காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 61

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பார்கவி கர்ப்பமாய் இருப்பதை அறிந்த மாணிக்கமும் மஞ்சுவும் இளைய மகள் வித்தியாவுடன் அன்று மாலையே கவியை காண அவள் இல்லம் வந்து கொண்டு இருந்தனர்.

மருமகளின் இனிப்பான செய்தி கேட்டு அகமும் முகமும் மலர உடனே ஸ்வீட் செய்ய தொடங்கி விட்டார் ஆதி மருத்துவமனையில் இருந்த வந்த கவியின் உடல் மிகவும் சோர்வுற்றிருக்க அவளை கீழ் அறையிலையே ஓய்வெடுக்க அனுப்பி வைத்தவர் அவளுக்கு பழசாற்றினையும் செய்து கொண்டு இருந்தார்.

ஹாலில் மகனுடன் பேசிக்கொண்டு இருந்த ராஜராமன் கவியின் பெற்றோர்கள் உள்ளே வருவதை கண்டவர் "வா... ராஜா. வாங்க மா வாங்க" என்று அழைத்து நண்பனையும் அவன் குடும்பத்தையும் வரழேற்று அருகில் அமரவைத்துக்கொண்டு விட கேஷவும் "வாங்க மாமா வாங்க அத்த" என்று அழைக்க ஆதியும் தன் பங்கிற்கு அவர்களை வரவேற்றவர் "வா மா கல்யாண பொண்ணு எப்படி இருக்க???" என்று தியாவை அணைத்து அவள் தலை வருடிவிட்டார்.

கல்யாண பெண் என்று சொல்லவும் பெண்மைக்கே உண்டான நாணம் வர கொஞ்சம் வெட்கம்கொண்டே "நல்லா இருக்கேன் அத்த" என்றிட "அட நம்ம தியாவுக்கு வெட்கபட கூட தெரியுமா!!!" என்று அதிசயம் போல் அவர் கேட்கவும் அவர் தோல்களிலேயெ சலுகையாய் சாய்ந்து கொண்டவள் "அத்த" என்று சிணுங்கி விட்டு "இப்போ பார்க்க வந்தது உங்க மருமகளை ஆனா நீங்க என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கிங்க. இது எல்லாம் நியாயமே இல்ல" என்றிட.

"எப்போ எப்போ கேப் கிடைக்குதோ அப்போ எல்லாம் நாம ஸ்கோர் பண்ணிடனும் சின்ன மருமகளே. அப்புறம் வாய்ப்பு கிடைக்காம போயிட்டா.... இப்படி ஒரு வாயாடிய வாயடைக்க கிடைச்ச வாய்ப்பை விடுவேனா.... எவ்வளவு பேசுவ. உன்னை ஆஃப் பண்ணவும் டாபிக் கிடைச்சிடுச்சே" என்று கூறவும்.

"இதுக்கு என் அத்தையே பரவாயில்லை நீங்க ரொம்ப கலாய்க்கரீங்க" என்று உண்மையை ஒத்துக்கொண்டவள் வேற வழியில்லாமல் சரணாகதியாக அவளை கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர் வந்திருந்தவர்களை உபசரிக்க ஆயத்தமாக சமயலறை நோக்கி செல்ல முயன்றார்.

அங்கிருந்து நகர்ந்தவரை அழைத்த மஞ்சு "அண்ணி எங்க போறீங்க எதுவும் வேண்டாம். வந்து உட்காருங்க உங்களையெல்லாம் பார்த்து பேசி எவ்வளவு நாள் ஆகிடுச்சி இப்பவும் சமயலறைக்கு எதுக்கு போறீங்க. அப்புறம் பாத்துக்கலாம்" என்று அமர சொல்ல.

"அட இருங்க அண்ணி. எதுவும் பெருசா பண்ணிடல கொஞ்சம் இனிப்புதான்" என்று கூறி தான் செய்ததை சமையல் பெண்மணியிடம் கொண்டு வர சொன்னவர் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்துக் கொண்டார்.

"அண்ணி விஷயத்தை கேட்டதும் அப்படியே பூரிச்சி போயிட்டேன். எனக்கு கையும் ஓடல காலும் ஓடல கவிய பார்க்கணும் போல இருந்துடுச்சு" என்றவர் "அவ எங்க அண்ணி???" என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

நண்பர்கள் இருவரும் பரஸ்பரம் பேசிக்கொண்டாலும் கேஷவும் அதில் கலந்துக் கொண்டான். இருந்தும் அவ்வப்போது மாடிபடி அருகில் இருக்கும் அறையின் பக்கம் கண்கள் தொட்டு மீண்டுக்கொண்டே இருந்தது.

கண்களால் கவியை தேடிய தியா "அத்த அக்கா எங்க???" என்று கேட்கும் போதே கேஷவின் கண்கள் அறையை திண்டியபடியே இருந்ததை பார்த்தவள் "கண்டுபிடிச்சிட்டேனே.... கண்டுபிடிச்சிட்டேனே...." என்று குரல் கொடுக்கவும் சுதாரித்தவன் தலையை வேறை புறம் திருப்பிக்கொள்ள.

"ஹேய் தியா அடங்கபடாரி. ஏண்டி இப்படி கத்துற???" என்று பெண்ணின் கையை பிடித்து அமர வைக்க முயன்ற தாயின் கைகளில் இருந்து விடுபெற்றவள் டீபாய் முன்னே நின்று "அத்த மாமா அம்மா அப்பா எல்லாம் நல்லா கேட்டுக்கோங்க. நீங்க யாரும் கவி இருக்க இடத்தை சொல்லல நானே கண்டுபிடிச்சி சொல்றேன். பெட்டா" என்று கேஷவின் முகம் பார்த்து சொல்ல.

"அப்படியா சொல்லு பார்க்கலாம்" என்று ஆதி கேட்கவும் "இதோ இந்த அறையில் தானே???" என்று மாடிப்படியின் பக்கமாய் இருந்த அறையின் திருகை கை வைத்து திருகவும் பெற்றவர்களின் குரல் கேட்டு கவி வெளியே வரவும் ஒன்றாய் நிகழ.

ஆச்சர்யமாய் அவளை பார்த்தார்கள் இருவரின் பெற்றவர்களும்

"நீ எப்படி கண்டுண்டுபுடிச்ச தியா???"

என்று ஆதி கேட்க

"அது அதுக்கெல்லாம் தனி திறமை வேணும்" என்று கேஷவினை பார்த்து கூற

அவளின் கிண்டல் தன் பக்கம் திரும்புவதை உணர்ந்த கேஷவ் "இதோ வந்துடுறேன்" என்று வேலை இருப்பது போல் பாசாங்கு செய்து அந்த இடத்தில் இருந்து நழுவி வெளியே சென்று விட்டான்.

கணவன் வெளியே செல்லவும் அதை பற்றி தோண்டி துருவாமல் "அம்மா.... அப்பா......" என்று அருகில் வந்தவள் தியாவை அணைத்துக்கொண்டு அவர்களை பார்த்த சந்தோஷத்தில் "எப்போ வந்த???" என்று விசாரித்துக்கொண்டே அவர்களின் அருகே அமர்ந்துக்கொண்டாள். தந்தையின் அருகில் அமர்ந்தவள் "அப்பா...." என்று அழைத்து அவரின் தோள் சாயவும் அவளின் அணைத்து விடுவித்தவர் "எப்படி டா இருக்க???" என்று அன்பாய் விசாரிக்க "நல்லா இருக்கேன் பா..." என்றாள் சந்தோஷமாக கவி கூறவும்.

அவளின் குதுகலத்தையும் அவள் அசைந்து ஆடி உட்கார அதை கண்ட தியா பதட்டத்துடன் "அச்சோ அக்கா ஏன் இப்படி சத்தமா பேசுற??? அதிர்வா உட்காருர அமைதியா இரு. உள்ள இருக்க பாப்பா பயப்படபோகுது" என்று தியா அவளை பூ வை தாங்குவது போல் மெல்ல கை பிடித்து கேட்க.

அவளின் கையால் அவளின் தலையில் ஒர தட்டியவள் "ஏய் நீ சைன்ஸ் ஸ்டுடண்ட் தானே. எனக்கே சந்தேகமா இருக்கு. இதுக்குள்ள எப்படி டீ பாப்பா பயப்படும்" என்று கேட்க

தலையை தட்டிக்கொண்டு "ஓவர் எக்ஸைட்மெண்ட்ல இருக்கேன் கவி. என்ன பேசுறதுன்னே தெரியல. பாப்பா பாப்பவை பத்தி மட்டுமே நினைச்சிட்டு வந்தேனா அது அப்படியே மைன்ல செட் ஆகிடுச்சி" என்று அவளின் வயிற்றில் கையை வைத்து பதிலை தர.

அவள் கையை அழுந்த பிடித்துக்கொண்டு சிரித்து. "அதுக்கு இன்னும் நாள் இருக்கு டா..." என்றவள் "சரி சரி எங்கே அந்த கேடி கால் பண்ணாணா!!! ஒரு போன் கூட பண்றது இல்ல. அவ்வளவு பிஸீயாகிட்டானா???" என்று கேட்டதும்.

"ஏய் கேடியா!!! யார கேடிங்கர அவனை நான் மட்டும் தான் கேடி கேப்மாரி கொரில்லன்னுலாம் திட்டுவேன்..." என்று உரிமை கொடி பிடிக்கவும்.

"மா பாருங்கமா இவள, நான் சித்துவ திட்ட கூடாதாம். இவதான் திட்டனுமாம். அவன் இவளுக்கு கல்யாணம் பேசும் முன்னமே எனக்கு ஃப்ரெண்டு தானே மா நான் திட்ட உரிமை இல்லையா???" என்று இவளும் தன் பிள்ளை உண்டாகி இருக்கும் நிலையையும் மறந்து போர்க்களத்தில் குதிக்க.

பார்த்துக்கொண்டு இருந்தவருக்கே 'அய்யோ' வென்று இருந்தது "ஆரம்பிச்சிட்டிங்களாடி உங்க சண்டைய என்னடா கொஞ்ச நாள் இல்லையே திருந்திட்டிங்களோன்னு பார்த்தேன். அதானே நீங்கலாம் யாரு அந்த வாணரபடைக்கே தளபதியாச்சே" என்று மஞ்சு மகள்களை பாராட்டி பேசியவர் தியாவை பாரத்து.

"இது என்னடி இப்பவும் அந்த புள்ளைய அவன் இவன் திட்டிக்கிட்டு சுத்தர அவளுக்குதான் அறிவு இல்ல. உனக்கு கூடவா அறிவு இல்ல கவி பாவம் அந்த புள்ள இவ கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடபோகுதோ!!!" என்று சித்துவினை நினைத்து பரிதாபப்பட்டார் மஞ்சு. வெளியே நின்று இருந்தாலும் மனைவியின் பேச்சுகளுக்கு மாமியாரின் திட்டும் காதில் விழ வெளியே இருந்தபடியே நகைத்துக்கொண்டு இருந்தான் கேஷவ். மாணிக்கமோ "என் பிள்ளைங்க எப்பவும் ஒரே மாதிரி தான் மஞ்சு தாயை போல பிள்ளை நூலை போல சேலைன்னு சொல்லுவாங்க... நீ பழமொழியை கேள்விபட்டதில்லையா???" என்று கூறவும்.

"ம்கூம். வந்த இடத்துலயும் இதே வேலதான். என்னை வம்புக்கு இழுக்கலன்னா அந்த நாள் உங்களுக்கு ஓடாதே... நான் அவங்கள சொன்ன நீங்க என்கிட்ட வாங்க" என்று கூற.

"அங்க மட்டும் இல்ல அண்ணி. இங்கேயும் இதே புராணம் தான் என்னை வச்சிதான் இவங்களுக்கு பொழுது போக்கே. இங்க யார் எது பண்ணாலும் என் தலை தான் உருளும்" என்று ராஜாராமனை பார்த்து ஆதி நொடித்தபடி கூற...

"என்ன ஆதி இப்படி சொல்லிட்ட என்னைக்காவது நீ கிழிச்ச கோட்டை தாண்டி இருக்கேனா!!!" என்று வினாவை எழுப்ப "அதான் சுத்திக்கிட்டு போயிடுவிங்களே என்னைக்கு தாண்டி இருக்கீங்க???" என்று சிரிக்காமல் கூறிவிட "இனி இங்க இருந்தா நம்ம டேமேஜ் பண்ணிடுவாங்க டா வா நாம் போலாம்" என்று கூறி மாணிக்கத்தினையும். அழைத்துக்கொண்டு ராஜாராமன் வெளியே சென்று விட்டதும்.

"நீங்க பேசிட்டு இருங்க அண்ணி. இப்போ வந்திடுறேன்" என்று அவர்களை தொடர்ந்து அவர்களுக்கு தனிமை கொடுத்து ஆதியும் எழுந்து செல்ல மகளிடம் திரும்பிய மஞ்சு அவளின் தலையை கோதி "என் தங்கம்" என்று நெற்றி முத்தம் வைத்து "ரொம்ப சந்நோஷமா இருக்கு டா அம்மாவுக்கு... நான் ரொம்ப தவிச்சி போயிருந்தேன் உன் வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு என் வயித்தையும் மனசையும நிறைச்சிட்ட டா என் செல்லம்" என்று திருக்ஷ்டி கழித்தவர். "காரம் அதிகம் சாப்பிடாத. அளவா சாப்பிடு. அத்த சொல்ற படி நடந்துக்கோ... இப்போ நீ தனி ஆள் இல்ல உனக்குள்ள எரு ஜீவன் வளருது... தனியா எங்கேயும் போக கூடாது சரியா... உன் விளையாட்டு புத்தியை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு ஜாக்கிரதையா நடந்துக்க" என்று மகளுக்கு அறிவுறைகளையும் கூற மறக்கவில்லை... சிலவற்றை பேசியபடி இருந்தவர்களுக்கு பலகாரங்களை கொண்டு வந்து கொடுத்த ஆதியிடம் இருந்து தட்டை வாங்கிய தியா "அத்த கொடுங்க நான் மாமாவுக்கும் அப்பாவுக்கும் கொடுத்துட்டு வரேன்" என்று எடுத்து சென்றவள் அவர்களுக்கு கொடுத்து விட்டு கேஷவிற்கும் கொடுக்க அவளை முறைத்தபடியே வாங்கி கொள்ள.

"என்ன மாம்ஸ் முறைப்பா இருக்கீங்க" என்று கேட்க

"நல்லா பேச கத்து வைச்சிருக்க. உனக்கு அவ சீனியரா. இல்ல நீ அவளுக்கு சீனியரா உங்கள பேச்சுல அடிச்சிக்க முடியல" என்று கூற.

இல்லாத காலரை ஏத்தி விட்டு "ஈஈஈஈஈஈஈ..." என்று இளித்தவள். "நன்றி நன்றி" என்று தலை வணங்கி பாராட்டை ஏற்றுக்கொள்ள.

"ஏதோ தனி திறமை சொன்னியே. அதுல ஒரு ரெண்டு மூனு என் கிட்டயும் இருக்கு சொல்லவா???" என்று கேட்கவும் முழியை இடவலமாக உருட்டியவள் "என்ன மாமா என்ன திறமை???" என்று சிரிப்பது போல் கேட்க.

"லவ் பண்ணுவாங்க. ஆனா அதை அரேஞ்ச் மேரேஜா மாத்திக்கிர திறமை" என்று சொல்லும் போதே குட்டு உடைந்து விட்டதே என்று பேய் முழி முழித்தவளை பார்த்தபடியே "அப்புறம் அதையெல்லாம் இதுவரையும் மறச்சி மெய்ன்டென் பண்ற திறமை, சுத்தி சுத்தி லவ்வ சொன்ன திறமை" என்று அவன் அடுக்கவும்

"அய்யோ மாமா தெரியாம உங்க லைனை கிராஸ் பண்ணிட்டேன். என் பேரை ரிப்பேர் ஆக்கிடாதிங்க மாமா. இது எல்லாம் உங்க மாமனார் மாமியாருக்கு தெரியாது… தெரிஞ்ச மஞ்சு பத்திரகாளி அவதாரம் எடுத்து கையில சூலத்தோட துறத்தி வருவாங்க பீளிஸ் இனி உங்க ரூம் பக்கம் இல்ல உங்க தெரு பக்கம் கூட தலை வச்சி படுக்க மாட்டேன் மாமா" என்று கூற.

" அதுக்கெல்லாம் பயப்படுற ஆளா நீ…. அட நீதான் ரொமப தைரியமான பொண்ணாச்சே. வா சும்மா வா போய் பேசலாம் அங்கே" என்று அவனும் விடாமல் வம்பு இழுக்க கணவனை தேடி அந்த பக்கம் வந்த கவி இவர்களை நோக்கி வரவும் கவியை கண்டவள் தைரியம் வந்தவளாக "இதோ பாருக்க மாமா. இது எல்லாம் நல்ல இல்ல செல்லிட்டேன். ஆமா நான் உங்க பார்டரை டச் பண்ணபாட்டேன் நீங்களும் டச் பண்ணப்படாது" என்றவள் கவியிடம் "சொல்லிடு கவி. நான் ம்கூம் நான் போறேன்" என்று ஓரே ஓட்டமாய் ஒள்ளே ஓடி மறைந்துவிட.

"என்னங்க ஆச்சி இவளுக்கு. வந்தா... ஏதோ சொன்னா... ஓடிட்டா..." என்று கேட்க மனைவியினை ஊஞ்சலில் அமரவைத்து தானும் அமர்ந்து நடந்ததை அவளிடம் கூற விழந்து விழுந்து சிரித்தவள் "நல்ல மாமா.. நல்ல கொழுந்தியா" என்று சிரித்த மனைவியின் முகம் பார்த்து அவனும் சிரித்தான்.



மருத்துவமனையில் இருந்து நிர்மல் வரும் நேரத்திற்காக காத்திருந்தான் தேவராஜ். ஹாலில் அமர்ந்து இருந்தவன் டி.வியை ஓட விட்டுக்கொண்டு இருக்க, வேலையை முடித்து வந்த நிர்மல் அசதியின் காரணமாய் அமைதியாய் தன் அறைக்கு செல்ல போக அவனை அழைத்தான் தேவா.

“நிர்மல்...”

அவனை கவனிக்காமல் சென்றவன் அண்ணன் அழைக்கவும் “தூங்கலையா அண்ணா???” என்றபடி அவன் எதிரே வந்து நின்றான்.

“உன்கிட்ட பேச தான் நிர்மல் காத்திருந்தேன்” என்றான் தேவா

“ம் சொல்லுங்க ண்ணா. அவ்வளவு முக்கியமான விஷயமா???” என்றபடி அவன் எதிர இருந்த சோஃபாவில் ஷர்ட் பட்டனை கழட்டி சட்டையை தளர்த்தி விட்டபடி அமரந்தான்.

தம்பியை பார்த்து “உனக்கு மேரேஜ் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். நீ என்ன சொல்ற???” என்றிட.

கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு எந்த பெரிய காரணமும் இல்லாமல் இருந்தாலும் தேவா கல்யாணம் செய்து கொள்ளாமல் தான் எப்படி செய்து கொள்வது என்று யோசனையுடன் “முதல்ல உங்களுக்கு பண்ணுவோம்” ணா என்றிட.

வறட்டு புன்னகையுடன் “அந்த அளவுக்கு ஆசை இருக்குன்னு நினைக்கறியா நிர்மல் உன் அண்ணனுக்கு. ப்ச். என் சேப்டர் ஆல்ரெடி குலோஸான ஒன்னு. அதை விட்டு உன் கல்யாணத்தை பத்தி பேசு” என்றிட.

“அண்ணா இன்னும் அவங்களையே நினைச்சிட்டு நீ கல்யாணம் பண்ணிக்காமலையே இருப்பியா!!! அவங்க நல்லாதானே இருக்காங்க. நீ தான் இப்படி தனியா நிக்குற” என்று மனதாங்களுடன் கூற.

“நிர்மல் ப்ளீஸ். எல்லாம் முடிஞ்சி போன கதை மறுபடி பேசி வலியை ஞாபகப்படுத்தாதே.... என் மனசு முழுக்க இருந்தவள மறந்துட்டேன். ஏதோ சந்தர்ப சூழ்நிலை எங்கள சேரவிடாம செஞ்சிடுச்சி. அவங்க வாழுற வாழ்க்கையாவது நல்லா இருக்கனும்” என்றிட.

“அதுசரி.... அவங்க மட்டும் நல்லா இருந்தா போதுமா நீ... நீங்களும் நல்லா இருக்கனும் இல்லையா... உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனவங்க எதிர்ல நல்லா வாழ்ந்து காட்ட வேண்டாமா!!! இவங்க இல்லன்னா இன்னொருத்தர் உங்க லைஃப்லயே வரக்கூடாது நினைக்கிறீங்களே ண்ணா. அது அவங்கள மறந்ததை காமிக்கலையே” என்று அண்ணன் மீது இருந்த பாசத்தில் கேட்டு விட.

“ப்ச்... நிர்மல் லவ் வெறும் ஈர்ப்புனால வர்றது மட்டுமா இருந்தா நீ சொல்றாமாதிரி மனசை மாத்திக்கிட்டு வேற லைஃப் ஸ்டார்ட் பண்ணி இருக்க முடியும். இதுல மனசும் சம்பந்தப்பட்டு இருக்கு நிர்மல். காதலியா இருந்தவளை மனைவியா நினைச்சிட்டு இப்போ வேற யாரையோ அந்த ஸ்தானுத்துல என்னால பாக்க முடியல” என்று வேதனையுடன் கூறியவன் “என்னை விடு நிர்மல் உன்னாலாவது இந்த வீட்ல நல்லது நடக்கனும்” என்று கூறினான்.

“சாரி ண்ணா உன் கஷ்டம் தெரிஞ்சும் நான் கேட்டு இருக்க கூடாது” என்று கூறியவன் “மன்னிச்சிடு ண்ணா” என்று கூற.

“பரவாயில்லை டா. நீ தானே இருக்க எனக்கு ஒன்னுனா கேட்க” என்று தம்பியை சாமாதானப்படுத்தியவன். மீண்டும் அவன் திருமண விஷயத்தை பேசி “பொண்ணு யாரு தெரியுமா??? நான் உனக்காக பார்த்த பொண்ணு நம்ம சாருகேஷ் தங்கை உத்ரா” என்றிட.

அதுவரை நல்லமன நிலையுடன் இருந்தவன் பூமியே இரண்டாய் பிளந்து அதில் விழுந்தவன் போல் உணர்வு வர தன் அதிர்வை முகத்தில் காட்டியவனின் மனது இதுவரை இப்படி ஒன்று நடக்கும் என்று எதிர்பாராது இருக்க அந்த அதிர்ச்சியில் சித்தம் தடுமாறி கலங்கி போய் அமர்ந்து இருந்தான்.

‘உத்ரா.... அவளை கல்யாணம் செய்து கொள்வதில் பிரச்சனை இல்லை ஆனால் நண்பன் என்று ஒருவன் அவளை அடைய துடித்துக்கொண்டு இருக்கிறான். இன்றோ மருத்துவமனைக்கே வந்து தன் ஆட்டத்தை தொடங்கி தன் மூலமாகவே உத்ராவின் அண்ணனுடன் பேச வைத்து விட்டான். அவளை அடைய எந்த எல்லைக்கும் செல்பவன் முன்னே என் மனைவி ஆக போகிறாள் உத்ரா என்று கூறினால் அடுத்த நொடியே தயக்கம் இல்லாமல் என்னோட அனுப்பி வை டான்னு கேட்கவும் தயங்க மாட்டான். அந்த அளவு அவனுக்கு உத்ராவின் மேல் பைத்தியம் பிடித்து ஆடுகிறது.

அடுத்து உத்ரா, அவளுக்கு என்றாவது ஒரு நாள் மறந்த அனைத்தும் ஞாபகம் வருமானால் தன்னையும் அடையாளம் காண கூடும்... அப்போது அவளின் நிலை என்னவாகும்... இதுநாள் வரையிலும் ஒரு நல்ல மனிதனாய் வாழ்க்கை நடத்தா விட்டாலும் அஷ்வினின் செயலையும் தன் அண்ணனது காதலையும் மனதில் வைத்து இனியாவது மாற வேண்டும் என்று நினைத்து இருந்தவனுக்கு தன் அண்ணன் கூறிய திருமண செய்தி தன் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவிற்கு சூராவளியாய் தெரிய’, “அண்ணா” என்று அலறி விட்டான் நிர்மல்.

“என்ன நிர்மல் எக்ஸைட்மெண்டா இருக்கா ” என்று அவன் கத்தியதற்கு மகிழ்வாய் இருப்பதாக எண்ணி கேட்க.

“அது அந்து அண்ணா உத்ரா அவங்கள... அவங்கள... அந்த எண்ணத்துல நான் பார்த்தது இல்லை...

உங்களுக்கு சாருகேஷ் அண்ணா ஃப்ரெண்டா இருந்ததுனால அவரையும் அப்படி தான் கூப்பிடுறேன். அதனால உத்ரா அவங்களை” என்று நிறுத்த..

“எந்த காலத்துல இருக்க நிர்மல்.... அதனால தங்கச்சி ஆக்கிட்டியா???” என்று நொடியும் தாமதிக்காமல் தேவா கேட்க தலைகுனிந்தவனை கண்டு சிரித்தவன். “அவளுக்கு நடந்ததை நினைச்சி நீ வேண்டாம்னு சொல்றியா???” என்றான் பட்டென.

“இல்ல ண்ணா அப்படி இல்ல. ஆனா அது வந்து... அது… எனக்கு ஒரு எண்ணம் அவங்கள பார்த்தா வரல இதுவரை அப்படி நினைக்கவும் இல்லை.” என்று தடுமாற.

“உன் தடுமாற்றம் புரியது. இதுவரை நினைக்கலனா என்ன இனி நினைக்கலாமே உனக்கு நல்ல வாழ்க்கை துணையா இருப்பா நிர்மல்… என்றவன் நான் சட்டுன்னு உன்னை கேட்டதுனால உனக்கு எதுவும் தோணாமல் இருக்கலாம். நல்லா யோசி... நல்ல பொண்ணு… அவளுக்கு எந்த கெட்டதும் நடக்கல. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன் அது உனக்கே தெரியும்.... அவளை நாம நல்லா பாத்துக்கனும்” என்று கூறி இதோடு பேச்சு முடிந்தது என்று தேவா எழுந்து சென்று விட அங்கிருந்து எழ கூட மறந்து அப்படியே அமர்ந்து இருந்தான் நிர்மல்.



மிகுந்த யோசனையுடன் அமர்ந்து இருந்தாள் உத்ரா. வந்ததிலிருந்து மௌனமாக இருக்க “உதி மா.. என்னடா என்னமோ பேசனும்னு வெளியே கூட்டிட்டு வந்த, வந்ததுல இருந்து ஒன்னுமே சொல்லாம அமைதியா குனிஞ்சிட்டு இருக்க!!!” என்ற பார்கவியின் குரல் அவளின் தலையை உயர வைத்தது.

தன் முகம் பார்த்தவளின் மனதில் இருந்த குழப்பத்தை படித்தவள் “எது உதிமா உன் மனசை போட்டு அறுக்குது???” என்று கேட்டதும்.

ஆதரவாய் அவளின் கைகளை பிடித்துக்கொண்ட உத்ரா “அண்ணி அது வந்து தயக்கமா இருக்கு நான் பண்றது சரியா தப்பான்னு தெரியல. ஆனா உள்மனசு சொல்றத உங்ககிட்டதான் முதல்ல சொல்றேன்” என்றதும்.

“என்னடா ஏதோ சரி தப்புன்னு பூடகமா சொல்ற!!!. எதுவா இருந்தாலும் சொல்லு டா என் கிட்ட எதுக்கு தயக்கம்” என்று அவளை ஊக்கினாலும் என்ன கூறப் போகிறளோ என்று பார்கவிக்குமே ஒரு பதட்டம் இருந்தது என்னவோ உண்மை தான்.

“அண்ணி வாழ்க்கையில ஒரு முறை தோத்துட்ட என்னால அடுத்து வர ஒரு புது வாழ்க்கைக்கு தயாராகிட்டேன்னு நினைக்கும் போது நான் சரியில்லையோன்னு தோனுது” என்று தன் மனதில் இருப்பதை கூற

“ஹேய் என்ன பேசுற. அப்படியே அறைஞ்சேன்னு வை பல்லு அத்தனையும் உதிர்ந்துடும். என்ன வார்த்தடி பேசுற நீ... தப்பு தப்பா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிற. அப்படி நீ தப்புன்னு நினைக்கிற அளவுக்கு என்ன நடந்துச்சு???” என்று கோபமாய் கேட்க.

“அண்ணி கோவப்படாதீங்க. உங்க உடம்புக்கு அது ஆகாது ப்ளீஸ்” என்று அவளை சமாதானம் செய்யவும்.

பெருமூச்சை ஒன்றை வெளியேற்றிய பார்கவி “சரி கோவமாயில்லை சொல்லு என்ன நடந்துச்சு யாரால இப்படியெல்லாம் பேசுற??? உன்னை யாராவது ஏதாவது சொன்னாங்களா???” என்றதும்.

இருகைகளையும் கோர்த்தும் பிரித்தும் தன் நிலையை சமன்படுத்தியவள் ஒரு முடிவெடுத்தவளாக “அண்ணி நான் கோபிய விரும்புறேன்” என்றாள்.

‘என்னடா நடக்குது இங்க!!! ஷாக்கு மேல ஷாக்கா இருக்கு. இவ லவ் பண்றன்றதே ஷாக்கு. இதுல கோபிய லவ் பண்றன்னு சொல்றதுல இன்னும் ஷாக்கா இருக்கே. இப்பவே தலைய சுத்துதே' என்று தலையை கைகளில் தாங்கியவள் “நீ மட்டும் தானா!!! இல்ல அந்த குரங்கும் பண்றானா???” என்று கேட்க.

“அது அவரு தான் முதல்ல சொன்னாரு. அப்பவும் நான் வேண்டான்னு தான் சொன்னேன். ஆனா கொஞ்ச கொஞ்சமா என் மனசை கரைச்சிட்டாரு” என்று குனிந்து அவள் கோவப்படுவாளோ என்று கூற.

“அட பார்ரா அந்த கோட்டான் இந்த வேலைய கூட செஞ்சி இருக்கா???” என்று வாயில் கைவைத்து ஆச்சர்யப்பட்டவள் “மொத்தத்துல காதல் பைத்தியம் புடிச்சி அரைகிறுக்கா இருந்தவன் முழு கிறுக்கா அலையரான்னு சொல்லு அந்த சாம்பிராணி” என்று நகைத்தவள் “ஆனா உனக்கு அவன் தான் கரெக்டான பேர். பேசி பேசியே ஒருவழி ஆக்கிடுவான். ஆனா என்னகொஞ்சம் கடி இருக்கும் பாத்து பத்திரமா இருந்துக்கோ” என்று கூறவும்.

“அண்ணி” என்று உத்ரா பார்கவியினை பார்க்க.

“இன்னுமா புரியல. அந்த எருமைய நீ விரும்பருதுல எனக்கு பரிபூரண சந்தோஷம்னு சொல்றேன். ஆனா ஒன்னு சாருகேஷ் அண்ணாகிட்ட நீதான் உன் மனசுல இருக்கிறதை சொல்லனும் சரியா. ஒரு முறை உன் காதல வீட்டுல மறச்சிட்டன்றதையே அவருக்கு தாங்கல. அந்த மனக்கசப்பை போக்க நியே உன் மனசுல இருக்கிறதை அவர் கிட்ட சொல்லு”.

“அண்ணி பயமா இருக்கு.

“நோ உதிமா. அவருக்கு நீ ரொம்ப முக்கியம். உன் விருப்பத்தை சொன்னா நிச்சயம் சம்மதிப்பார். கோபி மேலயும் அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு… இப்போ இதை நீ அவர்கிட்ட சொல்றதுதான் நல்லாதா என் மனசுல படுது நானும் கேஷவ் கிட்ட உன் விஷயம் சொல்றேன் என்று கூற.

அவள் இன்னும் தெளிவில்லாமல் பயத்துடன் இருக்க அண்ணி நீங்களும் கேஷவ் அண்ணாவும் பேசுங்க என்றதும்

“ இல்ல உதி மா நீதான் பேசனும் ஒரு பிரெண்டா தான் அவர் உன்னை டீரீட் பண்றாரு பயப்படாம பேசு டா... ம்…. இன்னும் லேட் பண்ணினா நீ நிர்மலை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா இருக்கும். என்ன நிர்மலை கட்டிக்க சம்மதமா???” என்று அழுத்தமாக கேட்கவும்.

அவள் சொல்லவும் சற்றும் யோசிக்காமல் பட்டென “முடியாது. முடியவே முடியாது என்னால நிர்மலை இல்லை, கோபியை தவிர யாரையுமே கட்டிக்க முடியாது” என்று பதட்டத்துடன் உறைக்க, “காம்டவுன் உதி கூல் கூல். நான் உன்னை ஏத்தி விடுறதுக்கு சொன்னேன்…. ஓகே.... உன் கல்யாணம் கோபி கூடதான் சரியா!!” என்றதும் “இன்னைக்கே நீ அண்ணன்கிட்ட பேசிடு” என்றவள் தான் வரவழைத்து இருந்த பழச்சாற்றினை குடிக்க தொடங்கி இருக்க, மொட்டுக்கள் அவிழ்ந்த புது மலராக மலர்ந்து இதழ்களில் சிரிப்பை உதிர்த்து இருந்தாள் உத்ரா.

***************

அஷ்வின் வீடு பெரிய வெள்ளை நிற பங்களா அஷ்வினின் தாத்தா காலத்தில் காட்டியது காலங்களை கடந்து கம்பீரயாக நின்றது. அஷ்வினின் தாய் இரண்டு வருடங்களுக்கு முன் உடல் நலமில்லாமல் இறந்து விட தங்கை வெளிநாடு வாழ் இந்தியரை மணம் முடித்து அங்கேயே குடிபெயர்ந்து வசிக்கிறாள். தந்தையோ தற்போது உடல் நலக்குறைவாலும் மகனின் அடுக்கான செய்கைகளாலும் மனம் நொடிந்தவர் படுத்த படுக்கையாகி விட, தற்போது அந்த வீட்டில் அவன் அவன் மட்டுமே நடமாடிக்கொண்டு ராஜா வீட்டு கன்னுக் குட்டியா சுற்றிவந்துக் கொண்டு இருக்கிறான்.

வீட்டிலையே அடுக்கி வைத்திருந்த பாட்டில்களில் உயர்ந்த வகையை சேர்ந்த ஒன்றினை எடுத்து டம்பளரில் ஊற்றி அதில் ஐஸ் கட்டிகளை போட்டு தொண்டையில் சரித்து தன் உடல் சூட்டினை தணிக்க போதையை நாடியவன் அதற்கு தோதாக பக்கத்தில் இருந்த அசைவ பதார்த்தத்தை ருசி பார்த்து இருந்தான்.

பின் பக்கம் இருந்த பால்கனியில் யாரோ வரும் சத்தம் கேட்க கையில் கிளாசுடன் அங்கிருந்து எட்டி ஒரு பார்வை வெளிபுறத்தை சுற்றி பார்வையிட்டான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருள் தன் ஆட்சியை அமைக்க எதையும் கணிக்க முடியாமல் செல்லில் இருந்த டார்சசை உபயோகித்து பார்க்க ஏதும் இல்லை என்பதை அறிந்து அங்கிருந்து நகர்ந்தான்.

கண் மூடி படுக்கையில் சரிந்தான். நிஜத்தில் இருப்பது போல கனவிலும் அவளின் உருவம் தோன்றி ஆசையை கிளற அதை அடக்கும் வழி தெரியாமல் மீண்டும் மதுவின் போதையை நாடி கிளாசில் உற்றி அவன் நிமிர கையில கத்தியுடன் ஒருவன் நின்றிருந்தான்.

பார்த்தவன் பயத்தில் கிளாசை கையில் இருந்து நழுவ விட்டு "யார்... யார் நீ??? நீ இங்க எப்படி வந்த??? உன்னை யாரு உள்ள விட்டது???" என்று கேட்க.

"நானா உனக்கு எமன்" என்றவன் "எல்லாருக்கும் தெரிஞ்சா உள்ள விடுவாங்களாடா.. முட்டாளே" என்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஒரே போடாக போட அவன் மீது பாய.

அவனிடம் இருந்து அகப்படாமல் தப்பியவன் வெளியே கதவை நோக்கி ஓடத்தொடங்கி இருக்க, அவனை ஒரே கையால் தலையை பிடித்து வெளுக்க தெடங்கியவன் கையில் இருந்த கத்தியால் அவனின் வயிற்றில் குத்த போக, அந்த தடியனிடமிருந்து அடி தாளாமல் அஷ்வின் தப்பி வெளியே ஓடிவிட பின்னாடியே ஒருவன் குரல் கேட்டு கொல்ல வந்தவன் "என்னடா" என்று திரும்பி கேட்டான்.

"தலைவரு அவனை பமுறுத்த மட்டும் தானே சொன்னாரு. வேணும்னா கை கால உடைக்க சொன்னாரு. ஆனா அவனை கொல்ல கூடாதுன்னு உத்தரவா சொல்லி இருக்காரு அண்ணே" என்று கூறிட.

"நல்லவேளை முனியா நியாபகபடுத்தினியே அவனை குத்தி கொன்னுருப்பேன்... எங்கே போயிடப்போறான் நாயி. வா பேலாம் வாங்குன காசுக்கு அவன் கைய கால முறிக்காம போனா திங்கிற சோறு உடம்புல ஒட்டாது" என்று பேசிய முதலாமவன் அவனை விரட்டி பிடிக்க அவனை தேடி போக உயிர் பயத்தில் காரின் அடியில் ஒளிந்துக்கொண்டு இருந்தவன் நடந்த சம்பாஷணைகளை கேட்க அப்படியே பயத்தில் உறைந்து போய் இருந்தான்

🐵🐵🐵🐵
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 61
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN