காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 60

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாட்களும் அதன் போக்கில் அழகாய் நகர்ந்து கொண்டு இருந்தது கவியின் தேர்வுகளும் முடிந்து விட்டிருக்க காலை நேர பூஜை வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார் ஆதி. வெளியே இருந்து கணவர் ராஜாராமன் வரும் அரவம் கேட்கவும் பூஜையறையில் இருந்தபடியே சமயலறையை எட்டி பார்க்க கையில் காபி டிரேயுடன் மாமனாரை நோக்கி நடந்து வரும் கவியை கண்டவரின் முகம் மெல்லிய புன்னகை தத்தெடுக்க ஆத்மார்த்தமாக பூஜை செய்ய ஆரம்பித்தார். கவி கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருந்தாள். பூஜையின் முடிவில் சென்ற கவி தீபாராதனையை கண்களில் ஒற்றி குங்குமத்தை இட்டுக்கொள்ள போக, தங்களது அறையில் இருந்து கேஷவின் 'பாரு' என்று அழைக்கும் சத்தம் கேட்கவும் குங்குமத்தை அப்படியே நெற்றியில் வைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாய் மேலே சென்றாள்.

வாயில் கை வைத்து மருமகளை வியந்து பார்த்த ஆதி "நல்ல பொண்ணு போ. அன்னைக்கு அழுத அழுகை என்ன!!! இப்போ ஓடுற ஓட்டம் என்ன!!!" என்று தன் போக்கிலே சிரித்தபடி கணவரின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

கையில் வைத்திருந்த காபி டம்பளரை டேபிள் மேல் வைத்தவர் மனைவியின் முகத்தில் நிலைத்திருந்த சிரிப்பையும் கண்கள் எங்கோ கணக்கிட்டு கொண்டிருப்பதையும் பார்த்து

"என்ன ஆதி சிரிச்சிட்டே தனியா யோசிக்கிற மாதிரி இருக்கு??" என்றார்.

கணவரின் அதிரடி குரலில் நடப்புக்கு வந்தவர். "அதுவாங்க.. நம்ம பசங்கலை நினைச்சிதான்" என்றவர் "இந்த பசங்களுக்கு தீடீர்ன்னு கல்யாணம் பண்ணி வைச்சிட்டோமே எப்படி ஒத்துமையா இருக்குமோன்னு கொஞ்சம் சஞ்சலமா இருந்தேன்.. ஆனாலும் உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு நல்லது நடக்குமுன்னு சொல்லிட்டே இருந்துச்சி.." என்று நிறுத்தினார்

ஆதி கூறவும் "பசங்க நல்லாதானே இருக்காங்க ஆதி ஏதாவது பிரச்சனையா???" என்றார் ராஜாராமன்.

ஆதி "ச்சே.. ச்சே... என்னங்க நீங்க அப்படி ஒரு வார்த்தையா கூட யோசிக்காதிங்க" என்று பதறி கூற.

ராஜாராமன் மனைவியின் பதற்றத்தில் சிரித்தவர் "பிரச்சனையே இல்லாத வாழ்க்கைய வாழ முடியாது ஆதி... நமக்குள்ள வராத சண்டையா...!!!" என்று மனைவியை பார்த்தவர் "அதுவும் கணவன் மனைவிக்கு இது வந்தா தான் இன்னும் புரிதல் வரும். அடிச்சிக்கிட்டே இருக்கனும்னு சொல்லல. ஆனா அது நீடிக்காம பாத்துக்கனும் அதுல இருக்கு சாமர்த்தியம்" என்று விளக்கம் அளிக்க.

ஆதி "ம்.... அதுவும் சரிதான்" என்றிட.

"சரி அதுக்கு ஏன் நீ இவ்வளவு தீவிரமா யோசிச்ச??"

"அதுதாங்க இரண்டுபேரும் நல்ல புரிதலோட இருக்காங்க. இப்பக்கூட அவன் கூப்பிட்ட ஒத்த குரலுக்கு என்னமா முந்தியடிச்சி ஓடுறா தெரியுமா. அவனும் இவளுக்காக பாத்து பாத்து செய்யறான். இப்படியே இந்த புள்ளைங்க சந்தோஷமா இருக்கனும்" என்று இறைவனை நினைத்து மனதார வேண்ட.

"நல்லா இருக்கு ஆதி. நீயே பிள்ளைங்க மேல கண்ணு வைக்கிறா மாதிரி இருக்கு. முதல்ல அவங்களுக்கு சுத்தி போடு" என்றவர் பெரிய மகன் ஜெயந்தின் கல்யாணத்தை பத்தி பேச்சை தொடங்கி இருந்தார்.

"நம்ம மதுக்கு எப்ப படிப்பு முடியுது???" என்று ராஜாராமன் விசாரிக்க.

ஆதி "இரண்டு வாரத்துல வந்துடுவாங்க. வரும்போதே மதுவையும் அவங்க பெரியம்மாவையும் அழைச்சிட்டு வர சொல்லிட்டேன். வந்ததும் நல்ல முகூர்த்தமா பார்த்து கல்யாணத்தை முடிச்சிடனும்" என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அதே நேரேம் மேலே அழைத்தவனோ அவளை போட்டு வருத்துக்கொண்டு இருந்தான்.

"இருங்க தேடுறேன். இங்க தான் இருந்தது நேட் நைட் கூட பார்த்தேன்.... எதுக்கு ஆஃபீஸ் வேலையெல்லாம் வீட்டுல எடுத்துக்கிட்டு வந்து செய்றீங்க???" என்று இவளும் பேசிக்கெண்டு தேட.

"எங்க எந்த வேலையை செய்யனும்னு எனக்கு தெரியும்... முதல்ல தேடுற வேலைய பாரு.... இங்க இருந்தது எங்க போய் இருக்கும் ச்சே... வைச்ச பொருள் வைச்ச இடத்துல இருக்கா????" என்று அவளை பார்த்துக்கொண்டே கத்த.

அவன் கத்தலில் அதிர்ந்தவள் கண்கள் கலங்க "ஒரே நிமிஷம் உட்காருங்க நான் தேடுறேன் பொறுமையா தேடுனா கிடைக்கும்..." என்று அமைதியாய் பேசியவளை அதிசயமாய் பார்த்தவன்.

அவளை சமாதானப்படுத்த நேரம் இல்லாததால் "உன்னை எங்க தான்னு கேட்டேன். முடிஞ்சா தேடு இல்ல ஓரமாய் போய் நில்லு பிசாசே. இப்ப என்ன ஆச்சின்னு அழ ஆரம்பிக்கிற.......???" என்று அவளை தேடலில் இருந்து விலக்கி நிறுத்த.

முகத்தை உர் என்று வைத்துக்கொண்டவள் "நான் ஒன்னும் அழல. கண்ணுல தூசி விழந்துடுச்சி" என்றிட்டு "இருங்க நானே தேடி தரேன். நான் தான் காலைல இங்க க்ளீன் பண்ணேன்" என்று முன்னே வர "ஒன்னும் வேணா போடி ராட்சசி. எதை எடுத்தாலும் எடுத்த பொருளை அதே இடத்துல வைக்கிறது இல்ல" என்று அவளை தள்ளி நிறுத்தி இவனே தேட.

எங்கு தேடியும் கிடைக்காமல் போக "ச்சே இன்னைக்கு முடிக்க வேண்டியது கோட் எல்லாம் போட்டு ரெடியா வைச்சி இருந்தேன்... நான் நினைச்சது எது தான் நடந்து இருக்கு இது நடக்க...." என்று பேசியவன் "அவன் வேற ஃபோன் போட்டுக்கிட்டே இருக்கான்" என்று வந்த ஃபோனை காதில் வைத்தவன் எரிச்சலுடனே "வரேன் கார்த்தி 5 மினிட்ஸ் கிளம்பிடுவேன். இதோ ஜஸ்ட்" என்று அவளை பார்க்கமலே அறையில் இருந்த வேறோரு ஃபைலை எடுத்துக் கொண்டு கிழே இறங்கியவன் நேரே ஆஃபீஸிற்கு கிளம்பி விட்டான்.

கேஷவ் இவ்வளவு லேசில் எல்லாம் கவியின் மேல் கோபப்படுபவன் இல்லை ஆனால் அவனுக்கு தேவையான முக்கியமான ஃபைல் இதனை இன்னும் காபி செய்து வைக்கவில்லை அதற்குள் அதை காணவில்லை என்றதும் வந்த கோவமே அது. பார்கவி கேஷவின் கோவத்தில் சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்திட இன்னும் மருமகள் சாப்பிட வாராமல் இருக்க

மாடியேறி வந்த ஆதி "கவிமா என்னடா சாப்பிடலையா???" என்று கேட்கவும்.

சோகமாய் இருந்தவள் முகம் சட்டென மாற்றி "இதோ வந்துட்டேன் அத்த" என்றவள் "அவர் ஒரு ஃபைல் காணோம்னு சொன்னாரு நான் தேடிட்டு வரேன்" என்று மறுபடி நிறுத்தி நிதானமாக தேட ஆரம்பித்தாள். அறையையே தலைகீழாக போட்டு தேடியவள் கைகளில் சிக்கியது டேபிளின் பின்பக்கத்தில் விழுந்து இருந்தது அந்த கோப்பு. இரவு கோப்பை சரிபார்த்து இருந்தவன் டேபிள் மேல் வைக்கவும் அது தவறி பின்பக்கம் விழுந்து இருக்க அதை கவனிக்காமல் அறை முழுவதும் தேடி இருந்தான் அவன்.

மாடியிலிருந்து இறங்கி வந்தவள் "அத்த" என்றிட திரும்பியவர் "என்னடாமா" என்றார்.

"அத்த இது அவர் தேடிட்டு இருந்தது. நான் கொடுத்துட்டு வந்துடுறேன்" என்றிட "நீயேன் மா மாமாவ அனுப்பலாம்" என்றதும் அதை மறுத்தவள் "இல்ல அத்த நானே போறேன். அவரு காலைலேயே டென்ஷனா கிளம்பினாரு ஏதோ மாதிரி இருக்கு நானே கிளம்புறேன்" என்று கூறி அலுவலகத்தை நோக்கி கிளம்பி விட்டாள்.

அலுவலகத்தை அடைந்தவள் வெளியே இருந்தபடியே கேஷவிற்கு அழைக்கவும் ஃபோனை எடுக்காமல் இருந்தவன் மேல் கோபம் வர, நேரே கார்த்திக்கின் எண்ணை அழைத்து விட்டாள். "அண்ணா

அவரு இல்லையா??" என்றிட.

"இருக்கான் மா மீட்டிங்ல இருக்கான். ஒரு முக்கியமான ப்ராஜக்ட் எடுக்கரத பத்தி மீட்டிங். அதுல இருக்கான்" என்றிட "ஹோ" என்றவள் "நான் உள்ள வரலாமா???" என்றதும் "அப்ப நீ வெளியே தான் இருக்கியா???" என்றான். அவள் "ஆம்" என்று கூற வெளியே வந்து அவளை பார்த்தவன் "உள்ள வா" என்று அழைத்துக்கொண்டு செல்ல அவனுடன் சென்றவள் கேஷவின் அறையில் அமர்ந்தாள்.

கார்த்திக்கிடம் "இந்தாங்க அண்ணா ஃபைல்" என்று கொடுக்க.

"ம் இதான் விஷயமா!!! காலையிலையே கடுப்பா தான் இருந்தான். ஃபைல் கேட்டேன் எரிஞ்சி விழுந்தான். நினைச்சேன் வீட்டுலயும் கடிச்சி வைச்சி இருப்பான்னு" என்றிட.

கொஞ்சம் உற்சாகமானவள் "இங்கேயுமா நீங்களும் மாட்டினிங்களா??? அடி பலமா???" என்றிட.

"ம். முன்னைக்கு இப்போ பரவாயில்லை. அங்க எப்படி கொஞ்சம் ஓவரா போயிட்டானோ!!! முகம் வரும்போது டல்லடிச்சிது!!!" என்று கேலியாக கேட்க.

சிரித்து மழுப்பியவள் "நான் நான்" என்றிட "வெய்ட் வெய்ட் நீயே இருந்து அவன்கிட்ட கொடுத்துட்டு போ. இல்ல உன்னை போக விட்டதுக்கு அதுக்கும் கடிப்பான்" என்று கூறி சிரித்தபடியே வெளியே சென்று விட்டான்.

மீட்டிங் முடிந்து அரைமணி நேரத்தில் வந்தவன் மனைவி காத்திருப்பதை பார்த்து "பாரு" என்று அருகில் வந்தான்.

அவன் வந்ததும் எழுந்து கையில் இருந்த பைலை அவனை பார்க்காமலையே கொடுக்க அதை வாங்கி டேபிள் மீது வைத்தவன் அவளின் கைபிடித்து "சாரி சாரி டா டென்ஷன்ல திட்டிட்டேன்" என்று மன்னிப்பை வேண்ட அவன் திசை பக்கம் கூட பார்க்காமல் அமைதியாக நின்றவளை பார்த்தவன் "ஏதோ தெரியாம......." என்று கூறும் முன்பே.

காளியாய் அவதாரம் எடுத்தவள் "நான் அமைதியா போக போக ரொம்ப தான் ஓவாரா போறீங்க... என்ன தெரியாம பேசினிங்க... சொல்லுங்க தெரியாமலா பேசினீங்க... ராட்சசியா, பிசாசா அது என்ன பண்ணுன்னு காமிக்கிறேன் வீட்டுக்கு வாங்க" என்று அவனை குதறி எடுத்துவிட, "அம்மா தாயே போதும் இரண்டு தோப்புகரணம் வேணா போடுறேன். என்னை விட்டுடு" என்று கெஞ்சும் அளவிற்கு அவனை கடுபடிக்க கதவை தள்ளிக்கொண்டு வந்தான் சாருகேஷ்.

அவள் உள்ளே இருக்கவும் "என்ன கவிமா தப்பான நேரத்தில் எண்ட்ரி ஆகிட்டேனோ!!!" என்று கேட்க.

"அடடே சாரு மச்சா கரெக்ட்டான நேரத்துல வந்து காப்பத்திட்ட டா" என்று கூறி விட்டு அருகே வந்து அவன் காதில் மட்டும் விழுவது போல் "மச்சி விட்டுமட்டும் போய்டாதடா. வேப்பிலை அடிக்காத குறைடா மச்சான். காப்பத்துடா" என்றபடி அவனை அமரவைத்தான் கேஷவ்.

கவியும் இவர்களின் கோர்டு வேர்ட் புரிந்தாற் போல சிரித்தபடி "உங்க ஃப்ரெண்டு தானே உங்கள போல தான் எல்லாத்துலையும் அவசரம்" என்று கூற "இதுக்கு கேக்காமலையே இருந்து இருக்கலாம்" என்று சத்தமாக சொல்ல மூவரும் சேர்ந்து சிரித்தனர்.

"அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் மச்சான்' என்று சாருகேஷ் கூற.

விளையாட்டை விட்ட கேஷவ் "சொல்றா. என்ன விஷயம்??" என்றிட.

"சொல்லி இருந்தேன்ல உத்ரா கல்யாணம் பத்தி நிறைய வரன் வருது. ஆனா எனக்கு என்னமோ வெளியே கொடுக்க தைரியம் வரலடா" என்றான் கொஞ்சம் இருக்கமான குரலில்..

"பார்க்கலாம் டா. இதுக்கேவா. இப்போ தானே ஆரம்பிச்சி இருக்கோம்... நானும் சொல்லி வைக்கிறேன்டா... நீ கவலைபடாத.. அவளுக்கு நல்ல வரனா அமையு.ம் மாப்ள ராஜா மாதிரி இருப்பான்" என்று கேஷவ் கூறவும் அமைதியாக அவர்களை கவனித்து கொண்டு இருந்த கவிக்கு தன் உடல் நிலையில் ஏதோ மறறம் தெரியவும் அப்படியே சாய்ந்த வாக்கில் அமர்ந்துக்கொண்டாள்

கேஷவ் கூறவும் அவனை தொடர்ந்த சாருகேஷ் "உனக்கு நிர்மல் தெரியும்ல" என்று அவன் கேட்கவும் கேஷவ் "ம்.. தெரியும் தேவா தம்பி தானே. பார்த்து இருக்கேன்" என்றிட..

"ம்.. அவனே தான். சொந்தமா ஹாஸ்பிட்டல் வைச்சி இருக்கான். பார்க்க நல்லா இருக்கான் தேவாவிற்கு நம்ம உத்ராவ நிர்மலுக்கு மேரேஜ் பண்ண கேக்குறான்" என்று கூற.

"வாவ் மச்சா சூப்பர் டா நீ" என்ன சொல்லி இருக்க உத்ராகிட்ட பேசினியா என்றிட.

"இன்னும் இல்லடா அவன் கேட்டதும் சந்தேஷமா இருக்கு. உன்கிட்ட தான் முதல்ல சொல்றேன் என் வலியை நேரடியா பார்த்தவன். அதனால எனக்கு அவ எவ்வளவு முக்கியம்னு அவனுக்கு தெரியும். அதுவும் ஒரு காரணம் என் சந்தோஷத்துக்கு. என் கண் முன்னாடியே அவ இருப்பா என்பது இன்னொரு சந்தோஷம்" என்று கூறியவன் குரலில் மகிழ்ச்சி எல்லையை கடந்து இருந்தது.

அதே நல்ல மனநிலையுடன திரும்பி மனைவியின் முகம் பார்க்க கண்களை மூடி அமர்ந்து இருக்க "பாரு.. பாரு.. பார்கவி" என்று அழைக்க அப்படியே அசைவற்று அமர்ந்து இருந்தாள் பார்கவி. "என்னடா ஏன் இப்படி இருக்கா??? இந்தா தண்ணி தெளி" என்று டம்ப்ளரை கொடுத்து சாருகேஷ் கேட்க.

"பாரு.. பாரு என்னடி என்ன செய்து???" என்று அவளை எழுப்பியவன் "காலைல கொஞ்சம் சத்தம் போட்டுட்டேன்... வேற ஒன்னும் இல்ல" என்று கூறி அவளின் முகத்தை துடைத்தவன் மனம் படபடவென அடித்துக்கொண்டது வெளியே கொஞ்சம் தைரியமாக தெரிந்தாலும் மனைவியின் மயக்கம் பயம் கொள்ள வைக்க அவளோ மயக்கம் சிறிது சிறிதாக தெளிந்து விழித்து பார்த்தாள்.

"பாரு என்ன ஆச்சு???" என்று பரிவாய் அவளின் முகம் பார்த்து கேட்க "காலையில சாப்பிடல கொஞ்சம் ஒருமாதிரி ஆகிடுச்சி" என்று பார்கவி கூறவும் "வா ஹாஸ்பிட்டல் போலாம்" என்றான் கேஷவ்.

"ப்ச் இதுக்கெல்லாம் ஹாஸ்பிட்டலா!!! எனக்கும் ஒன்னும் இல்ல. நான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்குறேன்" என்று எழுந்துக்கொள்ள.

"சொன்னா கேட்க மாட்டியா கவிமா. வா வந்து கிளம்பு அவன் ரொம்ப பயந்துட்டான். டேய் கூட்டிட்டு வாடா நான் வண்டிய எடுக்குறேன்" என்று கூறிய சாருகேஷ் முதலில் செல்ல இரண்டு அடி எடுத்து வைக்கவும் தலை ஒரு மாதிரி கண்கள் இருட்டி தலை சுத்த அப்படியே கணவனின் கைகளை பற்றிக்கொண்டு நின்றுவிட்டாள்.

மனைவி நடக்கமுடியாமல் பிடித்துக்கொள்ளவும் அவளை தாங்கியபடி அழைத்து சென்றவன் கார்த்திக்கினை அழைத்து விவரத்தை கூறி சென்றுவிட்டான். சாருகேஷ் நிர்மலின் மருத்துவமனைக்கு அழைத்து சென்றவன் மருத்துவரின் அறைக்கு அனுப்பி வைத்து இருந்தான்.

மருத்தவரிடம் விவரம் கூறிவிட்டு அவரின் முன் அமர்ந்து இருந்தனர் இருவரும் "என்னையிலிருந்து இந்த மாதிரி இருக்கு மிஸஸ். பார்கவி???"

"இன்னைக்குதான் டாக்டர் ஒரு மாதிரி தலை சுத்தல். நடக்க முடியல கண்ணு இருட்டிடுச்சி" என்று தன் உணர்வுகளை கூறிட.

"ம். செக் பண்ணிடலாம் வாங்க" என்று அழைத்து சென்று சில பரிசோதனைகளை செய்து மேலும் தகவல்களை பெற்றுக்கொண்டார் அவர்.

பரிசோதனை செய்துவிட்டு வெளியே வந்த மருத்துவர் பயத்துடன் அமர்ந்திருந்த கேஷவை பார்த்து "டோன்ட் வொரி மிஸ்டர். கேஷவ் உங்க வைஃப்க்கு ஒன்னும் இல்லை. அவங்க நல்ல ஆரோக்கியா இருக்காங்க" என்று அவன் பதட்டத்தை குறைத்தவர் "கங்ராட்ஸ் ஷீ இஸ் பிரக்னன்ட்... டெஸ்ட் ல பாசிட்டிவ் னு வந்து இருக்கு" என்று கூற.

கேஷவிற்கு தனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதே தெரியவில்லை... தனக்கு ஒரு வாரிசு எனும் போதே மகிழ்ச்சியில் திளைத்தவன் பார்கவியினை காண ஆவள் கெண்டான் வெளியே வந்தவளின் முகம் பார்க்க வெட்கம் கொண்டு தலை குனிந்தவளின் கைகளை பிடித்தவன் அவளை அணைத்து முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிபடுத்த நினைத்தாலும் பொதுவெளி என்பதால் லேசாய் சாய்த்தார் போன்று அணைத்து விடுவித்து தன் உணர்வுகளை அடக்கி மருத்தவர் கூறிய அத்தனையும் கவனத்துடன் கேட்டுக்கொண்டவன் சாருகேஷிற்கு விஷயத்தை கூறி விட்டு அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

💐💐💐💐💐

"அஷ்வின்...."

"சொல்லு வர்ஷா இது வியாபாரம் நடக்குற இடம். சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லிட்டு போ"

"அப்போ வாங்க வெளியே போய் பேசலாம்"

"என்னை என்ன வெட்டி பையன்னு நினைச்சியா??" நினைச்ச நேரம் கூப்பிட்டு பேச அதுக்கு வேற ஆளை பாரு" என்றான் எரிச்சலுடன்.

"நான் ஏன் வேற ஆளை பாக்கனும் உன்னை காதலிச்சிட்டு".

"பைத்தியகாரத்தனமா பேசாத வர்ஷா. இது எல்லாம் நம்ம லைஃப்ல சகஜம். காதல் ஓ.. போர் சும்மா பழகுனேன் அது இதுவரை வந்துடுச்சி" என்று அலுப்பாய் பேசிட.

இவளுக்கு தலையில் இடியை இறக்கியது போல் இருந்தது.. "அஷ்வின் நீ சொன்னியேடா லவ் பண்றேன்னு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு".

"இப்பவும் சொல்றேன் லவ் பண்றேன். கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் எப்பவுமே எல்லாரையும் லவ் பண்ண முடியும் அதுக்காக கல்யாணம் பணணிக்க முடியுமா???" என்று கேட்க "அதுவும் ஜெயிலுக்கு போனவர் பொண்ணை கல்யாணம் பண்ணா, ஊர் என்ன சொல்லும் என் ஸ்டேடஸ் என்ன ஆகுறது???".

"அதை நீ சொல்லதடா. அவர் போனதே உன்னால தான் பணத்தசை இருக்கவருதான். அவரை கொலைகாரணா மாத்தினது நீதானே. சொல்லிட்டாருடா எங்க அப்பா உன் வண்டவாலத்தை. மரியாதையா என் கழத்துல தாலிய கட்டி இந்த குழந்தைக்கு வழிய சொல்லு இல்ல உன் மானத்தை வாங்கி தான் என் கழுத்துல தாலி எறனும்னு இருந்தா அதையும் பார்க்க ரெடியா தான் இருக்கேன்" என்று அவள் அழுத்தமாய் கூறவும் அந்த நகை கடைக்கு தன் தங்கையுடன் சாருகேஷ் வந்தான் சிசி டிவியில் இதை பார்த்தவன் தன் அறையில் இருந்து எப்படியாவது வர்ஷாவை வெளியே அனுப்ப வெண்டும் என்று நினைத்தவன் அவளை தனது அறையில் இருக்கும் பாத்ரூமில் பதுக்கியவன் "ப்ளீஸ் ப்ளீஸ். வர்ஷா அமைதியா இரு முக்கியமான ஒருத்தங்க வந்து இருக்காங்க தரிஞ்சா ரொம்ப கஷ்டம் ஆகிடும் வார்ஷா ....இப்போ வந்துடுறேன்" என்று கூறி வெளியே சென்றவன் அவர்களை பார்த்து புன்னகை செய்ய சம்பிரதாயமாக சிரித்தவள் நகைகளை பார்க்க நகர்ந்து விட்டாள்.

"வாங்க சாருகேஷ்" என்று அவனை வரவேற்க.

புன்னகையுடன் "தங்கைக்கு நகை பார்க்கலாம்னு வந்தோம்" என்று கூறிட.

"பார்க்கலாமே நிறைய புது கலெக்ஷ்ன்ஸ் இருக்கு" என்று சிலதை கடை சிப்பந்தியிடம் கூறி எடுத்துவர சொன்னவன் அவளின் அருகிலும் சென்று நின்று கொண்டான்.

தங்கையுடன் சிலதை பார்த்துக்கொண்டு இருந்த சாருகேஷிற்கு ஃபோன் வரவும் "ஜஸ்ட் எ மினிட்" என்றவன் தங்கையிடம் பார்க்க சொல்லிவிட்டு நகர்ந்து நின்று பேசிக்கொண்டு இருக்க சில சங்கிலிகளை கையில் எடுத்தவன் "இது லேட்டஸ்ட் டிசைன் இதை பாருங்க" என்று அவளின் கழுத்தருகே கையை கொண்டு செல்ல.

பதறி அவனிடம் இருந்து நொடியில் விலகியவள் "சாரி எனக்கு பிடிக்கல நான் அண்ணன்கிட்ட போறேன். அவரே செலெக்ட் பண்ணுவார்" என்று அவனிடம் இருந்து தப்பி சாருகேஷ் இடத்திற்கு சென்று நின்று கொண்டாள்.

அவள் அண்ணனிடம் சொல்லி விடுவளோ என்று ஒரு புறம் அடித்துக் கொண்டாளும் அவளின் மொத்த அழகினை அளந்த வண்ணம் நின்றிருந்தான்.

போன் பேசி முடித்தவன் "ஏன் மா எடுக்கலையா???" என்றிட, "ப்ச் நீயே எடு ண்ணா. எனக்கு தெரியல எல்லாமே ஒரே மாதிரி இருக்கு" என்று சொல்ல அவளுக்கு ஒன்றை தேர்ந்தெடுத்தவன் அதே டிசைனில் பார்கவிக்கும் ஒன்றை தேர்வு செய்து இருந்தான். அதற்கான பணத்தை செலுத்தியவன் அஸ்வினிடம் கூறிக்கொண்டு வெளியேற, அவனை அருவருப்பாய் பார்த்தபடியே வெளியெறி இருந்தாள் உத்ரா.

அவளின் அசைவுகள் ஒவ்வொன்றும் அவனை பித்தாகியது "இரு டி ஒரு நாள் வராமலா போயிடும் என்கிட்ட மாட்ட!!!" என்று பற்களை கடித்தவன் அவளின் அழகு அவனை எந்த எல்லைக்கும் செல்ல வைத்தது.

💐💐💐💐

அஷ்வினின் கடையிலிருந்து வீட்டிற்கு கிளம்பி இருந்தனர் இருவரும். சாருகேஷ் வண்டியை செலுத்திய வண்ணம் இருந்தவன் "என்னடா முகம் ஒரு மாதிரி இருக்கு".என்றிட

"ஒன்னும் இல்ல அண்ணா நத்திங்" என்று கூறி சாலையில் கவனமானாள்.

அவளை பார்த்தவன் "இல்ல டா சம்திங் மிஸ்ஸிங் மா. நீ இல்லன்னு சொல்லும்போதுதான் ஏதோ இருக்குறா மாதிரி தோணுது. எதுவானாலும் உன் பிரெண்டா நினைச்சி சொலலுடா" என்று அவளை ஊக்க அண்ணனின் கோவத்தை அறிந்து வைத்திருந்தவள் கவனமாக இதை தவிர்த்தாள்.

அவன் அக்கரையில் நெகிழ்ந்தவள் நிஜமாவே ஒன்னும் இல்ல ணா லேசா தலை வலி மத்தபடி i am perfect என்றவள் அண்ணா கவி அண்ணிய பாக்க போகலாமா என்று கேட்க

"ம் வேற ஒன்னும் இல்லல" என்னவனுக்கு சிரித்து இல்லை என தலை ஆட்டியதும் திருப்தியுற்றவன் "இன்னைக்கு வேணாம் டா ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்து டையர்டா இருப்பா நாளை கூட்டிட்டு போறேன் டா". என்று கூறியவன் மற்றவற்றை பேசியபடி வரவும் கடைசியாய் பேச்சு அஸ்வினின் நகைகடையில் வந்து நின்றது.

இதுவரை அவனை மறந்து பலவற்றை பேசியவள் முகம் மீண்டும் இருண்டு போனது "நல்ல வெரைட்டியா இருந்ததுல நகைங்க. ரியலி குட்" என்று நகைகளை பற்றி பேசியபடியே "உன் கல்யாணத்துக்கும் இங்கேயே எடுக்கலாம்னு இருக்கேன்" என்றிட.

"ப்ச் இங்க வேணா ணா" என்றாள் அருவருப்பான முகத்துடன்.

"ஏன்டா நல்லா தானே இருக்கு. அதுவும் நம்ம டிரஸ்ட்டுக்கு ஒன் ஆஃப் தி மெம்பர். தெரிஞ்ச கடை வேற" என்று கூற.

"நகை நல்லா இருந்தா போதுமா என் மனசுக்கு ஒப்பவேண்டாமா அவனும் அவன் முகரையும் எனக்கு அவனை பார்க்கவே பிடிக்கல. என்று படபடவென பொறிந்தவளை வியப்பாக பார்த்தான். மெல்ல பழைய உத்ராவின் படபடபேச்சை கேட்டது போல் இருக்க வியப்பை முகத்தில் தேக்கி ஏண்டா.என்ன ஆச்சி அவன் ஏதாவது மிஸ்பிகேவ் பண்ணானா" என்று கேட்க

"நீங்க அறிமுகம் செய்து வைச்ச அன்னையிலேருந்தே அவனை பிடிக்கல அண்ணா எனக்கு... என்னவோ அவனை பார்க்கும் போது எல்லாம் ஒரு அருவருப்பான ஃபீல்... இதுவரை நாலு ஐந்து முறை பார்த்து இருக்கேன். தவிர்க்க தான் நினைப்பேன். ஆனாலும் எப்பவும் பக்கத்துல வரா மாதிரியே இருக்கு" என்று கூற வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தவனோ சடன் பிரேக்குடன் வண்டியை நிறுத்தி இருந்தான்.

"நீயேன் அங்கேயே சொல்லல. ராஸ்கேல். அவனை...."என்று பற்களை கடிக்க

"அண்ணா அதனால தான் சொல்லல? இப்பவும் ரொம்ப ஓவரா போயிட்டான். செயினை கழுத்துல வைக்க பக்கத்துல வந்து நிக்கறான். அறையனும் போல இருந்துச்சி" என்று கோவத்துடன் கூறியவள் "அதான் உன் பக்கத்துல வந்து நின்னுட்டேன்". என்றதும்

"நான் உன்கூட இருக்கும் போதே அவன் உன் பக்கத்துல வந்து இந்தமாதிரி பண்ணி இருக்கான். அவனை சும்மா விடசொல்றியா???" என்று திட்டியவன் "அங்கேயே சொல்ல வேண்டியது தானே. அவனை ஒரு வழி பண்ணிருப்பேனே" என்று கையை முறுக்க.

"அண்ணா அவனை பார்த்தாலே ஒரு பொறுக்கி எஃபெக்ட் எனக்கு வருது. சோ அது அவன் சரியாவே செஞ்சி இருந்தாலும் எனக்கு தப்பா தெரிஞ்சி இருக்கலாம்" என்று அவனை சமாதனப்படுத்தியவள் வீட்டிற்கு செல்ல சொல்ல அவன் மீதும் ஒரு கவனம் வைக்க வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டவன் தங்கையை இன்னும் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தான்.

இரவு நேரம் நீலவானம் இருளை போர்வையாய் போர்த்திக் கொள்ள நட்சத்திரங்கள் ஆங்காங்கே மின்னிக்கொண்டு அவளை பார்த்து சிரிப்பது போல மலர்ந்து ஒளிவீசிக் கொண்டு இருந்தது. உத்ராவின் மனதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் அவளை ரசிக்க வைத்துக்கொண்டு இருந்தான் காதல் ரெமோ கோபி தனது புதிய அவதாரத்தால்.

காலை குட் மார்னிங் மெசேஜ் முதல் இரவு குட் நைட் மேசேஜ் வரை அனுப்பி 'தான் ஒருவன் இருக்கிறேன்' என்று நினைவுப்படுத்துவது முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒருவகையில அவளை சந்திக்க கொள்ள வைத்துவிடுவான். அவளுக்கும் அது பிடித்து இருந்தது ஆனாலும் கொஞ்சம் மனதின் ஒரத்தில் சின்ன நெருடல் இருக்கவே தான் எடுக்கும் முடிவு சரியா தவறா என தெரியாமல் மதில்மேல் பூனையாய் அவனை பற்றிய நினைப்புடனே மெத்தையில் படுத்திருக்க வாட்சப்பில் குருந்தகவல் வந்ததற்கான ஒளி வரவே ஆவளுடன்

உடனே அதை திறந்து பார்க்க

"ஹாய் அம்மு" என்று அனுப்பி இருந்தான் கோபி.

அதை திறந்து பார்க்கவும் வாயடைத்தவள் "அம்முன்னு யாரும் இங்க இல்ல. என் பேரு உத்ரா" என்று மெசேஜ் அனுப்பி இருந்தாள்.

"நீங்க உத்ராவாவே இருங்க மேடம். என் கண்ணுக்கு நீங்க அம்மு தான்" என்று பதில் அனுப்பியவன் அவள் தகவலுக்காக காத்திருந்தான்.

சிலநேர மௌனத்திற்கு பிறகு அவனுக்கு வியப்பை காட்டும் ஸ்மைலியை அனுப்பியவள் "தைரியம் தான் நல்லா பேசுறீங்க" என்று கூடவே அனுப்பி இருந்தாள்.

"உன்னை மயக்க பேசல. உன்னிடம் மயங்கி பேசுறேன்" என்று அனுப்பி இருந்தான்.

"பார்ரா. கவிதையெல்லாம் வருது" என்று ஆச்சர்ய இமோஜியை அனுப்பி இருந்தாள்.

"உயிர் உள்ள கவிதையே, என் உயிரில்லாத வார்த்தைகளை கவிதை என்று கூறுவதை நினைத்து பெருமைகொள்கிறேன்" என்று மலர் கொத்துக்களையும் கைகூப்பும் இமோஜிகளையும் அனுப்ப.

"சத்தியமா முடியல கோபி. ப்ளீஸ் தெரியாம சொல்லிட்டேன். இதோட விட்டுடுங்க" என்று வாயை பூட்டிய ஸ்மைலியையும், தரையில் மண்டியிடும் ஸ்மைலிகளை அனுப்பி இருந்தாள்.

"ஹா.. ஹா.." என்று சிரித்து "குட் நைட் அம்மு. நல்லா தூங்கு" என்று கோபி அனுப்பி விட.

"குட் நைட்" என்று பதில் கொடுத்து செல்லை அணைத்து பக்கத்தில் வைத்த உத்ரா, அவன் அனுப்பிய வார்த்தையாடல்களை நினைத்து பார்த்திருந்தாள். இதுவரை தன் காதலை உணர்த்தினானே தவிர மனதை ரணமாக்க முனையவில்லை கூறும் ஒவ்வொரு சொற்களிலும் கன்னியத்தை தவறவிட்டதில்லை அதை ரசித்து மென்னகையுடன் உறங்கி இருந்தாள்.

💐💐💐
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 60
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN