நன்றியுரை

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் தோழமைகளே...

எல்லோரும் எப்படி இருக்கீங்க.. ஒரு சிறு சந்தோஷ நிகழ்வு.. அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இன்று வந்துள்ளேன். Home என்ற எங்களுடைய தளத்தை ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்து விட்டது.

பதினோரு வயதில் என்னுடைய வாசிப்பு பழக்கத்தை ஆரம்பித்தவள் நான். தனிமை மேல் காதல்... அதனாலேயே வாசிப்பு மேல் அலாதி பிரியம்.. எனக்கு ஒரு வாக்கியத்தைக் கூட பிழை இல்லாமல் எழுத தெரியாதுங்க(இதை சொல்லும் போது அவமானமாக தான் உணர்கிறேன்😞)ஆனால் நான் எழுத வந்த போது எனக்கு தளத்தில் எழுத வாய்ப்பும் கொடுத்து... சில வாக்கியங்களை நேர்த்தியாய் எழுத சொல்லிக் கொடுத்த 💕சுதாம்மாவுக்கு💕 என் முதற்கண் நன்றியை இங்கு நான் சொல்லிக் கொள்கிறேன். (இன்னும் எழுத்தையோ.. வார்த்தை அமைப்பையோ நான் பழகவில்லை ஒருவேளை... எழுது பயிற்சியை தொடர்ந்தால்... எழுத்து... பிடிபடுமோ...)

Wattpad.. prathlipi.. ladyswings.. என பிற தளங்களில் எழுதி கொண்டிருந்த நான்.. ஒன்றறை ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு மறுபடியும் நான் எழுத வந்த போது நாம் ஏன் சொந்த தளம் அமைத்து எழுதக் கூடாது என்ற கேள்வியில் உதயமானது தான் எங்கள் தளம். அது மட்டுமில்லாமல் 🔥"அவமானம்... துரோகம்.. தோல்வி..." 🔥இவை மட்டுமே என் வாழ்க்கை என்னும் போராட்டத்தில் தினம்.. தினம்.. நான் பெற்ற அடையாளங்கள்... இம்மூன்றும் என்னை வீழ்த்த வந்தவைகள்... ஆனால் இவைகளுக்கு நான் இடம் தந்தவில்லை.. 😎என் இறுதி மூச்சு உள்ளவரை அதற்கு இடம் தரவும் மாட்டேன்..😎 இவ்வகையான அடையாளங்களை புறந்தள்ள ஆரம்பிக்கப்பட்டது தான் எங்கள் தளம்.

இத்துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இனியும் இல்லை.. இத்துறையிலும் கால் பதிக்க ஒரு சிறு ஆர்வம்.. அதுவும் இல்லாமல் என் மன அழுத்தத்தின் வடிகாலாக என்று ஆரம்பித்தது அவ்வளவே. இந்த தளம் துவங்க முடிவு செய்தபோது.. எனக்குள் எனக்கேற்பட்ட சந்தேகங்களுக்கு நான் அணுகியபோது.. நிறைய தோழமைகள் பதில் தந்து உதவியது எனக்கு பக்கபலமாக இருந்தது. சகோதரிகள்... ♥️அன்னா ஸ்வீட்டி, ரேவதி அசோக், மதுமதி பரத், எழில் அன்பு, நர்மதா சுப்பிரமணியம், பிரியா பாலகிருஷ்ணன்♥️ இவர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தளம் ஆரம்பித்த போது பல சிக்கல்கள் வர. அந்நேரம் எனக்கு பக்கபலமாய் இருந்த.. ❣️முருகேசன் அண்ணா, நிலவன் அண்ணா, தாரணி சிஸ், ரம்யா அனாமிக்கா, புவனா மாதேஷ், பாக்கியலஷ்மி, ஹேமா, ஜெயலஷ்மி, காஞ்சனா சிஸ்❣️ இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எனக்கு உறுதுணையாக இருக்கும் கீதுக்கா😘😘 துர்கா😘😘 இருவருக்கும் தாங்க்ஸ் எல்லாம் இல்லை லவ் யூ தான். 🤗வர்ணாவுக்கு ஒரு ஸ்பெஷல் லவ் யூ பார்சல்..🤗💓 செவ்வந்தி துரை சகோதரிக்கும் நன்றிகள்... 💓

அதீத ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிறிய தோணியாய் நகர்கிறது நம் தளம்.. அது அப்படி நகர.. என் வாசகர்களாகிய நீங்கள் தான் காரணம்.. என்னுடைய இலக்கு இத்துறை இல்லை என்றாலும்.. இங்கு எனக்கும் ஒரு சிறு அடையாளத்தைக் கொடுத்து.. 🌹🎉அதை நோக்கி.. என் வாசகர்களாகிய நீங்கள் என்னை என் கையைப் பிடித்து அழைத்துச் செல்லவில்லை... உங்கள் தோள்களில் என்னை சுமந்து தான் செல்கிறீர்கள். இப்படிப்பட்ட என் அன்பான வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்🌹🎉

தளம் ஆரம்பித்து இந்த ஒரு வருடத்தில் அங்கு என்ன நடக்கிறதுனு கூட எனக்கு தெரியாது. கதையை முடிக்கும் போது மட்டும்.. சிறதாக traffic jam ஆகும் என்ற காரணத்தால் அதை மட்டும் site engineer தம்பிகிட்ட சொல்லிடுவேன்.. அதை அவர் உடனுக்குடன் சரி செய்து விடுவார்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. இப்படி தொழில் தெரிந்த.. தொழில் dedication உள்ளவர் தான் எங்க engineer தம்பி.

Very special thanks to him.. புதிதாய் தளம் ஆரம்பிக்க நினைக்கிறவங்க இல்லை தளம் பற்றி ஏதாவது சந்தேகம் இருப்பவர்கள்.. இவரை 💚💚Arockiya Efrath 💚💚தாராளமாக தொடர்பு கொள்ளளாம். இதையெல்லாம் போஸ்டா சொல்லாமல் நேரடியாக சொல்லி இருக்கலாம்..

இந்த சிறு சந்தோஷத்தை இப்படியாக உங்களுடன் பகிர்ந்து கொண்டதை நினைவில் வைத்துக் கொள்ள ஆசை அதான்.. இத்தகைய மகிழ்ச்சியை வாசகர்களாகிய உங்களுடன் கொண்டாடும் வகையில் அமேசானில் உள்ள


என்னுடைய ஏழு கதைகளுக்கும் இன்று free தந்துள்ளேன்...

(இன்று மதியம் 12pmக்கு ஆரம்பித்து நாளை மதியம் 12pm வரை) படிக்க விருப்பமுள்ள தோழமைகள் download செய்து கொள்ளுங்கள்.

இப்படியான தோழமைகளும்.. வாசகர்களும் கிடைக்க நிச்சயம் நான் வரம் பெற்று இருக்க வேண்டும்♥️♥️

நன்றி🌺நன்றி🌷நன்றி🌻

என்றும் உங்கள்
ஆதரவுடன்
உங்கள்

யுவனிகா💖
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN