எனை மீட்டும் இயலிசையே -15

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
15காலை பொழுது அழகாக புலர்ந்தது...

இசையை மார்போடு சேர்த்து அணைத்தவாறு தூங்கி கொண்டிருந்தான் சத்யா... இசைக்கு முதலில் முழிப்பு வந்த பொழுது முதலில் கேட்டது சத்யாவின் இதய துடிப்பை தான்....

அந்த ஓசை தாலாட்டு போலவும் அவனின் அணைப்பு கொடுத்த கதகதப்பும் சேர மீண்டும் தூங்கிப் போனாள்.....

இசை தூக்கத்தில் திரும்பி படுக்க அதில் விழித்தவன் மெதுவாக இசையை விலக்கி படுக்க வைத்து விட்டு தன் வேலையை கவனிக்க சென்றான்...

சிறிது நேரம் கழித்து எழுந்த இசைக்கு முதலில் எங்கு இருக்கிறோம் என்ற நினைவே இல்லை.... பிறகு நேற்று நடந்த நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவிற்கு வர..... நேற்று இரவு நடந்தது அறையும் குறையுமாக நியாபகம் வந்தது....

"ஐயோ இசை என்ன பண்ணி வச்சிருக்க.. இப்ப சத்யா முகத்தை எப்படி பாக்கறது.... " என்று என்றும் இல்லாத வெட்கம் புதிதாய் வந்து தோற்றிக் கொண்டது.... அப்போது அங்கு வந்த சத்யா....

"இயல் எழுந்துட்டியா.... போய் பிரெஷ்அப் ஆகிட்டு வா.... "

"இல்ல.... அது வந்து.... நேத்து..... நைட்.... ப்ச்..... சாரி..... "

"எதுக்கு.... பணம் குடுத்ததுக்கா... "

"அதில்ல.... "

"அப்ப அதுக்கு சாரி இல்லையா.... "

"அதுக்கும் தான்..... அப்புறம் நைட் உங்களை..... பயமா இருக்குன்னு.. கட்டி பிடிச்சு...... அதுக்கு சாரி.... "

"நைட்டா.... ஏதாச்சும் கனவு கண்டியா... உன்னை விட்டுட்டு நான் உன் ரூம்ல போய் தூங்கிட்டேன்.....அப்புறம் இப்ப தான் வரேன்.... "என்றான் குறும்பாய்...

"ஓ... சாரி..... "என்று உள்ளே போன குரலில் சொன்னவள்... அதை கனவு என்றே நினைத்து கொண்டாள்... பிறகு பாத்ரூம் போக எழுந்து நிற்க தலை சுற்றவே கீழே விழ பார்த்தவளை தாங்கி பிடித்தான் சத்யா...

"என்னாச்சுடா முடிலயா.... "

"ம்.... தலை சுத்துது.... "

"நேத்து புல்லா சாப்பிடல.. அதோட காய்ச்சல்.... காயம் வேற இதெல்லாம் சேர்ந்து வீக் ஆகிருச்சு.... சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்.... "என்றவன் அவனே அழைத்து சென்று முகம் கழுவ வைத்து பல் விளக்க வைத்தான்...

"சரி போலாமா.... "

"இல்ல.... அது வந்து.... "

"ஓஓ.... சரி.....நான் வெளிய நிக்கறேன்... ஜாக்கிரதை.... தலை சுத்தற மாதிரி இருந்தா கூப்பிடு... சங்கட பட்டுட்டு இருக்காத.... "என்று சொல்லி விட்டு வெளியே வந்து நின்றான்...

சிறிது நேரம் கழித்து இசை வர....அவளை அழைத்து வந்து படுக்கையில் அமர வைத்தான்...

"இரு இயல் நான் போய் சாப்பிட கொண்டு வரேன்.... "என்று கீழே சென்று இட்லியையும் சட்னியையும் கொண்டு வந்தான்... "

"இந்தா இயல் சாப்பிடு.... "

"நீங்க சாப்டீங்களா... "

"நீ சாப்பிடு... எனக்கு பசிக்கல அப்புறம் சாப்பிட்டுக்கறேன்.... "

சரி என்று தட்டை வாங்கியவள்.. இட்லியை பிட்டு அவன் வாயறுகே கொண்டு சென்றாள்..

"நீங்களும் நேத்துல இருந்து சாப்பிட்டு இருக்க மாட்டீங்கன்னு தெரியும் சாப்பிடுங்க.... "என்று அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்....

தன் மீது அவள் கொண்ட அன்பில் அவன் கண்கள் கலங்கியது...

அவனும் இசைக்கு ஊட்ட ஆரம்பித்தான்....

இப்படி ஆரம்பித்த நாள் அன்று முழுதும் நல்ல விதமாகவே சென்றது...

நேற்று முழுதும் நண்பன் வீட்டில் இருந்த புகழ் மதியம் போல வந்து டூர்க்கு கிளம்பி சென்றான்...

பிறகு கிடைத்த தனிமையில் பொதுவான பேச்சுகள் மூலம் கழிந்தது....

இரவு இருவரும் சாப்பிட்டு விட்டு மேலே சென்றனர்...

தன் அறைமுன் நின்ற இயல் சத்யா தன்னை அழைப்பானா என்று பார்த்தாள்... ஆனால் அவன் கண்டுக்காதது போல் செல்லவே இயல் வேறு வழியின்றி தன் அறைக்குள் சென்றுவிட்டாள்...

கட்டிலில் படுத்த இசைக்கு காரணமே இல்லாமல் அழுகை வந்தது.... அப்போது அங்கு வந்தான் சத்யா... அவனை பார்த்து அவசரமாக கண்ணை துடைத்து கொண்டாள்....

"இந்தா இயல் மாத்திரை போட்டுக்க.... நைட் ஏதாச்சும்னா கூப்பிடு.... "என்று கூறிவிட்டு சென்று விட்டான்....

இசை கோவத்தில் மாத்திரையை தூக்கி எரிந்து விட்டு படுத்துக் கொண்டாள்..... சிறிது நேரம் கழித்து தூங்கியும் போனாள்....

நள்ளிரவு நேரம்.....

முகத்தில் ஏதோ குறுகுறுப்பை உணர்ந்தவள் விலகி படுக்க எண்ணி நகர்ந்தவளை இழுத்து அணைத்தது சத்யாவின் கரங்கள்....

"அமைதியா தூங்குடா புஜ்ஜி.... "

என்று மேலும் இறுகி அணைத்தவன் அருகில் கோழிக்குஞ்சாய் அணைவாய் உறங்கினாள்....

இசை காலையில் எழும் போது சத்யா பக்கத்தில் இல்லாமல் போகவே.... அதையும் கனவென்றே எண்ணினாள்....

கீழே இறங்கி சென்றாள்.... சத்யா அங்கு சமைத்து கொண்டிருந்தான்....

அவன் அருகில் சென்றவள்...

"சாரி..... தூங்கிட்டேன்.... எழுப்பி இருக்கலாமே... "

"அதனால் என்ன விடுடா.... இப்ப உடம்பு பரவாயில்லையா... இன்னும் தலை சுத்துதா... "

"அதெல்லாம் இல்லை.... சரி நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா.... "

"இல்லடா முடிச்சிட்டேன்.... வா சாப்பிடலாம்.... "

பிறகு இருவரும் சாப்பிட்டு கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.....

"இயல் இன்னைக்கு உங்க வீட்டுக்கு வேணும்னா போய்ட்டு வரலாமா.. "

"போகலாம் சத்யா... ஆனால் நீங்க ஆபீஸ் போகலையா.... "

"உன்னை கொண்டு போய் விட்டுட்டு நான் ஆபீஸ் போறேன்... ஈவினிங் அங்க வந்துறேன்...... "

"ஓகே....சத்யா..... "

பிறகு இருவரும் கிளம்பி இயலின் வீட்டிற்கு சென்றனர்.... அங்கு இவர்களின் எதிர் பாராத வருகையால் அனைவரும் சந்தோசம் அடைந்தானர்.... சத்யாவின் மேல் இருந்த கோவமும் இசையின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை கண்டதும் மறைந்து போனது....

சிறிது நேரம் அங்கு இருந்த சத்யா மாலை வருவதாக சொல்லி கிளம்பி சென்றான்....

பிறகு இனியன் நாதன் சுமித்ரா இசை நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.....

"குட்டிமா நீ சத்யாவை மன்னிச்சுட்டயா.... "

"சூழ்நிலை அவரை தப்பு பண்ண வச்சிருச்சும்மா.... நானும் அவரை மன்னிக்க முடியாம தான் இருந்தேன்.... ரொம்ப கோவமாவும் இருந்தேன்.... ஆனால் இப்ப அந்த கோவம் என்கிட்ட இல்லை... நானும் அவரை மன்னிக்க ஆரம்பிச்சுட்டேன்னு தான் நினைக்கறேன் .... "

"ரொம்ப சந்தோசம் குட்டிமா.... "

நால்வரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.... பிறகு அனைவரும் மதிய உணவு உண்டுவிட்டு தன் அறைக்கு வந்தனர்...

இயல் அறைக்கு வந்ததும் சத்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது..

"ஹலோ.... "

"சாப்டியா இயல்.... "

"ம்.... நீங்க... "

"இனிமேல் தான்டா.... "

"ம்..... "

"ஈவினிங் வரணுமா...வேண்டாமா.. "

"கண்டிப்பா வரணும்... "என்று தன்னை மீறி சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள்.....

"வந்தா என்ன தருவ.... "

"என்ன தரேனும்.... "

"குடுக்க வேண்டியவங்களுக்கு தெரியும்.... "

அவள் முகம் செம்மையுற"அதெல்லாம் எனக்கு தெரியாது..... "

"போ.....அப்ப நான் வரல...... "

"அச்ச்சோ.... ரொம்ப படுத்துரீங்கப்பா.. "

"நான் வரவா வேண்டாமா..... "

"உங்க இஷ்டம் போங்க.... "என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்..

இனம் தெரியா உணர்வில் நெஞ்சம் படபடத்தது..... இப்படியே நேரம் செல்ல மாலை ஆனது.....

குளித்து முடித்து முடியை சிறு கிளிப்பில் அடக்கி.... வெண்மை நிறத்தில் ஆங்காங்கே ரோஜாக்கள் பளிச்சிடும் புடவை அணிந்து கண்களுக்கு மெல்லிய மை இட்டு நெற்றியில் சிறிய பொட்டு வைத்து அலங்காரமே இல்லாமல் அழகாய் வந்த தன் மகளை பார்த்த பெற்றோர் இருவருக்கும் நெஞ்சம் நிறைந்து போயிற்று....

இனியனோ " மாட்டினனான் மாப்பிள்ளை" என்று சிரித்து கொண்டான்....

"குட்டிமா.... இந்தா உனக்கு புடிச்ச ஜாதிமல்லி.... " என்று கூந்தல் நிறைய பூவை வைத்து விட்டார்......

ஏனோ எல்லாரும் தன்னையே பார்ப்பது போல் தோன்றவே வெட்கம் தோன்ற வீட்டின் பின்புறம் இருந்த ரோஜா பந்தலின் அடியில் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்தாள்....

மொபைலில் ரஹ்மான் இசையை ஓட விட்டவள் கண்ணை மூடி ரசிக்கலானாள்....காதல் ரோஜாவே

எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணில்

கண்ணுக்குள் நீதான்

கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால்

நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ

சொல் சொல்...

மாலை இயலின் வீட்டிற்கு வந்தான் சத்யா.... சுமித்ரா குடுத்த டீயை குடித்துவிட்டு மேல இயலின் அறைக்கு சென்றான் ஆவலாய் அவளை காண... அங்கு அவள் இல்லாமல் போகவே கீழே வந்தான்.....

"குட்டிமா பின்னாடி தோட்டத்தில் இருக்கா சத்யா..... "

"தேங்க்ஸ் மச்சான்.... "என்று விட்டு தோட்டத்திற்கு வந்த சத்யா இசையை பார்த்ததும் திகைத்து நின்றான்...

காற்றில் முடிகள் பறக்க... கன்னத்தில் கை தாங்கிட.... மல்லிச்சரம் மறு கன்னத்தில் உறவாட மெல்லமாய் பாடி கொண்டிருந்தவள் அருகில் சென்றான்...

கண்களை கசக்கி மீண்டும் பார்த்தான் ஒருவேளை கனவோ என்று....

மெதுவாய் அவள் அருகில் அமர்ந்தான்...அவனின் அருகாமையில் பாடலில் இருந்து தன்னை மீட்டாள் இயல்...

"ஹாய்.... எப்ப வந்தீங்க.... ஏன் இவ்ளோ லேட்..... "என்று பேசிக் கொண்டே போக அப்போது தான் கவனித்தாள் சத்யாவின் பார்வை மாற்றத்தை..... உடனே முகம் செம்மையுற தலையை தாழ்த்திக் கொண்டாள்....

"புஜ்ஜிமா.... "

அவன் குரலில் இருந்த குழைவு அவளையும் சிலிர்க்க வைத்தது.....

"என்ன புதுசா.... கூப்பிடறீங்க..... "அவள் குரலும் குழைந்து தான் போயிருந்தது....

"ஏன் கூப்பிட கூடாதா.... "

"கூப்பிடலாமே......"

"நிஜமா ஒன்னு சொல்லவா.... "

"ம்..... "

"உன் பக்கத்துல இப்படி சும்மா இருக்க முடிலடி.... ரொம்பவும் டிஸ்டர்ப் பண்ற... என்னால நல்ல பையனா இருக்க முடில..."

"நீங்க கெட்ட பையனா ஆனாலும் எனக்கு ஓகே தான்.... "என்று சொல்லிவிட்டு ஓடி விட்டாள்....

அவனும் சந்தோசத்துடன் அவளை துரத்திக் கொண்டு ஓடினான்... ஆனால் உள்ளே அனைவரும் இருக்க அமைதியாய் இனியன் அருகில் சென்று அமர்ந்தான்...

இசை சமைத்த உணவுகளை எடுத்து வைக்க சுமித்ராவுக்கு உதவி கொண்டிருந்தாள்...... அவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தது சத்யாவின் பார்வை....

பின் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் இசையும் சத்யாவும் தங்கள் வீட்டிற்கு வந்தனர்..... சத்யா முன்னாடி செல்ல இயல் தயங்கி தயங்கி அவன் பின்னால் வந்தாள்...

சத்யா அவன் அறைக்குள் சென்றுவிட இசை என்ன செய்வது என்று தெரியாமல் தன் அறைக்குள் சென்று படுக்கையில் அமர்ந்து விட்டாள்....

சிறிது நேரம் கழித்து வந்த சத்யா.... அவள் அருகில் சென்று அமர்ந்தான்...

"நீ என்னை மன்னிச்சுட்டயா இயல்... "

அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்....

"சரி உன்னோட ரூம் எது...."

"இதுதான்.... ஏன் கேக்கறீங்க... "

இந்த பதிலை கேட்டு கோவமாய் எழுந்து சென்றான்.... போகும்போது

"என்னோடது எல்லாம் உன்னோடதுன்னு உனக்கு எப்ப தோணுதோ... அப்ப நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலம்.... "என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவன் நேராக குளியல் அறைக்குள் புகுந்தான்...

குளித்து விட்டு வெளியில் வந்தவன் ஆச்சிரியமாய் கட்டிலை பார்க்க மனதில் சாரல் அடித்தது....

இசை அவனது கட்டிலில் கண்ணை மூடி தூங்குவது போல படுத்திருந்தாள்....

அவனும் பொய்க் கோபத்துடன் உடை மாற்றிக் கொண்டு... அவளுக்கு எதிர் புறமாக படுத்தான்....

இயல் லேசாக கண் விழித்து பார்க்க அவன் முதுகு தான் தெரிந்தது... இவளும் திரும்பி படுத்துக் கொண்டாள்....

ஜாதி மல்லி வாசமும் இசையின் அருகாமையும் அதற்கு மேல் அவனை அமைதியாய் இருக்க விடவில்லை... மெதுவாக இசையின் அருகில் சென்றவன்

"புஜ்ஜிமா இன்னைக்கும் உனக்கு பயமா இருந்தா என்னை கட்டி புடிச்சுகிட்டு தூங்கலாம்.... "

வேகமாக அவன் புறம் திரும்பியவள்...

"சத்யா நீங்க பொய் சொன்னீங்களா " என்று அவள் திகைப்பாய் கேட்க..

மல்லாந்து படுத்தவன்.... "நீ இல்லாத வாழ்க்கை எனக்கு நிறைய பாடத்தை கத்து குடுத்துருச்சு இயல்.... "

அவன் மார்பில் தலை வைத்தவள் " பழசை மறந்திருவோம் சத்யா... இனிமேல் நாம புதுசா வாழ ஆரம்பிக்கலாம்.... அதோட நீங்களும் என்னைக்கும் என்ன நம்பற அதே நேரம் பொய்ய வெறுக்கற சத்யா தான் வேணும்.... "

அவளை இறுக்கி அணைத்தவன்"தேங்க்ஸ்டி புஜ்ஜிமா.... "

"சத்யா.............. நீங்க கேட்டத குடுக்கலாம்னு நினச்சேன்.... " என்றவளளை விலக்கி கண்ணோடு கண் நோக்கியவன்

"நிஜமா... "

அவனுடைய கேள்விக்கு தன் முத்தத்தால் பதில் அளித்தாள்....

அவனும் அவளிடத்தில் முத்தெடுக்க ஆரம்பித்தான்.....

நெற்றியில் இதழ் குழைத்து

காது மடல் உரசி

கண்ணக் கதுப்புகள் செம்மையுற

இதழ் தேடி மகரந்தம் குடித்த

வண்டாகிய போனான்..

கண்ணாளன் கை தீண்டலில்

சிலிர்த்து

பின் ரசித்து

மயங்கி போன பூவானாள்

இரவு தந்த நிசப்தம் மீறி

சிறு சிறு ரகசிய வார்த்தை

பிரவாகத்தில்

மூழ்கி தொலைந்து திக்கி திணறி

தான் போனானவன்....

இமை திறக்க வெட்கம் கொண்டு

இதழ் இறுக்கி நுனி கடித்து

பரவசமானாள்

காதலோடு காமம் புணர்ந்த

அரங்கேற்றத்தில் இரவு கூட வெட்கம்

கொண்டு நிலவை மறைக்க

தென்றல் கூட யோசித்து வெளியில்

நிற்க

நீண்ட காலம் பிரிந்த இணை

பறவைகள் மகிழ்வுடன்

இணைந்தன....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN