காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 64

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உத்ராவை காணும் என்ற பதட்டத்துடன் இருந்தவன் அடுத்ததாக சித்துவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறி இருக்க, தன்னுடன் இருந்த தியாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் கோபி இருந்த இடத்திற்கு விரைந்தான்.

சித்துவினை கண்டதும் அவனிடம் ஓடிச்சென்ற கோபி "மச்சான் மச்சான். அவளை காணோம் டா. அவ வீட்டை விட்டு கிளம்பி 3 மணிநேரம் ஆகுதுடா. எங்க போனான்னே தெரியல" என்று பயத்துடன் கூறியவனை தைரியப்படுத்திய சித்தார்த் "உத்ராவுக்கு எதுவும் ஆகி இருக்காது மச்சி. நீ பதட்டப்படாத. நிதானமா யோசி அவங்க அண்ணனுக்கு சொன்னியா??? அவர் என்ன சொன்னார்??? கேஷவிற்கு விஷயம் தெரியுமா???" என்றான்.

தலையை அழுந்த கோதி தன்னை நிதானப்படுத்த பாடுபட்டவன் இருகைகளாலும் தலையை பிடித்து அப்படியே குனிந்து கண்களில் வெளிவந்த கண்ணீரை மறைத்தான்.

அவனின் தோலை தொட்டு ஆறுதல் படுத்திய சித்தார்த் "கவலைப்படாதடா. வா தேடலாம்" என்று அவனை பைக்கில் அமரவைத்து கொண்டவன் அப்போதுதான் அவன் விழிகள் கலங்கி இருப்பதை கவனித்தான்.

"மாப்ள. என்னடா நீ தைரியமா இருப்பன்னு பார்த்தா இப்படி கலங்குறியே டா... கண்டிப்பா அவளுக்கு எதுவும் ஆகி இருக்காது டா" என்று தைரியம் கூறிட.

"முடியல மச்சி. அவளை..... அவளை மறுபடியும் தொலச்சிட்டமோன்னு தோனுதுடா. ஏதோ அவளுக்கு நடக்கப்போகுது. வரேன்னு சொன்னவள இதுவரையிலும் காணோம்" என்று கரகரப்பான் குரலில் கூற.

அவனை அணைத்துக்கொண்டவன் "உன் காதலுக்காகவாவது அவ கண்டிப்பா உன்கிட்ட வருவா மாப்ள. வா இனி பேச நேரம் இல்ல. அவளை தேடுறதுல நம்மோட கவனம் இருக்கனும்" என்றவன் அவளை தேடி சென்றனர்.

அடுப்பறையில் இருந்த பார்கவிக்கு அந்த வாசனை உமட்டலை உண்டுசெய்ய வாயை பொத்திக்கொண்டு கழிவறையை நோக்கி ஓடிட பின்னயே சென்ற ஆதி அவளின் தலையை பிடித்துக் கொண்டு அவளுக்கு உதவி செய்தவர்

"நான் உன்னை உன் ரூம்லதானே இருக்கச் சொன்னேன். இந்த வாசனை எல்லாம் இப்போ உனக்கு பிடிக்காது உமட்டல் வரும்ன்னு சொன்னா எங்க கேக்குற. அதை கத்துக்குறேன் இதை கத்துக்குறேன்னு அலுச்சாட்டியம் பண்ற கவிமா" என்று அவளை செல்லமாக கடிந்துகொண்டார்.

"அது அதுக்குன்னு நேரம் இருக்கு கவிமா. இப்போ பாரு உனக்கு முடியல. இதுவரையும் வாமிட் இல்லாம இருந்தது சொல்ல சொல்ல கேக்காம வந்து இப்போ கஷ்டப்படுறது யாரு!!!" என்றவரிடம்.

தொண்டை வலியெடுக்க "அத்த முடியல ரொம்ப வயித்தை பிரட்டுது. 'உவக்'" என்றவள் "எனக்கு மயக்கமா இருக்குது உங்க மேலேயே படுத்துக்கேறேன்" என்று கண்கள் சொறுக தோல்களில் வாந்தியின் பலனால் வந்த மயக்கத்தில் சாய்ந்து கொண்டவளை தாங்கியவர் "கேஷவ்.... கேஷவ்....." என்று குரல் கொடுத்தார்.

அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் வெளியே வந்து பார்க்கவும் மனைவியின் நிலையை கண்ணில் பட "என்னமா என்ன ஆச்சு பாருக்கு??? ஏன் இப்படி சோர்ந்து போய் கண்ணெல்லாம் ஒருமாதிரி இருக்கு!!!" என்று அருகில் வந்து மனைவியை தாங்கி கொள்ள.

"எங்கடா இந்த பொண்ணு சொன்னபேச்சை கேக்குறா. தாளிப்பு வாசனை, சாதம் கொதிவர்ற வாசனை, பருப்பு வாசனை எல்லாம் ஆகாது இந்த சமயத்துல சமையல் அறைபக்கம் வராதன்னு சொன்னா கேக்கமா வந்து இப்போ வாமிட் பண்ணி சோர்ந்து போயிட்டா" என்றார்.

"என்னமா நீங்க சொன்னா கேக்கமாட்டுறான்னு சொல்றீங்க கேக்கலன்னா ரெண்டு போட்டு அனுப்ப வேண்டியாதனே மா‌. பாருங்க எப்படி இருக்கா" என்று ஆற்றாமையால் கேட்டிட.

"அட என் தங்க மகனே. குழந்தைய அடிக்க சொல்லியா கொடுக்குற. எழுந்திருக்கட்டும் அவ நல்லா போட்டுக் கொடுக்குறேன்" என்று அவனை தாங்கியவர் "காலைல அவளுக்கு ஆகாரமா கொடுத்தது எல்லாம் வந்துட்டுது வெறும் வயித்தோட இருப்பா. இவளை அழைச்சிட்டு போய் அறையில படுக்க வை கொஞ்ச நேரத்துல மாதுளை பழ ஜூஸ் கொடுத்து விடுறேன்" என்றிட்டவர் அவளுக்கு தேவையானதை செய்ய கிளம்பிவிட்டார் (ச்சே... எப்படி எல்லாம் பாத்துக்குறாங்க 😏😏😏😏 நமக்கு அந்த கொடுப்பனை இல்லையே)

அறையில் படுக்கவைத்தவன் குளிர்ந்த நீரினால் முகத்தை துடைத்து ஏசியை ஆன் செய்யவும் சற்று மயக்கம் தெளிய எழுந்து அமர முயற்சி செய்தவளை முறைத்தவன் "ஏன் பாரு இப்படி ஆகாத வேலையெல்லாம் செய்ற???" என்று கேட்டிட.

முகத்தை தூக்கி வைத்தபடி இருந்தவள் "சும்மா ஒரு ட்ரை பண்ணேன் சுத்தமா முடியல. வாசனை குமட்டுது. உவேக். கண்ட்ராவியா இருக்கு" என்றவளுக்கு அதை நினைக்கவும் மீண்டும் குமட்டல் வர வேகமாக கழிவறையே நோக்கி ஓடினாள்.

பின்னேயே சென்று அவளின் தலையினை பிடித்துக்கொள்ளவும், வாந்தி எடுத்து முடித்தவள் முடியாமல் வந்து அமர அவளுக்கு தண்ணீரை கொடுத்து அமர வைத்தவனுக்கு சாருகேஷிடம் இருந்து ஃபோன் வந்தது.

அவள் முன்னே ஃபோனை எடுத்து பேசியவன் சாருகேஷ் விஷயம் கூறவும் முகம் மாறியது. மனைவி அருகில் இருப்பதை உணர்ந்தவன் அவளை விட்டு தள்ளி சென்று பேச ஆரம்பித்தான்.

"என்னடா சொல்ற எப்போ போனா???" என்று கேட்க,

"காலைல தான்டா. அதுவும் என்கிட்ட சொல்லி அவ கல்யாணத்துக்கு சரி சொன்னதை கோபிக்கிட்ட சொல்ல கிளம்பினாடா" என்று பதட்டத்துடன் குரல் கமர பேசியவனின் பதட்டம் இவனையும் தாக்க, "தைரியமா இருடா. இதோ கிளம்பிட்டேன். மனசை தளரவிடாதே" என்றுபடி ஃபோனை அணைத்தவன் திரும்ப, பின்னால் மனைவி நிற்கவும் திடுக்கிட்டு போனான்.

அவனையே ஊன்றி பார்த்தவளின் பார்வையின் அர்த்தம் விளங்க, "ஒன்னுமில்ல பாரு மா. நான் இப்போ வந்துடுறேன்" என்று வெளியே கிளம்பிட.

"இல்ல ஏதோ நடந்து இருக்கு. என்ன ஆச்சு??? யாருக்கு என்ன??? யாரு காணோம்...???" என்றவள் அதை யூகித்தவளாக "உத்ராவா.... உத்ராவை காணோமா???" என்றதும் அதிர்வாக அவளை பார்த்தவன் "அது இல்ல வந்துடுவா. நான் கிளம்புறேன் நீ இரு" என்றிட அதை கேட்காமல் "இருங்க நானும் வர்றேன்" என்றாள் கவி.

"சொல்லி புரிய வைக்குற வயசா பாரு உனக்கு!!!. இப்போ நீ இருக்க இந்த உடம்பை வச்சிக்கிட்டு என்கூட அலைய முடியுமா??? பேசாம இங்கேயே இரு. உனக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிட்டே இருக்கேன். அவளை தேடி போற இடத்துல உன்னை பார்ப்பேனா, இல்லை அவளை தேடுவேனா!!!" என்று கவியை வலுகட்டாயமாக அறைக்குள் வைத்து கதவை மூடி தாழிட்டவன் ஆதியிடம் "அம்மா மறுபடியும் உத்ராவுக்கு பிரச்சனையாகிடுச்சி மா. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்... அவளும் என் கூட வரேன்னு அடம் பண்றா. உள்ள வச்சி லாக் பண்ணி இருக்கேன். வெளியே திறந்து விட்டுடாதிங்க மா. அவள பாத்துக்கோங்க" என்று கூறியவன் அதற்குமேல் அங்கு நில்லாமல் காற்றாய் கரைந்துவிட்டான்.

உள்ளே இருந்தவளோ கதவை தட்டி தட்டி ரணகளப்படுத்தி விட்டு சோர்ந்து போய் மெத்தையில் அமர்ந்து விட்டாள். மனம் முழுவதும் உத்ராவிற்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்பு மட்டும் குறைவேனா என்று வாட்டியது.

கோபியை சந்தித்த சாருகேஷ் மற்றும் கேஷவ் நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்துக் கொண்டவர்கள் இன்ஸ்பெக்டர் சக்தியை தொடர்பு கொண்டு காவல்துறை உதவியுடன் அவளை கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். உத்ராவின் செல்ஃபோன் நம்பரை வைத்து அவள் கடைசியாக இருந்த இடத்தையும் அறிந்து அந்த சென்றவர்களுக்கு அதிக நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு சென்று விட்டது.

தூரத்தில் ஒரு இளநீர் விற்கும் கடை மட்டும் தெரிய பதினாங்கு பதினைந்து வயதுடைய ஒரு சிறுவன் இருப்பதை பார்த்தவர்கள் அவனிடம் சென்றனர். "பதட்டப்படாத சாருகேஷ். நீ பேசி அந்த பையன் பயந்துட போறான் நான் பாத்துக்குறேன்" என்று கூறிய சக்தி அவனிடத்தில் சென்றதும் காக்கி உடையுடன் வந்தவனை பார்த்த சிறுவன் முகம் கொஞ்சம் படபடப்பை பெற்றிருந்தது.

"வாங்க வாங்க சார்" என்றவன் "இளநீர் வேணுமா???" என்று கேட்க.

"அதெல்லாம் வேணாம் பா. சரி நீ இங்க எத்தனை மணில இருந்து வியாபாரம் பார்க்குற???" என்றான்.

"காலைல எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன் சார். ஜாகிங் போறவங்க வாக்கிங் போறவாங்க அப்போதான் வருவாங்க" என்றான்.

"ஹோ... சரி ஜன நடமாட்டம் எப்போவும் இப்படி தான் இருக்குமா... ரொம்ப வெறிச்சோடி போய் இருக்கு".

"இல்ல சார் எப்போவும் இப்படி இருக்காது. சனி ஞாயிறுல தான இப்படி இருக்கும். காலைல ஒரு பைக்குல வந்த பொண்ணை கார்காரன் இடிச்சிட்டான் சார் அப்போதான் எல்லோரும் வர ஆரம்பிச்சி இருந்தாங்க அதுக்குள்ள அவங்கள கூட்டிட்டு போயிட்டாங்க" என்றான்.

"ஆக்ஸிடென்ட்டா!!!" என்று அதிர்ந்த சாருகேஷூம் கேஷவும் ஒருவர் முகத்தை ஒருவர் கலவரமாக பார்த்துக் கொண்டனர். "ஆக்ஸிடன்ட்னு சொன்னியே அந்த... அந்த பொண்ணு இதுவா பாரு" என்று மொபைலில் இருந்த உத்ராவின் புகைப்படத்தை காட்ட அவளை பார்த்ததும் அடையாளம் கண்டுக்கொண்ட சிறுவன் "இதே இதே அக்காதான் சார். அந்த சார் கூட எனக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு சொன்னாரே. அவர் ஃப்ரெண்ட் ஹாஸ்பிட்டல் பக்கத்துலதான் இருக்குனு அவரே கார்ல ஏத்திக்கிட்டு போனாரு" என்றதும்.

"தெரிஞ்ச பொண்ணுன்னு சொன்னானா!!! ஆள் பார்க்க எம்படி இருந்தான்??? கார்ல வந்தானா எந்த மாதிரி கார்??? உனக்கு வண்டி நம்பர் தெரியுமா??!!!" என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டான் கேஷவ். அதுவரை சக்தியுடன் பேசிக்கொண்டு இருந்த அந்த சிறுவன் கேஷவின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்.

"அது வந்து சார். அந்த ஆளு பாக்க நல்லா உயரமா வெள்ளையா இருந்தான் சார். கருப்பு கலர்ல இருந்தது காரு. வண்டி நம்பர் பாக்கல சார். அப்புறம் தலை முகத்துல எல்லாம கொஞ்சம் காயமா இருந்துச்சு" என்றான். இந்த அடையாளங்கள் எல்லாம் அவர்களை குழப்பியது.... மேலும் அந்த சிறுவன் ஞாபகம் வந்தவனாக "அந்த அக்காவ கூட பேர் சொல்லி கூப்பிட்டாரு" என்றான்.

'பேர் சொல்லி கூப்பிட்டானா??? நமக்கு தெரிஞ்ச ஆளா இருந்தா இந்நேரம் நமக்கு தகவல் வந்து இருக்குமே. அவளை பத்தி ஒன்னுமே தெரியலையே!!!' என்று மண்டை காய்ந்து போனது நண்பர்கள் இருவருக்கும். சக்திக்கு மட்டும் ஏதோ ஒன்று நெருடியது "பேர் சொல்லி கூப்பிட்டானா!!! உனக்கு ஞாபகம் இருக்கா என்ன பேர்னு???" என்று கேட்கவும் சிறிது நேரம் யோசித்த சிறுவன் "உத்... உத்ரான்னு கூப்பிட்டார் சார்" என்றதும் தலை ஆட்டியபடி அங்கிருந்து நகர்ந்தவன் இருவரிடமும் "இது நமக்கு நல்லா தெரிஞ்ச யாரோ இல்லை. உத்ராவுக்கு தெரிஞ்ச யாரோதான் இந்த வேலைய செய்து இருக்கனும். சாருகேஷ் உங்களுக்கு தொழில் எதிரின்னு யாராவது இருக்காங்களா அதனால கூட உத்ராவை கடத்தி இருக்காலாம்ல!!!!" என்றான்.

"நோ சக்தி. இருக்கவே இருக்க முடியாது. அவ்வளவு வஞ்சம் வைக்கிற அளவுக்கு தொழில்ல போட்டி இருந்தது இல்லை" என்றவன், "நேரம் ஆக ஆக எனக்கு ரொம்ப பயமா இருக்கு உத்ராவுக்கு எதுவும் ஆக கூடாது" என்றான் சாருகேஷ்.

கேஷவ் "தைரியமா இரு மச்சான். மனசை குழிப்பிக்காத நாம தேடிட்டு தானே இருக்கோம். உத்ராவுக்கு ஒன்னும் ஆகாது" என்று சொன்னவன் உள்ளுக்குள்ளும் கலங்கி போய் தான் இருந்தான்.

*********

"டாக்டர் கொடுத்த அட்வைஸ்லாம் கேட்டியா இனியாவது ஒழுங்கா நேரா நேரத்துக்கு சாப்பிட்டு தூங்கு" என்று வர்ஷாவிற்கு புத்திமதிகளை கூறியபடி வந்தாள் ஸ்டெல்லா கர்பமாய் இருக்கும் வர்ஷாவிற்கு மாதாமாதம் செய்யும் மருத்துவ பரிசோதனைகக்காக அழைத்து வந்தவள் அவளுடன் பேசியபடி வந்தாள்.

"ம் பாத்துக்குறேன்" என்று ஏனோ தானோ என்று ஸ்டெல்லாவிற்கு பதில் கூறியவளுக்கு மருத்துவமனையில் நிர்மலுடன் பேசியதே மனதில் ஓடியது.

"என்ன வர்ஷா அஷ்வினை கொல்ல உன் அப்பா ஆள் எல்லாம் அனுப்பி இருக்காரு போல!!!" என்றதும் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தாலும் அதை எதிர்பார்த்தது தானே தந்தையிடமிருந்து அதனால் பெரிதாக அலட்டிக்கொல்லாமலேயே,

"என்ன சொல்ற நிர்மல். எனக்கு எதுவும் தெரியாதே இது எப்போ நடந்தது??? உயிரோட இருக்கானா இல்லை செத்துப்போயிட்டானா???" என்றாள் ஒன்றும் அறியாதவளாய்.

"வர்ஷா நீ பாதிக்கப்பட்டு இருக்க. அவனை பேசவோ திட்டவோ ஏன் அடிக்கவோ உனக்கு எல்லா உரிமையும் இருக்கு வர்ஷா... இந்த விஷயம் உனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனா இது உனக்காக நடந்தது தான்" என்றவன் "இங்க தான் இரண்டு நாள் முன்னாடி அட்மிட் ஆகி இருந்தான். அப்போதான் எனக்கும் தெரியும்" என்றான் நிர்மல்.

"ஹோ... ஃப்ரெண்டுக்கு நீதி கேக்குறீங்களா நிர்மல்???" என்றாள் ஏளனமாக.

"வர்ஷா" என்றான் அவளை சமாதானப்படுத்த

கையை நீட்டி அவனின் பேச்சை கத்தரித்தவள் "எனக்கு வெறுத்துப் போச்சு நிர்மல். அவனை பாக்க கூட பிடிக்கல. அவன் கூட சேர்ந்து வாழ ஆசைப்படுறேன்னு நினைச்சியா நிர்மல்?? அந்த வர்ஷா எப்பவோ செத்துப்போயிட்டா... இப்போ இருக்கறது ஒரு குழந்தைக்கு தாயான வர்ஷா... நான் எனக்கு பாதுகாப்பை தேடல... என் குழந்தைக்கு தகப்பனோட உரிமையை தான் தேடிட்டு இருக்கேன்" என்று மூக்கு விடைக்க குரல் கரகரக்க தன்னம்பிக்கையுடன் கூறியவளை புதிதாக பார்த்தான்.

"ஏன் அப்படி பாக்குற நிர்மல். என்னடா இவ இவ்வளவு நாள் அவன் பின்னாடியே ஏத்துக்கே ஏத்துக்கோன்னு சுத்திட்டு இருந்தவ இப்படி ஒரு முடிவை எடுத்துட்டான்னு பாக்குறியா!!!" என்று ஒரு வரட்டு புன்னகையை உதிர்த்தவள் "அவனோட சேர்ந்து வாழறதை விட அறுவறுப்பான ஒரு விஷயம் இந்த உலகத்துலயே இல்லை... ஒரு புழுவை விட கேவலமான பிறவி. அவன் எல்லாம் வாழ அறுகதையே இல்லாதவன். நம்பி வந்தவளை மோசமான நிலைக்கு தள்ளிவிட்டு சாகடிக்கிற சேடிஸ்ட். இப்போக்கூட ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கானே!!!" என்று அவள் கூறவும்.

"வர்ஷா உனக்கு இந்த விஷயம் எப்படி தெரியும்???" என்று நிர்மல் கேட்க.

"அப்போ எல்லா விஷயமும் உங்களுக்கும் தெரியும். நீங்களும் எதுவும் தெரியாத மாதிரியே உங்க நண்பனை காப்பாத்திட்டு இருக்கிங்க. ச்சீ வெக்கமா இல்ல இப்படி நண்பன் வழி தவறு போனா அவனை கண்டிக்காம பொண்ணுங்களோட வாழ்க்கையில விளையாட விட்டு வேடிக்கை பாக்குறியே. நீயெல்லாம்......" என்று அவனை திட்டவும் "போதும் வர்ஷா ஸ்டாப் இட். ஸ்டாப் இட். எனக்கு அவமானமா இருக்கு" என்று கத்தி அவளை வாயடைக்க வைத்தவன்.

"சொன்னா யார் கேக்குறா... கேக்குற நிலையிலும் இல்லை அந்த பைத்தியக்காரன்...அவளை எப்படியாவது அடைஞ்சே தீரனும்ன்ற வெறியில சுத்துறான். என்ன சொல்லி திசை திருப்பினாலும் ஆரம்பிச்சே இடத்துக்கே வந்து நிக்குறான் வர்ஷா.... இந்த விஷயத்துல இப்போக்கூட எனக்கும் அவனுக்கும் சண்டையாகி என்கூட பேசுறது இல்லை. இப்படியே நிலைமை போன கண்டிப்பா அவன் மென்டல் ஹாஸ்பிட்டலுக்கு போறது நிச்சயம்.... அவ்வளவு புத்தி தடுமாறி திரியுறான். தப்புன்னு தெரிஞ்சும் செய்றான்... இதெல்லாம விட அந்த சைக்கோ கிட்ட இருந்து அந்த பொண்ணை எப்படி காப்பத்தறதுன்னு தான் தெரியல. ஒரு பக்கம் என் ஃப்ரெண்ட். இன்னொரு பக்கம் என் அண்ணன் ரெண்டு பேர்கிட்டயும் மாட்டிக்கிட்டு உண்மையும் சொல்ல முடியாம தலைய பிச்சிக்கிட்டு நிக்கிறேன்" என்று நிர்மல் கவலையாக கூறியதில் இருந்து அந்த பெண்ணை எப்படி காப்பற்றுவது என்பதிலையே எண்ணம் சூழன்று கொண்டு இருந்தது. தான் யாரோ ஒருவர் தான். அஷ்வினை பற்றி கூறினால் அவர்கள் எந்த ஆதாரத்தை வைத்து தன்னை நம்புவார்கள் என்று யோசித்து யோசித்து குழம்பிப்போய் இருந்தாள்.

இது தெரியாமல் பேசிக்கொண்டே வந்த ஸ்டெல்லா ஒரு திருப்பத்தில் வண்டியை வளைக்கவும், சரியான பிடிமானத்துடன் அமராத வர்ஷா நேரெதிர் ரோட்டில் உத்ராவின் அண்ணன் சாருகேஷ் நின்றுகொண்டு இருப்பதை கவனித்து விட்டாள் ஒரு முறை நகை கடையில் பார்த்தது, அடுத்து தந்தையின் ஆட்கள் மூலம் அவனை அறிந்து வைத்திருந்தாள் எப்படியாவது அந்த பெண்ணை இந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் தன் வாழக்கை சீரழிந்தது போல் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை பாழாக்க விடக்கூடாது என்று எண்ணம் மனதில் கொழுந்து விட்டு எரிய தன் வயிற்றில் உதித்த சின்னஞ்சிறு தளிரை கூட மறந்து வண்டியில் இருந்து திடீரென குதித்தவள் அவனை நோக்கி ஓடினாள்.

வண்டியில் இருந்து தீடீரென குதித்த வர்ஷா எதிர்திசையில் ஓடவும் நிலை தடுமாறிய ஸ்டெல்லா "வர்ஷா..... வர்ஷா....." என்று அழைத்ததையும் காதில் வாங்காமல் சாருகேஷை நோக்கி ஓடினாள். சாருகேஷின் அருகில் இருந்த கேஷவையும், இன்ஸ்பெக்டர் சக்தியையும் கண்ட ஸ்டெல்லா 'இவங்கள பார்த்து ஏன் இவ ஓடுறா???" என்று ஒன்றும் புரியாமல் அவள் பின்னே இவளும் அழைத்துக்கொண்டே சென்றாள்.

இளநீர் கடை பையனிடம் சேகரித்த விஷயங்களை வைத்து பேசிக்கொண்டே வந்தவர்கள் எதிர்பாராமல் வந்து நின்ற வர்ஷாவை பார்த்து நின்றனர்.

மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்க தன் எதிரே வந்த வர்ஷாவை பார்த்தவன், "யார் மா நீங்க??? எதுக்கு இப்படி அவசரமா வந்து வழி மறிக்கறீங்க???" என்று சாருகேஷ் செல்லும் அவசரத்தில் கேட்கவும்.

"சார் சார்.... உங்க பேர் சாருகேஷ் தானே???" என்றாள் மூச்சு வாங்க.

அதற்குள்ளாகவே ஓடிவந்த ஸ்டெல்லாவை பார்த்த சக்தி "ஸ்டெல்லா நீங்க எப்படி இங்க??? யார் இவங்க???" என்றான்.

"ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு நிமிஷம் நானே எல்லாத்தையும் சொல்றேன்... என்னை பத்தியும் சொல்றேன்" என்றவளை கூர்ந்து நோக்கியவன் "ஆமா என் பெயர் தான் சாருகேஷ். இப்போ என்னனு சீக்கிரமா சொல்லுங்க. எனக்கு பேச நேரம் இல்லை" என்றான்.

"பேசப்போறது என்னை பத்தி இல்ல.. உங்க தங்கையை பத்தி" என்று கூறவும்.

"யாரு உத்ராவை பத்தியா??? என்ன விஷயம். என்ன சொல்லுங்க" என்று கேஷவ் முன்னால் வந்தான். அவன் முன்னால் வரவும் "நீங்க???" என்று அவள் கேட்க கேஷவ் "நானும் அவளுக்கு அண்ணன் தான்" என்றிட.

"உங்க தங்கைக்கு பெரிய ஆபத்து அவளை எப்படியாவது அந்த அய்யோகியன்கிட்ட இருந்து காப்பாதிடுங்க. அவன் உங்க தங்கச்சி வாழ்க்கைய நாசம் பண்ணாம விடமாட்டான்" என்றதும் அனைவரும் திடுக்கிட்டு நின்றனர்.

"நீங்க யாரை சொல்லுறீங்க??? ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க. காலைல இருந்து அவளை காணோம். வண்டியும் இங்க தான் இருக்கு. ஃபோனும் இங்க தான் இருக்கு. எங்களுக்கு தெரிஞ்சவன்னு ஒருத்தன் உத்ராவை ஹாஸ்பிட்டல்ல கொண்டு போய் சேக்குறேன்னு சொல்லி இருக்கான். இன்னும் ஒரு தகவலையும் தரலை தேடி தேடி பைத்தியமா இருக்கோம்" என்று சாருகேஷ் கவலையாய் கூறிட.

அவளை காணோம் என்றதும் திடுக்கிட்டு போய் நின்றவள் "ஒரு நிமிஷம்" என்று கையில் இருந்த மொபைலில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அந்த இளநீர் விற்கும் சிறுவனிடம் காட்டி "அந்த பெண்ணை அழைச்சிட்டு போனவன் இவனா பார்த்து சொல்லு தம்பி" என்றாள்

"ஆமா கா. ஆமாம் இதே ஆளுதான். முகத்துல கையில எல்லாம் இவனுக்கு அடிபட்டு இருந்துச்சு" என்றான்.

"கரெக்ட். நான் நினைச்சது நடந்துடுச்சு.... இவனே தான் சார் இந்த அய்யோகியன் தான் இதோ பாருங்க சார். இவன் இவன் தான் உங்க தங்கையை கடத்தி இருக்கான். இவனால தான் உங்க தங்கைக்கு ஆபத்துன்னு சொல்ல வந்தேன்" என்றவள்.

அவன் புகைப்படத்தை அவர்களுக்கு காட்டிட அனைவருக்கும் அதிர்ச்சி. "நல்லவன் மாதிரி நயமா பேசிட்டு இருந்தான் இவனா இதை செய்தது. ராஸ்கல் அவனை தோலை உருச்சி தொங்கவிடனும்" என்று ஆத்திரத்தில் சாருகேஷ் கத்திட "இந்த நாதாரியா இவ்வளவுக்கும் காரணம் பொறுக்கிய மிதிச்சே கொல்லனும்டா" என்று கேஷவும் அஷ்வின் மீது கோவம் கொண்டான்.

"இவனுக்கு இப்போதான் சார் அடிபட்டு இருக்கு... ரொம்ப தூரம் எல்லாம் போக முடியாது இங்கதான் எங்கயாவது வச்சி இருப்பான். அவங்களை காப்பாத்துங்க சார். உங்க தங்கையை காப்பாத்துங்க. என் வாழ்க்கை தான் போச்சு இன்னொரு பொண்ணு வாழ்க்கை போக கூடாது" என்று புலம்பி சரிய அவளை தாங்கி கொண்ட ஸ்டெல்லா முகத்தை கைகுட்டையால் துடைத்து விட்டாள்.

"ஸ்டெல்லா இவங்க!!!!" என்று கேஷவின் கேள்விக்கு "இவ என் தங்கை சார்... ஆளவந்தானோட பொண்ணு. இவளை நான் பாத்துக்குறேன் நீங்க போய் அவங்களை தேடுங்க சார்... உங்க தங்கையை காப்பாத்துங்க சார் .... வர்ஷாவை நான் பாத்துக்குறேன்" என்றிட

கேஷவ் சாருகேஷ் இருவரும் ஒரு வாகனத்தில் விரைந்திட இன்ஸ்பெக்டர் சக்தி தன் வண்டியில் அஷ்வினை நோக்கிப் பயணமனான். போகும் போதே அஷ்வினுடைய எண்ணை டிராக் செய்ய சொன்னவன் அவன் இருக்கும் இடத்தினை அறிந்து கொள்ள முயன்றான். அவனுடைய ஃபோன் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிய வர அவனுக்கும் கொஞ்சம் பதட்டம் கூடி போனது. சக்தி அஷ்வினின் வீட்டிற்கு சென்று தேட சாருகேஷூம் கேஷவும் அவனுக்கு சொந்தமான மற்றோரு இடத்தில் தேடி சென்றனர். கோபி மற்றும் சித்துவிற்கும் விஷயத்தை கூறியவர்கள் அஷ்வின் புகைப்படத்தையும் அவனுக்கு அனுப்பி வைத்து நகை கடை மற்றும் அவன் வழக்கமாக செல்லும் இடங்களுக்கு சென்று தேடினர்.

அஷ்வினின் வீட்டிறக்கு சென்று சக்தி அங்கு உள்ளவர்களிடம் விசாரிக்க இரண்டு நாட்களுக்கு முன்னால் நடத்த சம்பவத்தால் அவன் வீட்டிற்கு வரவே இல்லை என்ற தகவலை தர அஷ்வினை தேடி மற்ற இடத்திற்கு விரைந்தான்.

கோபியும் சித்துவும் உத்ராவை தேடி அலைந்து திரிந்தனர். மனதிற்குள் திக் திக் நிமிடங்களாக சென்று கொண்டிருந்தது... அவள் காணாமல் போய் அரை நாள் கடந்துவிட மனது பலவாறு யோசித்து உத்ராவை நினைத்து கலங்கி தவித்துப் போனான் கோபி. ஒரு கட்டத்தில் சோர்ந்து தலையை பிடித்து பைக்கில் சாய்ந்து விட நண்பனின் மனம் புரிந்த சித்து "தைரியத்தை விடாத கோபி. உத்ரா நல்லா தான் இருப்பா" என்று ஆறுதலை கூறவும் கண்மூடி தன்னை சமநிலைபடுத்தியவன் "நம்புறேன் டா. கண்டிப்பா அவ கிடைச்சிடுவான்னு நம்புறேன்" என்றவன் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானான்

மொபைலை எடுத்து சாருகேஷிற்கு அழைத்தவன் "உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சுதா???" என்றான் கொஞ்சம் கரகரப்பான குரலில் அவ்வாறு கேட்டவனின் உள்ளம் படும்பாட்டை உணர்ந்தவன் "இல்லை கோபி போற இடங்க எல்லாம் சுவத்துல அடிச்ச பந்துமாதிரி அதே இடத்துக்கு வந்து நிக்குது கோபி" என்றவன், "அந்த நாயி மட்டும் கைல மாட்டினான் அவன் சாவு என்.கையால தான்" என்று கூறியவன், "சக்தி கூட இருக்கான் வேற இடங்கள்ல தேடிட்டு இருக்கோம் தகவல் தெரிஞ்சதும் கால் பண்றேன்" என்றவன் வைத்துவிட, கோபியும் ஃபோனை அணைத்துவிட தெரியாமல் கைபட்டு கேலரி ஆன் ஆகி இருந்தது. அதில் அவளுக்கு தெரியாமல் தனது செல்லில் படம் பிடித்து புகைப்படங்கள் இருக்க, அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் மேல் காதல் என்ற உணர்வு வந்த நாளில் அவளை மறக்க முடியாமல் திணரியதில் இருந்து அவளது முகமாவது பார்க்க வேண்டுமென்று அவளுக்கே தெரியாமல் எடுத்து வைத்திருந்தது இப்போ கண்ணில் பட்டு அவனை வாட்ட, அதை மூடும் நேரம் அவன் கண்ட புகைப்படம் உத்ராவினை ஏமாற்றிய அந்த கேடுகெட்டவன் யார் என தெரிந்து கொண்டவன் "டேய் மச்சா இங்க இங்க பார்ரா" என்று பரபரப்புடன் அந்த புகைப்படத்தை காட்டினான்.

அது ஒரு அப்பார்ட்மென்ட் ஆண்டு விழாவில் எடுத்து இருந்த புகைப்படம். அதில் அஷ்வினும் நிர்மலும் கல்லூரி படிக்கும் காலத்தில் எடுத்தது போல இருந்தது அதை பார்த்தவன் "இது எப்படி மாப்ள உனக்கு கிடைச்சது???" என்றான் ஆராய்ச்சியாக.

"மச்சான் இது அன்னைக்கு உத்ரா பயந்து ஒடி வந்த அப்பார்மென்ட்ல நடந்த ஆண்டு விழா டா. நான் அங்க தங்கி இருந்தவங்கள கேக்கும்போது அந்த அப்பார்ட்மெண்டோட செக்கரட்டரி சிசிடிவில இருந்தது எல்லாம் கிளியர் ஆகி இருக்கோம் ஃபோட்டோ இருந்தா அனுப்புறேன்னு சொல்லி இருந்தாரு. அவரு அனுப்பி இருப்பாரு போல. அன்னைக்கு தான் நீ உத்ராவ பார்த்தேன்னு நான் சென்னை கிளம்பி வந்தேன்... அதுக்கு அப்புறம் அவ கிடைச்சதும் இதை மறந்துட்டேன்... அப்புறம் அவனை தேடவும் இல்லை இதை உன்கிட்ட சொல்லவும் இல்லை...." என்றவன். "இவனை எங்கயோ பாத்து இருக்கேன் டா. சம்திங் எங்க எங்க????" என்று அவன் தலையில் கை வைத்து தட்டிய படியே சிந்திக்க "டேய் அன்னைக்கு உத்ராவ பார்க்கனும்னு ஹாஸ்பிட்டல் போகனும்னு போனோமே ஞாபகம் இருக்கா?" என்றான் கோபி.

"ஹான் இருக்கு மாப்ள" என்று சித்து கூறிட.

"அன்னைக்கு அன்னைக்கு தான்டா இவனை பார்த்தேன். எனக்கு அன்னைக்கு அவ கூட இருந்ததால எதுவும் நினைவுக்கு வரல. அவளை பத்தி மட்டுமே என் சிந்தனை இருந்துச்சு. ச்சே எவ்வளவு பெரிய தப்பை செஞ்சி இருக்கேன். என் உத்ராவுக்கு நானே எமனா இருந்து இருக்கேனே" என்று தலையில் அடித்துக்கொள்ள.

"இல்ல டா இல்ல உன்னால தான் அவ சேவ் ஆக போறா" என்றே கூறி "வாடா நாம நிர்மலை பிடிக்கலாம் அவனும் இவன் கூட்டாளி தானே. அவனை மிதிச்சா இவனை பிடிக்கலாம்" என்று நிர்மலை நோக்கி விரைந்தனர் இருவரும்.

அதிரடியாய் உள்ளே நுழைந்தவர்கள் பேஷண்டை பார்த்துக்கொண்டு இருந்தவனின் சட்டையை பிடித்து வெளியே இழுத்தவன் "நீயெல்லாம் டாக்டர்... ச்சீ.... டாக்டர் தொழிலுக்கே அவமானம் டா..." என்று கோபம் கொண்டு அவன் கன்னத்தில் அறைய.

"இருடா கோபி கொஞ்சம் இரு" என்று அவனை கட்டுப்படுத்திய சித்தார்த் "ஒழுங்கா உண்மையை சொல்லுங்க டாக்டர்" என்று கொஞ்சம் கரார் குரலில் கேட்க.

கோபி தாக்கியதில் புரியாமல் அதிர்ச்சியில் இருந்தவன் தன் கன்னத்தில் கை வைத்தபடி "நான் யார்னு தெரியாம என் மேலேயே கையை வைக்குறியா. உன்னை என்ன பண்றேன் பாருடா" என்றவன் ஃபோனை எடுக்க.

"போடு போடு. ஃபோனை நீ போடுறியா இல்லை நான் போடவா. எதுக்கும் நானே போடவா முதல்ல உங்கண்ணனுக்கும் அப்புறம் உன் மாமியார் வீட்டுக்கும் போடனும். நம்பர் தெரியுமா???" என்று நக்கலுடன் கேட்ட கோபி இன்னும் அவனை அடிக்க முன்னால் செல்ல.

"எ.. எங்க அண்ணனுக்கு எதுக்கு ஃபோன் பண்ணனும்???" என்றான் தட்டுதடுமாறி இப்போது அவனுக்கு விஷயம் கொஞ்சம் விபரிதம் என்று புரிந்து இருந்தது.

"ஹான் ஒரு பொண்ணை நாசம் பண்ண உதவியா இருக்கறதுக்கு" என்று சித்து கூற.

"யார் சொன்னது!!! நான் யாரை நாசம் பண்ண உதவி பண்ணேன்??? புரியுறா மாதிரி சொல்லுங்களேன்" என்றிட.

"அஷ்வின்" என்றதுமே அவனுக்கு வியர்த்து வழிய "இப்போ எதுக்கு அடிக்குறேன்னு புரியுதா???" என்றிட்டவன் "காணோம் டா அவளை. அந்த ராஸ்கல் தான் கடத்தி வச்சிருக்கான்" என்று கூறிட.

"சொல்றேன் சொல்றேன் எல்லா உண்மையும் சொல்றேன்" என்றவன் "இது அடிக்கு பயந்து சொல்லல என் மனசுலையும் அறிச்சிக்கிட்டு இருக்க ஒன்னு" என்று அவனுக்கு தெரிந்த விஷயங்களை கூறிவிட "சத்தியமா அவன் இப்போ எங்க இருக்கான்னு தெரியாது. அவளை ஒன்னும் செய்யாதே திரிந்திடுன்னு சொன்னாதுக்குதான் என்கூட சண்டை போட்டுகிட்டு போயிட்டான்" என்று கூறிட.

டேபிலில் கிடந்த பொருட்களை எல்லாம் கோவத்தில் கீழே தள்ளி விட்டு "இப்போ என்னடா செய்றது!!! ஒன்னும் புரியல டா" என்றான் கோபி ஆற்றாமையுடன்.

"அவன் வழக்கமா போற இடங்கள விட இதுக்குன்னு அவன் உபயோகபடுத்துற இடம் ஒன்னு இருக்கு. என் கெஸ் படி அங்கதான் இருப்பான். இருக்கனும். போங்க அங்க போய் அந்த பொண்ணை காப்பாத்துங்க" என்று கூறும்போதே அவன் செவிகளில் குய் என்ற சத்தத்தை தான் உணர்ந்திருந்தான் நிர்மல் அவன் கன்னம் தீ பற்றி எரிந்தது போல் உணர்வுடன் இருக்க, மறுமுறையும் அதே அடியை மறு கன்னத்தில் உணர்ந்திருந்தான் அவன்... அவனை அடித்தது வேறு யாரும் அல்ல அவன் உடன் பிறந்த சகோதரன் தேவராஜ் தான்...

"உன்னை கொலை பண்ணா கூட என் ஆத்திரம் அடங்காதுடா நாயே. என் கூட பொறந்துட்டு பண்ற வேலையாடா இது, ச்சீ மானம் போயி,மரியாதை போயி, என்னடா ஜென்மம் நீ… உன்னை பார்க்கவே அறுவருப்பா இருக்கு" என்று அடி வெளுக்க, அவன் கால்களை பற்றிய நிர்மல் "அண்ணா அண்ணா என்னை மன்னிச்சிடு ண்ணா. நான் திருந்திட்டேன். இப்போ எந்த தப்பான எண்ணமும் இல்ல என்கிட்ட" என்று கூறியவனின் சட்டையை பற்றி மேலே எழுப்பியவன் "உன் கதைய அப்புறம் பாக்குறேன் முதல்ல அந்த மொல்லமாரியோட அட்ரஸை கொடுத்து அனுப்பு. அவனுக்கு சங்கை ஊதிட்டு உன் கிட்ட வரேன்" என்று கூறினான் தேவராஜ்...

அவன் முகம் கோவத்தில் உக்கிரமாய் இருக்க நிர்மல் நண்பனின் விலாசத்தை கொடுத்திட உடனே கிளம்பினர் கோபியும் சித்தார்த்தும்.

"நீங்க போயிட்டே இருங்க நான் பின்னாடியே வரேன்" என்றவன் தம்பியை ஒரு உதரு உதரிவிட்டு "தொலைச்சி கட்டிடுவேன் ராஸ்கல்" என்று எச்சரிக்கை விட்டு கடும் கோபத்துடன் அவர்களை தொடர்ந்து சென்று இருந்தான்.

ஒரு மணி நேர பயணத்தில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவர்களை வரவேற்று காத்து இருந்தது அஷ்வினின் பங்களா.... மதில் சுவரை சுற்றிலும் இரும்பில் கூர்மையான கம்பியால் பாதுகாப்பு செய்யப்பட்டு இருக்க, காம்பௌண்ட் கேட்டை காவலாளி கண்காணித்து கொண்டு இருந்தான். கேட்டின் முன்னால் பைக்கை சித்தார்த் நிறுத்த உள்ளே செல்ல முயன்ற கோபியை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய காவலாளி அவனை மேலிருந்து கீழே வரை அளந்தவன் "சார் இன்னைக்கு வரலை. கேக்காம கொள்ளாம உள்ள நுழையறீங்க யார் நீங்க???" என்றான் அதிகரமாக, பார்வைக்கு திடகாத்தகரமான கட்டுமஸ்தான தேகத்துடன் முரட்டுதனமான முகத்துடன் இருந்தவன்.

கேட்டில் இருந்த காவலாளி கேட்டதும் "அஹ்ன். அவன் அப்பன். தொறடா கதவை அவன் உள்ளே தான் இருக்கான்" என்று சீறிய கோபியை நெஞ்சில் கைவைத்து ஒரு தள்ளு தள்ளியவனை அடிக்க சென்றான் சித்தார்த்.

"முதலாளி இல்லன்னு சொன்னா கேக்காம பிரச்சனை பண்றீங்க!!! உங்கள......." என்று கையில் இருந்த தடியை கொண்டு தாக்க வர, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள் கொஞ்சம் எட்டி உள்ளே பார்க்க, அஷ்வினுடைய கார் போர்டிகோவில் நிற்பது தெரிய அர்த்தமாய் சமிக்ஞை செய்துகொண்டவர்கள் அந்த காரியத்தை துரிதமாக செய்தார்கள்.

சித்தார்த் காவலாளியை தாக்க ஆரம்பிக்க கோபி வேகமாக கேட்டிற்கு உள்ளே நுழைந்து ஓடினான்.

வீட்டிற்கு காவலாக இரண்டு தடியர்கள் வர அவர்களிடமிருந்து பிடிபடாமல் தப்பியவன் மேலும் பங்களாவை நோக்கி ஓட, கால் இடறி சுவற்றில் மோதி கீழே விழ தோட்டம் சீர்படுத்த இருந்த கடப்பாரை கையில் கிடைக்க தன்னை துறத்தி வந்தவர்களர்களை அந்த இரும்பு கடப்பாறையை கொண்டு தாக்கியவன் அதை தூர எரிந்து முன்னேறி பங்களாவிற்குள் நுழைந்தான். வீட்டிற்குள் நுழைந்த போதே மாடியறையில் இருந்து உத்ரா அலறும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

காலை முதலே குடித்துக் கொண்டிருந்தவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் மூளைக்கு ஏறிய போதை அவனின் மிருகத்தனத்தை இன்னும் அதிகமாக்கியது.

உத்ராவை அடைய வேண்டும் என்ற வெறியில் இருந்தவனுக்கு அவளே வந்து தானாய் அகப்பட்டுக் கொள்ளவும் அவளின் பெண்மையும மென்மையும் அவனை கிறங்கடித்தது. மயக்கம் கொண்டு சாலையில் இருந்தவளை அவனுடைய பண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தவன் மெத்தையில் கிடத்தி இருந்தான்.

கீழே விழந்ததால் லேசாய் தசை பிசகி இருக்கும் போல் கையில் கொஞ்சம் வீக்கமும் நெற்றியில் அடிபட்டதால் ரத்த கசிவும் இருக்க, முதலுதவி செய்யக்கூட தோன்றாமல் சட்டையில் இருந்த பட்டனை அவளை பார்த்தபடியே கழற்றிக்கொண்டு இருந்தான்.

சிறிது சிறிதாக மயக்கம் தெளிந்தவளுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை கண்ணை இருட்டிக்கொண்டு இருக்க லேசாய் வெளிச்சம் வர தொடங்கியது ... தான் படுக்கையில் இருக்க தன்னை யார் இங்கு அழைத்து வந்தது என்று சற்று மிரண்டவள் எழுந்து அமர அவளின் கண் முன்னே கண்களில் மயக்கத்துடன் அவளை நெருங்கிய அஷ்வினை கண்டவள் வீல் என்று அலறி கட்டலில் இருந்து எழுந்து நின்றிருந்தாள். "நான் ஏன் இங்க இருக்கேன். நீ எப்படி இங்கே என்னை கூட்டிட்டு வந்த??? என்னை போக விடு" என்று கதவின் பக்கம் சென்று கைபிடியை திறக்க அவளை ஒரே தாவலில் பிடித்தவன், அவளின் கழுத்தில் கையிட்டு அணைத்தவறே அவளை முகர்ந்தவன் "செம வாசமா இருக்கடி. இப்போ தெரியுதா உன்னை எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்தேன்னு" என்று கிரக்கமாககேட்க.

"செருப்பு பிஞ்சிடும் டா நாயே விடு டா என்னை. விடு நாயே" என்று அவன் கன்னத்தில் அறைய அவள் அடித்ததில் ஏறிய போதை அனைத்தும் இறங்க அவளை கட்டிலில் தள்ளியவன் அவளிடம் தகாத முறலயில் நடந்துக்கொள்ள முயன்று கொண்டு இருந்தான்.

"விடுடா என்னை விடு" என்று அவனை தள்ள முயற்சி செய்துக்கொண்டு இருந்தவள் கையில் கிடைத்த பொருட்களைக்கொண்டு அவனை தாக்க ஆரம்பித்து இருந்தாள். அவள் எரிந்ததில் ஒரு பொருள் அவன் தலையில் பட்டு வலியை உண்டாக்க அவளை ஓங்கி அறைந்திட கண்கள் இறுட்ட ஆரம்பித்து இருந்தது அவளுக்கு கால்கள் துவண்டு விட எதிரில் இருப்பவன் உருவம் மங்களாகி விட ஏதோ நிழல் படம் போன்று காட்சிகள் அங்காங்கே தெளிவில்லாமல் முளையில் தெரிய ஆரம்பித்து இருந்தது.

தலையை பிடித்தபடி தள்ளாடியவளின் மேலே மேலும் பாய்ந்தவனை ஒன்றும் செய்ய முடியாமல் திமிறி இருக்க "விடுடா பொறுக்கி" என்று அவனை உதறி தள்ளி விடமுயன்று தோற்றுக்கொண்டு இருந்தாள்.

"பொறுக்கி தான்டி பொறுக்கி தான். உன்னை பொறுக்கோ பொறுக்குன்னு பொறுக்கி சலிச்சி இருக்கேனே நான் சுத்தமான அக்மார்க் பொறுக்கி தான்" என்று தன்னை பற்றி ஆஹா ஓஹோ என சொல்லிக்கொண்டவனை புழுவை பார்ப்பதுபோல் அறுவறுப்பாய் பார்த்தவள் "எங்க அண்ணனுக்கு தெரிஞ்சுது உன்னை வெட்டி போட்டுடுவான்டா என்னை விட்டுடுடா" என்றவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன்.

"எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டேன் டீ. உன்னை அடைஞ்சே ஆகனும்னு இதுல என்ன உன் அண்ணன் நாலு புறட்டு புறட்டி ஜெயில்ல போடுவானுங்க. எனக்கு ஆயிரம் வக்கீல் தெரியும் டீ. எப்படியும் என்னால வெளியே வர முடியும். அப்புறம் எப்படி பெரிய மனுஷனா ஊர்ல ஆகுறது. இது போல தப்பு எல்லாம் தான் ஒருத்தனுக்கு கௌரவத்தை தருது. என்ன நான் சொல்றது" என்று அவளது கைகளை பற்றி முத்தம் வைக்க கொண்டு செல்ல தீடீர் என்று கழுத்தில் தாக்கப்பட்டுது போல் துவண்டு விழந்தான் அஷ்வின்.

அவன் மேல் பாய்ந்த கோபி "உனக்கு அவ கேக்குதா டா. ஒரு முறை அவளை தொட நினைச்சதுக்கே உன்னை கொல்லனும் இதுல நீ மறுபடியும் அவளை கடத்தி நாசம் செய்ய பாக்குறியா டா நாயே" என்று சண்டையிட்டு உருண்டு புரல அவனை முகத்திலே ஒரு குத்தை விட்டவன் "இந்த மூஞ்சை வைச்சிதானேடா எல்லாரையும் ஏமாத்துற அதை உடைக்கிறேன்டா" என்று அடியை போட்டான்.

அவனால் முடிந்தவரை அவனை தாக்க போறாடிய அஷ்வின் ஒரு கட்டத்தில் அவனது பாதுகாப்பிற்காக மறைத்து வைத்திருந்த தூப்பாக்கியை எடுத்து அவனை தாக்க குறி பார்க்க அதில் அசராத கோபி முன்னால் எட்டை வைக்க இது உதாவது என்று மனதில் உணர்ந்தவன் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து அதிர்ந்து நின்றிருந்தவளின் நெற்றி பொட்டில் தூப்பாக்கியை வைத்து விட கோபி அதிச்சியில் உறைந்து போனான்.

பின்னாடியே வந்த தேவராஜ் மற்றும சித்து உள்ளே வர இந்த காட்சியை கண்டவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் பதறி நின்றனர்.

தேவராஜ் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தவன் "இங்க பாருங்க தேவராஜ்.. உங்களோட தைரியத்தை இவ உயிரோட விளையாடாதீங்க. ஒரு அடி முன்ன நீங்க வந்தாலும் போக போறது உங்க அருமை நண்பனோட தங்கை உயிர் தான். உங்களுக்கு இவ உயிர் முக்கியம் இல்லன்னு நினைச்சா தாராளமா வந்து என்னை தொடுங்க வாங்க" என்று நக்கலாக பேசியவன் "நான் சாகறத்துக்கு ஒரு நிமிஷம் முன்னாடியவது இவளை கொன்னுட்டுதான் சாவேன்" என்று கூறி "வசதி எப்படி" என்றான் அவனை நோக்கி.

"அஷ்வின் நீ தப்புக்கு மேல தப்பை பண்ற. வேணாம் அவளை விட்டுடு. உனக்காக சாருகேஷ் கிட்ட நான் பேசுறேன். அவன் உன்னை ஒன்னும் செய்ய மாட்டான். உத்ராவுக்கு மட்டும் ஒரு சிறு கீரல் இருந்தாலும் உன் உயிருக்கு உத்ரவாதம் இருக்காது. தயவு செய்து அவளை விட்டுடு நீ ஏற்கனவே பண்ண எல்லா அயோகியத்தனமும் தெரிஞ்சிடுச்சி. இனியும் மோசமா போகாத" என்று அவனுக்கு சாதகமாக பேசுவது போல் பேச.

"என்ன...... என்ன சொன்னீங்க... நல்ல வேடிக்கையா இருக்கு. உங்க பேச்சு கேட்டு அவன் என்னை விடுறதா!!! என்ன ஜோக் பண்றீங்களா!!! என்னை நான் காப்பாத்திக்கிட்டாதான் உண்டு... சரி சரி கொஞ்சம் நகருங்க" என்று உத்ராவின் நெற்றி மீது துப்பாக்கியை வைத்தபடியே அவளை தள்ளி அழைத்துக்கொண்டு வெளியே வர.

கோபி தான் துடித்துக் கொண்டு இருந்தான் "ச்சே....... அவனை ஒன்னும் பண்ண முடியலையே டா இத்தனை பேர் இருந்தும் அவ அவன் கிட்ட போய் மாட்டிக்கிட்டாளே டா" என்று கோபமாய் பேசிக்கொண்டு இருக்க "இரு இரு ஏதாவது லூப் கிடைக்கும். இரு இன்னும் கேஷவ் சாருகேஷ் வரல நான் உள்ள வரும்போதே அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன். இப்படியே அவனை வெளியே போகாம பாத்துக்கிட்டடா போதும்" என்றிட.

அவர்களை பார்த்தபடியே அறை வாசல் பக்கம் வந்தான் அஷ்வின். அதிர்ச்சியின் பிடியில் சிக்கி இருந்தவளுக்கோ ஞாபக அடுக்குகலில் இருந்து மறைந்து போன அவளது கடந்த கால நினைவுகள் திரும்ப திரும்ப, ஆவேசம் வந்தவள் போல் அவன் கைகளை பற்றி இருந்த தூப்பாக்கியை பிடுங்கி தூர எரிந்தவள் அவனை கீழே தள்ளி கால்களால் மிதிக்க ஆரம்பித்து இருந்தாள். மான்களையும் மயில்களையும் பெண்களுக்கு உதாரணப்படுத்தியதை மாற்றி புதிய பரிணாமனத்தை உருவாக்கி இருந்தாள். அவள் வெறிகொண்ட வேங்கையாய், பாயும் புலியாய், சீறும் சிருத்தையாய் அவனை மிதிக்க, வேக வேகமாய் வரும் இரு அண்ணன்களை கண்டவள் "சாரு, கேஷவ் இவனை உயிரோட விடாதீங்க டா. என்னை.... என்னை...." என்று மேலும் சொற்கள் வராமல் திணறியவள் சாருகேஷின் மேல் அப்படியே சாய்ந்தாள்.

கீழே உத்ராவின் கால்களால் மிதிபட்டவன் வாயில் ரத்தம் வர "அய்யோ அம்மா" என்று அனத்தியபடி படுத்திருக்க அவனின் சட்டையை பிடித்து மேலே தூக்கிய கேஷவ்.. கன்னத்தில் மாறி மாறி அறைந்தான் அருகில் இருந்த சக்தி அவனை தடுத்து "செத்துடுவான் டா கேஷவ் சொன்னால கேளு விடுடா அவனை " என்று போலிஸ் காவலில் எடுத்தவன் " நீங்க உத்ராவ ஆஸ்பிட்டல் அழைச்சிட்டு போங்க இதுக்கு மேல நான் பாத்துக்குறேன் டா. " என்றவன் அவனை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல, மயங்கிய நிலையில் இருந்த உத்ராவை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 64
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN