நம் கதாநாயகனின் பெயர் ஜீவக்காருண்யன்.. ரொம்ப நீளமான பெயர்-ங்கறதால எல்லோரும் ஜீவா-னு சுருக்காம கூப்பிடுவாங்க.

அப்பா வர்மன், அம்மா மலர்விழி, தம்பி சிவா-னு ஒரு முழுமையான சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். தம்பி சிவாக்கும், ஜீவாக்கும் ஆறு வயது வித்தியாசம். ரொம்ப மென்மையான, எல்லோர் மீதும் அக்கறை கொண்டவன் ஜீவா..

பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஜீவா, வணிகவியல் பாடத்தை எடுத்திருந்தான். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் இந்த பாடம் படிக்க எளிதாக இருந்தப்படியால் வணிகவியல் எடுத்தான்..

பள்ளியின் இறுதி பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஜீவா,

'ஹய்யோ ஆண்டவா..!! எனக்கு இருக்கிறதே குட்டி மூளை. அதை வச்சுட்டு நான் படிக்குறதே பெரிய விசயம். இதுல படிக்குறத மனப்பாடம் பண்ணி, அதை, இந்த மாதிரி தேர்வுகள்-ல வேற எழுதி....எப்ப்ப்பபப்பபா...!! ஒரு 17 வயது பையனுக்கு எவ்வளவு சோதனைகள்...?? ' என்று மனதில் மருகியப்படி தேர்வினை எழுதிக்கொண்டிருந்தான்.

ஒரு வழியாக அங்கேயும் இங்கேயும் கேட்டு பாஸ் ஆகும் அளவிற்கு தேர்வினை எழுதி முடித்து வீடு திரும்பினான்..அங்கு அவன் அப்பா,

"டேய் ஜீவா..! எக்ஸாம் எப்படி எழுதி வச்சுருக்க? பாஸ்-ஆவது ஆயிடுவேல? உன்னைய நம்பி பக்கத்து வீட்டு இராமாஜுனம் கிட்ட சவால் வேற விட்டுருக்கேன் டா.." என்று கண்களில் பயம் கலந்த பார்வை ஒன்றை உதிர்க்க..

"அப்பா...! என்ன ப்பா நீங்க..? உங்க பையன் ப்பா நான்.. அதெல்லாம் பிச்சு உதரிட்டேன்." என்று சட்டை காலரை தூக்கிவிட்டப்படி ஜீவா கூற.. அதற்கு அவன் அப்பா வர்மனோ,

"நீ என் பையன் ங்கறதால தான் டா பயமே..!!" என்று தன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தார். சிரித்து முடித்த வர்மன், ஜீவாவை நோக்க.. அவன், பொய் கோபத்திலிருப்பதை புரிந்துக்கொண்டார்.

"சரி டா சரி டா.. என் மகன் மாநிலத்தின் முதல் மதிப்பெண்எடுத்தாலும் எடுப்ப. என் மகனாச்சே..!!" என்று மீண்டும் வர்மன் சிரிக்க..அங்கு வந்த ஜீவாவின் அம்மா மலர்விழியோ,

"ஏங்க..! பிள்ளை வந்ததும் வராததுமா எக்ஸாம் பத்தி பேசி, அவன கஷ்டபடுத்தாதீங்க.. ஜீவா தங்கம்..! அம்மா உனக்கு பிடிச்ச பிரியாணி செஞ்சு வச்சுருக்கேன். போய் சாப்புடு டா செல்லக்குட்டி.." என்று ஜீவாவின் தலைமுடியை கோதிவிட்டபடி கூறினார் அவன் அம்மா மலர்விழி.

"ஹய்ய்யா....!! அம்மா-னா அம்மா தான்.. போய் பிரியாணிய ஒரு புடி பிடிச்சுடுறேன்." என்று குதித்தபடி அவன் அம்மாவின் கண்ணத்தைக் கிள்ளிவிட்டு சாப்பிட ஓடினான்.

பிரியாணியை உட்கொண்டிருந்த ஜீவா,

'இனிமே நம்ம பள்ளி நாட்கள் திரும்ப வர்றாதுல? எல்லாம் மாறிடும்... மூணு வருஷ கல்லூரி நாட்கள், அப்பறம் வாழ்க்கையோட புது கோணத்த பார்க்கப்போறோம்..' என்றெண்ணியவன் இனி, தான் படித்த பள்ளியைப் பார்க்க நேராததை எண்ணி வருந்தினான்.

தேர்வு முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, பொதுத்தேர்வின் முடிவுகள் வந்தது. அவன் அப்பா கூறியதைப் போல் ஜீவா, பாஸ் ஆகியிருந்தான்....

ஜீவாவின் ஆசைப்படி, அவன் ஊரில் உள்ள கல்லூரியிலேயே அவனுக்கு இடம் கிடைத்தது. அதே கல்லூரியில் தான் நம்ம கதாநாயகியும் சேருகிறாள். ஆனால், இருவரும் பார்த்துக்கொள்ளவில்லை.

நம் நாயகன்-நாயகியின் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்?இருவரும் எப்படி பார்த்துக்கொள்வர்?

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.