எனை மீட்டும் இயலிசையே -1

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

1

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி !!!!
வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி !!!!

என்ற பாடல் காலை நேரத்தில் கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் மூன்றாம் நம்பர் அறையில் கைபேசியில் அலறி கொண்டிருக்க மூன்று வானரங்கள் குதித்து கொண்டிருந்தன..

"அடியே அபி சத்தத்தை கொஞ்சம் குறை.. இல்லனா அந்த ராங்கி ரெங்கம்மா போனை புடிங்கி வச்சுக்கும் "

"போடி சோபி.... இதுவே கம்மி தான்... இதுக்கு மேல கம்மி பண்ணனும்னா போன சைலன்ட்ல தான் போடணும் "

அப்போது வெளியிலிருந்து "அங்க என்னமா சத்தம் " என்று வார்டன் ரங்கநாயகி கேட்க
"பேசிட்டு இருக்கோம் மேம் " என்று மூவரும் வடிவேல் பாணியில் கூறிவிட்டு மீண்டும் ஆட ஆரம்பித்தனர்.....

இது எதுலயும் கலந்து கொல்லாமல் அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தாள் நம் நாயகி இயலிசை.... சுருக்கமாக இசை...

"நாமும் இப்படித்தான் காலையில் தன் வீட்டையே அதிர வைப்போம்... ஆனால் இப்பொழுது......" என்று நினைத்தவள் தலையை சிலுப்பி இனி ஒரு போதும் நினைக்க கூடாது என்று முடிவெடுத்தாள்..

விடுதியை விட்டு வெளியே வந்தவள் அலுவலக பேருந்து வர அதில் ஏறி அலுவலகத்திற்கு வந்தாள்....

தன்னுடைய இருக்கைக்கு வந்தவள் தனக்கு முன்பே வந்திருந்த தோழியை பார்த்து ஆசிரியப்பட்டு போனாள்...

"என்னடி உதி டெய்லியும் நான் சீக்கிரம் வரேன்னு கிண்டல் பண்ணுவ.... ஆனால் அதிசயமா நீ இன்னைக்கு சீக்கிரம் வந்துருக்க... "

"அது வந்துடி...... " என்று உதயா வெட்கப்பட.....

"அய்யயோ என்னாடி உனக்கு வராதது எல்லாம் புதுசா ட்ரை பண்ற...... என்ன அன்னிக்கு வந்து பாத்துட்டு போனாங்களே..... அந்த பையன் பேரு கூட ஏதோ..... ஆஹ் வினய்.. அவங்க வீட்டுல ஓகே சொல்லிட்டாங்களா...... "

"ஆமா இசை .... நேத்து தான் சொன்னாங்க... உன்கிட்ட சீக்கிரம் சொல்லணும்னு தோணுச்சு.... நீ தான் போன் வச்சுக்க மாட்டியே... அதான் நேருலயாச்சும் சொல்லலாம்னு சீக்கிரம் கிளம்பி வந்தேன்"

"ஹே.... சூப்பர்டி... கங்க்ராட்ஸ்....."

"தேங்க்ஸ்டி... அப்புறம் வர்ற வெள்ளிக் கிழமை சின்னதா நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்னு இருக்காங்க... நீ கண்டிப்பா வரணும் "

"நான் எதுக்குடி வேண்டாம்.... நான் வரல "

"இன்னும் எவ்ளோ நாள் தான் இசை... எல்லாரையும் விட்டு ஒதுங்கி இருப்ப... நீ கண்டிப்பா வர்ற.... இல்லனா என்கூட பேசாத " என்று சொல்லிவிட்டு உதயா அவளது இருக்கைக்கு சென்று விட்டாள்....

இசையும் அவளது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்....நேரம் ஆக ஆக உதயாவின் பாராமுகம் இசையை வருத்தியது...

சாப்பிடும் பொழுது கூட தனித் தனியாக அமர்ந்தது இசையை இன்னும் வருத்தியது..
பிறகு யோசிக்க ஆரம்பித்தாள்....
"செய்யாத தவறுக்கு எத்தனை நாள் தான் தண்டனையை அனுபவிப்பது... நான் என்னையே மறக்கும் அளவுக்கு கஷ்டத்தில் இருக்கும் போது எல்லாம் துணையாக இருந்தது உதியும் அவள் குடும்பமும் தான்...

யாருக்காக இல்லையென்றாலும் உதிக்காக போய் தான் ஆகணும் " என்று முடிவெடுத்த பின் உதயாவிடம் சென்றாள்...

"நான் வரேன்டி.... இனிமேட்டுக்கு இப்படி மூஞ்சி தூக்கி வசிக்காத.... சகிக்கல.. அதான் வரேன்னு சொல்லிட்டேனே கொஞ்சம் சிரி.... "

"ஈஈஈஈ.. போதுமா "

"ம்ம்ம்... இப்பதான் நல்லாருக்கு.... "
"ரொம்ப தேங்க்ஸ் இசை "

"லூசு.... நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ் "

வெள்ளிக்கிழமை........
அழகாய் புலர்ந்த இளங்காலை பொழுது... பொன்னிறமாய் புலர்ந்த சூரியன் தன் பூங்கரங்களால் கோவை மாநகரை புத்தணர்வு கொள்ள செய்தது....உதயாவின் வீட்டிற்கு அப்பொழுது தன் வந்தாள் இசை.... சீக்கிரம் வரவேண்டும் என்று கிளம்பியும் சற்று தாமதம் ஆகி விட்டது.... ஆட்டோவில் வந்திறங்கிய இசையை வரவேற்றார் உதயாவின் அன்னை கலையரசி....

"ஏனம்மினி கொஞ்ச சீக்கிரம் வரது தான.. இம்புட்டு நேரம் உன்ர பிரண்டு வாசலுக்கும் வூட்டுக்கும் நடையா நடந்தவள இப்பதான் ரெடியாக சொல்லி உள்ளாற அனுப்புனே.... "

"இல்லம்மா.... ஆட்டோ புக் பண்ணேன்... வர லேட்டாகிருச்சு..... "
"ஏய் கலையி... வந்த புள்ளய உள்ளாற கூப்புடாம வெளியவே நிக்க வச்சு பேசிட்டு இருக்கவ..... நீ உள்ள வா அம்மிணி " என்ற உதயாவின் அப்பாவை பார்த்து புன்னகைத்தவள் தன் தோழியை பார்க்க அவளறைக்கு சென்றாள்....

"ஹாய்டி புது பொண்ணு "

"போடி பேசாத... இது தான் வர நேரமா "

"சாரிடி..... "என்று உதயாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள்....

"சரி சரி மேக்கப் கலைக்காத "

"மேக்கப் இல்லைனாலும் என் உதி அழகு தான்.... "

"போதுண்டி எருமை ஐஸ் வச்சது "

அப்பொழுது வெளியே கார் வரும் சத்தம் கேட்டது.....

"ஹேய் அவங்க வந்துட்டாங்க போலடி " என்று சொல்லிவிட்டு இசையையும் ஜன்னல் அருகே இழுத்து சென்றாள்...

வந்தவர்களை பொதுவாக நோட்டம் இட்டவள் கடைசியாக போன் பேசிக்கொண்டு வந்தவனை பார்த்தவள் பார்த்தவள் மனதில் கோவம் ஆத்திரம் அதிர்ச்சி அதையும் மீறிய தவிப்பில் உடல் நடுங்க கண்ணீர் துளிகள் கன்னத்தில் விழுவேன் என்று பயமுறுத்த குளியல் அறைக்குள் புகுந்தாள்....

அடைத்து வைத்த கண்ணீர் கிடைத்த இடைவெளியில் வெளியேற இமைகளை இருக்க மூடியவளின் விழிகளுக்குள் அன்றய நிகழ்வுகள் கண்முன் விரிய உள்ளம் எரிமலை குழம்பின் சூட்டை போல் தகித்தது...

வந்தவனின் கன்னத்தில் அறைந்து என்னை ஏன் அவமானப்படுத்தினாய்..... ஏன் ஏமாற்றுக்காரி ஆக்கினாய் .... மணமேடையில் ஏன் விட்டுச்சென்றாய் என்று கேள்விகள் கேட்க மனது துடித்தது... இருந்தாலும் அவன் முகத்தை பார்க்க ஒரு துளி அளவு கூட விருப்பம் இல்லை..

யாரால் என் அம்மா அப்பா அண்ணன் என்ற என் பாசக்கூட்டினை விட்டு இன்று அஞ்ஞாத வாசம் போல தனித்து நிற்க காரணமோ அவனை காண நேர்ந்ததில் மனது கனத்து போனது....

கதவை தட்டி உதயா அழைத்ததால் முகத்தை கழுவி கொண்டு வெளியே சென்றாள்....

"என்னாச்சு இசை... அழுதியா "

"ஒண்ணுமில்ல உதி... "

அப்பொழுது கலையரசி உதயாவை அழைத்து செல்ல வந்தார்... இசையையும் கூப்பிட..... இசை உதியை நோக்கி பார்வையால் வேண்டாம் என்று இறைஞ்சினாள்...

"அவளுக்கு தலை வலிக்குதுன்னு சொன்னாம்மா.... ரெஸ்ட் எடுக்கட்டும் என்று சொல்லிவிட்டு வெளியே கலையுடன் சென்றாள்....

இசைக்கு அந்த தனிமை தேவையாய் இருந்தது.... சற்று தளர்வாய் கண்மூடி அமர்ந்திருந்தாள்....

"இயல் "

திடீரென கேட்ட இந்த அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.....

"ஹ....ஹலோ.... ய..... யார் சார் நீங்க என்ன வேணும்... "

"இயல் நான் பண்ணது ரொம்ப பெரிய தப்புதான்... ப்ளீஸ்.... "

"சார் நீங்க யாருன்னே எனக்கு தெரில... என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேக்கறீங்க... "

இசையின் கையை பிடித்து தன் முன் நெருக்கத்தில் நிற்க வைத்தான்...

"இப்ப நல்லா பாரு இயல் என்னை தெரியலையா.... "

இயல் இப்பொழுது தான் அவனை நன்றாக பார்த்தாள்... அவள் முன்பு பார்த்ததற்கும் இப்பொழுது கண் முன் நிற்பவனுக்கும் நிறைய வித்யாசம் தெரிந்தது...

இளைத்திருந்தான்.... தினமும் சவரம் செய்பவன் முகத்தில் இப்பொழுது ஒரு வார தாடி இருந்தது.... எப்பொழுதும் புன்னகை புரியும் கண்கள் நீண்ட நாள் கழித்து உன்னை கண்டுகொண்டேன் என்ற பரவசம் இருந்தது....

"என்ன இயல் இவ்ளோ நேரம் பார்த்த பின்னாடி கூடவா நான் யார்னு தெரில "

அவனுடைய கேள்வியில் சுதாரித்தவள் அவனிடம் இருந்து விலக முற்பட.. இயலின் கையை பிடித்தான்....

"ப்ளீஸ் கையை விடுங்க "

"இயல் என்னை மன்னிக்க...... "என்று சொல்லுமுன் அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்....

அவனிடம் கையை விடுவித்து கொண்டு அங்கிருந்து சென்றாள் இசை....

திகைத்து நின்றான்.....சத்யரூபன்..... வெளியில் வந்த இசை உதயாவின் அம்மாவிடம் சொல்லி விட்டு விடுதிக்கு சென்றாள்.. எல்லோரும் அலுவலகம் சென்றிருப்பதால் அறையில் ஒருவருமில்லை...

படுக்கையில் விழுந்து கண்ணீர் விட்டவளுக்கு பழைய நினைவுகள் மனதை அழுத்த தன் எண்ணங்களை அதன் போக்கிலேயே விட்டுவிட்டாள்.......

மீட்டிடுவாள்.....

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN