எனை மீட்டும் இயலிசையே -5

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

5

யாரோ தன்னை உலுக்குவது போன்ற உணர்வில் சிரமப்பட்டு கண் திறந்தாள் இசை.... எதிரில் தன் அறைத் தோழி நின்றாள்...

"என்ன இசை ஆபீஸ்க்கு கிளம்பலையா... என்னாச்சு உடம்பு சரியில்லையா... நேத்து நைட் சாப்பிட எழுப்பினேன்... நீ எழுந்துக்கல.... "

"ஓ சாரி அபி .... கொஞ்சம் தலைவலி அதான்... "

"பரவாயில்லை இசை... இப்ப தலைவலி எப்படி இருக்கு... "

"சரி ஆகிடுச்சு அபி "

பிறகு கிளம்பி ஆபீஸ்க்கு வந்தாள்... தனக்கு முன்பே வந்திருந்த உதியிடம் சென்று அவளை கட்டி கொண்டாள்...

"சாரி உதி.... "

"பேசாத இசை... நேத்து எதுக்கு சொல்லாம கொள்ளாம ஓடி வந்த... "

"என்ன உதி.. அங்க யார் வந்தாங்கன்னு உனக்கு தெரியாத.... "

"எல்லாம் தெரியும்...எந்த தப்பும் பண்ணாம நீ ஏன் தண்டனையை அனுபவிக்கற... இப்படியே ஓடிட்டே எவ்ளோ நாள் இருப்ப.... எல்லாரும் இருந்தும் இப்படி நீ தனியா கஷ்ட படணுமா.."

"அதுக்காக அவங்கள மன்னிக்க சொல்றயா..சத்யா அத்தனை பேர் முன்னாடி என் மேல பழி போடறப்ப அவங்க கூட என்ன நம்பாம அடிச்சாங்க...என் பொண்ணு அப்படி பண்ணிருக்க மாட்டான்னு ஒரு வார்த்தை பேசல... அவங்கள எப்படிடி மன்னிக்கறது... "

"அவங்களுக்கு அந்த சூழ்நிலைல ஏற்பட்ட அதிர்ச்சியில என்ன பண்றதுனு தெரியல இசை... அன்னிக்கு அவங்க உன்னை புரிஞ்சுக்கலனு நீ கோவமா இருக்க.. இப்ப நீயும் அதே தப்ப தான் பண்ற இசை...

போதுவா நம்ம குழந்தை ஏதாச்சும் தப்பா சொல்லி மத்தவங்க திட்டுனா அம்மா பண்ற அடுத்த வேலை அந்த குழந்தைய திட்டறது தான்.. ஏன்னா மத்தவங்க தன் புள்ளய எதும் சொல்ல கூடாதுனு தான்... உங்க அம்மா செஞ்சது கூட ஒரு வகையில் அப்படி தான் இசை... மத்தபடி உன் மேல நம்பிக்கை இல்லாம அப்டி பண்ணிருக்க மாட்டாங்க.. "

இதுவரை இப்படி ஒரு கோணத்தில் நினைத்து பார்க்காத இசை உதயாவின் பேச்சில் தன் தவறை உணர்ந்தாள்.. உதயாவின் தோள்களில் சாய்ந்து கொண்ட இசை...

"ரொம்ப தேங்க்ஸ் உதி.... நீ சொன்ன பிறகு தான் என்னோட தப்பு எனக்கு புரிஞ்சுது... "

"லூசு.. இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்களா.. சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பற வழிய பாரு.... "

"ம்ம் போகணும்டி... திடிர்னு போறேன்னு சொன்னா ஆபீஸ்ல என்ன சொல்லுவாங்களோ "

"ஒரு மாதம் மெடிக்கல் லீவு போடு.. அதுக்கு அப்பறம் அங்க பொய் மத்த விஷயத்தை முடிவு பண்ணு... "

சரி என்று வீட்டிற்கு பல மாதம் கழித்து போன் செய்தாள்....

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையில் கோவை விரைவு வண்டி தன் பெருத்த சத்தத்துடன் வந்து நின்றது...

பல மாதங்களுக்கு பிறகு தன் பெற்றோர்களை காண செல்கிறாள் இசை... நடைமேடையில் இறங்கியவள் கண்கள் ஓரிடத்தில் நிலைத்து இதழில் புன்னகை வந்தது...

"குட்டிமா..... "என்று வந்து அவளை கட்டி கொண்டான்....

"அண்ணா எப்படி இருக்க... "

"நல்லாருக்கேன்டா... நீ தான் ரொம்பவும் மாறிட்ட...."

அதற்கு வெறும் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.....

"சாரி வா குட்டிமா போலாம்.. நீ வரேன்னு சொன்னதுல இருந்து அம்மாவும் அப்பாவும் ரொம்ப எதிர்பாத்துட்டு இருக்காங்க... "

வீட்டிற்கு வரும் வழியில் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டு வந்தனர்...

வீட்டை அடைந்ததும் வெளியில் நின்று கொண்டிருந்த தன் அன்னையை சென்று கட்டி கொண்டாள்...

"இப்ப தான் எங்க மேல கோவம் போச்சா குட்டிமா... "

"சாரிம்மா "

"அழாத குட்டிமா... நான் ஒரு லூசு... வந்த புள்ளய அழ வச்சுக்கிட்டு... "

"எப்பிடியோ நீ லூசுன்னு இப்பவாச்சும் ஒத்துக்கிட்ட... "

"இதான் சாக்குன்னு வந்துருவீங்களே.."

"ஆமாமா வராங்க.. நீ வா குட்டிமா "

இசையை தோளோடு அணைத்து உள்ளே கூட்டி சென்றனர்...

இசை உள்ளே சென்றதும் தன் கண்ணை துடைத்து கொண்டார் சுமித்ரா...

"ப்ச்... அம்மா எதுக்கு இப்ப கண்ணை கசக்கறீங்க.... இசை பார்த்தா வருத்த படுவா.... "

"இல்லை இனியா... நம்ம இசை ரொம்பவும் மாறிட்டா... இனி நம்ம பழைய குட்டிமாவ பாக்கவே முடியாதா.. "

"அது ஒருத்தரால தான்மா முடியும்.. "

"ஆனால் அவரை நம்ம இசை மன்னிக்கணுமே..... "

"அதுவும் அவர் கையில் தான்மா இருக்கு.... அவர் மேல நிறைய தப்பு இருக்கு... ஆனால் அவர் உணர்ந்து நம்ம கிட்ட மன்னிப்பு கேட்டாரு... நாம யாரும் அவர் கிட்ட பேச கூட இல்லை.. அவங்க வீட்லயும் அவங்க அம்மா அவர் கூட சுத்தமா பேசறது இல்லை... புகழ் அப்புறம் அங்கிள் மட்டும் தான் கொஞ்சம் பேசறது.... அதுவே பெரிய தண்டனை தான்மா... "

"ஹ்ம்ம் என்னமோப்பா அந்த கடவுள தான் நம்பிருக்கேன்... "

"இசை மனசுக்கு இனிமேலாவது நல்லது நடக்கட்டும்மா... வாங்கமா உள்ள போலாம்... "

பிறகு முவரும் நீண்ட நாள் கழித்து ஏதேதோ பேசி சந்தோசமாக இருந்தனர்.. மறந்தும் பழைய விஷயங்களை பேச வில்லை..

தூங்குவதற்கு தன் அறைக்கு வந்த இசைக்கு பழைய நியாபகங்கள் நெஞ்சை அடைக்க தன் கவனத்தை திருப்ப கதை புத்தகம் அடுக்கி வைத்திருந்த புத்தக அலமாரியின் அருகில் சென்றாள்...

அங்கு புத்தகங்களை பார்வையிட்டவள் கண்ணில் ஆல்பம் பேக் கண்ணில் பட அதை எடுத்து கொண்டு தன் படுக்கையில் அமர்ந்தாள்...

அந்த நேரம் பார்த்து அறைக்கதவு தட்டப்பட அதை பக்கத்தில் இருந்த மேஜையின் உள்ளே வைத்து விட்டு கதவை திறக்க சென்றாள்..

"என்ன குட்டிமா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.. "

"இல்லண்ணா.. உள்ள வாங்க... "

"இந்தா குட்டிமா... புது ஸ்டோரி புக்ஸ்.. நேத்து வாங்கி வச்சேன்.. "

புத்தகத்தை பாத்த மகிழ்ச்சியில்..

அவன் கன்னம் கிள்ளி

"தேங்க்ஸ் டா ஸ்வீட்டா... "

"ரொம்ப நாள் கழிச்சு இப்படி கூப்பிடறடா.... "சொல்லும் போதே குரல் கரகரத்தது...

என்னுடைய துக்கத்தில் இவர்களை ரொம்பவும் கஷ்ட படுத்தி விட்டேன் என்று மனதிற்குள் வருந்தியவள் வெளியே அதை காட்டிகொல்லாமல்...

"அச்சோ இதுக்கு போயா இவ்ளோ பீல் பண்ற... பாவம் அண்ணனாச்சே... அப்டினு கொஞ்சம் மரியாதை கொடுத்தா......நீ இப்படி பீல் பண்ற... சரி விடு ஸ்வீட்டா இனிமே அண்.....ச்சே ச்சே.. சொல்ல மாட்டேனே... அப்டினு எப்பவும் கூப்பிட மாட்டேன் சரியா.... "

"ம்ம் "

"கொஞ்சமாச்சும் சிரிக்கிறது "

"ஈஈஈஈ..... போதுமா "

"ஆத்தாடி இதுக்கு நீ சிரிக்காமயே இருந்திருக்கலாம் போலவே "

"உன்னை.... "என்று துரத்தி பிடித்து கொண்டு விளையாடினர்...

இசை தன்னவர்கள் சந்தோஷத்திற்காக தன் வேதனைகளை தள்ளி வைத்தாள்....

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN