்தான் கோபி.

சித்து விஷயத்தை பேச்சின் வழியே அவளின் கருத்தை கவராத வண்ணம் உத்ரா மருத்துவமனையில் இருப்பதை தெரிந்துக்கொண்டு சொல்ல அங்கு செல்ல முடிவெடுத்து இருந்தான் கோபி.

மருத்துவமனை வாசல் வரையும் வந்தவன் “மச்சி. உள்ள போய் என்னடா சொல்றது??” என்று சித்துவை கேட்டான் கோபி.

“என்னை கேட்டா நீதானேடா அவள பாக்க வந்த. பேசாம உன்னை பாக்க வந்தேன்னு சொல்லிடு” என்று சிரிக்காமல் சித்து கூற அவனை முறைத்த கோபி “அவ அண்ணன் கையால எனக்கு சங்கு ஊதாம விடமாட்ட போல இருக்கே. உன் ஆழ்மனசுல இருக்க ஆசையெல்லாம் இப்ப நிறைவேத்த நினைக்கறியாடா!!!” என்று கேட்க.

“தப்பா நினைச்சிட்டியே மாப்ள. ஒரு ஐடியா கொடுத்தேன்” என்றிட.

“உன் ஐடியால மண்ணு விழ. நானே யோசிச்சி என் தலைல மண் அள்ளி போட்டுக்குறேன். நீ அமைதியா இரு” என்று கூறிவிட்டான் கோபி.

“இப்போ உள்ள போனுமே என்ன சொல்றது???” என்று யோசித்து நிற்க “மச்சி என் கீ செயின்ல சின்ன கத்தி இருக்கு அதை எடுத்து கைல ஒரே போடா போட்டுடு” என்று சித்து கூற.

“டேய் கொலைகாரா. சாவடிக்க பிளான் பண்ற தானே???” என்று கோபி சித்துவை கேட்க இதழ் விரியாமல் சிரித்தவன் நண்பனின் பதட்டத்தை பார்த்து சிலாகித்து நின்றிருந்தான் சித்தார்த்.

“ம் இப்படி பண்லாம் டா. எனக்கு தலைவலி” என்றிட “சரி வா போலாம்” என்று முன்னே நடந்தான் சித்து. “இல்ல இல்ல நிறுத்து. இப்படி போனா அவ கிட்ட பேச வாய்ப்பு கிடைக்காது” என்றான் கோபி, “உனக்கு தலைவலி இப்படியே மெயின்டன் பண்ணிடு” என்றான்.

“டேய் தலைவலியா!!!” என்று சித்து கேட்க “உனக்கு புடிக்கலையா அப்போ வயித்து வலி” என்று நோயை இடமாற்றி மருத்துவமனைக்குள் நுழைந்து இருந்தான்.

அவன் அட்டகாசத்தை பார்த்தவண்ணமே தலையில் அடித்தவன் “அவளை பாக்கறதுக்குள்ள எனக்கு இன்னும் என்ன என்ன சொல்ல போறானோ!!” என்று புலம்பலுடன் அவன் பின்னாடியே சித்துவும் சென்றான்.

ரிசப்ஷன் பெண்ணிடம் விவரங்களை கூறி காத்திருப்பு இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர் இருவரும். கோபியின் கண்கள் நாலாபுறமும் சுழன்ற வண்ணம் காதலியை தேடி அலைந்து கொண்டு இருக்க அவனை ஏமாற்றாமல் தரிசம் தந்தாள் அந்த தாரகை.

‘நம்தன நம்தன தாளம் வரும். சுபராகம் வரும்’ என்று பேக்ரவுன்ட் மியூசிக் ஓட “சே... சே.... இப்போ டிரெண்ட். மனசை துறந்தாயே நீ. எங்கிருந்தோ வந்தாயே நீ” என்ற கடல் படத்தின் பாடல் ஒலிக்க ஸ்லோமோஷனில் தேவதை நடந்து வர, அவள் பின்னேயே சாருகேஷ் வரவும் அந்த பாடல் அப்படியே “திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா. சிங்கம்பெத்த பிள்ளையன்னு தெரிய வைப்போம் வாடா வாடா” என்று கையில் அருவாளுடன் சாருகேஷ் நடந்துவருவது போல் வர தலையை உலுக்கி விழித்துக் கொண்டே கானும் கனவில் இருந்து முழித்துக் கொண்டான் கோபி.

அவனையும் கோபியையும் எதேர்ச்சியாக பார்த்த சாருகேஷ் உத்ராவை அழைத்து அவளுக்கும் காண்பித்து அருகில் சென்றான்.

அவர்கள் அருகில் வருவதை கண்டதும் இருவரும் எழுந்து முகமன்னாக புன்னகைக்கவும் நடப்பை தொடர அப்படியே அமர்ந்துவிட்டான் சித்தார்த்.

“ஹாய் கோபி. ஹாலோ சித்து” என்ற சாருகேஷ் “என்ன இந்த பக்கம்??” என்று விசாரித்து, சித்துவை பார்த்து “உங்களுக்கு ஏதாவது???” என்று கேட்க.

சித்து வாய் திறக்கும் முன்னமே அது வந்து “சித்துக்கு தலைவலி” என்று கோபியும், “எனக்கு வயித்து வலி” என்று சித்துவும் கூறி இருந்தனர்.

இருவரும் வெவ்வேறு பதில்களை ஒரே சமயத்தில் கூறி இருக்க புரியாமல் குழப்பமாக அவர்களை பார்த்த சாருகேஷ் “சித்து உங்களுக்கு தலைவலியா வயிற்று வலியா!!!” என்று கேட்கவும் கோபியை முறைத்தபடியே “அது வயித்து வலிதான் முடியல. அதான் உக்காந்து இருந்தேன்... இதுல சாப்பிடவேற இல்லையா அதுலையே தலைவலியும் சேர்ந்துடுச்சி” என்று மழுப்பலாக பதிலாளித்து சோர்ந்து போய் இருந்தான்.

“ஹோ..” என்றவன் நிர்மலிடம் இருந்து அழைப்பு வரவும் அதை அட்டன் செய்து பேசியவன் “இல்ல நிர்மல் ரிசப்ஷன்ல தான் இருக்கேன். தெரிஞ்சவங்க இருந்தாங்க பேசிட்டு இருந்தேன். ஓ... இப்போவா சரி வர்றேன்” என்றவன் “நீ பேசிட்டு இரு உத்ரா. இதோ வந்துடுறேன் நிர்மல் கூப்புடுறான்” என்று கூறி உள்ளே சென்று விட.

“டேய் யப்பா சத்தியமா முடியல டா. உன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண போய் என் ஆயுசை இழந்துடுவேன் போல இருக்கு” என்று கூறிய சித்து இருக்கையில் அமர்ந்து விட்டான்.

“நீ என்ன வேணா சொல்லிட்டு போ. நான் அவளை பாக்குறத விடப்போறது இல்லை” என்ற கூறிக்கோளுடன் நின்று அவளை பார்த்து இருந்தவன் “ஹாய் உத்ரா எப்படி இருக்கீங்க???” என்று கோபி பேச்சை ஆரம்பித்த போது நர்ஸ் டோக்கன் என்னை கூறி அவர்களை அழைக்கவும் “அட இம்சைகளா இப்போ தானேடா அவளையே கரெக்ட் பண்ணி பேச டிரை பண்றேன். அதுக்குள்ள எங்க இருந்துடா எனக்குன்னு வரிங்க” என்று சலித்தவன் “சாரி சிஸ்டர் அவனுக்கு வயித்து வலி போயிடுச்சி இப்போ கால் வலி அதுக்கு பாக்குற டாக்டர் அப்பாய்ன்மென்ட் தாங்க” என்று அசால்டாய் கூறிவிட்டு உத்ராவிடம் பேச்சை தொடர.

இவள் வியப்பாய் கோபியை பார்த்து உடனே சித்துவை பார்த்தவள் கோபியை பார்க்க கண்களை ஒருசேர மூடி திறந்து “உன்னை பார்க்கத்தான் இவ்வளவு டிராமா” என்று கூற.

“இது மட்டும் தானா.. இல்ல.......”

“இப்போதைக்கு இது மட்டும் தான் இனிமேட்டுதான் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணனும்” என்று கூற.

‘ரொம்ப தைரியம் தான் என் அண்ணா முன்னாடியே இவ்வளவு செய்றியேடா’ என்று மனதில் நினைத்த வேலை சாருகேஷுடன் அஷ்வின் பிரகாஷும் இவர்களை நோக்கி வந்தனர்.

“பிரகாஷ் ஷீ இஸ் மை சிஸ்டர் உத்ரா. அன்ட் திஸ் இஸ் கோபி அன்ட் சித்தார்த்” என்று அவர்களையும் அறிமுகபடுத்தி “சீ கைஸ் இவர் பிரகாஷ். பிரகாஷ் ஜீவலர்ஸோட ஓனர் நம்ம டிரஸ்ட்க்கு இவரோட பங்கும் இருக்கு” என்று மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்த அஷ்வினின் பார்வை மொத்தமும் எதிரே நின்றிருந்த உத்ராவின் மேல் பதிந்து இருந்தது. உத்ராவிற்குதான் அவன் பார்த்த முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய் அவன் பார்வையை தவிர்த்து கோபியின் புறம் திரும்பி நின்று விட்டாள். இதை கவனிக்கமல் இருந்த சாருகேஷ் “எனக்கு ஆஃப்டர்நூன் ஒரு மீட்டிங் இருக்கு இன்னொரு நாள் நம்ம ஃப்ரியா மீட்பண்ணலாம் பிரகாஷ்” என்று அவனிடம் இருந்து விடைபெற்றவன்.

“உதி மா கிளம்பலாமா??” என்று தங்கையிடம் கேட்டவன் “சித்து நான் கிளம்புறேன் உடம்பை பார்த்துக்கோங்க. கோபி வரேன் வீட்டுக்கு வாங்க” என்று கூறி முன்னே செல்ல அவனை பார்த்தபடியே திரும்பிய உத்ராவிற்கு அடுத்து மீட்டிங்கு வெய்ட்டிங் என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் பேசிட இவை பார்த்தும் பார்க்காதமாதிரி கடந்து சென்ற அஷ்வினுக்குதான் எரிச்சல் மண்டி இருந்தது.

வீட்டிற்கு வரும் வரையிலும் கோபியின் செயல்களை அசைபோட்டபடி வந்தவளுக்கு தான் எந்த எண்ணவோட்டத்தில் அவனை பார்க்கிறோம் என்று தெரியவில்லை அவன் பேசுவது பிடித்து இருக்கிறது தனக்காக பொய்சொல்லி நண்பனை அழைத்து தன் அண்ணன் முன்னமே வந்து நின்ற தைரியம் பிடித்து இருந்தது. அவன் கள்ளத்தனமாய் அவன் பேசிய வார்த்தைகள் கூட ரசிக்க தோன்றியது. இது சரிதானா தன் மனதில் அவன் மேல் இருக்கும் மரியாதை இன்று வேறு முகம் காட்டுகிறதோ என்று நினைத்து கொண்டு இருந்தாள்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 59
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN